பட்லர் விசாரணை பிளேயர் அரசாங்கத்தை ஈராக் போர் பொய்களிலிருந்து
விடுவித்துள்ளது
By Chris Marsden
15 July 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
எதிர்பார்த்துபோலவே, ஈராக்கிற்கு எதிரான போரில் பிரிட்டன் பங்கெடுத்துக்கொள்வதற்கு
காரணமாக இருந்தது புலனாய்வின் தோல்வியென்றாலும் கூட அதற்கு எவரையும் பொறுப்பாக்க முடியாது என்று
பட்லர் பிரபு விசாரணை அறிக்கை முடிவு கூறியுள்ளது.
நிர்வாகத்தில் அமைப்புரீதியான சிறிய தவறை கூட பட்லர் ''கூட்டு பொறுப்பு''
என மறைமுகமாக குறிப்பிட்டார். அரசாங்கம், ஈராக் பேரழிவுகரமான ஆயுதங்கள் வைத்திருந்தது என பொய்
கூறியுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும், அரசாங்கத்திற்கு தனது மோசடியை மூடி மறைப்பதற்கு மற்றொரு
கவசம் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் பொறுப்பு என்பதால், இதன் விளைவாக இதற்கு ஒருவரையும் பொறுப்பு
என்று கூற முடியாது. கிடைத்த தகவல்களின்படி குறைந்த பட்சம் அரசாங்கம் ''நல்லெண்ணத்தில்'' செயல்பட்டுள்ளது
என்பதால் அதன் மீது குற்றம் சாட்ட முடியாது.
இந்த மாதத்தில் இருகட்சி சார்ந்த அமெரிக்க செனட் புலனாய்வுக்குழு வெளியிட்ட
''ஈராக்கில்-போருக்கு முந்திய புலனாய்வுத் தகவல் பற்றிய மதிப்பீடுகள்'' என்பதற்கும் அதிகமாக புலனாய்வுக்குழு
மற்றும் அரசாங்கத்தினை மேலும் மூடிமறைப்பதாக இவ்விசாரணை அமைந்துள்ளன. அமெரிக்க செனட் புலனாய்வுக்குழு
CIA இன் புலானாய்வு தோல்வியடைந்தது என்று குற்றஞ்சாட்டி
அது ஈராக்கின் பேரழிவுக்கான ஆயுதங்கள் தொடர்பான புஷ் இன்
பொய்ப்பிரச்சாரத்திற்கு காரணமாக இருந்தது என குறிப்பிட்டது. அதற்குமாறாக, பட்லர் அரசாங்கத்தை
மட்டுமல்லாது, M16-யையும் மற்றும் அதற்கு ஆலோசனை
வழங்கிய கூட்டு புலனாய்வுக்குழுவின் (JIC)
நேர்மையையும் பாதுகாக்க முயற்சியெடுத்துள்ளார்.
பத்திரிகை மாநாட்டில், பட்லர் ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்கள் உள்ளனவா
இல்லையா என்பதை நிரூபிப்பது அவரது குழுவின் பணியல்ல என்றும், அது ஈராக் ஆய்வுக்குழுவின் (Iraq
Survey Group) பொறுப்பு என்றும் வலியுறுத்தி ----அந்தக்குழு இன்னமும் அறிக்கை தரவில்லை
எனக் கூறினார்.
அமெரிக்காவிலோ அல்லது வேறு எங்குமோ இயங்கும் எந்தவித பாதுகாப்பு
சேவைகள் பற்றிய எந்த கருத்துரையும் தனது அறிக்கையில் இடம்பெறாது என்று தெரிவித்தார். போர்
தொடர்பான சட்டப்பூர்வமான தன்மை குறித்து சட்டமா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனைக்கும் புலனாய்விற்கும்
சம்மந்தம் இல்லை, மேலும் அது தமது விசாரணைக்கு அப்பாற்பட்டது என்றும் பட்லர் குறிப்பிட்டார்.
''எண்ணெய் வினியோகத்திற்கு பாதுகாப்பு வேண்டும்'' என்ற நோக்கில் ஈராக்கிற்கு
எதிராக பிரிட்டிஷ் அரசாங்கம் போருக்குச்சென்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பட்லர்
அறிவித்தார். இந்த நோக்கத்திற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை'' அதன்பாகமாக அரசாங்கம் தவறாக வழிநடத்தியது
என்பதற்கும் ஆதாரமில்லை'' ''எந்த தனிப்பட்ட நபர்மீதும் பழிபோட முடியாது,'' பிரதமர் டோனி பிளேயரின்
சொந்த ''நல்லெண்ணத்தை'' சர்ச்சைக்குரியதாக்குவதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை'' என்று பட்லர்
கூறினார்.
பாதுகாப்பு சேவைகள் பற்றி, பட்லர் அறிக்கை இரண்டு அத்தியாயங்களோடு
ஆரம்பமாகின்றது. அவை ஈராக்கோடு முற்றிலும் தொடர்பு இல்லாததோடு, லிபியாவிலும் பிற இடங்களிலும்
MI6-ன் ''வெற்றி'' கதைகளை எடுத்துக்காட்டுகின்ற வகையில் அவை வடிவமைந்திருந்தது. தமது
விசாரணைக்குழுவினர், பாதுகாப்புச்சேவைகளின் ''தொழில் முறை'' திறமைகண்டு வியந்து பாராட்டியிருப்பதாக
கூறியுள்ளார். ஏதாவது தோல்விகள் ஏற்பட்டிருக்குமானால் அதற்கு காரணம் ''ஈராக் மிகவும் கடினமான
இலக்கு'' என்பதாலாகும். அதிருப்தி சக்திகளை தகவலுக்காக அதிகம் நம்ப முடியாது. இதில் உள்ள முக்கியமான
பிரச்சனையே ''தகவல் சங்கலி மிக நீண்டவை, ஒரு குறைவான வளங்கள் இருந்தன, ''பழக்கமில்லாத
ஏஜென்டுகளை பயன்படுத்தியது'' மற்றும் வரவுசெலவு திட்ட வெட்டுகளால் சாட்சியங்களை மதிப்பீடு செய்வதற்கு
''அனுபவமிக்க அதிகாரிகள் பற்றாக்குறை'' இருந்தது என குறிப்பிடுகின்றது.
ஈராக் போர் நடைபெற்றபோது கூட்டு புலனாய்வுக்குழு தலைவராக பணியாற்றிய
ஜோன் ஸ்கார்லட் MI6 இன் புதிய தலைவராக
பொறுப்பேற்க வேண்டாம் என்பதை எதிர்க்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகின்ற
அளவிற்கு பட்லர் சென்றிருக்கிறார்.
2002 செப்டம்பர் பாதுகாப்பு ஆவணத்தில் பெருமளவில் கருத்து வேறுபாடுகளை
கிளப்பிய ஓர் அம்சம் ----45 நிமிடங்களுக்குள் பிடிட்டிஷ் இலக்குகளை தாக்குவதற்கு ஈராக்கிடம் பேரழிவுகரமான
ஆயுதங்கள் உள்ளன என்பதுதான்---- இதுபற்றி குறிப்பிட்ட பட்லர், இது ''சிறப்பியல்பற்ற மிகவும் தரம் குறைந்த
மதிப்பீடு'', இது ஒரு ''விதிவிலக்கு'' என்று கூறியிருக்கிறார்.
இதைத்தான் அரசாங்கமும், ஊடகங்களும் ஈராக் மீது போர் தொடுப்பதற்கான
மத்திய பிரச்சார ஆயுதமாக வைத்திருந்தன. ஆனால் பட்லர் இந்தக்கூற்றில் உள்ளார்ந்த சிறப்பு எதுவும்
இருப்பதாக நினைத்து கருத்துக்கூறவில்லை என்றும், ஊடகங்கள் இது ஒரு ''புதுமையானவை'' என்று கோரி
அந்தக்கூற்றை கையில் எடுத்திருந்தன, மற்றும் இறுதியாக இது ஒரு இழிவானதாக கருதப்பட்டது என்று
குறிப்பிட்டார். அவரின் கருத்தின்படி செப்டம்பர் ஆவணத்தில் ஒரு பெரிய தவறு அது தரப்பட்டவிதமாகும். அது
அடித்தளமாக கொண்டிருந்த மட்டுப்படுத்தப்பட்ட புலனாய்வினால் அரசாங்கத்தினால் ''போதுமானளவிற்கு
தெளிவுபடுத்தவில்லை'' என்று குறிப்பிட்டார்.
அதே ஆவணத்தில் ஈராக் நைஜரில் இருந்து அணு பொருட்களை பெற முயன்றது என்று
கூறப்பட்டிருக்கின்றது, இந்தக்கூற்று ''வலுவான ஆதாரம்'' கொண்டது என்று பட்லர் வலியுறுத்தி கூறியுள்ளார்.
இருப்பினும் இந்தக்கூற்றை அமெரிக்க செனட் விசாரணை மறுத்திருக்கிறது, இது போலி ஆவண அடிப்படையில்
அமைந்தது என்று இழிவுடன் பரவலாக தகவல்கள் வந்திருக்கின்றன. ஆனால் பட்லர் வேறு ஆதாரம் இருப்பதாக
கூறியுள்ளபோதிலும் அது என்னவென்று தெரிவிக்கவில்லை.
எதிர்காலத்தில் இணைப்பு புலனாய்வு குழுவை (JIC)
இதுபோன்ற அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பொது பிரச்சனைகளில் பொறுப்பு ஏற்குமாறு
கேட்டுக்கொள்ளமாட்டார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்
பட்லர் அறிக்கை வெளிவந்ததும், பிளேயர் நாடாளுமனற்த்தில் மிகுந்த ஆவேச
பாணியுடன் தான் நிரூபித்து விட்டதாக வலியுறுத்தினார். தவறுகள் நடந்துவிட்டன என்று அவர்
ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் ''எவரும் பொய்சொல்லவில்லை என்றும், யாரும் புலனாய்வை உருவாக்கவில்லை
என்றும் பிளேயர் பாராளுமன்ற அங்கத்தவர்களிடம் கூறினார். புலனாய்வு சேவைகளின் ஆலோசனைகளுக்கு எதிராக
எதையும் ஆவணத்தில் சேர்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்களில் எந்த நேரத்திலும் பிளேயர் தனது உரையை தயாரித்திருக்க
முடியும், ஏனென்றால் பட்லரும் அவரது சக குழு உறுப்பினர்களும் தனக்கு சாதகமான அறிக்கை தருவார்கள் என்று
அவர் நம்பியிருக்க முடியும்.
பட்லர் விசாரணை பெப்ரவரியில் ஏற்பாடு செய்யப்பட்டது, ஜூலை 2003ல் முன்னணி
அணுவாயுத சோதனையாளர் டாக்டர் டேவிட் கெல்லி மரணம் தொடர்பாக ஹட்டன் பிரபு விசாரணை முடிந்தவுடன்
பட்லர் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஈராக் யுத்தத்திற்கான பொய் அம்பலமாகிய பின்னரும் --ஈராக்கில் பேரழிவிற்கான
ஆயுத திட்டத்திற்கு எந்தவிதமான சான்றுகள் கண்டுபிடிக்காமல் தோல்வியடைந்த பின்னர் ஹட்டன் விசாரணை ஈராக்
போர் தொடர்பான பொய்தகவல்கள் கூறப்பட்டது சம்மந்தமாக அரசாங்கத்திற்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும்,
MI6 இற்கும் இடையே நிலவிய கருத்துவேறுபாடுகளை
சரிசெய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், இதை தொடர்ந்து ஈராக் ஆயுவுக்குழுவின் தலைவர் டேவிட் கே ராஜிநாமா
செய்தார். ஈராக்கிலும் பேரழிவிற்கான ஆயுதங்்கள் கையிருப்பு எதுவுமிருப்பதாக தான் நம்பவில்லை என்று அவர்
ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் ஒரு விசாரணை நடத்துவதற்கு
கட்டாயப்படுத்தப்பட்டு அதற்கு இணங்கினார். பிளேயரும் அதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஏற்பாடு செய்தார்.
இரண்டு விசாரணைகளுமே ஒரே வகையான போலியான உள்ளடக்கத்தை
அடிப்படையாகக் கொண்டவை. அவை MI6,
CIA இரண்டுமே புலனாய்வு தோல்வியின் ஒரு பாகமாக
குறைத்து மதிப்பிட்டு ஈராக்கில் பேரழிவிற்கான ஆயுதங்கள் கண்டுபிடிப்பதில் தோல்வி என்று குறிப்பிட்டனர். அந்த
நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் ''போருக்கு செல்லவேண்டும் என்று முன்கூட்டியே உறுதியாக
முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் அதை நியாயப்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில தகவல்களை இரண்டு
அமைப்புகளுமே தந்தன அல்லது பாதுகாப்பு சேவைகள் பொய் கூறின, என்பதை இரண்டு அமைப்புக்களுமே எந்த
அர்த்தத்திலும் அந்த விளக்கத்தையும் புறக்கணிக்கவில்லை'' என்று குறிப்பிட்டிருந்தது.
''போர் சரியா? தவறா என்பது பற்றி விசாரிக்கக்கூடாது'' மற்றும் ''ஹட்டன்
விசாரணையில் அரசாங்கத்தின் ''நல்லெண்ண'' பிரச்சனை முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று பிளேயர் வழங்கிய
அறிவுறுத்தலின் படி பட்லர் விசாரணை நாடக பாணி நோக்கில் நடத்தப்பட்டதாகும்.
இந்த நடைமுறை இரகசியமாக நடத்தப்பட்டதுடன், அரசமைப்பின் நம்பிக்கைகுரிய
பிரதிநிதிகள் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தில் இருந்து இலஞ்சம் வாங்கினார்
என்று குற்றம்சாட்டப்பட்ட, இக்குழுவில் இடம்பெற்ற பழமைவாத கட்சி அமைச்சர்
Jonathan Aitken இனை மதிப்பிழந்தவர் என
1994 இல் பட்லர் தெரிவித்திருந்தார்.
ஈராக்கிற்கு இரகசியமாக ஆயுதங்களை விற்றது தொடர்பாக 1992 முதல் 1995
வரை நடைபெற்ற விசாரணையில் பட்லர் அரசாங்கத்தின் பொய்கள் குறித்து பிரபல்யமான கருத்து ஒன்றை
கூறினார், அப்போது நீதிபதி Sir Richard Scott
பிரபு தலைமையில் அந்த விசாரணை நடந்தது. ''உண்மைகள் பற்றி தெளிவாக தெரிவு செய்து சொல்ல
வேண்டும்...... அப்படியென்றால், மக்களுக்கு நீங்கள் தவறான கருத்தை தருகிறீர்கள் என்று ஆகாது. நீங்கள்
முழு தகவலையும், மக்களுக்கு தரவில்லை'' என்றும் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு போரில் பொய்களை அடிப்படையாகக்கொண்டு
பிரிட்டனை தவறாக இழுத்துச்சென்றது, பிளேயர் அரசாங்கம் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என்று
விடுவிப்பதற்கு நடைபெற்ற நான்காவது நாடாளுமன்ற விசாரணைக்குழு பட்லர் விசாரணையில் நடந்ததாகும்.
ஹட்டன் பிரபுவின் விசாரணை மற்றும் பாதுகாப்பு குழு மற்றும் வெளியுறவு விவகார
குழுக்களைப்போல் பட்லர் பிரபுவும் அரசிற்குள் எவரையும் பொறுப்பு சாட்டுவதற்கு எந்த அமைப்பிலும் உள்ள
அலுவலக கட்டமைப்புகளில் இல்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளார். சுருக்கமாக சொல்வதென்றால், ஈராக்
போரினால் விளக்கிக்காட்டப்பட்ட உண்மயான தோல்வி என்னெவெனில் ஜனநாயக செயல்முறைதன்னின்
தோல்வியாகும்.
பெப்ரவரி 15ல் லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்த ஏறத்தாழ 2 மில்லியன் மக்கள்
உள்ளடங்கலான பெரும்பான்மையான வாக்காளர்களின் விருப்பத்திற்கெதிராகவும், ஒரு தவறான சாக்குபோக்கின்
அடித்தளத்திலும் பிளேயர் அரசாங்கம் போருக்குச் சென்றது.
மேலும், சாதாரண மக்களில் இந்தப்போரை ஆதரிப்பவர்களில் பெரும்பாலோர்
அரசாங்கம் தந்த பொய்யை உண்மை என்று நம்பியவர்களாவர்.
அரசாங்கத்திற்கு உடந்தையாகவும், உதவுகின்ற வகையிலும் ஊடகங்கள் செயல்பட்டன.
அவைகளில் மிகப்பெரும்பாலானவை அரசாங்கத்தின் ஈடுபாடுடன், எவ்வித கேள்வியுமின்றி உத்தியோகபூர்வமான
பிரச்சாரத்தை அப்படியே பிரசுரித்தன.
போர் ஆரம்பிக்கின்ற சாத்தியக்கூறு உள்ளது என்று தெரிந்த தருணத்தில்
பாராளுமன்றத்தில் பெரும்பாலான பாராளுமன்ற
உறுப்பினர்கள் போரை ஆதரித்தனர். ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளையின்றி போர் கூடாது என்று
கூறியவர்கள் கூட அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட இரண்டு ஈராக் போலி தகவல் ஆவணங்களை தாம் நம்புவதாக
இராஜதந்திர ரீதியாக அறிவித்தனர்.
ஆரம்பத்தில் தொழிற்சங்க காங்கிரஸ் ஐ.நா கட்டளையிட வேண்டும் என்று
கோரியது, ஆனால் போர் ஆரம்பித்ததும் பிளேயர் பின்னால் அணிவகுத்து நின்றது.
இதுவரை காலமும் யுத்தம், ஆக்கிரமிப்பிற்கும் ஈராக் மக்கள் மீது அவர்களின்
தலைவிதியை அவர்களே தீர்மானித்துக்கொள்வதையும் மூர்க்கமாக ஒடுக்குவதற்கும் வழியமைத்துள்ளது.
மிகப்பெரும்பாலான மக்கள் பிளேயருக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அராசங்கம்
தாக்கு பிடித்து நின்றதற்கு காரணம் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனங்களும், ஊடகங்களும், பிளேயருக்கு பின்னால்
அணிவகுத்து நின்றன. அல்லது குறைந்த பட்சம் அவர் ''தவறான தகவல் தந்ததற்காக'' மன்னிப்புகேட்க
வேண்டும்'' என்று கோரினர்.
பெயரளவில் போரை எதிர்த்தவர்களும்கூட, இது செய்துமுடிக்கப்படவேண்டிய ஒன்று
என ஏற்றுக்கொண்டு, அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக முடிக்கப்படவேண்டும்
என்பதை ஒரு புதிய மரபாக்கி உள்ளனர்.
தற்போது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் முன்னர் பிளேயர் மீது அரைகுறையாக
கண்டனம் தெரிவிப்பவர்கள் கூட ஈராக்கிற்கு கூடுதலாக 3000 துருப்புக்களை அரசாங்கம் அனுப்ப அதை ஆதரித்து
பின்னர் அறிக்கை விடவே செய்வார்கள். இத்தகைய அறிக்கைகளுக்கு நடுவே ஈராக்கில் தளிர் நடைபோடும் ஜனநாயத்தை
காப்பாற்ற வேண்டும் என்ற கவலைகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் உண்மையான பிரச்சனை என்னவென்றால் ஈராக்
எண்ணெய் வளத்தில் வாஷிங்டனுடன் மூலோபாய ஒப்பந்தம் செய்துகொண்ட பிரிட்டன் தனக்குரிய பங்கை பெறவேண்டும்
என்பதுதான்.
ஆளும் செல்வந்த தட்டினது பணப்பேராசை கோரிக்கையுடன் கண்காணிப்பு மற்றும் சமன்படுத்துவதை
உள்ளடக்கிய முன்னைய அனைத்து நாடளுமன்ற நடவடிக்கைகளும் ஒத்துப்போகாததால் அனைத்து ஜனநாயக நெறிமுறைகளும்
தூக்கியெறியப்படுகின்றன.
உலகைச் சூறையாடி அதன் வளங்களை தனது சொந்த நலனக்கு பயன்படுத்திக்
கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இன்றைய ஆளும் நிதிக்குழுவின் நலன்களுக்கு அரசாங்கம் கட்டுப்பட்டதால்
மக்களின் விருப்புகளுக்கு எவ்விதமான பொறுப்பு ஏற்க விரும்பவில்லை.
பிரிட்டனில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், உலகம் முழுவதிலும் ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு எதிராகவும் அவர்களை நேரடியாக பாதிக்கின்ற வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதில் பரந்தன வெகுஜனங்களை அரசியலில் வாக்களிக்கும் உரிமையில்லாதாக்கும் முயற்சி
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவேதான் முன்நிபந்தனையின்றி திறமையுடன் ஆளும் செல்வந்த தட்டு ஈராக்கின்
மீதும் சர்வதேசரீதியாகவும் இராணுவவாத மற்றும் காலனித்துவ மூலோபாயத்தை பின் தொடர்கிறது. உள்நாட்டிலும்
மக்கள் வாழ்க்கைத்தரத்தில் நேரடியாக வெட்டுக்களை நடாத்துகின்றார்கள்.
ஈராக்கை Pale போல்
ஒப்பிடக்கூடியளவு பிளேயரும், அவரது கூட்டாளிகளும் நடத்த இருக்கின்ற பெரிய குற்றங்களை தடுப்பதற்கு
தொழிலாள வர்க்கம் நேரடியாக அரசியலில் தீவிர பங்கெடுத்துக்கொள்வதுதான் ஒரேவழி என்பதை பட்லர் விசாரணை
மூலம் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
Top of page |