World Socialist Web Site www.wsws.org


Berlusconi government wracked by crisis

நெருக்கடியில் மூழ்கியுள்ள பெர்லுஸ்கோனி அரசாங்கம்

By Marianne Arens and Peter Schwarz
26 July 2004

Back to screen version

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் பதவிக்கு வந்த பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி (திஷீக்ஷீக்ஷ்ணீ மிtணீறீவீணீமிtணீறீஹ் திஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ) தலைமையிலான வலதுசாரி இத்தாலிய அரசாங்கம் சமீபத்திய காலத்தில் ஆழமான நெருக்கடியில் மூழ்கியுள்ளது. இத்தாலி அரசியலை கூர்மையாக கவனிப்பவர்கள் இந்த அரசாங்கம் தனது பதவிக்காலத்தை 2006 வரை நீடிக்குமா? அல்லது இடையில் புதிய தேர்தல் நடாத்தப்படுமா? என்ற வகையில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தனது கூட்டணி கட்சிகளின் இரண்டு பங்குதாரர்களான நவீன-பாசிச தேசிய கூட்டணி மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக UDC, ஆகியவற்றின் நெருக்குதலைத் தொடர்ந்து பெர்லுஸ்கோனி ஜூலை 3ல் தனது நிதியமைச்சர் Giulio Tremonti யை பதவியிலிருந்து நீக்கினார். இரண்டுவாரங்களுக்கு பின்னர், மூன்றாவது கூட்டணிக்கட்சியான வடக்கு கழகத்தின் (Northern League) தலைவர் Umberto Bossi அரசாங்கத்தில் இருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

1994ல் முதலாவது பெர்லுஸ்கோனி அரசாங்கம் கவிழ்வதற்கு கருவியாக இருந்த வடக்கு கழகம் (Northern League) எவ்வாறாயினும், அரசாங்கத்திலிருந்து முற்றிலுமாக விலகிக்கொள்ளப் போவதில்லை என்று அது கூறியது. Bossi மார்ச்சில் கடுமையான மாரடைப்பிற்கு இலக்காகி அதற்கு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார், அவர் ஐரோப்பிய துணை தலைவர் பொறுப்பு ஒன்றை ஏற்றுக்கொள்வதற்காக Strasburg செல்கிறார். ஆயினும், இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிவாக்கில் கூட்டாட்சி சீர்திருத்தத்திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்திலிருந்து முழுமையாக விலகிக்கொள்ளப் போவதாக வடக்கு கழகம் (Northern League) அச்சுறுத்தியுள்ளது. கூட்டாட்சி தொடர்பான ஆலோசனைகளுக்கு தேசிய கூட்டணியும் UDC கணிசமான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது.

உள்நாட்டு மோதல்கள்

வலதுசாரி கூட்டணி ஆட்சிக்கு வந்தது முதல் நிலவிவந்த மோதல்கள் தற்போதைய நெருக்கடியால் அம்பலத்திற்கு வந்திருக்கின்றன. அரசாங்கத்திற்குள் ''கெரில்லாப்போர்'' நடந்து கொண்டிருப்பதாக ஏற்கனவே விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தகராறுக்குரிய பிரதான பிரச்சனைகளில் ஒன்று, வலுவான மத்திய அரசு வேண்டும் என்று சொல்பவர்களுக்கும் (தேசிய முன்னணியும் ஓரளவிற்கு அதைவிட சற்றுகுறைவாக UDC உம்), பிராந்தியங்களுக்கு விரிவான அடிப்படையில் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டுமென்று பிரச்சாரம் செய்பவர்களுக்கும் இடையில்தான் (வடக்கு கழகம் இதை முதலிடத்தில் வலியுறுத்துகிறது) தகராறு நிலவி வருகிறது. இதில் இன்னொரு முக்கியமான மோதல் சம்மந்தப்பட்டிருப்பது மிகப்பெருமளவில் தொழில்மயமாக்கப்பட்டுவிட்ட வடக்கின் பணக்கார வர்த்தக நலன்களுக்கும், ஏழ்மைக்குள்ளாகியுள்ள தெற்கிற்கும் இடையில் நிலவும் மோதல்களாகும்.

வடக்கு கழகம் இத்தாலியின் வடக்குப்பகுதியில் மட்டுமே செல்பட்டுவருகிறது. அங்கு பெர்லுஸ்கோனியின் Forza Italia-விற்கும் செல்வாக்கு கோட்டைகள் உள்ளன. அதே நேரத்தில் தேசிய கூட்டணியும் மற்றும் UDC உம் நாட்டின் தென்பகுதியில் வலுவாக வேரூன்றி உள்ளன. மிகைப்படுத்தப்படும் பிரிவினைவாத கோரிக்கைகளை வடக்கு கழகம் கோரி வருவதை Forza Italia ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் முதலாளிகளுக்கும், செல்வந்தர்களுக்கும், வரிகளை குறைக்க வேண்டும் மற்றும் தென்பகுதியில் மானியங்களை வெட்டவேண்டும் என்கின்ற பிரச்சனைகளில் எல்லாம் உடனடியாக இரண்டு கட்சிகளும் இணைந்து கொள்கின்றன.

இந்தக்கொள்கையின் ஒட்டுமொத்த தனிபட்ட உருவமாகவே பொருளாதார மற்றும் நிதியமைச்சர் Tremonti விளங்குகிறார். செல்வத்தின் மீதும் லாபம் மற்றும் உயர்ந்த வருமானத்தின் மீதும் வரிகளை குறைப்பதில் முன்னோடி என்று பெயர் பெற்றவர். பெர்லுஸ்கோனி அரசாங்கத்தில் முதல் குறைந்த ஆட்சி காலத்தில், ஏற்கெனவே Tremonti கோடிக்கணக்கில் கணிசமான நிவாரணம் அளித்துள்ளார். அரசாங்கத்தின் தலைமையிலுள்ள வர்த்தக சாம்ராஜியத்திற்கு இந்த மில்லியன் கணக்கான தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

National Alliance மற்றும் UDC ஐ பொறுத்தவரை இத்தகைய தடை எதுவுமில்லாத அரசு கருவூல சூரையாடலுடன் மானியங்களை வெட்டுவதை அனுமதிப்பது தென்பகுதியில் தங்களது வாக்காளர்களை விரோதித்து கொள்ளவேண்டியிருக்கும் என்று கருதுகிறது. இரண்டு கட்சிகளுமே, தங்களை கண்டிப்பான வரிவிதிப்பு நிதி நிர்வாக ஒழுங்கிற்கு வாதிடுபவர்கள் என்று சித்தரித்துக்காட்டி வருகின்றன.

வரவுசெலவு பற்றாக்குறை கட்டுமீறி மேல் சென்றிருப்பினும் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத்தடைகளை திணிப்பதாக அச்சுறுதியப்பின்னரும், Tremonti பணக்காரர்களுக்கு மேலும் 7பில்லியன் யூரோக்கள் வரிவெட்டுச் செய்வதை வலியுறுத்தியபோது பிரச்சனைகள் மேல் எழுந்தன. UDC இறுதி எச்சரிகையாக அவரது ராஜினாமாவை வலியுறுத்தியது,Tremonti பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை Gianfranco Fini ஆதரித்ததும் இறுதியாக பெர்லுஸ்கோனி தனது நிதியமைச்சரை பலிகொடுக்க சம்மதித்தார்.

என்றாலும், நெருக்கடி எந்த அர்த்தத்திலும் தீர்ந்து விடவில்லை. Tremontiயுடைய அனைத்து நடவடிக்கைகளையும் தனிப்பட்டரீதியாக பெர்லுஸ்கோனி எடுத்துகொண்டு, இந்த ஆண்டு இறுதிவரை தானே நிதியமைச்சர் மற்றும் பொருளாதார அமைச்சக பொறுப்பையும் ஏற்பதாக அறிவித்தார். இப்படி இணையற்ற அதிகாரங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டிருப்பதை UDC தலைவர் Marco Follini உடனடியாக கண்டனம் தெரிவித்தார். புதிய நிதியமைச்சர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டுமென்றும் பெர்லுஸ்கோனி பிரதமராகவும் மிகப்பெரிய ஊடக சாம்ராஜிய உரிமையாளராக குவிமையப்படுத்திருப்பதாலும், நாட்டிலேயே மிகப்பெரிய தொழிலதிபராகவும் இருப்பதால் ஏற்படுகின்ற நலன்களின் மோதல் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமென்றும் அவர் கோரினார்.

பெர்லுஸ்கோனி, Follini யை அச்சுறுத்துகின்ற வகையில், தனக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனங்களின் ஊடகங்கள் அனைத்தும் அவரை தனிப்பட்டரீதியாக தாக்குதலுக்குட்படுத்தப்படும் வகையில் ஒளிபரப்பப்படும் என அச்சுறுத்தினார். அதற்குப்பின்னர் Follini பகிரங்கமாக ஊடககுழு முன் அரசாங்கத்திற்கெதிரான புகார் கூறினார். இது நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு குழுவாகும். குறைந்த பட்சம் செப்டம்பர் இறுதிவாக்கில் அரசாங்கத்திற்கு சொந்தமான RAI அலைவரிசைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டுமென்று கோரி எதிர்கட்சிகளோடு சேர்ந்து கொண்டு நாடாளுமன்றத்தில் வாக்களித்தார். தற்பொழுது, RAI நிர்வாகி குழுவில் இடம்பெற்றுள்ள நான்கு உறுப்பினர்களும் முற்றிலும் அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்கள். RAI அலைவரிசை விவகாரங்களில் தொடர்ந்து பெர்லுஸ்கோனி தலையிட்டு வருவதை கண்டித்து மே மாதம் RAI தலைவர் Lucia Annunziata பதவி விலகினார்.

இறுதியாக, பெர்லுஸ்கோனி Fini க்கு எதிராக Follini ஐ திருப்பிவிட்டார். Follini க்கு துணைபிரதமர் பதவியை அளிக்க முன்வந்தார், மற்றும் தனது முன்னாள் துணை பிரதமர் Fini க்கு பொருளாதார அமைச்சர் பணியை அளிக்க முன்வந்தார். நிதியமைச்சகம் தனது கைகளிலேயே இருக்குமென்று குறிப்பிட்டார். Fini அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் பொருளாதார மற்றும் நிதியமைச்சகங்கள் தனது பொறுப்பிலேயே இருக்க வேண்டும்மென்று Fini வலியுறுத்தினார்.

ஜூலை 16இல் இறுதியாக ஒர சமரசம் உருவாயிற்று, Turin பொருளாதார மற்றும் சட்டப்பேராசிரியர் Domenico Siniscalco வை தனது புதிய பொருளாதார மற்றும் நிதியமைச்சராக நியமித்தார். தனது கூட்டணி பங்காளிகளுக்கு ஒரு சலுகையாக இந்த முயற்சியை அவர் மேற்கொண்டார். Siniscalco, பெர்லுஸ்கோனியின் Forza Italia உறுப்பினர் அல்ல. ஒரு தொழில்நுட்ப தொழிலதிபர் அரசியலில் செல்வாக்கில்லாதவர் எனவே அவரை மிக எளிதாக பெர்லுஸ்கோனி தன்வயப்படுத்திக்கொள்ள முடியும். கடந்த மூன்றாண்டுகளாக, தனியார்மய நடவடிக்கை நிபுணரான அவர் இத்தாலிய நிதியமைச்சகத்தில் Tremonti இன் சக ஊழியராக நெருக்கமாக பணியாற்றி நாணயக்கொள்கை மற்றும் வங்கிகள் கண்காணிப்புப் பொறுப்பை நிறைவேற்றி வந்தார்.

பெர்லுஸ்கோனி Follini மற்றும் Fini க் கிடையில் உருவான பேரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிற வகையில் Bossi உடனடியாக ராஜிநாமா செய்தார். பிரதமர் சுவிட்சர்லாந்திற்கு சென்று அங்கு சிகிச்சை பெற்றுவரும் Bossi ஐ சந்தித்து, வடக்கு கழகத் தலைவர் ராஜிநாமா செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்--- அதற்கு எந்த பயனும் இல்லை. எனவே அரசாங்கத்திற்கு மற்றொரு சுற்று நெருக்கடி தோன்றுவது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.

ஐரோப்பிய தேர்தலின் விளைவுகள்

கடந்த காலத்தில் பெர்லுஸ்கோனி கூட்டணிக்கட்சிகளுக்குள் நிலவுகின்ற மிக ஆழமான வேறுபாடுகளை அடிக்கடி சமாளிக்க முடிந்தது. அவரது கட்சி இத்தாலி நாடாளுமன்றத்தில் மிகப்பெரும் அளவிலான பெரிய குழு மேலும் அவரது கூட்டணி பங்காளிகள் அவரது ஊடக சாம்ராஜியத்தின் ஆதரவை நம்பியிருந்தனர். இதுதவிர, புதிதாக இயற்றப்பட்ட தேர்தல் சட்டம் சிறிய கட்சிகளுக்கு பாதகமாக சிறிய கட்சிகள் அரசியலில் காணாமல் போய்விடும் என்ற அச்சுறுத்தல் தோன்றியது.

என்றாலும் ஜூனில் ஐரோப்பிய தேர்தல் முடிவுகள் வலதுசாரி கூட்டணியின் வலுவிழந்த அதிகார சமநிலைக்கு கடுமையான சோதனையாக அமைந்தது. பெர்லுஸ்கோனியின் சொந்தக்கட்சியே ஈராக் போர் ஆதரவு காரணமாகவும், அரசாங்க கொள்கைகள் நேரடியாக இத்தாலியின் செல்வந்த தட்டுகளின் கைகளை நிரப்புகின்ற வெட்கக்கேடான போக்கிற்கு எதிராக வளர்ந்து வந்ததன் காரணமாகவும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. அதே நேரத்தில், மிகப்பெரும்பாலான மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் கடினாமாக பாதிக்கப்பட்டும், பொது சேவைகளில் வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, நலன்புரி மற்றும் சமூக நலத்திட்டங்கள் சிதைவினால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

''குறைந்த பட்சம் 25%'' வாக்குகளாவது தனது கட்சிக்கு கிடைக்கும்மென்று பெர்லுஸ்கோனி ஊகித்திருந்தார். இந்த சம்பவத்தில், 21% வாக்குகளைத்தான் அவரது கட்சி பெற்றது. அவரிடம் இணையற்ற நிதி ஊடக மற்றும் அதிகார வள இருப்புகள் இருந்தும் மக்களது கருத்துக்களை கவர்வதற்கு வாய்ப்புக்கள் இருந்தும் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. 1999 ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களோடு ஒப்பிடும்போது Forza Italia 4% இற்கு மேற்பட்ட வாக்குகளை இழந்தது---2001 மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தல்களோடு ஒப்பிடும்போது 8.4-% வாக்குகளை இழந்தது. அவரது கூட்டணி பங்குதாரர்கள் தங்களது ஆதரவை பரந்தளவில் நிலைநாட்டினர் அல்லது ஓரளவிற்கு தங்களது வாக்குகள் எண்ணிக்கையை பெருக்கிக்கொண்டனர். கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தங்களது வாக்குகளை இரட்டிப்பாக்கி 5.9% வாக்குகளை பெற்றனர், தேர்தல் நேரத்தில் பெர்லுஸ்கோனி ''எந்த சிறிய கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டாம். எனக்கே மட்டும் வாக்களியுங்கள்'' என்று கோரிக்கை விடுத்தும் இந்த முடிவு ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில், Bari, Bologna, Florence மற்றும் Syracuse உட்பட பல பெரிய நகரங்களில் Forza Italia தனது கட்டுப்பாட்டை இழந்தது. Bologna வில், முன்னாள் தொழிற்சங்கத்தலைவர் Sergio Cofferati, Forza Italia வேட்பாளரை மேயர் பதவியிலிருந்து முடியறித்தார். பெர்லுஸ்கோனியின் சொந்தககோட்டை என்று கருதப்படும் Milan ïèKTM இடது-மத்திய வேட்பாளர் Forza Italia வேட்பாளரை வாக்குப்பதவில் முறியடித்தார்.

எதிர்க்கட்சி எங்கே?

பெர்லுஸ்கோனியின் அரசாங்கம் அதிகாரத்தில் நீடிக்க முடிகிறது ஏனென்றால் நாட்டில் உண்மையான எதிர்கட்சி எதுவும் இல்லாதது தான். Romano Prodi, தலைமையில் செயற்பட்டுவரும் மத்திய-இடது எதிர்கட்சி என்றழைக்கப்படுவது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் "United in the Olive Tree," (ஐக்கியப்பட்ட ஒலிவ் மரம்) என்ற பெயரில் போட்டியிட்டது. அந்தக்கட்சி ஏதாவது தீர்க்கமான நடவடிக்கையில் இறங்கினால் அது எதிர்பாராத விளைவுகளுடன் கூடிய தொழிலாள வர்க்கத்தை உற்சாகமளிக்க சேவை செய்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.

ஏற்கனவே ஈராக் போருக்கெதிராக மிக பெருமளவில் கண்டனப்பேரணிகள் நடந்தபோது குறிப்பாக ஈராக் ஆக்கிரமிப்பில் இத்தாலிய துருப்புக்கள் பங்கெடுத்துக்கொண்டபோது ஒலிவ் மரம் (Olive Tree) கூட்டணி ஐ.நா தலைமையில் அந்த பிராந்தியத்தில் இத்தாலிய போர்வீரர்கள் பங்கெடுத்துக்கொள்வதை ஆதரிக்கத்தயாராக இருப்பதாக அறிவித்தது. இதை நாடாளுமன்றத்தில் Piero Fassino தெளிவுபடுத்தினார். Fassino (இத்தாலிய முன்னாள் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி) இடது ஜனநாயகக் குழுவின் தலைவர், Olive Tree கூட்டணியில் இதுதான் பெரிய கட்சி. ரோமபுரியில் நடைபெற்ற போர் எதிர்ப்பு கண்டனப்பேரணிகளில் கலந்து கொண்ட மக்கள் Fassino வை அவரது நிலைப்பாடு காரணமாக கேலிசெய்து அவரை மேடையிலிருந்து விரட்டினார்கள்.

இத்தாலிய Confindustria வின் புதிய தலைவரான Graf Luca Cordero di Montezemolo மீது இடதுசாரி ஜனநாயகக் கட்சிக்காரர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இவர் அண்மையில் தொழிலதிபர் சம்மேளனத்தின் தலைவராக பெர்லுஸ்கோனியின் ஆதரவாளர்களுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிற்சங்கங்களோடு நெருக்கமாக இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அவர் கோடிட்டுக்காட்டினார். பெர்லுஸ்கோனி அரசாங்கம் முறைகேடாக நடந்து நாட்டின் நலன்களுக்கு தீமையை விளைவித்துவிட்டது என்று குற்றம் சாட்டினர், நாட்டிற்கு புதிய நம்பிக்கை நட்சத்திரம் Montezemolo என்று சித்தரிக்கப்பட்டு வருகிறார்.

இடது ஜனநாயக பொருளாதார நிபுணர் Pierluigi Bersani அண்மையில் அறிவித்தபடி, புதிய தொழிலதிபர் சம்மேளனத்தலைவர் ''இத்தாலிய முதலாளித்துவத்தின் ஒரு புதிய சகாப்தத்தை'' உருவகப்படுத்துகிறார் என்று குறிப்பிட்டார். ''அவரது தோற்றத்திலும் செயற்திட்டத்திலும் Montezemolo தொழிலதிபர்களின் புதிய பரிணாமத்தை எடுத்துக்காட்டுகிறார். CGIL தொழிற்சங்கத்தின் மீது எந்தவிதமான தாக்குதல் நடத்தப்படுவதையும் சகித்துக்கொள்ள முடியாத வரிவெட்டுக்களையும் காட்டுமிராண்டி நெறிமுறைகளையும் அவர் விரும்பவில்லை'' என்று Bersani கூறினார். CGIL ன் இடதுசாரி பிரதிநிதியான Giorgio Cremaschi ''நாம் சிறப்பான நிலவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா? நமது போராட்டங்களுக்கு ஒரு வெகுமதியை காணப்போகிறோமா? '' என்று வினாவை எழுப்பினார்.

உண்மையில் Montezemolo இடதுசாரிகளுக்கு முற்றிலும் எதிரானவர். Ferrari கார் நிறுவனத்தலைவாரன அவர் இந்த ஆண்டு மே மாதம் Fiat நிறுவனத்தலைவர் பொறுப்பை ஏற்றார். அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்ற முறையில் பெர்லுஸ்கோனி-க்கு போட்டியாக உள்ளவர், Fiat நிறுவன தலைவரான Gianni மற்றும் Umberto Agnelli காலமான பின்னர் Fiat நிறுவனத்தின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியுமென்று பெர்லுஸ்கோனி நம்பினார்.

அத்துடன் Montezemolo இத்தாலிய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய நலன்களை முன்னிறுத்தி செல்படுபவர். அவருக்கு புதுப்பணக்கார Mafia கும்பலுடன் சொந்த முறையில் தொடர்பு இருக்கிறதென்றாலும் புதுப்பணக்கார்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் தங்களது செல்வத்தை பெருக்கிக்கொண்டு ''இறுமாப்புடன்'' அதை வெளிப்படுத்துவதை வெறுப்பவர்.

அண்மையில் தொழிலதிபர் சம்மேளனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இத்தாலிய முதலாளிகள், வர்த்தகர்கள் மற்றும் விற்பனையாளர்களில் பெரும்பாலோர் டாக்டர்கள், வழக்கறிஞர்கள் உட்பட Mafia வின் இறுக்கமான பிடியில் இறுதியாக சிக்கிக்கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறது. இப்படி திட்டமிட்ட கிரிமினல் நடவடிக்கைகளால் இத்தாலிக்கு ஆண்டிற்கு 63 பில்லியன் இழப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. பெர்லுஸ்கோனியிடமிருந்து இத்தாலியின் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவு விலகிச் செல்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

Prodi மற்றும் D'Alema நிர்வாகத்திலுள்ள மத்திய-இடது, அரசாங்கம் தங்களோடு ஒத்துழைக்க தயாராக இருக்கிறவரை தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அண்மையில் அறிவித்துள்ளனர். ஒலிவ் மர முன்னாள் அரசாங்கத்தின் கீழ் இத்தாலிய நலன்புரி அரசின் அழிப்பு நடவடிக்கைகள் தற்போது பெர்லுஸ்கோனி அரசாங்கத்தின் கீழ் நடைப்பதைவிட மிகவும் சுமூகமாக நடைபெற்றது.

முதலாளிகள் சம்மேளனத்தின் உண்மையான கொள்கையை சென்றவாரம் அதன் தலைவர் வெளியிட்டார். CGIL தொழிற்சங்கத்தலைவரை அவர் வரவேற்றார். அவரிடம் வழங்கிய மனு ஒன்றில் வரி உடன்பாடுகள் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய '' வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பற்றிய குறிப்புக்கள்.'' அடங்கியிருந்தன. தொழிலாளர்களோடு எந்தவித தகராறையும் தவிர்க்கும் விதத்தில் வேலைகளுக்காக தொழிற்சங்கத்துடன் மோதல் ஏற்படுவதை தவிர்க்கின்ற வகையிலும், தொழிலதிபர்களது இலாபத்தோடு தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வேலை நிலைப்பாடுகள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று அந்தக்குறிப்பு முன்மொழிவில் குறிப்பிடுகிறது.

எடுத்துக்காட்டாக, கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக Fiat நிறுவன தொழிலாளர்கள் ஆட்குறைப்பு மற்றும் தொழிற்சாலைகள் மூடலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல மாதங்கள் வரை பல்லாயிரக்கணக்கான Fiat தொழிலாளர்கள் ஒரு குறுகிய கால வேலைவாய்ப்பு அமைப்பான "Cassa d'integrazione" இல் இணைக்கப்பட்டனர். அது இறுதியில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் தான் கொண்டுபோய்விடும். இதர பல்லாயிரக் கணக்கான Fiat தொழிலாளர்கள் தங்களது வேலை வாய்ப்புக்களை இழந்துவிட்டனர், எந்த முன்னோக்கும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

ஜூலை மாத தொடக்கத்தில் இத்தாலி நகரங்கள் மீண்டும் ஒரு முறை செயலிழக்கப்படுகின்ற வகையில் பொதுவேலை நிறுத்தம் நடைபெற்றது----பொது சேவை ஊழியர்கள் ஒருமனதாக அந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். குறிப்பாக மிலான், ரோம், மற்றும் நேபில்ஸ் நகரங்களில் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதற்கு முன்னர் நடைபெற்ற ஈராக்போருக்கு எதிரான வெகுஜன கண்டனப் பேரணிகள் தீவிரவாத வடிவம் எடுத்தன, நாசவேலைகளும் புறக்கணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஒலிவ் மர கூட்டணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தாங்கள் பதவிக்கு வருவதற்கு Montezemolo ஆதரவு தருவார் என்று எதிர்பார்க்கின்றனர். அத்தகைய ஒரு மாற்றம் தொழிலாளர் நிலையை பொறுத்தவரை எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

மறுசீரமைப்பு கம்யூனிஸ்டு இயக்கம்

மறுசீரமைப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தை (Rifondazione Comunista) சேர்ந்த செயலாளர் Fausto Bertinotti அதே முன்னோக்கை கொண்டவர்தான். ஐரோப்பிய தேர்தல்களில் அக்கட்சி 6% இற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று நான்காவது வலுவான கட்சியாக வந்திருந்தாலும், ஒலிவ் மர அரசாங்கத்தில் எதிர்காலத்தில் அமைச்சர் பதவி கிடைக்குமென்று Bertinotti எதிர்பார்க்கிறார். எனவேதான் அவர் திட்டமிட்டு மைய-இடது அணியை விமர்சிக்காமல் தவிர்த்து வருகிறார். ஒலிவ் மர தலைவரும் ஐரோப்பிய ஒன்றிய தலைவருமான Prodi பிரதமர் பதவிக்கு முன்னணி வேட்பாளர் என்ற நிலையையும் அவர் விமர்சிக்கவில்லை.

2004 ஜூன் 15 Corriere della Sera விற்கு பேட்டியளித்த Bertinotti ''இடதுசாரி தரப்பினர் இருவரையும் (ஒலிவ்மர மற்றும் மறுசீரமைப்புகம்யூனிஸ்டு இயக்கம்) இணைப்பதற்கு நான் விரும்புகிறேன். எனது அதிகாரத்தை வைத்து Prodi க்கு எதிராக பேச்சுவார்த்த நடத்தமாட்டேன்.... கூட்டான வேலைதிட்டத்தில், ஏற்கனவே சிக்கல் நிறைந்துள்ள எல்லா முயற்சிகளிலும் நான் கவனம் செலுத்துவேன்'' என்று கூறியிருக்கிறார்.

''இப்போது நிலவுகின்ற கூட்டணிகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு மாற்று (இடது ஜனநாயகம், Margherita, சமூக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு) உருவாவதற்கும் ஒரு இடது மாற்றீட்டிற்கும் தான் முயன்றுவருவதாக அவர் குறிப்பிட்டார். அவருடைய சொந்த விருப்பம் ''ஜனநாயக சக்திகள் கூட்டணி ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்'' என்று குறிப்பிட்டார்

அவருடைய துணிகர நவீன பங்கு அனைவருக்கும் தெரிந்தவை. 1993 க்கும் 1998 க்கும் இடைப்பட்ட காலத்தில் Prodi மற்றும் Massimo D'Alema தலைமையிலான மத்திய-இடது அரசாங்கத்தை ஆதரித்தார். அந்த அரசாங்கம் ஓய்வூதிய வெட்டில் ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுத்தது, பெருமளவில் தனியார்மய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டன. அது தற்பொழுது பெர்லுஸ்கோனியால் மேற்கொள்ளப்படுகிறது. அத்தகைய மத்திய-இடது அரசாங்கத்தின் புதிய பதிப்பில் Bertinotti யும், அமைச்சராக சேர்ந்து கொள்வாரானால் அத்தகைய தாக்குதல்கள் தீவிரமாவதற்கு அது உதவும்.

அத்தகைய தாக்குதல்களை பரந்த வெகுஜனமக்கள் முறியடிக்க விரும்பினால், அவர்கள் அனைத்து முன்னாள் ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிரவாத அமைப்புக்கள் ஆகியவற்றின் இருந்து சுயாதீனமாக ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தம்மை ஒழுங்கமைத்து கொள்ளவேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved