World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Repeal of India's draconian anti-terrorism lawLargely a cosmetic changeஇந்தியாவின் கொடூர பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இரத்து பெரும்பாலும் ஒரு மேற்பூச்சு நடவடிக்கைதான் By Kranti Kumara இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு முன்னணி UPA பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை (POTA) இரத்து செய்திருப்பதை இந்தியாவின் உள்நாட்டு ஊடகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட்), மற்றும் மேற்கு நாடுகளின் மனித உரிமை அமைப்புக்களும் பாராட்டியுள்ளன----அது உருவாக்கப்படுவதற்கு காரணம் அது நிறைவேற்றப்பட்ட நேரம் மற்றும் அந்த சட்டத்தில் கண்டுள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் வீச்சின் காரணமாக அதனை அமெரிக்க தேசபக்த சட்டத்தின் இந்திய பதிப்பு என்று கூற முடியும். மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு பொடா இரத்து செய்யப்பட்டது ''இந்தியாவில் சிவில் உரிமைகளை முன்னெடுத்துச்செல்வதில் ஒரு பெரிய நடவடிக்கை'' என்று குறிப்பிட்டது. அத்துடன் உலகின் பிற நாடுகளுக்கு அது ''பயங்கரவாதத்திற்கு எதிரான முயற்சிகள் அடிப்படை உரிமைகளை கீழறுக்கவேண்டிய அவசியமில்லை'' என்பதற்கு ஒரு உதாரணத்தை நிறுவியுள்ளது என்று கூறியுள்ளது. ஆனால் உண்மை மிகவும் வேறுபட்டது. பொடா ஒரு மறைவான பிரிவைக் கொண்டிருக்கிறது மற்றும் அது அதிகம் பாராட்டப்பட்டுள்ள இரத்து நடவடிக்கைக்கு ஒரு மாதத்திற்கு பின்னர், 2004- அக்டோபரில் காலாவதியாகும்போது முடிவடையுமாறு வகுக்கப்பட்டிருக்கிறது. அதைவிட குறிப்பிடத்தக்கது என்னவென்றால், காங்கிரஸ் தலைமையிலான இடதுமுன்னணி அரசாங்கம், பொடா இரத்துடன் சேர்த்து 1967-ல் இயற்றப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்ட (UAPA) திருத்தங்களையும் ஆதரித்தது. இந்த திருத்தங்கள் பொடா இரத்து நடவடிக்கையை பெரும்பாலும் மேற்பூச்சு நடவடிக்கையாக ஆக்கிவிட்டது, ஏனென்றால் பொடா பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுகிறோம் என்ற பெயரால் அரசிற்கும், பாதுகாப்புப்படைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த பல ஒடுக்கு முறை மற்றும் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை அப்படியே தக்கவைப்பதாக உள்ளது. 1967- சட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் பல பொடா சட்டத்தின் பல பிரிவுகளை அப்படியே வார்த்தைகள் மாற்றமின்றி ஏற்றுக்கொள்கிறது. இதன் விளைவாக பல அமைப்புக்களை ''சட்டவிரோதமானவை'' என்று அறிவிக்கின்ற அதிகாரத்தை அரசாங்கம் தன் கையில் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் ஒரு குறிப்பிடத்தக்க நீதித்துறை பரிசீலனைக்கு மட்டுமே வகை செய்யப்பட்டிருக்கிறது. பொடா சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டிருந்த 32 அமைப்புக்களின் பட்டியல் 1967 சட்ட திருத்தத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. 1967- சட்டத்திருத்தல் பொடா சட்டத்தின் 21-வது பிரிவிற்கு ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது, இது பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பது ஒரு புதிய குற்றம் என்று அறிவித்தது. இந்த POTA-வின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) ஆதரித்துப்பேசுவதும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதும்தான் என்று பாதுகாப்புப்படைகள் எடுத்துக் கொண்டன. திருத்தப்பட்ட UAPA- வில் பொடாவில் கண்டிருந்த தொலைபேசி தொடர்புகள் மற்றும் மின்னணு தகவல் தொடர்புகளை இடைமறிப்பது, தொடர்பான குறைந்தபட்ச பாதுகாப்புக்கள் தொடர்பாக அக்கறை காட்டவில்லை என்று சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், பொடாவின் கீழ் 1600-க்கு மேற்பட்ட தனிமனிதர்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசாங்கம் கைவிட மறுத்துவிட்டது, அவர்களில் பலர் ஜாமீன் மறுக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். பொடாவிற்கும், திருத்தப்பட்ட 1967- UAPA விற்கும் இடையில் மிக முக்கியமான மாற்றமே கைது செய்யப்பட்டவர்களை 24- மணி நேரத்திற்குள் (30-நாட்கள் அல்ல) ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட வேண்டும், போலீஸ் அதிகாரிகளிடம் தரும் ஒப்புதல் வாக்குமூலம் ஒரு சான்றாக அனுமதிக்கப்படுவதற்கு இல்லை, மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் நிரூபிக்கப்படுகின்ற வரை அப்பாவிகள் என்று கருதப்பட வேண்டும் என்பதுதான். பொடா மூன்றாண்டுகள் 2001- செப்டம்பரில் நியூயோர்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடந்தவுடன், அரசாங்கத்தினால் பொடா அவசரசட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது. பாரதீய ஜனதா கட்சி ஆதிக்கம் செலுத்திய கூட்டணி அரசாங்கம் அதற்குப்பின்னர் 2001- டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கையில் எடுத்துக்கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான உணர்வுகளை தூண்டிவிடவும், பாக்கிஸ்தானுக்கு எதிரான உணர்வுகளை தூண்டிவிடவும் பயன்படுத்திக்கொண்டது. அதன் மூலம் நாடாளுமன்றத்தில் POTA நிறை வேற்றப்படுவதற்கு அது முக்கிய திருப்ப சுழல் அச்சு என நிரூபித்தது. அந்த சட்டத்தின் மீது 2001-02-ல் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் கட்சி ஒப்புக்காக ஒரு கூக்குரலை எழுப்பியது, பின்னர் கடந்த வசந்த காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பொடா பற்றி காங்கிரஸ் கட்சி அதிகம் பேசவில்லை. என்றாலும், காங்கிரஸ் தனது ஐக்கிய முற்போக்கு முன்னணி (UPA) பங்காளர்களோடும், ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான இடதுமுன்னணியினரோடும் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த மே மாதத்தில் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தபோது வகுத்த குறைந்தபட்ச செயற்திட்டத்தில் (CMP) பொடா சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்பது சேர்த்துக்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் தேசபக்த சட்டத்தைப்போன்று பொடா குற்றம் சாட்டப்பட்டவருக்கு உள்ள அடிப்படை உரிமைகள் சட்டபூர்வ நடைமுறைவழிகளை இரத்துசெய்வதுடன் குற்றம் நீரூபிக்கப்படும் வரை அப்பாவி என்று கருதப்படுவதையும் இரத்து செய்தது. பொடாவின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்படும் வரை 30- நாட்கள் காவலில் வைத்திருக்கப்பட முடியும். இந்த 30- நாட்களில் கைதிகளை சித்திரவதைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம், ''ஒப்புதல் வாக்குமூலங்களை'' பெறுவதற்குப் பயன்படுத்துகின்றனர் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் மனித உரிமை அமைப்புக்கள் எடுத்துக்காட்டின. POTA தடுப்புக்காவலர்கள் மீது எரியும் சிகரெட் முனைகளால் சுடுவது, கற்பழிப்பது, சிறுநீரைக் குடிக்கச்செய்வது, மற்றும் மின்சார அதிர்ச்சியூட்டுவது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொடாவை இயற்றியவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது நீதித்துறையின் வழக்கமா, சாட்சிப்பதிவு விதிகள் சட்டமியற்றுபவர்களால் ஒரு பக்கம் கைவிடப்பட்டுவிட்டது என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறது. பொடா சட்டத்தின் கீழ், ஒருவர் தருகின்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்டுள்ளபடி ஒருவர் மீது குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டிருக்காவிட்டால் கூட அதனை சான்றாக பயன்படுத்தப்படமுடியும். பொடாவின் 49 (7) பிரிவின் கீழ், ஜாமீன் பெறுவது ஏறத்தாழ இயலாத காரியமாகும், ஏனென்றால் அவர்களுக்கெதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் அவர்கள் குற்றவாளிகளாக இருக்க வாய்ப்பில்லை என்று முடிவு செய்யப்படுவார்களானால் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்ய முடியும். அரசாங்கம் பொடாவை ''அரசியல் எதிரிகள், மதச்சிறுபான்மையினர், தலித்துக்கள் [அல்லது முன்னாள் தீண்டத்தகாதவர்கள்], மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிராக கூட பயன்படுத்தியது'' என்று மனித உரிமை கண்காணிப்புக்குழு எழுதுகிறது. இந்தியாவில் அதிகாரபூர்வமான மனித உரிமைகள் கமிஷனே பொடாவை கண்டித்தது, ''பயங்கரவாதம் உட்பட எந்த அவரச நிலையையும், சமாளிப்பதற்கு நடைமுறையிலுள்ள சட்டங்களே போதுமானவை மற்றும் பொடா போன்றதொரு கொடூரமான சட்டம் தேவையில்லை" என்று அறிவித்தது. பொடா பெரும்பாலும் தான் தோன்றித்தனமாக பரந்தரீதியாகவும் விரிவாகவும் அரசாங்க எதிரிகளையும் சிறுபான்மையினரையும் குறிவைத்து எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதற்கு ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் போதுமானவை: * ஜார்கண்ட் மாநிலத்தில் 3,000- க்கு மேற்பட்ட ஏழை ஆதிவாசிகள் (பழங்குடிமக்கள்) மாவோயிச கொரில்லாக்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் "பயங்கரவாதத்திற்கு" உடந்தையாளர்கள் என்று அறிவிக்கப்பட்டனர். அப்படி சிறையில் இன்னும் இருப்பவர்களில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 14-வயது பெண் மயந்தி ராஜ்குமாரி- யும் ஒருவர். * ஹிந்து மேலாதிக்கவாத BJP- தூண்டிவிட்ட மிகப்பெரும் அளவிலான வகுப்புவாத, இரத்தக்களரி, 2002-ல் குஜராத்தில் நடைபெற்றது, முஸ்லீம்களை துன்புறுத்தவும், பயமுறுத்தவும் பொடாவை அரசாங்கம் பயன்படுத்தியது. * உத்திரப்பிரதேசத்தில் தங்களது நிலத்தை அபகரித்துக்கொண்டவர்களுக்கு எதிராக கண்டனம் செய்த மக்களை ஒடுக்குவதற்கு பொடா திரும்பத்திரும்ப பயன்படுத்தப்பட்டது. ஒரு 10-வயது சிறுவன், பயங்கரமான நக்சல்பாரி (அல்லது மாவோயிஸ்ட்) என்று முத்திரை குத்தப்பட்டு, கொலைசெய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான். * 2004- மார்ச்சில் இந்து இதழில் வந்திருந்த ஒரு செய்திபடி பெண்கள், பாரம்பரிய குடும்ப பழக்கவழக்கங்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்த ஒரு 17- வயது இளைஞன் பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டான். * தமிழ்நாட்டில் மாநில அரசாங்கம், எதிர்க்கட்சி அரசில்வாதியும், MDMK (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரான) வைகோவை அவர் LTTE -ஐ ஆதரித்து ஒரு உரையாற்றினார் என்பதற்காக பொடா சட்டத்தைப்பயன்படுத்தி இரண்டாண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருந்தது. அரசு ஒடுக்குமுறையின் ஒரு நீண்ட வரலாறு இந்தியா உலகின் மிகப்பெரிய ''ஜனநாயகம்" என்ற பரவலான பிரச்சாரத்திற்கு மாறாக, இந்திய ஆளும் செல்வந்த தட்டினர், தங்களது ஆட்சியை நிலைநாட்டுவதற்காக எப்போதுமே ஒடுக்குமுறை அதிகாரத்தையும், சட்டங்களையும், பயன்படுத்தி வந்தனர். 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் புதிய காங்கிரஸ் அரசாங்கம் பிரிட்டிஷ் காலனித்துவச் சட்டங்கள் பலவற்றை அப்படியே பின்பற்றியது, அந்தச்சட்டங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் மற்றும் தொழிலாளர், மற்றும் விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டவை, ஆனால் அவை ஒடுக்குமுறையை மேலும் அதிகமாக்கின. 1947- மற்றும் 1948-ல் வகுப்புவாதத்தை எதிர்த்துப்போராடும் போர்வையில் இந்திய அரசாங்கம் பஞ்சாப் கலவரப்பகுதிகள் சட்டம், பீஹார் பொது ஒழுங்கு பராமரிப்புச்சட்டம், பம்பாய் பொதுபாதுகாப்புச்சட்டம், மற்றும் சென்னை கலவரத்தடுப்புச்சட்டம் போன்ற சட்டங்களை இயற்றியது, இவை பொது அமைதியை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரால் எவரையும் கைது செய்யவும் மற்றும் காவலில் வைக்கவும், வகைசெய்தன. 1950-ல் ஜவஹர்லால் நேருவின் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் தடுப்புக்காவல் சட்டத்தை இயற்றியது மற்றும் அதை தொழிற்சங்கங்களின் தீவிர பணியாளர்களை கைது செய்வதற்கு பயன்படுத்தியது. 1958-ல் இந்திய பாராளுமன்றத்தில், மீண்டும் பிரதமர் நேருவின் தலைமையில் வடகிழக்கு மாகாணங்களில் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு ஆயுதப்படைகள், சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (AFSPA) இயற்றியது. இது மணிப்பூர் மாகாணத்தில் இன்றைக்கு நடந்துவரும் கிளர்ச்சிக்கு எதிராக ஆயுதப்படைகள் பயங்கர பலாத்காரத்தை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வகைசெய்யவும் இந்தச் சட்டம் இப்போதும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. 1974-ல் பிரதமர் இந்திரா காந்தி வரலாற்று சிறப்புமிக்க, இந்திய புகையிரத தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை நசுக்குவதற்கு ஆயுதப்படைகளை பயன்படுத்தினார் மற்றும் அதைத்தொடர்ந்து ஒரு அவசரநிலை பிரகடனத்தை வெளியிட்டார். 1971-ல் இயற்றப்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை அல்லது MISA- வை பயன்படுத்தி எதிர்கட்சிகளை சார்ந்த 20,000- க்கு மேற்பட்ட உறுப்பினர்களை 18- மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைத்தார். இந்திரா காந்தியின் புதல்வர் ராஜீவ் காந்தியின் தலைமையில் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம், தடா (TADA) 1985-ல் அவரது தாயார் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இயற்றப்பட்டது. பஞ்சாப் பிரிவினைவாத சீக்கியர்களை எதிர்த்து போரிடுவதற்காக ''தற்காலிக'' சட்டமாக TADA இயற்றப்பட்டது, இது 1995-வரை திரும்பத்திரும்ப நீடிக்கப்பட்டது. ஊதிய உயர்வு கோரியும், வேலைநிலைகளை மேம்படுத்தக்கோரியும் கிளர்ச்சி செய்து வந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களை முறியடிப்பற்கு TADA பயன்படுத்தப்பட்டது. இந்தியாவின் ஆளும் செல்வந்த தட்டினர், ஆட்சியை நிலைநாட்டுவதற்கு எந்த அளவிற்கு ஒடுக்குமுறை சட்டத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை ஓரளவிற்கு உணர்ந்துகொள்வதற்கு 1980-களில் இயற்றப்பட்ட சட்டங்கள் சிலவற்றை பட்டியலிட்டாலே அது போதுமானதாகும். அவற்றில் கீழ்க்கண்ட சட்டங்கள் இடம்பெறுகின்றன. ஜம்மு மற்றும் காஷ்மீர் பொதுபாதுகாப்புச்சட்டம் (1978), அஸ்ஸாம் தடுப்புக்காவல் சட்டம் (1980), தேசிய பாதுகாப்புச்சட்டம் (1980, 1984-மற்றும் 1987-லிலும் திருத்தப்பட்டது), அத்தியாவசியப்பணிகள் பராமரிப்புச்சட்டம் (1981), ஆயுதப்படைகள் (பஞ்சாப் மற்றும் சண்டிகர்) சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (1983), சண்டிகர் கலவரப்பகுதிகள் சட்டம் (1983), பயங்கரவாத பாதிப்புப்பகுதிகள் (சிறப்பு நீதிமன்றங்கள்) சட்டம் (1984), தேசிய பாதுகாப்பு (இரண்டாவது திருத்தம்) அவசரச்சட்டம் (1984), தேசியபாதுகாப்பு காவலர்சட்டம் (1986), மற்றும் ஆயுதப்படைகள் (ஜம்மு மற்றும் காஷ்மீர்) சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (1990). ஏறத்தாழ 60- ஆண்டுகள் முதலாளித்துவ ஆட்சிக்குப்பின்னர் மிக அடிப்படையான சமூக- பொருளதார பிரச்சனைகளை ''தீர்த்துவைக்க இயலாத'' நிலையிலிருந்து பிறந்த பிரிவினைவாத கிளர்ச்சிகளை அரசு பலாத்காரத்தின் மூலம் "தீர்த்துவைக்க" இந்திய ஆளும்வர்க்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இருந்துதான் இந்தச்சட்டங்களின் பெரும்பகுதி தோன்றின. அடிப்படை சிவில் உரிமைகள் மீது தாறுமாறான மீறல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கொல்வதற்கும், இராணுவத்திற்கும் இதர பாதுகாப்புப்படைகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதால் காஷ்மீர், மணிப்பூர், அஸ்ஸாம் மிஜோரம், அருணாசலப்பிரதேசம் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த மக்கள் குறிப்பாக துன்பப்பட்டு வருகின்றனர். இத்தகைய ஒடுக்குமுறைச்சட்டங்களை பயன்படுத்திக் கொள்வது மத்திய அரசோடு நின்றுவிட வில்லை அல்லது காங்கிரஸ், BJP, மற்றும் இதர பெருவர்த்தக கட்சிகளோடு நின்றுவிடவில்லை. CPI(M) தலைமையிலான மேற்கு வங்காள கூட்டணி அரசாங்கம், இந்திய மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) எதிரிகளை கைதுவாரண்ட் இல்லாமல் வழக்கமாக கைதுசெய்து வருகிறது, சித்திரவதை மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுகிறது. ஸ்ராலினிச CPI(M) பொடாவை கண்டிப்பதில் சேர்ந்து கொண்டாலும், நடப்பு மேற்கு வங்காள முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, BJP- ன் லால்கிஷ்ண அத்வானி உள்துறை அமைச்சாரக இருந்தபோது பொடாவை மதரஸாக்களில் (இஸ்லாமியப் பள்ளிகளில்) பயங்கரவாதிகள் தங்களை மறைத்துக்கொள்வதில் இருந்து தடுக்க, முன்கூட்டித் தாக்கி தடுத்துக்கொள்ள பொடாவை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விவாதித்தார். |