கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு சீனாவை சீர்குலைத்துள்ளது
By John Chan
27 July 2004
Back to screen version
சீனாவில் கிடைக்கின்ற மலிவு ஊதியத்தொழிலாளர்களை பெருமளவில் பயன்படுத்திக் கொள்வதற்காக
படுவேகமாக வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவிந்ததால் நாட்டின் அடிப்படை உட்கட்டமைப்பு சீர்குலைகின்ற அளவிற்கு கடந்த
50- ஆண்டுகளில் கண்டிராத மிகவும் கடுமையான மின்சார பற்றாக்குறை நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்த ஆண்டு மின்சார உற்பத்தி 16- சதவீதம் உயர்ந்து 650- மில்லியன் மெஹாவாட் மணி
நேரமாக இருந்தாலும், தொழில்துறை சக்திக்கான தேவை அதிகரித்திருப்பதால் 31 மாகாணங்களில் 24 மாகாணங்கள்
பெருமளவில் இருட்டடில்விடுதலாலும், மின்சார வெட்டுக்களாலும் பாதிக்கப்பட்டுள்ளன, இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒப்பிட்டால்
12 மாகாணங்களில் தான் இருந்தது.
அரசு மின்சார நெறிமுறை குழு இந்த ஆண்டு சீனாவில் மின்சாரபற்றாக்குறை 60- மில்லியன்
மெஹாவாட்-மணிநேரம் என்று ஒப்புக்கொள்கிறது--- சீனாவின் பிரதான எரிபொருள் வளம்--- நிலக்கரி உற்ப்பத்தியாகும்---
அது சென்ற ஆண்டு 25 சதவீதம் உயர்ந்தது, என்றாலும் அனல் மின்சார நிலையங்களின் தேவைகளை ஈடுகட்ட இயலவில்லை,
நிலக்கரி கையிருப்பு கடந்த 20- ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்குறைவாகவே உள்ளது.
பெய்ஜிங்கிலும், இதர பிரதான நகரங்களிலும் கோடைக்காலத்தில் வெப்பம் கடுமையாக
இருப்பதால், கோடிக்கணக்கான மக்களது அன்றாட வாழ்வு சீர்குலைந்துள்ளது. வர்த்தக மாவட்டங்களில், அலங்கார
நியோன் விளக்குகள், அணைக்கப்பட்டு உற்பத்தி அல்லது ஏர்கண்டிஷன் சாதனங்களுக்காக திருப்பிவிடப்பட்டிருக்கிறது.
பெய்ஜிங்கில், ஜூலை 8-முதல் ஆகஸ்ட் 31 வரை 6,400- சிறிய தொழில் துறைகளில்
மின்சார வெட்டு திணிக்கப்பட்டிருப்பதால், அவை மூடப்பட்டுள்ளன. பெய்ஜிங்கிற்கு அருகாமையிலுள்ள இரண்டு மாகாணங்களான
இன்னர், மங்கோலியா, மற்றும் Shanxi-யிலிருந்து
தலைநகருக்கு மின்சாரம் திருப்பிவிடப்பட்டிருக்கின்றது.
பிரதான தொழிற்துறை கேந்திரங்களிலும், மின்சாரப்பற்றாக்குறை கடுமையாக உள்ளது.
Guangzhou-வில்,
அதிகாரிகளின் கட்டாயத்தால் 4,000 கம்பெனிகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மூடப்படும் நிலைக்கு வந்திருக்கின்றன,
இது அதிகபளுவை தாங்கி செல்லும் மின்சார உற்பத்தி-கடத்தி வலை அமைப்பின் பாதிப்பை தடுப்பதற்காகும். இதன்
விளைவாக பல உடைதாயாரிப்பாளர்களும், இதர தொழிலதிபர்களும் வேறு இடங்களுக்கு தங்களது தொழிற்சாலைகளை
மாற்றியுள்ளனர், இது அந்தப் பகுதிகளில் மின்சாரம் கிடைப்பதில் புதிய அழுத்தம் உருவாகியுள்ளதாலேயேயாகும்.
Hangzhou-வில், அதிகளவிற்கு
மின்சாரத்தை பயன்படுத்துவோர் வாரத்திற்கு நான்கு நாட்கள் பகல் நேர உற்பத்தியை நிறுத்திவிடும்படியும் மின்சாரம்
ஒரே நேரத்தில் அதிகம் தேவைப்படும் நேரங்களில் உற்பத்தியை அடியோடு நிறுத்திவிடுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.
விடுதிகள் (Hotels)
மற்றும் அலுவலகங்களில் ஏர்கண்டிஷனர்கள், பயன்படுத்துவரை பாதியாக குறைத்துக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். மாலை நேரத்தில் திரையரங்குகள், ஏர்கன்டிஷர்களை பயன்படுத்துவதற்கு
தடைவிதிக்கப்பட்டிருக்கிறது, நகர தெருவிளக்குகளில் பாதி அணைக்கப்பட்டு விட்டது.
ஜூலை நடுவிலிருந்து ஒரு வாரம் ''விடுமுறை'' எடுத்துக்கொள்ளுமாறு
Shanghai லுள்ள
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றனர். அந்த நகரத்தின் மின்சாரத்தேவை இந்த
ஆண்டு 15- சதவீதம், அதிகரித்துள்ளது.
Shanghai தனது மின்சார உற்பத்தித்
திறனை சென்ற ஆண்டு ஒரு மில்லியன் கிலோ வாட் அளவிற்கு உயர்த்தி 10.4 மில்லியன் கிலோவாட்டாக நிலைநாட்டி
வருகிறது. அப்பகுதியில் மின்சாரத்தேவை 16.7- மில்லியன் கிலோவாட் அளவிற்கு உயரும் என்பதால், பெருகிவரும்
மின்சாரத் தேவையை ஈடுகட்டுவதற்காக பக்கத்து பிராந்தியங்களிலிருந்து 3.6 மில்லியன் கிலோ வாட் மின்சாரத்தை
கோரி பயன்படுத்தி வருகிறது.
நகரத்தின் ஏற்றுமதியில் 60- சதவீதத்தை வழங்கி வருகிற வெளிநாட்டு முதலீட்டு
நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் மின்சாரத்தை வழங்கிவந்தாலும் தொடர்ந்து ''மின்தடைகள்''
ஏற்படுவதால் கணிசமான பொருளாதார இழப்புக்கள் உருவாகி பெரிய நிறுவன நிர்வாகிகள் மிகுந்த கோபத்தோடு
கருத்துகளை வெளியிட்டிருக்கின்றனர்.
சென்ற ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ்
NEC போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் அடிக்கடி மின்சப்ளை
சீர்குலைவு ஏற்பட்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.
Marubeni China என்கிற ஜப்பானின் மிக பிரமாண்டமான வர்த்தக
நிறுவனத்தின் தலைவரான Tadao Manabe
மிகுந்த ஆவேசத்தோடு கூறியுள்ள புகாரில்: ''மின்சாரப்பற்றாக்குறை மிகவும் ஆபத்தானது, எனவே நாங்கள் பெரிதும்
கவலையடைந்திருக்கிறோம். திடீரென்று [உற்பத்தியை]
நிறுத்துவது ஒரு வெடிப்பை ஏற்படுத்திவிடும். சென்ற ஆண்டு வாரத்திற்கு
இரண்டு முதல் மூன்று முறை சில நிமிடங்களுக்கு முன்னெச்சரிக்கை செய்து உற்பத்தியை நிறுத்தினோம். சில நேரங்களில்
எங்களுக்கு எச்சரிக்கை கூட வருவதில்லை'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Shanghai-லுள்ள
Siemens
நிறுவனத்துணைத் தலைவர் பைனான்சியல் டைம்ஸிற்கு பேட்டியளிக்கும்போது ''எங்களது தொழிற் சாலைகளில்
எப்போது [மின்சாரம்
நிறுத்தப்படும்]
என்பது குறித்து முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்படவேண்டும்'' என்று குறிப்பிட்டார். சீனாவிலுள்ள
Bayer நிறுவன தலைமை
நிர்வாகியான Elmer Stachels
சென்ற மாதம் Bloomberg News
இற்கு பேட்டியளிக்கும்போது Shanghai-ல்
கூடுதலாக 3.1- பில்லியன் டாலர்கள் முதலீட்டை உற்பத்தி பகுதியில் சென்ற மாதம் பயன்படுத்திய ஒரு பாகமாகவும்
சொந்த மின்சார ஜெனரேட்டரை உள்ளடக்கி ''ஒரு பாதுகாப்பு வலை'' உருவாக்கினோம் என்று குறிப்பிட்டார்.
சீன அரசாங்கம் மின்சார உற்பத்திச் செலவை 24- பில்லியன் டாலர் அளவிற்கு
இரட்டிப்பாக்கி இருக்கிறது, மேலும் கூடுதலாக நீர் மின்சார நிலையங்களும், நிலக்கரி-எரி மின்சார நிலையங்களும், அணு
மின்சார நிலையங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அப்சர்வர் வார்த்தைகளில் சொல்வதென்றால் கடந்த
இரண்டாண்டுகளில் பிரிட்டன் முழுவதற்கும், வழங்கப்பட்டுவரும் மின்சாரத்தின் அளவிற்கு சமமாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய மின்சார உற்பத்தி செய்கிற நாடு சீனா.
என்றாலும், மின்சார தொழிற்துறைகளில் நெறிமுறைகள் தளர்த்தப்பட்டன, பொருளாதாரம்
திறந்துவிடப்பட்டதால் பெருமளவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. உள்ளூர் நிர்வாகங்கள்
பன்னாட்டு நிறுவனங்களை கவர்ந்து ஈர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு முயற்சிகளை மேற்கொள்வதால் முதலாளித்துவ
சந்தைகளின் குருட்டுத்தனமான சக்திகள் மீது பெய்ஜிங்கிற்கு ஒரு சிறிதளவான கட்டுப்பாட்டினையே விட்டுவைத்துள்ளது.
ஜூலை 5-ல் நியூயார்க் டைம்ஸ் இது சம்மந்தமாக குறிப்பிட்டிருப்பதாவது
''மிகத்தீவிரமாக உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளில் குவிமையப்படுத்தியிருந்ததால், தொழில்துறைமயமாதல்
அளவிற்கதிகமாக சென்று வளர்ச்சி எதுவுமில்லாத நிலை உருவாகி இருப்பது இந்த சித்திரத்தின் ஒரு பகுதியாகும் என்று பல
பொருளாதாரவாதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஒவ்வொரு மாகாணாமும் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுவதால், பணிகள்
இரட்டிப்பாகி மின்சாரம் வீணாகிறது. உண்மையிலேயே பல நகர நிர்வாகங்கள் ஒரே நேரத்தில் தொழிற்துறை
பூங்காக்கள் மற்றும் உற்பத்தி மண்டலங்களை உருவாக்கியுள்ளனர்''
தற்போது சீனா உலக உற்பத்தி மதிப்பில் 7-சதவீதத்தை தருகிறது. வியாபார சரக்குகள்
என்று வரும்போது அவற்றின் மதிப்பு இதைவிட அதிகமாகும். 2007- வாக்கில் எடுத்துக்காட்டாக, சீனாவில் உலக
எலக்ரானிக் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி சீனாவிலிருந்து கிடைக்குமென்று
மதிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு, ஜெனரல் மோட்டார்ஸ்
Volkswagen மற்றும்
ஹோன்டா போன்ற நிறுவனங்கள் மொத்தம் 10- பில்லியன் டாலர்களை புதிதாக முதலீடு செய்யப்போவதாக
அறிவித்தன, இதன் மூலம் சீனா உலகிலேயே 4- வது பெரிய கார் உற்பத்தியாரளராக உருவாகும்.
சீனா ''உலகின் புதிய தொழிற்பட்டறை'' என்று பாராட்டப்பட்டாலும் தொழிற்துறை
உற்பத்தி மிக வேகமாக வளர்ந்து வருவது மற்றும் நகரமயமாதல் ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கிற வகையில் அதன்
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு 400- மில்லியன் டன் நிலக்கரியை கொண்டு
செல்வதற்கு ரயில் துறைகள் திணறுகின்றன, மற்றைய வியாபார சரக்குகளும் இந்த பின்னணியில் உள்ளது. மில்களிலும், எஃகு
ஆலைகளிலும் குறித்த காலத்தில் மூலப்பொருட்கள் வந்து சேராததால் உற்பத்தியை குறைக்கவேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலும், துறை முகங்களிலும், ஏற்றப்படாத சரக்குகள் நிறைந்து தேங்கிக்கிடக்கின்றன.
நான்கு ரயில் இணைப்புக்கள் சேருகின்ற மத்திய சீனாவின்
Zhengzhuo கிழக்கு
ரயில் நிலையத்தை சேர்ந்த ஒரு அதிகாரியான Zhu Yadong
சென்ற மாதம் Reuters
செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும்போது'' இங்கு போதுமான ரயில் தண்டவாள
இணைப்புக்கள் இல்லை. இங்கே பண்டங்களை சேமித்துவைக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனாலும் சில சரக்குகள் இங்கே
தங்கிவிடுகின்றன.... அவற்றை அனுப்புவதற்கு நாங்கள் 24- மணிநேரமும் பணியாற்றி வருகிறோம்'' என்று கூறினார்.
பெப்ரவரியில், உணவு தானியங்கள், வித்துக்கள், உரவகைகள், மற்றும் எந்திரசாதனங்கள்
சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டதால் உணவு விலை உயர்ந்தது. பணவீக்க நிர்பந்தஙங்கள் உருவாயின மில்லியன் கணக்கான
மக்களது வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்தன. இந்த நிலவரம் மேலும் மோசமடைந்ததால் பெய்ஜிங் சென்ற மாதம் வெளியிட்ட
நெறிமுறைகள் டிரக்குகளில் ஏற்றப்படும் பொருட்களுக்கு ஆன எடை குறித்து கட்டுப்பாடுகளை விதித்தன. டிரக்குகள் சட்டப்பூர்வமாக
அனுமதிக்கப்படும் எடைக்கு மேல் இரண்டு முதல் மூன்று மடங்குவரை கூடுதலாக ஏற்றி சென்று கொண்டிருந்தன.
சரக்குகளை ஏற்றிச்செல்ல ஏற்றவாறு சக்திவாய்ந்த முறையில் 2020 வாக்கில் ரயில்
வசதிகளை பெருக்க அரசாங்கம் 242 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது, வரும்
காலத்தில் அது தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இருக்காது.
மின்சார உற்பத்தியை பொறுத்தவரையிலும் அதே நிலவரம்தான் நீடிக்கிறது. உலகின்
மிகப்பெரிய நீர் மின்சார திட்டமான Three Gorges Dam
கட்டுமானப்பணிகள் பூர்த்தியாகும் இறுதிக்கட்டத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன, இதே வேகத்தில் சீனா வளருமானால்
அந்த மின்சாரமும் போதுமானதாக இருக்காது.
சீன பொறியாளர்கள் பள்ளியில் பயிலும்
Zheng Jianchao
ஜூலை 16-ல் அப்சர்வருக்கு பேட்டியளிக்கும் போது அடுத்த இரு தசாப்தங்களில் மின்சாரத்தேவையை
ஈடுகட்டுவதற்கு Three Gorges Dam-கள்
போன்று மேலும் நான்கு அணைகளும், 26-Yanzhou
நிலக்கரி சுரங்கங்களும் ஆறு
Daqing எண்ணெய் கிணறுகளும், எட்டு எரிவாயு குழாய்
இணைப்புக்களும், 20 அணுமின்சார நிலையங்களும், 400- அனல் மின்சார நிலையங்களும் அவற்றை இணைப்பதற்கான
வசதியும் தேவை'' என்று குறிப்பிட்டார்.
இத்தகைய கணிப்புக்கள் சீனா மீது சர்வதேச முதலீடுகள் எந்தளவிற்கு அழுத்தம்
கொடுக்கின்றன என்பதை காட்டுகின்றது. மிக உயர்ந்தளவிற்கு உற்பத்தியையும், இலாபவரம்பையும், நிலைநாட்ட
முடியாது. கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் ஏற்கெனவே சுற்றுப்புறச்சூழல் மற்றும் சமுதாய சீரழிவுகளால்
பாதிக்கப்பட்டுள்ளனர். நெறிகளை தளர்த்தலினாலும், இதர ''சந்தை சீர்திருத்தங்களாலும்,'' உலகில் சுற்றுப்புறச்
சூழல் மாசுபட்ட 20- நகரங்களில் 16 நகரங்கள் சீனாவில் உள்ளன.
ஸ்ராலினிச ஆட்சி இன்னும் தன்னை சம்பிரதாய முறையில் சோசலிஸ்ட் என்றே
கூறிக்கொள்கின்றது. ஆனால் இப்போது நடைமுறையில் சீனா கட்டற்ற அராஐகத்தினால்தான் ஆதிக்கம்
செய்யப்படுகின்றதுடன், முதலாளித்துவ சந்தை சக்திகள் உருவாக்கியுள்ள ஆதித் திரட்சி (primitive
accumulation) நடவடிகைகள்தான் மிஞ்சியுள்ளன. அவை
சமகாலத்திய வெகுஜன சமுதாயத்திற்கு தேவையான சமூக சமத்துவம், அறிவுரீதியான திட்டமிடல் மற்றும் அத்தியாவசிய
சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பவற்றிற்கு முற்றுலும் ஏற்புடையவை அல்ல. |