World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் Murder allegations against Iraq's Allawi: an exchange of letters with the New York Times' public editor ஈராக்கின் அல்லாவிக்கு எதிரான கொலைக் குற்றச் சாட்டுக்கள் : நியூ யோர்க் டைம்ஸ் பொது ஆசிரியருடன் கடிதப் பறிமாற்றம் 3 August 2004 உலக சோசலிச வலைத்தள நிருபர் ஜேம்ஸ் கொனாச்சிக்கும், நியூ யோர்க் டைம்ஸின் பொது ஆசிரியர் டானியல் ஓக்ரென்ட்டிற்கும் இடையே நிகழ்ந்த கடிதப் பரிமாற்றத்தை கீழே பிரசுரித்துள்ளோம். ஈராக்கின் இடைக்கால பிரதம மந்திரி ஐயட் அல்லாவி, நேரடியாக நீதிமன்ற விதிகளுக்குப் புறம்பான முறையில், சந்தேகத்திற்குரிய ஆறு எழுச்சியாளர்களை சுட்டுக் கொன்றதாக கூறும் பொது குற்றச் சாட்டுக்களை பற்றி, டைம்ஸ் ஏடு இன்றளவும் எந்த கட்டுரையோ, ஆய்வையோ கொடுக்க தவறியுள்ளது பற்றி இக்கடிதங்கள் உள்ளன. *** அன்புள்ள திரு ஓக்ரெனட், ஈராக்கிய இடைக்கால பிரதம மந்திரி இயத் அல்லாவி, நேரடியாகவே நீதிமன்ற விதிகளுக்கு புறம்பான முறையில் சந்தேகத்திற்குரிய ஆறு எழுச்சியாளர்களை, பாக்தாதில் உள்ள அல் அமரியா பாதுகாப்பு மையத்தில் சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டி இரண்டு பெரிய ஆஸ்திரேலிய செய்தித்தாள்களான, Age மற்றும் Sydney Morning Herald ஆகியவற்றில், இரண்டு பெயரிடாத சாட்சிகளை மேற்கோளிட்டு விரிவான அறிக்கை ஜூலை 17 அன்று வெளிவந்தது. அல்லாவி சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டுள்ளவர்களில் மூன்று நபர்களின் பெயர்களும் சாட்சியங்களால் வெளியிடப்பட்ட விவரங்களில் அடங்கியுள்ளன. இந்தக் கொலைகளின்போது அமெரிக்க இராணுவ அதிகாரிகளும் உடனிருந்ததாகச் சாட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தகவல் பற்றிய தங்கள் வெளியீடு ஆதாரமுடையவைதான் என்று ஆஸ்திரேலிய செய்தித்தாள்கள் கூறியுள்ளன; ஈராக்கின் மனித உரிமைகள் மந்திரியான பக்தியார் அமின், சாட்சிகளின் கூற்றுக்கள் விசாரணைக்கு உட்படும் என்று நேற்று அறிவித்துள்ளார். ஒரு செய்தி தகுதிக்குரிய தகவலை இன்றளவும் நியூ யோர்க் டைம்ஸ் வெளியிடவில்லை. அல்லாவியை பற்றிய குற்றச் சாட்டுக்கள் தகவலை நியூ யோர்க் டைம்ஸ் வெளியிடும் எண்ணம் கொண்டுள்ளதா? இல்லையென்றால், ஏன் அப்படி? உங்கள் உண்மையுள்ள ஜேம்ஸ் கொனாச்சி ஜூலை 19, 2004. * * * அன்புள்ள திரு. கொனாச்சி, ஆசிரியர்களுடன் நிகழ்ந்தது பற்றி ஆலோசித்தேன், திரு அல்லாவி பற்றிய குற்றச் சாட்டுக்கள் பற்றி டைம்ஸிற்கு நன்கு தெரியும். அவற்றிற்கு ஆதாரம் இல்லாமல் அப்படியே கூறுவது அல்லது அதைக் கண்டனத்திற்குட்படுத்துவது என்ற வகையிலான பத்திரிகை முறையை நான் அடிக்கடி கண்டித்துள்ளேன். நாளிதழின் சிறந்த நிருபர்களில் ஒருவர் இக் குற்றச் சாட்டுகள் பற்றி ஆய்வு செய்துவருவதாக நான் அறிகிறேன், அவை உண்மையாக இருக்கும் என்றால் முழு விவரங்களையும் டைம்ஸ் வெளியிடும். உங்கள் உண்மையுள்ள, டானியல் ஓக்ரேன்ட் பொது ஆசிரியர் பின்குறிப்பு: வேறுவிதமாகக் குறிப்பிடப்படவில்லை எனின், மேற்கூறிய கருத்துக்கள் முற்றிலும் என்னுடையவைதான். ஜூலை 29, 2004. * * * அன்புள்ள திரு ஒக்ரென்ட், உங்களுடைய பதிலின் உட்குறிப்பு, நியூ யோர்க் டைம்ஸ், இயத் அல்லாவிக்கு எதிரான குற்றச் சாட்டுக்களை அவற்றிற்கு ஆதாரம் இல்லாமல் வெளியிடுவது, அச்செயலைக் கண்டிப்பது போன்றவற்றில் ஈடுபட்டால், அது, செய்திப்பத்திரிக்கை தர்மத்திற்கு முரணானது, கண்டிக்கத்தக்கது என்று உள்ளது. இந்த நிலைப்பாடு ஏற்புடைத்ததல்ல. இத்தகவலை வெளியிட்டுள்ள, WSWS உட்பட, ஏனைய பத்திரிகைகள் போலவே, டைம்ஸும் இக்குற்றச்சாட்டுக்கள் பற்றிய உண்மையில் தனக்கு நிலைப்பாடு இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்க முடியும். எத்தனையோ கணக்கிலடங்கா நேரங்களில், பொது நபர்கள், அமைப்புக்கள், அரசாங்கங்கள் பற்றி தனிப்பட்ட முறையில் அவற்றை நிரூபித்து அல்லது மறுதலித்து, கட்டுரைகளை டைம்ஸ் வெளியிட்டுள்ளது. உதாரணமாக, பலமுறையும் அமெரிக்க, ஈராக்கிய அதிகாரிகளின் குற்றச்சாட்டான, ஷியைட் மதகுரு அல் சதர், ஏப்ரல் 2003ல் நிகழ்ந்த ஒரு போட்டி மத குருவின் கொலைக்குப் பொறுப்பு என்பதை டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது. தன்னுடைய தகவல் அளிப்பின் ஒரு பகுதியாக, டைம்ஸ் எப்பொழுதுமே, தனிப்பட்ட முறையில் விசாரிக்காமலும், சரிபார்க்காமலும் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டிருக்கிறது. ஜூலை 27, என்னுடைய கடிதத்திற்கு நீங்கள் பதில் கொடுப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, அமெரிக்க நீதித்துறை, Holy Land Foundation for Relief and Development க்கு கடந்த வாரம், வழங்கிய குற்றக் கண்டனம் பற்றிய Eric Lichtblau கட்டுரையை டைம்ஸ் வெளியிட்டது. இந்த இஸ்லாமிய அறக்கொடை அமைப்பு பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு நிதி கொடுக்கிறது, குறிப்பாக பாலஸ்தீனியத் தற்கொலைக் குண்டுவெடிப்பாளருக்கும் அளிக்கிறது என்ற குற்றச்சாட்டு இக்கண்டனத்தில் இருக்கிறது. ஜூலை 27 அன்று அறக்கட்டளை அமைப்பு விடுத்த குற்றச்சாட்டான FBI, இஸ்ரேலிய உளவுத்துறையின் ஆவணங்களிலுள்ள பிழையான, சிதைந்த மொழிபெயர்ப்புக்களை பயன்படுத்தி, இத்தகைய வழக்கை தங்கள் மீது "புனைந்துரைப்பதாக" தெரிவித்துள்ளது என்பதை கட்டுரை கூறியுள்ளது. அந்தக் கட்டுரை, "பெயரிட விரும்பாத நிபந்தனையில்" ஒரு FBI அதிகாரி, "நம்முடயை விசாரணை பின்னர் அபிவிருத்தி அடைந்த உண்மையில் வந்தவை; இவ்வழக்கில் மொழிபெயர்ப்பு பற்றிய கவலைகள் காட்டப்படுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது" எனக் கூறியதாக மேற்கோள் காட்டியுள்ளது. ஆதாரம் இல்லாமல் வரும் குற்றச் சாட்டுக்களை திறனாய்ந்து மதிப்பீடு செய்யும் பொறுப்பு ஊடகத்திற்கு உள்ளது; தேவையானால் அவற்றைக் கூறியவர்கள் எத்தகைய இழிநோக்கத்தில் அவ்வாறு கூறியுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டலாம். 1999ல் Los Alamos விஞ்ஞானி Wen Wen Ho Lee க்கு எதிராக அரசியல் நோக்கத்தை உந்துதலாகக் கொண்டிருந்த குற்றச்சாட்டுக்கள் வந்தபோதும், ஈராக்கிய பாத்திஸ்ட் ஆட்சி பேரழிவு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்ற கூற்றுக்கள் வந்த போதும், இதுதான் --டைம்ஸ் போலன்றி-- WSWS எடுத்துள்ள நிலைப்பாட்டின் அணுகுமுறையாகும் ஆனால் இப்பொழுதுள்ள பிரச்சினை, அமெரிக்க ஆதரவுடைய அல்லாவி அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கைப் பற்றி அதிக அளவில் வர்ணனைகள் உள்ளபோது, டைம்ஸ் ஆசிரியர்கள் தங்கள் வாசகர்களுக்கு கீழ்க்கண்ட உண்மைகளைப் பற்றிக் கூட தகவல் தேவையில்லை என்று முடிவெடுத்தது ஆகும். ஒரு முக்கிய ஆஸ்திரேலியச் செய்தியாளரான போல் மக்ஜியோவ், அல்லாவி நேரடியாகவே ஒரு பாக்தாத் சிறைச்சாலையில் ஆறு நபர்களைச் சுட்டுக்கொன்றார் என்ற வதந்தியை பற்றி ஆய்வு நடத்தினார். ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத இரு நபர்கள் இக்கொலையைக் கண்டதாகக் கூறியிருந்தனர். இவர்கள் தனித்தனியே பேட்டி காணப்பட்டனர், மக்ஜியோவிற்கு எங்கு கொலைகள் நிகழ்த்தப்பட்டன, இவற்றிற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் யாவை, எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர், சடலங்கள் என்ன ஆயின என்பதைப்பற்றிக் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான குறிப்புக்களை இவர்கள் கொடுத்துள்ளனர். இச்சாட்சிகளுக்கு அவர்களுடைய தகவல்களுக்காக எந்தப் பணமும் கொடுக்கப்படவில்லை; அல்லாவியைக் கண்டனத்திற்குட்படுத்தும் நோக்கத்திற்கு பெரிதும் அப்பால், இருவரும் இந்த நீதிநெறிமுறைகளுக்குப் புறம்பான கொலைத்தண்டனைகளுக்கு பொது ஆதரவுதான் அளித்தனர். Sydney Morning Herald மற்றும், Age இவற்றில் ஜூலை 17 அன்று வெளியிடப்பட்ட கட்டுரைகள், அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இக்கொலைகளின் போது உடனிருந்தனர் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். அஹமத் அப்துல்லா அக்சமே, அமெர் லட்பி மொகம்மது அகமது அல்-குடிசியா, வாலிட் மெஹ்டி அஹ்மெத் அல்-சம்மர்ரை என்று மூன்று கொலை செய்யப்பட்டவர்களின் பெயர்களையும் கட்டுரை கொடுக்கிறது.இவ்வறிக்கைகள் வெளியிடப்பட்ட பின்னர், அல்லாவியும், அவருடைய மனித உரிமை மந்திரி பக்டியார் அமின், ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேர் இன்னும் ஏராளமான ஆஸ்திரேலிய அரசியல் வாதிகளும் இக்குற்றச் சாட்டுக்கள் பற்றி செய்தியாளர் கூட்டங்களில் அல்லது ஊடகப் பேட்டிகளில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றனர். முன்னாள் பிரட்டிஷ் வெளியுறவு மந்திரியான ரொபின் குக் வெளிப்படையாகவே சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு இது பற்றி விசாரணை செய்யுமாறு அழைப்பு விடுத்தார். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் Antonella Notan, இத்தகைய அதிகாரம் அவ்வமைப்பிற்கு இல்லை என்று சிட்னி மார்னிங் ஹெரால்டிற்குத் தெரிவித்து விட்டார். ஐ.நாவின் மனித உரிமைக் குழுவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ஜோஸ் டியஸ் இக்குற்றச்சாட்டுக்கள் பற்றி தனிப்பட்ட விசாரணை செய்யும் வழிவகை அதற்கு இல்லை என்று ஹெரால்டுக்குத் தெரிவித்தாலும், "ஈராக்கிய மனித உரிமைகள் மந்திரி இதுபற்றித் தான் விசாரிக்கிறேன் என கூறியுள்ளதாகவும் ஐ.நா இவ்விசாரணையின் முடிவை எதிர்பார்த்திருப்பதாகவும்" கூறியுள்ளார். "புறக்கணிக்கமுடியாத குற்றச்சாட்டுக்கள்" என்ற தலைப்பில் Sydney Morning Herald ஜூலை 26ம் தேதி ஒரு தலையங்கத்தை வெளியிட்டது பற்றி டைம்ஸ் ஆசிரியர்கள் அறித்திருக்கக் கூடும். அத்தலையங்கம் மக்ஜியெளவின் அறிக்கையை வெளியிட்ட முடிவுக்கு ஆதரவு வாதம் கொடுத்து "இன்னும் பல குறிப்புக்கள் ஆராயப்படவேண்டும்" என்று கூறியதுடன், தீவிரமான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்பதைப் பற்றிய கவலையையும் தெரிவித்துள்ளது. அது கூறுகிறது: "சுதந்திரமான, ஐ.நா அல்லது செஞ்சிலுவை சங்கம் அல்லது சர்வதேச மனித உரிமைகள் குழு போன்ற ஏதேனும் ஒரு சுதந்திரமான அமைப்பு இவ்விசாரணையை மேற்கொள்ளுவது சிறந்ததாகும். ஆனால் அத்தகைய அமைப்புக்கள் ஈராக்கின் பெயரளவு இறைமை கொண்டுள்ள அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் அவ்வாறு விசாரணை செய்யமுடியாது. டாக்டர் அல்லாவியின் நிர்வாகத்தில் இருந்து அத்தகைய அனுமதி வருவதற்கும் வாய்ப்பு இல்லை. டாக்டர் அல்லாவியின் அலுவலகம் ஏற்கனவே இக்குற்றச் சாட்டுக்களை மறுத்துள்ளது. ஈராக்கிய மனித உரிமைகள் மந்திரியான பக்டியார் அமின் விசாரைணை செய்கிறேன் என்று உறுதிமொழி கூறியுள்ளபோதிலும், ஏற்கனவே இவ்விஷயம் பற்றி, சாட்சிகள் கூறுவதை தான் நம்பவில்லை என்பதின் மூலம் முன்முடிவு கொண்டுள்ளார். "அமெரிக்காதான் ஈராக்கிய அரசாங்கத்தையும், டாக்டர் அல்லாவியை அவருடைய பொறுப்பிலும் நிறுவியுள்ளது. சதாம் ஹுசைனுக்கு முதலில் நண்பராகவும், பின்னர் விரோதியாகவும், ஈராக்கிற்குள்ளேயும் அதற்கு வெளியேயும் செயல்பட்டிருந்த, அல்லாவியின் இருண்ட கடந்த காலம் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அது இவ்வாறு செய்துள்ளது. ஒரு முன்னாள் CIA அதிகாரி, டாக்டர் அல்லாவி 'இரத்தக்கறையுடைய கரங்களைக் கொண்டுள்ளார்' என்று வெளிப்படையாகவே விவரித்துள்ளார்; மற்றொரு அதிகாரி அவரை ஒரு 'குண்டர்' என்று கூறியுள்ளார். டாக்டர் அல்லாவிக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள், ஈராக் மீண்டும் சதாம் ஹுசைனின் காட்டுமிராண்டித்தனமான அநீதிகள் சகாப்தத்திற்குச் சென்றுவிடுமோ என்ற அச்சுறுத்தும் தன்மையைக் காட்டுகின்றன. அத்தகைய பிற்போக்குத்தன்மை பற்றிய எந்த நடைமுறையும் எதிர்கொள்ளப்படவேண்டும். டாக்டர் அல்லாவிக்கு எதிரான கூற்றுக்கள் முறையாக விசாரிக்கப்படுகிறதா என்பதை பார்க்கும் பொறுப்பு மட்டுமின்றி, அமெரிக்காவிற்கு அதிகாரமும் உள்ளது. அமெரிக்காவில் நெருங்கிய நட்பு நாடுகள் என்ற முறையில் ஆஸ்திரேலியா அதைக் கோருவதில் முன்னிற்க வேண்டும்." (http//smh.com.au/articles/2004/07/25/1090693832544html?oneclick=true) பெரும்பாலான டைம்ஸ் வாசகர்களும், டைம்ஸ்-ன் பல செய்தியாளர்களும் பணியாளர்களும், மேற்கூறிய விவரங்களில் இருந்து அல்லாவிக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் முக்கியமான செய்தி எனக் கருதத்தக்கவை, "பிரசுரிக்கத் தகுந்த அனைத்து செய்திகளும் பிரசுரிக்கப்படும்" என்று தன்னுடைய தலைப்பில் பெரிதாக அச்சிட்டுள்ள செய்தித்தாளில், வெளியிடப்பட தகுதி உடையது என்று தீர்மானிப்பதில் எந்தத் தயக்கமும் காட்ட மாட்டார்கள். அமெரிக்காவை அச்சுறுத்திய ஒரு காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரத்தை அகற்றும் மற்றும் ஈராக்கிற்கு ஜனநாயகத்தைக் கொண்டு வரும் என்ற கருத்துடன் புஷ் நிர்வாகம் அமெரிக்காவை போரில் ஈடுபடவைத்தது. பல்லாயிரக் கணக்கான ஈராக்கியக் குடிமக்களும், 1000 பேருக்கும் மேலான அமெரிக்க, நட்பு நாடுகளின் வீரர்களும் இப்போரின் விளைவாக மடிந்துள்ளனர். கிட்டத்தட்ட 140,000 அமெரிக்க வீரர்கள் இன்னும் ஈராக்கில் உள்ளனர்; இவர்கள் நாளொன்றுக்கு ஒன்று, இரண்டு என இறந்து வருகின்றனர். பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அறிக்கைகளுக்கு பின்னர், அபு கிரைப் பற்றிய தகவல்கள் வெளியானதற்குப் பின்னரும், அமெரிக்கச் செய்தி ஊடகம், பாக்தாத்தில் அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள புதிய ஈராக்கிய பிரதம மந்திரி, ஹுசைன் போல்தான் தன்னை நடத்திக்கொண்டு வருகிறார் என்பதை கூற கடமைப்பட்டுள்ளது -- உண்மையை நிறுவுவதற்கு முற்றிலும் சுதந்திரமான விசாரணை தேவை என்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவாவது இது மேற்கொள்ளப்படவேண்டும். உங்கள் உண்மையுள்ள, ஜேம்ஸ் கொனாச்சி உலக சோசலிச வலைத் தளம் ஆகஸ்ட் 2, 2004 |