World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய அமெரிக்கா, கரிபியன்

Why US troops are occupying Haiti

ஹைட்டியை அமெரிக்கத் துருப்புக்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஏன்

By Richard Dufour and Keith Jones
5 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஹைட்டியைப் ஆக்கிரமித்துக் கொள்வதற்கு புஷ் நிர்வாகம் அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பியிருப்பது ஏன்? என்று கேட்டு பல கடிதங்களை வாசகர்கள், உலக சோசலிச வலைத் தளத்திற்கு அனுப்பியிருக்கின்றனர். அவற்றில் கீழ்க்கண்ட இரண்டு கருத்துரைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

''ஹைட்டி நிலவரம் குறித்து உங்களது நிருபர்களின் ஒட்டுமொத்த உண்மைத் தகவல்கள் மற்றும் ஆய்வுகளை நான் ஆட்சேபிக்கிறேன். ஆனால் இதில் என்னால் புரிந்துகொள்ள முடியாதது, ஜீரணிக்க முடியாதது அல்லது வேறு எதுவாக இருந்தாலும், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய ஏகாதிபத்திய நாடுகளுக்கு பெரிய மீன்கள் கிடைக்கும்போது இந்த துயரமிக்க எந்தவித வளமும் இல்லாத நாட்டை ஏன் ஆக்கிரமித்துக்கொண்டார்கள் என்பதாகும்'' என்று GW என்பவர் எழுதியுள்ளார்.

இரண்டாவது வாசகர்: ''ஈராக்கில் எண்ணெய் வளம் இருக்கிறது என்பது தெளிவு. அங்கு அவர்கள் தலையிட்டது மனித நேயத்தால் அல்ல. அதை அமெரிக்க கொள்கை வழிநடத்துகிறது. ஆனால் ஹைட்டியில் என்ன இருக்கிறது?'' என்று எழுதியிருக்கிறார்.

சென்ற ஆண்டு ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டதற்கு முக்கியமான நோக்கம் எண்ணெய்தான் காரணமாகும். ஆனால் அமெரிக்க அரசியல் ஸ்தாபனமும், பெருநிறுவன ஊடகங்களும் மக்களைக் கொன்று தள்ளும் பேரழிவுகரமான ஆயுதங்கள் மற்றும் அல்கொய்தாவிடம் சதாம் ஹூசைன் தொடர்பு வைத்திருப்பது பற்றிய பொய் பாவனைகளைக் கூறி வந்தன. புஷ் நிர்வாகம் பதவியேற்ற முதல் நாட்களிலேயே உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ள நாட்டைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு தகுந்த இராணுவ நடவடிக்கைக்கு சாக்குப்போக்குகளை தேட ஆரம்பித்தது.

அத்தோடு ஒப்புநோக்கும்போது ஹைட்டி புஷ் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கை கவலைகளில் 2001 ஜனவரியிலோ, அல்லது 2004 ஜனவரியிலோ இலக்காகக் கூட இடம்பெற்றிருக்கவில்லை. அமெரிக்க அரசுத்துறை செயலர் கொலின் பவல் வாஷிங்டனின் ''ஹைட்டி களைப்பு'' பற்றிய பேச்சானது, எந்த அளவிற்கு அலட்சியமாக அமெரிக்க நிர்வாகம் கருதுகிறது மற்றும் எந்த அளவிற்கு அமெரிக்க அரசியல் தலைவர்களும், வர்த்தக தரப்பும் அலட்சியப்படுத்துகிறது என்பதற்கு உதாரணமாக இருக்கின்றது.

இந்த சிறிய கரீபியன் தீவு பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளால் அழிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்கள் கல்வியறிவுவற்றவர்களாகவும், சத்தூட்டம் குறைந்தவர்களாகவும் மற்றும் மிகச்சிறிய உள்கட்டமைப்பு வசதிகளாலும் சிதைந்து கொண்டிருக்கின்றனர். மிகத் தொலைதூரத்தில் இருக்கும் இத் தீவில் குறைந்த ஊதியங்கள் நிலவினாலும் மேற்கு நாடுகள் இங்கு கணிசமான முதலீடுகளை செய்வதற்கு முன்வரவில்லை. கடந்த இரு தசாப்தங்களாக கணிசமான முதலீடுகளும் இல்லை. 1980 களின் ஆரம்பத்திலும், நடுவிலும் துவக்கப்பட்ட ஆயத்த நிலையங்கள் கூட மூடப்பட்டுவிட்டன. அல்லது வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டுவிட்டன.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது, வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களையும் மற்றும் விருப்பத்தையும் சூறையாடும் நோக்கில் நிறைவேற்றுவது மட்டுமே அடிப்படை உண்மையென்று எடுத்துக்கொள்ளக்கூடாது. இயற்கை வளங்கள் மற்றும் அவற்றின் சந்தைகளைக் கைப்பற்றி பாதுகாப்பது மட்டுமே அதன் முடிவு செய்யப்பட்டவையாகயில்லை. எண்ணெய் வளம் மிக்க ஈராக் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிகழ்ச்சிகளில் கூட இதர காரணிகள் செயல்படுகின்றன. இதில் அடங்குவது என்னவெனில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கை ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் உள்ள போட்டியாளர்களுக்கு எதிராக நிலைநாட்டுவதும் மற்றும் உலகின் எண்ணெய் வளங்கள் மீது தனது ஆதிக்கப்பிடியை இறுக்குவதும் ஆகும். மற்றும் புஷ் நிர்வாகம் போரைப் பயன்படுத்த முயற்சிப்பது என்பது, அமெரிக்க மக்களின் கவனத்தை உள்நாட்டில் பெருகிவரும் சமூக, பொருளாதார சிக்கல்களிலிருந்து திசை திருப்புவதற்குமாகும்.

நாம் கீழே சுட்டிக்காட்டப் போவதைப்போல், ஹைட்டியில் நடப்பு அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பானது, கரீபியன் பிராந்தியத்தில் அமெரிக்காவினுடைய பங்கான முக்கிய பொருளாதார, இராணுவ மற்றும் பூகோள அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதாக உள்ளது. ஹைட்டியில் நடக்கும் கொந்தளிப்புக்கள் புஷ் நிர்வாகத்தின் நிகழ்ச்சி நிரலை கீழறுக்காத வகையில் வாஷிங்டனுக்கும், வோல் ஸ்ட்ரீட்டுக்கும் ஒத்திசைந்து போகின்ற அரசாங்கத்தை போர்ட் -ஓ- பிரின்சில் ஸ்தாபிப்பது அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது.

அமெரிக்காவோடு புவியியல் அடிப்படையில் மிக நெருக்கமாக உள்ள பெரிய கரீபியன் பிராந்தியத்தில் உள்ள பனாமாக் கால்வாய் மற்றும் வெனிசூலா எண்ணெய் ஆகியவை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய திருப்பமாக சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் இடம்பெற்றது. அப்போது இந்த நாடுகள் பனிப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து கொண்டு, 1960 களில் கியூபாவில் ஸ்ராலினிச சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிரான மோதலிலும், 1980 களில் மத்திய அமெரிக்காவில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையில் ரத்தக்களறி தலையீட்டிலும் அமெரிக்காவின் உந்துதளமாக பயன்பட்டன.

அமெரிக்க-ஹைட்டி ரத்தக் களறி வரலாற்றை எடுத்து விளக்குவதற்கு இது இடமல்ல. ஆனால் குறைந்தபட்சம் 1915 முதல் ஹைட்டி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிக்கிடந்ததால்தான் இவ்வளவு மோசமான வறுமைக்கு ஆளானது என்பதை அறிந்து கொள்ளாமல் இன்றைய ஆக்கிரமிப்பை புரிந்து கொள்ள முடியாது. அந்த நேரத்தில் அமெரிக்க கடற்படையினர் ஹைட்டியை ஆக்கிரமித்துக்கொண்டனர். 1936 வரை அந்த ஆக்கிரமிப்பு நீடித்ததற்கு மூன்று பிரதான புறநிலைகள் அடிப்படையாக இருந்தன. அவை, ஹைட்டி மீது ஜேர்மனியின் ஆக்கிரமிப்பு நோக்கத்தை முறியடிப்பது, பனாமாக் கால்வாய் மீது அமெரிக்காவின் பிடியை இறுக்குவது மற்றும் ஹைட்டியின் அரசையும், அரசியல் பொருளாதாரத்தையும் மீள் ஒழுங்கமைத்து அந்நாட்டு விவசாய வளங்களையும், மலிவு தொழிலாளர்களையும் அமெரிக்க கம்பெனிகள் பயன்படுத்திக் கொள்வதாகும். (பதினெட்டாவது நூற்றாண்டின் பெரும்பகுதி ஹைட்டி உலகின் மிக லாபம் தரும் காலனியாக விளங்கி வந்தது.)

1990 களில் அமெரிக்கத் துருப்புக்கள் திரும்பவும் இந்த நாட்டுக்கு வந்தன. இடைப்பட்ட ஆறு தசாப்தங்களில் ஹைட்டி அமெரிக்காவின் நிழலாகவே விளங்கி வந்தது. வாஷிங்டன், ஹைட்டியில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக டுவாலியரின் (Duvalier) ரத்தக்களறி சர்வாதிகாரத்தை தாங்கிப் பிடித்து நின்றது. இது உண்மையிலேயே கரீபியன் பிராந்தியத்தில், டுவாலியர்கள் மற்றும் நிக்கரகுவாவில் சர்வாதிகார சொமோசா (Somoza) குடும்பத்தினர்கள் அமெரிக்காவின் பனிப்போர் மூலோபாயத்தில் முக்கிய தூண்களாக கருதப்பட்டனர்.

அமெரிக்க ஆதரவு டுவாலியர் சர்வாதிகார வீழ்ச்சியின் தாக்கத்தை கட்டுப்படுத்தல்

1986 முதல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான அம்சம் ஹைட்டியைப் பொறுத்தவரை டுவாலியர் சர்வாதிகார வீழ்ச்சியின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக, இதற்கெல்லாம் மேலாக ஹைட்டியின் சமூக-பொருளாதார நிலைக்கு எந்த சவாலும் தோன்றாத நிலையை உருவாக்குவதும், அமெரிக்க நிறுவனங்களுக்கு முதலீடுகள் மற்றும் சந்தைகளை உருவாக்குவதும் மட்டுமல்ல ஹைட்டி முதலாளித்துவ வர்க்கத்தில் தங்களது வாடிக்கையாளர்கள், நண்பர்களின் சொத்துக்களை காப்பதும் அதன் வெளியுறவுக் கொள்கையின் குறிக்கோளாக இருந்தது.

தொடக்கத்தில் வாஷிங்டன் டுவாலியரை அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றி, மக்கள் ஆதரவுடன் கூடிய முறைமையினைப் பெறும் புதிய அமெரிக்க சார்பு ஆட்சியை உருவாக்க முடியும் என்று நம்பியது. அத்துடன், டுவாலியர்கள் "நெருங்கிய முதலாளிகளின்" ஒரு சிறிய தட்டினரை முன்னுக்குக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு சொந்தமான கம்பெனிகளையும், அரசாங்க உரிமம் பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி ஏகபோகத்தையும், சுங்கவரித் தடைகளையும் தகர்ப்பதை இது ஆதரிக்கும் என்று வாஷிங்டன் நம்பியது.

ஆனால் டுவாலியர் ஆட்சியை கவிழ்த்ததன் மூலம் படுமோசமான வறுமை நிலையை நிலைநாட்டும் புதிய நிலையான அரசியல் அடிப்படையை பராமரிக்க முடியுமென்று வாஷிங்டன் மேற்கொண்ட முயற்சி கவிழ்ந்து விட்டன. டுவாலியருக்கு பிந்திய ஆண்டுகளில் ஒருவர் பின் ஒருவராக இராணுவ கடுமையானவர்களும், சிவிலியன் தலைவர்களும் பதவிக்கு வருவதும் போவமாக இருந்தனர். அதேபோல தொழிலாள வர்க்கமும், விவசாயிகளும் அரசாங்க ஒடுக்குமுறையை எதிர்த்து தங்களுக்கு சிறந்த வாழ்வு வேண்டுமென்று கோரி வந்தனர்.

1990 ல் வாஷிங்டன், ஹைட்டியின் அடுத்த அரசாங்கம் தேர்தல்கள் மூலம் முடிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அப்போது அமெரிக்கக் கொள்கையை உருவாக்கியவர்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளரான உலக வங்கியின் முன்னாள் அதிகாரி மார்க் பசனை (Marc Bazin) தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்துவிட முடியும் என்றும், ஹைட்டி வெகுஜனங்களின் கண்களுக்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அரசாங்கத்தை சட்டப்படி தந்துவிட முடியுமென்றும் நம்பினார்கள். ஆனால், 30 ஆண்டுகளாக வெறுப்புக்குள்ளான டுவாலியர்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததை பெரும்பாலான ஹைட்டி ஏழை மக்கள் மறக்கவில்லை. ஆதலால், மார்க் பசனை அதிகமாக வாஷிங்டன் ஒரு தரகனாக நடத்தியதைக் கண்ட இம் மக்களுக்கு மேலும் சந்தேகத்தை வளர்த்தது.

இந்தச் சூழ்நிலைகளில், முன்னாள் பாதிரியாரான ஜோன் பெர்ட்ரண்ட் அரிஸ்டைட் (Jean-Bertrand Aristide) 1980 களின் இடைப்பட்ட காலத்தில் அரசியலில் உதித்து, சிதைந்து போன டுவாலியர் ஆட்சி மற்றும் அதற்குப் பின்னரான இராணுவ ஆட்சி வந்த நேரத்தில் முன்னணித் தலைவரானார். அவர் ''அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தேர்தல்களை'' புறக்கணிக்க வேண்டும் என்ற முந்திய தனது நிலைப்பாட்டை திடீரென்று மாற்றிக்கொண்டார். அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடிவுசெய்து, வர்த்தக தலைவர்கள் மற்றும் அடித்தள அமைப்புக்களான லாவலாஸ் (flood in creole) கூட்டணியோடு சேர்ந்து போட்டியிட்டார். தனியார் வர்த்தகத் துறைக்கு வேண்டுகோள் விடுப்பதன்மூலம், மிகப்பரவலான சமூக சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக உறுதியளித்தார். மற்றும் இராணுவத்திற்கும் மக்களுக்குமிடையேயான ''நெருக்கமான உறவு'' நிலைநாட்டப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இதன் மூலம் கிடைத்த அரிஸ்டைட்டின் பாரிய வெற்றி வாஷிங்டனை முழுமையாக வியப்பில் ஆழ்த்தியது.

1990 தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு

அடுத்த பதினான்கு ஆண்டுகள் அமெரிக்காவினது கொள்கை இந்தத் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இருந்தது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களில் இந்த முயற்சிகள் நடைபெற்றபோது, அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினரிடையே எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பது தொடர்பாக கடுமையான பிளவுகளும் நிலவின. 1990 தேர்தலில் முதல் தடவையாக ஹைட்டியின் மக்களே ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தனர். வாஷிங்டன் அல்லது ஹைட்டியின் நேர்மையற்ற முதலாளித்துவ செல்வந்த தட்டு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவில்லை.

அரிஸ்டைட் பதவியேற்ற 8 மாதங்களில் 1991 செப்டம்பர் மாதம் முதலாவது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றது. மூத்த புஷ் நிர்வாகத்தின் உண்மையான ஆதரவு இருக்கிறது என்பதால் ஜெனரல் ராகுல் செட்ரா (Raoul Cédras) தனது ரத்தம் சிந்தும் இராணுவ சதியை மேற்கொண்டார். அதற்குப்பின்னர் இராணுவம் மற்றும் CIA ஆதரவுபெற்ற இணை இராணுவக் கொலைக் குழுக்கள் ஆகியன அரிஸ்டைட்டின் ஆதரவாளர்கள் வலுவாக நிறைந்திருக்கும் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் கொடூரமான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டன. ஆயிரக்கணக்கான ஹைட்டி மக்கள் விரக்தியடைந்து தப்பித்து நெரிசல் மிக்க படகுகளில் பயணம் செய்து புளோரிடாவிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் அமெரிக்க மண்ணில் அகதியாவதை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கியூபா, குவாண்டநாமோ அமெரிக்கத் தளத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

1992 அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பின் தொடக்க காலத்தில் புதிய ஜனநாயகக் கட்சி நிர்வாகம் ஹைட்டியின் இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. மாறாக, ஜெனரல் ராகுல் செட்ராஸ் சர்வாதிகார ஒடுக்குமுறையிலிருந்து தப்பி ஓடிவந்த அகதி மக்கள் மீது மனித நேயமற்ற முறையில் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. தான் பதவிக்கு வருமுன் இதனைக் கண்டித்து வந்த கிளிண்டன், மூத்த புஷ்ஷின் அகதிக் கொள்கையையே தனது ஆட்சியிலும் கடைப்பிடித்து வந்தார். 1993 ல் அமெரிக்க கடற்படைக் கப்பலில் ஆயுதம் எதுவுமில்லாது ஐ.நாவால் ''அமைதி காப்பு அணியினரை'' ஹைட்டிக்கு கொண்டு வருவதற்கு முயற்சி நடந்தபோது செட்ராசின் ஆதரவாளர்கள் போர்ட்-ஓ-பிரின்ஸ் துறைமுகத்தில் அந்தக் கப்பல் மீது கற்களால் தாக்கி அவர்களை இறங்கவிடாது தடுத்தனர். அத்துடன் அதே ஆண்டில் சோமாலியாக் கொள்கையிலும் நிர்வாகத்திற்கு படுதோல்வி ஏற்பட்டது. ஜெனரல் செட்ராவினுடைய ஆட்சி ஹைட்டியில் நீடிப்பது சர்வதேச அளவில் அமெரிக்காவின் கெளரவத்தை பாதிக்கும் என்று உள்நாட்டு எதிர்கட்சிக்காரர்களால் கிளிண்டன் நிர்வாகத்தை எள்ளி நகையாடும் வகையை உருவாக்கி வருவதாகவும் கிளிண்டன் நிர்வாகம் நியாயம் கற்பித்தது.

இதற்குப் பின்னர், செட்ராசை பதவியிலிருந்து விரட்டுவதற்கு கிளிண்டன் நிர்வாகம் ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டது. இதற்கிடையில் அரிஸ்டைட்டும் அமெரிக்காவிற்கு விசுவாசமாக நடந்து கொள்வதான உறுதிமொழியைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். செட்ராசையும் அவரது ஆதரவாளர்களையும் ஹைட்டி வெகுஜனங்கள் எதிர்ப்பதும், தங்களது ஆதரவிற்காக ஹைட்டிய பாரம்பரிய அரசியல் பொருளாதார செல்வந்த தட்டு நாடிநிற்பதும் வாஷிங்டனில் தான் என்று 1991 ல் அரிஸ்டைட் பிரகடணப்படுத்தினார்.

இதற்குக் கைமாறாக கிளிண்டன் நிர்வாகம் அரிஸ்டைட்டை மீண்டும் பதவியில் அமர்த்தியது. தான் வெளிநாட்டில் மூன்று ஆண்டுகளை கழித்தாலும் தனது ஐந்தாண்டு ஜனாதிபதி பதவிக்காலம் நீடிக்கப்படமாட்டாது என்பதற்கு முதலில் அரிஸ்டைட் இணக்கம் தெரிவித்தார். இரண்டாவதாக வர்த்தக செல்வந்த தட்டினருடைய முன்னணி உறுப்பினர்களையும் பழைய டுவாலியர் அரசியல் இயந்திரத்தையும் தனது அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ள உறுதியளித்தார். மூன்றாவதாக அவர் எழுத்து மூலம் தந்த உறுதிமொழியில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளைப்படி அரசாங்க கம்பெனிகளை தனியார்மயமாக்கவும் சமூக செலவினங்களை வெட்டி ஒழிக்கவும் சம்மதித்தார்.

இதை வேறு வார்த்தைகளில் விளக்குவதென்றால், 1990 தேர்தல்களில் முறியடித்த ''அமெரிக்க வேட்பாளர்'' மார்க் பசனின் மறு அரசியல் பிறவியாக அவதாரம் எடுத்த அரிஸ்டைட், 20,000 ம் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளோடு 1994 செப்டம்பரில் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.

அப்படியிருந்தும் குடியரசுக் கட்சி அரிஸ்டைட் மீண்டும் திரும்பியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அக்கட்சியின் வலதுசாரி சக்திகளான, குறிப்பாக செனட்டர் ஜேஸ் கெல்ம்ஸ் (Jesse Helms) இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். பல ஆண்டுகள் செனட் வெளியுறவுகள் குழு தலைவராக பணியாற்றிய இவர், பைத்தியம் பிடித்த கம்யூனிஸ்ட் என்று அரிஸ்டைட்டை கண்டித்தார். 2000 ம் ஆண்டுத் தேர்தலில் வெள்ளை மாளிகையை பிடித்துக்கொண்ட அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டில் அடங்கியிருந்த சக்திகளின் கொச்சையான உணர்வுகள் இதில் வெளிப்பட்டன. இந்தப் பூமண்டலத்தில், சொத்துக்களை சூறையாடுவதற்கு தனியார் எவ்வளவு அருவருக்கத்தக்க முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். ஆனால், அந்த உரிமையை பாதிக்கின்ற வகையில் எந்த முயற்சி நடந்தாலும், அதை மிகப்பெரிய தேசத் துரோக குற்றத்திற்கு இணையானது என்று அவர்கள் கருதினார்கள். இத்தகைய சக்திகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தாங்கி நிற்பவர் என்று நிரூபிக்கப்பட்ட பில் கிளிண்டன் போன்றவர்களின் நிர்வாகத்தையே ஜீரணித்துக்கொள்ள முடியாத நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து ஹைட்டியின் ஏழை மக்களிடையே மிகப்பெரும் ஆதரவைப் பெற்றுள்ள பழைய பாதிரியாருக்கு அமெரிக்கா ஆதரவு தருவதை எப்படி சகித்துக் கொள்வார்கள்?

கிளிண்டன் நிர்வாகம் திட்டமிட்டதைவிட அரிஸ்டைட் ஆட்சியில் நீடித்தார். 1995 தேர்தல் பிரச்சாரத்தில் தனது வாரிசான ரெனே பிரேவா (René Préva) என்பவரை ஜனாதிபதி வேட்பாளராக தேர்த்தெடுத்தார். தேர்தலில் பிரேவா வெற்றிபெற்று, மிகப்பெருமளவிற்கு தனியார்மயமாக்கல் திட்டத்தை மேற்கொண்டார். பொதுத்துறைகளில் பெருமளவிற்கு ஆட்குறைப்பு நடந்தது. உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான அரசு மானியங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஹைட்டியின் அரசியலமைப்பு ஒருவர் இரண்டு முறை ஜனாதிபதியாவதற்கு தடைவிதிக்கிறது. அப்படியிருந்தும் 2000 ம் டிசம்பரில் அரிஸ்டைட் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அந்த வெற்றியில் அவரது Lavalas கட்சிக்கு பொதுமக்கள் உற்சாகமான ஆதரவைக் காட்டவில்லை. ஆனால் பாரம்பரிய ஆளும் செல்வந்தட்டிற்கு பொதுமக்களது விரோத போக்கைத்தான் இந்த முடிவு வெளிப்படுத்தியது.

இந்த தட்டுக்கள், அரசியலில் தொடர்ந்தும் ஓரங்கட்டப்பட்டு வருவதால் ஆத்திரமடைந்து ஹைட்டியின் வறுமை, பின்தங்கிய நிலை ஆகியவற்றிற்கிடையே அரச இயந்திரத்தை கைப்பற்றி, அதன் மூலம் செல்வத்தைக் குவித்து அதையே கடினமான அதிகார போராட்டத்திற்கு முக்கிய அம்சமாக எடுத்துக்கொண்டது. இதற்கு முன்னர், இத்தட்டுக்களினது ஆதிக்கத்திற்கு எதிராக பொதுமக்களது சவாலுக்கு ஆதரவாக நின்ற அரிஸ்டைட், நாட்டின் ஏழை மக்களுக்கு பயன்தருகிற வகையில் சொத்துக்கள் உடைமையில் மறுபங்கீடு செய்ய வேண்டும் என்று கூறியவர் ஆவர். இதுவே, இந்தப் பாரம்பரிய செல்வந்த தட்டு அரிஸ்டைட் மீது மிகப்பெரிய ஆத்திரம் கொண்டதற்கு காரணமாகும்.

குடியரசுக் கட்சி ஸ்தாபனமும் அரிஸ்டைட் மீது மிகக் கசப்பான விரோதப் போக்கை கொண்டிருந்தது. அவர் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டதானது, கிளிண்டனின் ''குற்றங்களில்'' ஒன்று எனக் கூறியது. அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்ற ''தேசத்தைக் கட்டும்'' திட்டத் தோல்விக்கு முதலாவது சாட்சியான காட்சி ஹைட்டி என்று அரிஸ்டைட் தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டதோடு, கியூபாவுடன் அரிஸ்டைட் நேச உறவுகளை வளர்த்துக் கொண்டார். அதற்குப்பின்னர் ஹுயூகோ சாவேசினுடைய (Hugo Chavez) வெனிசூலா அரசாங்கத்தோடு நட்புக் கொண்டார். இது குடியரசுக்கட்சி வலதுசாரிகளை மேலும் ஆத்திரமூட்டியது. அத்துடன் புளோரிடாவில் வாழ்ந்து கொண்டிருக்கிற, நாடு கடத்தப்பட்ட காஸ்ரோவின் எதிர்ப்பாளர்களும் அரிஸ்டைட் மீது ஆத்திரம் கொண்டனர். இந்த நாடுகடத்தப்பட்டவர்கள் குழு லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் தொடர்பாக அமெரிக்கா வகுக்கும் கொள்கைகளில் மிகப் பெருமளவிற்கு செல்வாக்கு பெற்றிருக்கின்றனர்.

2000 மே தேர்தலில் Lavalas கட்சி வெற்றிபெற்ற பின்பு, கிளிண்டன் நிர்வாகம் மீண்டும் பாரம்பரிய செல்வந்த தட்டினரை அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு அரிஸ்டைட்டுக்கு நிர்பந்தம் கொடுத்தது. வாஷிங்டனுக்கு அதிக ஆதரவான நாடாக ஹைட்டி விளங்கவேண்டும் என்பதற்காக அவ்வாறு வாஷிங்டன் முயன்றது. அந்த முயற்சியில் ஒரு பகுதியாக சொற்ப ஜனநாயக நடைமுறை மீறலை மிகப்பெரிய தேர்தல் மோசடியென்று கிளிண்டன் நிர்வாகம் அறிவித்தது. ஹைட்டிக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் உதவியையும் கடனையும் தடுத்து நிறுத்த வாஷிங்டன் நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த முயற்சியாலும், 2000 தேர்தல்களை புஷ் கொள்ளையடித்ததாலும் ஊக்குவிக்கப்பட்ட, ஹைட்டியின் வலதுசாரி எதிர்கட்சி சக்திகள் சர்வதேச அளவிலான குடியரசுக் கட்சி அமைப்பின் அரசியல் மற்றும் நிதியுதவியோடு தாக்குதலைத் தொடுக்க முயன்றது. புஷ் ஆட்சிக்கு வந்தவுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹைட்டி ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதுடன், தாங்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை ஹைட்டியின் ''ஜனாதிபதியாக'' அறிவித்து, அந்தப் போட்டி அரசிற்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தருவதற்கான திட்டமும் தீட்டப்பட்டன.

இருப்பினும், அதிர்ச்சியளிக்கின்ற வகையில் வாஷிங்டனிலிருந்து இத்தட்டுகளுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை. புஷ் நிர்வாக அதிகாரிகள் எதிர்கட்சிக்காரர்களிடம் அரிஸ்டைட்டை கவிழ்ப்பதற்கு போதுமான பொதுமக்களது ஆதரவு இல்லை என்று மதிப்பிட்டனர். அதை உறுதிப்படுத்துகிற வகையில் 2000 தேர்தலில் எதிர்கட்சிகள் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. ஆனால், மிக முக்கியமாக வாஷிங்டனுக்கு அப்போது மிக நெருக்கடியான கவலைகள் இருந்தன. அதில் முதல் கவலை ஈராக் மீது ஆக்கிரமிப்பதற்கான திட்டத்திற்கு ஏற்றவகையில் சாக்குப்போக்குகளை கற்பனையாக உருவாக்க வேண்டிய அவசியம் ஆகும்.

எனவே, புஷ் நிர்வாகம் அமெரிக்க ஆதிக்கம் மேலோங்கியுள்ள OAS (Oraganisation of American States) மற்றும் Caricom (Caribbean Community) அமைப்புக்களின் பொறுப்பில் இப்பிரச்சனையை விட்டுவிட்டது. இதன்மூலம் எதிர்கட்சித் தலைவர்களுக்கு பொருளாதார உதவி கிடைக்கும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அரிஸ்டைட்டை மேலும் வலதுசாரி பக்கம் கொண்டு சென்றது. அரிஸ்டைட் திரும்ப திரும்ப OAS கோரிக்கைகளை ஏற்று அடிபணிந்தார். எடுத்துக்காட்டாக ஒன்பது Lavalas செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர் ரத்து செய்ய இணங்கியபோதும், எதிர்கட்சி வலதுசாரிகள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். OAS அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கான உடன்படிக்கைக்கு அரிஸ்டைட் அதிகம் செய்ய வேண்டுமென்று கோரியது.

அரிஸ்டைட் ஆட்சிக்கவிழ்ப்பும் அமெரிக்க ஆக்கிரமிப்பும்

2003 இறுதிவாக்கில் அரிஸ்டைட் ஆட்சி ஊழலில் சிக்கிக்கொண்டதால் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் அதிகரித்ததுடன் வெளிநாட்டு உதவிகளும் வெட்டப்பட்டன. இதற்கு மாற்று எதுவும் இல்லாததால் அராசங்க ஒடுக்குமுறைகள் அதிகரிக்கப்பட்டதோடு, போர்ட்-ஓ-பிரின்ஸ் குடிசைப் பகுதியிலுள்ள கிரிமினல் லும்பன் சக்திகளையும் திரட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அரிஸ்டைட்டிற்கு மக்களது செல்வாக்கு மிகப்பெருமளவில் குறைந்து கொண்டு வந்ததால் துணிச்சல் பெற்ற ஹைட்டியின் பாரம்பரிய வர்த்தக மற்றும் அரசியல் செல்வந்த தட்டுக்கள், அரசாங்கத்தை அதற்கு முன்னர் ஆதரித்துவந்த மத்தியதர வர்க்கத்தையும் சேர்த்துக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க புதிய முயற்சிகளை மேற்கொண்டன. அவர்கள், பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று கூறிக்கொண்டாலும் புதிய தேர்தல்களை நடத்துவதில் ஒத்துழைக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அதற்கு பதிலாக புஷ் நிர்வாகம் தலையிடுவதற்கு நெருக்குதல்களை தொடுக்கும் வகையில் குழப்பம் விளைவிக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஆரம்பத்தில் புஷ் நிர்வாகம், ஹைட்டி மீது படையெடுக்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல், முந்திய கொள்கையான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தையே வலியுறுத்தியது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் அமெரிக்கப்படைகள் மிகப்பெருமளவில் குவிக்கப்பட்டுவிட்டதால் அமெரிக்கப் படைகள் மிகக்குறைந்த அளவிற்கே இருந்தன. அது மட்டுமல்லாமல் உள்நாட்டில் பெருகிவரும் பொருளாதாரப் பிரச்சனைகளாலும், ஈராக் போரை நியாயப்படுத்த புஷ் நிர்வாகம் கூறிவந்த பொய்கள் அம்பலத்திற்கு வந்துவிட்டதால் புஷ் நிர்வாகத்திற்கு மிகப்பெருமளவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வந்ததாலும், நிர்வாகம் முதலில் தலையிடத் தயங்கியது.

ஆனால், ஹைட்டி நெருக்கடியில் புஷ் நிர்வாகமானது, தான் விரும்பாத கவனத்தைச் சிதறச்செய்யும் நடவடிக்கை என்று கருதினாலும், நீண்ட காலமாக அரிஸ்டைட் அரசாங்கத்தை கவிழ்க்கவும், ஹைட்டியில் உள்ள தனது வாடிக்கையாளர்களான வர்த்தகர்கள் குழுவின் கட்டுத் திட்டமற்ற மேலாதிக்கத்தை மீட்கவும், இந்த நெருக்கடியால் வாய்ப்புக் கிடைத்திருப்பதை புறக்கணிக்கவும் விரும்பவில்லை.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரம்ஸ்பீல்ட் ஹைட்டிக்கு துருப்புக்களை அனுப்பும் திட்டமேதும் இல்லை என்று அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற மூன்றாவது அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கு புஷ் கட்டளையிட்டார்.

ஏன் இந்த மாற்றம்?

ஹைட்டியில் கொந்தளிப்பு ஏற்படுமானால் வறுமையில் வாடும் பீதியுற்ற ஹைட்டி மக்கள் ஒட்டுமொத்தமாக தப்பி ஓடிச்சென்று பக்கத்து நாடுகளில் குடியேறும் போது, கரீபிய பிராந்திய முழுவதிலும் குழப்பம் ஏற்படுமென்று நிர்வாகம் அஞ்சியது. இதில் முதலாவது கவலை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் கேந்திர அரசியல் போர்க்களமாக விளங்கப்போகும் புளோரிடா பகுதியில் அகதிகள் பெருமளவில் குடியேறுவதால் ஏற்படும் தாக்கமாகும். இதனால் டோமினிக்கன் குடியரசிற்கு மேலும் அதிர்ச்சி ஏற்படும் என்றும் வாஷிங்டன் பயந்தது. இந்த நாட்டில் அமெரிக்க கம்பெனிகளின் தயாரிப்பு நிலையங்கள் பல உள்ளன. கடந்த ஆண்டில் டோமினிக்கன் குடியரசில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இந்த நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி திவாலாகிவிட்டது. இதனால் சமூக போராட்டங்கள் பெருகியுள்ளன.

ஹைட்டிக்கு அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவதற்கு மேலும் மிக முக்கியமான காரணம் என்னவெனில், அரிஸ்டைட்டிற்கு எதிராக உருவாகும் ஆட்சிக் கவிழ்ப்பால் வாஷிங்டனின் கட்டளைகளுக்கு ஏற்ற அரசாங்கத்தை அங்கு உருவாக்கிவிட முடியும் என்பதுதான் ஆகும்.

முந்திய சர்வாதிகார ஆட்சிகளில் இருந்த குண்டர்கள் தலைமையில் செயல்பட்டு வந்த கிளர்ச்சிப் படைகளை, அரிஸ்டைட் அரசாங்கத்தை நீக்குவதற்காக பயன்படுத்திக் கொள்வதற்கு புஷ் நிர்வாகம் தயாரான நிலைப்பாடானது, சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க அதிர்ச்சியை உருவாக்கியிருப்பதுடன் புஷ் நிர்வாகத்தின் கூற்றுக்களை சர்வதேச அரங்கில் சிதைத்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் சக்தி என்ற புஷ் நிர்வாகத்தின் கூற்றை சீர்குலைக்கிறது. கிளர்ச்சிக்காரர்கள் போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்ளே நுழைகின்ற தருவாயில் அமெரிக்கத் துருப்புக்களை ஹைட்டிக்கு அனுப்பி அரிஸ்டைட்டை அவரது நாட்டைவிட்டு அவசரமாகக் கடத்திச் சென்றுவிட்டு, புஷ் நிர்வாகம் அரசியல் சட்ட அடிப்படையில் நிர்வாக மாற்றத்தை கண்காணிக்கிறோம் என்று எப்படி சொல்ல முடியும்? மேலும் வாஷிங்டன், கிளர்ச்சிக்காரர்களின் புதிய ஆட்சிக்கு மிகக்குறைந்த பட்சம் ஏதாவது சர்வதேச அங்கீகாரம் இருக்குமானால், அதை சீர்குலைக்கின்ற வகையில் மிகக் கொடூரமான பயங்கரவாத நடவடிக்கைகளை அவர்கள் கட்டவிழ்த்துவிடாது உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பியது. இதனால், அரிஸ்டைட் ஹைட்டியைவிட்டு வெளியேற வேண்டுமென்று அமெரிக்கத் தூதரக மற்றும் இராணுவ அதிகாரிகளே நேரடியாக திரும்பத்திரும்ப கூறியதோடு, கிளர்ச்சிக்காரர்கள் ரத்தக்களறியில் ஈடுபடக்கூடுமென்று அரிஸ்டைட்டிற்கு நெருக்குதல்களைக் கொடுத்தனர்.

அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்பப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் மற்றொரு காரணம், கரீபியன் பகுதியில் அமெரிக்காவின் மேலாதிக்கம் தொடர்பான, அதன் வெளியுறவுக் கொள்கை நிறுவனத்தின் கண்டனங்களை மட்டுப்படுத்துவதாகும். அரிஸ்டைட் பதவி விலகவேண்டும் என்றும் அவர் பதவி விலகுவதற்கான நிர்பந்தம் வெற்றி பெற்றதும் தனது துருப்புக்களை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாகவும் பிரான்ஸ் அறிவித்தது. இது வாஷிங்டன் நிபுணர் குழுக்களிலும், நியூயோர்க் பத்திரிகை அலுவலகங்களிலும் அபாயமணி ஒலித்தது. வாஷிங்டன் நலன்களுக்கு உதவுவதற்காகத்தான் தனது படைகளை அனுப்ப முன் வருவதாகவும், அதற்கு எதிராக அல்ல என்றும் விரைவில் பிரெஞ்சு அரசாங்கம் தெளிவுபடுத்தியது. அப்படி இருந்தும் முன்னணி பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் புஷ் நிர்வாகம் அமெரிக்க பாரம்பரிய ''கொல்லைப்புறத்தில்'' முறையான கவனம் செலுத்தத் தவறிவிட்டது என்ற விமர்சனங்களை வெளியிட்டன.

இவற்றுடன், அமெரிக்க இராணுவத்தின் ஹைட்டி மீதான தலையீடானது, லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் வோல் ஸ்ரீட்க்கும், சர்வதேச நாணய நிதியம் மூலம் திணிக்கப்படும் தாராள பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் எதிர்ப்புக்கள் வளரும் என்ற கவலைகளில் இருந்தும் நடந்தது. இவை சாதாரணமாக கவலைகளல்ல. சென்ற வாரம் செனட் ஆயுதப்படைகள் குழுவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராணுவத்தின் தெற்குத் தலைமைத் தளபதி ஜேம்ஸ் டி. ஹில் பின்வருமாறு கூறினார்: ''கடந்த ஆண்டில் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் பாதுகாப்பு சித்திரம் மிகவும் சிக்கலாக வளர்ந்துள்ளது...... இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த சில தலைவர்கள், ஜனநாயக சீர்திருத்தங்கள் என்பன மக்கள் எதிர்பார்த்த பயன்களையும், சேவைகளையும் தரத் தவறிவிட்டது என்ற ஆழமான விரக்திகளை பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இவர்கள், சமூக மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் உருவாக்கப்பட்டுவிட்ட ஏமாற்றங்களை பயன்படுத்திக் கொண்டு வருவதால், அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகளை தூண்டிவிடும் தங்களது தீவிரமான நிலைப்பாடுகளை மேலும் வளர்ப்பதற்கு முடிகிறது.''

ஹைட்டியில் நடப்பு அமெரிக்க ஆக்கிரமிப்பின் குறிக்கோள்கள் மற்றும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தொடர்பான விவாதம் வாஷிங்டனில் தற்போது நடந்து வருகிறது. புதிய அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை உருவாக்கும் பணியை முன்னின்று நடத்துவதை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட புஷ் நிர்வாகம் ஆவலாக உள்ளது. --தற்போது சர்வதேச கவனம் வேறுபக்கம் திரும்பியுள்ளது--அத்துடன், கிளர்ச்சிக்காரர்கள் ஹைட்டி பாதுகாப்பு படைகளில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவதை இவர்கள் விரும்பலாம்.

எவ்வாறாயினும், ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் தன்மை என்னவென்றால் அது திரும்பத் திரும்ப ''தோல்வியடையும் அரசுகளை'' உருவாக்கிக்கொண்டு வருகிறது என்பதாகும். முற்றிலும் நியாயமற்ற, காலாவதியாகிவிட்ட சமுதாய கட்டுக்கோப்பை நிலைநாட்டவும், அமெரிக்க பூகோள அரசியல் மேலாதிக்கத்தை பாதுகாக்கவும் அமெரிக்கத் துருப்புக்கள் இவற்றிற்கு அனுப்பப்படுகின்றன.

Top of page