WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: total union capitulation at DaimlerChrysler
ஜேர்மனி: டைம்லர்-கிறைஸ்லர் தொழிற்சங்கம் பூரண சரணாகதி
By Dietmar Henning and Peter Schwarz
31 July 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
டைம்லர் கிறைஸ்லர் துணை நிறுவனமான மெர்சிடசுடன் நடைபெற்ற மோதலில்
IG Metall தொழிற்சங்கமும், அதன் தொழிற்சாலை குழுவும்
நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு ஒட்டுமொத்தமாக சரணடைந்தது. இந்த மாதத்தின் நடுப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான
ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர், ஜூலை 23ல் நிர்வாகம் ஆண்டிற்கு ஊழியர்கள் செலவின
தொகையை அரை பில்லியன் யூரோக்கள் அளவிற்கு வெட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு தொழிற்சங்கம் உடன்பட்டது.
இதன் விளைவாக, டைம்லர் கிறைஸ்லர் ஊழியர்களுக்கு கணிசமான ஊதியவெட்டு ஏற்படும்,
பலர் மோசமான பணிநிலைமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதற்குப்பதிலாக,
தொழிற்சங்கமும், அதன் தொழிற்சாலைக்குழுவும், வேலைவாய்ப்பை 2012 வரை நீடிக்க நிர்வாகம் பாதுகாப்பு
ஒப்புதல் அளித்ததாக அறிவித்தது. IG Metall
பொறியியல் தொழிற்சங்க தலைவர்
Jürgen Peters அறிவிப்பில், ''மிக அதிகமான அளவில்
இல்லாவிட்டாலும் இது ஒரு வெற்றி'' என்று விவரித்தார்.
இதை ஆழ்ந்து ஆராய்ந்தால், எவ்வாறாயினும், இந்த ''வெற்றி'' பெரும்பாலும்,
கற்பனை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பேரத்தினால் ஜேர்மனியில் 1,60,000 தொழிலாளர்கள் பணிகளை
பாதுகாத்துவிட்டதாக தொழிற்சங்கம் கூறுவது தங்களது பெயரை காப்பாற்றிக் கொள்கின்ற வெட்கக்கேடான சரணாகதியை
மூடிமறைக்கின்ற தன்மை கொண்ட முயற்சியாகும்.
நிர்வாகத்தின் வலைத் தளம் வெறும் ''6,000 வேலைத்தலங்கள் பாதுகாக்கபட்டதாக''
குறிப்பிட்டுள்ளது. நிர்வாகத்தின் மிரட்டலுக்கு தொழிற்சங்கக்குழு அதற்கு இணங்கியபின் இந்த வேலைத்தலங்கள்
நிர்வாகம் Sindelfingen
இல் உள்ள Stuttgart
தொழிற்சாலையில் புதிய C
ரக கார்களை தயாரிக்கும் முடிவோடு முடிச்சுப்போடப்பட்டிருக்கிறது. டைம்லர் கிறைஸ்லர் தனது உற்பத்தியை வடக்கு
ஜேர்மனியிலுள்ள பிரேமன் மற்றும் தென்னாபிரிக்க தொழிற்சாலைகளுக்கு உற்பத்தியை மாற்றப்போவதாக அச்சுறுத்தியது,
அதன் மூலம் Sindelfingen
தொழிற்சாலையில் 6000 வேலையிழப்பு ஏற்பட இருந்தது.
எட்டாண்டுகளுக்கு கட்டாய ஆட்குறைப்பை தவிர்ப்பதாக நிர்வாகம் உறுதிமொழி அளித்துள்ளது
என்று IG Metall
தொழிற்சங்கம் கூறினாலும்---- அது சம்மந்தமான உடன்பாட்டு விவரங்கள்
இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும், இது உண்மையாக இருந்தால் கூட, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு
பதிலாக அல்லது தற்போது குறுகியகால ஒப்பந்த அடிப்படையில் வேலை தரப்பட்டுள்ள ஊழியர்களுக்கு மாற்றாக புதிய
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாதுவிடுவதன் மூலம் நிர்வாகம் வேலை வாய்ப்புக்களை குறைப்பதை தடுக்க
முடியாது. இந்த பேரம் தொழிற்சங்க குழுவுடன் செய்யப்பட்டிருக்கிறது, எதிர்காலத்தில் குறைந்த ஊதிய விகிதங்களில்
ஊழியர்களை நியமிப்பதற்கும் பயிற்சி பெறும் வேலைத் தளங்களை பல்வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும்--
நிர்வாகத்திற்கு இந்த பேரம் வழி செய்திருப்பதால் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
இது தவிர, மெர்சிடஸ் தலைவர்
Jürgen Hubbert
நிறுவனத்தின் பொருளாதார நிலைமையில் எந்தப்பெரிய மாற்றம்
ஏற்படும்போதும் புதிய பேச்சுவார்த்தைகள் இடம் பெறுமென்று அறிவித்திருக்கிறார். ''எந்தளவிற்கு பயனுள்ளது
(பணிகள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம்) என்பதை எவரும் உண்மையிலேயே சொல்ல முடியாது'' என்று
Frankfurter Rundschau
பத்திரிகை அறிவித்துள்ளது.
ஒரு திருப்புமுனை
டைம்லர்-கிறைஸ்லருடன் உருவாக்கப்பட்டுள்ள பேரம் ஜேர்மனியின் வர்க்க உறவுகளில்
ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் சிமென்ஸ் நிறுவனத்தில் உருவான உடன்படிக்கயை
தொடர்ந்து இந்த பேரம் வந்திருக்கிறது, சிமென்ஸ் நிறுவனத்தில் இரண்டு தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்கள்
கூடுதல் ஊதியம் பெறாமல் 40மணி நேரம் வேலை செய்யும் வாரங்களை அதிகரிப்பதற்கு அந்த உடன்படிக்கை
நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கியது. தற்போது டைம்லர் கிறைஸ்லர் ஜேர்மன் தொழிலில் இரண்டாவது பெரிய
நிறுவனமாகும், அதில் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு பாரிய தாக்கத்தை உருவாக்ககூடிய சலுகைகளை வழங்கியுள்ளது.
இதுவரை, இதுபோன்ற உடன்பாடுகள் திவாலாகும் நிலைக்கு செல்லுகின்ற சிறிய
தொழிற்சாலைகளில் மட்டுமே உருவாகும். ஏனெனில் அத்தகைய தொழிற்சாலைகள் தொழிலதிபர் கூட்டமைப்பிலிருந்து
நீக்கிவிடும், அவற்றை தொழிற்சாலை வாரியாக உருவாக்கப்பட்ட சம்பள ஒப்பந்தங்கள் கட்டுப்படுத்தாது.
என்றாலும் டைம்லர் கிறைஸ்லர் அதிக இலாபத்தில் இயங்குகின்ற நிறுவனம். அதன் மெர்சிடஸ் துணை நிறுவனம் சென்ற
ஆண்டு 3.1 பில்லியன் யூரோக்களை இலாபமாக பெற்றது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக அதன் நிர்வாகக்குழு
உறுப்பினர்கள் ஊதிய விகிதங்கள் ஏறத்தாழ மும்மடங்காக உயர்ந்துவிட்டன. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும்
அவர்கள் 3.7மில்லியன் யூரோக்களை ஊதியமாக பெற்றுவருகின்றனர். கடைசியாக உருவாக்கப்பட்டுள்ள பேரத்தின்
படி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தங்கள் வருவாயில் 10சத வீதத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்திருக்கின்றனர்.
ஆனால் சென்ற ஆண்டு அவர்கள் தங்களது ஊதியத்தை 130 சதவீதம் உயர்த்தி கொண்டதை கவனத்தில்
வைத்திக்கொண்டால் அத்தகைய சலுகை முற்றிலும் நகைப்பிற்குரியது!
டைம்லர்-கிறிஸ்லரில் IG
Metall சரணாகதியடைந்ததன் மூலம் பாரிய விளைவுகளை
ஏற்படுத்தும் முன்மாதிரியை உருவாக்கிவிட்டது என்பது தெளிவாகிறது. கடந்த வாரம் எடுத்துக்காட்டப்பட்டதுபோல்,
மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதும் மற்றும் போர்குணம் கொண்ட தொழிலாளர் சக்தியும் உள்ள அதிக இலாபத்தோடு
இயங்கும் தொழிற்சாலையில் அது சரணாகதி அடையுமானால், இது ஜேர்மனி முழுவதிலும் வேலை, சம்பளம், மற்றும்
சமூக நிலைமைகள் போன்றவற்றின்மீது சவால்விடக்கூடிய நிலைமைகளை உருவாக்கியுள்ளது.
இதர நிறுவனங்கள் டைம்லர் கிறிஸ்லர் நிறுவனம் தனது பேரத்தில் பெற்றுள்ள
விட்டுக்கொடுப்புகளை சுட்டிக்காட்டி அதுபோன்ற விட்டுக்கொடுப்புகளை ஜேர்மனி தொழிலாளர்கள் மட்டுமல்ல, பிற
நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் தரவேண்டும் என்று கோருவது தவிர்க்க முடியாதது.
ஜேர்மனியில் நடைபெறுகின்ற வளர்ச்சிகளை பிரான்சில் உள்ள நிறுவனங்களின்
நிர்வாகக்குழுக்கள் நெருக்கமாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.
Frankfurter Rundschau
பத்திரிகையின் பிரெஞ்சு நிருபர் கூறியிருப்பதைப்போல்:- தொழிற்சாலை அதிபர்களும், சந்தை பொருளாதாரத்தில்
'பலவீனமான' சந்தையை வலிறுயுத்தி வருவபர்களும், ரைன் ஆற்றின் மறுபக்கம் நடந்து கொண்டிருப்பதை மிகுந்த
ஆவலோடு பார்த்து வருகின்றன... முதலாவதாக சிமென்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற கவிழ்ப்பு--- இப்போது
டைம்லர் கிறைஸ்லரில் உடனடி செலவுகுறைப்பு நடவடிக்கை, எதிர்கால வேலைவாய்ப்பிற்கு உத்திரவாதம்,
ஊதியமில்லாமல் கூடுதல் வேலை, இத்தகைய அற்புதமான முன்நோக்கு தங்களது சொந்த நாட்டிலும், உருவாக
வேண்டும் என்று விரும்புகிறார்கள்''.
ஜேர்மனியில் உருவாகியுள்ள பேரம் தென்னாபிரிக்காவில் டைம்லர் கிறைஸ்லர்
நிறுவனத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே அவர்கள் தங்களது
ஜேர்மன் சக ஊழியர்களை விட குறைவாக பெற்றுவருகிறார்கள் (மாதம் 850 யூரோக்கள்). தற்போது
தென்னாபிரிக்க தொழிற்சங்கம் NUMSA
கார் தொழிலில் ஊதிய விகிதங்கள் மற்றும் சமுதாய நிலைப்பாடுகள் பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டிருக்கிறது (இந்தப்
பிரச்சனைகளில் விடுமுறைகள் நோய் கால ஊதியம், எய்ட்ஸ் சிகிச்சைக்கான மருந்துகள் கிடைப்பது முதலியவையும்
அடங்கும்.) ஜேர்மன் டைம்லர்-கிறைஸ்லர் நிறுவனத்தைப்போல் தென்னாபிரிக்க தொழிற்சாலைகளும்
வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு போராட்டம்
நடத்துவதற்கு பதிலாக, தென்னாபிரிக்க தொழிலாளர்கள் தற்போது ஜேர்மனியில் நடைபெற்ற சரணாகதியை
எதிர்கொண்டுள்ளனர், அவர்களது சொந்த எதிர்ப்பு பயனற்றது என்று கூறப்பட்டுவருகின்றது.
ஜேர்மன் வர்த்தக மற்றும் அரசியல் வட்டாரங்கள் இந்த பேரத்தின் முன் உதாரண
தன்மையை ஒப்புக்கொண்டிருக்கின்றன. டைம்லர்-கிறைஸ்லர் தலைவர்
Jürgen Schrempp
அறிவித்தார்: ''இந்த பேரம் ஜேர்மன் ஒரு தொழிற்துறை அடித்தளத்தின்
முன்மாதிரி தன்மையை எடுத்துக்காட்டியுள்ளது'' இதே போன்ற ஒரு விமர்சனத்தை ஜேர்மனியின் தொழில் மற்றும்
பொருளாதார அமைச்சர் வொல்ப்காங் கிளமண்ட் (சமூக ஜனநாயக கட்சி-SPD)
அவர் ''ஜேர்மனி ஒரு தொழிற்துறை அடித்தளம் என்பதற்கு இது ஒரு நல்ல நாள்'' என்று குறிப்பிட்டார், அதிபர்
ஹெகார்ட் ஷ்ரோடர் உம் இந்த பேரத்திற்கு மகிழ்ச்சியளித்து ''நல்லெண்ணத்திற்கு ஒரு வெற்றி'' என்றும் கூறியுள்ளார்.
பழமைவாத கிறிஸ்தவ சமூக ஒன்றிய (CSU)
தலைவர் Edmund Stoiber
ஜேர்மனியின் ''எதிர்காலத்திற்கு ஒரு சமிக்கை'' என்று கூறியுள்ளார்.
தனது சரணாகதி மூலம்,
IG Metall கீழ்நோக்கி நடைபோடுகிற ஒரு நடைமுறையை
ஆரம்பித்து வைத்திருக்கிறது, அதன் முடிவு ஊகிக்க முடியாதவை. சமூக ஜனநாயகக் கட்சியும், பசுமைக்
கட்சிக்காரர்களும் தங்களது 2010 செயற்திட்டம் என்று அழைக்கப்படும் நடவடிக்கைகளால் ஜேர்மன் சமூக நலன்புரி
அரசை அழிக்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. தொழிற்சாலைகளில் செயல்பட்டுவருகின்ற சமூக ஜனநாயகக்
கட்சி தொழிற்சங்க அதிகாரிகள் கடந்தகால வெற்றிகளை அழிப்பதில் தீவிரமாக உள்ளனர்.
இந்த சூழ்நிலைகளில், ஜேர்மனியின் பழமைவாத எதிர்கட்சிக்கும், தாராளவாத சுதந்திர
ஜனநாயக கட்சிக்கும் மிச்சமிருப்பதெல்லாம் இந்த கைதட்டல், பாராட்டோடு இணைந்து மேலும் ஒரு அடி மேலே
செல்வதைத்தவிர வேறுவழியில்லை. டைம்லர்-கிறைஸ்லர் பேரம் எழுத்தப்பட்ட மை கூட உலராத நேரத்திற்குள் பழமைவாத
யூனியனின் நாடாளுமன்ற தலைவர் Friedrich Merz
தற்போதுள்ள தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆட்குறைப்பு தடுப்புச்சட்டத்தை இரத்துசெய்ய வேண்டுமென்று
பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருக்கிறார். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக அமைப்புக்களும் தாராளவாத சுதந்திர
ஜனநாயக கட்சியும் மேலும் தொழிலாளர் உரிமைகளை பறிக்கவேண்டுமென்று கோரிவருகின்றன.
தொழிற்துறை ரீதியாக சம்பள ஒப்பந்தம்
தொழிற்துறை ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள சம்பள ஒப்பந்தங்களை எந்தவகையிலும்
பலவீனப்படுத்துவதை தடுப்பதுதான், தங்களது பேரமென்று
IG Metall
தொழிற்சங்கம் தனது சரணாகதியை நியாயப்படுத்தும் ஒரு வாதத்தை கூறிவருகிறது. இது உண்மையிலேயே ஒரு
அமெரிக்க தளபதி வியட்நாம் போருக்கு இடையே கூறிய பிரபல்யமான கருத்தைத்தான் நினைவுபடுத்துவதாக
அமைந்திருக்கிறது. சில நேரங்களில் ஒரு கிராமத்தை காப்பாற்ற அந்த கிராமத்தையே அழிக்கவேண்டியது
அவசியமென்று அந்த தளபதி கூறினார்.
தொழிற்துறைரீதியாக உருவாக்கப்பட்ட ஊதிய உடன்படிக்கைகளின் மூலநோக்கம்
தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் ஒரு தொழிற்சாலையை இன்னொரு தொழிற்சாலை மீது ஏவிவிடும் போக்கை
தவிர்ப்பதற்காகத்தான். ஒரு தொழிற்சாலையில் அனைத்து பிரிவுகளுக்கும் பொதுவான ஊதியம் மற்றும்
பணிப்பாதுகாப்புக்களை உருவாக்கிய இந்த ஒப்பந்தங்கள் குறிப்பாக சிறிய தொழிற்சாலைகளில் உள்ள
தொழிலாளர்கள் அவர்களது முதலாளிகளால் மித மிஞ்சிய நிர்பந்தங்கள் செய்யப்படுவதை தடுப்பதற்காகத்தான்.
இத்தகைய ஏற்பாடு முதலாளிகளுக்கும் அனுகூலமானதுதான், ஏனெனில் இப்படி தொழிற்துறைரீதியாக செய்யப்பட்டுள்ள
ஊதிய ஒப்பந்தங்கள் தனிப்பட்ட தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தங்கள் போன்ற நடவடிக்கைகளை பெரும்பாலும்
தடுக்கவும் செய்தன.
என்றாலும் அத்தகைய உடன்படிக்கைகள் கொண்டுவரப்பட்டதிலிருந்து அந்த
ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுவிட்ட தனிப்பிரிவுகளும் விதிவிலக்கு ஏற்பாடுகளும் எதிரான விளைவுகளையே
ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக பல்வேறு தொழிற்சாலைகளுக்கிடையேயும் மற்றும் தனி ஒரு
நிறுவனத்திற்குள்ளேயும் மிக பரவலாக வேறுபடும் ஊதிய விகிதங்களும், பணிபாதுகாப்பு நடவடிக்கைகளும்
நிலவுகின்றன. இதில் தேசிய அளவிலும், உள்ளூரிலும், பணியாற்றிக் கொண்டுள்ள தொழிற்சங்க தலைவர்கள்
ஈடுபட்டுள்ள மிக முக்கியமான பணி தொழிலாளர் உரிமைகளை பறிப்பதில் அவர்களது தீவிரமான ஈடுபாடுதான்.
இந்த வகையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களுக்கு சலுகைகளை பாதுகாப்பாக பெற்றுக்கொள்வதுடன்,
தொழிலாளர்களை கட்டுப்படுத்துவதுதான்.
இது டைம்லர் கிறைஸ்லரை பொறுத்தவரை மிகதெளிவாக
எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. மெர்சிடஸ் தொழிலாளர் பிரிவுத் தலைவரான
Günther Fleig
கடைசியாக உருவாக்கப்பட்டுள்ள பேரம் ''இந்த ஆண்டு பெப்ரவரியில் உருவாக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தங்களில்
அடங்கியுள்ளன வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.
டைம்லர் கிறைஸ்லரில் படுவேகமாக உடன்பாடு காணப்பட்டதற்கு ஒரு முக்கியமான
காரணமே தொழிலாளர் மேற்கொண்டுள்ள கண்டன நடவடிக்கைகளில் தங்களது கட்டுப்பாடு போய்விடும் என உள்ளூர்
தொழிற்சங்கங்களின் பயம்தான். ஜூலை 15ல்
Stuttgart நகரின் நெடுஞ்சாலையில் பெரும் தடை
ஏற்படுத்தப்பட்டது போன்ற, தொழிற்சங்கத்தின் அதிகாரபூர்வமான தொழிற்சங்க அதிகாரிகளை எதிர்த்து
தொழிற்சங்க வாதிகளால் தொழிலாளர்கள் மீது செல்வாக்கை செலுத்த முடிந்தது.
தற்போது இந்த பேரம் மேலும் தொழிலாளர்கள் தீவிரமாக போராடுவதை
தடுத்திருக்கிறது. ஒரு உள்ளூர் செய்தி பத்திரிகையான
Stuttgarter Zeitung விமர்சனம்
செய்திருப்பதைப்போல் ''இதில் ஏற்பட்டுள்ள நிம்மதி தெளிவானது இறுதியாக தொழிலதிபர்களும், தொழிலாளர்
பிரதிநிதிகளும் டைம்லர்கிறைஸ்லரில் ஒரு உடன்படிக்கைக்கு வந்திருக்கின்றனர். இது நல்லது ஏனெனில்
பேச்சுவார்த்தைகள் முறிந்திருக்குமானால் அதனால் எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டிருக்கும். மேலும் பெரும்
கண்டனப்பேரணிகள் உருவாகி இருக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இருதரப்பினருமே இதைவிடப் பெரிய
நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளுக்கு இலக்காகி இருப்பார்கள்.
என்றாலும் தொழிற்சங்கங்கள், நிறுவனம், அரசியல் வட்டாரங்கள் மற்றும் ஊடகங்கள்
தங்களது நிம்மதியை தெரிவித்தாலும், தொழிலாளர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாகவும், காட்டிக்கொடுக்கப்பட்டு
விட்டதாகவும் கருதுகின்றனர். ஜூன் 24ல்
Stuttgarter Zeitung பல தொழிலாளர்கள் இந்த
சர்ச்சை விவகாரம் முழுவதுமே ''முன்கூட்டியே மோசடியாக தயாரிக்கப்பட்டது'' என்று கருதியதாக எழுதியது.
Stutgart
நகரிலுள்ள Schleyer
மண்டபத்தில் நடைபெற்ற தொழிற்சாலை கூட்டத்தின் ஆத்திரக்காட்சிகளை
அந்த பத்திரிகை வெளியிட்டது. ''அந்த மண்டபத்தில் உள்ளூர் தொழிற்சங்கக் குழு தலைவர்களான
Helmut Lense
மற்றும் Wolyang Nieke
இருவரும் மேடை ஏறினர். Nieke
பேச முயன்றபோது, விசில் சத்தம் காது செவிடுபடும்படி வந்ததால் அவரால் பேசவேமுடியவில்லை''.
தொழிலாளர்களை பிளவுபடுத்துதல்
தொழிற்சங்கம் டைம்லர்கிறைஸ்லரில் பெரும் ஊதிய வெட்டை மட்டுமே திணிக்கவில்லை
அவர்கள் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும், தொழிற்சாலை ஒற்றுமையை சீர்குலைக்கும் சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டனர்
- தற்போது பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், புதிய தொழிலாளர்களுக்கும் இடையில் நேரடியாக உற்பத்தியில்
ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் சேவைப்பணியில் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும்
இடையில் பிளவையும் ஒற்றுமையின்மையையும் உருவாக்கிவிட்டனர். பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளின்படி தொழிற்சங்கங்கள்
நிர்வாகத்திற்கு கீழ்கண்ட சலுகைகளையும் தந்திருக்கின்றனர்:
ஊதியங்கள்: நிர்வாகத்திற்கு ஊதிய விகிதங்களை பொறுத்தவரை மிகப்பெரிய சேமிப்பு
கிடைக்கும். புதிய ஒப்பந்தப்படி உற்பத்திப்பிரிவு தொழிலாளர்களுக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும் இடையில்
ஊதிய விகிதங்கள் ஒரே அளவிற்கு வருகின்றன. 2006ல் ஊதியங்கள் 2.79 சதவீதம் குறைக்கப்படும் முதலாண்டில்
இழப்புக்களை ஈடுகட்டுவதற்கு ஒரே முறை ஊதியம் (One
time Pay- Out) வழங்கப்படும். புதிய குறைந்த ஊதிய
விகிதத்தில் உடனடியாக புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கூடுதல் ஊதியங்கள்:
Sindelfingen தொழிற்சாலையில் தற்போது பகல் 12 மணிக்குமேல்
பணியாற்றும் காலத்திற்கு வழங்கப்பட்டுவரும் 20% மேலதிக ஊதியம் தற்போதுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே
வழங்கப்படும். புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களுக்கு இது கிடையாது.
நீண்ட நேரப்பணி: சேவைப்பணிகளில் (உணவுச்சாலை,
தொழிற்சாலை பாதுகாப்பு, அச்சகம், துப்பரவு) ஆகியபணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் 20,000 பேர் உள்ளூர்
ஊதிய ஒப்பந்தங்களின் படி குறைந்த ஊதியம் பெறுவார்கள், அதே நேரத்தில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும்.
2007 முதல் சராசரி வாரவேலை என்பது 35 மணித்தியாலத்திலிருந்து 39 மணித்தியாலமாக உயர்த்தப்படும்.
நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளில் பணியாற்றி வருகின்ற 20,000 ஊழியர்கள் 40 மணித்தியாலம்
பணியாற்ற வேண்டும். இதற்கு ஈடான ஊதியம் ''விருப்பமான அடித்தளத்தில்'' வழங்க ஒரு பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒழுங்கு இந்த வருட இலையுதிர்காலத்திலேயே நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்டபோதிலும் இதற்கு
தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முறை இது கொண்டுவரப்படவில்லை.
பயிற்சி பெறுவோர்: மூன்றாண்டுகள் பயிற்சிபெற்ற பின்னர் நியமனம் பெற்றவர்கள்
நிறுவனத்தின் தொழிலாளர் நியமன ஏஜென்ஸியில் அதை சரியாக சொல்வதென்றால் நிறுவனம் நடத்தும் துணை ஒப்பந்த
அமைப்பில் சேர்த்துக்கொள்ளபடுவார்கள். அந்த அமைப்பு தொழிலாளர்களை நாட்டின் எந்தப் பகுதிக்கும் மாற்றும்.
2003ல் அக்டோபரில் நிர்வாகத்தால் எழுப்பப்பட்ட இந்தக் கோரிக்கை இப்போது செயற்படுத்தப்பட்டிருக்கிறது.
இடைவேளைகள்: உற்பத்தி தொழிலாளர்களுக்கு தற்போதுள்ள இடைவேளைகள்
நீடிக்கப்படும், ஆனால் அவர்களது உயர்பயிற்சி காலத்திலிருந்து கழிக்கப்படும். இது உயர்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட
காலத்திலிருந்து ஒருநாள் வெட்டப்படும்.
See Also :
டெட்ரோய்ட்டிலிருந்து படிப்பினைகள்
ஜேர்மன் டைம்லர்கிறைஸ்லர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அரசியல் பணிகள்
டைம்லர் கிறைஸ்லர்
வேலை வெட்டிற்கு ஜேர்மன் கார் தொழிலாளர்கள் கண்டனம்
Top of page |