:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
German SEP gains official ballot status for European elections
ஜெர்மன் SEP
ஐரோப்பியத் தேர்தலில் நிற்பதற்கான சட்ட அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது
17 April 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
ஜூன் 13-அன்று நடைபெறவிருக்கும் ஐரோப்பிய தேர்தல்களில் கலந்து
கொள்ளக்கூடியக் கட்சிகள் எவை என நிர்ணயம்செய்வதற்காக, ஏப்ரல் 16- வெள்ளியன்று ஜெர்மன் தேசிய
தேர்தல் கமிஷன் பெர்லினில் கூடியது. அங்கு தேர்தல் கமிஷன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு வாக்களித்ததுடன்
ஜேர்மனி சோசலிச சமத்துவக்கட்சி தேர்தலில் நிற்பதற்கு சட்டரீதியான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது.
SEP வேட்பாளர் ஆவதற்கு அடிப்படைத்தகுதியை
வழங்குகின்ற எல்லாவிதமான கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் நிறைவேற்றியதுடன், முன்னரே 4,000 ற்கும்
மேற்பட்ட வாக்காளரது கையெழுத்துச்சான்றை தாக்கல் செய்திருந்தது.
மொத்தம் 26- கட்சிகள் அரசியல் அமைப்புக்கள் தங்களது வேட்புமனுக்களை
தாக்கல் செய்திருந்ததுடன் தேர்தல் முன்மொழிவுகளையும் வழங்கியிருந்தன. அவற்றில் 7-தேர்தலில் கலந்து கொள்ள
அனுமதிக்கவில்லை. இவை பெரும்பாலும் வலதுசாரிக்கட்சிகள். இவற்றில் சில ஜேர்மனி இளைஞர்கட்சி (Junge
Partei Deutschlands), மக்கள்கட்சி (Partei
für das Volk),Transparent Germany, மற்றும்
மக்கள் பிளாக் (Bürger-Block)
ஆகும், இவற்றுள் சில ஒருசில மாதங்களுக்கு முன்னரே துவக்கப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலான அமைப்புக்கள்
குறைந்தபட்சம் 4,000- கையெழுத்துக்களை பெறமுடிவில்லை. சில கட்சிகள் சில நூறு கையெழுத்துக்களைத்தான் பெற்றிருக்கின்றன.
முந்திய தேர்தல்களில் கலந்து கொண்ட, "வேலையற்றோர் மற்றும் சமுதாயரீதியில்
பின்தங்கியவருக்கான அமைப்பு (Party of the
Unemployed and Socially Disadvantaged PASS)",
"சமாதானம், வேலை, கலாச்சாரம் மற்றும் தெளிவுடமை கட்சி (FAKT)"
என்ற அமைப்புகள் தேர்தலில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்துவிட்டன. தன்னை அதிகாரப்பூர்வமான சமாதானத்தை
நிலைநாட்டும் கட்சி என்று கூறிக்கொள்ளும் FAKT
1,300- கையெழுத்துக்களைத்தான் பெற முடிந்தது.
ஜேர்மனி நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள ஜேர்மன் சமூக ஜனநாயகக்
கட்சி (SPD),
சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP)
பசுமைக்கட்சி, ஜனநாயக சோசலிச கட்சி (PDS)
ஆகியவை நீங்கலாக மிச்சமுள்ள 21- கட்சிகளும் தேர்தலில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை வலதுசாரி
அணியைச்சார்ந்தவை. (பழமைவாத எதிர்கட்சிகளான
CDU/CSU
மாநில அளவில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன, அவைபற்றி முடிவு
எதுவும் செய்யப்படவில்லை.) கட்சிகளின் பெயர்களை பார்த்தாலே அவை வலது சாரி அணியை சார்ந்தவை என்பது
தெளிவாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக "ஜேர்மன் கூட்டணி" ''கிறிஸ்டியன் சென்டர்,'' ''பைபிள் நம்பிக்கையாளர்
கிறிஸ்தவர்கள் கட்சி,'' ''சுற்றுச்சூழல் ஜனநாய கட்சி", ''ஜேர்மனி சென்டர் பார்டி'' ஆகியவை.
சோசலிச வேலை திட்டத்தை முன்வைத்து தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட
ஓரே ஒரு கட்சி சோசலிச சமத்துவக்கட்சி ஆகும். PDS
மற்றும் DKP
ஆகிய இரண்டு கட்சிகளும் முன்னாள் கிழக்கு ஜேர்மனியின்
(SED) ஆளும் கட்சிகளான ஸ்ராலினிசக்கட்சியிலிருந்து
கிளைவிட்டவை ஆகும்.
கிழக்கு ஜேர்மனியின் ஆளும் கட்சியாக இருந்து இப்போது
PDS ஆக
மாறியுள்ள கட்சி(PDS-Party of Democratic
Socialism இது முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஆளும் ஸ்ராலினிசக்கட்சியாக,
SED
என இருந்து) மூன்று மாநில ஆளும் கூட்டணிகளில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் சமூக நலத்திட்டங்கள் கடுமையாக
வெட்டப்பட்டதில் பங்களிப்புச் செய்திருக்கிறது. மேற்கு ஜெர்மனியில் இப்போது செயல்பட்டுவரும்
DKP முன்னாள் கிழக்கு
ஜெர்மனியிலிருந்து அரசியல் மற்றும் நிதி உதவிகளை பெற்று வந்தது.
GDR (German Democratic Republic-முன்னாள்
கிழக்கு ஜெர்மனி)
சிதைந்ததும் மேற்கு ஜேர்மனியின் கம்யூனிஸ்ட் கட்சியான
DKP தொடர்ந்து ஸ்ராலினிச அரசியலை நடத்தி
PDS- உடன்
இணைந்துவிட மறுத்தது.
SPD -ன் வலதுசாரித் திருப்பம்
மற்றும் பெருகிவரும் ராணுவவாத ஆபத்து, போர் ஆகியவற்றிற்கான நேரடியான பதிலாக
SEP களத்தில்
இறங்கியுள்ளது. SEP
அதன் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதைப்போல்:
"அனைத்து சமூக ஜனநாயகக் கட்சிகளும் (SPD)
தங்களுடைய தடுப்பாணைகளை விடுத்து, சமுதாயத்தை சூறையாடி தங்களை செல்வக் கொழிப்பு உடையதாக செய்து
கொண்டிருக்கும் ஒரு சிறிய செல்வந்தத் தட்டின் விருப்பங்களை நிறைவேற்றும் எடுபிடிகளாக மாறிவிட்டன. அவர்களுடைய
கொள்கைள், வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளின் தன்மையிலிருந்து இப்பொழுதெல்லாம் மாறுபட்டிருக்கவில்லை.
சமூக ஜனநாயகக் கட்சியின் அரசியல் திவால் தன்மைக்கு எதிராக நாங்கள் அடிப்படையில் வேறுபட்ட
கோட்பாட்டினை முன்வைக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில், மக்களுடைய தேவைகள் முதலில் கவனத்திற்
கொள்ளப்பட வேண்டியவை ஆகும்; நாம் சமூக சமத்துவம், நீதி ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக்
கொண்டுள்ள ஒரு சமுதாயத்தை நிறுவவிழைகின்றோம். ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, வேலைகள்,
பாதுகாப்பான வருமானம் என்ற சமுதாய தேட்டங்கள் அனைத்தையும் காப்பாற்ற நாம் போராடுகின்றோம்; இவையனைத்தும்
வெட்டுக்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நாங்கள் எதிர்ப்பதுடன்,
போரையும் இராணுவ வாதத்தையும் நிராகரிக்கிறோம்."
SEP நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக்குழுவின் ஜேர்மன் பிரிவாகும். இந்த தேர்தல் பிரச்சாரத்தை பிரிட்டன் சோசலிச சமத்துவக்கட்சி
மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் ஆதரவாளர்கள் துணையோடு நடத்துகிறோம். தற்போது
SEP-யின் தேர்தல்
அறிக்கை பல ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் SEP
தேர்தலில் கலந்துகொள்வது, ஜக்கிய அமெரிக்க அரசுகளில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தனது
வேட்பாளர்களை நிறுத்தவுள்ள, அங்குள்ள சோசலிச சமத்துவ கட்சியின் பிரச்சாரத்தோடு பின்னிப்பிணைந்துள்ளது.
SEP-ன் ஐரோப்பிய பிரச்சாரத்தின் இலக்கு, ஐரோப்பிய
தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டி, அமெரிக்கவிலும் மற்றும் உலகளவிலும்
தொழிலாளர்களை ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதாகும்.
வரும் வாரங்களில் பல்வேறு தேர்தல் பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தத்திட்டமிடப்பட்டிருக்கிறது.
அவற்றில் SEP
வேட்பாளர்கள் கட்சியின் முன்னோக்கு, வேலைதிட்டங்களை விரிவாக்குவார்கள்.
See Also :
ஜேர்மன் சோசலிச சமத்துவக்
கட்சியின் தேர்தல் அறிக்கை: ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக
Top of page |