World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: right-wing trajectory of conservative parties in wake of Bush re-election

ஜேர்மனி: புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து பழமைவாத கட்சிகளின் வலதுசாரி திருப்பம்

By Ulrich Rippert
29 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜோர்ஜ் W. புஷ் ஜனாதிபதியாக அமெரிக்காவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜேர்மனியிலுள்ள வலதுசாரி பழமைவாத அரசியல்வாதிகளும், கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் தங்களது அரசியலை தீவிரப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் தோன்றியிருப்பதாக உணர்கின்றனர். டச்சு திரைப்படத் தயாரிப்பாளர், Theo van Gogh கொலை செய்யப்பட்டதை ஏற்கெனவே பயன்படுத்தி இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக ஆவேசத்தை தூண்டிவிட்டனர் ----இதில் உண்மையும் உண்டு--- கற்பனையும் உண்டு- மற்றும் அந்த சம்பவத்தை ''மேற்கு நாட்டு மதிப்புகள்'' என்று கூறப்படுவதற்காக ஒரு சிலுவைப்போரை நடத்த பயன்படுத்திக் கொண்டனர். இந்த வாய்வீச்சு கூக்குரல் மற்றும் பேரினவாத பிரச்சாரம் முனிச் (Munich) நகரத்தில் சென்றவாரக் கடைசியில் நடைபெற்ற ஜேர்மன் பழமைவாத கிறிஸ்தவ சமூக யூனியனின் (CSU) மாநாட்டில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

கிறிஸ்தவ சமூக யூனியனின் தலைவரான எட்முண்ட் ஸ்ரோய்பர் (Edmund Stoiber) ''நமது நாட்டின் கிறிஸ்தவ சிறப்பியல்புகளை'' பாதுகாத்து நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சமுதாயத்தின் எல்லா பகுதிகளிலும், ''கிறிஸ்தவ மதிப்புகளும் மற்றும் கூடுதல் தேசபக்தியும்'' மறுபடியும் திரும்பியாக வேண்டும். ''நமது நாட்டின் எதிர்காலத்திற்கு ஒரு தெளிவுள்ள தன்னம்பிக்கையுள்ள தேசபக்தி தவிர்க்க முடியாததாகும்'' என்று ஸ்ரோய்பர் பிரதிநிதிகளிடையே உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

வெளிநாட்டவர்கள் ஒன்றிணைந்து கொள்வதற்கு இன்னும் அதிகம் செய்தாக வேண்டும் ''அவர்கள் தங்களோடு கொண்டுவருகிற, அவர்கள் தம்முடன்கொண்டுவரும் கடன் (Bringschuld) என்னவென்றால்,'' அதில் அவர்கள் ஜேர்மன் மொழியை கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், இங்கே வாழ விரும்புகிற ஒவ்வொருவரும் ''ஜேர்மன் சமுதாயத்தின் அடிப்படை மதிப்பீடுகளை'' நிபந்தனை எதுவுமில்லாமல் ஏற்றுகொண்டாக வேண்டும் என்றும் ஸ்ரோய்பர் மேலும் கூறினார். ஜேர்மன் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் காட்டும் அடையாளங்களை இழந்துவிடக்கூடாது, இது ஒரு ''விதி அடிப்படையில் அமைந்த சமுதாயம்'' என்று ஸ்ரோய்பர் கூறினார், இந்த சொல் நாஜிக்கள் பயன்படுத்தியது என்று தெளிவாக தெரிந்த பின்னரும் ஸ்ரோய்பர் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே நேரத்தில், ஜேர்மன் தேசியவாத கிளர்ச்சியும், சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ள வெளிநாட்டவருக்கெதிரான கிளர்ச்சி சுற்றுக்களின் அரசியல் பின்னணியை அம்பலப்படுத்துவதில் கட்சி மாநாடு போதனையூட்டியுள்ளது. இதற்கு முன்னர், ஜேர்மன் சமுதாயம் ஒரு சமூக சமரச இணக்க கொள்கை அடிப்படையில் இணைந்து நின்றது. கடந்த சில ஆண்டுகளில் இடைவிடாது சமூக நலன்புரி வெட்டுக்கள் செயற்படுத்தப்பட்டு வருவதால் ஆழமான சமூகப்பிளவுகளுக்கு இடம்கொடுத்துவிட்டது, அந்தப்பிளவுகள் இப்போது நாளுக்கு நாள் கூர்மையான வடிவங்களை பெற்றுக்கொண்டு வருகின்றன. இப்படி பெருகிவரும் சமூக கோபத்தையும், நெருக்கடித்தன்மையும் இனவாத மற்றும் தேசியவாத வழிகளில் திசைதிருப்பி விடுவதற்கு தற்போது ஒரு முயற்சி நடந்துவருகிறது.

இந்த மாநாட்டிற்கு முன்னர், கிறிஸ்தவ சமூக யூனியனின் தலைமை, அதன் பங்காளியான கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் ஜேர்மனியின் அரசு சுகாதார காப்புறுதி திட்டத்தை ஒரு தீவிரமான அடிப்படையில் இல்லாதொழிக்க உடன்பட்டது. ''சுகாதார சீர்திருத்தத்தில் ஒரு சமரசம்'' என்று வர்ணிக்கப்படுவது என்னவென்றால், இது எதிர்கட்சியின் சமூக அரசியல் போக்கில் ஒரு அடிப்படை மாற்றம் நடைபெற்றிருக்கிறது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகிறது.

இதற்கு முன்னர் ''ஒருமைப்பாட்டு கொள்கை'' (solidarity principle) என்றழைக்கப்பட்ட ஜேர்மனியின் சமூக பாதுகாப்பு முறையை சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்களால் மட்டுமின்றி, இரண்டு பழமைவாத கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியன் ஆகியவற்றாலும் மதிக்கப்பட்டன. இந்த ''ஒருமைப்பாட்டு கொள்கைக்கு'' பின்னணியாக இருந்த கருத்து என்னவென்றால் முக்கிய சமூகப்பிரச்சனைகளான----நோய், வேலையில்லாத் திண்டாட்டம், மற்றும் ஓய்வு பெறுவது----ஒருமைப்பாட்டின் அடிப்படையில் தீர்த்துவைக்க முடியும் என்பதாகும். எனவே சுகாதார காப்புறுதி திட்டத்திற்கு தனிமனிதர்கள் தங்களது வருமான வரம்பு அடிப்படையில் சந்தாக்களை செலுத்தினர், அதே நேரத்தில் தங்களது சந்தாக்கள் எவ்வளவாக இருந்தாலும் காப்புறுதி செய்துகொண்ட அனைவருக்கும் ஒரேவகையான பயன்கள் கிடைக்க உறுதி செய்துதரப்பட்டது.

இந்தக்காப்புறுதி திட்டங்களால் ஏழை குடும்பங்கள் பயனடைந்ததுடன், வேலைசெய்யாத திருமணம் செய்துகொண்ட பெண்ணோ ஆணோ மற்றும் குழந்தைகள் பிரதான ஊதியம் ஈட்டுவோருக்கு அல்லது வேலையில்லாத்திண்டாட்ட உதவித்தொகை பெறுகிறவருக்குக் கூட கூடுதல் செலவினங்கள் இல்லாமல் இப்பயன்களை அடைய முடிந்தது. ''சமத்துவ கொள்கை'' அடிப்படையில் முதலாளிகளும், தொழிலாளர்களும், சுகாதார காப்புறுதிக்கும் அதேபோல் ஓய்வூதியம் மற்றும் நோய் மற்றும் வேலையில்லாத்திண்டாட்ட சலுகைத்திட்டங்களுக்கு 50க்கு 50 என்ற அடிப்படையில் சந்தா செலுத்தி வந்தனர்.

சிறிது காலமாக இந்தத்திட்டத்தில் ஏழைகளுக்கு புதிய சுமைகளும் வசதி படைத்தவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டு திட்டம் சிதைக்கப்பட்டாலும் சமூக ஜனநாயக கட்சியும் யூனியன் கட்சிகளும், இந்த அடிப்படை முன்மாதிரிக்கு உறுதியாக நின்றனர். ஜேர்மனியில் 1880 களில் ஜேர்மனியின் முதலாவது தேசிய அதிபர் ஒட்டோ பிஸ்மார்க் பொது சமூக பாதுகாப்புத்திட்ட அடிப்படையை சமூக நிலைமைகளில் ஸ்திரத்தன்மையை உருவாக்கும் நோக்கோடு அறிமுகப்படுத்தினர்.

கிறிஸ்தவ சமூக யூனியன் மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட சுகாதார சீர்திருத்தம் தொடர்பான ''உடன்பாடு'' எதை குறிப்பிடுகின்றதென்றால் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மேம்படுத்தியுள்ள '' ஒரே தடவையில் செலுத்தும்'' (lump-sum payment) திட்டம் என்றழைக்கப்படுவது ஒரு கணிசமான மாற்றம் செய்வதற்கு வகை செய்கிறது. அதன்படி எதிர்காலத்தில் ஒவ்வொரு பருவம் அடைந்தவரும் தனது வருமானத்தில் அதிகபட்சம் 7 சதவீதத்தை அல்லது ரொக்கமாக 109 யூரோக்களை சந்தாவாக செலுத்த வகை செய்கிறது. இது பணக்காரர்களுக்கு மிகத்தீவிரமான நிவாரணத்தைத்தரும். ஏனெனில் அவர்களது வருமானம் உயர்வதற்கு ஏற்ப காப்புறுதி கட்டணங்கள் குறைகின்றன. அதே நேரத்தில், வேலையற்ற குடும்பங்களுக்கு இனி காப்புறுதி செய்யமுடியாது.

முதலாளிகளின் பங்கான சந்தா, 6.5 சதவீத அளவிற்கு முடக்கப்பட்டுவிட்டது. உடன்பாட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப்போல் இப்படி செய்திருப்பதன் மூலம் ''எதிர்காலத்தில் மக்கள் தொகை மாற்றங்களால் மற்றும் மருத்துவ - தொழில் நுட்ப முன்னேற்றத்தால் உருவாகும் செலவினங்களில் இருந்து'' சுகாதார பாதுகாப்புத்திட்டம் பிரிக்கப்பட்டுவிட்டது. இதை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, தொழிலாளி செலுத்துகின்ற ரொக்க தொகை முதலாளி செலுத்துகின்ற ஒரேதடவையில் செலுத்தும் பங்கும் சேர்த்து 169 யூரோக்கள் ஆகிறது. இது நடப்பு செலவினங்களுக்கே முழுமையாக போதுமானதல்ல. எனவே நலன்புரி உதவிகள் மேலும் வெட்டப்படுவதற்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கிறது.

மேலதிக பணம் செலுத்த தேவையில்லாத கூட்டு அடிப்படையிலான குழந்தைகள் காப்புறுதிக்கு வரிகள் மூலம்தான் நிதியளிக்கப்படும். எனவே இது பாதுகாப்பானதல்லாததுடன், மற்றும் வரவுசெலவு திட்ட கொள்கைகளுகேற்ப தாறுமாறாக மாறும் தன்மைகொண்டது.

சமூகக்கொள்கையில் எந்தளவிற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது, என்பதை கிறிஸ்தவ சமூக யூனியன்வின் சொந்த சமூக விவகாரங்கள் தொடர்பான நிபுணர் Horst Seehofer இன் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன. ''அவர் சுகாதார சீர்திருத்தம் தொடர்பான தீர்மானங்களை தள்ளுபடி செய்தார்'' அவை ''சமூக விரோதமானது, அதிகாரத்துவமானது மற்றும் நிதியடிப்படையில் ஆரோக்கியமற்றவை'' என்று குறிப்பிட்டார். தனது கருத்திற்கு கிறிஸ்தவ சமூக யூனியன் செயற்குழுவில் ஆதரவை வென்றெடுக்கத் தவறிவிட்டதால், அவர் கிறிஸ்தவ சமூக யூனியனின் நாடாளுமன்ற குழு துணைத்தலைவர் பதவியை இராஜிநாமா செய்தார்.

தொழிலாளர்கள் உரிமையின் மீது மேலும் தாக்குதல்களை தொடுப்பதற்கும் கிறிஸ்தவ சமூக யூனியன் மாநாடு முடிவு செய்திருக்கிறது. வேலைநீக்கத்திற்கு எதிரான சட்டப்பாதுகாப்பு மிகக்கடுமையாக குறைக்கப்பட வேண்டும். 20 ஊழியர்களுக்கும் குறைவானவர்கள் பணியாற்றும் தொழிற்கூடங்களில் சட்டபாதுகாப்பு இரத்துசெய்யப்பட வேண்டும். ''தொழிற்கூட தொழிலாளர் கூட்டணிகள்'' என்று கூறப்படுபவை உருவாக்கப்பட வேண்டும் இவை ஊதிய ஒப்பந்தங்களை இரத்து செய்பவை மற்றும் குறைந்த ஊதியப்பணிகளுக்கு உறுதிசெய்து தருபவை.

தேவாலயங்களும் அரசும்

இதுவரை சமுதாயத்தை இணைத்துக் கொண்டிருந்த ''சமூக கூட்டு'' சிதைந்து கொண்டிருக்கிற சூழ்நிலையில் ஒரு ''சித்தாந்த கூட்டினை'' மாற்றுவதற்கு முயற்சிகள் பெருகிவருகின்றன. ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் அண்மையில் நடந்த அமெரிக்க தேர்தலில் வென்றதற்கு காரணம் தேசபக்தி, மதம் மற்றும் குடும்பம் தொடர்பான தனது பழமைவாத மதிப்பு நம்பிக்கைகளை பிரகடனப்படுத்தியதால்தான் என்று மாநாட்டிலும், மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பேட்டிகளிலும் ஸ்ரொய்பர் வலியுறுத்திக் கூறியுள்ளார். இதிலிருந்து தகுந்த படிப்பினைகளை பெறவேண்டிய அவசியமென்று ஸ்ரொய்பர் கூறினார்.

''ஜேர்மனியின் கிறிஸ்தவ வேர்கள்'' மிகுந்த தன்னம்பிக்கையோடும் ஆற்றலோடும், பிரதிநிதித்துவப் படுத்தப்பட வேண்டும். ''எடுத்துக்காட்டாக அரசு அலுவலக கட்டிடங்களிலும், அல்லது பள்ளிக்கூட இறைவணக்கத்திலும் சிலுவை வைப்பது தொடர்பான பங்களிப்பு பற்றி விவாதங்கள் நடத்தப்படவேண்டும்'' என்று அவர் மேலும் கூறினார். இளைஞர்களுக்கு கட்டுப்பாட்டையும், தங்களது பொறுப்புக்கள் பற்றிய கடமை உணர்வையும் கண்ணியத்தையும், கற்றுக்கொடுத்தாக வேண்டும். ''நமது நாடு 1500 ஆண்டுகளாக கிறிஸ்தவ மதத்தினால் உருவாக்கப்பட்டது, இஸ்லாமியத்தால் அல்ல'' என்று கிறிஸ்தவ சமூக யூனியன் தலைவர் கூறினார்.

ஸ்ரொய்பரின் மாநாட்டு உரையில் முன்கொண்டுவரப்படுவது என்னவெனில், அவரது உரை மதத்தை, தேசிய அரசு கண்ணோட்டத்தோடு இணைக்கிறது. அவர் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக தனது கண்டனக்கணைகளை விடுத்தாலும் அதே நேரத்தில் ''நமது நாட்டின் கிறிஸ்தவ நற்குணங்களை'' காத்து நிற்க வேண்டும் என்று அவர் பிரச்சாரம் செய்வது கிறிஸ்துவ அடிப்படைவாதத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. ''மேற்கு நாடுகளின் மதிப்பீடுகளை காத்துநிற்பது என்பது உண்மையிலேயே தேவாலயங்களையும் அரசாங்கத்தையும் பிரித்து வைப்பதில் பின்னிக்கிடக்கிறது என்பது அவருக்கு தோன்றவேயில்லை.

மதசுதந்திரம் என்பது மிகப்பழமையான மனிதஉரிமைகளில் ஒன்றாகும் அவற்றின் நவீன வடிவம் 16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற மதப்போர்கள், மற்றும் பிரெஞ்சு புரட்சியில் உருவானது. அதனுடைய ஆக்கப்பூர்வமான வடிவம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பற்றி பொது பிரகடனத்தில் அடங்கியிருக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரத்தையும், மனசாட்சி சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் உறுதிசெய்து தருகிறது.

''எதிர்மறை மத சுதந்திரம்'' என்பது (எல்லா மதங்களுக்கிடையிலும் அரசாங்கம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதாகும்) இது முதலில் 1848ல் இயற்றப்பட்ட ஜேர்மன் Paulskirche அரசியல் சட்டத்தில் இடம்பெற்றது. இதற்கு உடனடிக்காரணம் 1838ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு பவேரியாக்கட்டளை (Genuflection Decree -மண்டியிடும் கட்டளை) என்று பெயர் அதன்படி எல்லாப்போர் வீரர்களுமே கத்தோலிக்க மாதா கோயிலுக்கு சென்று கடவுள் முன் மண்டியிட வேண்டும்.

ஜேர்மனியில் தேவாலையங்களையும் அரசையும் பிரித்துவைப்பது எப்போதுமே முழுமையாக பூர்த்தியடையவ்லலை என்றாலும் 1975இல் மத்திய அரசியல் சட்ட நீதிமன்றம், முடிவுசெய்த ஒரு தீர்மானத்தின்படி அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு பாதகமாகவோ, அல்லது சலுகைகாட்டும் வகையிலோ செயல்படுவதில்லை என்று உறுதிசெய்து தந்தால் மட்டுமே ''ஆக்கப்பூர்வமான மற்றும் எதிர்மறையான மத சுதந்திர உரிமைகளை'' கிறிஸ்தவ சமுதாய பள்ளிகளில் வெளிப்படுத்த முடியும். இந்தத்தீர்மானத்தின்படி ''அரசாங்கம் எல்லா குடிமக்களுக்கும் இல்லமாகும்'' அது உலக கண்ணோட்டத்தை ஒட்டி மத விவகாரங்களில் நடுநிலையை பாதுகாத்தால்தான் அது சாத்தியமாகும். எனவே சில நம்பிக்கைகளுக்கு மட்டுமே முன்னுரிமை தருகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்''.

இப்படி வரையறுக்கப்பட்ட தேவாலையங்களை மற்றும் அரசாங்க பிரிவினையைக்கூட தற்போது, இரத்துச்செய்கிற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அமெரிக்காவில் குடியரசுகட்சி வெற்றிபெற்றாதல் ஊக்குவிக்கப்பட்டு, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் அதே போன்றதொரு பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.

சமூக ஜனநாயகவாதிகளிடமும் மற்றும் பசுமைகளிடமும் மாற்று எதுவுமில்லை. முற்றிலும் மாறாக, பசுமைகளின் தலைவர் Bütikofer முதலில் ஒன்றை வலியுறுத்தினார். ''மக்களை கவரும் கலாச்சார கிளர்ச்சியினால் எந்தளவிற்கு மேலாதிக்கம் செலுத்துகின்ற நிலைக்கு அமெரிக்காவின் பழமைவாதிகள் வந்திருக்கிறார்கள் என்பதை இடதுசாரிகள் ஆராய்வது நல்லதொரு யோசனை'' என்று முதலில் அவர்தான் கூறினார். மற்றும் தேசிய சின்னங்கள் மீது கவனம் திருப்ப வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர், ஜேர்மனியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமென முஸ்லீம்களை கேட்டுக்கொண்டார். ஜேர்மன் கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் மற்றும் ஜேர்மன் நலன்புரி அரசுத்திட்டங்களை சூறையாடும் முஸ்லீம்களும் மற்றும் புலப்பெயர்ந்தவர்களும் திட்டமிட்டு வசதிக்குறைவான குடியிருப்புப்பகுதிகளுக்கு ஒதுங்கிக்கொள்கிறார்கள் என்று கோருபவர்களுடன் ஷ்ரோடரும் சேர்ந்து கொண்டிருக்கிறார். இது உண்மையை தலைகீழாக புரட்டுவதாகும். உண்மையிலேயே நிதி ஒதுக்கீடு வெட்டுக்கள் தஞ்சம் புகுவதற்கான கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் அதிகாரத்துவ தொல்லைகைள் சமூக ஒருங்கிணைப்பு நடைபெற முடியாத அளவிற்கு உருவாகிவிட்டன. ஜனவரியில் புதிய குடியேற்றச்சட்டம் செயல்பட தொடங்கியதும் இந்தப்போக்கு வளரவே செய்யும்.

மொழி பயிற்சிகள் மற்றும் கலாச்சார வசதிகள் போன்ற ஒருங்கிணைப்புத் திட்டங்கள், புறநகர் திட்டங்கள் போன்ற வடிவங்களில் ஐக்கியத்தை உருவாக்குவதற்கு இயலாத வகையில் நிதித்தட்டுப்பாடு உள்ளது. இது போன்ற திட்டங்களுக்கு செலவு அதிகமாகும். முக்கியமாக இது போன்ற திட்டங்களுக்குத்தான் அண்மை ஆண்டுகளில் செலவுகள் வெட்டப்பட்டுள்ளன. குடியேறுபவர்கள் சேரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை கூறுவதற்கு பதிலாக தகுந்த குடியிருப்புக்களையும், நியாயமான ஊதியம் தரும் பணிகளையும் உருவாக்கித்தர வேண்டும். ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சி-பசுமை கட்சியின் மத்திய அரசாங்கம் அத்தகைய கொள்கைகளை எதிர்த்துக்கொண்டு வருவதால் வலதுசாரி வாய்ச்சொல் வீரர்கள் மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுக்கும் இடம் கொடுத்துவிட்டார்கள்.