:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
சீனா
Chinese regime amends constitution to protect private ownership
தனியார் சொத்துடைமைகளை பாதுகாக்க சீன ஆட்சியின் அரசியலமைப்பு திருத்தம்
By John Chan
2 April 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
2004 -ன் சீன தேசிய மக்கள் காங்கிரசின்
(National Peoples Congress-NPC)
மிக முக்கியமான அம்சம் மார்ச் 14-ல் முடிவடைந்தது. நாட்டின் அரசியலமைப்பில் திருத்தம், ஐயத்திற்கிடமின்றி
தனிச் சொத்துடைமை, வர்த்தகம் மற்றும் செல்வத்தை பாதுகாப்பதற்கு கொண்டுவரப்பட்டதாகும்.
பதின்மூன்று அரசியலமைப்பு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன, ''சட்டபூர்வமான
தனியார் சொத்து கேடற்றது'' என்பது போன்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டன. ''தனியார் பொருளாதாரத்தை
ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் மற்றும் வழிகாட்டவும்'' அரசு உறுதியளிக்கும் வகையில் பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி Jiang Zemin
உடைய ''மூன்று விவரிப்புகள்'', சீன கம்யூனிஸ்ட் கட்சி
(CCP)-யை தனியார் தொழிலதிபர்களில் சேர்த்துக்கொள்ள
அனுமதித்தும், அரசுடைய ''வழிகாட்டும் கொள்கைகளில்'' மாவோ சேதுங் சிந்தனையும் டெங் சியோபெங்
தத்துவமும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி Hu Jintao
மற்றும் பிரதமர் Wen Jiabao
தலைமையில் அமைந்த புதிய CCP
மத்திய குழு அரசியல் சட்டத்திருத்த வரைவை கொண்டுவந்தது. 3000 தேசிய மக்கள் காங்கிரசின்
(NPC) பேராளர்கள்,
பிரதானமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தகர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் தொழில் சார்ந்தவர்கள் ஒருமனதாக
எல்லா திருத்தங்களையும் நிறைவேற்றினர்.
கடந்த 25 ஆண்டுகளுக்குமேலாக பெய்ஜிங் கடைபிடித்து வந்த சுதந்திர சந்தை நிகழ்ச்சி
நிரலிலிருந்து உருவான புதிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை காப்பதற்காக, சீன ஸ்ராலினிச அரசு கருவிகளை
தொடர்ந்து மாற்றியமைக்கும் வகையில் அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
சந்தை சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 1982-ல்
அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, அப்போது அரசுக்கு சொந்தமான பொருளாதாரம் ''முழுமையாக'' தனியார்
துறைக்கு அங்கீகாரமளிக்கப்பட்டது. 1993-ல் ''சந்தை பொருளாதாரம்'' என்ற வகைப்படுத்தலும்
சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1999-ல் சீனப் பொருளாதாரத்தின் ''அத்தியாவசிய பாகமாக'' தனியார்
தொழில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த கால வரிசைப்பட்டியை
(Chronology)
அரசு ஊடகங்கள் கூட ''மாற்ற முடியாத தனியார்மய சாலை வரைபடம்''
என வர்ணிக்கின்றன. 2003 இறுதிவாக்கில், தனியார் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2.97 மில்லியன் ஆகும்,
அவற்றின் மொத்த முதலீடு 40.5 பில்லியன் டாலர்கள் ஆகும். சீனாவின் தேசிய பொருளாதார வளர்ச்சியில்
பாதிக்கு தனியார் துறைகள்தான் இப்பொழுது பொறுப்பாகும்.
சீன மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் இரண்டு தலைவர்களும் கடைசியாக
செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அரசு பாதுகாப்பின் உறுதியான உத்திரவாதம் என்று பாராட்டியுள்ளனர். இதற்கு
முந்திய அரசியல் சட்ட குறிப்புக்களில் தனியார் சொத்துடமை பற்றி, உற்பத்திக்கான சாதனங்களில் தனியார்
சொத்து உடைமையை பாதுகாப்பது, பணிகள் செய்யாமல் வருகின்ற வருமானங்கள், மற்றும் அறிவுஜீவித சொத்து
உரிமைகள் பற்றி வெளிப்படையாக விளக்கம் தரப்படவில்லை.
சட்ட திருத்தங்கள் பற்றி ''தொழில் முகவர்கள் தங்களது சொத்துக்கள் பாதுகாப்பு
தொடர்பாக கொண்டிருக்கும் மறைமுக கவலைகளை ஒழித்துக்கட்டி, நீண்டகால முதலீடுகளில் அவர்களது
நம்பிக்கையை ஊக்குவிக்கும்'' என்று அகில சீன தொழிற்துறை, வர்த்தக சம்மேளனத்தின் இயக்குநரான
Tang Haibin
அதிகாரபூர்வமான Xinhua
செய்தி ஏஜன்சிக்கு தெரிவித்தார். சீனாவின் தனியார்
Minsheng Banking Corp ன் நிறுவனர்
Liu yonghao "பல
ஆண்டுகளாக தனியார் தொழில்களின் உரிமையாளர்கள், தங்களது தனியார் சொத்துக்களுக்கு சட்டபூர்வமான
பாதுகாப்பு வேண்டும் என்று கோரிவருகின்றார். இது எதிர்காலம் பற்றி நம்பிக்கையையும், திடநம்பிக்கையையும்
எங்களுக்கு உருவாக்கும்'' என்று குறிப்பிட்டார்.
"தனியார் சொத்துடைமை சட்டபூர்வமான பொது உடைமையுரிமை என்று கூறி
அவர்கள் தீர்மானித்தது குறிப்பிடத்தக்கதாகும். அது ஒரு வகையில் சுரண்டலை நல்லது என்று ஏற்றுக்கொள்கிறது.
அது ஒரு பெரிய நடவடிக்கை'' என மேற்கத்திய தூதர் ஒருவர் பெய்ஜிங்கில் ரெய்ட்டரிடம் தெரிவித்தார்.
ஸ்ராாலினிசத்தின் தர்க்கவியல்
சர்வதேச அளவில் பத்திரிகைகள் எழுதியிருக்கும் கருத்துகள் சீன ஆட்சி இனி
''கம்யூனிச'' ஆட்சியாக இருக்க முடியாதென்று சமிக்கை காட்டுவதாக இந்த அரசியலமைப்பு சட்ட மாற்றங்கள்
வந்திருப்பதாக விளக்கியுள்ளன.
எடுத்துக்காட்டாக
South china Morning post மார்ச் 8-ல்
கருத்து கூறியிருப்பதாவது: ''இந்த மாதம் தேசிய மக்கள் காங்கிரஸ் தனியார் சொத்துடைமையை பாதுகாக்கும்
அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்கிறது. இது மேலும் கூறுகிறது இந்த முடிவு அடிப்படை மார்க்சிச
கொள்கைகளுக்கும் தத்துவங்களுக்கும் எதிரானது. இதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் வரலாற்று பெயரை தாங்கி
நிற்கிறது என்றாலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு பாரம்பரியத்தை மேற்கொள்கிறது.
"ஒரு விளக்கம் சீனா இனி கம்யூனிஸ்ட் நாடு அல்ல என்பது. மற்றொரு விளக்கம்
சீனா உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற முதலாளித்துவ பொருளாதாரம் ஆகும், தொகுதிகள்
மற்றும் போட்டி நலன்கள் இருந்தபோதிலும் அது ஒரு கட்சி முறையை
(One-Party System)
நிலைநாட்டி வருகிறது.''
யதார்த்தம் என்னவெனில், சீனா ஒருபோதும் கம்யூனிச அல்லது சோசலிச
சமுதாயமாக இருந்தது கிடையாது. 1949-லிருந்து அது ஒடுக்குமுறை அதிகாரத்துவத்தால் ஆளப்பட்டு வருகின்றது.
அது "கம்யூனிசத்திலிருந்து" விலகி இருப்பதற்கும் அப்பால் செல்வது, இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையான
சீன ஸ்ராலினிசத்தின் தர்க்கவியலான முடிவால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
1949 சீனப் புரட்சி, சுதந்திரமான தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலையோ,
உண்மையான தொழிலாளர் ஜனநாயகத்தையோ ஸ்தாபிக்கவில்லை, ஆனால் மாவோ சேதுங் தலமையிலான
விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட இயக்கம் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது. மாவோ வாதிட்ட
வேலைத்திட்டமான ''நான்கு வர்க்கங்களின் கூட்டு'' என்று சீன முதலாளித்துவ வர்க்க பகுதிகளோடும்,
கிராமப்புற விவசாயிகளோடும் கூட்டணி சேர்ந்தனர்.
NPC ஸ்தாபிக்கப்பட்டதே
CCP யோடு
பணியாற்ற ஆயத்தமாயிருக்கும் முதலாளிகளுக்கு புதிய ஆட்சியில் இடம் கிடைக்கும் என சீன முதலாளித்துவத்திற்கு உறுதி
தருவதற்காக ஆகும்.
''சீன சோசலிசம்'' என்று சொல்லிக்கொண்டு மாவோயிச கொள்கை
உண்மையிலேயே ஒரு வகையில் தேசிய சர்வாதிகாரமாக செயல்பட்டது. அதிகாரத்துவ ரீதியில் உருவாக்கிய
திட்டங்கள் மற்றும் உற்பத்தி ஒதுக்கீடுகள் அடிப்படையில் பின்தங்கிய மற்றும் பெரும்பாலும் விவசாய
பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒழுங்கமைக்க விழைந்தது.
கடுமையான பொருளாதார நெருக்கடி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முற்றுகை
மற்றும் சீனாவின் மிகப்பெரும்பாலான முதலாளிகள் தைவானுக்கும், ஹாங்காங்கிற்கும் ஓடிச்சென்றுவிட்டமை, இவை
சீன கம்யூனிஸ்ட் கட்சியை (CCP)
மிகப்பெரும்பாலான தொழிற்துறையை தேசியமயமாக்கும்படி நிர்பந்தித்தது. 1950-களில், தொழிற்துறை
மயமாக்குவதற்கான வருவாயை திரட்டுவதற்கும் மிகப்பெரும்பாலான விவசாயிகளிடையே ஆட்சிக்கு ஆதரவை
பெறுவதற்கும்தான் மிகப்பெருமளவில் நில உடைமைகள் கூட்டுப்பண்ணைகளாக உருவாக்கப்பட்டது.
1960-களில் கலாச்சாரப் புரட்சி முடிவில் மற்றும் 1970களின் ஆரம்பத்தில் ஒரு
பிற்போக்கு இயக்கம் மாவோவின் அதிகாரத்தை வலிமைப்படுத்த நோக்கம் கொண்டிருந்தது. தனிமைபடுத்தப்பட்ட
பொருளாதாரம் தேக்க நிலைக்கும், தள்ளாடியும் வீழ்ச்சி நோக்கி சென்றது. அப்போது மாவோ 1973-ல்
அமெரிக்காவுடன் உறவுகளை திரும்ப நிலைநாட்டும்போது சுதந்திர சந்தைகளை நிலைநாட்ட மாவோ தனிப்பட்ட
முறையில் முன்நிபந்தனைகளை விதித்தார்.
1976-ல் மாவோ
மரணத்திற்கு பின்னர் டெங் சியோவோபிங்கை சுற்றியிருந்த ஒரு
பிரிவு (கன்னை) அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது. டெங் தலைமையில் உருவாக்கப்பட்ட பொருளாதர
கொள்கை தென்கொரியா, மற்றும் தைவான் முன்மாதிரிகளை வெளிப்படையாக பின்பற்றியது. அந்த இரண்டு
நாடுகளும் நாடுகடந்த நிறுவனங்களின் உற்பத்தி அரங்குகளாக செயல்பட்டு வந்தன, மலிவு உழைப்பையும்
தொழிலாள வர்க்கத்தின் மீதான கடுமையான இராணுவக்கட்டுப்பாட்டையும் சாதகமாக பயன்படுத்தின. 1978-ல்
சீனா தனது முதலாவது சுதந்திர வர்த்தக வளாகங்களை பூகோள முதலீடுகளில் ஒரு பங்கை ஈர்ப்பதற்காக
ஸ்தாபித்தது.
தொடர்ந்து பல தசாப்தங்களில் குறிப்பாக, 1990-களில் சீனாவிற்கு மிகப்பெருமளவில்
முதலீடுகள் குவிந்தன. CCP
அதிகாரத்துவத்தினரின் குடும்பங்கள் தங்களது அரசியல் அதிகாரத்தையும் சர்வதேச முதலாளிகள் தொடர்பையும் பயன்படுத்தி
தங்களை ஒரு புதிய சொத்துடைமை முதலாளித்துவ செல்வந்த தட்டாக உருவாக்க பயன்படுத்தினர்.
CCP தொடர்புடைய
தொழில் உரிமையாளர்கள், நிர்வாகிகள், வெளிநாட்டுப் பணி ஒப்பந்தக்காரர்கள், இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகர்கள்,
தொழில் நிபுணர்கள் ஆகியோர் பன்னாட்டு நிறுவனங்களின் இளைய பங்குதாரர்களாகி தொழிலாள வர்க்கத்தை கொடூரமாகச்
சுரண்ட ஆரம்பித்தனர்.
நான்காம் தலைமுறை தலைமை
இந்த சமூகத் தட்டினரின் நலன்கள்
NPC கட்டளைகளில்
வெளிப்பட்டன. அதே நேரத்தில் பெய்ஜிங் ஆட்சி கடந்த 25-ஆண்டுகளுக்கு மேலாக உருவாகிவரும் கடுமையான
எதிர்ப்பு உணர்வுகளை நனவுபூர்வமாக்கி வருவதாக காட்டிக்கொண்டது. ஒரு சிறுபான்மையினர்
வசதிபடைத்தவர்களாக ஆனார்கள், பெரும்பாலான மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் துன்பங்களை அனுபவித்து
வந்தார்கள். CCP
சரிநிகர் வாதத்தை (Egalitarianism)
பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறி வந்தது முற்றிலுமாக கீழறுக்கப்பட்டுவிட்டது.
நியூயோர்க் டைம்ஸ் கூட பெப்ரவரி 29-ல் ஒரு எச்சரிக்கையில், ''மிகத்
தீவிர சமத்துவமின்மை புரட்சிகளுக்கு வித்திட்டுவிடும்'' என்பதை சீன ஆளும் செல்வந்தத் தட்டு வரலாற்றிலிருந்து
படித்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
அப்போது டைம்ஸ் எழுதியதாவது: ''சமூக விஞ்ஞானிகள் மிக
அண்மைக்கால மதிப்பீடுகளின்படி சீனா வருமான பகிர்வில் ஏற்றத்தாழ்வுகள் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா
மற்றும் இந்தியாவை விட அதிகம் உள்ளதாக மதிப்பீடு செய்துள்ளனர். உண்மையிலேயே அது அப்பொழுது
கம்யூனிஸ்டுக்கள், ஏழை மக்களது உதவியோடு தேசியவாத அரசாங்கத்தை கவிழ்த்தபொழுது 1940-களின்
பிற்பகுதியில் சீனாவில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.''
Hu
மற்றும் Wen
புதிய தலைமை ஆட்சியின் நம்பகத்தன்மையை பெருக்குவதற்காக பல்வேறு மக்களைக்கவரும் நடவடிக்கைகளை எடுத்து
ஜனநாயக மற்றும் தாராளவாத தோற்றத்தை உருவாக்கி வருகிறது. இந்த சூழ்நிலைகளில் அரசியல் சட்டத்தின்
33-வது பிரிவில் ''மனித உரிமைகள்'' பற்றிய உறுதிமொழி சேர்த்துக்கொள்ளப்பட்டது.
சீன வெகுஜனங்கள் மீது தங்களுக்குள்ள அக்கறைகளை எடுத்துக்காட்டுகின்ற வகையில்,
இரண்டு தலைவர்களும் புத்தாண்டு தினத்தை ஏழை விவசாயிகளது வீடுகளில் தங்கியிருந்து கொண்டாடினார்கள். கடந்த
ஆண்டில் அவர்கள் இருவரும் சுரங்கத்தொழிலாளர்கள்,
HIV- நோயாளிகள் மற்றும் இதர பலவீனமான மற்றைய
தட்டினரை சந்திப்பதில் இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு ஆர்வம் செலுத்தினர்.
அரசாங்கம் ஊழல் மிக்கது கடுமையான அதிகாரத்துவ கட்டுக்கோப்புள்ளது என்ற
பரவலான உணர்வுகளை நீக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்சித்தலைவர்கள் சொகுசு
மாளிகையில் இரகசியமாக கூட்டம் நடத்துகின்ற நடைமுறை கைவிடப்பட்டு தற்போதுள்ள அரசியல் குழுவின் கூட்ட
நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. சென்ற ஆண்டு சார்ஸ் தொற்றுநோய்
ஏற்பட்டபோது புதிய தலைமை நேர்மையாகவும், ஒளிவு மறைவு இல்லாமல் செயல்படுவதாகவும், அரசாங்க
அதிகாரிகளும், அரசாங்க கட்டுப்பாட்டு ஊடகங்களும் சித்தரித்துக்காட்டின.
CCP 1989-மே ஜூன் தியனென்மென்
சதுக்க கண்டனங்களை ''எதிர்ப்புரட்சி'' என கண்டித்ததை மறுஆய்வு செய்ய வேண்டுமென
NPCக்கு ஒரு
கடிதம் கூட தாக்கல் செய்யப்பட்டது. அத்த கடிதத்தை முன்னாள் இராணுவ சார்ஜன்
Jiang Yangyong
எழுதியிருந்தார். அவர்தான் சென்ற மார்ச்-ல் சீனாவில் சார்ஸ் தொற்று நோய் பற்றி முதலில் தகவல் தந்தவர்.
அவரது கடிதம் NPC
நிரந்தர குழுவிற்கும் CCP
மத்திய குழுவிற்கும் அனுப்பப்பட்டது.
பிரதமர் Wen Jiabao-
வின் அறிக்கை NPC
க்கு அவர் தாக்கல் செய்த பட்ஜெட் ஆகியவற்றில் புதிய தலைமையில் ''சீர்திருத்தவாத'' போக்கு படம்
பிடித்துக்காட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முந்திய அறிக்கைகள் பெரும்பாலும் சமுதாய கண்ணோட்டங்களுக்கு மேலாக
''பொருளாதார வளர்ச்சியை'' மதிப்பாக அமைந்திருந்தன. எனவே அவை ''ஆளும் செல்வந்த தட்டின்''
அறிக்கைகள் என்று முத்திரை குத்தப்பட்டன, Wen
தனது அரசாங்கத்தின் கொள்கைகளை நீண்டகால ''சமுதாய வளர்ச்சிக்கு'' பொருளாதார சீரமைப்பை
"சமநிலை" படுத்தும் ''மூலோபாயம்'' என வர்ணித்தார்.
சீனாவின் தலை வீத வருவாய் சென்ற ஆண்டு 1000 டாலருக்கு மேல் உயர்ந்த
அதேவேளை, Wen
தாக்கல் செய்த அறிக்கை குறைந்து கொண்டுவரும் கிராம வருமானம் ஏழை பணக்காரர்களுக்கிடையே
ஏற்றதாழ்வுகள் போன்ற நாட்டில் பெருகிவரும் சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றி குவிமையப்படுத்தி இருந்தது.
மார்ச் 14-அன்று Wen
நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, சீனப்பொருளாதாரம் மிக நெருக்கமான கட்டத்தில் இருப்பதாக
குறிப்பிட்டார்: ''கடந்த காலத்தில் பொருளாதாரத்தில் ஆழமாக நிலவுகின்ற சிக்கல்கள் மற்றும் ஏற்ற தாழ்வுகள்
அடிப்படையில் சரிசெய்யப்படவில்லை. நிலைமையை சமாளிக்க நாம் தவறுவோமானால் பொருளாதார
பின்னடைவுகள் தடுக்க முடியாதவையாக ஆகிவிடும்'' என்று அவர் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9.1-சதவீதமாக இருந்தாலும்
அதிகாரபூர்வமான வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 4.3- சதவீதத்திலிருந்து 4.7- சதவீதமாக உயர்ந்தது.
அரசாங்க அமைச்சர் Zheng Silin
மார்ச் 9-ல் NPC
பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் பேசும்போது, தற்போதுள்ள வேலையில்லாத் திண்டாட்ட அளவை
நிலைநாட்டுவதற்கு குறைந்தபட்சம் புதிதாக 9-மில்லியன் வேலைகள் தேவை. அப்படியிருந்தும் 24-மில்லியன்
ஊழியர்கள் வேலைதேடி காத்திருப்போர் பட்டியலில் சேர்ந்து விடுவர் என்று கூறினார்.
''நான் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சராக ஓராண்டிற்கு
முன்னர்தான் பதவியேற்றேன். அரசாங்க தொழில்களை மூடுவதற்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன்.
இந்தப்பணிக்கு மாற்றப்படுவேன் என்று எனக்கு தெரிந்திருக்குமானால் கம்பெனிகளை மூடுவதில் அவ்வளவு ஆர்வமாக
இருந்திருக்கமாட்டேன்'' என்று அவர் அறிவித்தார்.
கிராமப்பகுதிகளில், சென்ற ஆண்டு வருமானம் 4.3-சதவீத அளவிற்கு உயர்ந்தது.
2002-ல் இது 4.8-சதவீதமாக இருந்தது. சீனாவின் 900-மில்லியன் கிராம மக்களைவிட நகர மக்கள் 3.2-
மடங்கு அதிகமாக வருமானம் பெறுகின்றனர். இது வறுமையில் உள்ள ஜிம்பாப்வேயைவிட சற்று அதிகமாகும். சீன
வறுமை நிவாரண நிதி தந்துள்ள தகவலின்படி, 30-மில்லியன் கிராம மக்களுக்கு போதுமான உணவு மற்றும் உடை
இல்லை. மேலும் 60- மில்லியன் பேர் ஆண்டிற்கு 100- அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.
மற்றொரு பக்கம் நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களான 400 தனிமனிதர்கள் மொத்தமாக 301.1 பில்லியன்
யுவான்களை (36-பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வைத்திருக்கின்றனர்.
கிராமப்பகுதிகளில் நிலையான போக்கை உருவாக்க இதுவரை இல்லாத அளவிற்கு
150 பில்லியன் யுவான் செலவிடப்படும் என Wen
அறிவித்தார். இவை கிராம உழைக்கும் மக்களுக்கு உதவுகின்ற
வகையில் வரி குறைப்புக்கள், வேலையற்ற கிராம இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி ஆகியவற்றிற்காக
செலவிடப்படும். அரசாங்க தொழில்கள் மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட
வரையறைக்கு உட்பட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக 77.9-பில்லியன் யுவான் ஒதுக்கப்படுவதாக அவர்
அறிவித்தார். பல கம்பெனிகள் மூடப்பட்டுள்ள வடக்கு மாகாணங்களில் இந்த தொகை செலவிடப்படும் என்று
குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்தமாக Wen
அறிவித்த பட்ஜெட் 2.68- டிரில்லியன் யுவான்கள் மதிப்பைக்
கொண்டது. இது சென்ற ஆண்டைவிட 8.8-சதவீதம் அதிகமாகும். கல்வி, பொது சுகாதாரம் ஆகியவற்றிற்கான
கூடுதல் செலவினங்களும் இதில் அடங்கும். சீன அரசாங்கம் ஏற்கனவே 30- சதவீத
GDP அளவில்
பொதுக்கடன் பெற்றிருக்கிறது. இந்த பட்ஜெட்டின் மூலம் அத்தகைய கடன் நெருக்கடி அதிகமாகும். அப்படியிருந்தும்
புதிய தலைமை சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் சமுதாய கொந்தளிப்பை தடுத்து நிறுத்தவும்,
புதிய தலைமை மீது ஒரு பிரமையை உருவாக்கவும் விரும்புகிறது.
"சீர்திருத்த"த்திற்கான வரையறைகள்.
அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் கவனமாக நிர்வகிக்கப்பட்டு
வருகின்றன. CCPன்
சர்வாதிகாரத்திற்கு சவாலாக நேரடியாக பொதுமக்களை அரசியலில் தூண்டிவிடுவது சட்டப்படி
தடுக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 14-ல் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின்படி சீனத்தலைமை
"மேற்கு நாட்டு அரசியல் அமைப்பு முறையின் சில அம்சங்களை" மேற்கொண்டிருப்பது அரசியல் அதிகாரத்தில்
தங்களது பிடியை நிலைநாட்டிக் கொள்வதற்காகத்தான் என குறிப்பிட்டுள்ளது.
''கட்சிக்குள் நடந்த விவாதங்களில் பங்கெடுத்துக்கொண்ட கட்சித் தலைவர்களும்
அறிஞர்களும், Hu
வும் அவரது சகாக்களும் சீனாவிற்கு புதிய அரசியல் முன்மாதிரியை தேடிவருவதாக கருதுகின்றனர். மிகப்பெரிய
மக்கள் தொகை, அரசியல் கொந்தளிப்பின் வரலாறு ஆகியவற்றை கொண்ட சீனா பல கட்சி ஜனநாயகத்திற்கு
தகுதியில்லாத நாடு. ஆனால் அதே நேரத்தில் சீனாவின் நடப்பு அரசியல் முறை, ஊழல் பெருகிவரும் சமூக
அதிருப்தி ஆகியவற்றிற்கிடையே சமாளிக்க முடியாத அளவிற்கு முடக்கப்பட்டு விட்டது அல்லது வளர்ச்சிக்கு உறுதி
செய்துதருகின்ற பொருளதாரா சீர்திருத்தங்களை செல்படுத்தவியலாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் முடிவுக்கு
வந்திருப்பதாக தோன்றுகிறது'' என போஸ்ட் குறிப்பிட்டிருக்கிறது.
NPC க்கு முன்னய காலத்தில் பெய்ஜிங்
தனது கட்டுப்பாடுகளை ஊடகங்கள், அறிவுஜீவிகள், மற்றும் இணையதளங்கள் மீது இறுக்கமாக்கியது. தொழிலாளர்கள்
விவசாயிகள் கண்டன பேரணிகள் மீது போலீசார் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தவில்லை மற்றும் பல்கலைக்கழக
விரிவுரைகளை கண்காணிக்குமாறு புலனாய்வுத்துறைக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு புத்தகங்களை சீன மொழியில்
மொழிபெயர்ப்பது ஊக்குவிக்கப்படவில்லை.
எடுத்துக்காட்டாக அண்மையில் மிகப்பெருமளவில் மக்களது ஆதரவை பெற்று விற்பனையாகி
கொண்டிருந்த, சுதந்திரமான பத்திரிகையாளர் ஒருவரின் புலனாய்வு தகவல் அடிப்படையில், விவசாயிகளது மனக்குமுறல்களை
எடுத்துக்காட்டும் சீன விவசாயிகள் பற்றிய புலனாய்வு அறிக்கை என்ற நூல்
CCP ன் மத்திய
பிரச்சார துறையினால் NPC
கூட்டம் நடந்த நேரத்தில் இருட்டடிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது, ஏனென்றால் அதன் மீது மேலும் விவாதம் நடத்துவது
அதிக அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும் என்று கருதப்பட்டது.
சில மேற்கத்திய விமர்சகர்கள் இப்போது நடைபெற்றுவரும் சமூக கட்டுப்பாட்டு
நடவடிக்கைகள் தற்போது மத்திய இராணுவ கமிஷனின் தலைவராக உள்ள
Jiang Zemin
காலத்து நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் என்று விமர்சித்தாலும், தங்களது ஆட்சிக்கு தொழிலாள
வர்க்கத்திடமிருந்து சவால்கள் ஏதாவது தோன்றுமானால் அதை ஒடுக்குவதற்கு முந்திய தலைமுறைகளைப்போன்று
கொடூரமான ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்துவிட புதிய தலைவர்கள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
NPC முடிந்ததும் நடைபெற்ற
நிருபர்கள் பேட்டியில், வெண் ஜியாபாவோ, புதிய தலைமை 1989- நடுவில் நடைபெற்ற அரசாங்கத்திற்கெதிரான
கிளர்ச்சிகளை ''மிகக் கடுமையான அரசியல் கொந்தளிப்பு'' என்றும் அது ஒடுக்கப்பட வேண்டும் என்றும்
இன்றைக்கும் கருதுவதாக குறிப்பிட்டார். 1989-ஜூன் 4-ல் நடைபெற்ற தியனென்மென் சதுக்கத்தில் நடைபெற்ற
படுகொலைகளை தொடர்ந்து சமூக ஒழுங்கை காத்துநின்ற
Deng Xiaopang
ஐ பகிரங்கமாக பாராட்டிய முதலாவது CCP
தலைவர் ஹு ஜிண்டாவோ ஆவார்.
மக்கள் மீது சர்வாதிகார பிடியை நிலைநாட்ட உறுதியோடு இருந்தாலும்
Beijing ற்கு
ஒரு அச்சம் நிலவவே செய்கிறது. புதிய "கடுமையான அரசியல் இடையூறுகளை" தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும்
முயற்சிகள் தோல்வியடையலாம். மேலும் பொருளாதார சீரமைப்பு செய்வதற்கு சீன அரசாங்கம் தற்போது
சர்வதேச பன்னாட்டு பெருநிறுவனங்களின் அழுத்தத்தில் உள்ளது.
எடுத்துக்காட்டாக, பிரிட்டனின் எக்கனாமிஸ்ட் பத்திரிகை, மார்ச் 20-ல்
Beijing பிரச்சனைகளை எதிர் கொண்டிருக்கிறது,
பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யவும் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு வகைசெய்யவும் "ஆபத்தான
அதே நேரத்தில் அவசியமான பல்வேறு நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ஆராய்ந்தாக வேண்டும்" என கூறியிருக்கிறது.
''பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலையை விட்டு எடுப்பதை
விளைவித்தாலும் கூட, அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை நேர்மையாய் தனியார் மயமாக்குதல் அவசியமாகும்.
தனியார் வர்த்தகம் வளர்வதற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டால், அரசுத்துறையில் வேலை இழந்தவர்களுக்கு தனியார்
வர்த்தகங்கள் புதிய வேலைகளை வழங்க முடியும். இதன் பொருள் என்னவென்றால் சீனாவின் மிகப்பெரிய அதிகாரத்துவத்தை
சீரமைக்க வேண்டும் அதில் எண்ணிறந்த கம்பெனிகள் சிகப்பு நாடாவிலும் ஊழலிலும் சிக்கியுள்ளன. ஆசியாவிலேயே மிக
உயர்ந்த வரிவிகிதங்கள் நிலவும் கம்பெனி மற்றும் தனியார் வரிவிகிதங்களை படிப்படியாக குறைக்க வேண்டும். அவற்றை
குறைத்தால் நிறுவனங்கள் வளருவதற்கு உதவும்'' என்று அது வலியுறுத்திக்கூறியுள்ளது.
பெருகிவரும் அதிருப்திகளை தடுத்து நிறுத்துவதற்கு ஆட்சி மேற்கொண்டுள்ள குறிப்பிட்ட
முயற்சிகளுக்கு நேரடி முரண்பாடாக, சந்தைகள் மேலும் பொருளாதார சீரமைப்பை கோரிவருவதால் வர்க்க பதட்டங்களை
நிலைமுறியும் புள்ளிக்கு ஓட்டிச்செல்லும்.
Top of page |