World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German auto union head suggests GM cut US costs

அமெரிக்காவில் செலவுகளை ஜெனரல் மோட்டார்ஸ் வெட்டவேண்டும் என்று ஜேர்மன் கார் தொழிற்சங்க தலைவர் ஆலோசனை

By Dietmar Henning
17 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஓப்பல் தொழிற்சாலை தொழிற்சங்ககுழு தலைவரும், முன்னணி தொழிற்சங்க பிரமுகருமான Klaus Franz அக்டோபர் 28 இல் ஜேர்மன் செய்தி பத்திரிகையான Frankfurter Rundschau இற்கு வழங்கிய செவ்வியில், ஓப்பலின் தாய் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் (GM) அமெரிக்காவில் செலவினங்களை வெட்டவேண்டுமென்று ஆலோசனை கூறியிருக்கிறார்.

''ஐரோப்பாவிலுள்ள GM அல்லது ஓப்பலில் பிரச்சனையில்லை, அமெரிக்காவிலுள்ள GM இல் தான் பிரச்சனைகள்'' என்ற வாதம் தொடர்பாக அவரது நிலைப்பாடு குறித்து அந்த செய்திபத்திரிகையிலிருந்து விடுத்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது'' Franz கூறினார்: ''ஜெனரல் மோட்டார்ஸ் தனது உள்நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சனையை தவிர்ப்பதற்காக ஐரோப்பாவிற்கு கோடாரியை எடுத்துக்கொண்டு வர கட்டளையிடுகின்ற -----இந்த பிரச்சனைகளில் பங்குச்சந்தை மற்றும் பங்கு ஆய்வாளர்களோடு உள்ள அதன் தகராறுகளும் அடங்கும். அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸின் சுகாதார காப்பீடுத்திட்டத்திற்கு இந்த ஆண்டு செலவினம் 15 சதவீதம் அதிகரித்துள்ளது, மற்றும் நிறுவனத்தின் ஓய்வூதிய நிதிக்கு ஏறத்தாழ 10 பில்லியன் டாலர்களை செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே, ஜெனரல் மோட்டார் நிறுவனத்திற்கு ஜேர்மனி மிகஅதிக செலவுமிக்க இடம் என்று கூறுபவர்கள் உண்மையிலேயே முதலில் தங்களது முன்பக்க கதவை பார்க்க வேண்டும்.

ஜேர்மனியில் சுகாதார மற்றும் ஓய்வூதிய காப்புறுதி திட்டங்கள் இன்னும் அமெரிக்காவில் இருப்பதைப்போன்று இல்லை. அமெரிக்க மக்களில் 7 பேரில் ஒருவருக்கு, அதாவது 47மில்லியன் மக்களுக்கு எந்த வகையான சுகாதார காப்புறுதியும் இல்லை, மற்றும் அரசாங்கத்தின் சுகாதார சேவை திட்டங்களான மெடிக்கேர் (Medicare) மற்றும் மெடிக்கெய்டு (Medicaid) எதுவும் கிடைப்பதில்லை.

இது தவிர, மெடிக்கேருக்கு தகுதியுள்ள 40 மில்லியன் மக்கள் அவர்களால் முடிந்தால் தங்களது சொந்தப்பணத்தில் பெருந்தொகையை அதற்காக கட்டியாகவேண்டும். இந்த மெடிக்கேரில் சேர்ந்துள்ள ஊனமுற்றோர் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்களால் முடிந்தால் பெருந்தொகையை செலுத்தியாக வேண்டும். அதே போன்று மெடிக்கெய்டு திட்டம் 47 மில்லியன் மக்களுக்கு பயன்படுகிறது, இதுவும் அரசாங்கம் சோதனை செய்து சான்றிதழ் அளித்துள்ள ''தேவைப்படுவோர்'' என்ற வகைப்பாட்டில் வருவபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த இரண்டு திட்டங்களிலும் புஷ் நிர்வாகம் மிக ஆழமான வெட்டுக்களை கொண்டு வந்திருக்கிறது.

அமெரிக்காவில் வேறு எந்த பொது சுகாதாரத்திட்டமும் இல்லை. உழைக்கும் மக்கள் முதலாளி நிதியளிக்கும் தனியார் காப்புறுதி திட்டத்தில் சேர்ந்திருக்கின்றனர், இல்லையென்றால் தனிப்பட்ட முறையில் மிகப்பெருமளவில் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அல்லது எந்த விதமான காப்புறுதியும் இல்லை. சுகாதார காப்பீடு கட்டணங்களை செலுத்துவதற்கு நிறுவனங்களிடம் நிதிவராவிட்டால் ஊழியர்கள் தங்களது சுகாதார காப்புறுதிக்கான பொதுவாக கட்டணம் செலுத்தியாக வேண்டும், மற்றும் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது காப்புறுதியை நிலைநாட்டுவதற்காக பெருந்தொகையை செலுத்தியாக வேண்டும். தொழில் அதிபர்கள் சுகாதார காப்புறுதி செலவுகளுக்கு பங்களிக்கும்போது அதனால் கிடைக்கின்ற பயன்கள் நேரடியாக தொடர்புள்ள ஊழியர்களுக்கு கிடைக்கிறது, வேலையிழந்துவிட்டால் சுகாதார காப்புறுதியையும் இழக்க வேண்டி வருகிறது.

''மூன்று பெரிய'' கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ் டைம்லர் கிறிஸ்லர் மற்றும் போர்ட் மற்றும் மிகப்பெரிய விநியோகஸ்தர்களான டெல்பி மற்றும் விஸ்டன் ஆகியவற்றில் பணியாற்றும் 307,000 உறுப்பினர்களுக்காக UAW (ஐக்கிய மோட்டார் தொழிற்சங்கம்) 2003 செப்டம்பரில் ஒரு நான்காண்டு ஒப்பந்தத்திற்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பிரிவின்படி அந்த இரண்டு விநியோகஸ்தர்களும் நியமிக்கும் புதிய ஊழியர்களுக்கான ஊதியம் குறித்து பின்னர் விவாதிக்க வேண்டும்.

பின்னர், இந்த ஆண்டு ஏப்ரலில் GM முன்னாள் துணை நிறுவனமான டெல்பியிலும் போர்டிலிருந்து கிளைவிட்டுவந்த விஸ்டனிலும் பணியாற்றுகின்ற புதிய ஊழியர்களின் வேலை நிலைமைகள் கணிசமாக வீழ்ச்சியடைவதற்கு உடன்பாடு காணப்பட்டது. தற்போது கார் இணைப்புத் தொழிலில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் பெற்றுவருகின்ற ஒரு மணிநேர ஊதியத்தில் 10 டாலர் வீதம் குறைந்த புதிய ஊழியர்கள் ஒரு மணிநேரத்திற்கு 14 முதல் 18டாலர்கள் ஊதியத்தைத்தான் பெறுவார்கள். மேலும், அந்த ஒப்பதத்தின் இணைப்பில் ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டிருக்கிறது. ஊழியர்கள் தங்களது சொந்த சுகாதர காப்புறுதிக்காக பெருந்தொகையை செலுத்தவேண்டும். நிரந்தர ஓய்வூதியங்கள் இரத்து செய்யப்படும். இந்த இரண்டு- தர (two-tier) முறை அறிமுகப்படுத்துவதால் எதிர்காலத்தில் தொழிலாளர்கள் தங்களது காப்புறுதி பயன்களுக்காக மூன்றில் இரண்டு பகுதி கட்டணத்தை செலுத்தவேண்டும். இதன்விளைவு என்னவென்றால் ஊழியர்கள் தங்களது குடும்பங்களுக்கு கொண்டு செல்லும் ஊதியத்தின் அளவு கடுமையாக குறைந்துவிடும்.

ஜேர்மனியில் உள்ளதைப்போல் அமெரிக்காவின் கார் தொழிற்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூட்டு உடன்படிக்கைகள் தொழிலாளர் சலுகைகளை சிதைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன, பல்வேறு இதர நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் அவற்றை பின்பற்றி ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே அமெரிக்காவில் நிலவுகின்ற பாரிய சமூக ஏற்றதாழ்வுகள் இதன்மூலம் அதிகரிக்கவே செய்யும். இந்த வெட்டுக்களால் பயனடைவோரும் ஆதரிப்பவர்களும், நிறுவனங்களின் நிர்வாகிகளும் பெருமளவில் பங்குதாரர்களும் ஆவர். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த சக்திகள் கடுமையான வெட்டுகளுக்காக குறிப்பாக ஓய்வூதிய வெட்டிற்காக விருப்பங்கொண்டுள்ளனர்.

1990களில் பங்குச்சந்தையில் பூரிப்பு ஏற்பட்ட நேரத்தில் நிறுவனங்களும் பங்குதாரர்களும் மனநிறைவோடு இருந்தனர். தொழிலாளர்களுக்கு தரவேண்டிய ஓய்வூதிய தொகையை பங்குகள் விலைஉயர்வின் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு செலுத்தினர். இத்தகைய நிதிகளை நிர்வகிப்போர் வளர்ச்சி விகிதம் இரட்டை அளவை தாண்டிவிட்டதில் மனநிறைவு கொண்டதுடன் நிறுவனங்களின் முன்னொருபோதுமில்லாத அதிகளவு இலாபத்திற்கும் பங்களிப்புச் செய்தனர்.

2001-2002ல் பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது, மிகப்பெருமளவில் ''நிதியில் இடைவெளி'' ஏற்பட்டது. இந்த ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் இந்த பற்றாக்குறையை 10 பில்லியன் டாலர் செலுத்தி ஈடுகட்டியது. (இந்தத் தொகையை தான் Klaus Franz மேலே சுட்டிக்காட்டப்பட்ட பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்) ஓய்வூதிய நிதிகளில் சேர்ந்துள்ள மேலதிக தொகைகள் எதிர்கால ஓய்வூதியம் வழங்குவதை நிறைவேற்றுவதற்கு போதுமானவை அல்ல ----GM மட்டுமல்ல----- எல்லா நிறுவனங்களுமே தங்களது தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதிகளை பங்குசந்தை சூதாட்டத்தில் பயன்படுத்திக்கொண்டன. உழைக்கும் மக்களின் பணம் தாங்கள் சொந்தமாக பணக்காரர்களாக ஆவதற்கு போதுமானதாக இல்லையென்றதும், அவர்களை கசக்கி பிழியும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனி வர்த்தக மாத இதழான Manager Magazin எழுப்பிய புலம்பல்: ''மிகவும் அப்பட்டமான எடுத்துக்காட்டு ஜெனரல் மோட்டார்ஸ். அந்த கார் தயாரிப்பாளர் 460,000 பசித்த ஓய்வூதிய வாய்களுக்கு சோறிடவேண்டும் ----பணியாற்றும் ஒரு ஊழியர் 2.5 ஓய்வு ஊழியருக்கு பணம் செலுத்த வேண்டும். ஓய்வூதிய நிதிகளில் ஒரு ''பில்லியன் டாலர்' பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இந்த பில்லியன் டாலர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக GM தனது மதிப்புமிக்க வளங்களை கம்பெனியின் கருவூலத்திலிருந்து ஓய்வூதிய நிதிகளுக்கு ஒதுக்க வேண்டியுள்ளது. இந்த ஆண்டு விற்பனையாகும் ஒவ்வொரு வாகனத்திற்கும் 900 டாலர் வீதம் இந்த நிதிகளுக்கு தந்தாக வேண்டும். UBS Warburg மதிப்பீட்டின் படி, எதிர்பாராத செலவினங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் நிறுவனத்தின் ரொக்க செலவினங்களில் முதன்மை இடத்தைக்கூட பிடித்துவிடும்---- இது GM பங்குதாரர்களுக்கு ஒரு தீக்கனவாகும்''

இந்த ''தீக்கனவின் காட்சிகளில்தான்'' GM பங்குதாரர்கள் நடப்பு மற்றும் முன்னாள் ஊழியர்களது வருமானத்தில் பெருமளவில் வெட்டு செய்யவேண்டுமென்று கோருகின்றனர். Investor's Daily பத்திரிகையின் அமெரிக்க நிருபர் பில் போன்னர் 2004 செப்டம்பரில் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் நிதி தொடர்பான வலைத் தளங்களில் வெளியிடப்பட்டுவரும் பல்வேறு வகைப்பட்ட விமர்சனங்களுக்கு முன்மாதிரியாகும்: ''ஜெனரல் மோட்டார்ஸ் தனது ஊழியர்களுக்கு அவர்களது ஓய்வூதிய மற்றும் சுகாதார காப்புறுதி நிதிகளுக்கு மிகப்பெரும் அளவில் பாக்கி தரவேண்டியிருப்பதால் அந்த நிறுவனம் மீண்டும் இலாபத்தை ஈட்டுவது ஏறத்தாழ இயலாத காரியமாகும். ஹோண்டாவைப் பொறுத்தவரை, விற்கப்படுகிற ஒவ்வொரு வாகனத்திற்கும் நிறுவனம் ஓய்வூதியங்களுக்காகவும், சுகாதார காப்புறிதிகளுக்காகவும் 107 டாலர்களை செலுத்தவேண்டியிருக்கிறது. ஆனால் ஜெனரல் மோட்டார்ஸுக்கு இந்தச்செலவு 1360- டாலர்களாகும். ஒரு சீன உற்பத்தியாளருக்கு அதே செலவினம் எவ்வளவு உயர்வானது என்பதை கற்பனை செய்து பாருங்கள் அங்கு (சீனாவில்) ஜெனரல் மோட்டார்ஸ் எப்படி போட்டியிட முடியும்? எவ்வாறு இந்த நிறுவனம் வர்த்தகத்தில் நீடித்திருக்க முடியும்?''

ஜேர்மனி வார செய்தி இதழான Die Zeit அக்டோபரில் வெளியிட்டிருந்த செய்தி: ''Morgan Stanley முதலீட்டு வங்கி ஆய்வாளர்கள் நடத்தியுள்ள ஆய்வின்படி GM அதன் ஓய்வூதிய மற்றும் சுகாதார சந்தாக்களை செலுத்தாவிட்டால் அதன் இலாபம் தற்போதுள்ள படுமோசமான 0.5 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக உயரும்..... அமெரிக்காவில் தயாரிக்கப்படும் நிறுவனத்தின் ஒவ்வொரு வாகனத்திலிருந்தும் இதற்கு செலுத்தும் செ