WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India: Hindu supremacist BJP in
disarray
இந்தியா: இந்து மேலாதிக்கவாத
BJP-யில்்
குழப்பம்
By Deepal Jayasekara and Keith Jones
18 August 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஆட்சியிலிருந்து வீழ்ந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர், இந்து மேலாதிக்கவாத பாரதிய
ஜனதாக்கட்சி (BJP)
குழப்பத்தில் உள்ளது, ஏப்ரல்- மே பொதுத்தேர்தல்களில் தோல்வியடைந்ததின் காரணமாக அதன் தலைமை கூர்மையாய்
பிளவுற்றுள்ளது மற்றும் எப்படி தொடர்ந்து முன்செல்வது என்பது குறித்து நிச்சயமில்லாமல் உள்ளது.
அவர்களது வகுப்புவாத அரசியல் உள்ளுணர்வின் உண்மையின்படி,
BJP- தலைமையில்
உள்ள தலைவர்கள் பலர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி,
சந்தர்ப்பம் கிடைத்தால் மிக விரைவாக அதனை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு நிர்ப்பந்திக்க, இந்து குறுகியவாத
அடிப்படையில் தீவிர பிரச்சாரம் நடத்த விரும்புகின்றனர். என்றாலும், பெருவர்த்தக நிறுவனங்கள்
BJP- தலைமையிலான
தேசிய ஜனநாயக முன்னணியை மறுதேர்வு செய்ய (NDA)
அதன் பின்னால் உறுதியாக நின்றாலும், இத்தகைய முயற்சியில் ஆர்வம் எதையும் காட்டவில்லை. இந்து மேலாதிக்க
வாதத்திற்கு
அல்லது ''இந்துத்துவாவிற்கு திரும்ப வேண்டும்'' என்று
BJP- விடுத்துள்ள அழைப்பையும், நாடாளுமன்றத்தை சீர்குலைக்க
BJP-முயற்சிப்பதையும்
பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்துள்ளன. வர்த்தகங்களின் ஆதரவு இல்லாதது
BJP- ஐ மேலும்
அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது, அதன் குழப்பத்திற்கு முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்றாகும்.
இந்தியாவின் 14-வது பொதுத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் மற்றும் வர்த்தக
ஸ்தாபனங்களை அதிரவைத்துவிட்டது. இந்தியாவின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ், இடதுசாரி அணி தந்த
பெரும் நடவடிக்கையின் ஆதரவினால், நன்றி தெரிவித்துக்கொள்வதாக அமைந்தது, 1991- முதல் அகில இந்திய
அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நவீன-தாராளவாத செயற்திட்டமான தனியார் மயமாக்குதல், பொருளாதார
நெறிமுறைகள் தளர்வு, பொதுத்துறை மற்றும் சமூக சேவைகள் வெட்டு ஆகியவற்றிற் கெதிராக தொழிலாள
வர்க்கத்திடமும், கிராமப்புறத்தினரிடமும் உருவான ஆழ்ந்தகன்ற பேரலையினால் எதிர்பாராத வகையில் அது பயனை
உருவாக்கிக் கொண்டது. BJP-
ம் அதன் கூட்டணிக் கட்சிகளும், மிக நம்பிக்கையோடு வெற்றி கிடைக்கும் என்று ஊகித்தார்கள், ஆனால் தேர்தல்
முடிவில் அவர்களது சீட்டுக்கள் நூற்றுக்கு மேல் குறைந்துவிட்டன. 1996-க்குப் பின் முதல் தடவையாக இந்தியாவின்,
கீழ்சபையான மக்களவையில் காங்கிரஸை விட குறைவான சீட்டுக்களையே
BJP பெற்றது.
தேர்தல் முடிவுகளால் பிரதமரும்
BJP-
தலைவருமான அட்டல் பிஹாரி வாஜ்பாய் பதவி விலகுவதைத் தவிர வேறு தேர்வுக்கில்லாத நிலை ஏற்பட்டது.
ஆனால் அவர் அவ்வாறு செய்தவுடன் BJP-
யும், NDA-
வும் வாக்குகளின் சட்டபூர்வமான தன்மையையே ஆட்சேபிக்க முயன்றன. ஒரு ''வெளிநாட்டவர்''----காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி-----பிரதமராக பணியாற்றும்--- ''தேசிய அவமதிப்பை'' எதிர்க்க வெகுஜன
பிரச்சாரம் நடத்தப்போவதாக BJP
அச்சுறுத்தியது.
இந்த நிலைப்பாட்டிற்கு பின்னணியாக
BJP- தலைமையின்
பிறவி வகுப்புவாதம் அமைந்துள்ளது, மேலும் பெருவணிகங்கள், காங்கிரஸ் சிறுபான்மை அரசாங்கம் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M)
ஆகியவற்றின் தயவை நம்பியிருப்பதை வெளிப்படையாக எதிர்க்காவிட்டாலும், முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள்
என்று அது கணக்கிட்டது.
என்றாலும், தேர்தல் முடிவுகள் செல்வந்த தட்டினருக்கு இடை நிறுதத்தத்தை வழங்கி
இருக்கிறது. பிஜேபி மற்றும் NDA
மற்றும் அதன் ''இந்தியா ஒளிர்கிறது'' என்ற வாய்வீச்சு தேவையின் தந்திர மழுப்பலை அதிர்ச்சியூட்டும் வகையில்
மறுதலித்ததில், அதன் ''சீர்திருத்த'' வேலைதிட்டங்களுக்கு அச்சுறுத்தும் வகையிலான மக்களின் சவால்
வெளிப்படுத்தப்பட்டதாகவும் மிகவும் அரசியலை கூர்ந்து கவனிப்பவர்கள் வாதிடுகின்றனர். காங்கிரஸ் தலைமையைப்
பொறுத்தவரை, அதன் பங்கிற்கு பங்குச்சந்தைகளை அமைதிப்படுத்த முயன்றது, இந்தியாவில் தேசிய-நெறிமுறை
பொருளாதாரத்தில் மிச்சமிருப்பதையும் ஒழித்துக்கட்டுவதற்கு தனது முழு ஆதரவையும் காங்கிரஸ் உறுதிப்படுத்தியது.
பெரு-வணிகங்கள் எங்கும் மகழ்ச்சியோடு வரவேற்ற ஒரு நகர்வான, சோனியாகாந்தி பிரதமர் பொறுப்பை
ஏற்றுக்கொள்ள மறுத்து அவருக்குப் பதிலாக வருகின்ற காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் தலைவராக
மன்மோகன் சிங்கை அமர்த்தினார். அவர் நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக 1991-முதல் 1996
வரை பணியாற்றிய காலத்தில் இந்தியாவின் முதலாவது '' சீர்திருத்த'' வரவு செலவுத்திட்டத்தை வரைந்தார்.
வரலாற்று ரீதியாக, காங்கிரஸின் விதிவிக்கான இந்திய அரசியல் பங்களிப்பு தேசிய
முதலாளித்துவத்தின் வேலைத்திட்டங்களுக்கு பொதுமக்களை பிணைத்து வைக்கின்ற ஆற்றலை பொறுத்தே
அமைந்திருந்தது. இந்தப் பங்களிப்பை பின்பற்றிக்கொண்டு தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான
UPA அரசாங்கம்
ஏழை மக்களுக்கு அவர்களது தேவைகளுக்கு உதவுவது என்ற பொதுமக்களை கவரும் பகட்டாரவார
சொல்லாட்சியோடு நவீன-தாராளவாத பொருளாதார கொள்கைகளையும் இணைத்துக் கொண்டு செயல்படுகிறது.
அதே போன்று UPA
ஆட்சி BJP-
NDA
ஆட்சியின் அடிச்சுவட்டை பின்பற்றி இந்தியாவின் இராணுவ வலிமையை விரைவாக கட்டியெழுப்ப முயன்று வருவதுடன்,
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மூலோபாய பங்குதாரராக செயல்பட்டு வருகிறது.
முதலாளித்துவ வர்க்கம் அதனது பொருளாதார மற்றும் புவிசார்அரசியல்
வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு UPA
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக BJP
மற்றும் NDA
வை பயன்படுத்திக் கொள்வதற்கு ஆர்வமாக உள்ளது. ஆனால், குறைந்த பட்சம் இந்தக் கணத்திற்கு புதிய
அரசாங்கம், மக்கள் ஆதரவைக்கொண்டுள்ளதன் மற்றும் இடது அணியிலிருந்து அரசியல் ஆதரவையும் பெற்றுள்ளதன்
காரணமாக, தனது வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு, அரசியல் அடிப்படையில் பலவீனப்படுத்தப்பட்டுள்ள
மற்றும் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள BJP-
NDA-வை
விட அதனை சிறந்த வாகனம் என்று கருதுகிறது. உண்மையிலேயே,
BJP வகுப்புவாத
வெறிக்கும், வன்முறைக்கும் மீண்டும் தூபம் போட்டு விடுமானால் அது அரசியல் நிலவரத்தில் மிக ஆபத்தான
ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தி, அரசாங்க மற்றும் அரசு தொடர்பான மக்களின் சட்டப்பூர்வமான தன்மையை
மேலும் அரித்துவிடும் என்று முதலாளித்துவ வர்க்கம் பயப்படுகின்றது. எனவேதான் பத்திரிகைகளில்
BJP
பொதுத்தேர்தல் தீர்ப்பை மதிக்கவில்லை என்று கசப்பான புகார்கள் வருகின்றன.
பதவியை அனுபவித்து விட்ட,
BJP
தலைமையானது தற்போது இந்திய முதலாளித்துவம் நம்பகமாய் ஒப்படைத்துள்ள விசுவாச எதிர்க்கட்சி
என்ற பாத்திரத்திற்கு இணக்கம் காணுவதில் பெரும் சங்கடத்திலுள்ளது. தீவிரமான இந்து வகுப்புவாத அடிப்படையைக்
கொண்ட அந்தக்கட்சி, ''கம்யூனிஸ்டுகள் ஆதரவில்'' இயங்கிவருகிற
UPA அரசாங்கம்
தனது ''வெற்றிகள்'' பலவற்றை- பள்ளிப் பாடத்திட்டங்களை வகுப்புவாத அடிப்படையில் திருப்பி எழுதியதை
மாற்றிவிட அல்லது குறைந்த பட்சம் மாற்றுவதாக அச்சுறுத்துவதைப் பார்த்து ஆத்திரமடைகிறது. அண்மையில்
BJP-
''நுண்ணறிவு பிரிவில்'' உரையாற்றிய வாஜ்பாய் ''காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி'' இந்த நாட்டில்
BJP
க்கு பயனுள்ள இடமே இல்லையென்று ஒதுக்கித்தள்ளுவதற்கு திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டினார் என்று
கூறப்படுகிறது.
பதவி இழப்பானது, BJP
க்குள்ளேயும் ---BJPக்கும்,
சங்பரிவாருக்கும் இடையில்- ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் அல்லது
RSS
தலைமையிலான இந்து மேலாதிக்கவாத அமைப்பின் ஒரு வலைப்பின்னலுக்குமிடையில் -நீண்டகாலமாக
BJP- கொள்கை
மற்றும் கிளர்ச்சியில் இந்துத்துவாவிற்குள்ள இடம் தொடர்பாகவும் மற்றும் வாஜ்பாய் மற்றும் பிஜேபி-
என்டிஏ ஆட்சியில் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த
L.K அத்வானி
இவர்களின் பாத்திரம் தொடர்பாகவும் நீண்டகால பதட்டங்களை அதிகரிக்கச்செய்தும் வருகின்றது.
தமது இளமைக்காலம் முதல்
RSS தொண்டராக
இருந்தாலும், வாஜ்பாய் தன்னை ஒரு ''மிதவாதியாக'' நிலைநாட்டிக்கொண்டிருக்கிறார். எனவே
இந்துத்துவாவிற்கு எதிரானவை என்று கூறிக்கொண்ட NDA-
ன் கூட்டாளிகளுடன் BJP-
யின் உறவுகளை நிலைநாட்டுவதில் அவ்வாறாக நடுநிலையுடன் நடந்து கொண்டார், மற்றும்
BJP- யின்
வகுப்புவாத முறையீடுகளும் நடவடிக்கைகளும் பொருளாதார தாராளமயமாக்கலை பின்பற்றுவதில் அரசாங்கத்தை
திசைதடுமாற செய்தன என்ற பெருவர்த்தக அமைப்புக்களின் புகார்களுக்கு பதிலளிப்பதிலும் முக்கிய பாத்திரம்
வகித்தார்.
மாறாக அத்வானி, 1990-களின் தொடக்கத்தில் இந்து அடிப்படையிலான பிற மத
பழிப்புவாத அணிதிரட்டலை முன்னெடுத்தார், அது அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்து தள்ளுவதில் போய்
முடிந்தது, அவர் நீண்டகாலமாக இந்து தேசியவாத ''கடுங்கோட்பாட்டாளர்களுடன்'' அடையாளப்படுத்தப்பட்டு
வருபவர் ஆவார்.
தேர்தல் முடிந்ததும், அத்வானியும்
RSS-ம்,
BJP-
தேர்தல் தோல்விக்குக் காரணம் இந்துத்துவாவிலிருந்து விலகிச் சென்றதுதான் என்று பழிபோட்டனர்.
ஜூன் மாதம் BJP-
தேசிய செயற்குழுவில் உரையாற்றிய அத்வானி ''எப்படியோ கடந்த ஆறு ஆண்டுகளில் நமது அரசியல்
மூலோபாயங்களும், நடைமுறைகளும் நமது கொள்கைவழி பரிவாரங்களையும், நமது சிந்தாந்த
ஆக்கக்கூறுகளையும், வலுப்படுத்தும் மற்றும் உற்சாகப்படுத்தும் நோக்குநிலையில் செயல்படவில்லை'' என்று
கூறினார்.
உண்மை என்ன வென்றால்,
BJP- தலைமையிலான
NDA அரசாங்கம்
இந்து தேசியவாதத்தை பின்பற்றி பழிக்கு பழி வாங்க முற்பட்டது. 2002-ல் குஜராத் படுகொலைகளுக்கு
காரணமாக இருந்தவர்களை காப்பாற்றியது, 2001-02-ல் இந்திய துணைகண்டத்தையே போரின் விளிம்பிற்கு
கொண்டுவந்துவிட்டது, இந்தியாவின் கல்வி மற்றும் கலாச்சார அமைப்புக்களில் திட்டமிட்டு
RSS அனுதாபிகளை
மீண்டும் அலுவலர்களாக ஒழுங்கமைத்தது.
வகுப்பு வெறியோடு கண்ணைமூடிக்கொண்டு இயங்குகின்ற அதன் தொண்டர்களுக்கு
குழப்பத்தை ஏற்படுத்தியது என்னவென்றால் BJP-
தனது நாடாளுமன்ற கூட்டணிகள் மற்றும் பெருவணிகர்களின் நிர்பந்தங்களால், அயோத்தியில் ஹிந்து கோயிலை
கட்டுவது போன்ற, பாரம்பரியமாக BJP-
விடுத்துவரும் கோரிக்கைகளின் மிகவும் வெடித்துச்சிதறும் வகுப்புவாத கோரிக்கைகளுள் சிலவற்றை
நடைமுறைப்படுத்தவில்லை. சென்ற ஆண்டு இறுதியில் காஷ்மீர் கிளர்ச்சிக்காரர்களுக்கு பாக்கிஸ்தான் ஆதரவு
தருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க BJP-
தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, அக்கட்சி தொண்டர்களில்
கணிசமான தரப்பினர் திகிலடைந்ததை அடுத்து, BJP-
அரசாங்கம் தனது போக்கை உடனடியாக மாற்றிக்கொண்டு பாக்கிஸ்தானுடன் ஒரு சமாதான தீர்வின் மூலம்
இந்தியாவின் மேலாதிக்கத்தை தெற்கு ஆசியாவில் நிலைநாட்ட முயன்றது, மற்றும் துணைக்கண்டத்தில் ஒரு சுதந்திர
வர்த்தக வளாகத்தை உருவாக்கவும் முயன்றது.
BJP - இந்துத்துவாவை
மீண்டும் உயிர்பெறச்செய்வதற்கான தேர்தலுக்குப் பிந்தைய அழைப்பை வாஜ்பாய் விலக்கிவைத்ததாக முதலில்
தோன்றியது. குஜராத்தில் இன அழிப்பு படுகொலைகளை தூண்டிவிட்டதில் அவரின் இழிவான பாத்திரத்திற்காக,
மாநில முதலமைச்சர் என்ற அவரது பொறுப்பிலிருந்து நரேந்திர மோடியை நீக்கிவிட வேண்டுமென்று கூறிய குஜராத்
BJP-க்குள்ளேயான
அதிருப்தி பிரிவின் முயற்சிக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். ஆனால் ஜூன் மாதம் நடைபெற்ற தேசிய செயற்குழு
கூட்டத்தில் கட்சித்தலைவர் வெங்கையா நாயுடு, ''தனிநபர்வாத விஷக்கிருமி'' என்ற பெயரில் வாஜ்பாயியை
கடுமையாகத் தாக்கினார் மற்றும் மோடியின் தலைமையை செயலுக்கத்துடன் மீளஉறுதிப்படுத்தினார்.
''சித்தாந்தத்திற்கு'' அதிகமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற
BJP-ன்
கோரிக்கை அடிப்படையில் BJP
உயர் அணிக்குள்ளே அதிகாரம் அத்வானியின் பக்கம் சாய்ந்தது.
BJP நாடாளுமன்ற
குழு தலைவராக அத்வானி பொறுப்பேற்றார், வாஜ்பாயிக்கு பெயரளவில்
NDA
தலைமைப்பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில் நாயுடுவின் ஆதரவோடு
RSS தனது
தலைமை உறுப்பினர்களில் குறிப்பிட்ட பேரை BJP
கட்சி எந்திரத்திற்குள்ளே பதவிகளை பொறுப்பேற்க அனுப்பியது.
ஆனால் இந்துத்துவா பற்றி புதிதாக வலியுறுத்துவது பெருவணிகங்களின் முக்கியப்பிரிவுகளை
BJP
யிலிருந்து பகைத்துக்கொள்ள வைத்துவிட்டது மற்றும் NDA
பங்காளர்களுக்குள் கடுமையான பிரச்சனைகளை உருவாக்கும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்திவிட்டது. நாடாளுமன்ற முக்கிய
கூட்டணிக்கட்சிகளான ஆந்திராவை அடிப்படையாகக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சியும், சமூக ஜனநாயகக்
கட்சியின் மிச்சசொச்சமான ஐக்கிய ஜனதாதளமும், NDA
வுடன், உறவுகளை முறித்துக்கொள்வதாக அச்சுறுத்தியதும்,
BJP- தலைமை வெளியிட்ட
ஒரு கொள்கை ஆவணத்தில் இந்துத்துவா என்ற சொல் நீக்கப்பட்டது. இந்துத்துவா என்ற சொல்லை நீக்கிவிட்டாலும்
BJP-
தலைமை வகுப்புவாத அடிப்படையிலான கிளர்ச்சிகளை நடத்தும் தனது நோக்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில்
அரசு பணிகளில் முஸ்லீம்களுக்கு ஒரு சிறிய இட ஒதுக்கீட்டை செய்ய மாநில அரசு உத்தேசித்திருப்பதை எதிர்க்கப்போவதாகவும்,
காஷ்மீரில் ''பயங்கரவாதிகளை'' கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளர்ச்சி நடத்தப்போவதாகவும்
BJP-
அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், BJP
உழைக்கும் வெகுஜனங்கள் நலன்கள் மற்றும் அவர்களின் தேவைகளுக்கு குரோதமாக இருக்கிறது மற்றும் பெருநிறுவனங்களையும்
மற்றும் சலுகைமிக்கவர்களைப் பொதுவாகவும் பாதுகாக்கிறது என்று சரியாக மக்கள் மனத்தால் உணர்வதை,
UPA
அரசாங்கத்தின் ''ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் விரோத கொள்கைகளை''
எதிர்ப்பதன் மூலம், எதிரிடையாக செயல்பட முயற்சித்துக்கொண்டிருக்கிறது.
BJP - ன் நெருக்கடி கடந்த பதினைந்து
ஆண்டுகளாக வகுப்புவாத பிற்போக்கின் வளர்ச்சி ஒரு குறுகிய சமூக அடித்தளத்தின் மீது அமைந்துள்ளது என்ற
உண்மையைக் கோடிட்டுக் காட்டுகிறது. குட்டி முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ வர்க்கப் பகுதியினர், உலக
மூலதனத்திற்கு இந்தியாவை மலிவு ஊதிய சொர்க்கமாக ஆக்கும் வகையில் மேற்கொள்ளுகிற அதன் முயற்சிகளை முன்னெடுக்கும்
வரைக்கும், வகுப்புவாதத்திற்கு உதவுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் தயாராக இருக்கிறனர். இதில் மிகப்பெரிய ஆபத்து
என்னவென்றால், ஸ்ராலினிச இடதுசாரி அணியின்மூலம் தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் அரசியல் அடிப்படையில்
காங்கிரஸ் தலைமையிலான UPA
அராசங்கத்தோடு முடிச்சுப்போடப் பட்டிருக்கின்றனர். மக்களை கவர்வதற்கு கூறப்படுகின்ற வார்த்தைகள் எதுவாக
இருந்தாலும், மன்மோகன் சிங் அரசாங்கம் மூலதனத்தின் சமுதாயக் கெடுநோக்கு செயற்திட்டத்தை முன்னெடுத்துச்
செல்ல அழுத்தம் கொடுத்து வருகிறது மற்றும் அதன் மூலம் உழைக்கும் மக்களின் செலவில் இலாபத்தைக் குவிப்பதற்கு
வகை செய்யப்படுகிறது மற்றும் பொருளாதார பாதுகாப்பற்ற நிலையும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் உருவாக்கப்பட்டு
வருகின்றன. இந்தச் சூழ்நிலைகளில், சோசலிசமாற்று இல்லாமல் இருப்பது வகுப்புவாதமும், எல்லாவகையான
அரசியல் பிற்போக்குத்தனங்களும் வளர்வதற்கான சீழ்பிடித்த தளத்தை வழங்குகிறது.
Top of page |