World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆபிரிக்காIvory Coast: Two years of French and United Nations occupation ஐவரி கோஸ்ட்: இரண்டாண்டுகள் பிரான்சு மற்றும் ஐக்கிய நாடுகள் ஆக்கிரமிப்பு By Chris Talbot சூடானில் ராணுவ தலையீடு தொடர்பான அழைப்புக்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன--- மேற்கு நாடுகளின் துருப்புக்கள், ஐக்கிய நாடுகள் படை அல்லது ஆப்பிரிக்க ஒன்றியம் தலையிட வேண்டுமென்ற நிர்பந்திக்கப்படுவதால்----மேற்கு ஆப்பிரிக்காவின் அத்கைய நடவடிக்கைகளின் அண்மைக்கால வரலாற்றை சோதனைக்குட்படுத்துவது முக்கியமாகும். அத்தகைய தலையீடுகள்-----பல்லாயிரக்கணக்கான மக்கள் மனிதநேய அடிப்படையில் மிகவும் மூர்க்கமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு என்பது வெளிவேடமாகும்---மாறாக வெகுஜனங்களின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலவர பயன்பாட்டிற்காகவும் அல்ல- அத்தகயை உந்துதல்கள் மேற்கு நாடுகளின் நலன்களையும் அதோடு இறுதியில் உள்ளூர் ஊழல் அரசியல்வாதிகளை அல்லது போர் பிரபுக்களை ஆதரிக்கின்ற நிலைக்கு வந்து, அதுதான் இறுதியில் மிகவும் பயனுள்ளது என்று கருதப்படுகிறது. 2002 செப்டம்பரில், ஐவரி கோஸ்ட் உள்நாட்டுப்போரில் மூழ்கியது அப்பொழுது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தவுடன் இராணுவக் கிளர்ச்சிக்காரர்கள் நாட்டின் வட பகுதியைப் பிடித்துக்கொண்டனர். பிரான்ஸ் முன்னாள் காலனிக்கு தனது துருப்புக்களை அனுப்பியது, வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையிலான பிரிவினை எல்லையில் 4,000- வரை பிரெஞ் துருப்புக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 2003- துவக்கத்தில் ஜனாதிபதி Laurent Gbagbo அரசாங்கத்திற்கும் கிளர்ச்சிக்காரர்களுக்குமிடையே பிரான்ஸ் ஒரு சமாதான பேரத்தை உருவாக்குவதற்கான முன்முயற்சியை மேற்கொண்டது, ஒரு புதிய அதிகார பகுப்பு அடிப்படையிலான தேசிய சமரச அரசாங்கம் அந்த இடத்தில் உருவாக்கப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டது. எவ்வாறாயினும், Gbagbo-வும் அவரது அடிவருடிகளும், நாடாளுமன்றத்தின் மூலமும் விரிவான பாதுகாப்பு சாதனங்கள் மூலமும் பொருளாதார அடிப்படையில் முக்கியத்துவம் நிறைந்த தென்பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆதிக்கத்தை பராமரித்து வருகின்றன. இரண்டு வருடத்திற்கு அதிகமான நாட்களுக்கு பின்னரும் கூட, பிரெஞ் படைகள் இன்னமும் அங்கே இருக்கின்றன, தற்போது 6,000 ஐ.நா துருப்புக்களும் துணைக்கு வந்திருக்கின்றன. அந்த ஆண்டு மார்ச் மாதம் பழைய Gbagbo ஆட்சி பிரதிநிதிகளுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்குமிடையே சமரசத்தை உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்தது, இன்னும் நாடு பிளவுபட்டே கிடக்கிறது. தற்போது ஐ.நா மூலமும் AU மூலமும் இருதரப்பையும் இணைப்பற்கு பிரான்ஸ் முயன்று வருகிறது. சென்றவாரம், ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னன் மற்றும் தென்னாப்பிரிக்க தலைவர்கள் ஜனாதிபதி Mbeki யும், நைஜீரியா ஜனாதிபதி Obasanjo உட்பட ஆப்பிரிக்க தலைவர்களும் கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாக அதிகாரப் பகிர்விற்கான மற்றொரு முயற்சி துவங்கியது. பிரான்ஸ், ஐ.நா மற்றும் AU தலையீட்டின் காரணமாக, உள்நாட்டு போர் காலத்தைவிட ஐவரி கோஸ்டில் இராணுவ மோதல் மிகக்குறைந்த அளவிற்கு இருந்தாலும், அந்த இடத்தில் தற்பொழுது நடக்கும் போரின் அனைத்து ஆக்கக்கூறுகளும் ஒரு நெருக்கமான சோதனைகளுக்குட்படுத்திக் காட்டுகிறது, மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அல்லது பொருளாதார அடிப்படையில் எதிர்காலம் எதுவும் உருவாகவில்லை. 1960-களிலும், 1970-களிலும் Burkina Faso மற்றும் இதர நாடுகளில் இருந்து ஐவரி கோஸ்டிற்கு வந்தவர்களான முஸ்லீம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கெதிராக இன பேரினவாத அடிப்படையில் Gbagbo-வைச்சுற்றியுள்ள குழுவினர் பின்பற்றி வருகின்றனர். இப்பொழுது பொருளாதாரரீதியாக---- உலகிலேயே முக்கிய தயாரிப்பான கொக்கோ ஐவரி கோஸ்ட்டை தளமாக கொண்டது---ஆப்பிரிக்காவிலேயே மிக வலுவான நாடாகும். அது இருந்தபோதும் அருகாமையிலுள்ள நாடுகளில் இருந்து முஸ்லீம் தொழிலாளர்கள் குடும்பங்களோடு குடியேறினர். Gbagbo முந்திய ஜனாதிபதிகளின் பாரம்பரியத்தையே பின்பற்றிவருகிறார், Henri Konan Bédié (1993-முதல் 1999-வரை) மற்றும் Robert Gueï (1999-கிறிஸ்துமஸ் தின ஆட்சிக்கிவிழ்ப்பிலிருந்து 2000- வரை) ஆகியோரைப்போல் ஐவரியன் தேசிய இனம் என்பதை ஒரு பிரச்சனையாக ஆக்கிக்கொண்டிருக்கிறார். வடக்குப்பகுதி தளமாகக்கொண்ட அரசியல் வாதியான Alassane Outarra ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாத படி விலக்கப்பட்டுவிட்டார் ஏனென்றால் அவரது தாயும், தந்தையும், ஐவரி கோஸ்டில் பிறந்தவர்கள் அல்ல என்று கூறப்பட்டது.ஆனால் ''ஐவரிகோஸ்ட்'' தேசியவாதம் Gbagbo மற்றும் அவரது ஆதரவாளர்களால் பாதுகாப்புப்படைகளிலும், அதிகார சார்பில்லாத ''இணை'' ராணுவங்களிலும் வளர்க்கப்பட்டு அரசியல் ஆட்சியின் மைய முகச்சாயிலாயிற்று. நாட்டின் தீமைகளுக்கு வடக்குப்பகுதியைச் சார்ந்தவர்கள் (வெளிநாட்டு முஸ்லீம்கள்தான் காரணம்) பலிகடா ஆக்கப்பட்டனர், அவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கிராமப்பகுதிகளில் அவர்களது நிலத்தைக் கைப்பற்றிக் கொள்வது தீவிரமாக ஊக்குவிக்கப்படுகிறது. 1960-ல் சுதந்திரம் பெற்றது முதல் கொக்கோ, உற்பத்தியைச்சுற்றி உருவாக்கப்பட்ட ஊழல் மிக்கவர்கள் மற்றும் ஊழலை ஆதரிப்பவர்களுக்களிலிருந்து Gbagbo தலைமையில் இயங்கும் தென்பகுதி செல்வந்த தட்டினர் நன்மையடைந்தனர். அண்மையில் சர்வதேச நெருக்கடி ஆய்வுக்குழு ஐவரி கோஸ்ட் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ''என்ரோன் மாதிரி தன்மை கொண்ட கட்டமைப்பு முன்னோடி கம்பெனிகள், ரகசிய வங்கிக்கணக்குகள், கிரிமினல் நடவடிக்கைகளுக்கும், அவற்றால் இறுதியில் பயனடைந்தவர்களுக்குமிடையில் பன்முக தட்டுகளில் பணத்தை மாற்றுவது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. மார்ச் 25-ல் மற்றும் 26-ல் Gbagbo-விற்கு எதிரானவர்கள் பல்லாயிரக்கணக்கில் Abidjan தொழிலாளவர்க்கப் பகுதிகளில் இருந்து அவரது ஆட்சிக்கு எதிராக கண்டனப்பேரணி நடத்த அணிவகுத்து ஒன்று திரண்டனர். அவர்கள் வாழுகின்ற புறநகர் பகுதிகளில் இருந்து வெளியேற முடியாதவாறு தடுக்கப்பட்டனர், குடிப்படைகளும், பாதுகாப்புப்படைகளும் தாக்குதல் தொடுத்ததில் 120-க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரித்த ஐ.நா மனித உரிமைகள் உயர் குழு தாக்குதல் ''பாதுகாப்புப்படைகளாலும், இணை ராணுவம் என்று அழைக்கப்படுபவர்களாலும் அரசாங்கத்தின் உச்சாணியிலுள்ள அதிகாரிகளின் கட்டளைப் படியும், அவர்களது பொறுப்பிலும் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது'' என்ற முடிவிற்கு வந்தது. இந்தத் தாக்குதலை Gbagbo செல்வந்த தட்டினர் ஏற்பாடு செய்தபின்னர், எதிர்கட்சி அரசியல்வாதிகளும், வடக்கு பகுதி கிளர்ச்சிக்காரர்களின் பிரதிநிதிகளும்-----புதிய படைகள் என்று அழைக்கப்படுபவர்களும்---- அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்விலிருந்து சென்றவாரம் வரை விலகி நின்றனர். Guillaume Soro தலைமையில் செயல்பட்டுவரும் புதிய படைகள், வடக்கில் பொருளாதார அடிப்படையிலான தனிமைப்படுத்தலுக்கு முடிவுகட்டுவதற்காக பிரான்சும், ஐ.நா வும், AU வும் கொடுத்த அழுத்தங்களை ஏற்று தேசிய சமரச இணக்க அரசாங்கத்திற்கு ஆதரவளித்தது. இதை செய்வதற்கு முன்னர், இந்த பேரத்தை உருவாக்கியதும் அவர்களுடைய சொந்த அணிகளுக்குள்ளேயே அத்தகைய பேரத்தை விமர்சித்தவர்களை அதேபோல் அனைத்து எதிர்ப்பாளர்களையும் கொடூரமாக நசுக்கிவிட்டதாக தெரிகிறது.இந்த மாதத்துவக்கத்தில், ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான விசாரணை குழு ஒன்று 100-க்கு மேற்பட்ட மக்களது உடல்கள் அடங்கிய மூன்று கல்லறைகளை கண்டுபிடித்தனர். சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றவர்கள் நேரில் கண்டவர்கள் தந்துள்ள தகவலின்படி மூச்சு திணறி மாண்டார்கள். உயிர் தப்பிய ஒருவர் அறிக்கையின்படி, மற்றவர்களுடன் ஒரு கப்பல் கொள்கலத்தில் (container) சிறிய காற்று மற்றும் தண்ணீர் அல்லது உணவு எதற்கும் வழியில்லாமல் அடைக்கப்பட்டனர். அந்த பெட்டகம் திறக்கப்பட்ட போது 75- உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. Soro எதிர்ப்பு கிளர்ச்சி தலைவர் Ibrahim Coulibaly- யுடன் (IB என்றழைக்கப்படுபவர்) மோதினார், ஐவரி கோஸ்ட் முழுவதையும் கைப்பற்றுவதற்காக ஒரு கூலிப்படையை திரட்ட முயன்ற பின்னர் சென்ற ஆண்டு அவர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். IB ன் மிச்சமிருக்கும் ஆதரவாளர்கள் பக்கத்து நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டதாகவும், தற்போது IB ஐ வெளியேற்றுவதற்கு பிரான்ஸ் அனுமதித்திருப்பதால் அவர்கள் திரும்ப ஒன்றுசேரலாம்.ஐவரி கோஸ்டில் பாதுகாப்பு ஏற்பாடு, மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் மோதலில் ஈடுபட சாத்தியக்கூறுகள் உள்ளது. லைபீரியா மற்றும் Guinea ஐ ஒட்டியுள்ள நாட்டின் மேற்குப் பகுதியில் பல்வேறு குடிப்படைகள் செயல்பட்டுவருவதால் இந்த பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறது. சிலர் இன அடிப்படையில் அமைந்தவை, மற்றவை லைபீரியா அல்லது Burkina Faso வை சேர்ந்தவை. இந்த மோதலை Gbagbo ஆட்சி தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது, சில போர் பிரபுக்களை மற்றவர்களுக்கு எதிராக ஆதரித்து வருகிறது. அந்தப்பகுதி பொருளாதார அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும், லைபீரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள அந்தப் பிராந்தியத்தில் நாட்டின் கொக்கோ, காப்பி பயிரிடப்பட்டும், அதேபோல் தங்கம், ரப்பர், மற்றும் மரங்களும் கிடைக்கின்றன. லைபீரியாவில் அமெரிக்க ஆதரவு சமாதான பேரம் திணிக்கப்பட்டுள்ளது, அதற்கு முன்னர் பிரிட்டன் Sierra Leone-ல் தனது ஜனாதிபதி Kabbah-வின் கைப்பாவை ஆட்சியை பாதுகாத்தது. இந்த நாடுகளைச் சேர்ந்த போர் பிரபுக்கள், குடிப்படைகள் ஐவரி கோஸ்டிற்கு புகுந்தன. மற்றவர்கள் Guinea காட்டுப் பகுதிகளுக்குள் புகுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது--- இந்த பிராந்தியத்திலேயே ஐ.நா படைகள் இல்லாதது ஒரே நாடு இதுவேயாகும். ஐவரி கோஸ்டிலும், மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியம் முழுவதிலும் ஸ்திரமற்ற தன்மைக்கு அடிப்படைக்காரணம், நீடித்துக் கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சிதான். 1990-களின் கொக்கோவின் விலை சரிந்தது, சர்வதேச நாணய நிதியம் கட்டமைப்பு ஒழுங்கமைப்பு (structural adjustment) வேலைதிட்டத்தை திணித்தது, இதைத் தொடர்ந்து மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய வளம்மிக்க நாடாக இருந்த ஐவரி கோஸ்ட் 2000-த்தில் வளர்ச்சிப்போக்கு எதிர்மறையில் செல்லத்துவங்கியது. 2002- மனிதவள ஐ.நா குறியீட்டு எண்ணில் 156-வது நாடாக இருந்த ஐவரி கோஸ்ட் தற்போது 177- நாடுகளில், 163- வது இடத்திற்கு சரிந்துவிட்டது. (Sierra Leone, 177-வதில் இந்த இடத்தை பெற்றிருந்தபொழுதும், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் பெருமையடித்துக்கொள்கிறார். ஐவரி கோஸ்டை பிரான்சும், ஐ.நா-வும் பிடித்துக்கொள்வதற்கு மேற்கு நாடுகள் ஆதரிப்பதற்குக் காரணம் புதிய காலனித்துவ பொருளாதார சுரண்டலுக்கேற்ற ஸ்திரதன்மையை உருவாக்குவதற்காகத்தான்--- ஐவரி கோஸ்டிலும், லைபீரியாவிலும் ஐ.நா துருப்புக்கள் 20,000-மாக உயர்த்தப்படவிருக்கிறது. ஜூனில், Gbagbo ஆட்சி மேற்கு நாடுகளுக்கு தரவேண்டிய 20- மில்லியன் டாலர்களை செலுத்த முடியவில்லை, உலக வங்கி நிதியுதவியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்பதுடன், கொக்கோ உற்பத்தி குறைந்து கொண்டுவருவதால் தற்பொழுது அமெரிக்கா பிரிட்டன், பிரான்சு தற்பொழுது அச்சுறுத்தலுக்குள்ளாகியும், இந்த மோதல்களால் குழப்பம் நீடிக்கும். தகவல் தொடர்பு, மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து ஆகிய ( IMF-யின் கீழ் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு விட்டதால்) பிரான்ஸின் முதலீடுகளுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. Gbagbo -ம் அரவது பல்வேறு வகைப்பட்ட குண்டர்களும் பிரான்சிற்கு எதிராக விரோதபோக்கைத் தூண்டிவிட முயன்று வருகின்றனர். ஐவரி கோஸ்டில் வளங்கள் சிதைவிற்கு பிரான்சின் பொருளாதார கட்டுப்பாடுதான் காரணம் என்று கூறிவருகின்றனர். பிரான்சு மற்றும் மேற்கு நாட்டவருக்கு எதிராக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.ஐவரி கோஸ்டில் முழுமையாக மேற்கு நாடுகளின் முதலீட்டையும், சந்தைகளையும் சார்ந்திருப்பதற்கு பிரதான காரணி பிரான்சு ஏகாதிபத்தியம் தான் என்பது உண்மையென்றாலும் Gbagbo-வின் இறுமாப்பான ஆவேச உரைகள் முற்றிலும் மோசடியானவை உள்நாட்டு மக்களின் அழிவிற்காக திட்டமிடப்படுவையாகும். மோசடியான தேர்தல்களில் Outarra தலைமையிலான எதிர்க்கட்சி நீக்கப்பட்டபின்னர், Gbagbo பிரான்சு ஆதரவோடுதான் ஜனாதிபதி பதவியை கைப்பற்ற முடிந்தது, இன்றைக்கும் பிரான்சின் ஆதரவை நம்பியே இருக்கிறார். அவருடைய பிரதான கவலை என்னவென்றால் தன்னையும் தனது குழுவையும் பிரான்ஸ் வகுத்தளித்துள்ள அதிகாரப்பகிர்வு பேரத்தில் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான். பிரான்ஸ் மற்றும் ஐ.நா இராணுவ ஆக்கிரமிப்பினால் ஐவரி கோஸ்டின் பெரும்பாலான மக்களுக்கு நீண்ட கால பயன் எதுவும் ஏற்படும் என்று எதிர்பார்ப்பவர்கள் அப்பாவிகளாக தான் இருக்கவேண்டும். அரசியலில் திவாலோடு AU, ஐ.நா மற்றும் மேற்கு நாடுகள் ஒன்றிணைந்து பண்பாடற்ற முறையில் நன்மை பயக்கும் ஒன்றுக்கு சதிவேலைகள் நடத்தி வருகின்றனர். Gbagbo அவரது நெருங்கிய நண்பர்கள் Soro வின் புதியபடைகளுடன் எதிர்கால அரசாங்கத்தில் இடம்பெறச்செய்ய வேண்டுமென்பது மனித உரிமைகள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு என்பதை முற்றிலுமாக அலட்சியப்படுத்தும் போக்கையே காட்டுகிறது. இந்த ஏற்பாட்டினால் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் வறுமை, ஆகியவற்றை அல்லது மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் குடிப்படைகள் மற்றும் மேலும் இராணுவ மோதல்கள் ஏற்படுவதைத்தடுத்து நிறுத்தமுடியாது. * 2004 ஜூலை 12- சர்வதேச நெருக்கடி ஆய்வுக்குழு ''அமைதிக்கு வழியில்லை'' என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கை. |