World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain seeks to appease Bush

புஷ்ஷை சமாதானப்படுத்த ஸ்பெயின் முயல்கிறது

By Paul Mitchell and Paul Bond
23 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜோர்ஜ் W. புஷ்ஷின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஸ்பெயினின் அரசியல் ஸ்தாபனங்கள் குழப்பமடைந்துள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE) பிரதமர் யிஷீsங ஸிஷீபீக்ஷீணரீuமீக்ஷ் ஞீணீஜீணீtமீக்ஷீஷீ வாஷிங்டனிற்கு ஆழ்ந்த கோபத்தையளித்த திடீர் திருப்பமான நடவடிக்கைக்கும் பின்னர் அதன் முன்னா இழிவான சரணாகதிக்குமிடையில் ஊசலாடலானார். புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஸ்பெயின் சமாதானப்படுத்தும் வழியில் மேலும் செல்லவேண்டும் என்று நிர்பந்தம் அதிகரித்து வருகிறது.

2004 மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் ஸ்பெயின் எந்த கட்சியும் பெற்றிராதளவிற்கு ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி அதிகமான வாக்குகளை பெற்றதால் Zepatero பதவியில் அமர்த்தப்பட்டார். அவர் தேந்தெடுக்கப்பட்டது ஈராக் போருக்கும் முந்திய ஜோஸ் மரியா அஸ்னார் அரசாங்கத்தின் பொய்களுக்கும் பரந்த மக்களது விரோதம் நிலவுவதை எதிரொலித்தது----அஸ்னார் போரையும் அமெரிக்க ஒரு பூகோள ''பலமான வல்லரசு'' என்ற பாத்திரத்தையும் பகிரங்கமாக ஆதரித்தவர். Zapatero ஈராக்கிலிருந்து துருப்புக்களை விலக்கிக்கொண்டதுடன் மற்ற நாடுகளும் அவ்வாறே செய்ய வேண்டுமென்று கூறி மற்றும் கியூபாவுடன் தனது உறவுகளை வலுப்படுத்திக் கொண்டதன் மூலம் புஷ் நிர்வாகத்தின் கடுங்கோபத்திற்கு இலக்கானார்.

பிரதமர் அமெரிக்க ஆக்கிரமிப்பு எதிர்ப்பை கொள்கை அடிப்படையில் ஏகாதிபத்தியத்தையும், இராணுவ வாத்ததையும் எதிர்க்கும் முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை ஆனால் ஸ்பெயின் நாட்டு வெளியுறவுக்கொள்கையில் அந்நாட்டின் தேசிய நலனை வளர்க்கின்ற வகையில் ஒரு மறுநிலைநோக்கை ஏற்படுத்திக் கொண்டார். Zapatero ''முதலில் வருவது ஐரோப்பா அதற்கு பின்னே வருவது நமது வரலாற்று அடிப்படையிலான இலத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் உறவுகள், இறுதியில் வருவதுதான் அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள்'' என்ற ஒரு கொள்கையை கடைப்பிடித்தார். இந்தக் கொள்கையை கடைபிடிப்பதால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடன் இணைந்து ஒரு ஒன்றுபட்ட சுதந்திர ஐரோப்பிய நடவடிக்கையை எடுக்க முடியுமென்றும்---- மற்றும் 2005 பெப்ரவரியில் ஸ்பெயினில் நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு ஒரு பெரிய ஆம் என்ற அங்கீகாரம் கிடைம்குமென்றும் நம்பினார். அந்தக் கொள்கை ஸ்பெயின் செல்வந்த தட்டினரில் ஒரு பிரிவினர் ஸ்பெயின் நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு பாரம்பரிய அச்சாணியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தன்னிச்சையான அபிலாஷைகளுக்கு ஒரு மாற்றாக அமையும் என்று விருப்பத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இறுதியாக, இந்த மறுநிலைநோக்கை அடிப்படையாக கொண்டு Zapatero ஈராக்போரில் அமெரிக்காவை ஆதரிக்காத பாரிஸ் மற்றும் பேர்லின் பக்கம் சாயும் வகையில் வெளியுறவுக்கொள்கையை அமைத்தார். ''ஒரு வலுவான ஐரோப்பா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வரலாற்று திட்டமாகும். ஒரு சர்வதேச கட்டுகோப்பிற்கு அது எதை பிரதிநிதித்துவப்படுத்தும் என்பதை பொறுத்து அந்த அமைப்பு வலுப்பெறும்'' என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

என்றாலும், அதே நேரத்தில் Zapatero புஷ் நிர்வாகத்தை தேவையில்லாமல் பகைத்துக்கொள்வதை தவிர்க்க விரும்பினார். Zapatero துருப்புக்களை விலக்கிக்கொண்டாலும் அவரது அரசாங்கம் தொடர்ந்து நிதி வழங்குமென்று மறு நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளுமென்றும் ஸ்பெயின் தனது துருப்புக்களை அனுப்பத்தேவையில்லை என்றும் கருதப்படுகிற காலம்வரை மனிதநேய உதவியை வழங்குவதாகவும் வாஷிங்டனுக்கு தெளிவாகத் தெரிவித்தது.

மிகவும் பொதுவான அடிப்படையில், சர்வதேச அரங்கங்களில் அமெரிக்காவை ஸ்பெயின் தொடர்ந்து ஆதரித்தே வருகிறது. ஸ்பெயின் நாட்டு ஆயுதப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் Felix Sanz Roldan ஸ்பெயின் இராணுவத்தின் அமெரிக்க உறவு சமச்சீராக இல்லையென்றும், ''விசித்திரமாக'' உள்ளதென்றும் புகார் கூறினார். ''நாம் பெறுவதைவிட தருவதுதான், அதிகமாக இருக்கிறது என்று கருதுகிறேன்'' மற்றும் யார் அரசாங்கத்தில் இருந்தாலும் நாம் ஒரு மிகப்பெரிய அரசியல் விலையை தருகிறோம்'' என்று அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் 2300 க்கு மேற்பட்ட ஸ்பெயின் இராணுவத்தினர் பணியாற்றிவருவதாக Roldan சுட்டிக்காட்டினார். (ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு அடுத்து இரண்டாவது பெரிய படைப்பிரிவு ஸ்பெயின் நாட்டை சேர்ந்தது) பொஸ்னியாவிலும், கொசாவாவிலும் (ஸ்பெயினின் 70,000 துருப்புக்களில் பாதிக்கு மேற்பட்டோர்) பணியிலுள்ளனர் மற்றும் இப்போது ஹைட்டியிலும் பணியாற்றுகிறோம். ஈராக் போரின்போது அமெரிக்க விமானங்கள் 8000 தடவைக்கும் மேல் ஸ்பெயின் நாட்டின் வான் எல்லையில் பறந்திருக்கின்றன மற்றும் அமெரிக்க போர்கப்பல்கள் ஸ்பெயின் துறைமுகங்களில் ஏறத்தாழ 850 முறை நங்கூரம் பாய்ச்சியிருக்கின்றன என்று மேலும் கூறினார்.

ஜோன் கெர்ரியின் ஜனாதிபதி வெற்றிமூலம் தனது இருதலைக்கொள்ளி நிலை குறையுமென்று அமெரிக்க வெளியுறவுக்கொள்கை அணுகுமுறையில் ஒரு பெருமளவிலான பல்தலைப்பட்சமான (Multilateralism) அணுகுமுறையைப்போக்கு திரும்புமென்று Zapatero நம்பிக்கொண்டிருந்தார். அக்டோபர் 21 இல் El Pais பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் ''அண்மைக்காலத்தில் நாம் கடந்துவந்த நிலைக்குப் பின்னால் சர்வதேச ஒழுங்கிற்கு அதிக அளவில் சிந்தனைகள் தேவை மற்றும் பொய்கள் குறைய வேண்டும்'' என்று தான் கருதுவதாக கூறினார்.

அவர் மேலும், ''ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகத்தினால் கடைப்பிடிக்கப்படும் கொள்கை வேறு, அமெரிக்க சமுதாயத்தினதும் மற்றும் முக்கிய அமெரிக்க தலைவர்களினதும் மதிப்பு அல்லது பெறுமதிகள் (Value) வேறு. சர்வதேச சட்டத்தினதும், பல்தலைபட்ட தன்மையினது கொள்கைகளினதும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியத்துவமும் தொர்பான கொள்கைகள் இன்னும் சிறிதுகாலத்தில் நடைமுறைக்கு வரும்''. என கூறினார்.

Zapatero வின் நம்பிக்கைக்கு மாறாக விரைவில் சகஜமான நடவடிக்கை தொடங்கப்போகிறது தனது தேர்தல் முடிவை தனது அரசியல் பொருளாதார கொள்கைகளை- உலகம் முழுவதையும் அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினரின் நலனுக்காக அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை தீவிரமாக கடைபிடிக்கவும் --மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சீர்குலைக்க முயலுகின்ற எந்த நாட்டையும் தனிமைப்படுத்தவும் அச்சுறுத்தவும் தனக்கு ஒரு கட்டளை தரப்பட்டிருப்பதாக புஷ் கோடிட்டுக்காட்டியுள்ளார். இதற்கு ஈராக் போன்ற பலவீனமான பொருளாதார வளர்ச்சி குன்றிய நாடுகள் மட்டுமல்ல, மேலும் மற்றும் அதற்ககெல்லாம் மேலாக அதன் வலுவான ஐரோப்பிய ஏகாதிபத்திய எதிரி நாடுகளும் கீழ்படிந்து நடக்க வேண்டியது அவசியமாகும்.

புஷ்ஷிற்கு முதலில் வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களில் Zapatero வும் ஒருவர். அவர் தனது தந்தியில் எழுதினார்: ''நானும் எனது அரசாங்கமும் உங்களுக்கும், உங்களது நிர்வாகத்திற்கும் நட்புறவுகளையும், ஒத்துழைப்பையும் தீவிரப்படுத்துகின்ற நோக்கில் ஒத்துழைக்க ஒரு உறுதியான எண்ணம் கொண்டிருக்கிறோம்'' அந்த தந்திக்கு பதிலளிக்க புஷ் இரண்டு வாரங்கள் காத்திருந்தார், மற்றும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல், அவர் அஸ்னரை தனது முதலாவது வெளிநாட்டுத் தலைவராக வெள்ளை மாளிகையில் 40 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் பேசுவதற்காக அழைத்தார்.

இதற்கு பதிலளிக்கின்ற வகையில், ஸ்பெயின் அரசாங்கம் ஓடோடிச்சென்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தனது விசுவாசத்தை தெரிவித்துக் கொள்கிறது மற்றும் தனது சேவைகளை வழங்க முன்வருகிறது. வெளியுறவு அமைச்சர் Miguel Angel Moratinos, புஷ்ஷிற்கு நினைவூட்டுகிறார்: ''இன்றைய தினம் பிரிட்டன் நீங்கலாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் 25 உறுப்பினர் அரசுகளில் ஸ்பெயின் அளவிற்கு எந்த நாடும், அல்லது எந்த அரசாங்கமும் அமெரிக்காவிற்கு அதிகம் தரவில்லை..... ஸ்பெயின் அமெரிக்காவின் சர்தேசக் கொள்கைகளில்...... குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் மற்றும் மத்திய கிழக்கில் மதிப்பைக் கூட்டுகின்ற பெரும் பங்களிப்பை அமெரிக்காவிற்கு ஸ்பெயின் தரமுடியும்''

''இந்த நிர்வாகத்திற்கு நாங்கள் சாதனையின் முடிவுகளை காட்டப்போகிறோம். இலத்தீன் அமெரிக்காவில் முந்திய அரசாங்கத்தைவிட நாங்கள் அதிகம் தரப்போகிறோம். முஸ்லீம் உலகில் எங்களுக்கு மகத்தான வல்லமையுள்ளது. அதற்கான பலன்களை நாங்கள் பெறுவோம்'' என்று அவர் உறுதியளித்தார்.

இப்பயான கெஞ்சிக்கூத்தானல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமெரிக்க அரசுத்துறை செயலாளராக அப்போது நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் மொராட்டிநோசுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மூத்த ஜோர்ஜ் புஷ்ஷுடன் பாதுகாப்பு அமைச்சர் Jose Bono உரையாடினார். அடுத்தவாரம் ஸ்பெயின் மன்னரும் அரசியும் சியாட்டலுக்கு விஜயம் செய்கிறார்கள் என்று தெரிந்த பின்னர் டெக்ஸாஸிலுள்ள புஷ்ஷின் பண்ணையில் அவர்கள் இருவரும் விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் Zapatero மீது கோபம் திரும்பியுள்ளது. அஸ்னார் புஷ்ஷுடன் என்ன விவாதித்தார் என்பதை Zapatero இற்கு சொல்ல மறுத்துவிட்டார். ஆனால் அவருடைய ''அஜாக்கிரதையான வெளிநாட்டுக் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டுமென'' எச்சரித்துள்ளார். அஸ்னரின் மக்கள் கட்சி (PP) தலைவரான Mariano Rajoy ''உலகின் ஒரே பலமான வல்லரசான ஒரு நாட்டுடன் கேலி பேசுவதை Zapatero நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

பழமைவாத ABC FùêK, Zapatero வெளியுறவு அமைச்சர் Miguel Angel Moratinos பாதுகாப்பு அமைச்சர் José Bono ஆகியோரை எள்ளி நகையாடியுள்ளது. ''அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்கு அந்தப்பக்கம் மிகப்பெருமளவிற்கு எரிச்சல் ஊட்டிய தலைவர்கள் பட்டியலில் Michel Barnier (பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்) மற்றும் சிராக் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஸ்கா பிஷ்ஷர், ஷ்ரோடர் போன்ற சிறப்புமிக்க பேர்களையும் இவர்கள் மிஞ்சிவிட்டார்கள்'' என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

''ஜோன் கெர்ரிக்கு கவனக்குறைவான வேகத்தோடு Zapatero திரும்பத்திரும்ப ஆதரவு தெரிவித்தது நமக்கு மிகப்பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துமென்று'' அந்த பத்திரிகை கண்டித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் அதிக செல்வாக்குபடைத்த வெளியுறவுக்கொள்கை ஆய்வு நிலையமான Real Instituto Elcano இல் பணியாற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் இத்தாலியிலுள்ள அமெரிக்க 6 ஆவது கப்பற்படையின் தலைமை கடற்படை தளம் ஏற்கனவே நம்பியவாறு ஸ்பெயினின் அட்லாண்டிக் அருகிலுள்ள Rota விற்கு மாற்றப்படமாட்டாது என்று ஊகித்துள்ளனர். அல்லது ஸ்பெயின் அரசாங்கத்திற்கு சொந்தமான Izar கப்பல் கட்டும் தளத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற மாட்டார்கள். அந்த நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு மேற்கொண்ட திட்டங்களுக்கு தொழிலாளர்கள் வன்முறை கலவரங்களை மேற்கொண்டதால் இப்போது அதை செய்ய தயக்கம் காட்டிவருகிறது.

ஒரு ஆய்வாளர் கூறினார்: ''இது Izar இற்கு ஒரு மீட்பு நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான வேலைகள் இதில் சம்மந்தப்பட்டிருக்கின்றன...... அமெரிக்கர்கள் ரோட்டாவை விட்டு வெளியேற மாட்டார்கள்; ஜிப்ரால்டர் வளைகுடா நுழைவாயிலில் அவர்களுக்கு ஒரு கப்பற்படை தளம் இருப்பது இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான், ஆனால் நம்மை அவர்கள் இனி ஒரு மூலோபாய நட்புநாடு என்று கருத மாட்டார்கள், மற்றும் இது ஸ்பெயினுக்கு ஒரு பேரழிவாகும்'' புஷ் நிர்வாகத்தின் நிர்பந்தம் காரணமாக நாசகாரி கப்பல்களை கட்டும் தனது ஒப்பந்தங்களை இஸ்ரேல் இரத்து செய்துவிட்டததாகவும் அந்த ஆய்வுக்கழகம் நம்புகிறது. மற்றும் வட ஆபிரிக்காவிலுள்ள சிறிய ஸ்பெயின் நாட்டுத்தீவுகளான Ceuta, Melilla மீது மொராக்கோ உரிமை கொண்டாடிவருவதை கட்டுப்படுத்தும் நிபந்தனைகளை வாஷிங்டன் தளர்த்தக்கூடும் என்றும் அந்த ஆயுவுக்கழகம் நம்புகிறது.

இன்னமும் Zapatero அமெரிக்காவிற்கு பயன்படக்கூடுமென்ற நம்பிக்கையை வைத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் இது அவரது ஐரோப்பிய கூட்டணி உருவாக்க வேண்டுமென்ற முயற்சிகளை கைவிடும் சமிக்கையாகாது, அத்தகைய கூட்டணியில் இல்லாமல் வாஷிங்டனுக்கு எதிராக ஸ்பெயின் அல்லது இதர ஐரோப்பிய அரசு எதுவும் தனது நலன்களை தற்காத்துக்கொள்ள முடியாது. அவரது இந்த சமிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்குகளாகவும் ஆகிவிடவில்லை. முதலாவது சாதகமான கருத்து ஜேர்மன் சான்சலர் ஷ்ரோடரிடமிருந்து வந்திருக்கிறது. இரண்டு தலைவர்களும் ''அப்பழுக்கற்ற ஒத்துழைப்பு சூழ்நிலையில்'' சந்தித்துப் பேசியதாக அவர்கள் இருவரும் வர்ணித்தனர். இரண்டு தலைவர்களும் பாதுகாப்பு பிரச்சனைகளிலும் மேலும் ஒத்துழைக்க உடன்பட்டனர். சர்வதேச விவகாரங்களில் தங்களது கூட்டு அணுகுமுறையை மீண்டும் உறுதிப்படுத்தினர். Der Spiegel சஞ்சிகை Zapatero இன் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. ''ஜேர்மனி மீண்டும் ஐரோப்பாவின் ஒரு ''சக்திவாய்ந்தவீடாக'' மாறவேண்டும் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் உலகின் முன்னணி பொருளாதார மற்றும் அரசியல் வல்லரசாக ஜேர்மனி மாறும் என்று ஐரோப்பா நம்பவேண்டும்'' என்று Zapatero கூறியுள்ளார்.

ஐரோப்பிய கூட்டணிகளை பற்றி தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவேண்டிய பொறுப்பு வாஷிங்டனிடம் உள்ளது என்று அவர் வலியுறுத்திக் கூறினார். ''நாங்கள் நேர்மையையும், மரியாதையையும் எங்களது கொள்கைகள் மற்றும் கருத்தியலுக்கு தரவேண்டுமென்று விரும்புகிறோம்'' என்று Zapatero கூறினார்.

ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான ஸ்பானிய மொழி நாளிதழ் El Pais, Zapatero சந்தித்துக் கொண்டிருக்கும் இருதலைக்கொள்ளி நிலையை மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறது! அவர் மேற்கொள்ள முயன்றுவரும் நடவடிக்கை குறித்தும் விளக்கியுள்ளது. ''சர்வதேச பலத்தினை பயன்படுத்த புஷ்ஷிற்கு கிடைத்த தெளிவான அதிகாரம், நாங்கள் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்காவிடினும் நாம் புதிய யதார்த்தத்துடன் சமாதானப்படுத்திக்கொள்ளவேண்டும்'' என்று அந்த நாளிதழ் எழுதியிருக்கிறது.

ஆனால் அதற்குப்பின்னர் அந்தப் பத்திரிகை மேலும் சொல்கிறது ''நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புஷ் அளித்த ஆனால் நிறைவேற்றாத ஒரு உறுதிமொழியான தான் ஒரு ஒன்றுபடுத்தும் ஜனாதிபதியாக செயல்படுவேன் என்பதை செயல்படுத்துவதற்கு ஒரு பொன்னான வாய்ப்பினை தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளலாம். (அந்த மாற்றீடு வெறும் கற்பனையே அல்லாமல் வேறு எதுவுமல்ல) அல்லது அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஐரோப்பிய நாடுகளை அல்லது குறைந்தபட்சம் சில நாடுகளை தாங்கள் விரும்பாத நெருக்கடிகளுக்குள் இழுத்துச்செல்ல முடியாத அளவிற்கு தங்களது சொந்தத்தில் இராணுவ தன்னாட்சி வலிமையை அதற்குரிய செலவினத்தோடு உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற உண்மையை ஒப்புக்கொண்டாக வேண்டுமென்று எழுதியிருக்கிறது.

அமெரிக்க மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற முயற்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆளும் செல்வந்த தட்டினரின் அரசியல், பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. அது ஒரு நேரடி மற்றும் பகிரங்க மோதலுக்கு பலாத்காரத்தை உள்ளடக்கிய மோதலுக்கு பெரிய ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையே உருவாக்குகின்ற அச்சுறுத்தலாக அமைந்துள்ளது

ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சியின் முன்னோக்கு ஐரோப்பிய ஒன்றிய முதலாளித்துவ வர்க்கத்தின் கரங்களை அமெரிக்காவிற்கெதிராக வலுப்படுத்தி தனது சொந்த காலனித்துவ அபிலாஷைகளை கொண்டு செலுத்த வேண்டுமென்ற ஒரு கூட்டணியை உருவாக்குவதாகும். இது அமெரிக்க இராணுவ வாதத்தை மற்றும் மேலாதிக்கத்தை எதிர்த்து போரிடுகின்ற வகையில் ஸ்பெயின் நாட்டு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தொழிலாள வர்க்கத்திற்கு சாதகமான மாற்றுவழி ஒன்றை என்றைக்கும் தருவதாக இல்லை. மாறாக அமெரிக்காவிற்கும், ஸ்பெயினுக்குமிடையில் உருவாகிக்கொண்டுள்ள போட்டி தொழிலாள வர்க்கத்தை நேரடியாக பாதிப்பதாக அமைந்திருக்கும். ஏனென்றால் அதிகரிக்கும் இராணுவச் செலவினங்களை தொழிலாள வர்க்கம்தான் ஏற்கவேண்டியிருப்பதுடன், பொருளாதார முனையில் போட்டி முயற்சிகளால் ஆட்குறைப்பு மற்றும் வரி உயர்வுகள் தவிர்க்க முடியாதவை. இராணுவவாதம் வளரும்போது நாடுகளை வென்றெடுக்கும் மற்றும் மார்ச் 11ல் நடைபெற்றதைப் போன்ற பயங்கரத்தாக்குதல்கள் ஆகிய இரண்டிலுமே மனித உயிர்கள் பலியாவதும் தவிர்க்க முடியாதது.

Top of page