World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்

Ruling coalition suffers backlash in Japan's upper house election

ஜப்பான் மேலவைத் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு தோல்வி

By Joe Lopez
28 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜப்பான் மேலவைத் தேர்தல் முடிவுகள் ஜூலை 11 ல் வெளிவந்தன. பிரதமர் ஜுனிசிரோ கொய்சுமியின் (Junichiro Koizumi) பொருளாதார மற்றும் வெளியுறவுக்கொள்கை செயற்திட்டத்திற்கு குறிப்பாக ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஜப்பானிய துருப்புக்களை அனுப்புவது என்ற முடிவிற்கு எதிராக தொடர்ந்து அரசியலில் சரிவு ஏற்பட்டு வருவதை இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

242 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் 121 உறுப்பினர் பதவிகளுக்காக மறுதேர்தல் நடைபெற்றது. கொய்சுமியின் லிபரல் ஜனநாயகக் கட்சி (Liberal Democratic Party - LDP) அதில் 49 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியது. 1998 ல் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து கட்சி தேர்தலில் மோசமான முடிவுகளை சந்தித்ததால், அன்றைய பிரதமர் கசிமோட்டோ பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2001 ஏப்ரலில் கொய்சுமி ஆட்சிக்கு வந்த பின்னர், கோடை காலத்தில் நடைபெற்ற மேலவைத் தேர்தலில் 121 ஆசனங்களில் 64 ஐ LDP கைப்பற்றியது. அதற்குப் பின்னர் கொய்சுமிக்கு மக்கள் செல்வாக்கு மிக உயர்ந்த 80 சதவீதத்திலிருந்து அண்மைக் கருத்துக்கணிப்புகளின்படி 40 சதவீத்திற்கும் கீழாக குறைந்துவிட்டது. கடைசியாக நடைபெற்ற இத்தேர்தலில் அவரது குறைந்த மதிப்பீட்டு இலக்கான 51 ஆசனங்களைக் கூட அவரால் கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. அமைச்சரவை தலைமை செயலாளரான கிரொயூகி கொசடா, இந்தத் தேர்தல் முடிவுகள் ''மிகக் கடுமையான தீர்ப்பு'' என்று வர்ணித்தார்.

LDP ன் கூட்டணிக் கட்சியான நியூ கொமிட்டோ (New Komeito) இத்தேர்தலில் 10 ஆசனங்களிலிருந்து 11 ஆக உயர்த்திக் கொண்டுள்ளது. மேலவையில் ஆளும் கூட்டணிக்கு 139 ஆசனங்கள் திருப்திகரமான உள்ளன. ஆனால், தற்போது கொய்சுமியின் நிலைப்பாடு பாதுகாப்பாக தோன்றினாலும், தேர்தல் முடிவு மக்களிடம் அரசாங்கத்தின் மீது பெருகிவருகின்ற, எதிர்ப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

எதிர்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி (Democratic Party of Japan - DPJ) இத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனது ஆசனங்களின் எண்ணிக்கையை 12 லிருந்து 50 ஆக உயர்த்திக் கொண்டுள்ளது. மேலவையில் தற்போது எதிர்கட்சிக்கு 82 உறுப்பினர்கள் உள்ளனர். சென்ற நவம்பரில் நடைபெற்ற கீழ்சபை தேல்தலில் DPJ கூடுதலாக 40 இடங்களில் வெற்றிபெற்று கீழ்சபையில் தனது எண்ணிக்கையை 177 ஆக உயர்த்திக்கொண்டது.

இத்தேர்தலில் பெரிய தோல்வியை கண்ட கட்சிகள் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி (JCP) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SDP) ஆகிய இரண்டும்தான். JCP தான் பெற்றிருந்த 15 ஆசனங்களுக்கு பதிலாக தற்போது 4 இடங்களிலும், SDP இரண்டு ஆசனங்களையும் பெற்றிருக்கிறது. பரவலாக மக்களிடையே நிலவுகின்ற வெறுப்புணர்வு, குறிப்பாக உழைக்கும் மக்களிடையே முழு அரசியல் நிறுவனங்களுக்கும் எதிராக உருவாகி வருகின்ற எதிர்ப்புணர்வை அவர்களது தோல்விகள் எடுத்துக்காட்டுகின்றன.

இத்தேர்தலில் வாக்குப்பதிவு 56 சதவீதமாக இருப்பதுடன், 2001 ஜூலை மாதம் நடைபெற்ற மேலவைத் தேர்தலை விட இது சற்று அதிகமாக இருக்கிறது. அந்தத் தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு மிகக்குறைவான வாக்குப்பதிவு இடம்பெற்றது. பல வாக்காளர்கள் சிறப்பாக இளைஞர்கள் பிரிவு தங்களது எதிர்ப்பை காட்டுவதற்கு எந்த வழியுமில்லை என்பதால் வாக்குப்பதிவை புறக்கணித்தனர். ஜப்பான் மீண்டும் இராணுவமயத்திற்கு திரும்புவது, பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், வளர்ந்துவரும் பொருளாதார பாதுகாப்பற்ற சூழ்நிலை ஆகியவற்றிற்கு தேர்தல் கட்டுக்கோப்பிற்குள் தீர்வுகாண முடியாதென்று கருதி இளைஞர்கள் இத்தேர்தலை புறக்கணித்தனர்.

கொய்சுமி ஈராக்கிற்கு ஜப்பானிய துருப்புக்களை அனுப்பியது, அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான சமூகக் கொள்கைகளுக்கு நிலவும் எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி பயன்படுத்திக்கொண்டது. ஆனால், அவர்கள் வர்த்தகர்களில் சில பிரிவினர் மற்றும் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரை நம்பியே செயல்பட்டு வருவதால் கொய்சுமியின் லிபரல் ஜனநாயகக் கட்சியை (LDP) விட அதிகமான பொருளாதார சீரமைப்பை ஆதரிக்கின்றனர். LDP வரலாற்று அடிப்படையில் கிராமப்பகுதிகள் மற்றும் பெருமளவில் பாதுகாக்கப்பட்டு வரும் தொழிற்சாலைகளின் ஆதரவை பெற்றுள்ளது.

ஜப்பான் துருப்புக்கள் ஈராக்கிற்கு அனுப்பப்படுவதை பெரும்பாலான மக்கள் இடைவிடாது எதிர்த்துக் கொண்டிருப்பதை கருத்து கணிப்புக்கள் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன. சென்ற மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற G-8 உச்சிமாநாட்டில், கொய்சுமி நாடாளுமன்றத்தில் அல்லது வெளியில் பகிரங்கமாக விவாதம் எதுவும் நடத்தாமல் அவர் ஈராக்கில் காலவரையின்றி தனது துருப்புக்களை வைத்திருக்க உறுதியளித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது DPJ கட்சியின் தலைவர் கட்சூயா ஒக்காடா (Katsuya Okada) நிருபர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது ஈராக்கில் அமெரிக்க கொள்கைக்கு கொய்சுமி ஆதரவு தெரிவிப்பதை தாம் எதிர்க்கப்போவதாக குறிப்பிட்டார். ''கொய்சுமி அமெரிக்க ஜப்பான் கூட்டணியில் கவனம் செலுத்தவதானது, ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் உறவுகளை உருவாக்க ஜப்பான் மேற்கொண்டுள்ள முயற்சிகளை சேதப்படுத்திவிட்டது. அத்தோடு சீனா, தென் கொரியா உட்பட பக்கத்து நாடுகளுடனும் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன'' என்று அவர் கூறினார்.

ஒக்காடா ஜப்பான் துருப்புக்களை திரும்ப அழைக்க DPJ தனது முயற்சிகளை தீவிரப்படுத்தும் என்றும் அறிவித்தார். இருந்தபோதிலும், ஈராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பிற்கும், ஜப்பான் தனது துருப்புக்களை அனுப்பியதற்கும் கொள்கை அடிப்படையில் DPJ எதிர்க்கவில்லை. அல்லது ஈராக்கில் வாஷிங்டனின் சூறையாடல் நோக்கங்களையோ, அல்லது டோக்கியோ அமெரிக்காவை ஆதரிப்பதையோ DPJ பகிரங்கமாக எதிர்க்கவில்லை. மாறாக, ஜப்பான் அமெரிக்காவுடன் தனது கூட்டணியை நிலைநாட்டி வருவதுடன், ஈராக்கில் உருவாகும் எண்ணெய் மற்றும் வர்த்தக வாய்ப்புக்களில் ஒரு பங்கை பெறவும் முயன்று வருகிறது.

வாக்காளர்களுக்கு ஆத்திரமூட்டிய மற்றொரு பிரதான பிரச்சனை என்னவெனில், ஜப்பானின் தேசிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றுவதற்கு மக்களது ஆதரவற்ற ஒரு சட்டத்தை மிக வேகமாக நிறைவேற்ற முடிவு செய்தாகும். இந்த சட்டத்திருத்தங்களால் தொழிலாளர்கள் செலுத்தும் கட்டாய காப்பீட்டுக் கட்டனங்கள் உயர்வதுடன், ஓய்வூதியங்கள் பெறுபவர்களுக்கு தரப்படும் சலுகைகள் கணிசமான அளவிற்குக் குறைக்கப்படுகின்றன. குறிப்பாக இளைஞர்கள், தாங்கள் ஓய்வுபெறும் வயதை அடையும்போது முறையான பயன்களை பெறமுடியுமா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.

அரசியல்வாதிகள் பொதுமக்கள் இந்தத்திட்டத்தில் சந்தாச் செலுத்தவேண்டும், அல்லது எதிர்காலத்தில் எதுவும் கிடைக்காது என்று கூறி வருகின்றபோதிலும், அவர்களே அந்தத் திட்டத்திற்கு சந்தாக்களை செலுத்தவில்லை. இது சம்மந்தமாக கிளம்பிய முறைகேட்டில் பல முன்னணி காபினெட் அமைச்சர்கள் மற்றும் அன்றைய DPJ யின் தலைவரான நாட்டோ கான் (Naoto Kan) ஆகியோர் கட்டாயமாக பதவி விலக தள்ளப்பட்டனர்.

ஆசியா டைம்ஸ் வலைத்தளத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வாக்குப்பதிவிற்கு பிந்திய கருத்துக்கணிப்பில், 55 சதவீதமான வாக்காளர்கள் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். DPJ ஓய்வூதிய திட்ட மாற்றங்களுக்கு எதிராக பிரச்சாரம் நடத்தினாலும், இக்கட்சி பென்ஷன் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட நுகர்வோர் வரிவிதிப்பை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்ற மாற்றுத்திட்டத்தை கொடுத்துள்ளது. இந்த நுகர்வோர் வரிவிதிப்பு முறையும், திட்டமிடப்பட்டிருக்கும் பென்ஷன் சீர்திருத்தங்களைப்போல் மக்களது வெறுப்பிற்கு இலக்கானதாகும். எந்த வழியில் பார்த்தாலும் பயன்கள் குறைக்கப்பட்டுள்ள எதிர்காலத்தில் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்களும், ஏழைகளும்தான் ஓய்வூதிய திட்டத்திற்கு சந்தா செலுத்தியாக வேண்டும்.

இத்தேர்தல் பிரச்சாரத்தின் போது LDP தனது கொள்கைகள் குறித்து பெருமையடித்துக்கொண்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, முதல் தடைவையாக தனது கொள்கை கணிசமான பொருளாதார வளர்ச்சியை கோடிட்டுக் காட்டியுள்ளதாக குறிப்பிட்டது. ஜனவரி - மார்ச் காலாண்டு புள்ளிவிவரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 6.1 என்று குறிப்பிட்டது. ஆனால், இது தொழிலாளர்களுக்கு பயனளித்ததற்கு மாறாக ஜப்பானின் பாரிய கார்ப்பரேட் ஏற்றுமதியாளர்களுக்கே லாபத்தை வழங்கியது. பிரதானமாக சீனாவின் செயற்கை பொருளாதார பூரிப்பினால் பயனடைந்தனர். ஆனால், இது நீண்டகாலத்திற்கு முடிவின்றி நீடிக்காது.

இந்த பொருளாதார வளர்ச்சி வேலையில்லாத் திண்டாட்டத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தேர்தலுக்கு முன்னர் Shinkin மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், அதிகாரப்பூர்வமாக வேலையில்லாதிருப்போர் விகிதம் 5.3 சதவீதமாகும். இது இரண்டாவது உலகப்போருக்குப் பிந்தைய வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்ட அளவான 6.1 சதவீதத்தை நெருங்கியுள்ளது. 600,000 தொழிலாளர்கள் வேலையில்லாதிருக்கின்றனர். அவர்களிலும், மிகப்பெரும்பாலோர் 50 வயதைக் கடந்தவர்கள் ஆவர். தொழில்திறமை இல்லாதவர்கள், வேலைதேடுவதை விட்டுவிட்டவர்கள் ஆகியோர் இந்த அரசாங்க புள்ளிவிவரங்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

சந்தை பொருளாதார சீர்திருத்தங்களை முடுக்கிவிட வேண்டுமென்று கூறிவருகிற DPJ பதவியில் இருந்திருக்கமானால் நிலவரம் நிச்சயமாக மோசமடைந்திருக்கும். கொய்சுமி, நாட்டின் வங்கிகளில் தவறான கடன்கள் பெருகியிருப்பதை ஒழித்துக்கட்டவும், ஜப்பான் கம்பெனிகளை சீரமைக்கவும் தவறிவிட்டதாக DPJ தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அத்தகைய நடவடிக்கைகள் புதிதாக வர்த்தக அமைப்புக்கள் சீர்குலைவதற்கும், மேலும் பல தொழிலாளர்கள் வேலையிழப்பதற்கும் தான் வழிவகுக்கும்.

சில அரசியல் விமர்சகர்கள் இந்த மேலவைத் தேர்தல் முடிவுகள் இரண்டு கட்சி கட்டுக்கோப்பு ஜப்பானில் உருவாகி வருவதையும் LDP ன் ஏகபோக அரசியல் ஆதிக்கம் ஒரு முடிவிற்கு வரும் என்றும் பாராட்டியுள்ளனர். ஆனால், உண்மை என்னவென்றால் LDP ம், DPJ ம் ஆளும் வர்க்கத்தின் இரண்டு அணிகள்தான். அவர்களுக்கிடையில் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கை பிரச்சனைகளில் அரசியல் தந்திரோபாய அடிப்படையிலான வேறுபாடுகள்தான் உண்டு. இதில் எந்தக் கட்சியும் உழைக்கும் மக்களுக்கு நியாயமான மாற்றுத்திட்டத்தை வழங்கப் போவதில்லை.

Top of page