World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German auto workers protest job cuts by DaimlerChrysler

டைம்லர் கிறைஸ்லர் வேலை வெட்டிற்கு ஜேர்மன் கார் தொழிலாளர்கள் கண்டனம்

By Dietmar Henning
17 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

டைம்லர் கிறைஸ்லர் கார் நிறுவனத்தில் வேலை வெட்டு மற்றும் வேலை நிலைமை மீதான தாக்குதல் ஆகியவற்றிற்கு கண்டனம் தெரிவித்து ஜூலை 15ல் டைம்லர் கிறைஸ்லரை சேர்ந்த மொத்தம் 60,000 ஊழியர்கள் பல்வேறு வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர். ஜேர்மனியில் ஜேர்மன்-அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தின் பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் குறிப்பிட்டகாலம் வேலைசெய்யாதிருந்தனர்.

தெற்கு ஜேர்மனியிலுள்ள ஸ்ருட்காட் நகரத்தின் இந்நிறுவனத்தின் பிரதான வளாகமான Sindelfingen இல், காலை பணிமுறைக்கு வந்த சுமார் 20,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர், அந்தத் தொழிற்சாலை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய கண்டன கூட்டத்தை நடத்தினர். அருகாமையில்லுள்ள Untertürkheim இல் 10000 இரவு பணிமுறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். ஜேர்மனியில் உள்ள Mannheim, Bremen மற்றும் இதர நகரங்களில் டைம்லர் கிறைஸ்லர் தொழிலாளர்களின் கண்டனப் பேரணிகள் இடம் பெற்றன.

இந்த பாரிய கூட்டங்களிலும் பேரணிகளிலும் தொழிற்சங்க அலுவலர்களும் உள்ளூர் நிர்வாகிகளும் ஆற்றிய உரைகள் வெற்று மற்றும் ஆவேச முழகங்களாகவே அமைந்தன. டைம்லர் கிறைஸ்லரின் மத்திய தொழிற்சங்கக் குழுவின் தலைவரான Erick Klemm தொழிலாளர்களிடம் பேசும்போது ''மில்லியன் கணக்காக திரண்டிருக்கும் நாம் கோடீஸ்வரர்களைவிட வலுவானவர்கள்!" என்றும், நம்மை அச்சுறுத்த முடியாது, நம்மை பிளவுபடுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது'' என்றும் அவர் அறிவித்தார்.

எவ்வாறாயினும், அவர் தொடர்ந்து உரையாற்றும்போது Sindelfingen இல் உள்ள தொழிற்சாலை போட்டியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றும் எனவே நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட தொழிற்சாலையின் தொழிற்சங்க குழு தயாராக உள்ளது என்று வலியுறுத்தினார். நிர்வாகத்திற்கு தொழிற்சங்க குழு 200 மில்லியன் யூரோக்களின் மதிப்பு அளவிற்கு சலுகை அளித்துவிட்டதென்று ஏற்கனவே இடம் பெற்ற கலைந்துரையாடலைப்பற்றி பத்திரிகை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கைத்தொலைபேசிகளை தயாரிக்கும் உலகின் பிரம்மாண்டமான நிறுவனங்களில் ஒன்றான Siemens தொழிலாளர்களை மிரட்டி கதவடைப்பு செய்வதாக அச்சுறுத்தி உடன்படிக்கை செய்துகொண்ட சில வாரங்களுக்கு பின்னர் டைம்லர் கிறைஸ்லர் பெரிய வேலை வெட்டுகள் பிரச்சனையில் இறுதி அச்சுறுத்தலை விடுத்திருக்கிறது. உற்பத்திச் செலவில் 500 மில்லியன் யூரோக்களை ஒவ்வொரு ஆண்டும் சேமிப்பதற்கு தொழிற்சங்கங்கள் சம்மதிக்காவிட்டால், தற்போது Sindelfingen இல் தயாரிக்கப்பட்டுவரும், மெர்சிடஸ் சீ (Mercedes-C) ரக கார்கள் தயாரிக்கும் உற்பத்தியை வடக்கு ஜேர்மனியிலுள்ள Bremenக்கும், தென்னாபிரிக்காவிலுள்ள East London க்கும் மாற்றப்போவதாக டைம்லர் கிறைஸ்லர் அச்சுறுத்தியுள்ளது.

மெர்சிடஸ் கார் உற்பத்திப்பிரிவு தலைமை அதிகாரியான Jürgen Hubbert, இந்த மாத இறுதியில் இத்தகைய சேமிப்புக்கள் திட்டத்திற்கு உடன்பாடு காணப்பட்டாக வேண்டும் மற்றும் 2008-2009ல் இது நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார் Siemen ஐ போல், டைம்லர் கிறைஸ்லரின் துணை நிறுவனமான மெர்சிடஸ் கம்பெனியும் தற்போதுள்ள உற்பத்திச் செலவு மிக அதிகம் என்று கூறிவருகிறது.

Siemens தலைமை நிர்வாகியான, Heinrich von Pierer, ஜேர்மனியிலுள்ள இரண்டு தொழிற்சாலைகள் ஹங்கேரிக்கு மாற்றப்படும் என்று அச்சுறுத்தியுள்ளார். இதன் விளைவாக 2000 வேலையிழப்பு ஏற்படும். IG Metall தொழிற்சங்கத்தோடு இணைந்து Siemens தனது இரண்டு ஜேர்மன் தொழிற்சாலைகளிலும் வாரத்திற்கு வேலை நேரத்தை அதிகரித்துள்ளது. முந்திய 35 மணி நேரமாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த வாரப்பணிகளுக்கு மாறாக 40 மணி நேரமாக திணித்துள்ளது. கூடுதலாக தொழிலாளர்கள் பணியாற்றும் நேரத்திற்கு எந்தவிதமான இழப்பீட்டையும் வழங்காததுடன், அதிகப்படியாக வழங்கும் சம்பளத்தையும் நிறுவனம் வெட்டிவிடும்.

டைம்லர் கிறைஸ்லர் நிர்வாகம் பல வாரங்களாக கார் தொழிற்சாலைகளில் ஊதிய வெட்டுக்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் நடத்திவருகிறது. Siemens நிறுவனத்தோடு பேரம் உருவாக்கப்படுவதற்கு முன்னேர, புதிய வடிவ மெர்சிடஸ் உற்பத்திக்கு ஒரு உடன்பாடு அவசியம் என்றும் அதன் மூலம் 10,000 வேலைகள் பாதுகாக்கப்படும் என கூறியிருந்தது. இது 2011ல் வெளிப்படையாக செயல்படும். Siemensல் உருவாக்கப்பட்ட பேரத்தை தொடர்ந்து, ஜேர்மனி முழுவதிலும் உள்ள இதர நிறுவனங்களும் அவர்களின் தொழிலாளிகளிடமிருந்து ''பந்தயமாக'' தீவிரமான சலுகைகளை கோர ஆரம்பித்துவிட்டன. டைம்லர் கிறைஸ்லர் நிர்வாகம் தனது தொழிலாளர்களிடமிருந்து கோரிய சலுகைகளை உடனடியாக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய C ரக கார்கள் உற்பத்தி மாற்றப்படுவது Sindelfingen தொழிலாளிகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இயக்குனர் Günther Fleig தகவலின்படி, 6,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கள் முக்கியமாக Sindelfingen உள்ள Mercedes தொழிற்சாலையிலும், Mannheim மற்றும் Stuttgart உள்ள Untertürkheim தொழிற்சாலைகளிலும் வேலைகள் இழக்கப்படும் அபாயத்திலுள்ளது. நிறுவனத்தின் தொழிற்சங்க குழு தந்துள்ள தகவலின்படி, பல தொழிலாளர்களுக்கு மாதம் 700 யூரோக்கள் வரை ஊதிய வெட்டு ஏற்படும்.

மெர்சிடஸ் தலைவர் Hubbert ஜேர்மனியின் இதர பிராந்தியங்களோடு ஒப்பிடும்போது தெற்கு ஜேர்மனி மாநிலத்தில் உள்ள Baden-Württemberg இல் மெர்சிடஸ் தயாரிப்புச் செலவு அதிகமாவதாக தெரிவித்தார். Bremen தொழிற்சாலையை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அதனது சகோதர தொழிற்சாலையான Sindelfingen விட ஆண்டிற்கு இரண்டு வாரங்கள் கூடுதலாக உற்பத்தியாவதாக அவர் குறிப்பிட்டார். Bremen இல் 9 நாட்கள்தான் பொதுவிடுமுறையை ஒப்பிடும்பொழுது Sindelfingen தொழிற்சாலையில் 12நாட்கள் விடுமுறை தரப்படுகிறது. விடுமுறை நாட்களில் பணியாற்றும்போது Sindelfingen தொழிற்சாலையில் கூடுதலாக 50 சதவீத ஊதியம் தரவேண்டியிருக்கிறது. வேலை நிலைமை, சிப்ட் வேலை, மேலதிக ஊதியம் போன்ற விடயங்களில் Bremen ஊழியர்கள் Sindelfingen ஊழியர்களோடு ஒப்பிடும் பொழுது பெருமளவிற்கு பாதிப்பிற்கு இலக்காகின்றனர்.

தற்போது அது தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுகின்ற விட்டுக்கொடுப்புகள் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளன. டைம்லர் கிறைஸ்லர் தலைமை நிர்வாகியான, Jürgen Schrempp தமது நிறுவனத்திற்கு சர்வதேச மூலோபாயத்தை கடைபிடித்துவருகிறார். Daimler அமெரிக்காவின் Chrysler கார் நிறுவனத்தோடு இணைவது Daimler சர்வதேசரீதியாக மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஆக வேண்டும் என்பதன் நகர்வின் நோக்கமாகும். தற்போது, ஜேர்மனியை தளமாக கொண்ட, இந்த கம்பெனி உலகில் ஐந்தாவது இடத்தில் கார் நிறுவனத்தில் உள்ளது. சென்ற ஆண்டு இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபம் 5.8 பில்லியன் யூரோக்கள். ஒட்டு மொத்த இலாபத்தில் ஏறத்தாழ 60சதவீதம் (1.3 பில்லியன் யூரோக்கள்) மெர்சிடஸ் கார் குழுவிற்கு சென்றது.

அப்படியிருந்தும், மெர்சிடஸ் கார் குழு தேக்கநிலையிலுள்ளது. மே மாதம், டைம்லர் கிறைஸ்லர் துணை நிறுவனம் சர்தேச அளவில் தனது விற்பனை 9.2 சதவீதம் குறைந்துவிட்டதாக தெரிவித்தது, ஜூன் மாதம் விற்பனை மேலும் வீழ்ச்சியடைந்தது. நிறுவனத்தின் சிறிய காரான Smart விற்பனை அதிகரித்த காரணத்தினால் இந்த வீழ்ச்சி படுமோசமாக ஆவதிலிருந்து தவிர்க்கப்பட்டது.

ஓராண்டிற்கு முன்னர், McKinsey ஆலோசனை நிறுவனம் மூலம் நிறுவனத்தின் ''உற்பத்தித்திறன் வரையறை'' எந்தளவிற்கு உள்ளது என்று மதிப்பீடு செய்யப்பட்டது. மெர்சிடஸ் பூகோள முழுவதிலும் 104,000 ஊழியர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது. இவர்களில் 10,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டாலும் உற்பத்தித்திறனோ அல்லது காரின் தரமோ குறையாது என்று McKinsey நிறுவன ஆய்வு முடிவிற்கு வந்தது.

இதன் நோக்கம் கம்பெனியின் பங்குதாரர்களது கோரிக்கைகளை திருப்திப்படுத்துவதுதான். Chrysler ஐ எடுத்துக்கொண்ட பின்னர் Daimler நிதி வட்டாரங்களில் இலாபம் தருவதில் பலவீனமானது என்று மதிப்பிடப்பட்டது, இணைந்துவிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தது.

வஞ்சகமான முறையில், டைம்லர் கிறைஸ்லர் நிர்வாகத்தலைமை தன்னிச்சையாக 500 மில்லியன் யூரோக்கள் செலவின வெட்டுக்களுக்கு உடன்பாடு ஏற்படாவிட்டால் கூட ஓராண்டிற்கு ஊதிய உயர்வு எதுவுமில்லை என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆத்திரமூட்டலுக்கு அதிகமாகவே சென்றிருப்பதாக பல தொழிலாளர்கள் கருதினர்.

2001ல் டைம்லர் கிறைஸ்லர் நிர்வாகிகள் 22 மில்லியன் யூரோக்களை ஊதியமாக பெற்றனர். அடுத்த ஆண்டு அவர்களது ஊதியம் 50.8 மில்லியன் உயர்ந்து---130சதவீதம் சம்பளம் அதிகரித்தது. சராசரியாக, டைம்லர் கிறைஸ்லர் நிர்வாகிகள் ஆண்டிற்கு 3.7 மில்லியன் யூரோக்களை ஊதியமாக பெற்றுவருகின்றனர், ஜேர்மனியின் 30 மிகப்பெரிய நிறுவனங்களின் அதிகாரிகளது ஊதிய விகித DAX குறியீட்டின் படி டைம்லர் கிறைஸ்லர் நிர்வாகிகள் முதன்மை இடத்தில் உள்ளனர். டைம்லர் கிறைஸ்லர் தலைவர் Jürgen Schrempp ன் ஆண்டு ஊதியம் 10.8 மில்லியன் யூரோக்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

IG Metall தொழிற்சங்கத்தின் பாத்திரம்

IG Metall மற்றும் நிறுவன தொழிற்சங்க குழுவிடமும் இதுபோன்ற தாக்குதல்களுக்கும், நிறுவனத்தின் சர்தேச மூலோபாயத்திற்கும் எதிராக எவ்வித பதில் இல்லாததுடன், இறுதி ஆய்வின்படி, மிகப்பெருமளவில் சலுகைகள் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியும் மிரட்டலுக்குள்ளாகிய தொழிலாளர்களுக்கும் பொறுப்பு நிறுவனத்திற்கு துணைபுரிந்த தொழிற்சங்கங்கத்தையே சாரும்.

டைம்லர் கிறைஸ்லர் மத்திய யூனியன் குழுவினர் ஏற்கனவே விரிவான சலுகைகளை நிர்வாகத்திற்கு தந்திருக்கின்றனர். டைம்லர் கிறைஸ்லர் தொழிலாளர் சார்பில் கடைசி ஊதிய உடன்படிக்கையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட 180மில்லியன் யூரோக்களை விட்டுக்கொடுக்கவும், விருப்பம் தெரிவித்துள்ளது. 2006 முதல் கம்பனி நிர்வாகம் ஊழியர்களுக்கு தருவதற்கு சம்மதித்த 2.79 சதவீத ஊதிய உயர்வையும் தியாகம் செய்ய தொழிற்சங்க குழு முன்வந்திருக்கிறது.

இது தவிர, மத்திய தொழிற்சங்க குழுவின் தலைவரான Erich Klemm ''ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறைகளிலும் உற்பத்தி திட்டத்துறையிலும், மத்திய தொழிற்சாலையின் இதர பிரிவுகளிலும், வாரத்திற்கு 40 மணி நேர பணியை புகுத்த நாங்கள் தயாராகயிருக்கிறோம்'' என்று அறிவித்தார்.

கூடுதலாக பணியாற்றுகின்ற காலத்திற்கு ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. Siemen நிறுவன யூனியன் விட்டுக்கொடுத்திருப்பதால், அங்கு IG Metall கூடுதலாக ஊதியமின்றி 5 மணிநேரம் பணியாற்ற சம்மதித்திருப்பதால், டைம்லர் கிறைஸ்லர் ஊழியர்கள் தங்களது யூனியனின் இழப்பீட்டு கோரிக்கையை மிகுந்த ஐயப்பாட்டோடு நோக்குகின்றனர்.

இத்தகைய கோரிக்கைகள் வருவதற்கு முன்னரே, டைம்லர் கிறைஸ்லர் தொழிற்சங்கக் குழு புது மாடல் மெர்சிடஸ் C-ரக கார்களை தயாரிக்கும்போது 2000 வேலைகள் அழிப்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. புதிய மேம்பட்ட உற்பத்தி முறைகளை கடைபிடிக்கும்போது தொழிலாளர் எண்ணிக்கை குறைவாகவே தேவைப்படும் என்ற நிர்வாகத்தின் வாதத்தை தொழிற்சங்கம் ஆதரிக்கின்றது.

Sindelfingen தொழிற்சாலையில் 31,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர், இவர்களில் முன் கூட்டியே ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பகுதிநேர ஒப்பந்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த 1,500 தொழிலாளர் ஏற்கனவே வேலையிழந்து விட்டனர். கூடுதலாக இந்த ஆண்டு முடிவில் குறுகிய-கால ஒப்பந்த தொழிலாளர்கள் 800 பேர் மேலும் வேலையிழக்கும் நிலைக்கு வந்திருக்கின்றனர்.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது பணிகளையும், வேலை நிலைமைகளையும், பாதுகாத்து நிற்பதற்கும், உறுதியாக நிற்கின்ற சூழ்நிலையில் டைம்லர் கிறைஸ்லர் தொழிற்சங்கங்களும், IG Metall உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள டைம்லர் கிறைஸ்லர் தொழிற்சாலைகளின் வேலைகளை பாதுகாப்பதற்கு கொள்கை அடிப்படையில் பிரச்சாரம் நடத்த மறுத்துவருகின்றன. ஜேர்மன் தொழிற்துறை நடைமுறைகளின்படி, தொழிற்சாலை தொழிற்சங்கத்தில் இருப்பவர்கள் பல ஆண்டுகளாக நிறுவனத்தின் நிர்வாகக்குழுக்களில் பணியாற்றி வருகின்றனர். டைம்லர் கிறைஸ்லர் தொழிற்சாலை தொழிற்சங்கத்தில் குழுத்தலைவரான Klemm, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் துணைத்தலைவராக பணியாற்றிவருகிறார்.

கடந்த காலத்தில், இந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கம்பனியின் கொள்கையை விசுவாசமாக ஆதரித்து வந்தனர். டைம்லர் கிறைஸ்லர் தலைவர் Schrempp இன் முக்கியமான மற்றும் கருத்து வேறுபாடுகள் தரும் முடிவுகளை ஆதரித்து நிற்பதில் பிரதான பங்களிப்பு செய்ததாக பல நேரங்களில் Klemm பெருமையோடு கூறிக்கொண்டார்.

தொழிலாளர்களது வேலையை காப்பதற்கு கொள்கை அடிப்படையில் போராட்டம் நடத்துவதற்கு தொழிற்சங்கங்களுக்கு இயலாமை ஏற்பட்டிருப்பதற்கு காரணம் அவர்கள் நிர்வாகத்தோடு நெருங்கி பணியாற்றியது மட்டுமல்லாமல் அதன்விளைவாக அவர்கள் பெற்ற சலுகைகளும்தான் காரணம். இப்போது உற்பத்தி பூகோளமயமமாக்கப்பட்டுவிட்ட பின்னணியில் பெரு வர்த்தகர்களின் ''சமூக பங்கு'' நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி ஒரு தேசிய அரசு எல்லைக்குள் நடக்கின்ற வரை வேலை நிறுத்தம், மற்றும் சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தொழிலாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சலுகைகளை பெற்றுத்தர முடிந்தது. இப்போது பூகோளமயமாக்கல் முறையினால், மலிவு ஊதியம் நிலவுகின்ற நாடுகளுக்கு நிறுவனங்கள் தங்களது உற்பத்திப்பிரிவுகளை மாற்றுகின்ற மூலோபாயத்தை கடைபிடித்துவருகின்றன. இந்தச் சூழ்நிலையில் நிறுவனங்களிது ஆதிக்கத்தையும், தேசியவாத சாரத்தையும் ஆதரிக்கின்ற தொழிற்சங்கங்கள் பெயருக்காக தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்கிறார்களே தவிர முதலாளிகளது ஆட்குறைப்பு, ஊதியவெட்டு ஆகியவற்றை ஆதரித்து நிற்கிறார்கள்.

தொழிலாளர்- நிர்வாக உறவுகள் எந்தளவிற்கு மாறிவிட்டன, என்பதை எடுத்துக்காட்டும் தலைசிறந்த உதாரணத்தை டைம்லர் கிறைஸ்லர் நிறுவனம் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன, டைம்லர், கிறைஸ்லரை எடுத்துக்கொண்ட பின்னர் உலகம் முழுவதும் உற்பத்தி வசதியை விரிவுபடுத்தியபின்னர் ---தொழிலாளர்கள் உலக ரீதியாக மொத்தமாக 3,60,000 ஆகும்--- இதனால் கடினமான போட்டி போராட்டத்தில் மூழ்கியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிற ஊழியர்கள் ஒருவர்மீது ஒருவர் நேரடியாக மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

தேசிய அரசுகள் ''சமூக கூட்டுழைப்பு'' (Social Partnership) என்ற அடிப்படையில் பொருளாதாரத்தை நெறிமுறைப்படுத்திய சகாப்தம் தற்போது மாற்றத்திற்குள்ளாகிவிட்டது. ஜேர்மனியில் ஊதியமும், தொழிலாளர் சலுகைகளும், குறைக்கப்படுவது அமெரிக்க தென்னாபிரிக்கா, ஆர்ஜெண்டினா பிரேசில், மற்றும் இந்தியா முதலிய நாடுகளிலுள்ள டைம்லர் கிறைஸ்லர் தொழிற்சாலைகளிலும் குறையவே செய்யும்.

இந்த நிலைமையின் கீழ், தேசிய உறவுகளில் உள்ள கட்டமைப்புகளின்கீழ் அரசுகள் நலன்புரித்திட்டங்களாக இருந்தாலும் சரி அல்லது முதலாளிகள் நலன்களின் அடிப்படையில் என்றாலும் சரி அல்லது ஊதியம் வேலைநிலைமைகள் என்றாலும் இந்நடவடிக்கைகளை நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டு செல்ல முடியாது. இப்பொழுது ஜேர்மன் அரசாங்கம் விரைவாக நாட்டின் நலன்புரி அரசை வெட்டுவதையும், வேலையில்லோதோரின் மீது தடுப்பு நடவடிக்கையும் திணிக்கிறது, ஜேர்மன் பெருநிறுவனங்கள் இலாபத்தை உயர்த்துவதற்கு முயற்சிப்பதால் தொழிற்சாலை நிலைமைகளின் தரத்தை குறைக்க முயற்சிக்கிறது.

இந்த சூழ்நிலைமைகளின் சமூக கூட்டுழைப்பு, வர்க்க ஒத்துழைப்பு என்ற பராம்பரிய தொழிற்சங்க கொள்கைகள் ஒரு மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. இது தற்போது தொழிலாளர்களுக்கும் அவர்களின் நலன்களுக்கெதிராக புதுவகை சதி ஆலோசனைகள் வடிவமெடுத்துள்ளன. தொழிலாளர்கள் வேலை நிலைமைகள் ஊதிய வெட்டுகளை மறுப்பின்றி தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டு எந்தவித மாற்றீட்டு வழியை காட்டாமல் தனது தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக கண்டனப் பேரணிகளில் தங்களது உண்மையான முகத்தை மூடிமறைப்பதற்காக தீவிரதன்மைவாய்ந்த குரல் கொடுக்கின்றனர்.

இப்படி திட்டமிட்ட அச்சுறுத்தலை கடுமையாகவும், பயனுள்ள வகையிலும் முறியடிப்பதற்கு டைம்லர் கிறைஸ்லர், Siemens மற்றும் பிற நிறுவனல்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் தேசியவாத நிலைநோக்கை கொண்ட தொழிற்சங்கங்களை முறித்துக்கொண்டு சர்வதேச தொழிலாள வர்க்கத்துடனான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் வேரூன்ற வேண்டும்.

இதில் முக்கியமான பணி கொள்கை அடிப்படையில் அமெரிக்க Chrysler தொழிலாளர்களும் உலகம் முழுவதிலும் உள்ள டைம்லர் கிறைஸ்லர் தொழிலாளர்களும் ஒன்றுபடுவதுதான். எப்படி முதலாளிகள் தங்களது நடவடிக்கைகளை சர்வதேச அளவில் கொண்டு சென்றிருக்கிறார்களோ அதே அடிப்படையில் சர்வதேச அளவில் தொழிலாளர்களும் ஒன்றுபட்டாக வேண்டும்.

பாதுகாப்பு வாதமும் மற்றும் தேசிய வாதமும் தொழிலாளர்களை போட்டியிலும், ஒருவரை ஒருவர் அழிக்கிற வேலையான எந்த பிரிவினர் குறைந்தகூலிக்கு வேலைசெய்ய தயாராக உள்ளனர் என்பதையும் வேலை நிலைமைகள் மோசமடையும் நிலைமையையுமே உருவாக்கும். இதில் இந்த ஊழியர்கள் உலகம் முழுவதிலும் சம ஊதியம், சம நிலைமை என்ற கொள்கையை மெர்சிடஸ் தொழிலாளர்கள் பின் தொடரவேண்டும்.

விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வாழ்கை நிலைமைகளை உயர்த்தவும், சமூக சமத்துவமின்மையை போக்குவதற்கும் பயன்படுத்த பூகோள உற்பத்தி உழைக்கும் மக்களது நலன்களுக்காக மறுசீரமைக்கப்பட வேண்டும். இதற்கு நிதிச்சந்தையை ஆதிக்கம் செலுத்தும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களது இலாப நலன்களுக்கு மேலாக உழைக்கும் மக்களது நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சோசலிச முன்னோக்கு தேவையாக உள்ளது.

 

Top of page