World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

United Airlines halts pension payments: a major attack on retirement programs in US

ஓய்வூதியத்தை நிறுத்திய யூனைடெட் ஏர்லைன்ஸ்: அமெரிக்காவின் ஓய்வு பெறும் திட்டத்தின்மீது பெரும் தாக்குதல்

By Joseph Kay
31 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

யூனைடெட் ஏர்லைன்ஸ் ஜூலை 23-ல் தனது ஓய்வூதிய திட்டத்திற்கான எல்லா ஊதியத்தையும் நிறுத்தியிருப்பதாக அறிவித்தும், அதே சமயத்தில் அது எஞ்சியதை தடுக்கும் பாதுகாப்பின் கீழ் உள்ளது. தனது திட்டத்திற்கு செலுத்துவேண்டிய 72.4 மில்லியன் டாலர் ஊதியத்தை தள்ளி வைத்திருப்பதாக உலகின் இரண்டாவது பெரிய விமான நிறுவனம் அறிவித்த சில நாட்களில் இந்த முயற்சி வந்தது.

யுனைடெட் அறிவிப்பு அடிப்படையில் தன்னிச்சையாக பென்ஷன் திட்டத்தை கைவிடுவதாகும். இது அமெரிக்காவில் தற்போது செயற்பட்டுவரும் திட்டவட்டமான-பயன்களைக் கொண்ட ஓய்வூதிய நிர்வாக அமைப்பின் மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதலாகும். யுனைடெட் தனக்குள்ள பொருளாதார துயரத்தின் சுமையை தொழிலாளர்கள் முதுகில் ஏற்றவேண்டும் என்று புஷ் நிர்வாகமும், வோல்ஸ் ஸ்ரீட்டும் தீவிர அழுத்தத்தை கொடுத்தபின்னர் இது வந்திருக்கிறது.

இத்தகைய திட்டவட்டமான-பயன்களைக் கொண்ட திட்டத்தின் கீழ் ஒரு டிரில்லியன் டாலருக்குமேலான பணம் 44 மில்லியன் அமெரிக்கர்களை சென்றடைகிறது. இந்தத்திட்டங்களின் படி, ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெறுவார்கள், அந்தக் கம்பெனியின் அந்த தொழிலாளர்கள் பணியாற்றிய ஆண்டுகளின் எண்ணிக்கையைப்பொறுத்து இந்தத் தொகை வழங்கப்படும். அந்தக்கம்பெனி நிர்வகித்து வரும் ஓய்வூதிய நிதிலியிலிருந்து ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன, அந்த நிதி பொதுவாக பங்குகள், பத்திரங்கள் மற்றும் இதர கடன் பத்திரங்கள் உள்ளடக்கி முதலீடுகள் செய்யப்படுகிறது. கம்பெனிகள் இந்தத்திட்டப்படி தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு உறுதி செய்துதருகிற வகையில் முறையாக தங்களது பங்களிப்பை செய்யவெண்டுமென்று சட்டம் வகை செய்கிறது. இதை விரிவாக்குவதற்கு இருப்பு கம்பெனி பெற்றுள்ளது.

இன்னொரு முக்கியமான வகையான தனியார் ஓய்வூதிய திட்டமும், அமெரிக்காவில் நடைமுறைபடுத்தப் பட்டிருக்கிறது, இது திட்டவட்டமான-பங்களிப்பு திட்டம் அல்லது 401(k) திட்டங்கள் என்று கூறுகிறார்கள். திட்டவட்டமான-பயன்பெறும் திட்டம், திட்டவட்டமான-பங்களிப்பு திட்டமாக பெரியளவில் இடம் மாறியிருப்பது, அண்மை ஆண்டுகளில், பொதுவாகக் பெருநிறுவனங்களுக்கு செலவினங்களை குறைத்துள்ளது.

யுனைடெட் ஏர்லைன்ஸ் நான்கு தனித்தனி திட்டங்களான விமானிகள், இயந்திரத்தொழில் நிபுணர்கள், விமானநிலைய தொழிலாளர்கள், விமானத்தில் பணியாற்றுவோர், மற்றும் ஊதியம் பெறுகின்ற ஊழியர்கள் என்று விரிவாக்கம் செய்துள்ளனர். இந்தத் திட்டங்களின் கீழ் 58,000 ஓய்வு பெற்ற தொழிலாளர்களும், யுனைட்டெட்டில் தற்போது 62,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஓய்வூதியங்களுக்கு வழங்கப்படுகிற நிதி 7.5 பில்லியன் டாலர் பற்றாக்குறையில் உள்ளது. இதன் பொருள் என்னவென்றால் ஓய்வூதிய திட்ட சொத்துக்களை விட கம்பெனி 7.5 பில்லியன் டாலர்கள் கடன் சுமையில் உள்ளது. அந்த நிறுவனம் அக்டோபர் வாக்கில் இந்த திட்டத்திற்கு 600- மில்லியன் டாலர்களை வழங்குவதாகவும், 2008-வாக்கில் 4-பில்லியன் டாலர்களுக்கு மேல் வழங்குவதாகவும் இதற்கு முன்னர் உறுதி மொழி அளித்திருந்தது. இந்தத் திட்டமிட்ட ஊதியங்களை ரத்துச்செய்கிற வகையில் சென்ற வார அறிவிப்பு வந்திருக்கிறது.

சென்ற மாதம் விமானப்போக்குவரத்து Stabilization வாரியம் யுனைடெட்டிற்கு மத்திய கடன் உத்திரவாதம் தர மறுத்துவிட்டது. இந்த முயற்சி மூலம் ATSB திட்டமிட்டு யுனைடெட் தனது செலவினக்குறைப்பு நடவடிக்கைகளையும் குறிப்பாக ஓய்வூதிய திட்டத்திற்கு கம்பெனியின் மிகப்பெரும் பொறுப்பையும் தட்டிக்கழிக்க மேற்கொண்ட நிர்பந்த நடவடிக்கையாகும். தனியார் முதலீட்டாளர்கள் ஓய்வூதிய திட்டங்களை கூர்மையாக தாக்குதலுக்குட்படுத்தப்படவேண்டும் என்று கோரிவருகிறார்கள். ஏனென்றால் கம்பெனிகளுக்கு வழங்கப்பட்ட எந்தவித கடன்களை திரும்பச் செலுத்துவதற்கு பண இருப்பு, இருப்பை பெருமளவில் பாதிக்கப்படுகிற வகையில் இவை அமைவதாலேயாகும்.

சென்ற வாரம் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ''மத்திய அரசாங்கக் கடன் உத்திரவாதம் இல்லாமல் யுனைட்டெட் நீண்டகால வர்த்தக திட்டத்திற்கு பண நடமாட்டமும், பணப்புழக்க (liquidity) அளவும் முதலீட்டு சந்தைகள் நிதி தருவதற்கு விரும்புகின்ற அளவிற்கு இருக்க வேண்டும். தற்போதுள்ள ஓய்வூதிய திட்ட பங்களிப்பிற்கு செலுத்தவேண்டிய தொகை (திவாலில் இருந்து) கம்பெனி வெளியே வந்ததும் கம்பெனிகளுக்கு பெரிய நிதிச்சுமையாக இருக்கும். எனவே யுனைடெட் நெருக்குகிற எல்லாவகையான வாய்ப்புக்களையும் ஆராய வேண்டியது கடமையாகும். மேலும் இந்த சுமையை யுனைடெட் தாங்க முடியுமா? அதற்கு பின்னரும் Exit நிதியை பெற முடியுமா? என்பதையும் முடிவு செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டிருக்கிறது.

இந்த திட்டங்களை யுனைடெட் முறையாக கைவிடுவதற்கு, திவால் நீதி மன்றத்தின் ஒப்புதலை அது பெறவேண்டும். அந்த ஒப்புதல் கிடைத்துவிடுமானால், ஓய்வூதியங்கள், ஓய்வூதிய பயன் உத்திரவாத கழகத்திற்கு (PBGC-Pension Benefit Guaranty Corp) மாற்றப்படும். இது ஒரு மத்திய அரசாங்க ஏஜென்ஸி, அது யுனைடெட் போன்ற தனியார் ஓய்வூதியங்களை காப்பீடு செய்துகொள்கிறது. ஒரு கம்பெனி தனது ஓய்வூதிய திட்டத்தை கைவிடும்போது சொத்துக்கள் மற்றும் கடன்கள் ஆகிய இரண்டும் PBGC-க்கு மாற்றப்படுகின்றன. PBGC தொடர்ந்து பயன்களை வழங்குகிறது, ஆனால் தரப்படும் விகிதங்கள் குறைக்கப்படுகின்றன. புதிய பயன்கள் சேர்க்கப்படவில்லை, தொகை ஏற்றம் கொடுக்க தவறுகின்ற நேரத்தில் இருக்கின்ற பயன்கள் அப்படியே முடக்கப்பட்டுவிடும். இதன்பொருள் என்னவென்றால் புதிய தொழிலாளர்கள் மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்டவர்கள், திவாலாகிவட்ட கம்பெனியிலிருந்து புதிய திட்டத்தை வென்றெடுக்க முடிந்தால் தவிர எந்தவிதமான பயன் அல்லது பாதுகாப்பு அவர்களுக்கு இருக்காது. PBGC உச்சவரம்பான ஆண்டிற்கு 44,000 டாலருக்குமேல் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் இனி அந்த கூடுதல் தொகையை பெற முடியாது.

PBGC க்கு அரசாங்க நிதி எதுவும் வழங்கப்படுவதில்லை. மாறாக அதன் காப்பீட்டு திட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளும், கம்பெனிகளில் இருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் மூலம் நிதியளிக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் கடமைகள் குறைக்கப்பட்டிருப்பதால் யுனைடெட் திட்டங்கள் நான்கும் PBGC இடம் ஒப்படைக்கப்பட்டால் முழு 7.5 பில்லியன் டாலர்களையும் நிகர கடன்களாக ஏற்றுகொள்ளாது மாறாக 5- பில்லியன் டாலர் அளவிற்கே கடன்களை ஏற்றுக்கொள்ளும். ஏற்கெனவே ஆழ்ந்த கடன்சுமையிலுள்ள அந்த அமைப்பிற்கு அத்தகைய முயற்சி ஒரு மரண அடியாக இருக்கும். PBGC நிர்வாக இயக்குநர் Bradley Belt தலைவரும் நிர்வாக இயக்குநருமான UAL கார்ப்பரேஷன் Glenn Tilton-க்கு எழுதிய கடிதத்தில் ''பென்ஷன் திட்டங்களுக்கு சந்தாச் செலுத்துவதை நிறுத்தம் முடிவு மிகக் கடுமையான விவகாரமாகும். அது திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்பவர்களுக்கும், மத்திய ஓய்வூதிய காப்பீட்டுத்திட்டத்திற்கும், இழப்பு ஆபத்தை அதிகரிக்கும்'' என்று கூறியிருக்கிறார்.

PBGC ஏற்கெனவே மிகப்பெருமளவிலான பற்றாக்குறையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. 2003 செப்டம்பரில் 11.5- பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை என்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் அந்தத்தொகை சற்றுகுறைக்கப்பட்டு 10- பில்லியன் டாலருக்கும் சிறிது குறைவு என்று மதிப்பிடப்பட்டது. யுனைடெட் தனது திட்டங்கள் அனைத்தையும் கைவிடுமானால், 1974 ல் இந்த ஏஜென்ஸி நிறுவப்பட்டபின்னர் அது ஒன்றே மிகப்பெரிய இழப்பாக அமைந்துவிடும்.

பல்வேறு எஃகு நிறுவனங்களும், மிக அண்மை காலத்தில் US Airways-ம் ஓய்வூதிய திட்டங்களை 2003 மார்ச்சில் PBGC-க்கு மாற்றியதால் பெருமளவில் பொறுப்புக்களை ஏற்கவேண்டிய தொடர் விளைவுக்குள்ளாகியுள்ளது. பெத்தலேஹம் எஃகு ஆலை ஓய்வூதிய பொறுப்புக்களை 2002ல் PBGC ஏற்றுக்கொள்ள வேண்டிவந்ததால் அதன் மூலம் 3.6 பில்லியன் டாலர் அளவிற்கு பொறுப்புக்களை ஏற்க வேண்டிவந்தது, அண்மை ஆண்டுகளில் எஃகுதொழில் தொடர்பான பொறுப்புக்களை ஏற்க வேண்டிவந்ததால் அந்த ஏஜென்ஸி ஏற்றுள்ள பொறுப்பான 7.5 பில்லியன் டாலர்களில் இதுவும் அடங்கும்.

வரும் ஆண்டுகளில் தங்களது ஓய்வூதிய பொறுப்புக்களை இந்த அமைப்பிடம் ஒப்படைக்க விரும்பும் கம்பெனிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். யுனைடெட் தனது முயற்சியில் வெற்றிபெறுமானால் இது மற்ற ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் அவ்வாறு செய்வதற்கு உற்சாகம் ஊட்டுவதாக அமையும். மேலும் பல கம்பெனிகளின் இதர தொழிற்சாலைகள் கட்டாய-பயன் திட்டத்தை தயார் செய்யும். ஜெனரல் மோட்டார்ஸ்(GM) நிறுவனம் தனது ஓய்வுபெற்ற 3,70,000 தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தருவதில் ஏற்படுகின்ற செலவினங்கள் பற்றி திரும்பத்திரும்ப புகார் கூறிக்கொண்டிருக்கிறது. அந்த நிறுவனம் 2003 ல் ஓய்வுபெற்ற தனது தொழிலாளர்களுக்காக ஓய்வூதிய மற்றும் சுகாதார சேவைகளுக்காக 6.2 பில்லியன் டாலர்களை செலுத்தவேண்டி வந்ததாக மதிப்பிட்டிருக்கிறது, இது அந்த நிறுவனத்தின் இருப்புத் தொகையில் மிகப்பெரிய செலவினமாகும்.

இந்த பல்வேறு திட்டங்கள் ஏற்கெனவே குறைந்த நிதி ஒதுக்கீட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஜூனில் PBGC தந்துள்ள தகவலின்படி 2003ல் அந்த அமைப்பின் ஓய்வூதிய திட்டங்களில் மொத்த பற்றாக்குறை 278.6- பில்லியன் டாலர்களாகும். இதில் 31 பில்லியன் ஏர்லைன்ஸ் தொழில் சம்மந்தப்பட்டது. 6- பில்லியன் டாலர்கள் எஃகு தொழில் சம்மந்தப்பட்ட பற்றாக்குறையாகும். 1999-ல் 18-பில்லியன் டாலர்கள் பற்றாக்குறையில் செயல்பட்டுவந்த இதுபோன்ற திட்டங்களின் எண்ணிக்கை 166-ஆக இருந்தது, 2003- ல் 1050-ஆக உயர்ந்துவிட்டது.

பிஸ்னஸ் வீக் ஜூலை 19- இதழில் 'The Benefit Trap" என்ற தலைப்பில் Nanette Byrnes எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது. ''2003 செப்டம்பர் நிலவரப்படி PBGC யிடம் நிதி நிலவர பலவீன நிறுனவங்கள் ஒப்படைத்துள்ள ஓய்வூதிய நிறுவனங்கள் ஒப்படைத்துள்ள பென்ஷன் பொறுப்புக்களின் அளவு குறைந்தபட்சம் 86- பில்லியன் டாலர்களாகும். ஓராண்டிற்கு முன்னர் இது 35 -பில்லியன் டாலர்களாகத்தான் இருந்தது. சென்ற ஆண்டு PBGC யிடம் சான்று அளவாக தங்களது சங்கடமான ஓய்வூதிய திட்டங்களை ஒப்படைத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 152 ஆகும். 2003 ல் சான்று அளவாக 206,000 பேர் PBGC ஓய்வூதியர்கள் ஆனார்கள் இவர்களில் 95,000- பேர் பெத்தலேஹம் எஃகு கார்பரேஷனை சார்ந்தவர்கள், இந்த நிறுவனத்தில் பெருமளவிற்கு ஓய்வூதியர்களை கொண்டுள்ளது.

திட்டவட்டமான-பயன் ஓய்வூதிய திட்டங்களால் தொல்லை அதிகரித்து இதனுடைய விளைவாக இந்த திட்டத்தால் பல தொழிற்சாலைகளில் சிரமத்தை வளர்த்துள்ளது. இந்த நெருக்கடி தோன்றியதற்கு காரணம் 2001- மற்றும் 2002 ஆண்டுகளில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சிதான் காரணமாகும். ஏனெனில் இந்தத்திட்டங்களின் சொத்துக்கள் பெரும்பாலும் பங்குகளாகவே உள்ளன. 1990-களில் பங்கு பங்குசந்தைககளில் ஏற்பட்ட பூரிப்பை பயன்படுத்தி கம்பெனிகள் தங்களது ஓய்வூதிய திட்ட ஒதுக்கீடுகளை குறைத்தன. பங்கு சந்தை பூரிப்பு திடீரென்று சிதைந்ததும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைந்துவிட்டது.

பிஸ்னஸ் வீக் கட்டுரை குறிப்பிட்டிருப்பதைபோல்: ஓய்வு பெறுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருவதோடு பங்கு சந்தை நிலவரம் மோசமாக இருந்ததால் இரண்டாண்டுகளில் மிகப்பெரும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. Creditsights நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில். S&P 500- நிறுவனங்கள் நடத்துகின்ற திட்டவட்டமான-பயன் திட்டங்களில் 85- சதவீதம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளுக்கு ஏற்ப சொத்துக்கள் இல்லாதவை. இவற்றுடன் சேர்ந்து 2003ல் பணப்புழக்கம் 15- சதவீதம் குறைந்தது. இதன் விளைவாக இந்த ஆண்டு பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக கம்பெனிகள் பில்லியன் கணக்கான டாலர்களை ரொக்கமாக செலுத்தவேண்டிவரும்.

'' PBGC உறுதிமொழிகளை நிறைவேற்றுகின்ற செலவு எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே இருக்கும். ஓரளவிற்கு வலுவாக செயல்படுகின்ற கம்பெனிகள் அதிக அளவிற்கு காப்பீட்டு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஓரளவிற்கு PBGC முறையில் தங்களது ஓய்வூதிய திட்டங்களை நிறைவேற்றும் போது அதிக காப்பீட்டு செலுத்த வேண்டிவரும் பெரிய கார்பரேஷன்கள் ஏற்கெனவே முதலீட்டு சந்தைகளை தாங்கள் கடும்போட்டியை சந்திக்கின்ற அளவிற்கு பென்ஷன் திட்டப்பொறுப்புக்கள் சுமையாக உள்ளன. முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர் என்று பெரிய நிறுவனங்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றன. இதுதான் திருப்புமுனை. இன்சூரன்ஸ் செலவினம் அதிகமாகும் போது அந்த நிறுவனங்களும் PBGC திட்டத்தில் சேரும் போது நிருக்கடி அதிகமாகும். ஏற்கெனவே இருக்கின்ற வலுவான கம்பெனிகள் பற்றாக்குறையிலுள்ள கம்பெனிகளால் நெருக்கடிக்கு உள்ளாகும்.''

யுனைடெட் தனது சில அல்லது எல்லா ஓய்வூதிய திட்டங்களையும் கைவிடுவது இப்போது நிச்சயமாகிவிட்டது. அப்போது என்ன நடக்கும்? அந்த முயற்சிமட்டுமே PBGC ஐ மொத்தமாக திவாலாக்கிவிட்டது. ஆனால் தொடர்ந்து யுனைடெட்டை பின்பற்றி பல நிறுவனங்கள் PBGC - ல் சேர முன்வருமானால் அது திவாலாகிவிடும்.

1980-èOTM PBGC தலைவர் அரசாங்கம் பெரும் எடுப்பில் மானியம் மற்றும் கடன் மீட்பு வழங்கவேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினார். அந்த கடன் மீட்பு ஏற்கெனவே பணக்காரர்களுக்காக பெருமளவில் வரி குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத்திட்டத்திற்கும், அரசாங்க மானியம் வழங்குமானால் சாமானிய அமெரிக்க மக்களிடமிருந்து செல்வத்தை பெரிய கம்பெனிகள் செய்துவிட்ட தவறுகளுக்காக மாற்றித்தருவதாக அமைந்துவிடும்.

அரசாங்கம் இந்த ஏஜென்ஸியை காப்பாற்றும் என்பதற்கான உத்திரவாதம் இல்லை அப்படிக்காப்பாற்றினாலும் இந்த ஏஜென்ஸி நடப்பு மற்றும் எதிர்கால ஓய்வூதியர்களுக்கு பயன்களை கடுமையாக குறைத்துவிடும். உண்மையிலேயே PBGC கம்பெனி ஓய்வூதிய திட்டங்களும் பெருமளவில் பற்றாக்குறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பது அரசாங்கக் கொள்கையின் விளைவாக உருவானதுதான். இந்த ஆண்டு துவக்கத்தில் நாடாளுமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. அதில் கணக்குகளை சரிசெய்யும் முறையில் அடுத்த இரண்டாண்டுகளில் கம்பெனிகள் செலுத்தவேண்டிய ஓய்வூதிய நிதி 80- பில்லியன் டாலர்களுக்கு மேல் குறைக்கப்பட்டது

உண்மையிலேயே இந்த நடைமுறை முழுவதும் அமெரிக்க ஆளும் வர்க்கம் பல தலைமுறைகளாக தொழிலாளர்கள் பாடுபட்டு வென்றெடுத்த பயன்களை கைவிடுகின்ற முயற்சியாகும். கம்பெனிகள் திவாலாகின்றன. அந்த பொறுப்புக்களை அரசாங்கத்தின் மீது சுமத்துகின்றன. அரசாங்கம் திவாலாகின்றது. அது தனது பொறுப்புக்களை யார் மீதும் சுமத்த முடியவில்லை..... ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் திண்டாடுகின்ற நிலைதான் மிச்சமாகும்.

Top of page