WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
An exchange with a supporter of the French LCR
The historical record of Pabloite opportunism
பிரெஞ்சு LCR
ஆதரவாளர் ஒருவருடன் கருத்துப் பரிமாற்றம்
பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் வரலாற்றுச் சான்று
15 April 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
"ஐரோப்பிய சமுதாய அரங்கம் : பிரெஞ்சு எல்சிஆர் உத்தியோகபூர்வ இடது கட்சிகளுக்குள்
வெகுஜன எதிர்ப்புக்களை வடிகால் கட்ட விரும்புகிறது" என்ற கட்டுரைக்கு, பிரான்சில் ட்ரொஸ்கிசத்தின் பற்றாளர்கள்
என கூறிக்கொள்ளும் பல அமைப்புகளுள் ஒன்றான Ligue
Communiste Revolutionnaire (LCR) இன் ஆதரவாளர்
ஒருவர் WSWS
க்கு எழுதிய கடிதம் ஒன்றைக் கீழே வெளியிடுகிறோம்.
Antoine Lerougetel
கொடுத்துள்ள பதிலும் அதன்கீழே உள்ளது.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக ஆதரவாளர் ஒருவரிடமிருந்து ஒரு கடிதம்
"ஐரோப்பிய சமுதாய அரங்கம் : பிரெஞ்சு எல்சிஆர் உத்தியோகபூர்வ இடது கட்சிகளுக்குள்
வெகுஜன எதிர்ப்புக்களை வடிகால் கட்ட விரும்புகிறது" என்று கிரிஸ் மார்ஸ்டன், பீட்டர் ஸ்வார்ட்ஸ் இருவரும் எழுதிய,
2003 நவம்பர் 17 கட்டுரையினை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நீங்கள் LCR-(Ligue
Communiste Révolutionnaire) ஒரு முதலாளித்துவ
கட்சி என்றும், அது வெறுமே பன்மை இடதுகளின் (Plural
Left-சோசலிச கட்சியின் தலைமையிலான இடது கூட்டணியின்)
ஸ்ராலினிச, நவீன-தாராளவாத நிலையை பின்பற்றுகிறது என்று கூறுகின்றீர்கள்.
LCR, ஸ்ராலினிசத்தையும் அனைத்து
வகையான முதலாளித்துவத்தையும் எதிர்க்கத் தோற்றுவிக்கப்பட்டுள்ள நான்காம் அகிலத்தின் பிரெஞ்சுப் பிரிவு
என்பதை உங்களுக்கு நான் நினைவுறுத்துகிறேன். நாங்கள் ஒருபொழுதும் முதலாளித்துவத்துடன் சேர அழைப்பு விடுக்கவில்லை.
மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் வேண்டும் என்று கூறினால், அது அவற்றை முதலாளித்துவத்தை எதிர்த்து
மீண்டும் ஒன்றாகப் போரிடுவதற்குத்தான். ஜனநாயகம், ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மை எல்லாமே முதலாளித்துவம்
என்று நீங்கள் கருதினால், பின் உங்களை சோசலிஸ்ட்டுகள் என்று அழைத்துக் கொள்ளாதீர்கள்.
நாங்கள் இத்தாலிய PCR
அதன் பின்வாங்கும் நிலையைப் பெரிதும் விமர்சித்துள்ளோம்; பிரேசிலின்
PT (Workers Party)
-யிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள DS (Social
Democracy) கன்னையில் உள்ள எங்கள் தோழர்களையும் ஆதரித்துள்ளோம்.
ஸ்ராலினிச, சமூக-தாராளவாத, காட்டிக் கொடுப்பவர்களுக்கு வர்க்கப்
போராட்டத்தில் இடம் கிடையாது. நாங்கள் புரட்சி, கம்யூனிசம், அமைதி இவற்றை விரும்புகிறோம்.
உலகெங்கிலும் உள்ள பூர்சுவாக்களுக்கு எதிராக நாங்கள் செயலூக்கத்துடனும் ஆர்வத்துடனும்
தீவிரமாகவும் போராடி உள்ளோம். நீங்கள் கூறியுள்ளதற்காக உங்களை ட்ரொட்ஸ்கி நிராகரித்திருப்பார்.
உங்களிடம் இருப்பது எல்லாம் வெற்றுத் தன்மை நிரம்பிய, பூசல்கள் மலிந்த, வீண் வம்புச் சொற்கள்தாம்.
பாட்டாளி வர்க்கம் உறுதியாக வெற்றி அடையும்; நாங்களும்தான்.
உங்களுடைய அவதூறுக்கு ஏதேனும் நியாயமான விளக்கங்கள் இருக்குமாயின், அதை அளியுங்கள்.
Antoine Lerougetel இன்
பதில்
பிரான்சின் LCR
பற்றி உலக சோசலிச வலை தளத்தில் வெளிவந்திருந்த அரசியல்
பண்புருவாக்கல் பற்றி ஏதேனும் "நியாயமான விளக்கங்கள்" இருக்குமாயின் அளியுங்கள் என்று கேட்டு நீங்கள் அனுப்பியுள்ள
கடிதத்திற்கு நன்றி. நாங்கள் தீர்க்கமான வரலாற்று வகையில்,
LCR-யுடைய
சந்தர்ப்பவாத அரசியல் பற்றிய எங்கள் பகுப்பாய்வை உறுதிபடுத்துவோம்; "ஐரோப்பிய சமூக மன்றம்-LCR
அதிகாரபூர்வ இடது எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முயலுகிறது" என்று
WSWS ல் நவம்பர்
17, 2003 வெளியான அறிக்கை உங்களை "அவதூறுக்கு உட்படுத்துகிறது" என்ற உங்களுடைய கருத்தையும் நிராரகரிக்க
முற்படுகிறோம்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு
(ICFI) மற்றும்
WSWS,
LCR-ஐ
உறுதியாக ஒரு சந்தர்ப்பவாத குட்டி பூர்சுவா அமைப்பாகவே பொருட்படுத்துகின்றன (நீங்கள் கூறுவதுபோல் "ஒரு
பூர்சுவா கட்சி -a bourgeois party
என்று அல்ல).
LCR உடைய வளர்ச்சி, இது
பின்பற்றும் சர்வதேசப் போக்கான நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம் (United
Secretariat of the Fourth International (USFI))
இவற்றை ஆராய, நாம் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட
நான்காம் அகிலத்தின் (FI)
சர்வதேச இயக்கத்தில் 1953ல் தோன்றிய பிளவுகளின் மூலங்களை மீண்டும்
கவனிக்கவேண்டும். அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியுடைய (SWP)
தலைவரான ஜேம்ஸ் பி. கனன்,
ஒரு பகிரங்கக் கடிதத்தில்; மைக்கேல் பப்லோ மற்றும் எர்னெஸ்ட்
மண்டேல், மற்றும் ஏனையோரால் தலமைதாங்கப்பட்ட சந்தர்ப்பவாதக் குழு அமைத்தலுக்கு எதிராகத், மரபுவழியிலான
ட்ரொட்ஸ்கிஸ்டுகளை தங்களுடைய சொந்த போக்கினை அமைத்துக் கொள்ள அழைப்பு விடுத்தார்.
பப்லோ மற்றும் மண்டேலது போக்கு, ட்ரொட்ஸ்கிச நோக்கின்படி நான்காம் அகிலம்
சமூக புரட்சியின் உலக கட்சி என்னும் பாத்திரத்தினை வகிக்கமுடியாது, ஆனால் அது ஸ்ராலினிச, சமூக ஜனநாயக,
மற்றும் குட்டி முதலாளித்துவ இயக்கங்களுக்கு ஆலோசகராகவும் அழுத்தம் கொடுக்கும் குழுவாகவும் செயல்படவேண்டும்
என்னும் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் உலகப் போரின் முடிவு, போஸ்ட்டாமிலும், யால்டாவிலும் ஸ்ராலினிசத்திற்கும்,
ஏகாதிபத்தியத்திற்கும் இடையே உலகினை தத்தம் செல்வாக்கின் கோளங்களாகப் தமக்குள் பிரித்துக் கொள்ளும்
தீர்மானம் நடைபெற்றது. இதன் விளைவாக, ஸ்ராலினிசம் நேரடியாக ஐரோப்பாவில் எங்கு தொழிலாளர்கள்
சோசலிசத்தை ஸ்தாபிக்க முயற்சியில் ஈடுபட்டாலும் அதை நசுக்குவதற்குத் தலையீடு செய்தது. கிழக்கு ஐரோப்பாவில்,
ஸ்ராலினால் நிறுவப்பட்ட "ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்" --இங்கு "ஊனமுற்ற" என்ற சொல்லின்மீது
"தொழிலாளர்" என்ற சொல்லைக் காட்டிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டவேண்டும்-- அதிகாரத்துவத்தின் ஆணைகளிலிருந்த
தொகுப்புக்களாகவும், தனியார் சொத்துடைமை காலம் கடந்த பின்னர் தேசியமயமாக்கல், தொழிலாள
வர்க்கத்தால் புரட்சிகரமான முறையில் முதலாளித்துவ அரசை தூக்கி எறிவதன் அடிப்படையை அது கொண்டிராததால்
எந்த விதத்திலும் சோசலிசத் தன்மை பெறவில்லை. உண்மையில், அத்தகைய முயற்சி தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டால்,
அவை கடுமையான அடக்குமுறையால் நசுக்கப்பட்டன. இவற்றிற்கு முக்கிய உதாரணங்கள் 1953-ல் கிழக்கு ஜேர்மனி
எழுச்சியும், 1956 ஹங்கேரியப் புரட்சியும் ஆகும்.
இத்தாலி, கிரீஸ், பிரான்ஸ் இவற்றில் பாசிச ஆட்சிகளின் வீழ்ச்சிகளைப் பயன்படுத்தி
சோசலிசப் புரட்சிக்கு வழி திறந்திடும் எந்தவொரு முயற்சியையும் ஸ்ராலினிஸ்டுகள் எதிர்த்தனர்.
இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, அதனது மிகப்பெரும் வளங்களைப் பயன்படுத்தி,
முற்றிலும் மதிப்பிழந்துபோயிருந்த ஐரோப்பாவின் கூட்டுச்சார்ந்த முதலாளித்துவ வர்க்கங்களுடைய ஆட்சிகளை காப்பாற்றிவிடவும்,
உலகில் முதலாளித்துவத்தை மீண்டும் ஸ்திரப்படுத்தவும் சந்தர்ப்பத்தை அளித்தது.
இந்தக் கடினமான சூழ்நிலைகள், "இரண்டு முகாம்கள்" எனப்பட்ட கலைப்புவாத
தத்துவத்தை முன்வைப்பதற்கு, அப்பொழுது நான்காம் அகிலத்தின் செயலாளராக இருந்த பப்லோ முன் நின்றார்.
இந்தப் பிற்போக்கு நிலைப்பாடு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தலைமையில் தொழிலாள வர்க்கம் அரசியலில் சுதந்திரமான
சக்தியாகச் செயல்படுவதன் அவசியத்தை சாராம்சத்தில் அகற்றிவிட்டது. பப்லோவும் அவருடைய சக சிந்தனையாளர்களும்,
ஏகாதிபத்தியத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையே நடக்கும் மோதல் (பனிப்போர் அப்பொழுது முழுவீச்சில் நடைபெற்று
வந்தது) ஸ்ராலினிசத்தை முதலாளித்துவ-எதிர்ப்பு அடிப்படையில் இடதுபுறம் தள்ளி அதிகாரத்தைக் கைப்பற்றவைக்கும்
என்று வாதிட்டனர். எனவே, நான்காம் அகிலத்திற்கு சுதந்திரமான பங்கு நீண்ட காலத்திற்கு அவசியமில்லை என்று
கூறினர். வேறுவிதமாகக் கூறினால், கட்சியைக் கலைத்துவிட்டு, ஸ்ராலினிச, சமூக ஜனநாயக கட்சிகளின் "வெகுஜன
இயக்கங்களுடன்" இணைந்து விடலாம் என்பதாகும். பிரான்சின் நான்காம் அகிலத்தின் பிரிவினரில் பெரும்பாலானவர்ள்
இக்கருத்துக்களுடன் உடன்படாததால் கட்சியை விட்டு அவர்களை வெளியேற்ற பப்லோ இரகசிய நடவடிக்கைகளை எடுத்தார்.
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின்மீதான இந்தத் திரித்தல்வாத தாக்குதல் உலகப் போருக்குப்பின்
ஏற்பட்ட உடன்பாடு, பொருளாதார செழுமை நிலை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒப்புமை வலிமை
(relative strength)
இவற்றினால் விளைந்த அழுத்தத்தினை பிரதிபலித்தது. இந்த தாக்குதல் எதிர்க்கப்பட்டு, 1953-ல் நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவை கனனும் அவருடைய சக சிந்தனையாளரும் உருவாக்கியதனூடாக மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தினால்
பாதுகாக்கப்பட்டது, இதுதான் இன்று உலக சோசலிச வலை தளத்தை வெளியிட்டு வருகிறது.
அப்பொழுதிலிருந்து பப்லோவாதப் போக்கு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின்
நலன்களை ஒனறன்பின ஒன்றாக காட்டிக்கொடுக்கும் பங்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறது. பப்லோவாத தலைவரான
லிவியோ மைடன் (இத்தாலி), சமீபத்தில் இந்த காட்டிக் கொடுப்புகளை இடக்கரடக்கலாக "பின்சரிதல்" என்று
தன்னுடைய சமீபத்திய 15-வது ஐக்கிய செயல் குழுமத்தின் மாநாட்டில் (Congress
of the United Secretariat) துவக்க உரையில் குறிப்பிட்டார்.
பப்லோவிசத்தின் பல காட்டிக்கொடுப்புகளின் நான்கு நிகழ்வுகளை மட்டும் குறிப்பிடடு,
அதன் சாதனைகளை இங்கு பார்வையிட அனுமதியுங்கள்;
* 1964ல் பப்லோவாத நான்காம்
அகிலத்தின் செயலாளர் குழுமத்துடைய (USFI)
இலங்கைப் பிரிவான LSSP
திருமதி பண்டாரநாயகாவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்தது. இதன் விளைவு தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவை
ஏற்படுத்தியது. LSSP, 1972
அரசியலமைப்பில் சிங்கள பேரினவாதத்தை வேரூன்ற உதவியது; இது தமிழ்,
சிங்கள தொழிலாள வர்க்கம் பிளவுற்று பின்னர் தமிழ் மக்கள்மீது இனவாத தாக்குதல் ஏற்பட வழிவகுத்ததன் மூலம்,
20 ஆண்டுகாலமாக ஒரு வகுப்புவாத உள்நாட்டுப்போரை உருவாக்கியது.
* மக்கள் முன்னணிவாதம் (Popular
Frontism) என்ற பப்லோவாதக் கொள்கை இத்தாலிய ஆலிவ்
ட்ரீ கூட்டணியில் மீண்டும் தன்னுடைய வெளிப்பாட்டைக் தோற்றுவித்து, அங்கு ரோமனோ ப்ரொடி தலைமையில் கூட்டணி
அரசு உருவாக்கப்பட்டது. கம்யூனிச மறு அஸ்திவார கட்சி (The
Communist Refoundatiuon Party -Rifundazione),
என்பதில் பப்லோவாத மைடன் முக்கிய பங்கை வகித்ததுடன், பாராளுமன்றத்தில் ப்ரொடியுடைய தொழிலாள
வர்க்கத்திற்கு எதிரான கொள்கைகளுக்கு வாக்களித்தார். விளைவு? பெர்லுஸ்கோனி மீண்டும் அதிகாரத்திற்கு
வந்தார். கம்யூனிச மறு அஸ்திவாரம் (Communist
Refoundation) பிரோடியின் ஸ்ராலினிச அரசாங்கத்தை
தோற்கடிக்க எந்தப் போராட்டத்தையும் கொள்ளவில்லை. இது ஸ்ராலினிசத்தின் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக்
காட்டிக் கொடுக்கும் மற்றொரு இடது பூச்சு, அல்லது நீங்கள் குறிப்பிடுவதுபோல் "பின்சரிதல்" ஆகும்.
Rifundazione
இப்பொழுது
Olive Tree Alliance உடன் கூட்டணி சேரலாமா என்று
ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.
* மூன்றாவது நிகழ்வு பிரேசிலில்
காணலாம். அங்கு அரசாங்கத்திலுள்ள தொழிலாளர் கட்சியின்(
PT-Workers Party) ஒரு பிரிவான சமூக ஜனநாயக
கட்சியில் உள்ள, உங்கள் பிரேசிலிய இயக்கத்தில் தலைமை பாத்திரம் வகிக்கும் முக்கிய நபரான மிகுவல்
ரோசெட்டோவை நிலசீர்திருத்த மந்திரியாகக் கொண்டு அவர்மூலம் லூலாவின் பூர்சுவா அரசாங்கம்
IMF-ன் கொள்கைகளை
நிலமற்ற விவசாயிகளின் செலவில் செயல்படுத்தி வருகிறது. இதுதான் பப்லோவாதத்தால் செயல்வடிவில் உதவப்படும்
முதலாளித்துவத்தின் ஜனநாயகமாகும். இங்கு லிவியோ மைடன், ரோசெட்டோவைப் பற்றி, நான்காம் அகிலத்தின்
பப்லோவாத ஐக்கிய செயல் குழுமத்தின் 15 வது மாநாட்டில், அவரது ஆரம்ப உரையின் விவாதங்களில் என்ன
கூறுகிறார் என்று பார்ப்போம்;
"பொதுவாக தொழிலாள இயக்கங்கள், கொள்கை அளவில் எதிர்கொள்ளும் எந்த
மடிவு தரும் அதிர்ச்சியையும் -இலங்கை மற்றும் சில நாடுகளில் சில நேரம் சில கஷ்டங்களுக்கு உட்பட்டாலும்-
நாம் ஒருபோதும் பாராளுமன்ற வழிமுறையில் எதிர்கொள்ளவில்லை. எனவே கடந்த தசாப்தங்களாக எங்களுடைய
பெருகிவரும் செல்வாக்கின் பிரதிபலிப்பாக வரிசையிர் பல நாடுகளில் பாராளுமன்றத்தில் எமது பிரதிநிதிகள்
தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர், அதாவது பிரேசிலில் இருந்து பிலிப்பைன்ஸ் வரை, டென்மார்க்கிலிருந்து
போர்த்துக்கல் வரை, ஐரோப்பியப் பாராளுமன்றத்திலும் காண்கிறோம் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுவதில்
அச்சப்படவில்லை. பிரேசிலில், அரிய குணங்களையும், போர்குணம் மிகுந்த மிகுவல் ரோசட்டோ போன்ற
தோழர், லூலாவின் தேர்தலில் வெளிப்பட்ட முன்கண்டிராத மக்கள் வெற்றியின் விளைவாக வந்துள்ள அரசாங்கத்தில்
ஒரு உறுப்பினராக இன்று உள்ளார். முற்போக்கான விவசாயச் சீர்திருத்தத்தை சாதிக்கும் பணியில், கூடுதலான முறையில்
முறையுடன் தோற்றுவிக்கப்பட உள்ள ஆற்றல் நிறைந்த இயக்கத்தைக் கொண்டுவரும் பணியை மிகுவெல் முக்கிய பொறுப்பாகக்
கொண்டுள்ளார். நாங்கள் அவருடைய போராட்டத்தைப் பின்பற்றி ஆதரவு கொடுப்போம்;
PT, MST [Landlesss Workers' Movement]
இவற்றின் முன்னேறிய பிரிவுகள் அனைத்தும் அவரை ஆதரிக்கும்;
இம்முயற்சியிலுள்ள மிகக்கடினமான, அடித்தளத்தில் உள்ள வேதனையையும் அடக்கி, அவருக்கு இந்த மாநாட்டில் நாங்கள்
மனம் கனிந்த ஒற்றுமை உணர்வை நல்குகிறோம்."
இத்தகைய நனவுபூர்வமான ஏமாற்றுக் கருத்து இந்தப் பந்தியில் இருப்பது உண்மையில்
திகைப்படைய வைக்கிறது.
* நாங்கள்
LCR இழிபுகழ்மிக்க
முறையில் முடிவெடுத்து, ஸ்ராலினிஸ்டுகள், சோசலிஸ்ட் கட்சியுடைய சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமைக் கட்சி
ஆகியவற்றுடன் ஏப்ரல்-மே 2002-ல் சேர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் இரண்டாம் சுற்றில் வலதுசாரி
ஜோன்-மரி லு பென்-னிற்கு எதிராக, இப்பொழுதுள்ள ஜனாதிபதியான ஜாக் சிராக்கிற்கு ஆதரவு கொடுக அழைப்புவிட்டதனயும்
இங்கு குறிப்பிடாகவேண்டும்.
முதல் சுற்றில், LCR-யுடைய
ஜனாதிபதி வேட்பாளர் ஒலிவியர் பெசன்ஸ்நாட், தான் சிராக்கிற்கு வாக்கு அளிப்பதாகவும், மற்றவர்களும்
அவ்வாறே செய்யவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இவர் செய்தி ஊடகத்திற்குக் கூறியது: "நாங்கள் எல்லா
வாக்காளர்களும் ஞாயிறு மாலை தங்கள் கைகளைக் கழுவிவிட வேண்டும்
[அதாவது ஷிராக்கிற்கு
வாக்குகள் போட்டபின்னர்]
என்றும் பின்னர் மூன்றாம், சமூகச் சுற்றினை தெருக்களுக்கு வருவதின் மூலம் அமைத்திடல் வேண்டும்."
LCR-யுடைய இறுதி
செய்தி ஊடகத்திற்கான குறிப்பு, "National Front-ஐ
வாக்குப் பெட்டியில் தடுக்க நாங்கள் தெருக்களில் செய்ததை செய்யவேண்டும். மே 5 அன்று லு பென்னிற்கு எதிராக
வாக்கு அளியுங்கள்."இருவர் பந்தயத்தில் இதைவிட எப்படித் தெளிவாகக் கூறமுடியும்?
உங்கள் இயக்கத்தின் வேலைதிட்டம் உறுதியாக சந்தர்ப்பவாதம் கொண்டது; இதனை
ஐரோப்பிய சமூக மன்றத்திற்கும் மற்றும் -மூலதன மாற்றல்முறமைகள் மீது ரொபின் வரி (Tobin
tax) போன்றவற்றினை விதித்தல் போற்றவற்றின் ஊடாக முதலாளித்துவத்தினை
சீர்திருத்துவதற்கு ஆதரவழித்துவருகின்ற- பூகோளமயமாக்கலை எதிர்க்கும்
Attac அமைப்பிற்கு
விமர்சனமற்ற முறையில் கொடுக்கப்பட்ட ஆதரவிலிருந்து காணலாம்; இது
USFI உடைய பப்லோவாத
15-ம் காங்கிரசினாலும் ஒப்புதல் பெற்றது. இது மறுபடியும்
LCR இன் வர்க்கத்
தன்மையினை உறுதிபடுத்துகின்றது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரம் இங்கு மத்தியதர வர்க்க கண்டன
இயக்கத்திற்கு கீழ்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில், இது மைட்டன் குறிப்பிட்டதுபோல, ''இந்த இயக்கத்தில் இன்றியமையாத
விஷயமாகும்''.
இது நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் முதலாளித்துவமுறையை எதிர்ப்பவர்களுடன், "முதலாளித்துவத்திற்கு
எதிராக ஐக்கியப்படுவோம்" என்பதற்கான "பேச்சு வார்த்தைகள்" அல்ல; மாறாக இது சமூக ஜனநாயகவாதிகள்,
ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளுடைய தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் கைவிட்டுவிட்ட கண்டன
அரசியலிலும் தேசிய-சீர்திருத்த வேலைதிட்டங்களிலும் உயிர் இருப்பதான பிரமைகளை பேணிக்காக்கும் வழிவகையாகும்.
இந்த கொள்கையற்ற நடவடிக்கைகளுக்கு மாறாக, உலக மார்க்சியக் கட்சியான
ICFI
இன் பங்கு உழைக்கும் மக்களுடைய கவனத்திற்கு, முதலாளித்துவ நெருக்கடியின் மிக ஆழ்ந்த தன்மையைக்
காட்டுதலும், உயிர்வாழக்கூடிய ஒரேயொரு தீர்வான சோசலிச சமுதாயக் கட்டமைப்பை உருவாக்குவதாகும்.
இப்பணி ICFI-யினால்
முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நிலையில், பப்லோவாதிகளோ தொழிலாள வர்க்கத்துடைய நலன்கள் முதலாளித்தவத்தின்
வரம்பிற்குள்ளும், அதன் தேசிய, சர்வதேச அமைப்பிற்குள்ளும் பாதுாகாக்கப்படமுடியம் என்ற பிரமைகளைப் பரப்ப
வேலை செய்து வருகின்றார்கள்.
நீங்கள் "தொழிலாள வர்க்கம் வெல்லட்டும்" என்று கூறுவீர்களாயின், வரலாற்றின்
படிப்பினைகள் நன்கு கற்கப்படவேண்டும். தொழிலாளர்களின் ஒற்றுமையும், சோசலிசத்தின் இறுதி வெற்றியும் புரட்சிகர
மார்க்சிய முன்னோக்கை சார்ந்துள்ளது. முதலாளித்துவ அரசாங்கத்தில் அவர்களின் காலம் பற்றிய "ஒரு நிலுவைக்
கணக்கை வரைக" என சமூக ஜனநாயக வாதிகளுக்கும், ஸ்ராலினிஸ்டுகளுக்கும் விடுக்கும்
LCR உடைய
Alain Krivine-ன்
பரிதாபகரமான அழைப்பானது இந்த அமைப்புக்களில் ஏதோ சிலவகை முற்போக்கான கூறுகள் இருப்பது போன்ற
மாயையை ஏற்படுத்துகிறது. தொழிலாளர்கள் தங்களுடைய நிலுவை கணக்கை நன்கு ஆய்ந்தபின்னர்தான் இந்தப்
பயனற்ற அமைப்புக்களுக்கு எதிராக வாக்குகள் வழங்கினர், அல்லது வழங்காமலே இருந்து விட்டனர்.
எவ்வாறாயினும், LCR
தலைவர்களும்,
Lutte Ouvriere
உம், தொழிற்சங்கங்களில் உள்ள அரசியல் சீரழிந்த சக்திகளில் இருந்து பிரிந்து செல்லும் விருப்பம் அற்றவர்கள் ஆவர்;
அவர்களோடு திருமண உறவு போல் தொடர்ந்து இருக்கத்தான் விரும்புகின்றனர்.
LCR தொழிலாள
வர்க்கத்தின் சர்வாதிகாரம் பற்றிய அனைத்துக் குறிப்புக்களையும் தங்களுடைய சட்டவிதிகளிலிருந்து அண்மையில் நீக்கியிருப்பது
பப்லோவாதம் வலதுசாரி திசையில் செல்லுதலைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வரவிருக்கும் காலக்கட்டத்தில், தீவிரமடைந்த இளைஞர்களும், தொழிலாளர்களும்
தங்களுடைய ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படவும், தொடர்ந்து நீடிக்கவும் வேண்டுமானால் அதற்கு பூர்சுவா
அரசியலிலிருந்தும் அதன் எல்லா பொறிகளிலிருந்தும் முறித்துக்கொள்ளவேண்டும் என்பதனை அறியவேண்டும். அந்த பொறிகளில்
ஒரு வகைதான் இடது சந்தர்ப்பவாத LCR
ஐரோப்பிய, இலங்கை, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் எங்கள் சோசலிச
சமத்துவக் கட்சி வேட்பாளர்களுடனான எமது தலையீடு ஒரு சோசலிச முன்னோக்கிற்கான போராட்டத்தினை முன்னெடுத்தும்
செல்லும். இது ''வெகுஜன இயக்கத்தில் உள்ளோம்'' என்று அறிவித்துக்கொண்டு, உயிர் வாழும் அதிகாரத்துவ
தலைமைகளுக்குத் அடிபணியும் LCR
போன்ற அமைப்புகளுடன் மோதல் நிலையைத்தான் ஏற்படுத்தும்.
நீங்கள் ட்ரொட்ஸ்கிச மரபியத்தை காப்பதில் அக்கறைக்குரியவராக இருந்தால்,
நீங்கள் எல்லா வரலாற்று சான்றையும் பார்த்து, பப்லோவாத ஐக்கிய செயல் குழுமத்திலிருந்து முறித்துக்கொண்டு,
சோசலிசத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் காக்கும் சக்திகளுடன் உங்கள்ளை இணைத்துக் கொள்ளவேண்டும்.
Top of page |