WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ரஷ்யா மற்றும் முந்தைய USSR
Threat of civil war hangs over Georgia
ஜோர்ஜியாவில் உள்நாட்டுப்போர் பற்றிக்கொள்ளும் அச்சுறுத்தல் உள்ளது
பகுதி 1 |
பகுதி 2
By Simon Whelan
15 April 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
இது ஜோர்ஜியா நாட்டிற்குள் பெருகிவரும் நெருக்கடிகளை பற்றிய இரு பகுதி கட்டுரையின்
முதற்பகுதியாகும்
மிகைல் சாகேஷ்வில்லியின் தேசிய இயக்கம் பாராளுமன்றத் தேர்தல்களில் மிகப்பெரிய
வெற்றி அடைந்த பின்னர், டிபிலிசி (Tbilisi)
நிர்வாகத்திற்கும்
Aslan Abashidze-க்கு
விசுவாசமாக இருக்கும் அட்ஜரியன் சக்திகளுக்கும் இடையே பதட்டங்கள் மிக உயர்ந்த அளவில் உள்ளன.
ஏப்ரல் தொடக்கத்தில், அரை-தன்னாட்சி கொண்ட அட்ஜரியா
(Adjaria)
விலிருந்து ஜனாதிபதி சாகேஷ்வில்லியை கொலை செய்ய அனுப்பப்பட்ட நான்கு கொலைகாரர்களை கைதுசெய்ததாக
ஜோர்ஜிய அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் துணை பாதுகாப்பு அமைச்சரான கிகி உகுலவா, இந்த கொலையாளிகள்,
அட்ஜரியன் பாதுகாப்பு மந்திரி சோசோ கோஜிடிட்ஜேயின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றிக் கொண்டிருநததாக
கூறியுள்ளார்.
ஏப்ரல் 6ம் தேதி, டிரான்ஸ்காகசஸ் ரஷ்யப்படைகளுக்கு பொறுப்பு வகிக்கும் ஜெனரல்
அலெக்சாண்டர் ஸ்டுடெனிகின், டிபிலிசியில் சற்று தொலைவில் இருந்து இயக்கி வெடிக்கும் வெடிபொருளால் தாக்கப்பட்டு
சிறு காயமுற்றார். 1991ல் ஜோர்ஜியா விடுதலை அடைந்த பிறகு, ரஷ்யப் படைகள் இலக்கு வைக்கப்படுவது
இதுதான் முதல்தடவையாகும். ரஷ்யாவின் காவற் படைகள் அட்ஜரியன் தலைநகரான படூமியில் தளம் கொண்டுள்ளன;
மேலும் அவை ஆர்மேனிய இன பிராந்தியமான
Samtskhe-Djavakheti-லும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
சாகேஷ்விலியின் தேர்தலுக்குப் பிறகு, புஷ் நிர்வாகம், ஜோர்ஜியா, தெற்கு ஒசேடியா மற்றும் அப்காஜியாவிலிருந்து
படைகளை அகற்றிக்கொள்ளுவதற்கு கிரெம்ளின் மீது அழுத்தம் கொடுத்து வருகிறது.
சர்வாதிகார முறைகளை கூடுதலாகப் பயன்படுத்தி, சாகேஷ்வில்லியின் தேசிய
இயக்கம் மார்ச் 28-ல் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. கருத்துக்
கணிப்புக்களும் அவருடைய கட்சி அனைத்து 150 போட்டி இடங்களிலும் வெற்றி பெற்றதாகத்தான் தெரிவித்தன.
ஆனால் புதிரான வகையில், ஜோர்ஜியாவை ஒரு-கட்சி அரசாக மாற்றிய இறுதித் தேர்வு முடிவுகள் இன்னும்
அறிவிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை இத்தகைய அரசின் செயலற்ற தன்மையைக் கண்டிக்கவில்லை.
இதற்கிடையில், சாகேஷ்விலியோ அட்ஜாரா மற்றும் அதையொட்டி தெற்கு ஒசீடியா,
அப்காஜியா ஆகியவற்றைச் சமரசம் என்ற பெயரில் இறுதிக்கெடுகளுடன் இரத்தத்தை உறையவைக்கும்
அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளார். அட்ஜைரா ஓரளவு தன்னாட்சியை கொண்டிருக்கலாம் என்றாலும்,
Abashidze
அப்பகுதியின் சுங்க வரி உரிமைகளை கோரக்கூடாது என்றும், தன்னுடைய தனிப்படையை கலைத்துவிடவேண்டும் என்றும்
இவர் அறிவித்துள்ளார். இது அப்பகுதி நிபந்தனையற்று சரணடையவேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பாகத்தான் உள்ளது.
படூமி துறைமுக வரிகள், சுங்கங்கள் இவற்றை அடையமுடியாமலும், படைகளும் இல்லாமலும் பழைய ஸ்ராலினிச
அதிகாரத்துவத்தை சேர்ந்தவர் வெறும் தாக்குதல் தொடுக்கமுடியாதவராகத்தான் இருப்பார்.
சாகேஷ்விலி தேர்ந்தெடுக்கப்பட்டபின் இத்தைகைய விரைவான இராணுவ
நடவடிக்கைகள் எதிர்கொள்ளப்படல், முற்றிலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தன. இது வாஷிங்டனுடைய கொள்ளையடிக்கும்
யுரேசியா வெளியுறவுக் கொள்கை சார்ந்த தர்க்கரீதியான வெளிப்பாடுதான். புஷ் நிர்வாகத்தின் சான்று
உறுதிப்படுத்துவதுபோல், அதிகாரத்தை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் கைப்பற்றும் ஆட்சி,
அவ்விதமேதான் ஆட்சியையும் நடத்தும். தான் முற்றிலும் வாஷிங்டனுக்கு கடமைப்பட்டுள்ளதாக சாகேஷ்விலி அடிக்கடி
கூறிவருகிறார், மாணவர் ஆர்வத்துடன்தான் அங்கிருந்து கற்று வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், "ரோஜாப் புரட்சி" என்று அழைக்கப்பட்ட
நிகழ்ச்சி, பழைய ஊழல் மிகுந்த செவர்நாட்சே
(Shevardnadze) சகாப்தத்திலிருந்து மாறுதல் கிடைக்கும்
என்ற உறுதிமொழியில், ஜோர்ஜிய ஜனாதிபதி மிகைல் சாகேஷ்விலியை அதிகாரத்திற்கு கொண்டுவந்தது. ஆனால்
ரோஜாவின் வேர்கள் வாஷிங்டனில் உறுதியாக உள்ளன. எடுவர்ட் செவர்நாட்சேயின் சட்டவிரோதமாக அதிகார
பறிப்பு ஒரு புரட்சியாக அந்த அளவுக்கு இல்லை, பழைய சமுதாயத்தை புதிய சமுதாயமாக மாற்றும்
அடிப்படையில் முற்போக்கான மாற்றத்தின் அர்த்தத்தில் இல்லை, ஆனால் வழக்கமாக நிகழ்கின்ற ஒன்றாகும்.
ஜோர்ஜியாவை ஒரு ஏகாதிபத்திய சதிகளின் பொம்மை அரங்கம் என்ற துல்லியமாக விவரிக்கலாம். எதிரெதிர்
கைப்பாவைகளின் தலைவர்கள், வாஷிங்டனின் புஷ் ஆட்சியும், ரஷியாவின் விளாடிமிர் புட்டின் ஆட்சியும் ஆகும்.
வாஷிங்டனில் உள்ள குடியரசுக் கட்சியினர், சாகேஷ்விலி ஜோர்ஜிய மாநிலத்திலிருந்து
பிரிந்துசென்றுள்ள குடியரசுகளை மீண்டும் இணைக்கவேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கை அப்பகுதியில் ரஷ்ய
செல்வாக்கை குறைக்கும் என்றும், பாகு-டிபிலிசி-சேகன் எண்ணைய் குழாய்கள் பாதுகாப்புடன் பெறப்படலாம்
என்றும் விரும்புகின்றனர். தங்கள் பங்கிற்கு ரஷ்ய அரசாங்கம் தங்களுடைய செல்வாக்கை தக்கவைத்துக்
கொள்ளுவதற்கு அப்பகுதியில் படைகளை தொடர்ந்து நிறுத்திவைத்துக்கொள்ள விரும்புகிறது.
நீண்ட காலமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஜோர்ஜிய மக்களுக்கு,
சாகேஷ்விலியின் ஆட்சி முன்பு இருந்த நிலையின் தொடர்ச்சியையும், அதையும் விட மோசமாகியுள்ள நிலையையும்தான்
பிரதிபலிக்கிறது. ஏற்கனவே செங்குத்தாக சரிந்துள்ள ஜோர்ஜிய சமூக நிலைகள், பெருகிவரும் சமூக
சமத்துவமின்மை ஆகியவற்றை சாகேஷ்விலியின் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில்
கடுமையாக செயல்படுத்தப்படும் கொள்கைகள் விரைவுபடுத்தியுள்ளன. வாஷிங்டனுடைய கட்டளையின்பேரில், இவர்
நாட்டை விடுதலைக்கு பின் மூன்றாவதாக, இன்னும் ஒரு உள்நாட்டுப் போரில் அமிழ்த்தப் பார்க்கிறார். பிரிந்து
சென்றுள்ள தொந்தரவு கொடுக்கும் குடியரசுகளை அடிமைப்படுத்துவதற்கு வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்டுள்ள
சாகேஷ்விலி, ஜோர்ஜிய மக்களிடமிருந்து அத்தகைய இரத்தக் களரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான
கட்டளையை பெறவில்லை.
டிபிலிசியில் உள்ள புதிய எஜமானர், பழைய எஜமானோடு பெருமளவில் ஒப்பிடப்பட்டு
வருகிறார். இளம் துருக்கியரான சாகேஷ்விலி, பழைய குள்ளநரி ஷெவர்னட்சேயினால் பயன்படுத்தப்பட்ட அதே
அடக்குமுறை ஆட்சியையும், போலீஸ் முறைகளையும்தான் அவசர அவசரமாகக் கையாண்டு வருகிறார்.
இப்பொழுதுள்ள நிலைமையை, ஜோர்ஜியா "ஒரு தெளிவான ஜனநாயகமற்ற ஒற்றை-கட்சி அரசாக" மாறிவிட்டது
என்று Manila Times
சுருக்கமாக தற்போதைய அரசு விவகாரங்கள் பற்றி எழுதியுள்ளது.
செவர்நாட்சேகு பதிலாக சாகேஷ்விலியை கொண்டு வந்தது உள்நாட்டு விவகாரம்;
பிரிட்டிஷ் ஹெல்சிங்கி மனித உரிமைக் குழுவின் ஜோன் லாப்லாந்து,
The Guardian-ல்
எழுதியுள்ளது போல், "ஒரு மாறாத அதிகார கட்டமைப்பிற்குள், காப்பாளர்கள் மாற்றம்" என்று
குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக் காலம் வரை சாகேஷ்விலி, செவர்ட்நட்சேயின் மந்திரிசபையில்
விசுவாசமாகத்தான் பணிபுரிந்து வந்தார். மூத்தவருக்கு வாஷிங்டனில் செல்வாக்குப் போய்விட்டது என்று
உணர்ந்தவுடன் அவருக்கு இவர் எதிரியாகப் போனார்.
இப்பொழுது ஆட்சியை இயக்கும் மூவர் குழுவினரான சாகேஷ்விலி, ஜுவேனியா,
பர்ட்ஷநட்சே அனைவருமே, செவர்ட்நட்சேயின் மந்திரிசபைகளில் பல அதிகாரங்களையும் வகித்தவர்கள்தாம்.
பிரதம மந்திரியாக இருந்த ஜுவேனியா, செவர்ட்நாட்சே காட்டுமிராண்டித்தனமான ஆட்சி நடத்தியகாலத்தில்
பெற்றிருந்த அதே பதவியைத்தான் இப்பொழுதும் கொண்டுள்ளார். இதைத் தவிர, தேசிய பாதுகாப்பின் தலைமை
மாற்றப்படாமல்தான் உள்ளது. உண்மையில், செவர்ட்நாட்சேயின் முழுக் குழாமும், சாகேஷ்விலியின் புதிய ஆளும்
கட்சியில் சேர்ந்துள்ளது.
சாகேஷ்விலியும் அவருடைய தேசிய இயக்கமும் மிகப் பெரிய அளவிற்கு வாஷிங்டனிடம்
இருந்தும், சற்று குறைந்த அளவில் ஐரோப்பாவிலிருந்தும் நிதி உதவி பெறுகின்றன. இந்த ஆதரவாளர்கள் செய்தி
ஊடகம் ஆரம்பத்தில் "ரோஜாப் புரட்சி" பற்றிய கவர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு, இப்பொழுது
மற்றொரு தெற்கு காகசஸ் பகுதிச் சர்வாதிகாரியின் உண்மையை அவை காட்டும் போக்கை கண்டு அச்சம்
கொண்டிருக்கின்றனர்.
ஜோர்ஜியாவில் சர்வாதிகார ஆட்சியை பற்றி, வாரக்கணக்கில் மனித உரிமைக்
குழுக்கள் எச்சரிக்கைகளை கொடுத்தும் அவை பயனற்று இருக்கின்றன. அதிகாரத்திற்கு வந்த பல வாரங்களுக்கு
பின்னர்தான், தன்னுடைய உண்மை சொரூபத்தை சாகேஷ்விலி காட்டியுள்ளார். பெப்ரவரி மாதம்,
பாராளுமன்றத்தை கட்டாயப்படுத்தி அரசியலமைப்பு மாற்றங்கள் மூலம், தன்விருப்பப்படி மந்திரிகளை நியமிக்கவும்,
நீக்கவும், இதுகாறும் முன்னோடியில்லாத அளவு அதிகாரத்தை பெற்றுள்ளார். சாகேஷ்விலி பதவிக்கு வந்த பின்னர்,
ஜோர்ஜியாவின் இரண்டு அதிகம் காட்டப்படும் அரசியல் உரைகள் ஒலி/ஒளி பரப்புவதிலிருந்து அகற்றப்பட்டுவிட்டன.
இவரைப் பற்றி விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் கொலைமிரட்டலை பெற்றுள்ளனர். பெப்ரவரி மாதம் மத்திய
டிபிலிசியில் இவர்கள் ஒரு சவப்பெட்டியை சுமந்து சென்று, ஜோர்ஜியாவில் சுதந்திர ஊடகம் மடிந்ததற்கு
அடையாளமாக அணிவகுத்துச் சென்றனர்.
தேசிய ஒளிபரப்பில் நேரிடையாகக் காட்டப்படும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்
என்ற பெயரில் சாகேஷ்விலி நிர்வாகம், வணிகர்களை சிறையில் தள்ளியமை, பழைய செவர்நாட்சேயின் அரசாங்க
அதிகாரிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டது என்பதையெல்லாம் காட்டினர்; இது முறையான
சட்டவிதிகளுக்கு புறம்பானவை ஆகும். இந்த நடவடிக்கைகள் தேர்தல் முடிந்தபின், ஜோர்ஜிய ஆளும் வர்க்கத்தின்
உட்பூசல்களின் கணக்குத் தீர்க்கும் படலமாகும். ஆனால் அவை யார் எஜமான் என்பதை காண்பிப்பதன் மூலம் ஜோர்ஜிய
மக்களை அச்சுறுத்தவே பயன்படுகின்றன.
இத்தகைய ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம்தான் செவர்ட்நாட்சேயை, 1972ல் ரஷிய
கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பதவிக்கு உயர்த்திச் சென்றது. அவரும்கூடத்தான் அப்பொழுது
மேற்கு-சார்புடைய, நம்பிக்கைக்கு உகந்த தடையற்ற சந்தைக்கு வாதிடுபவர் என்று, 1992ல் ஜோர்ஜியாவிற்கு
மீண்டும் திரும்பிவந்தபோது, தாராளமாக புகழப்பட்டிருந்தார்; ஆனால் அதன் பின் அவர் ஜோர்ஜிய மக்களை
அவருடைய சுவிஸ் வங்கி தேவைகளுக்காக அடிபணியவைக்கும் அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபடலானார்.
சாகேஷ்விலி தனக்கு இன்னும் கணிசமான முறையில் மக்கள் ஆதரவு இருப்பதை,
தன்னுடைய சட்ட முறைக்கு புறம்பான செயல்கள், மனித உரிமைகள் மீறப்படல், எதிர்ப்பு கருத்துக்களை அடக்குதல்
இவற்றிற்கு பயன்படுத்தி வருகிறார். பாராளுமன்றத்தில் தொடக்கத்தில் 7 சதவிகித பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும்
என்பதை மாற்ற மறுக்கும் தன்மையில், இவர் பாராளுமன்றம் முழுவதையும் தன்னுடைய அதிகாரத்திற்குள்ளேயே
கொண்டுள்ளார். ஜனநாயகப் பிரதிநிதித்துவம் பற்றிய அக்கறைகளை உதறித்தள்ளிவிட்டு, இத்தகைய சிறிய "தன்னலக்
குழுக்களைப்பற்றி" தான் அக்கறை கொள்ளத் தயாரில்லை என்று கூறி, சட்டமன்றத்தில் தன்னுடைய செயற்பட்டியலை
மெதுவாக நடத்துகிறார். சமீபத்திய பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன், பாராளுமன்றத்தை அச்சுறுத்தும் வகையில்
"ஜோர்ஜியா பல வெளிநாட்டு, உள்நாட்டு விரோதிகளை கொண்டுள்ளது, பாராளுமன்றத்தில் என் முதுகிற்கு
பின்புறம் உள்ள இரண்டாவது அணி எனக்குத் தேவை இல்லை" என்று கூறினார்.
இப்பகுதியின் மரபான தனிமனித துதிபாடல் தன்னை சூழ்ந்துகொள்ள வேண்டும் என்ற முயற்சியில்,
ஜனாதிபதி இப்பொழுது பெரிதும் ஈடுபட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தல்களின்போது தன்னுடைய கட்சிக்காக
தூண்டிவிடும் வகையில் பிரச்சாரம் செய்தார்; இவருடைய உருவப் படங்கள் எங்கும் உள்ளன. அத்தகைய பிரச்சாரம்
ஜோர்ஜிய சட்டத்தின்படி நெறி பிறழ்ந்தது என்பது மட்டமின்றிச் சட்ட விரோதமானதும் ஆகும்.
பழைய வழக்கறிஞர் தன்னுடைய "ரோஜாப் புரட்சி" கொடியை, பிரிட்டிஷ் புனித
ஜோர்ஜின் கொடியிலிருந்து மாறுபட்ட வடிவத்தை, தேசியக் கொடியாக நிர்ணயித்துள்ளார். ஏற்கனவே அந்த
நாட்டில் அதிகாரபூர்வமான கொடி ஒன்று உள்ளது என்பதைப் பற்றியும், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை
அடைந்தபின்னர் சர்வதேச அளவில் அது ஏற்கப்பட்டது என்பது பற்றியும் அவர் கவலைப்படவில்லை.
சாகேஷ்விலியின் ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த மனைவியான சாந்த்ரா ரோலோப்ஸ்,
ஒரு நெதர்லாந்து தளம் கொண்ட இதழுக்கு, எவ்வாறு தன்னுடைய கணவர் ஜோர்ஜிய சர்வாதிகாரிகளான "ஸ்ராலின்,
பெரியா" போன்றவர்களை பின்பற்ற முயல்கிறார் எனக் கூறியுள்ளார். இந்த தோற்றத்தை தக்கவைத்து கொள்ளுவதற்காக,
சாகேஷ்விலி, தன்னுடைய ஜனாதிபதி உயர்வு பேச்சை, ஸ்ராலினுடைய பிறந்த இடமாகிய கோரியில்
(Gori) உள்ள
அவருடைய சிலைக்கு முன் தொடங்கினார்.
இந்த ஜோர்ஜிய ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பூசல்கள்
கொண்டுள்ள அதேவேளை, சாகேஷ்விலி, ரஷ்ய ஜனாதிபதியின் தேர்தல் மோசடி கையேட்டு புத்தகத்தின் ஒரு
பகுதியை செயல்படுத்தியுள்ளார். அப்பகுதி வர்ணனையாளர்கள் சாகேஷ்விலி ஒரு "புடின் ஆக செய்கிறார்" எனக்
கூறுகின்றனர்; அதன் பொருள் அவர் மக்கள் ஆதரவை பயன்படுத்தி சர்வாதிகார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
என்பது ஆகும். ஆனால் ஜோர்ஜியாவோ அமெரிக்காவின் வாடிக்கை நாடாக மாற்றப்பட்டுவிட்டது; சாகேஷ்விலி
வாஷிங்டனுடைய இசைக்கேற்ப நடனம் ஆடும் வகையில் அவர் ஏகாதிபத்திய கருணை ஆசிகளுடன் பதவியில் தொடர்ந்து
வைக்கப்படுவார்.
(தொடரும்..)
Top of page |