World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: SPD/PDS senate jail Tamil refugee

ஜேர்மனி: சமூக ஜனநாயக/ சோசலிச ஜனநாயக கட்சி செனட் தமிழ் அகதியை சிறைக்கு அனுப்பியது

By Ludwig Niethammer
27 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஆறுவார உண்ணாவிரதத்திற்கு பின்னர் 23 வயது தமிழ் இளைஞரான பரமேஸ்வரன் சிவபாலசுத்திரத்தின் வாழ்வே ஒரு நூலிழையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. கடைசி நிமிடத்தில்தான் சமூக ஜனநாயகக் கட்சியின் பேர்லின் செனட்டர் டாக்டர் Eckhart Korthing (SPD) அந்த தமிழ் அகதியை சிறை முகாமிலிருந்து சாதாரண மருத்துவமனைக்கு மாற்றுவது என்று முடிவு செய்தார். அவரது உள்துறை செயலாளர் Ulrich Freise (SPD) வெளியிட்ட அறிவிப்பில் அந்த தமிழ் அகதி நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் அவரது உடல்நிலை தேறுவதற்கு அனுமதிப்பதற்காகத்தான் நாடு கடத்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக தாமதப்படுத்த பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தான் தஞ்சம் புகுவதற்கு கொடுத்திருந்த கோரிக்கை மனுக்வைகூட ஆராயாமல் தன்னை நாடு கடத்துவதற்கு குடிவரவு அலுவலகம் ஜூலை 29-ல் முடிவு செய்ததைக் கண்டித்து சிவா என்றழைக்கப்படும் பரமேஸ்வரன் சிவபாலசுந்தரம் சிறையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி - பசுமைக் கட்சி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுவருகின்ற ஜேர்மனியில் தஞ்சம் தரும் கொள்கைகளின் நிலைகளையும், அதன் விளைவுகளையும், சிவாவின் துயரம் விரிவாக விளக்குகிறது. அரசியலில் பழிவாங்கப்பட்டவர்களை இந்தக் கொள்கைகள் குற்றவாளிகளாக நடத்துகின்றன.

2001-ஜூனில், இலங்கையில் சிவா அரசாங்கத்தை விமர்சிக்கும் ஒரு மேடை நாடகத்தில் பங்கெடுத்துக்கொண்டார். அதற்குப் பின்னர் இலங்கை போலீசார் அவரையும், அவரது நண்பர்களையும் கைது செய்தனர். அவர் ஒரு பயங்கரவாதி என்றும் தனிநாடு கோருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றும் குற்றம் சாட்டப்பட்டார். சிறையிலிருந்தபோது அவர் தாக்கப்பட்டார், சித்திரவதை செய்யப்பட்டார், ஆனால் 2002 வசந்த காலத்தில் அவர் அங்கிருந்து எப்படியோ தப்பிவிட்டார். அவர் லண்டன் செல்லும் வழியில் ஜேர்மனிக்கும், போலந்திற்குமிடையிலுள்ள எல்லை நகரான Gorlitz -ல் தஞ்சம் புகுந்தார். அங்கு அவரிடம் தஞ்சம் புகுவதற்கான கடிதம் இல்லாததால் அவர் கைது செய்யப்பட்டு தஞ்சம் புகும் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டார். அங்கு தஞ்சம் புகுவதற்கான மனுவை பூர்த்திசெய்து கொடுத்துவிட்டு அதற்குப்பின்னர் தான் சென்றடைய வேண்டிய இங்கிலாந்திற்கு பயணத்தை தொடர்ந்தார்.

மீண்டும் அவர் இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்டார். அங்கும் அவர் தஞ்சம் கோரி மற்றொரு மனுவை எழுதிக்கொடுத்தார். மான்செஸ்டரிலுள்ள, ஒரு நாடு கடத்தும் நிலையத்தில் அவர் காவலில் வைக்கப்பட்டார். அதற்குப் பின்னர் ஜேர்மனியில் அவர் ஏற்கனவே தஞ்சம் புகுவதற்கான மனுகொடுத்திருந்தார் என்ற அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டு 2003 மே இல் பேர்லினுக்கு மாற்றப்பட்டார். அவரது மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால் குடியேற்ற அலுவலகம் அவரை உடனடியாக நாடு கடத்த விரும்புவதாகத் தெரிவிக்க பேர்லின் Tegel விமான நிலையத்தில் ஜேர்மன் குடியேற்ற அதிகாரிகள் அவருக்காக காந்திருந்தனர். அவர் இங்கிலாந்தில் தஞ்சம் கோரியிருந்தார், அதன் பின்னர் அவர் அங்கு சிக்கிக் கொள்ள வேண்டிவந்தது என்பது ஜேர்மன் அதிகாரிகளுக்கு தெளிவாகவே நன்கு தெரிந்திருந்தபோதிலும், மனு நிராகரிப்பு சிவா ஜேர்மனியில் அப்போது இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

சிவாவை அடையாளம் காட்டுகின்ற ஆவணங்கள் இல்லாமல் நாடுகடத்த முடியாது என்பதால் குடியேற்ற அதிகாரிகள் அவரை Berlin-Köpenick நாடுகடத்தல் முகாமில் காவலில் வைத்தனர். அதற்குப்பின்னர் இருந்து அவர் அங்குதான் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார், இலங்கையில் சிறையிலிடப்படும் மற்றும் சித்திரவதை செய்யப்படும் அச்சுறுத்தலை அவர் எதிர்கொள்வதால் அவர் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பாததன் காரணமாக, அவர் மற்ற கைதிகளை விட நீண்ட காலத்திற்கு இழிவுகளைத்தாங்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டார். சிவா தனது நிலையை கீழ்க்கண்டவாறு விளக்கினார்:

''நான் எனது இளைமைக்காலம் முழுவதையும் சிறையிலேயே கழித்துவருகிறேன். இலங்கை என்னை சிறையில் அடைத்தது. இங்கிலாந்து என்னை சிறையில் அடைத்தது. ஜேர்மனி என்னை சிறையில் அடைத்தது. இலங்கையும் என்னை சிறையிலேயே கொன்றுவிடும்.''

ஏப்ரலில் பத்திரிகையாளர் Phillipp Lichterbeck, Kopenick காவல் முகாமிற்கு சென்றார். அது ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு இருந்த காலத்தில் பெண்களுக்கான சிறையாக இருந்தது. அது ஒரு கோட்டை கொத்தளம் போல் பாதுகாப்புகளோடு அமைந்திருக்கிறது. சிவாவும், இதர 210- கைதிகளும் வெளி உலகிலிருந்து "இரும்புக்கதவுகள், குறுக்குவட்ட கம்பிகள், கான்கிரீட் தடுப்புக்கள் மற்றும் முள்வேலிகளால் மட்டுல்லாமல் 300 போலீசார்களாலும் தடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்."

தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி, Lichterbeck இடம் அந்த சிறைமுகாமிற்குள் நிலவுகின்ற, சகித்துக்கொள்ள முடியாத நிலை குறித்து விளக்கினார். ஒரு கைதி சிகரெட் பற்றவைக்க தீ பெட்டி கேட்டால் அவர் ஆங்கிலத்தில் சொல்லும்போது உள்ளேயிருக்கிற அதிகாரிகள் ''அரசாங்க மொழி ஜேர்மன்! '' என்று குரைப்பார்கள்.

கைதிகளுக்கு மொழி கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக, அவர்கள் எப்படி விலங்கு போடுவதென்று பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு அதிகாரிகள் குழு எப்போதுமே கைதிகளோடு சண்டைபோடுவதற்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர். ஒரு அதிகாரி மற்றொரு அதிகாரியின் தவறுகளை மூடிமறைக்கிறார். கைதிகள் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு வாய்ப்பு எதுவுமில்லை.

அந்த அதிகாரி சிவா பற்றியும் பேசினார்: ''குடிவரவு அதிகாரிகள் நீண்ட நாட்களுக்கு முன்னரே அவரை விடுதலை செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இது தடுப்புக்காவல் தான்'' என்றார்.

இந்தக்காவல் முறைகேடானது, என்றே கூறவேண்டும். சிவாவைப்போல் தங்களது கடவுச்சீட்டில் திரும்பிச் செல்கிறோம் என்று கையெழுத்திட மறுப்பவர்கள் அவர்கள் சம்மதிக்கின்ற வரை சிறையில் இருக்க வேண்டியதுதான்.

பேர்லின் உள்துறை இலாகாவை சேர்ந்த அதிகாரியான Henrick Morgenstern இந்த முறைகள் முற்றிலும் பொருத்தமானவை என்று கருதுகிறார். சிவாதான் அவரது நீண்டகால சிறைவாசத்திற்கு பொறுப்பு என்றும் அத்த அம்மையார் கூறினார். அவரது அபத்தமான வாதத்தின் படி அவர் தஞ்சம் கோரி மனுசெய்கின்ற ஒவ்வொரு முறையும் அவர் நாடுகடத்தப்படுவதை அவரே தடுத்துக்கொள்கிறார். மேலும், "சிவபாலசுந்தரம் பயண ஆவணங்களை பெறுவதில் ஒத்துழைக்காததன் காரணமாக நாடுகடத்தப்படுவது தாமதப்படுத்தப்படுகிறது" என்றார்.

Lichterbeck தனது கட்டுரையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,000 பேர் இப்படி நாடு கடத்தப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறார். இதில் பாதிப்பேர் உடனடியாக நாடுகடத்தப்படுகின்றனர். மீதிப்பேர் ஓரளவிற்கு சகித்துக்கொள்ளப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றனர், பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். சென்ற ஆண்டு 28- கைதிகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.

தஞ்சம் புகுவோர் நாடுகடத்தப்படுவதற்கு எதிரான அமைப்பை (Initiative Against Asylum Deportations) சேர்ந்த Christine Schmitz சிவாவிற்காக வாதாடுகிறர். அவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளிக்கும் போது, சிவா அவரது உண்ணாவிரதத்திற்கு பின் இப்போது உடல்நிலை தேறிவருகிறார், ஆனால் அந்த எதிர்ப்பின் விளைவுகளால் இன்னும் அவர் துன்புற்றுக்கொண்டுதான் இருக்கிறார். நாடுகடத்தல் உத்தரவு இன்னமும் இரத்து செய்யப்படவில்லை, ஒவ்வொரு நாளும் அவர் வெளியேற்றப்படலாம் என்ற ஆபத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக அவர் மீண்டும் Kopenick ல் சிறைவைக்கப்படலாம் என்று அஞ்சுகின்றார், என்று தெரிவித்தார்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர்களிடம் ஒப்படைக்கப்படுவதை விட தான் செத்துவிடவே விரும்புவதாக சிவா கூறுகிறார். அவர் பயந்துகொண்டிருக்கிறார் மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்களுடன் காணப்படுகிறார். சிவாவும், அவரது வழக்கறிஞரும் பொதுமன்னிப்புத் தருமாறு கோருகின்ற போதிலும், அவரது வழக்கில் இந்த முறை பேர்லின் உள்துறை தனது நிலையை மாற்றிக்கொள்ளும் என்பதற்கான சமிக்கை எதுவுமில்லை. அவர்கள் ஜேர்மன் தஞ்சம் தரும் அலுவலகம் ஐரோப்பிய விதிமுறைகளுக்கு அடிபணிவதை நிறுத்தி தஞ்சம் கோருவதற்கு உரிமை உள்ள அவரை விசாரிக்கவேண்டும் என்று கோருகின்றனர்.

பேர்லின் அதிகாரிகள் அவருக்கு பொதுமன்னிப்பு தராததுடன், கடந்த 13 மாதங்களுக்கு மேலாக மிகவும் அடிப்படையான விசாரிக்கப்படும் உரிமைகூட சிவாவிற்கு மறுக்கப்பட்டு இருப்பது, ஜேர்மன்-பசுமைக் கட்சி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள மனித நேயமற்ற பிறபோக்குத்தனமான சட்டங்களின் தன்மையையே இது எடுத்துக்காட்டுகிறது.

அதே நேரத்தில் பேர்லின் செனட்டில் இடம்பெற்றுள்ள PDS (ஜனநாயக சோசலிசக் கட்சி) கட்சிப் பிரிவு இத்தகைய கட்டுப்பாடுமிக்க நாடு கடத்தல் கொள்கைகளை பணிந்து ஏற்றுக்கொண்டிருப்பதை இந்த வழக்கு கோடிட்டுக்காட்டுகிறது. PDS அரசியல்வாதி எவரும் செனட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ சிவாவின் நாடு கடத்தலுக்கு எதிராக பேசவில்லை. பேர்லினில், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களைப் போன்றே வெளிநாட்டவர்களையும், அகதிகளையும் PDS புறக்கணிப்பு மனப்பான்மையோடு நடத்துகிறது. PDS சமூக செனட்டர் Heidi Knake-Werner அண்மையில் புதிய அரசாங்க சட்டத்துடன் ஒத்துப்போகும் வகையில், வேலையில்லாதிருப்பவர்கள் பேர்லின் பூங்காக்களில் குப்பை கூளங்களை அப்புறப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். என்று கூறியுள்ளார். தஞ்சம்கோருவோருக்கு எதிராக அரசாங்க சட்டங்களை அமுல்படுத்த PDS தயாராக இருப்பதைப் போல, வேலையில்லாதோருக்கு எதிராக Hartz-IV என்று அழைக்கப்படும் சட்டங்களை திணிக்கவும் தயாராக இருக்கிறது. Knake-Werner குறிப்பிட்டவாறு, "சட்டத்தின் விளைவுகளை நாங்கள் விமர்சனக் கண்ணோட்டத்தின்படி பார்த்தாலும் இந்த சட்டங்களை நாங்களும் கூட அமுல்படுத்துவோம். அது எங்களது வேலை, இருப்பினும் நாங்கள் இது பற்றிய மன ஒவ்வாமையைக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை அது மாற்றவில்லை."

Top of page