World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

New York Times calls for more troops and more Fallujahs

மேலும் பல்லூஜாக்களை உருவாக்க கூடுதல் துருப்புக்களுக்கு நியூயோர்க் டைம்ஸ் அழைப்புவிடுக்கின்றது.

By Kate Randall
25 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

நியூயோர்க் டைம்ஸ் வாரக்கடைசியில், பல்லூஜாவை அமெரிக்க இராணுவம் அழித்துவிட்டதற்கு தனது உற்சாக அனுமதியை தந்திருக்கிறது. மேலும் சிதைக்கப்பட்ட நகரில் மீண்டும் எதிர்ப்பு, தோன்றிவிடாது தடுக்கவும், அமெரிக்க-எதிர்பு சக்திவாய்ந்த கோட்டைகளாக இயங்கும் இதர நகரங்களில் அதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கூடுதலான அமெரிக்கத் துருப்புக்கள் தேவை என்றும் வாதிடுகிறது.

சென்ற ஞாயிறன்று ''ஈராக்கிலிருந்து தபால் அட்டைகள்'' என்ற தலைப்பில் டைம்ஸின் வெளிவிவகாரங்கள் தொடர்பான கட்டுரையாளர் Thomas Friedman எதிர்பார்த்தப்படி பாரிய கொலைகளை அந்த சீரழிக்கப்பட்ட நாட்டை ''ஜனநாயக மயமாக்குதவற்கான'' போராட்டத்தில் மிகப்பெருமளவிற்கு முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மிக வெறுப்புமிக்கவகையில் நியாயப்படுத்தியுள்ளார். உலகிலேயே மிக சக்திவாய்ந்த பயங்கர ஆயுதங்களை கொண்ட இராணுவப்படைக்கும், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களையும், அவர்களுடன் கூட்டுழைக்கும் கைப்பாவையும், இடைக்கால பிரதமரும் நீண்டகால CIA சொத்தான இயத் அல்லாவி தலைமையில் இயங்குவோரையும் நாட்டைவிட்டு அகற்ற தங்களது உயிரையும் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கும் ஈராக் தேசபக்தர்களுக்கும் இடையில் பெரும் ஏற்றத்தாழ்வுடன் நடந்த சண்டை குறித்து Friedman தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

''ஈராக்கில் மிக முக்கியமான நிகழ்வு எதுவாக இருக்குமென்றால் பல்லூஜா வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த நேரத்தில் 106 ஈராக் கட்சிகளும் தனிமனிதர்களும் ஜனவரி தேர்தல்களில் பங்கெடுத்துக்கொள்ள பதிவுசெய்து கொண்டிருக்கின்றனர்.'' என்று Friedman எழுதுகிறார். ஜனநாயகத்திற்கு இந்த வெற்றி பாடல் பாடுவது ஒரு நகரம் அழிக்கப்பட்டு அதன் எரிந்து கொண்டிருக்கும் புகை மூட்டத்தை உதாரணமாக்கிக் காட்டுகிறது அந்த நகரம் புரிந்த ஒரே குற்றம் ஈராக்கை அமெரிக்க இராணுவம் எடுத்துக்கொண்டதை எதிர்த்து நின்றதுதான். அவர் கடைசியாக எழுதியுள்ள கட்டுரையில் அவர் அந்த நாடு அடிமைப்படுத்தப்பட்டிருப்பதை மத்திய கிழக்கின் ஜனநாயகத்திற்கான போக்கின் ஒரு சிலுவைப்போர் என்று அவர் சித்தரித்துவரும் நீண்ட நெடுங்கட்டுரைகளின் தொடர்ச்சியாகும்.

''அமெரிக்கா சில மிக கடுமையான மண்ணில் கண்ணியமான, விட்டுக்கொடுக்கும் தன்மைகொண்ட அரசாங்கத்தை அமைப்பதற்கான வித்துக்களை தூவுவதற்கு முயன்று வருகிறது. நாங்கள் ஈராக்கில் தேசகட்டுமானத்தை செய்யவில்லை. அதன் உள்ளார்ந்த கருத்து என்னவென்றால் அங்கே ஏற்கனவே ஒரு ஒன்றுபட்ட நாடு உள்ளது. மற்றும் அங்கே தேவைப்படுவதெல்லாம் அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒரு சிறிய கால அவகாசமும் பாதுகாப்பும்தான். நாங்கள் உண்மையிலேயே நாட்டை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்'' என்று அவர் எழுதியுள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த பரிந்துரையாளர்களின் திரிக்கப்பட்ட கருத்தின்படி '' நாட்டை உருவாக்குவது'' என்பது அந்த நாட்டை ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற குண்டு வீச்சுத்தாக்குதல், மசூதிகளை தரைமட்டமாக்குவது, மருத்துவமனைகள் மற்றும் வீடுகளை சிதைப்பது, மற்றும் ஆயிரக்கணக்கான சிவிலியன்களை கொலை செய்வதாகும். தெருக்களில் நடமாடுகின்ற யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சுட்டுக்கொள்வதற்கு அமெரிக்க துருப்புக்களுக்கு கட்டளைகள் இடப்பட்டிருந்ததால், காயமடைந்த பலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற பயந்து இரத்தம் சிந்தியே மடிந்திருக்கிறார்கள்.

டைம்ஸின் ஒட்டுமொத்தக் கருத்தையும் Friedman எதிரொலிக்கிறார் என்பதை வலியுறுத்துகின்ற வகையில் அடுத்த நாள் தலையங்கம் ''ஈராக்கில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் துருப்புக்கள் பற்றாக்குறை'' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. டைம்ஸ் ஆசிரியர்கள் கருத்துப்படி ''இந்த மாதத்தில் பல்லூஜாவில் உடனடியாக அதிர்ச்சியூட்டும் அமெரிக்க நடவடிக்கைகள் வெற்றி பெற்றிருப்பதன் மூலம்'' பெறப்படுகின்ற படிப்பினை என்னவென்றால் உடனடியாக மேலும் 20,000 முதல், 40,000 படையினர் தேவைப்படுகிறார்கள்'' என்பதுதான்.

பல்லூஜா மீது தாக்குதல் தொடுக்கப்ப்பட்ட நேரத்தில், உலக சோசலிச வலைத் தளம், (பார்க்க: "New York Times calls for more troops in Iraq," November 9, 2004) குறிப்பிட்டிருந்ததைப்போல் டைம்ஸ் வரவிருக்கின்ற படுகொலைகளுக்கு முன்கூட்டியே தனது ஒப்புதலை சமிக்கை காட்டியுள்ளது. அந்த பின்விளைவுக்குப் பின்னர், அந்த தலையங்கத்தின் வாசகத்தின் படி சொல்வதென்றால் ''எண்ணிறந்த வீடுகள் பொது அரசாங்க வசதிகள்.... குண்டுவீச்சுத் தாக்குதலால் குப்பைமேடாக ஆகியிருக்கின்றன'' அமெரிக்காவின் தாராளவாத ஸ்தாபனங்களின் குரல் என்று அழைக்கப்படுகிற அந்தப்பத்திரிகை இந்த இரத்தக்களரி தொடர்பாக சிறிதளவுகூட கவலையோ அல்லது குணவியல் கவனத்தையோ எழுப்பவில்லை. அதற்கு மாறாக அது அந்த தாக்குதலைப் பாராட்டுகிறது அதேபோன்று, மேலும் தாக்குதல்கள் நடத்தப்படவேண்டும் என்று அழைப்புவிடுக்கிறது.

பல்லூஜா தாக்குதலுக்கு டைம்ஸ் உற்சாகமான ஆதரவு தந்திருப்பது அந்த நாட்டின்மீது படையெடுத்து அதை ஆக்கிரமித்துக் கொண்டது புஷ் நிர்வாகத்தின் கொள்கை மட்டுமே அல்ல என்பதை மேலும் உறுதிபடுத்துகிறது. அந்த எண்ணெய் வளமிக்க நாட்டை அமெரிக்கா பிடித்துக்கொள்வதற்கு அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி உட்பட அமெரிக்காவின் அரசியல் ஸ்தாபனங்களிலும், பெருநிறுவன ஆளும் செல்வந்த தட்டினரிலும் ஒரு மிகப்பெருமளவிலான கருத்து ஒற்றுமை ஆதரவு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

புஷ் நிர்வாகத்தின் அடியொற்றி நடக்கும் டைம்ஸ் ஈராக் தேர்தல் ஜனவரி 30ல் நடக்க திட்டமிட்டிருப்பது ஒரு பாதுகாப்பற்ற மக்கள் மீது போர்குற்றங்களை நிகழ்த்துவதை நியாயப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும் சதாம் ஹூசேன் கடைபிடித்து வந்தது போன்ற எங்கும் பரவிருந்த மற்றும் வன்முறையை அடிப்படையாகக் கொண்ட அல்லாவி அரசாங்கத்திற்கும், எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கெதிராக அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கைகளை ஏவி விட்டிருக்கும் சூழ்நிலையில் இந்தத் தேர்தல் நடத்திருக்கிறது என்பது டைம்ஸிற்கு நன்றாகவேத் தெரியும்

பாக்தாத்திற்கு தெற்கிலுள்ள பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் தாக்குதலை நீடித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் அல்லாவி பாரியளவிலான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். பாக்தாத் உட்பட டசின் கணக்கான சிறிய மற்றும் பெரிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது, மற்றும் அமெரிக்க மற்றும் ஈராக் அரசாங்க துருப்புக்கள் பல்வேறு மசூதிகளில் அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளன, செய்தி பத்திரிகைகளை மூடியிருக்கின்றன மற்றும் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை கைது செய்துள்ளன.

இந்தவார ஆரம்பத்தில் ஆக்கிரமிப்பை பகிரங்கமாக எதிர்த்து நின்ற தேர்தல்களை புறக்கணிக்க வேண்டுமென்று கூறிவந்த இரண்டு முன்னணி சுன்னி மத போதகர்கள், பாக்தாத்திற்கு வடக்கே முகமூடி அணிந்த துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். அத்தகைய முறைகள் பாதிஸ்ட் ஆட்சியின் ஒரு முரடராக தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்து, அதற்குப்பின்னர் அமெரிக்காவோடு சேர்ந்துகொண்டு CIA இடம் ஊதியம் பெற்று, 1990 களின் நடுவில் ஈராக்கில் பயங்கர குண்டுவெடிப்புக்களுக்கு ஏற்பாடு செய்த அல்லாவி கடைபிடிக்கும் வழிகளாகும். முந்திய மாதத்தில் பாக்தாத்தின் ஒரு பாதுகாப்பு சிறையில் ஆறு கைதிகளை அல்லாவி தனிப்பட்ட முறையில், எப்படி சுட்டுக்கொன்றார் என்ற விவரத்தை நேரில்கண்ட சாட்சியத்துடன் ஜூலை மாதம் சிட்னி மோர்னிங் ஹெரால்ட் அன்ட் ஏஜ் செய்திபத்திரிகைகள் பிரசுரித்தன.

நவம்பர் 2ல் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரிக்கு டைம்ஸ் வலுவான ஆதரவு தந்தது ஒரு கெர்ரி நிர்வாகமும் ஈராக்கில் புஷ் நிர்வாகத்திற்கு எந்த வகையிலும் குறையாத கொடூரக் கொள்கைகளை கடைபிடிக்கும் என்ற உண்மையை தெளிவாக எடுத்துக்காட்டுவதாகும். கெர்ரிக்கு வாக்களித்தவர்களில் மிகப்பெரும்பாலோர் போர் எதிர்ப்பு உணர்வுள்ளவர்களாக இருந்தாலும், அதற்கும் அப்பால் அமெரிக்க ஏகாதிபத்தியம் பூகோள மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும், அதை அடைவதற்கு இராணுவ பலாத்காரத்தை பயன்படுத்துவற்கும் மேற்கொண்டுள்ள நடவடிக்க்ைகளில் இரண்டு கட்சிகளுக்கிடையிலும் அடிப்படை வேறுபாடுகள் எதுவுமில்லை.

Top of page