World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Japan uses submarine incident to whip up anti-Chinese nationalism

நீர்மூழ்கி சம்பவத்தை சீனாவிற்கெதிராக தேசியவாதத்தை உசுப்பிவிட ஜப்பான் பயன்படுத்துகின்றது

By John Chan
29 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 10 அதிகாலையில் ஒரு சீன நீர்மூழ்கிக்கப்பல் டோக்கியோவிற்கு தென்மேற்கில் 1600 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள ஜப்பானின் Okinawa தீவுகளின் கடல் எல்லையை ஊடுருவியமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மிக வேகமாக ஒரு முழுமையான இராஜதந்திர கருத்து வேறுபாடாக வெடித்தது. ஒட்டுமொத்த ஜப்பான் அரசியல் ஸ்தாபனங்களும், ஜப்பானின் தலைவாயிலிலேயே சீன இராணுவ அச்சுறுத்தல் குறித்து அச்சம் மற்றும் சந்தேகங்களை கிளறிவிடுகின்ற கலவரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பான ஆய்வு அவ்வாறான கருத்துக்கள் வேண்டுமென்று உருவாக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகின்றது.

அமெரிக்காவிலிருந்து செயல்படும் சிந்தனையாளர்குழுவான Stratfor தந்துள்ள தகவலின்படி அந்த நீர்மூழ்கிக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு பல மணி நேரம் ஆகி அதிகாலை 6.50 வரை ஜப்பான் பாதுகாப்பு அதிகாரிகள் முதலாவது கூட்டம் நடைபெறவில்லை. காலை 8.10 இற்குத்தான் பிரதமர் Koizumi இன் அலுவலகத்தில் ஒரு நெருக்கடி நிர்வாகப்பணிக்குழு உருவாக்கப்பட்டது. அதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சர் Yoshinori Ono அந்த நீர்மூழ்கிக்கப்பலை மடக்குவதற்காக இரண்டு நாசகார கப்பல்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் அனுப்புவதற்கு கட்டளையிட்டார்.

ஜப்பானின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு கடலுக்கு மேலே வராமல் அந்த நீர்மூழ்கிக்கப்பல் அந்தப்பகுதியிலிருந்து தப்பிச்சென்று விட்டது. ஏற்கனவே ஜப்பானின் கடல் எல்லையைத்தாண்டி அந்த நீழ்மூழ்கி சென்றவிட்ட நிலையிலும், அந்த நீர்மூழ்கியின் நடமாட்டத்தை ஒரு P-3C கடல் ரோந்து விமானம் பலமணிநேரம் கண்காணித்தது.

ஒரு சீன கப்பல் தொடர்பாக ஜப்பான் இராணுவம் இத்தகைய தீவிர நடவடிக்கைகளை எடுத்தது முன்கண்டிராததாகும். 1999 மார்ச்சில் வடகொரியாவின், வேவுபார்க்கும் கப்பல்களான இரண்டும் ஜப்பானின் Noto தீபகற்பத்திற்கு அருகிலும், Sado தீவிற்கு அருகிலும் ஜப்பான் கப்பல்களால் சுடப்பட்டன. 2001 டிசம்பரில் ஜப்பானின் Amami-Oshima தீவுகளில் ஜப்பானின் படைகள் ஒரு வடகொரியாக் கப்பலை மூழ்கடித்தன. என்றாலும், அந்த கப்பல் சீனாவிற்கு சொந்தமானது என்று தெரிந்தபின்னரும் இந்த மோதல்போக்கு ஒரு மாற்றத்தை குறிப்பதாக அமைத்திருக்கிறது.

பசுபிக் மகாசமுத்திரத்தில் அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய தளம் Okinawa வில் உள்ளது. அந்த பகுதியைச்சுற்றியுள்ள கடற்பரப்பு உலகிலேயே மிக நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்ற இராணுவ பிராந்தியங்களாகும். இந்தப் பகுதியில் சீனா, ஜப்பான், தைவான், மற்றும் அமெரிக்க கப்பற்படைகளும் கடந்த காலத்தில் சோவியத் யூனியன் கப்பற்படைகளும் நடமாடிவந்தன. பனிப்போரின்போதும் அதற்குப்பின்னரும், தற்செயலாக ஏதாவது மோதல்கள் நடந்துவிடாது தவிர்ப்பதற்காக கண்டிப்பான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

முதலில் வந்த செய்திகள் தாமதமாக கிடைத்தது. ஜப்பானின் நடவடிக்கை தொடர்பாக அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்களில் தீவிர விவாதங்கள் நடைபெற்றதை எடுத்துக்காட்டுகிறது. அந்த நீர்மூழ்கிக்கப்பலை வழிமறித்து கடற்பரப்பிற்கு மேலே கொண்டுவர முயன்ற ஜப்பானின் நடவடிக்கை சீனாவிற்கும், ஜப்பானுக்குமிடையே ஒரு இராணுவ மோதலுக்கு இட்டுச்சென்றிருக்க முடியும்.

Stratfor குறிப்பிட்டிருந்ததைப்போல் பாதுகாப்பு அமைச்சர் ஓனோ ''ஒரு தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் அல்லது ஒரு மந்திரிசபைக்கூட்டம் நடத்தாமல் மாறாக கப்பல்களை அனுப்புவதற்கு பிரதமர் Junichiro Koizumi இன் அனுமதியை மட்டுமே கோரியிருக்கிறார்.'' நெருக்கடி நிர்வாகப்பணிக்குழு ஜப்பானின் தற்காப்புச்சட்டம் பிரிவு 28ல் உள்ளபடி பிரதமரின் கட்டளைப்படி மட்டுமே கடற்பகுதி பாதுகாப்புப்படைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதை பயன்படுத்திக்கொண்டது.

ஜப்பான் படைகள் அனுப்பப்பட்ட நேரத்திலேயே ஊடுருவிய கப்பல் எந்த நாட்டைச்சேர்ந்தது என்ற விவரம் தெரிந்தேயிருந்தது. அதை கண்டுபிடித்து மடக்குவதற்கு அனுப்பப்பட்ட கப்பல்களை தொடர்ந்தே தைவான் இராணுவம் தான்கண்ட முழுமையான நிகழ்ச்சிகளையும், முழுமையாக ஊடகங்களுக்கு தந்தது. அப்படி ஊடுருவிய சீன ''Hans" வகை அணுசக்தியால் இயங்கும் ரோந்துக்கப்பல், அது பிரதான சீன அணு ஏவுகணை இயக்க நீர்மூழ்கிகளுக்கு பாதுகாப்பளிக்க வந்ததாகும்.

நவம்பர் 16ல் ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவிடமிருந்து சீன நீர்மூழ்கி பற்றி தகவல் பெறப்பட்டதை உறுதிபடுத்தியது. அதற்கு முன்னர், நவம்பர் 12ல் ஒரு நீர்மூழ்கியை மீட்கும்கப்பல் என்று நம்பப்பட்ட ஒரு கப்பல் உட்பட அதே பிராந்தியத்தில் இரண்டு சீன கப்பல்களை கண்டதாவும் அந்த நீர்மூழ்கிக்கப்பல் தொழில்நுட்ப சிக்கலுக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று நம்புவதற்கு காரணம் இருப்பதாகவும் ஜப்பான் அதிகாரிகள் கோடிட்டுக்காட்டினர்.

இதை வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், ஏதோ ஒரு வகையில் அபாயத்தில் சிக்கிக்கொண்ட ஒரு சீன அணு நீர்மூழ்கியை சந்திக்கப்போவதும் அது எந்த இரகசிய நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று ஜப்பான் அரசிற்கு தெரிந்த பின்னரும் அதையும் பொருட்படுத்தாமல் ஒரு இடைமறிப்பதற்கான படையை அனுப்பியிருக்கிறது.

தேசியவாத பிரச்சாரம்

அந்த நீர்மூழ்கிக்கப்பல் அடையாளம் இறுதியாக தெரிந்தவுடன் ஜப்பான் ஊடகங்களும், அரசியல் ஸ்தாபனங்களும் சீன எதிர்ப்பு ஆவேசத்தை உருவாக்குகின்ற ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது.

வெள்ளியன்று நவம்பர் 12ல் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் Nobutaka Machimura சீன தூதர் அலுவலக அதிகாரி Cheng Yonghua சந்தித்து ''ஒரு வலுவான கண்டனத்தையும் ஒரு மன்னிப்பையும் கோரினார்'' இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் கருத்தக்கூற மறுத்துவிட்டது, விசாரணை நடத்திவருவதாக தெரிவித்தது.

அடுத்த நாள் ஜப்பானின் பிரதான செய்திபத்திரிகைகளில் ஒரு தேசியவாத கூக்குரல் மேலாதிக்கம் செலுத்தியது.

''ஜப்பானின் இறையாண்மையை மீறி நடந்ததற்காக பெய்ஜிங்கிடமிருந்து ஒரு மன்னிப்பை கோருவதற்கு டோக்கியோவிற்கு எல்லாவிதமான அடிப்படைகளும் உண்டு மற்றும் அண்மையில் நடைபெற்றதுபோன்ற சம்பவம் மீண்டும் எப்போதும் நடைபெறாது என்று உறுதிசெய்து கொள்ள கோருவதற்கும் எல்லா உரிமையும் ஜப்பானுக்கு உண்டு. நமது பெரும் அவநம்பிக்கையை கிளப்பிவிடுவதற்கு சீன நீர்மூழ்கிக் கப்பலின் நடவடிக்கையே போதுமானதாகும்'' என்று Yomiuri Shimbun அறிவித்தது.

சீனா ''அந்த சம்பவத்திற்கு காரணம் என்ன? என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டும், மற்றும் இதேபோன்று இனி நடவடிக்கையில் ஈடுபடாது என்று உறுதிமொழியும் தரவேண்டும்..... இந்த சம்பவத்தை கையாள்வதில் நாம் கவலையீனம் காட்டினோம் என்றால் மீண்டும், மீண்டும் சீனா சட்டவிரோத நடவடிக்கைகளில் இறங்கக்கூடும்'' என்று பழமைவாத Sankei Shimbun கோரியது.

சீனாவிற்கெதிராக ஜப்பான் தனது இராணுவ அந்தஸ்தை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், எதிர் நடவடிக்கைகளைக்கூட எடுக்கவேண்டுமென்றும் அந்த சம்பவம் சான்றுயளிப்பதாக அமைந்திருக்கிறது என்று சித்தரித்து ஜப்பானின் நாடாளுமன்ற அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒன்றுபட்டு நின்றன.

ஆளும் தாராளவாத ஜனநாயகக்கட்சி (LDP) பொதுச்செயலாளர் Tsutomu Takebe சீனா மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோரினார். ''ஆசியாவில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது முக்கியம்தான் என்றாலும், தான் கூற விரும்பியதை சீனாவிற்கு உணர்த்த ஜப்பான் தயங்கக்கூடாது'' என்று கூறினார்.

எதிர்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி (DPJ), தலைவரான Katsuya Okada ஜப்பானின் ஒரு நிதானப்போக்கை கடைபிடிக்கவேண்டுமென்று கூறினாலும், பெய்ஜிங்கிடமிருந்து ஒரு மன்னிப்பு கேட்கக்கோர வேண்டுமென்றும் சீனாவிற்கான பொருளாதார உதவியை இரத்து செய்யவேண்டும் என்றும் கோரினார். ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி (JCP) ஒரு அறிக்கை வெளியிட்டது. சீன அரசாங்கம் அதன் விசாரணை முடிவை முடிந்தவரை விரைவாக வெளியிடவேண்டும் என்றும் அந்த சம்பவத்தில் தனது பொறுப்பை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டது.

ஜப்பானின் அரசியல் வட்டாரங்களில் இந்த சம்பவம் தொடர்பாக எழுந்த மிதமிஞ்சிய கோபாவேசம் இறுதியாக Koizumi வரை சென்றது. அவர் இராணுவப்படைகளை சீன நீர்மூழ்கிக்கெதிராக அனுப்புவதில் ''அதிக நிதானத்தைக்'' காட்டினார் என்ற குற்றச்சாட்டுக்கள் வீசப்பட்டு வருகின்றன.

ஒருவார அமைதிக்குப்பின்னர் சீன வெளியுறவு அமைச்சகம் தனது, நீர்மூழ்கிகளில் ஒன்று ஜப்பான் கடல் எல்லைக்குள் தவறிச்சென்று விட்டதாக ஒப்புக்கொண்டது. டோக்கியோ உடனடியாக இது, ஓர் மன்னிப்பு என்று அறிவித்தது. பெய்ஜிங் பதிலடிகொடுக்கும் வகையில் தான் மன்னிப்புக் கேட்கவில்லை என்றும், தொடர்புடைய விவகாரத்தில் ஜப்பான் அரசிற்கு தகவலை மட்டுமே தந்ததாகவும் வலியுறுத்திகூறியது.

அதிகரித்துவரும் நெருக்கடிகள்

ஜப்பான், சீனாவிடமிருந்து ஒரு மன்னிப்பு கேட்க வலியுறுத்துவது, இரு நாடுகளுக்குமிடையில் வளர்ந்து வரும் நெருக்கடிகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

ஏறத்தாழ கடந்த 15 ஆண்டுகளாக பொருளாதார முடக்கத்திற்கு பின்னர் ஜப்பானின் சர்வதேச நிலைமை பலவீனப்பட்டுள்ளதுடன், சமூகத்தில் பாரிய வர்க்க மற்றும் சமூக மோதல்களால் சூழப்பட்டுள்ளது. பெரு நிறுவன செல்வந்த தட்டினர் ஜப்பான் ஒரு வலுவான பொருளாதார வல்லரசாக மீண்டும் உருவாவதற்கு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளால் ஜப்பானில் வேலைவாய்ப்புக்கள் வெட்டப்பட்டும், வாழ்நாள் வேலைவாய்ப்பு உத்திரவாதங்கள் நீக்கப்பட்டும் பொதுச்சேவைகள் தனியார் உடைமையாக்கப்பட்டுள்ளன. இதனால் சமூக ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்து அரசியல் ஸ்தாபனங்களின்மேல் பொதுமக்களின் அதிருப்தி பரவலாக அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தேசியவாதத்தை வளர்ப்பதும், இராணுவவாதத்தை ஆதரிப்பதும், இந்த பிராந்தியத்திலும், சர்வதேச அளவிலும் ஜப்பானின் பெருநிறுவன மற்றும் பொருளாதார நலன்களை வலியுறுத்தவும் மற்றும் சமூகக்கொந்தளிப்புக்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவுதற்குமான, இரண்டு வகைகளிலும் இது ஒரு சரியானவழி என்று ஜப்பானிய ஆளும் வட்டாரங்கள் கருதுகின்றன. Koizumi நிர்வாகத்தின் ஒரு குறிப்பிட்ட முனைப்பு என்னவென்றால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவாக்கப்பட்ட அமைதிவாத அரசியல் நிர்ணயச்சட்டத்தில் ஜப்பான் இராணுவத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதாகும்.

இந்த நீர்மூழ்கி கப்பல் சம்பவத்திற்கு பின்னால் உடனடியாக காலதாமதமின்றி நேரத்தை வீணாக்காமல் LDP தனது கடைசிகட்ட அரசில் சட்டத்திருத்த நகலை வெளியிட்டிருக்கிறது. 2005ல் கொண்டுவரப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ள, அரசியல் நிர்ணயச்சட்டத்திருத்த நகலில் மன்னர் ''அரசின் ஒரு அடையாளச்சின்னமான தலைவர்தான்'' என்பது வலியுறுத்தப்பட்டிருப்பதுடன் மற்றும் ஒரு நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமரை தனியானதொரு வாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கவும், சர்வதேச பாதுகாப்பிற்கு தீவிரமாக பங்களிப்பு செய்கிற ''கூட்டு பாதுகாப்பு'' ஏற்பாட்டை செய்யவும் அது ''ஆயுதங்களை பயன்படுத்தவும் வகைசெய்வதாக அமையுமென்றும் நகல் திருத்தங்கள் வலியுறுத்துகின்றன.

2001ல் ஆட்சிக்கு வந்தது முதல் Koizumi ஏற்கனவே ஒரு ஆத்திரமூட்டும், தேசியவாத நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இரண்டாம் உலகப்போர் குற்றவாளிகள் சிறைவைக்கப்பட்டுள்ள Yasukuni Shrine பகுதிக்கு ஜப்பான் பிரதமர் விஜயம் செய்தார். அப்போது சீனா மற்றும் தென்கொரியா தெரிவித்த ஆட்சேபணைகளை ஜப்பானின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும் என்று அதை தள்ளுபடி செய்தார். Koizumi இன் வெளியுறவு அமைச்சரான Nobutaka Machimura இதற்கு முன்னர் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் ஏகாதிபத்தியம் புரிந்த குற்றங்களை மூடிமறைப்பதாக அமைந்திருக்கும் இரண்டு வரலாற்று பாட நூல்களுக்கு ஒப்புதல் வழங்கினார்.

செப்டம்பர் 11 இனை தொடர்ந்து, Koizumi ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்று புஷ் நிர்வாகத்தின் பிரகடனத்தை ஆதரித்தார். ஆப்கானிஸ்தானிற்கு பின்னர் ஈராக்கிற்கும், ஜப்பான் இராணுவப்படைகளை அனுப்பியதை நியாயப்படுத்தினார். இது இரண்டாம் உலகப்போருக்கு பின் முதல் தடவையாக ஜப்பானிய துருப்புக்கள் சந்தேகத்திற்கிடமற்ற ஒரு போர் மண்டலத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆண்டிற்கு 45 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் ஜப்பான் இராணுவத்திற்கு செலவிடப்படுகிறது, உலகிலேயே அதிநுட்ப ஆயுதங்களை கொண்ட இராணுவமாக மிகவேகமாக வளர்ந்து வருகிறது.

எல்லா பெரிய அரசுகளுக்கிடையிலும், பொருளாதார மற்றும் மூலோபாய போட்டி முற்றிக்கொண்டிருக்கும் போது ஜப்பானின் நலன்களை வெளிநாடுகளில் நிலைநிறுத்துவதற்கு இராணுவத்தை அனுப்புவதற்கு இன்றைய அரசியல் சட்டம் சகித்துக்கொள்ள முடியாத ஒரு கட்டுப்பாடாக உள்ளது என்று ஜப்பானிய ஆளும் செல்வந்ததட்டினர் கருதுகின்றனர். நீர்மூழ்கிக்கப்பல் சம்பவத்தை கையில் எடுத்துக்கொண்டு Koizumi அரசாங்கம் பெய்ஜிங்கிற்கு ஒரு செய்தியை அனுப்புவது மட்டுமல்லாது வடகிழக்கு ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் ஜப்பான் ஒரு தீவிர ஆத்திரமூட்டும் பங்கு வகிப்பதற்கு அடித்தளமாகவும் அமைந்திருக்கிறது.

பெய்ஜிங்டனுடன் ஜப்பானின் மோதலில் ஒரு முக்கிய குவிமையப்படுத்தல் எரிபொருள் பிரச்சனையாகும். மத்திய கிழக்கிலும் பிற நாடுகளிலிருந்தும், எண்ணெய் இறக்குமதியை ஜப்பான் முழுமையாக நம்பியிருக்கிறது. இந்த வகையில் சீனா எண்ணெய் விநியோகத்திற்காக கடுமையான போட்டியில் இறங்கியிருக்கிறது----இன்றையதினம் சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது---- இது மோதலுக்கு இட்டுச்செல்கிறது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜப்பானுக்கு அருகிலுள்ள கிழக்கு சீனா கடன்பகுதியில் கூட்டாக எண்ணெய் ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு ஜப்பானுக்கு சீனா அழைப்புவிடுத்தது. அந்த ஆலோசனையை டோக்கியோ தள்ளுபடி செய்ததுடன், ஜூலை மாதம் அதே பகுதிக்கு டோக்கியோ தனது சொந்த எண்ணெய் ஆய்வுக்கப்பலை அனுப்பியது இதை ஒரு ஆத்திரமூட்டல் முயற்சி என்று சீனா கருதியது. அக்டோபரில் ஜப்பான் வர்த்தக அமைச்சர் ஜப்பானின் கடலடியிலிருந்து சீனா எரிவாயு எடுப்பதற்கு முயன்று வருவாதக குற்றம்சாட்டினார்.

ரஷ்யாவின் கிழக்கு சைபீரியா பகுதியில் எண்ணெய் குழாய்களை அமைப்பதற்கான ஒரு சீன ஆலோசனைக்கு ஒரு போட்டித்திட்டத்தை ஜப்பானும் தாக்கல் செய்தது. சீனாவின் திட்டம் அந்த எண்ணெய்க்குழாய் மன்சூரியா நகரமான Daqing இற்கு வர வகைசெய்கிறது. அதே நேரத்தில் ஜப்பான் ரஷ்ய கடற்கரைக்கு எதிரேயுள்ள ஜப்பான் நகரான Nakhodka விற்கு அந்த எண்ணெய்குழாய்கள் வரவேண்டுமென்று வலியுறுத்துகிறது. இந்தோனேஷியா போன்ற இதர பிராந்தியங்களிலும் கூட எண்ணெய் ஆராய்வு உரிமைகளைப்பெறுவதில் சீனாவோடு ஜப்பான் நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டிருக்கின்றன.

சீனா ஜப்பான் மீது தாக்குதல் நடத்துமானால் அதனால் ஏற்படக்கூடிய காட்சிகள் குறித்து ஜப்பான் இராணுவம் ஒரு ஆய்வை, ஜப்பான் ஊடங்களில் பிரசுரித்த மூன்று நாட்களுக்கு பின்னர் இந்த நீர்மூழ்கிக்கப்பல் சம்பவம் நடந்திருக்கிறது.

சீனாவின் அச்சுறுத்தல் பற்றி விவாதிக்கப்படுவதை Koizumi அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டு தைவானுக்கு அருகாமையிலுள்ள Shimoji தீவிற்கு Okinava விலிருந்து தனது ஜெட்போர் விமானங்களை திரும்ப அனுப்பியிருப்பதை நியாயப்படுத்திவருகிறது. சீனா நீர்மூழ்கிக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கருகிலுள்ள Miyako தீவில் மின்காந்த அலைகளை கண்டுபிடிக்கும் ஒரு நிலையத்தை அமைக்கவும் ஜப்பான் ஆலோசித்து வருகிறது. சீனப்போர் கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்களின் தகவல் தொடர்புகளை இடைமறித்துத் தெரிந்து கொள்வதற்கு இந்த மின்காந்த அலை கண்டுபிடிப்பு நிலையம் பயன்படும்.

டோக்கியோவும், பெய்ஜிங்கும் இப்போது நீர்மூழ்கிக்கப்பல் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை பெரிதுபடுத்தாதுவிட முயன்றாலும், இந்த பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் இராணுவ போட்டிகளின் கூர்மையை எடுத்துக்காட்டுவதாக அது அமைந்திருக்கிறது.

Top of page