World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: 20 years since the year-long miners strike

பிரிட்டன்: சுரங்கத்தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் 20 ஆண்டுகளின் பின்னர்

பகுதி 1 | பகுதி 2

By Chris Marsden and Julie Hyland
6 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

பிரிட்டிஷ் சுரங்கத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் படிப்பனைகளை ஆராய்ந்த இரு கட்டுரை தொகுதியின் இரண்டாம் பகுதியை கீழே வெளியிடுகின்றோம்.

ஸ்கார்கிள், தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் (TUC) தொழிற்கட்சிக்கும் எதிராக சவால்விட மறுக்கிறார்

இவ்வாறு தொழிலாளர் அதிகாரத்துவம் அனைத்தும், அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை எந்தவகையிலும் திரட்டும் முயற்சிக்கு முற்றிலும் எதிர்ப்பையே காட்டின. ஆயினும்கூட, ஸ்கார்கிளின் முன்னோக்கு தொழிற்கட்சியின் இடதுசாரி குழுக்களினதும், பிரிட்டனின் பல தீவிரவாதக்குழுக்கள் ஆகியவற்றின் முன்னோக்கான தொழிற்சங்கங்களுள் ஒரு போர்க்குணமிக்க இயக்கம், தொழிற்கட்சிக்கும் மற்றும் தொழிற்சங்க காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் மட்டுப்படுத்திக் கொள்ளவேணடும் என்பதாகும். இவர்கள் அனைவரும் ஆழ்ந்து பார்க்க விரும்பாதது என்னவெனில், அத்தகைய ஒரு இயக்கத்தின் வளர்ச்சி அதிகாரத்துவத்திலிருந்து அரசியல் முறிவு ஏற்படும் அச்சுறுத்தலை கொடுக்கும் என்பதுதான்.

இதுதான் சுரங்க தொழிலாளர்கள் தோல்வியின் முக்கியமான காரணமாக இருந்தது. தொழிற்சங்க காங்கிரசுடைய அதிகாரபூர்வ வரலாறு ஆணித்தரமாக விளக்குகிறது; "1980இன் முற்பகுதியில், தொழிற்சங்க எதிர்ப்பு சட்டங்களுக்கு தீவிர எதிர்ப்புக் கொள்கை என்பது தொழிற்சங்க காங்கிரசுக்கு உடன்பாடாக இருந்தது, இதைச் செயல்படுத்துபவர்கள் (அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும்) 1971 தொழிற்துறை உறவுச் சட்டத்திற்கு எதிரான இயக்கத்தில் மீண்டும் வெற்றி பெறலாம் என்று நினைத்திருந்தனர்... நெருக்கடியான நேரங்களில், சில தொழிற்சங்கங்கள் வலுவற்ற நிலையில் இருந்ததால் தொழிற்சங்க காங்கிரஸ் பொதுக்குழு ஆதரவான நடவடிக்கையில் ஈடுபடும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இது நடைபெறப்போவதில்லை. தொழிற்சங்க கூட்டமைப்பின் (TUC) பொதுச் செயலாளர்களான (1973-84 வரை லென் முர்ரேயும், 1984-93 வரை நோர்மன் வில்லிஸும்) நேரடியாக சட்டத்தை உடைத்தல் (சட்டம் எவ்வளவு விரும்பத்தகாததாக இருந்தாலும்கூட) என்ற ஆபத்தான செயலுக்கு உடன்படப்போவதில்லை."

1984ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி வேலைநிறுத்தம் ஆரம்பித்து ஓராண்டு கழித்து அதே நாளில் முடிவடைந்தது. கென்ட், மற்றும் யோர்க்ஷைரில் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்னும் சில தினங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். வேலைநிறுத்தம் தோன்றுவதற்கு உடனடிக்காரணம், கார்டன் வுட் நிலக்கரிச் சுரங்கம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதுதான். ஆனால் அரசாங்கம் இலாபத்தில் இயங்காத சுரங்கங்களை மூடுவதில் தீவிரம் காட்டியதும், இலாபம் காட்டுவதை தனியார்மயமாக ஆக்கிவிடலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்ததின் ஆரம்பகட்டம்தான் இந்த அறிவிப்பு. இதற்கு எதிர்ப்பாக, ஸ்கார்கிள் சுரங்கங்கள் நிலக்கரி முற்றிலும் எடுத்தபின்னர்தான் மூடவேண்டும் என்றும் அதுவரை அவை தேசியமயமாக்கப்பட்ட, மானிய உதவிகள் பெறும் அமைப்புக்களாக இருக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஆண்டு முழுவதுமான கசப்பான போராட்டத்தில், சுரங்கத்தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ளே நிலவிய கணிசமான ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரட்டாது இருப்பதை உறுதிப்படுத்தவும், தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தலைவர்களின் நடவடிக்கைகள் அர்ப்பணிக்கப்பட்டு இருந்தன.

ஒற்றுமையாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பது வேலைநிறுத்தம் நீண்டு கொண்டே போனபோது பெரும்பாலும் பணம், உணவு இவற்றைத் திரட்டிக் கொடுத்ததோடு நின்றுவிட்டது. (கிட்டத்தட்ட 60மில்லியன் பவுன்கள் திரட்டப்பட்டது; இது சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு இருந்த ஆதரவின் வலிமைக்கு சான்று ஆகும்.) ஓரளவும் அதிகாரபூர்வமில்லாமலும் நிலக்கரி அனுப்பப்படுதலை இரயில்வே தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், பார ஊர்தி செலுத்துனர்களால் ஆகியோர் நிறுத்தினர். ஆனால் போராட்டத்திற்கு ஆதரவாக உத்தியோகபூர்வ இரண்டாம் கட்ட வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தொழிற்சங்க கூட்டமைப்பு (TUC) தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டன. துறைமுக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நிலக்கரி அனுப்புதலுக்கான தடையை ஒட்டி, இருமுறை தோன்றியபோதிலும், விரைவில் தொழிற்சங்கத் தலைவர்களால் இரத்துச்செய்யப்பட்டன. சுரங்கத் துணை அதிகாரிகள் என அழைக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் கொண்ட வேலைநிறுத்தமும் ஓர் சீரழிந்த முறையிலான சமரசத்தை ஒட்டி வாபஸ் பெறப்பட்டது. மேற்பார்வையாளர்கள் இல்லாமல் சுரங்க வேலை நடத்தப்பட முடியாது என்ற டோரிக்களினதும் போலீசாரினதும் போலித்தனமான ஊக்குவிப்பு பயனற்றுப் போயிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கார்கிளும் அவருடைய ஆதரவளார்களும் தொழிற்சங்க கூட்டமைப்பு (TUC), தொழிற்கட்சி இவற்றின் போக்கிற்கு இரட்டைத்தனமான நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் இவர்கள் அவை இரண்டையும் சற்றே ஒதுக்கிவைக்க முயன்றனர்; அவர்கள் வேலைநிறுத்தத்தை விற்று விடும் நிலையிலிருந்து தடுத்துவிடும் என்ற வாதத்தைத்தான் முன்வைத்தனர். ஆனால் மார்ச் 16ம் தேதி, தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியம் (NUM) ஒரு இரகசிய கடிதத்தை தொழிற்சங்க கூட்டமைப்புக்கு (TUC) "இந்த தொழிற்சங்கத்தால் தொழிற்சங்க கூட்டமைப்பின் உதவியையோ, குறுக்கீட்டையோ கோரி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்றே வெளிப்படையாக எழுதியது.

ஆனால் ஸ்கார்கிளுடைய, தொழிலாளர் இயக்கத்தின் ''செயல்பாடுகளுக்கு ஊட்டம் கொடுப்பதற்காக'' மே, ஜூன் மாதங்களில் ஷெப்பீல்டிற்கு அருகில் ஒர்கிரேவ் நிலக்கரி சுரங்கங்களில் பரந்த மறியலை நடத்தியது பெரும் அழிவை ஏற்படுத்தியது. சாதாரண உடைகளுடன் இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் போலீசாரின் கலகப்படைப்பிரிவினர் தடையின்றி புகுந்து, நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்யவும், ஸ்கார்கிள் உட்பட பலரை படுகாயத்திற்குட்படுத்தவும் முடிந்தது.

வேலைநிறுத்தத்தின் பிந்தைய மாதங்களில், ஸ்கார்கிளும், தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியமும், தொழிற்சங்க கூட்டமைப்பால் நிறுவப்பட்டிருந்த தேசிய நிலக்கரிக் குழுவிடம் பேச்சுவார்த்தைகளுக்காக பலமுறை பங்கு ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எவரும் சவால்விட முடியாத நிலையிலிருந்த தேசிய சுரங்கத் தொழிலாளர் ஒன்றியத் தலைவர், தொழிற்சங்க கூட்டமைப்பின் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை சவால்விடக்கூடிய தன்மையைக் கொண்டிருந்தார். இதை அவர் செய்திருக்கவேண்டும். சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தங்கள் தலைவர்களை மீறி தொழிலாள வர்க்கம் ஆதரவு கொடுக்கவேண்டும் என்று வெளிப்படையான அழைப்பை அவர் கொடுத்திருந்தால், மிக ஆற்றல் மிகுந்த ஆதரவு கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாறாக, அரசாங்கத்திடமிருந்தும், தேசிய நிலக்கரிக்குழுவிடம் இருந்தும் ஒரு சலுகைகூடப் பெறாத நிலையில் பெருகிவிட்ட, தொடர்ந்த முயற்சியில் தோல்வியை தழுவுவதைவிட வேறு கதி இல்லை என்ற நிலைக்கு தன்னுடைய உறுப்பினர்களை தள்ளிவிட்டிருந்தார்.

தொழிலாளர் புரட்சி கட்சியின் பங்கு

தொழிலாள வர்க்கத்தின் கூடுதலான போராட்டப் பிரிவினரிடையே, ஸ்கார்கிள் உயர்ந்த மதிப்பு உடைய இடத்தைக் கொண்டு தொழிற் கட்சி தலைவர் நீல் கின்னோக் போன்றோருக்கு மாறுதலாக கொள்கையுடைய தலைவர் என்று கருதப்பட்டாலும்கூட, தொழிலாளர் புரட்சி கட்சியுடைய (WRP) முக்கியமான ஆதரவு கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், இவருடைய தலைமை பெரும் கஷ்டங்களுக்கு இடைய நீண்ட மாதங்கள் சவாலுக்குட்படாமல் இருந்திராது.

அந்த நேரத்தில் தொழிலாளர் புரட்சி கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவாக இருந்தது; ஆனால் புரட்சிகர முன்னோக்கைக் கைவிட்டு, நீண்ட நாட்களாக, தொழிலாள இயக்கத்தின் அதிகாரத்துவ தலைமைக்கு நிபந்தனையற்ற சரணாகதியை அடைந்திருந்தது.

ஸ்கார்கிளுக்கு அதனுடைய அடிபணிவானது அதன் நீண்ட அரசியல் சீரழிவின் மிகக் கேவலமான வெளிப்பாடாயிற்று. தொழிலாளர் புரட்சி கட்சியின் பங்கு, "1973-85ல் தொழிலாளர் புரட்சி கட்சி எப்படி ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுத்தது" என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது.

"ஓராண்டு காலம் நீடித்திருந்த போராட்டத்தில், தொழிலாளர் புரட்சி கட்சி ஒரு முறை கூட தொழிலாள மக்களுடைய அரசியல் அமைப்பு பரந்த மக்கள் கட்சியான தொழிற் கட்சியிடம் கோரிக்கையை முன்வைக்கவில்லை. டோரி அரசாங்கத்தை ராஜிநாமா செய்ய வற்புறுத்தும் வகையிலோ, புதிய தேர்தல் தேவை என்றோ சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் தொழிற்கட்சி அதிகாரத்திற்கு மீண்டும் வரவேண்டும் என்றோ, ஒருமுறை கூட தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி அழைப்பு விடவில்லை.

"மிக அதிகமான வாய்வீச்சு காட்டியபோதிலும், சுரங்க தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது, [தொழிலாளர் புரட்சி கட்சி தலைவர் ஜெர்ரி] ஹீலியின் உட்குழு எடுத்த நிலைப்பாடு, மிகவும் வசதியுடன் தொழிலாளர் கட்சியில் இருந்த சந்தர்ப்பவாத நண்பர்களுடனும், ஸ்கார்கிளின் தலைமையில் இருந்த தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியத்துடனும் மோதலை தவிர்த்தது. புரட்சி நிலைமை உள்ளது என்று பேசப்பட்ட போதிலும், தொழிலாளர் புரட்சி கட்சி தலைவர்கள் ஸ்கார்கிளைப் பற்றி உணர்வுடன் குறை கூறுவதை தவிர்த்தனர் இவ்விதத்தில் அவர்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு விடுத்த அழைப்பு முற்றிலும் வெற்றுத்தன்மையையே கொண்டிருந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தியது."

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை தொடர்கிறது: " 1984ம் ஆண்டு காணப்பட்ட நிலைமையில், டோரிக்களை ஆட்சியிலிருந்து அகற்றி, தொழிற் கட்சியினரை சோசலிச வேலைதிட்ட கொள்கைகளை செயல்படுத்த மீண்டும் அதிகாரத்தில் இருத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தால் அது மக்கள் இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தொழிற் கட்சியினரையும் அம்பலப்படுத்தியிருக்கும். ஏனென்றால் தொழிற்கட்சியினர் இந்த நேரத்தில், இடதுசாரிகள் உட்பட அனைவரும், இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தரமறுத்ததுடன், அதற்காகப் போராடவும் மறுத்திருப்பர். இது அவர்கள் தொழிலாள வர்க்கம் அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்திருக்கும். மாறாக, சமூக ஜனநாயகவாதிகள் நாசவேலை செய்திருந்த போதிலும், டோரிக்கள் ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டிருந்தால், (அல்லது மக்களுடைய பெரும் எதிர்ப்பிற்கிடையே அதிகாரத்தில் தொடர்ந்திருந்தாலும்), ஒரு புரட்சிக்கு பிரிட்டனில் முன்னோடி சூழ்நிலை உருவாகியிருக்கும்.

பொதுவேலை நிறுத்தத்திற்கான பிரச்சார முயற்சிகள், பொதுப்படையான பிற்போக்கு தன்மைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அரசியல் போராட்டாமாக மாற்றினால்தான் வளர்ச்சியுறும். ஸ்கார்கிளுடைய மத்தியவாத அரசியலுக்கு எதிராக சமரசத்திற்கு இடமில்லாத அன்றாடப் போராட்டம், தொழிற்சங்க வாதத்தை பற்றிய தெளிவான ஆய்வு, ஸ்கார்கிளின் ஸ்ராலினிச தொடர்புகள் அம்பலப்படுத்தப்படுதல் மற்றும் அவர் டோரிகளை உடனடியாக பதவியில் இருந்து இறக்கப் போராட மறுத்தலை ஐயத்திற்கிடமின்றி கண்டனத்திற்குட்படுத்துதல் ஆகியவற்றை கொண்டுவந்திருக்கும். இத்தகைய வழிமுறைகளில்தான் தொழிலாளர் புரட்சி கட்சி சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தினரிடையே பொது வேலைநிறுத்தத்திற்கு தேவையான முழு அரசியல் நனவை வளர்த்திருக்கமுடியும்."

இறுதிஆய்வில், தொழிலாளர் புரட்சி கட்சி, ஸ்கார்கிளுக்கு எதிராக கொள்கைப்பிடிப்பான ஒரு போராட்டம் நடத்த மறுத்ததுதான், ஒரு தலைமையை எதிர்நோக்கியிருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களை நிராயுதபாணியாக்கியதுடன், வேலைநிறுத்தம் தோல்வி அடைவதற்கும் வழிகோலியது.

இன்று இந்த வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள்

சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய அடிப்படை படிப்பினை, அதவாது உண்மையான சோசலிச நனவுபூர்வமாக வளர்ப்பதற்கான ஒரு முழு அரசியல் நனவு தேவையாகும்.

இந்த வேலைநிறுத்தம், ஒரு தலைமுறை தொழிலாளர்களுக்கு மாபெரும் அனுபவம் என்றாலும், இதிலிருந்து பெறக்கூடிய கருத்துக்கள் இன்னும் நன்கு ஜீரணிக்கப்பட்டு, புரிந்து கொள்ளப்படவேண்டும்.

இந்த வேலைநிறுத்தத்தின் ஒரு கூறுபாடு, இது பெரும் துன்பங்களை கொடுத்திருந்த போதிலும், பொதுவாக நட்பு, குடும்பம் என்ற பிணைப்புக்களை வலிமைப்படுத்தியது. இதை குறைகாண்பவர்கள்கூட, வேலைநிறுத்தத்தில் பெண்கள் ஆற்றிய முக்கியமான பங்கை ஏற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது இதுவரை ஐயத்திற்கிடமின்றி ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய குழுக்களில் இருந்த முன்கருத்துக்களுக்கு சவாலாக அமைந்தது. வேலைநிறுத்தத்தை தொடர்ந்து சமூக குழுக்கள் சிதைந்தன என்பதையும் குடும்பங்கள் பிளவுபட்டன என்பதும் உண்மையே. எவ்வளவு கொடூரமாக இருந்தபோதிலும், இது தோல்வியின் விளைவு என்று மட்டும் ஏற்க இயலாது. வேலைநிறுத்ததில் பங்குபெற்றவர்களில் பலருக்கும் தங்கள் வீரம், தியாகம் ஆகியவை இருந்தபோதிலும் எவ்வாறு தோற்றுப்போனோம் என்பது தெரியாமல் திகைக்கவேண்டியிருந்ததுடன், தனிப்பட்ட அழுத்தங்களையும் இது தோற்றுவித்தது என்பது புலனாவதுடன், ஒரு புதிய முன்னேற்ற வழியையும் காணாமல் அதில் பங்கு பெற்றவர்கள் உள்ளனர்.

வேலைநிறுத்தத்தை முறியடித்ததில் தாட்சர் வென்றது அவர் பக்கம் இயல்பாகவே வலிமை இருந்து என்பதினால் அல்ல; அவருடைய அரசியல் எதிரிகள் சீரழிந்த கருத்துக்களை உடையவர்களாக இருந்ததினால் என்பதுதான் பொருந்தும். அந்த நேரத்தில் தொழிற் துறையில் போர்க்குணப்போக்கு மிகுந்து இருந்தது என்று சித்தரிக்கப்பட்டு இருந்த போதிலும், அது அப்போக்கின் கடைசி ஒலியாகத்தான் இருந்தது. 1984-க்குள் தொழிலாள வர்க்கத்தின் பழைய அமைப்புக்கள் அனைத்துமே முற்றிய சிதைந்த தன்மையில்தான் இருந்தன. அவர்கள் கொண்டுந்த தேசிய சீர்திருத்த முன்னோக்கு, புதிய நலன்களை பெறுவது ஒருபுறம் இருக்க, தொழிலாள வர்க்கம் தான் முன்பு பெற்றிருந்த நலன்களை பாதுகாப்பதற்குக்கூட வழிவகை செய்யமுடியாமல் போயிற்று.

அந்தவிதத்தில் டோனி பிளேயரும், புதிய தொழிலாளர் கட்சியினரும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் வரலாற்றிலிருந்து முறிந்து சென்றவர்கள் அல்லர்; மாறாக, அவர்கள் அதன் தீவிரமான எதிர்மாறான விளைவாகும். அதாவது முதலாளித்துவத்திற்கும் இலாபமுறைக்கும் தத்துவார்த்த அடிபணியலாகும்.

தொழிற்கட்சி வளர்த்துள்ள, கையாளும் முறைகளுக்கு எதிராக, அமைப்பு அளவிலும், அரசியல் அளவிலும் பழைய சமூக சீர்திருத்த வேலைதிட்டங்களிலிருந்து முறிந்து, நகர்ந்து புதிய அணைப்புக்ளையும் போராட்ட வகைகளையும், மார்க்சிச முன்னோக்கில் சர்வதேச புரட்சி முறையை அடிப்படையாகக் கொண்டு வளர்க்க வேண்டும் என்பதே சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் எதிர்வைக்கும் இன்றியமையாத கருத்து ஆகும்.

ஆனால் அந்த நேரத்தில் மிகவும் உறுதியாகவும் கொள்கைப்பிடிப்புடனும் இருந்த சுரங்க தொழிலாளர்கள்கூட பொதுவாக போர்க்குணமிக்க நடவடிக்கைகள்தான் தங்களுடைய தலைவர்களின் முடிவை வலுப்படுத்தி வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நினைத்திருந்தனர். அவர்கள் அத்தகைய பொய்மை கருத்துக்களுக்காக மிக அதிகமான விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.

உடனடியான முதற் பார்வைக்கு சுரங்க தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து முன்னேற்றமான நலன் எதுவும் வெளிப்படவில்லை என்றுதான் தோன்றும். ஒரு ஊழல் மிகுந்த கூட்டம் தொழிலாளர் இயக்கத்தின்பால் தங்களுடைய இரும்புப்பிடியை இறுக்கும் விளைவை கொண்டிருந்தது என்பது உண்மைதான்; அதுவும், தங்கள் சொந்த வலதுசாரி கொள்கைகளை வர்க்கப் போராட்ட இலக்குகளுக்கு எதிராக, இத்தோல்வி பயன்படுத்தப்பட்டது.

எவ்வாறிருந்தபோதும், அத்தகைய வெற்றி மிக மிகக் குறுகிய தன்மையைத்தான் பெற்றிருக்கும்.

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களின் மகத்தான தன்மை பழைய கருத்து அடிப்படைகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டன. இந்தவழிவகையில், சமூக சீர்திருத்தம் என்ற பழைய நோக்கம் மட்டும் மதிப்புக்குறைவிற்கு உட்படுத்தப்படவில்லை. வலதுசாரியினர் மாற்றாக கொடுத்திருந்த கருத்துக்கள் முன்னதைவிடக் குறைவான நேரத்தில் இழிவாகி விட்டன. தாட்சருடைய "மக்கள் முதலாளித்துவம்" என்ற கருத்து சமுதாய பின்னடைவு, சரிவு இவற்றிற்கு வழி வகுத்தது. பிளேயர் வேறு விதத்தில் முன்வைக்கும் அக்கருத்தான "மூன்றாம் வழி" எனக் கூறப்படுவதும் இதே போன்ற அழிவைத்தான் கொடுத்துள்ளது.

உழைக்கும் மக்களுக்கு அரசியலில் மாற்றுப் பிரதிநிதித்துவத்தை தொழிற்கட்சி கொடுக்கிறது என்ற எண்ணம், இப்பொழுதுள்ள அரசியல் கருத்துக்கள் அனைத்திலும் கூடுதலான மதிப்பு குறைவு பெற்றுள்ளது. இலாபமுறைக்கு வெளிப்படையாக வாதிடுவோர், பழைய தொழிலாள இயக்கத்தை கருத்தளவில் கைப்பற்ற, தொழிற்கட்சியும், தொழிற்சங்கங்களும் பெருவர்த்தகத்தின் ஆதரவான பகுதிகளாக மாற்றியுள்ள நிலைமை முழுமை அடைந்துவிட்டதால், அவை பரந்த மக்கள் தொழிலாள வர்க்கத்துடைய நம்பிக்கையைக் கொண்டுள்ளன என்று கூறவே முடியாது.

சமூக, ஜனநாயக உரிமைகள் தொடர்புடைய ஒவ்வொரு பிரச்சினையிலும், தொழிலாள வர்க்கம் இன்று பழைய அமைப்புக்களுடன் நேரடி மோதலைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஈராக்கிய போருக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்ட அணிதிரட்டில் முழுமையான வெளிப்பாட்டை கண்டது; அதில் பிளேயரின் வர்த்தகம் சார்ந்த செயற் பட்டியலுக்கு எதிராக மக்களுடைய விரோதமும் எதிர்ப்பும் வெளிவந்ததுமட்டுமின்றி, ஒரு பாதுகாப்பற்ற நாட்டின் மீது காரணமின்றி குற்றஞ்சார்ந்த தாக்குதலை நடத்தியதற்கும் கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டது.

வர்க்கப் போராட்டம் முடிந்தவிட்டது எனக்கூறுவதற்கே இல்லை. மாறாக, போர் எதிர்ப்பு இயக்கம், அடுத்த கட்டத்தில் பழைய கட்டமைப்பினுள் நின்றுவிடாது என்பதைக் குறிப்பதுடன், அது தொழிற்சங்கங்களுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் எதிரான அரசியல் கிளர்ச்சி வடிவத்தை எடுக்கும் என்பதை புலப்படுத்துகிறது. அத்தகைய வளர்ச்சிக்கு தளம் அமைக்கும் வகையில் சுரங்கத்தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

முற்றும்.

Top of page