கிழக்கு ஐரோப்பா
Lithuanian elections return US Republican as president
லித்துவேனிய தேர்தலில் அமெரிக்க குடியரசுக்கட்சிக்காரர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
By Niall Green
9 July 2004
Back to screen version
பால்டிக் நாடான லித்துவேனியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி
வால்டாஸ் அடம்குஸ் (Valdas
Adamkus) ஜூன் 27 ல் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் போட்டி
வேட்பாளர்
காசமீர் புரூன்ஸ்கினை (Kazimeira Prunskiene)
தோற்கடித்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2003 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 1998
முதல் ஜனாதிபதியாகப் பணியாற்றிவரும் அடம்குஸ்ஸை ரோலன்ட் பக்காஸ் தோற்கடித்தபின், கடந்த ஏப்ரல் மாதம்
ரோலன்ட் பக்காஸ் மீது பதவிநீக்க விசாரணையின் விளைபயனாக இந்த தேர்தலை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டன.
முன்னாள் அமெரிக்கப் பிரஜையான 77 வயதான அடம்குஸ், அமெரிக்கக் குடியரசுக்
கட்சியில் செயலூக்கமான உறுப்பினர் ஆவர். 1997 ல் லித்துவேனியாவில் நிரந்தரமாக குடியேறிய அடம்குஸ், 1990 களில்
துரித சந்தைச் சீர்திருத்தங்களுக்கு நீண்டகாலமாக வாதிட்டு வந்தார். எல்லா லித்துவேனிய அரசியல்வாதிகளையும்
போல், ''பயங்கரவாத்தின் மீதான போரையும்'' ஈராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பையும் அவர்
ஆதரித்து வருகிறார்.
நாட்டின் மிகப்பெரும்பாலான அரசியல் மற்றும் ஊடக செல்வந்த தட்டினரின் ஆதரவு அடம்குஸ்க்கு
இருந்தாலும், இரண்டாவது சுற்றில் 48 சதவீத வாக்குகளை புரூன்ஸ்கினால் திரட்ட முடிந்துள்ளது. கடந்த தசாப்தங்களுக்கு
மேலாக வாழ்க்கைத்தர வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட மக்களது நலன்களை பாதுகாக்கின்ற வகையில் புரூன்ஸ்கின் தனது
பிரச்சாரத்தில் சொல்வீச்சை பயன்படுத்தினார். அவரது பிரச்சாரத்திற்கு, சென்ற ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி
பெற்று ஆதரவு பெற்ற பக்காஸின் ஆதரவும் அவருக்கு கிடைத்தது.
அடம்குஸ் மகத்தான வெற்றி பெற்றுவிடவில்லை. அவரது அமெரிக்க ஆதரவு வெளியுறவுக்
கொள்கையாலும், ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட்டுள்ள ''சுதந்திர சந்தை'' பொருளாதாரக் கொள்ளகையாலும்
லித்வேனிய மக்கள் சந்தோஷமடையவில்லை. மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதியான அடம்குஸ் இந்த
பொருளாதாரக் கொள்கைகளோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கின்றார். மிகப்பெரும்பாலான லித்துவேனியர்கள்,
நாட்டின் அரசியல் தலைவர்களை விரோதபோக்குடன் காண்கின்றனர் அல்லது அதிலிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றனர். முதல்
சுற்றில் அடம்குஸ் 30 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார். அப்போது வாக்களிக்கத் தகுதியானவர்களில் பாதிக்கும்
குறைந்தவர்களே வாக்குப்பதிவில் கலந்துகொண்டனர். புரூன்ஸ்கின் (விவசாயிகள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி) 21
சதவீதத்திற்கு சற்று அதிகமான வாக்குகளையே பெற்றார். சோவியத் ஒன்றியத்திலிருந்து அந்த நாடு பிரிந்த பின்னர் இவர்தான்
முதலாவது பிரதமராக இருந்துள்ளார்.
இரண்டாவது சுற்றில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள எல்லா பெரிய கட்சிகளும்
அடம்குஸ்க்கு பின்னால் அணிதிரண்டு நின்றன. அவர் பெரு வர்த்தக நிறுவனங்களின் ஆதரவு பெற்ற வேட்பாளராக
இருந்தார். பக்காஸ் உருவாக்கிய, ஏழைகள் வாழும் கிராமப்புற பகுதிகளில் அடித்தளத்தைக் கொண்டுள்ள தாராளவாத
ஜனநாயகக் கட்சி மட்டுமே தனது ஆதரவை புரூன்ஸ்கின் பக்கம் திருப்பியது.
பதவி நீக்க விசாரணைக்கு உள்ளாகும் தலைவர் எவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில்
நிற்கக்கூடாது என்று தடைவிதிக்கும் சட்டம் மே மாதம் அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் பக்காஸ்
போட்டியிடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. பக்காஸ் பதிவியிலிருந்த காலத்தில், அவர் மீதும் அவரது அதிகாரப்பூர்வமான
ஆலோசசகர்கள் மீதும் ஊழல் மற்றும் கிரிமினல் போன்ற இழிவான குற்றச்சாட்டுக்களை அரசு பாதுகாப்பு அமைப்பு
தெரிவித்து வந்தது. அப்படியிருந்தும், லித்துவேனிய மக்களில் மிகப்பெரும்பாலோர் பக்காஸின் செயல்பாட்டிற்கும், அவரது
இதர அரசியல் எதிராளிகளின் நடவடிக்கைகளுக்கும் இடையில் அதிக வேறுபாடுகளை காணவில்லை. கருத்துக்கணிப்புக்களின்
படி, பக்காஸ் போட்டியிட்டிருப்பாரானால் அவர் வெற்றி பெற்றிருக்கக்கூடும் என்ற அறிகுறிகள் சுட்டிக்காட்டப்பட்டன.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.
பால்டிக் அரசுகளில் ரஷ்யாவிற்கு எதிரான பேரினவாதம் என்பது உத்தியோகபூர்வ அரசியலில் மிக பொதுவான ஒன்றாக
இருக்கிறது. ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் அடம்குஸ்க்கு ஆதரவுதந்த இதர மூன்று நாடாளுமன்றக் கட்சிகளின்
அலுவலகங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நிலவும் ஊழல்களை சிறப்பு புலனாய்வு சேவை (SIS)
அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர் என்று கூறப்படுகிறது. லித்துவேனிய முன்னாள் ஜனாதிபதியும் வலதுசாரி
பழமைவாத மற்றும் உள்நாட்டு ஒன்றிய (Homeland
Union) தலைவருமான
Vytautas Landsbergis
இந்தத் திடீர் சோதனைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவிற்கு எதிரான உணர்வுகளை கிளறிவிட்டார். பாதுகாப்புப் படைக்குள்
உள்ள ரஷ்ய ஆதரவு சக்திகள் அடம்குஸ்ஸின் பிரச்சாரத்தை வலுவிழக்கச் செய்து, ''ரஷ்ய ஆதரவு'' புரூன்ஸ்கினுக்கு
உதவுவதற்காக இப்படி சோதனைகள் நடத்தி இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், 1990 களில் புரூன்ஸ்கின்
ரஷ்ய புலனாய்வு அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் பரப்பி வந்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்று வாக்குப்பதிவின் போது, ஐரோப்பிய நாடாளுமன்ற
தேர்தல் வாக்குப்பதிவும் லித்வேனியாவில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் அதன்
கூட்டணி சமூக தாராளவாதிகளுக்கு சரிவு ஏற்பட்டது. அண்மையில் ரஷ்ய கோடீஸ்வர நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர்
உஸ்பாஸ்கிஸ் (Viktor Uspaskich)
தலைமையில் அண்மையில் அமைக்கப்பட்ட தொழிற்கட்சி 30 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்றது. சமூக ஜனநாயகக் கட்சியினர்
இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு 14 சதவீத வாக்குகளைப் மட்டுமே பெற்றனர். சமூக தாராளவாதிகளுக்கு ஐரோப்பிய
நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிற அளவிற்கு வாக்குகள் கிடைக்கவில்லை.
உஸ்பாஸ்கிஸ் 2000 முதல்
Seimas (லித்துவேனிய நாடாளுமன்றம்) உறுப்பினராகப் பணியாற்றி
வருகிறார். ஆரம்பத்தில் அவர் சமூக தாராளவாத கட்சியில் இருந்தார். அக்கட்சியில் அவர் மூத்த தலைவராகக் கருதப்பட்டதுடன்,
Seimas
பொருளாதார விவகாரங்கள் குழுத்தலைவராகவும் இருந்தார். 2004 ஜனவரியில் அக்கட்சியிலிருந்து பிரிந்து அவர் புதிய
தொழிற்கட்சியைத் தொடக்கினார். லித்துவேனியாவின் தீவிர ரஷ்ய எதிர்ப்பு அரசியல் வாழ்வில் 1991 முதல் அவர்
ஒருவர்தான் அரசியலில் முக்கிய பங்களிப்புச் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 1990 களில் ரஷ்யாவிலிருந்து லித்துவேனியா
வழியாக இயற்கை எரிவாயு ஏற்றுமதி தொழிலில் மில்லியன்கணக்கான டாலர்களைச் சம்பாதித்த தொழிலதிபரான அவர்,
லித்துவேனியாவின் மிகப்பெரிய இழிவு புகழ்பெற்ற ஊழல் கம்பெனிகளில் ஒன்றான விகோண்டாவிற்குத் தலைமை வகிக்கிறார்.
உஸ்பாஸ்கிஸ்ஸின் விகோண்டா ராஜ்ஜியத்தின் அரசியல் விரிவாக்கத்தில், தற்போது அவரது
தொழிற்கட்சிக்கு கிடைத்த மக்கள் ஆதரவு என்பதானது, உத்தியோகபூர்வ அரசியலில் நிலவும் ஊழல் மீதான அவரது கண்டனமும்,
தொழிலாள வர்க்கத்தினது அவல நிலைகண்டு அவரது அனுதாபமும் ஆகும். அதனால், தற்போது அவருக்கு ஆதரவு
பெருகியுள்ளது. அவர், அரசியல் அரங்கிற்குப் புதியவர், உயர் பதவி எதையும் வகிக்கவில்லை. எனவே, அவரது
எதிரிகளோடு ஒப்பிடும்போது லித்துவேனிய சாதாரண மக்கள் அவரை களங்கம் குறைந்தவர் என்றே கருதுகின்றனர்.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பு குழம்பிய குட்டைபோல் உள்ளது என்பது வேறு
இரண்டு பால்டிக் அரசுகளின் ஐரோப்பிய தேர்தல்களிலும் வெளிப்பட்டன. லாட்வியாவில் ஆளும் கூட்டணிக்கிருந்த ஆதரவு
இரண்டு பிரதான எதிர்க்கட்சிகள் பக்கம் திரும்பியுள்ளது. வலதுசாரி ரஷ்ய எதிர்ப்பு
Fatherland மற்றும்
சுதந்திரக் கட்சிக்கு 2002 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்தது 5.4 சதவீத வாக்குகள் ஆகும். இப்போது 29
சதவீத வாக்குகளை இக்கட்சி பெற்றுள்ளது. புதிய சகாப்த கட்சி (New
Era Party) 20 சதவீத வாக்குகளையும், இதர எதிர்க்கட்சிகள்
கூடுதல் வாக்குகளையும் பெற்றுள்ளன. அரசாங்கத்திலுள்ள கூட்டணிக் கட்சிகளான பசுமைக் கட்சி விவசாய ஒன்றியம்,
லாட்வியா முதல் கட்சி
ஆகியவற்றின் வாக்குகள் முறையே 4.2 மற்றும் 3.2 சதவீதமாக குறைந்துவிட்டன.
ஆதலால், இந்த இரண்டு கட்சிகளுமே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இடம்பெற முடியவில்லை.
எஸ்தோனியாவில், 1991 க்குப்பின்னர் நாட்டின் மிகக்குறைந்த வாக்குகளே ஐரோப்பிய
தேர்தல்களில் பதியப்பெற்றுள்ளது. அது 30 சதவீதத்திற்கும் குறைவானதாகும். ஆளும் கட்சிகள் லாட்வியாவைப் போன்றே
மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளன. பிரதமரின் கட்சியான
Res Publica 7
சதவீதத்திற்கு குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளது. அதன் கூட்டணியிலுள்ள மக்கள் கட்சி 8 சதவீத வாக்குகளையே
பெற்றுள்ளது. இதனுடைய அர்த்தம் என்னவென்றால் 20 எஸ்தோனியர்களில் ஒருவர்தான் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர்
என்பதாகும். |