World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain: Aznar routed as a result of mass anti-war sentiment

ஸ்பெயின்: போர் எதிர்ப்பு உணர்வுகளால் அஸ்னர் படுதோல்வி

By Chris Marsden
16 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

வலதுசாரி மக்கள் கட்சி (PP) யின் பிரதமர் ஜோஸ்மரியா அஸ்னர் தோல்வியை தழுவிய ஸ்பெயின் பொதுத்தேர்தல் ஈராக்கிற்கு எதிராக வாஷிங்டன் போர்தொடுத்ததை அஸ்னர் அரசாங்கம் ஆதரித்தது தொடர்பான பொதுவாக்கெடுப்பாகவே அமைந்துவிட்டது. மூன்று நாட்களுக்கு முன்னர் மாட்ரிட் நகரத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பு கொடூரச்செயலால் 200பேர் கொல்லப்பட்டனர் 1500-பேர் காயமடைந்தனர். அந்த தாக்குதலை தான் அமெரிக்காவிற்கு ஆதரவு தந்ததை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொண்டார். அதற்குப்பின்னர் இந்தத் தேர்தல் முடிவு வந்தது. ஈராக் படையெடுப்பை விமர்சித்துவந்த சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE) இந்த தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றது, உலகம் முழுவதிலும் முக்கியமாக வாஷிங்டனிலும் லண்டனிலும் செயல்பட்டு வருகின்ற முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அதிர்ச்சி அலைகளை அனுப்பி உள்ளது.

இந்த வாக்குப்பதிவு போருக்கும் அதைத்தொடர்ந்து அரசாங்கம் கூறிவந்த பொய்களுக்கும் பொதுமக்களது ஆழமான, தீவிர எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த உணர்வுகள் ஸ்பெயினுக்குள் மட்டும் அடங்கிவிடுவதல்ல, ஐரோப்பா முழுவதிலும் அமெரிக்காவிற்குள்ளேயும் பொதுமக்களது உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துவதிலிருந்து போர்வெறி கொண்ட அஸ்னர், பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயர் அதற்கெல்லாம் மேலாக ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் ஆகியோருக்கு எதிராக மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கிறது.

ஸ்பெயின் நாட்டு அண்மைக்கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு 77.2-சதவீத வாக்குகள், 2000ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பதிவானதைவிட 8.5-சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் 42-சதவீத வாக்குகளை பெற்றிருக்கும் PSOE அரசாங்கத்தை அமைக்கிறது. PP- கட்சி 38-சதவீத வாக்குகளை பெற்றது.

PSOE வேறு எந்தக்கட்சியையும் விட கூடுதலாக 10.9-மில்லியன் வாக்குகளை பெற்றிருக்கிறது. 2000-தேர்தலில் இக்கட்சி பெற்ற வாக்குளைவிட இது 2.8-மில்லியன் அதிகமாகும். PP கட்சியின் வாக்குகள் 7-லட்சம் குறைந்துள்ளது. முதல் தடவையாக வாக்களிக்கும் உரிமைபெற்றுள்ள இளைஞர்கள் PSOE கட்சிக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

கடைசி நேரத்தில் வாக்காளர்களிடையே ஏற்பட்ட பரபரப்பின் காரணமாக மிகப்பெருமளவில் வாக்குச்சாவடிகளில் திரண்டனர். மாட்ரிட் குண்டுவெடிப்புக்கள் மற்றும் தொடக்கத்தின் எந்தவிதமான திட்டவட்ட ஆதாரமும் இல்லாமல் குண்டு வெடித்த குற்றவாளிகள் ETA பிரிவினைவாத Basque அமைப்பைச்சார்ந்தவர்கள் என்று அரசாங்கம் கூறியது காரணமாக PP கட்சியை ஆட்சியிலிருந்து இறக்கிவிடுவது என்ற உறுதியோடு வாக்காளர்கள் திரண்டனர். அல் கொய்தா இயக்கம் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள், ஆதாரங்கள், பெருகிகொண்டு வந்த நிலையில், அமெரிக்கப்படையெடுப்பிற்கு அஸ்னர் கொடுத்துவந்த ஆதரவுதான் ஸ்பெயினுக்கு அச்சுறுத்தலை பெருக்கியுள்ளது என்ற உணர்வு ஆரம்பத்திலிருந்து போருக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுவரும் ஸ்பெயினின் பெரும்பாலான மக்களிடையே ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வியாழனன்று ஏற்பட்ட துயர நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட சாவுகள், அரசியல் அடிப்படையில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை உட்குறிப்பாகக் கொண்டிருந்தது.

புஷ், பிரிட்டனின் பிளேயருக்கு அடுத்தபடியாக தனது ஐரோப்பிய சகாவாக அஸ்னரை கருதினார். அஸ்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி விளக்கியுள்ள வோல் ஸ்ரீட் ஜேர்னல் ஜனாதிபதி புஷ் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்கும் மத்திய கிழக்கை சீரமைப்பதற்கும் மேற்கொண்டுள்ள கொள்கைகளுக்கு இது மரண அடி என்று வர்ணித்திருக்கிறது. ''சோசலிஸ்டுகள் ஸ்பெயின் நாட்டில் ஈராக் போருக்கு எதிராக நிலவிய விரிவான எதிர்ப்புணர்வை பயன்படுத்திக் கொண்டனர். மாட்ரிட் குண்டுவெடிப்புக்களுக்கு Basque பிரிவினைவாதிகள் அல்லது அல்கொய்தா திட்டவட்டமாக குற்றவாளிதான் என்று நிரூபிக்கப்படாத நிலையில் அந்த குண்டுவெடிப்புக்களை சோசலிஸ்ட் கட்சி தெளிவாக பயன்படுத்திக்கொண்டது'' என அந்த பத்திரிகை எழுதியிருக்கிறது.

''ஜோர்ஜ் புஷ்ஷின் 'பயங்கரவாதத்தின் மீதான போரை" மிக உறுதியாக ஆதரித்து நிற்பதில் டோனி பிளேயருடன் ஸ்பெயின் ஆளுங்கட்சியான PP- சேர்ந்து கொண்டதால், ஆட்சியை இழந்துவிட்டது ஒரு அரசியல் பூகம்பம் தவிர வேறொன்றுமில்லை" என்று பிரிட்டனின் இன்டிபண்டட் பத்திரிகை விமர்சித்துள்ளது.

''ஈராக் தொடர்பாக வளர்ந்து வருகின்ற அதிருப்தி புஷ் தேர்தல் களத்தில் அவரது வாக்குகளை ஏற்கனவே சிதைந்துகொண்டு வருகிறது. போரை நியாயப்படுத்துவதற்கு பிளேயர் மேற்கொண்ட முயற்சி அவரது நம்பகத்தன்மையில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஸ்பெயினில் இப்போது ஆட்சி கவிழ்ந்துவிட்டது. சதாமை பதவியிலிருந்து நீக்குவதற்கு இந்த மூன்று நாடுகளும் மேற்கொண்டிருந்த முயற்சிகளின் அரசியல் சூழ்நிலைகளே இப்போது முழுமையாக மாற்றம் ஏற்படும் என்பதற்கான முகமன் கூறுகின்ற வகையில் ஸ்பெயின் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.''

அஸ்னர், புஷ் மற்றும் பிளேயரின் வலதுசாரி கொள்கைகளுக்கு விரிவான அடிப்படையில் பொதுமக்களது ஆதரவு உள்ளது என்ற ஒரு தவறான சித்திரத்தை ஊடகங்கள் உருவாக்கிக்காட்டின. ஸ்பெயின் தேர்தல் அந்த சித்திரத்தை சிதைத்துவிட்டது. அந்த தேர்தல் ஒரு முக்கியமான அரசியல் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது: இந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் மிகக்குறுகலான வட்டத்திற்குள் உள்ள சமுதாய அடிப்படை ஆதரவில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

அடோச்சா ரயில் நிலையத்திலும் இரண்டு சிறிய ரயில் நிலையங்களிலும் குண்டுகள் வெடித்து 200-பேர் மடிந்தனர் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் பலியாகிவிடகூடுமென்ற நிலையும் உள்ளது. இவ்வளவு பெரிய தாக்குதலுக்கு ETA- தான் காரணம் என்று பழிபோடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அம்பலப்படுத்துகிற வகையில் உடனடியாக வாக்காளர்கள் உருவாக்கியுள்ள கிரியா ஊக்கிதான் அஸ்னர்-ன் வீழ்ச்சி. பயங்கரவாத குண்டுவெடிப்புகளால் ஆத்திரமுற்றிருக்கும் மக்களை திசைதிருப்புவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிதான் மக்களது கோபத்திற்கு தூபம்போட்டு PSOE- ன் வெற்றியில் முடிந்திருக்கிறது.

ஸ்பெயினின் ஒற்றுமையை காப்பதிலும் பயங்கரவாத மூலோபாயங்களை எதிர்த்து நிற்பதிலும் மிக உறுதியாக இருப்பதாக அஸ்னர் தன்னைத்தானே சித்தரித்துக்கொண்டதன் காரணமாக, அந்த குண்டுவெடிப்புகளுக்கு ETA- தான் காரணம் என்று பழிபோடுவதில் PP- கட்சி மிகுந்த ஆர்வத்தோடு இருந்தது. அஸ்னர் இந்தப்பிரச்சனைகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டது தனது சிக்கன நடவடிக்கைகளிலும் சேமநல வெட்டுக்களிலும் இருந்து மக்களது கவனத்தை திசைதிருப்புவதற்காகத்தான். அதே நேரத்தில் பொதுமக்கள் கருத்துப்படி அல்கொய்தா அல்லது அதற்கு அனுதாபம் காட்டும் குழு காரணமென்று நிலைநாட்டப்படுமானால், PP- கட்சிக்கும் அதன் பிரதமர் பதவி வேட்பாளர் மரியனோ ரஜோயிக்கும் பாதகமாக அமைந்துவிடும் என்பதால் உடனடியாக ETA- மீது பழிபோட்டார்.

ஸ்பெயின் நாட்டு மக்களில் மிகப்பெரும்பாலோர், ஒரு கருத்துக்கணிப்பின் படி 90-சதவீதம் மக்கள் ஈராக் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 2003-ல் இரண்டுமுறை மில்லியன்கணக்காக மக்கள் திரண்டு போருக்கு எதிராக கண்டனப்பேரணிகளை நடத்தினர். பிரித்தானியாவில் தனக்கு சரிநிகர் பொறுப்பு வகிக்கும் டோனி பிளேயரைப் போல் அஸ்னரும் மக்களது உணர்வுகளை துச்சமாக மதித்து அமெரிக்காவின் காலனி ஆதிக்க நடவடிக்கைக்கு முழு ஆதரவு தந்தார்.

மாட்ரிட் குண்டு வெடிப்புக்கள் நடந்து சில நிமிடங்களில் PP- கட்சியின் தலைவர் ஒருவர் ETA- தான் பொறுப்பென்று பகிரங்கமாக அறிக்கை விட்டார். அன்று பிற்பகலில் வெளியுறவு அமைச்சர் Anapalacio தனது தூதர்களுக்கு வெளியிட்ட கட்டளையில், ''நீங்கள் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும் இந்த கொடூர தாக்குதல்களுக்கு ETA-தான் பொறுப்பு என்பதை உறுதிப்படுத்துகிற வகையில் அறிக்கை வெளியிடவேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் PP- ன் தந்திரங்கள் பலிப்பதாகத் தோன்றியது. மார்ச் 14-தேர்தல் கூட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டன. மார்ச் 12-ல் அதிகாரபூர்வமாக அஞ்சலி தினமாக எல்லாம் கொடுக்கப்பட்டது நினைவூட்டலுக்கு அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டது.

இது அதிகாரபூர்வமாக அரசியல் கட்சிசார்பு இல்லாத நிகழ்ச்சி, அப்படியிருந்தும் PP-கட்சி 11 மில்லியன் மக்கள் திரண்ட பேரணியில் ETA-வை கண்டிக்கும் பதாகைகளை உலவ விடுவதில் உறுதி செய்துகொண்டது. ஸ்பெயின் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தெருக்களில் வந்தபோது அதை தனது பிரச்சார இயக்கமாக பயன்படுத்திக் கொண்டது. இந்தப்பேரணிகள் "பயங்கரவாதத்தை முறியடிப்பதிலும் அரசியல் சட்டத்தை காத்து நிற்பதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதிலும்" ஸ்பெயின் நாட்டு ஐக்கியத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருப்பதாக அரசாங்கம் விளக்கியது. 1978-அரசியல் சட்டத்தை அரசாங்கம் எடுத்துக்காட்டியது ETA-வை குற்றவாளி என்று அடையாளம் காட்டுவதற்குத்தான். ஏனெனில் அந்த ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் சட்டத்தில் ஸ்பெயின் அரசின் ஒற்றுமையும், எல்லைப்புற ஒருமைப்பாடும் உட்குறிப்பாய் இனம்காட்டப்பட்டிருந்தது.

இந்தப்பேரணி அரசியல் சார்பு இல்லாதது என்ற கற்பனைக்கு PSOE கட்சி உடந்தையாக இருந்து உதவியது. அதன் தலைவர் Jose Luis Rodriguez Zapatero தனது கட்சிக்காரர்கள் இந்த கொடூரச்செயல்களுக்கு உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை மூடிமறைக்கும் முயற்சியை கிளறிவிடுகின்ற வகையில் எந்தவிதமான விவாதத்தையும் நடத்துவதை தவிர்க்க கட்டளையிட்டார். மாட்ரிட்டிலும் இதர இடங்களிலும் ஸ்பெயின் முழுவதிலும் அமைதிப்பேரணிகள் நடைபெற்றன. மாட்ரிட் 20,00,000-பேர் கலந்து கொண்டனர். ஊடகங்கள் மிகக்கட்டுப்பாடாக தேசிய ஒற்றுமையின் உருவகத்தை பேணிக்காப்பதற்கு மேலெழுந்த வாரியாக உருவாக்கிய நம்பகத்தன்மையை அரசாங்க நடவடிக்கை எதிரொலித்தது.

வாஷிங்டனும் லண்டனும் "பயங்கரவாதத்தின் மீதான" போரை நியாயப்படுத்துவதற்கு மாட்ரிட் துயரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கணக்கிட்டனர். ஐரோப்பாவின் செப்டம்பர் 11-ஆக இது அமையும் பயங்கரமான கொடூரச்செயல் என்பதால் மட்டுமல்ல, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கையை மேலும் வலதுசாரி பக்கம் முன்னெடுத்துச் செல்வதற்கு இது ஒரு சமிக்கை காட்டுவதாக எடுத்துக்கொண்டனர்.

வாஷிங்டனிலுள்ள ஸ்பெயின் தூதரகத்தில் புஷ் மாண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த மலர் வளையம் சாற்றினார். தனது நண்பர் என்றும் ETA-வின் எதிரி என்றும் அஸ்னர் -ஐ வர்ணித்தார். பிளேயர், அவரது வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா மற்றும் பிறர் பயங்கரவாதம் உலக சமாதானத்திற்கு புதிய அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டனர் மற்றும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதியளித்தனர்.

ஆனால் ஸ்பெயினின் தேசிய ஒற்றுமை தோற்றம் கானல்நீர் ஆக இருந்தது. வாரக்கடைசியில் PP- மீது மக்களது ஆத்திரம் வளர்கின்ற வகையில் ETA-தான் பிரதான சந்தேகத்திற்குரிய அமைப்பு என்று அரசாங்கம் வலியுறுத்திக் கொண்டே வந்தது. அந்த சந்தேகத்திற்கு எதிராக ஆதாரங்கள் பெருகிக்கொண்டு இருந்த நிலையிலும் அரசாங்கம் அதே நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தது.

ETA-இரண்டுமுறை தனக்கு பொறுப்பில்லை என்று அறிவித்தது. Cadena SER-வானொலி நிலையம் புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தாக்குதல்களை இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் நடத்தினார்கள் என்பது 99-சதவீதம் உறுதியானது என்று குறிப்பிட்டது. கைது செய்யப்பட்ட 5-பேரில் 3-பேர் மொராக்கோ நாட்டைச்சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் ஏற்கனவே அல்கொய்தா ஆதரவு குழுவோடு தொடர்புள்ளவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

இறுதியாக, வாக்குப்பதிவு நடந்த நாளின் காலையில் அரசாங்கம் ஒரு வீடியோ படச்சுருளை குப்பைத்தொட்டியில் கண்டுபிடித்ததாகத் தெரிவித்தது. அல்கொய்தா ஐரோப்பிய தளபதி என்று கூறிக்கொண்டுள்ள தன்னை அபு-துஜான் அல்-ஆப்கனி என்று கூறிக்கொண்டவர், இந்த குண்டுவெடிப்புகளுக்கு பொறுபேற்றுக் கொண்டிப்பதாகவும் "கிரிமினல் புஷ்-உடனும் அவரது கூட்டாளிகளுடனும் ஒத்துழைத்த உங்களது நடவடிக்கைக்கு இது பதில்" என்று அவர் கூறியிருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்தது.

இந்த சான்றுகள் எதையும் மேலெழுந்த வாரியாக ஏற்றுக்கொள்ள முடியாது, ETA-தான் பொறுப்பு என்ற தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க சான்றையும் பாப்புலர் கட்சி அரசாங்கம் தரமுடியவில்லை. உள்துறை அமைச்சர் Angel Acebes அரசாங்கம் "சான்றுகளை மறைத்துவிட்டது அல்லது வளைத்துவிட்டது" என்று பகிரங்கமாக ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் எந்தப்பயனும் ஏற்படவில்லை.

மார்ச் 13-ல் சனிக்கிழமை முழுவதிலும் பாப்புலர் கட்சிக்கு எதிராக ஆவேசமான கண்டனங்கள் பெருகின. 5,000-மக்கள் பாப்புலர் கட்சி தலைமை அலுவலகங்களுக்கு எதிரில் திரண்டு நின்று ''உங்களது போரால் எங்களது மக்கள் மடிந்து விட்டார்கள்'' என்று முழக்கங்களை எழுப்பினார்கள். Basque நகரமான Bilbao-வில் 8000-பேர் கண்டனம் செய்தனர்.

தேர்தல் வாக்குப்பதிவு நாளில், விஷயங்கள் முன்னணிக்கு வந்தன. மாட்ரிட் அருகே அமைச்சர் மரியானா ரஜோய் வாக்களித்தபோது அவருக்கு எதிராக ''கொலைகாரன்'' என்று ஆர்ப்பாட்க்காரர்கள் கூச்சலிட்டனர். அஸ்னர்-ம் அவரது மனைவியும் வாக்குச்சாவடிக்கு வந்த போது அவர்களை எதிர்த்து பரிகாசம் செய்தனர் முழங்கையால் நெருக்கித் தள்ளினர்.

பொதுமக்களது ஆத்திர உணர்வின் தீவிரமும் அகலமும் பாப்புலர் கட்சி வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றது ஆனாலும், PSOE கட்சியின் வெற்றி ஸ்பெயின் நாட்டிலோ அல்லது வேறுநாடுகளிலோ தொழிலாள வர்க்கத்திற்கு தாங்கள் முன்னெடுத்துச் செல்வதற்கான வழியை கொடுக்கும் என்று கருதுவது மிகக்கடுமையான தவறாக ஆகிவிடும். ஸ்பெயின் நாட்டு நிர்வாக கட்டுக்கோப்பின் முதலாளித்துவ கட்சியான இது அஸ்னருக்கும் ஈராக் போருக்கும் எதிராக பொதுமக்களிடையே திரண்ட எதிர்ப்பு உணர்வின் மூலம் பயன் அடைந்த முற்றிலும் தகுதியற்ற அமைப்பாகும்.

ஈராக் தொடர்பாக அஸ்னர்க்கு எதிராக Zapatero பொதுமக்களை கவருகின்ற வகையில் உரையாற்றினார். புஷ்ஷுடன் கூட்டு சேர்ந்திருப்பதையும் அரசாங்கத்தின் உள்நாட்டு வலதுசாரி கொள்கைகளையும் கண்டிப்பதாக உரையாற்றினார். ஈராக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள 1,300-ஸ்பெயின் துருப்புக்களை திரும்ப அழைப்பதை தான் ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு கட்டத்தில் புஷ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளியிட்டார்.

அப்படியிருந்தாலும் அத்தகைய ஆவேச உரைகளை மேலெழுந்த வாரியாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. பாப்புலர் கட்சி மாட்ரிட் குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக கூறிய பொய்கள், புரட்டுகள், ஆகியவற்றை தேர்தலுக்கு முன்னர் PSOE- கட்சி அமைதியாக ஏற்றுக்கொண்டதுடன், Zapatero தான் தோற்கடித்த வேட்பாளர்களுடன் தேர்தல் முடிவில் கைகுலுக்கினார், ரஜோயை "கண்ணியமிக்க எதிரி" என்றும் பாராட்டினார் மற்றும் "நாட்டு நடப்புக்களில் ஒத்துழைக்க முன்வருவதாக" குறிப்பிட்டார்.

எல்லா அரசியல் குழுக்களோடும் நாடாளுமன்றத்தில் உடன்பாடு காண்பதற்கு முயலப்போவதாக குறிப்பிட்டார். "கலந்துரையாடல் தொடர்ந்து நிரந்தரமாக நடத்தப்படுமென்றும் அறிவித்தார். "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து முயற்சிகளையும் ஒருமுகப்படுத்துவதற்கு அரசியல் சக்திகளை ஐக்கியப்படுத்துவதை" உறுதிப்படுத்தும் பொருட்டு பாப்புலர் கட்சியுடன் தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டார்.

அவரது "ஒற்றுமை" கடப்பாடு அமெரிக்காவிற்கும் கூட விரிவுப்படுத்தப்படுகிறது. ''எனது அரசாங்கம் உலகின் எல்லா அரசாங்கங்களோடும் நட்புறவுகளை, குறிப்பாக அமெரிக்காவுடன் நட்புறவை நிலைநாட்டும்'' என்று அவர் அறிவித்தார். "ஒருதலைப் பட்சமான போருக்கு" முடிவு கட்ட மற்றும் பயங்கரவாதத்திற்கும் எதிராக சர்வதேச அளவில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஈராக் போருக்கும் அதைத்தொடர்ந்து அந்த நாட்டை பிடித்துக்கொண்டதற்கும் Zapatero தெரிவித்துவரும் எதிர்ப்பு முற்றிலும் தந்திரோபாய மற்றும் செய்முறைவாத அரசியல் அடிப்படை கொண்டது. ஸ்பானிய முதலாளித்துவ வர்க்கத்தினரின் பகுதிகள் அஸ்னரின் வெளிநாட்டு கொள்கைக்கு தெரிவித்துவரும் கவலைகளை எதிரொலிப்பதாக அவரது மூலோபாயம் அமைந்திருக்கிறது. வாஷிங்டனுடன் மிக நெருக்கமாக ஆட்சேபனை எதுவுமில்லாமல் அஸ்னர் சேர்ந்துவிட்டதாக கருதப்படுகிறார். புதிய பிரதமர் "பாரம்பரிய வெளிநாட்டு கொள்கை" அச்சாணியை மீண்டும் ஸ்பெயின் நிலைநாட்டும் என்று அழைப்புவிடுத்திருக்கிறார். குறிப்பாக பிரிட்டனுடனும், ஜேர்மனியுடனும் இந்தக் கூட்டணி அமையும். அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான அபிலாஷைகளை கட்டுப்படுத்த இதுதான் வழி என்று கருதுகிறார். மத்திய கிழக்கிலும், இதர நாடுகளிலும் ஐரோப்பிய வல்லரசுகள் சுரண்டுகின்ற கொள்ளை பொருட்களில் தனக்கும் பங்கு கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய வெளியுறவுக் கொள்கையை அமைத்துக் கொள்ளப்போகிறார்.

இந்த ஆண்டு ஜூன் 30-வாக்கில் ஈராக்கிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளப் போவதாக உறுதி அளித்த Zapatero, ஐ.நா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளவில்லை எனில்" அல்லது ஈராக்கில் "முறையான அரசியல் சட்டம் இயங்கவில்லை எனில்" இந்த ஆண்டு, ஜூன் 30 அளவில் அவ்வாறு செய்யப்போவதாக நிபந்தனையையும் விதித்தார். அவர் விதித்திருப்பது ஜூன் 30-அளவில் வாஷிங்டன் ஈராக்கில் சம்பிரதாய முறையில் பொம்மை அரசாங்கத்தை நிறுவ நோக்கம் கொண்டிருப்பதால், இடையில் தனக்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதற்கு வாய்பளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

உள்நாட்டை பொறுத்தவரை PSOE, அஸ்னர் ஆட்சியின் வலதுசாரி சிக்கன கொள்கைகளிலிருந்து கணிசமான அளவிற்கு மாறி நடவடிக்கை எடுக்காது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார கொள்கைகளை நிலைநாட்டுவதில் முழுமையாக ஸ்பெயின் உறுதியளித்துள்ளது. அதன்படி சமூக சேவைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் மீது தாக்குதல்கள் முடுக்கிவிடப்படும். மேலும் PSOE கட்சி "பயங்கரவாதத்தின் மீதான போரை" முழுமையாக அரவணைப்பது, ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதற்கு உறுதிசெய்து தந்திருக்கிறது. அவை "போர்க்கால" அவசிய நடவடிக்கைகள் என்றும் நியாயப்படுத்தப்பட்டுள்ளன.

Top of page