WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ரஷ்யா
மற்றும் முந்தைய USSR
Ukraine: ultra-right groups active in
Ukrainian opposition
உக்ரைன்: உக்ரேனிய எதிர்ப்பு அணியில் அதிதீவிர வலதுசாரி குழுக்கள் ஆர்வமான பங்கு
By Justus Leicht
7 December 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
உக்ரைனில் எதிர்த் தரப்பிற்குக் காட்டும் ஆர்வத்தில், அந்த எதிர்ப்பு இயக்கத்தில் "ஆரஞ்சுப்
புரட்சி" என்று அழைக்கப்படும் அதிதீவிர வலதுசாரிக் குழுக்களின் செல்வாக்கு நிறைந்த பிரிவும் அடங்கியுள்ளது என்ற
உண்மையை மேற்கத்திய செய்தி ஊடகங்கள் எளிதில் கவனத்திற்கொள்ளவில்லை.
இப்பொழுது கீவில் நடைபெற்று வரும் எதிரணி ஆர்ப்பாட்டங்களில் பாசிச அமைப்புக்களின்
பிரதிநிதிகள் சிறுபான்மையினராக இருந்தபோதிலும் அதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும்கூட வெகுஜன
ஆர்ப்பாட்ட அணிகளில் அவர்கள் பங்கு பெற்றது தற்செயலாக இணைந்து நடத்தப்பட்ட செயல் அல்ல. அவர்கள்,
விரும்பப்படாத சக பிரயாணிகளாகவோ அல்லது ஜனாதிபதி லியோனிட் குச்மாவின் அரசாங்கத்தால் உள்ளே புகுத்தப்பட்டு
தொந்தரவு கொடுப்பவர்களோ அல்லர்.
எதிர்க்கட்சித் தலைவர்களில் இரண்டு முக்கியமானவர்களான முன்னாள் பிரதம மந்திரியான
விக்டர் யுஷ்செங்கோவும், கோடீஸ்வரரும் முன்னாள் துணைப் பிரதமருமான யூலியா டைமோசென்கோவும் பல
ஆண்டுகளாக தங்கள் அரசியல் உறவுகளை பாசிச, யூத-எதிர்ப்பு கருத்துக்களை கொண்டிருப்பவர்களை பாதுகாக்கும்
அமைப்புக்களுடன் பராமரித்து வருகன்றனர் .
யுஷ்செங்கோவின் பாராளுமன்ற குழுவான "எமது உக்ரைன்", கம்யூனிச-எதிர்ப்பாளர்கள்,
நவீன-தாராளவாதிகள் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியினருடன் இணைந்து, "உக்ரேனிய தேசிய வாதிகள் பேரவை"
என்ற" (Congress of Ukrainian
Nationalists -KUN) அமைப்பையும் உள்ளடக்கியுள்ளது.
உக்ரேனிய தேசிய வாதிகள் பேரவை
(KUN), என்னும்
நாடு கடந்தவர் அரசியல் அமைப்பானது, "உக்ரேனிய தேசியவாத அமைப்பு- ஸ்டீபன் பன்டேரா பிரிவு" ஆக
1992-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பன்டேராவை பின்பற்றுபவர்கள் ஒரு பாசிச சிந்தனை, கம்யூனிச-எதிர்ப்பு
போர்க்குணம், ரஷ்ய-எதிர்ப்பு, போலந்து-எதிர்ப்பு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இரண்டாம்
உலகப்போரின், ஆரம்பத்தில் சோவியத்திற்கு எதிராக---நாஜி ஜேர்மனியினருக்கு ஆதரவாகப் போராடி, பின்னர்
ஜேர்மன் இராணுவம் படையெடுப்பை மேற்கொண்ட பகுதிகளில் உக்ரைனுக்கு "விடுதலை தேவை" என்ற
கோரிக்கையையும் முன்வைத்தனர்.
உக்ரைன் வெற்றி கொள்ளப்பட்டபின்னர், நாஜிக்களுக்கு, "ஸ்லாவிய மனிதநிலைக்கும்
குறைந்தவர்களுடைய" உதவி தேவைப்படவில்லை. அவர்கள் உக்ரைனுக்கு சுதந்திரத்தை நிராகரித்து, உக்ரைன்
தேசியவாதிகளை துன்புறுத்தத் தொடங்கினர். ஜேர்மன் இராணுவத்தை எதிர்க்கும் நிலைக்கு பன்டேராவின் பிரிவு
தள்ளப்பட்டது; ஆனால் போரின் போதும் அதற்குப் பிறகும், அது சோவியத் இராணுவத்திற்கு எதிரான தன்னுடைய
நடவடிக்கைகளில் குவிமையப்படுத்தலைக் கொண்டிருந்தது.
இதுதான் உக்ரேனிய தேசிய வாதிகள் பேரவை பிரதிபலிக்கும் தன்மையின் மரபு
ஆகும். 1990 களின் இறுதிவரை, Tryzub
என்று அழைக்கப்பட்டிருந்த இணை இராணுவ அமைப்பு ஒன்றை அது நடத்தி வந்தது; அது தனது நடவடிக்கைகளை
"ஸ்டீபன் பன்டேரா விளையாட்டுத் தேசியச் சங்கம்" என்ற பெயரில் நிகழ்த்டித வந்தன.
இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை யுஷ்செங்கோவின் "எமது உக்ரைன்" என்ற
அமைப்பு, Oleh Tyahnybok
தலைமையிலான ஸ்வோபோடா என்ற "அனைத்து உக்ரைனிய சுதந்திரக் கட்சி" என்ற இன்னொரு பாசிச
அமைப்பையும் உள்ளடக்கியிருந்தது. முதலில் இதற்கு "உக்ரைனிய தேசிய சோசலிச கட்சி''
(SNPU) என்று
அழைக்கப்பட்டு தன்னுடைய கட்சியின் சின்னமாக ஒரு திரிசூலத்தையும், ஸ்வஸ்திகா சின்னத்தையும் பயன்படுத்தியது.
2004 ஆரம்பத்தில், வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்களுக்காக தயாரிக்கும் வகையில்,
இந்தக் கட்சி, தனது பெயரையும், சின்னத்தைத்தையும் மாற்றிக் கொண்டது. ஆயினும்கூட, ஜூலை மாதத்தில்
Tyahnybok
இரண்டாம் உலகப்போரில் உக்ரேனிய தேசிய ஆதரவாளர்களாக இருந்தவர்களை, "அவர்கள் ரஷிய, யூதர்களை
அகற்றியதின் மூலம் நாட்டைத் தூய்மைப்படுத்திவர்கள்" என்று வெளிப்படையாகப் புகழ்ந்தார்.
"உக்ரைன் இறுதியில் உக்ரேனியர்களிடம் கொடுக்கப்படவேண்டிய தேவை வந்துள்ளது"
என்றும் "மாஸ்கோவை சார்ந்த யூத மாஃபியா இப்பொழுது உக்ரைனை ஆண்டு வருவதை" அவர்களிடமிருந்து
விடுவிக்கவேண்டும் என்றும் அவர் விளக்கினார். அரசாங்கத்திற்கு நெருக்கமாக இருந்த செய்தி ஊடகங்கள் இந்த
அறிவிப்பை எதிர்க்கட்சியை தாக்குவதற்காக எடுத்துக் கொண்டன. இதன் விளைவாக யுஷ்செங்கோவ்,
Tyahnybok
மற்றும் அவருடைய ஆதரவாளர்களை "எமது உக்ரைன்" என்ற அமைப்பில் இருந்து தடைசெய்துவிட்டார்.
Yulia Tymoshenko உடன்
இணைந்திருக்கும் சக்திகளில், 1992ல் முன்பு பிரிந்து சென்றிருந்த ஸ்டீபன் கமரா தலைமையிலான "உக்ரைனிய
பழமைவாத குடியரசுக் கட்சி (UCRP)
என்னும் அதிதீவிர வலதுசாரி அமைப்பு போன்றவையும் ஆகும். இந்த குழு
பெரும் வெறியுடன் கம்யூனிச எதிர்ப்பை கொண்டிருப்பதுடன் "ரஷ்ய பேரரசை அகற்றிவிட வேண்டும்" என்ற
அழைப்பையும் விடுத்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான பகிரங்க எதிர்ப்புக்களில், உக்ரைனிய பழமைவாத குடியரசுக்
கட்சி "உக்ரேனிய தேசியசபை --தற்காப்பிற்காக" (UNA
UNSO) எனப்பட்ட
Andrei Shkil தலைமையிலான அமைப்புடனும் ஒத்துழைத்தது;
இந்த அமைப்பும் Tymoshenko
தலைமையிலான முகாமில்தான் உள்ளது.
உக்ரேனிய தேசிய சபை 1990ல் தோற்றுவிக்கப்பட்டது, அதன் இணை இராணுவக்
அமைப்பு (UNA UNSO)
1991ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது; மாஸ்கோவில் பெருமளவு
எதிர்ப்பாளர்களை கொலைசெய்யும் நடவடிக்கைகளை எழுந்ததை அடுத்து இது நிறுவப்பட்டது. இதில் 1,000க்கும்
மேற்பட்ட போராளிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது, இவர்கள் முதல் செச்செனியப் போரில்
செச்செனியர்களுடனும், யூகோஸ்லாவியப் போரில் குரோஷியர்களுடனும், ஜோர்ஜியாவிலும் பங்கு பெற்றிருந்தனர்.
அதன் வலைத் தள ஆங்கில மொழிப் பிரிவில் சிலி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல்
ஒகஸ்டோ பினோசேயுடன் ஒருமைப்பாட்டை தெரிவித்த பிரகடனம்,
UNA UNAO பேரவை
பற்றிய அறிவிப்பு ஆகியவையும் உள்ளன; ஜேர்மனியின் நவ-பாசிச
NPD உடன் இந்த அமைப்பு "நட்பு, ஒத்துழைப்பு" ஆகிவற்றிற்கான
உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது; இதைத் தவிர வலைத் தளத்தில்
UNA UNSO
சிந்தனைப் போக்கு அரசியல் பற்றி ஒரு நீண்ட கட்டுரையும் உள்ளது.
Nationalist என்ற
இதழின் ஆசிரியர் குழு தலைவரான Andrei Shkil,
நாஜி SS Galicia
இன் உக்ரேனிய பிரிவின் அடையாள பதாகையை உயர்த்திக் காட்டியதாக கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
Nationalist
இதழில் Gobineau
மற்றும் Walter Darré
ஆகியோரின் இனவெறி சிந்தனைகளை புகழ்ந்திருப்பதோடு மட்டுமில்லாமல், இந்த "எண்ணங்களை (Gobineau,
Darré
ஆகியவர்களுடையவற்றை) மறு ஆய்வு செய்துள்ள எனது போராட்டம்
(Mein Kampf) மற்றும் அதன் ஆசிரியருக்கும்"
(ஹிட்லரின் பெயரைக் குறிப்பிடாமல்) புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
எனவே Shkil
தன்னுடைய பாராளுமன்ற பிரதிநிதி என்ற தகுதியை பயன்படுத்தி, ஸ்ரேபான் பன்டேரா மற்றும் சைமன் பெடில்யூராவின்
சடலங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. பிந்தையவருடைய படைகள்
போல்ஷிவிக்குகளுக்கு எதிராக 1918-19ல் போரிட்டு கிட்டத்தட்ட 30,000 யூதர்களைக் கொன்றிருக்கின்றன.
2001 மார்ச் மாதத்தில்,
Shkil உம் அவருடைய
அமைப்பும், ஜனாதிபதி குஷ்மாவிற்கு எதிராக நிகழ்ந்த எதிர்ப்புக்களில் போலீசாருடன் தெருச்சண்டைகளை நிகழ்த்தியமை
தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. இதன் விளைவாக, பின்னர் ஷிகிலுக்கு 18 மாதம் கழித்து ஒரு சிறைத்
தண்டனை கொடுக்கப்பட்டது. Shkil
க்கு தண்டனை கொடுக்கப்பட்டதை அடுத்து, யுஷ்செங்கோவும் மற்றய எதிர்
தரப்பு அரசியல் வாதிகளும் நீதிமன்றத் தீர்ப்பை ஓர் அரசியல் தீர்ப்பு எனக் கண்டனத்திற்கு உட்படுத்தினர்.
Tymoshenko
இதைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசும்போது, ஷிகிலுடைய அமைப்பில்
இருந்த 2 முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 உறுப்பினர்களை "நாட்டின் தலைசிறந்த
பிரதிநிதிகள்" என்று அழைத்தார்.
See Also :
உக்ரைன் தேர்தல் சர்ச்சையில் அமெரிக்கா தலையிடுகிறது: திரு. பெளல் அவர்களே உங்களை யார் கேட்டது?
Top of page
|