World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The diplomacy of imperialism: Iraq and US foreign policy

Part seven: US financial assistance for Hussein in the 1980s

ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திரம்: ஈராக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்

ஏழாம் பகுதி: 1980-களில் ஹுசைனுக்கு, அமெரிக்க நிதி உதவிகள்

By Alex Lefebvre
26 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கின் வரலாறு, அதன் அமெரிக்காவுடனான உறவுகள் பற்றிய தொடர்கட்டுரைகளில் இது ஏழாவது ஆகும். முந்தைய கட்டுரைகள் மார்ச் 12, 13, 16, 17, 10, 24 தேதிகளில் (ஆங்கிலத்தில்) வெளியாயின். ஐந்து, ஆறாம் பகுதிகள், 1980களில் அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு சதாம் ஹுசைனுடைய ஆட்சியுடன் தொடர்ந்து நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தது என்பதைச் சான்றுகளுடன் விளக்கியது. இந்தக் கட்டுரை, அமெரிக்கா எவ்வாறு ஈராக் ஆயுதங்கள் வாங்குவதற்கு உதவி செய்திருந்தது என்பது பற்றிய வகைகளை ஆராய்கிறது. வேறுவிதமாகக் குறிப்பிட்டிருந்தால் அன்றி, அனைத்து மேற்கோள்களும், தேசிய பாதுகாப்பு ஆவணத்தில், லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ரீஷ்வீ.மீபீவீ/ஸீைsணீக்ஷீநீலீவீஸ்மீ ஷீக்ஷீ லீttஜீ://ஸீsணீக்ஷீநீலீவீஸ்மீ.நீலீணீபீஷ்ஹ்நீளீ.நீஷீனீ/. என்று அனைவராலும் காணக்கூடிய வலைதளங்களிலிருந்து எடுத்துக் கூறப்பட்டவை ஆகும்.

ஈரான்-ஈராக் போரில், ஹுசைன் ஆட்சியை இரகசியமாக ஆதரிப்பது என்ற முடிவை எடுத்த பின்னர், றீகன் நிர்வாகம், ஈராக்கியப்போர் முயற்சிக்குச் சிறந்த முறையில் எவ்வாறு உதவுவது என்ற திட்டத்தைத் தீட்டவேண்டியதாயிற்று. சோவியத்யூனியனுடனும், அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டணியான பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் இத்தாலி மற்றும் அதே போல அமெரிக்கா வழங்கி வந்த மத்திய கிழக்கத்திய நாடான எகிப்து ஆகியவற்றுடன் ஹுசைன் அரசாங்கம் அப்பொழுது கொண்டிருந்த ஆயுதங்கள் வாங்கும் திட்டங்களால் ஈரானை விட உயர்ந்த இராணுவ தொழில்நுட்ப மேன்மையை ஈராக்கிற்கு அடைந்திருந்தது.

ஆனால், இந்த மிகப்பெரிய ஆயுதங்கள் வாங்கும் திட்டத்திற்கான செலவினங்கள், ஈராக்கின் பொதுநிதியை பாரிய அளவில் இல்லாதொழித்துவிட்டன. ஹுசைனுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அமெரிக்க அவருக்குப் பணம் கொடுப்பதற்கான வழிவகைகளைத் தேடுதல் முக்கியமாயிற்று. றீகன் நிர்வாகம் இரண்டு முறைகளை நன்கு ஆராய்ந்தது: ஒன்று, ஈராக்கிலிருந்து, மத்தியதரைக் கடலுக்கு ஒரு மாற்று எண்ணய் குழாய் வழி அமைப்பது; இரண்டாவது கடன் வசதி, வெளியே அமெரிக்கப் பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்க விவசாயப் பொருள் கடன் நிறுவனம் [US Department of Agriculture's Commodity Credit Corporation -CCC] மூலம் கடன் வழங்குதல் எனத் தெரிவித்து ஆயுதங்களுக்குக் கொடுத்தல். இந்தப் பிந்தைய முறை முதலாம் புஷ்ஷின் ஆட்சியிலும், 1990ல் ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுக்கும்வரை தொடர்ந்திருந்தது.

அகாபா எண்ணெய்க் குழாய்த்திட்டம்

போதிய நிதி இல்லாததால் இது செயல்படுத்தப்படாவிட்டாலும் இக்குழாய்த்திட்டம் றீகன் நிர்வாக அதிகாரிகளின் உயர் விருப்பத் திட்டமாக இருந்தது. அமெரிக்கப் பெருநிறுவனங்கள் செல்வாக்கின்மூலம் ஈர்த்து, அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினர் மத்திய கிழக்கைப்பற்றிக் கொண்டிருந்த தீவிரமான நிலைப்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. இதில் பெருமளவிலான குழாய்கள் அமெரிக்க நட்பு நாடான ஜோர்டானில் அமைந்திருந்து, ஜோர்டானியத் துறைமுகமான அகாபாவில் முடிந்திருக்கும்.

இது ஈராக்கிய ஏற்றுமதி வருமானத்தை பாதுகாத்ததுடன், போரில் அதன் நிலைமையை முன்னேற்றுவித்து, மத்தியகிழக்கில் உள்ள மற்றைய முக்கிய நாடுகளின் வருவாயையும் குறைத்திருக்கும். அமெரிக்காவுடன் நட்புறவில்லாத, ஈராக்கிய எண்ணெய் ஏற்றுமதியில் வருவாய் காணும் சிரியாவையும் முற்றிலும் பாதித்திருக்கும். அத்துடன் இது சவுதி அரேபியா அமெரிக்காவுடன் பேரம் பேசும் திறனை குறைத்து அமெரிக்காவிற்கு இன்னொரு குறைந்த விலை மத்திய கிழக்கு எண்ணெய் மூலத்தையும் கொடுத்திருக்கும்.

திட்டமிடப்பட்டிருந்த எண்ணெய்க் குழாய் அமைத்தல் இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு எளிதான தாக்குதலுக்கு உட்படக்கூடுமாதலின், ஈராக்கிய அரசாங்கம் அமெரிக்கப் பெருநிறுவனங்கள் இஸ்ரேலியத் தாக்குதல்கள் கூடாது என வலியுறுத்தவைத்திருக்கும். இது அமெரிக்க அதிகாரிகளின் இலக்குகளுக்கு உகந்ததேயாகும்; அவர்கள் அமெரிக்க பொறியியில் நிறுவனமான பெக்டலுக்கு (Bechtel) ஆதரவை வளர்க்க உதவியிருக்கும்; அதன் பழைய தலமை நிர்வாக ஜோர்ஜ் ஷூல்ட்ஸ்தான் அமெரிக்க வெளிநாட்டுத்துறை செயலர் ஆவார். இந்த நிறுவனத்திற்கு எண்ணெய்க் குழாய் கட்டியமைக்கும் பணி கொடுப்பதாக இருந்தது.

பெக்டல் இப்பொழுது ஈராக்கிய "மறுசீரமைப்பில்" ஈடுபட்டு இருப்பதுடன், அத்தகைய எண்ணெய்க் குழாய்த்திட்டம் மீண்டும் அமெரிக்கப்படைகள் ஈராக்கை ஆக்கிரமித்த பின்னர் தோன்றியுள்ளது.

எண்ணெய்க்குழாய்த் திட்டத்திற்கு நிதிபெறும் முயற்சி சாதகமில்லாத சூழ்நிலையில் தொடங்கியது. ஏனென்றால், அமெரிக்க அரசாங்கத்தின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (Exim Bank) ஈராக்கை, நீண்ட காலக் கடன் உதவி கொடுக்க ஆபத்தான பகுதியாகையால் தகுதியற்றது எனக் கருதியது. 1984ஆம் ஆண்டு பெப்ருவரி 21ஆம் தேதி அந்நாட்டைப் பற்றிய மதிப்பீடு ஒன்றில் வங்கி குறிப்பிட்டது: "உயர் அலுவலர்கள் கருத்தின்படி, நாட்டின் பொருளாதார நிலைமைகளும், புதிய திட்டங்கள் போரினால் தகர்ப்பிற்கு உட்படலாம் என்பதாலும், ஈராக் கொடுக்கக் கூடிய உறுதிமொழியை நம்பி நடுக்கால, நீண்ட கால செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. ஈராக் கணிசமான அளவு எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளபோதிலும், அவற்றை ஒட்டியே, கடன் திருப்பிக்க கொடுக்கப்பட்டுவிடும் என்பதற்கான நியாயமான உத்தரவாதம் இல்லை."

ஹுசைனுடைய ஆட்சி கவிழ்ந்தால் அமெரிக்க எதிர்ப்பு சக்திகள் ஈராக்கில் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என்ற பயத்தையும் அடிக்கோடிட்டு, ஏற்றுமதி-இறக்குமதி வங்கி தொடர்ந்தது: "போர் முடிந்து, திருப்திகரமான தீர்வுகள் ஈராக் அரசாங்கத்தை யார் கட்டுப்படுத்துவர், எவ்வாறு போர் இழப்புகள், கடன்கள் எப்படி கொடுக்கப்படும் என்பவற்றிற்கு தீர்வு ஏற்படும் வரை, பணத்தை திருப்பிக் கொடுக்க நியாயமான உத்தரவாதங்கள் இல்லாத வரை, இடைக்கால, நீண்டகால செயற்பாடுகளுக்கான திருப்திகர வெளிப்பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு வாய்ப்பு இல்லை."

1984, ஏப்ரல் 5ஆம் தேதி, ஈராக்கில் ஒரு அணுமின் சக்திநிலையைம் அமைப்பதற்கான கடன் திட்டம் ஒன்றை, ஈராக்கின் நலிந்த நிதிநிலையைக் காரணம் காட்டி இவ்வங்கி மறுத்துவிட்டது; நிர்வாகத்தின் அதிகாரிகள் எக்சிமிலிருந்து எண்ணெய்க்குழாய்த்திட்டத்திற்கு நிதிபெறலாம் என்ற நம்பிக்கையும் ஏமாற்றத்திற்கு உட்பட்டது. இதையொட்டி, அப்பொழுது துணை ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (இப்பொழுதைய ஜனாதிபதியின் தந்தை) 1984, ஜூன் 12 அன்று குறிப்பு ஒன்றை வேண்டுகோள் விடுத்து எக்சிம் வங்கி நிர்வாகக் குழுத்தலைவர் வில்லியம் டிரேப்பருடன் சந்திப்பதற்குப் பெற்றார். அகபா எண்ணெய்க் குழாயை பெக்டெல்லினால் கட்டப்படுவதற்கும், சவுதி அரேபியே வழியே மற்றொன்று, இப்பொழுது ஹாலிபர்டனுடைய துணை நிறுவனமான ப்ரெளன் ரூட் அமைப்பதற்கும், டிரேப்பருக்கு நம்பிக்கையளிக்கும் முறையில் புஷ் முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜூன் 25, 1984 அன்று, எக்சிம் வங்கி ஒரு பொது அறிக்கையை வெளியிட்டது: "அமெரிக்க ஏற்றமதி-இறக்குமதி வங்கியின் இயக்குனர் குழு, ஈராக்கின் வடமேற்கில் இருக்கும் அல் ஹடிதாவிலிருந்து, ஜோர்டானில் இருக்கும் அகாபா துறைமுகம் வரை அமைக்கப்பட இருக்கும் எண்ணைய்க் குழாய்த் திட்டத்திற்கு தேவையான அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு நிதி ஆதரவு தருவதாக இசைந்துள்ளது. எக்சிம் வங்கி இத்திட்டத்திற்காக அமெரிக்க ஏற்றுமதிகள் திறன் $500 மில்லியனுக்கு மிகாமல் அளிப்பதாகக் கூறியுள்ளது."

ஆனால் $500 மில்லியன் தொகை இத்திட்டத்தை அமைக்கப் போதாது என்ற நிலையில், மறு ஆண்டில், றீகன் நிர்வாகத்தின் அதிகாரிகள் கூடுதலான கடனைப்பெற, Citibank, Lloyds of London, OPIC (Overseas Private Investment Corporation) என்ற அமெரிக்க அரசாங்க நிறுவனம், மற்றும் American International Group என்ற மிகப்பெரிய காப்பு நிறுவனம் ஆகியவற்றை நாடியது. இதற்கு ஆதாரம் செப்டம்பர் 25, 1985ல் பெக்டெல் வழக்குரைஞர் E.Robert Wallach III, ஜனாதிபதி றீகனுக்கு மிக நெருக்கமான அப்பொழுது தலைமை அரசாங்க வக்கீலாக இருந்த எட்வின் மீஸ் இற்கு எழுதிய குறிப்பு ஆகும்.

அதே நாள் வாலச்சுக்கும், மீசிற்கும் இடையே பறிமாறிக்கொள்ளப்பட்ட குறிப்புக்களை, அவர்கள் ஒரு பெக்டெல் பங்குதாரரும், ஸ்விஸ் நாட்டு வணிகருமான புரூஸ் ராப்பாப்போர்ட்டு ஒரு திட்டத்தைக் கொண்டு அதன்படி இஸ்ரேல் இந்தக் குழாயைத் தாக்காது இருப்பதற்காக இதிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி அதற்குக் கொடுக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டது. வாலச் கூற்றின்படி, இஸ்ரேலிய தொழிற்கட்சி பிரதம மந்திரியான Shimon Peres இந்த நிதியத்தை சோவியத் யூதர்கள் குடியேற பயன்படுத்தும் (அவர்கள் தொழிலாளர் கட்சிக்கு வாக்குப்போடக்கூடும்) என்றும் இது இஸ்ரேலிய லிகுட் கட்சிக்குப் பொதுவாக வாக்களிக்கும் பழமைவாத செபர்டிக் யூதர்கள் கொடுக்கும் நிதியைச் சமன்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் கருதப்பட்டது. மீஸுக்கு எழுய கடிதத்தில் ராப்போபோர்ட், "இத்தகைய உடன்பாடு உள்ளது என்பது எல்லா இடங்களிலும் மறுக்கப்படும்...இந்நிதியில் ஒரு பகுதி தொழிற்கட்சிகும் நேரடியாகச் செல்லும்."

அகாபா எண்ணெய்க்குழாய்த்திட்டம் அமைக்க நிதித் திட்டத்திற்கு தொடர்பு உடைய மற்றவர்கள் James Schlesinger, William Clark ஆகியோரும் ஆவர். ஷ்லெசிங்கர், நிக்சனினதும் போர்டினதும் நிர்வாகங்களில் பாதுகாப்பு மந்திரியாக இருந்தவர். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் வரை கிளார்க் றீகனுடைய உள்துறை மந்திரியாக இருந்தவர் ஆவர்.

இறுதியாக போதுமான, அதிலும் குறிப்பாக பெக்டெல் தன்னுடைய செலவினங்களை $1.1 பில்லியன் என்று உயர்த்தியபோது, நிதிக்கு ஆதாரம் கிடைக்காமல் போய்விட்டது. அக்டோபர் 1, 1985 அன்று, பாக்தாதில் அமெரிக்கத் தூதராக இருந்த டேவிட் நியூடன் எழுதினார்: "[பெயர் நீக்கப்பட்டது]..பெக்டலுடைய அகாபா எண்ணெய்த்திட்டம் பற்றி மிகவும் மனம் முறிந்த நிலையில் உள்ளார் [...] பெக்டெல் செலவின மதிப்பீடுகளை உயர்த்தியது பற்றியும் [மற்ற திட்டங்களைக் கருத்தில் கொண்டும்] இதைவிட அவை குறைவான மதிப்பீடு கொண்டிருந்தாலும் ...நிதி கொடுக்கப்பட்டது."

நியூட்டன் ''[இவர்] தான் பெக்டெல் முன்மொழிவின் முக்கிய தொழில்நுட்ப மதிப்பீட்டாளர். இவர் கூறிய கருத்துக்கள் [...] எண்ணெய் குழாய் அமைப்புத் முன்மொழிவுகள் செயல்படுத்த முடியாத நிலையில்தான் இருக்கின்றன." என முடிக்கின்றார். இதுதான் அகாபா குழாய்த்திட்டம் பற்றி இரகசியக் காப்பு நீக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள கடைசிக் குறிப்பு ஆகும்.

சுதந்திரமான வழக்குரைஞர் ஜேம்ஸ் மக்கே, அகாபா திட்டம் பற்றி உட்தொடர்பு பற்றி விசாரணை நடத்தியதில், மீஸ் இன் ராஜிநாமா வெளிவந்தது. வேறு எந்த அதிகாரியும் எவ்விதப் பாதிப்பிற்கும் உட்படவில்லை.

"விவசாயக் கடன்கள்", மற்றும் Banco Nazionale del Lavoro ஊழல்

அகாபா பேச்சுவார்த்தைகள் நடந்த நேரத்திலேயே, றீகன் நிர்வாகம் ஈராக்கிற்கு அமெரிக்க விவசாயத் துறையில் CCC திட்டத்தின்படி கடன்கள் கொடுக்க ஏற்பாடு செய்தது. இத்திட்டத்தின்மூலம் கடன்கள் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டு, நிதி விவசாயப் பொருட்கள் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும் என்று அரசாங்கத்திடம் உத்தரவாதம் பெறப்படும்.

பெப்ருவரி 7, 1991, விவசாயத்துறை, செயலர் ரிச்சர்ட் கிரெளடர் தலைமையில், 1983 லிருந்து 1990 வரை CCC கிட்டத்தட்ட 5 பில்லியன் டொலர்கள் ஈராக்கிற்கு வழங்கியதற்கான குறிப்பு காணப்படுகிறது. இதன் போக்கு பெரும் வகையில் அமெரிக்க அரசாங்கம் ஹுசைன் ஆட்சிக்குக் கொடுத்த ஆதரவுடன் இயைந்து நிற்கிறது. அமெரிக்கா 1991ல் ஈராக்கின்மீது போர் தொடுத்ததும், ஈராக் இந்த CCC கடன்களைத் திருப்பிக்கொடுக்கவில்லை; CCC க்கு கொடுக்கவேண்டிய 2 பில்லியன் டொலர்கள் கடன் தொகை பாக்கியாக நின்றுவிட்டது.

CCC திட்டம் அனைத்துப் புறங்களிலும் மோசடியைக் கொண்டிருந்தது. ஒருபுறம், அமெரிக்க நிறுவனங்கள், அயல்நாட்டு ''தரம்குறைந்த பொருட்களை'' அமெரிக்கப் பொருட்களுடன் இணைத்து அனுப்பிய வகையில் பெரும் இலாபத்தைக் கொண்டன; CCC திட்டங்களின்படி அமெரிக்க உற்பத்திப் பொருள் மட்டுமே அனுப்பப்படலாம். இதைவிட முக்கியமாக, விவசாயத்துறை ஆய்வாளர்கள் 1980 களின் கடைசிப் பகுதியில், மிக அதிகமான இலாபங்கள் CCC ஆதரவு பெற்றிருந்த விற்பனைகளில், ''விற்பனைக்குப் பின்'' பணிகளுக்கான நிதி அதிகமாக இருந்ததாகவும் கண்டறிந்தனர் (அதாவது கவச வண்டிகள், தொடர்புக் கருவிகள், மற்ற இராணுவத்திற்குப் பயன்படக்கூடிய பொருட்கள் போன்றவை); இதைத் தவிர, ஈராக்கிய அதிகாரிகளுக்குக் கொடுத்த இலஞ்சப் பணமும் அதிகமாக இருந்தது.

ஈராக்கில் CCC திட்டம் அமெரிக்கக் கருவூலம் மற்றும், கூட்டமைப்பு இருப்பு வங்கி அதிகாரிகளின் எதிர்ப்புக்களையும் மீறி நடந்தது. அவர்கள் 1987-90 முழுவதும் இத்திட்டம் குறைக்கப்பட வேண்டும் அல்லது அகற்றப்படவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர், அதற்குக் காரணம் ஈராக்கினால் இவற்றைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்பதே ஆகும். ஆனால், அரசுத் துறை பலமுறையும் குறுக்கிட்டு, "அமெரிக்க நலன்களைக்" கருத்தில் கொண்டு கடன்கள் கொடுக்கப்படட்டும் என்று அழுத்தம் கொடுத்தனர்.

இக்குறுக்கீடுகள், Banco Nazionale del Lavoro (BNL) ஊழலுக்குப் பிறகும் தொடர்ந்தன; அவ் ஊழலின்படி, அவ்வங்கி 1989இல் CCC ஈராக்கிய உதவியில் பங்கு பெற்றதனாலேயே உடைந்து விட்டது.

1980 èOTM BNL அட்லான்டா கிளை மேலாளர், கிறிஸ்டோபர் டிரோகெளல் உடைய ஆரம்ப முயற்சியால் ஈராக்கிற்கு உதவும் பெரும் நிதி அமைப்புக்களில் ஒன்றாயிற்று. பெரும்பாலும் இத்தாலிய அரசாங்கத்தின் உடமையாக இருந்த இது, சிறந்த மதிப்பைக் கொண்டிருந்தது: இதையொட்டி அது ஈராக்கிய அரசாங்கத்திற்குக் கடன் கொடுக்க முடிந்தது. 1992இல், அமெரிக்கப் பிரதிநிதி ஹென்ரி கோன்ஜாலெஸ் நடத்திய விசாரணையின்படி, BNL ஈராக்கிற்கு 4 பில்லியனை டொலர் 1980களில் கடனாகக் கொடுத்திருந்தது.

1990 மே 21, அமெரிக்க விவசாயத்துறை அறிக்கையின்படி, இந்த 4 பில்லியன் டொலர் கடன்தொகையில், 2 பில்லியன் டொலருக்கும் மேலாக "greybook" கடன்களாகும். அதாவது சட்டவிரோதமான கடன்கள். இவை BNL உடைய பொதுச் சான்றுகளில் காட்டப்படமாட்டாதவை. இவை அமெரிக்க வங்கி அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்படவில்லை, ரோமில் உள்ள BNL அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்படவில்லை. ட்ரோகெளலும், மற்றைய அட்லான்டா அதிகாரிகளும் தங்களுக்கென கொஞ்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையின் முக்கியமான அரசியல் தன்மை, 2 பில்லியன் டொலரில் கிட்டத்தட்ட 750 மில்லியன் டொலர் நிதி "கணக்கில் காட்டப்படாமல்" கொடுக்கப்பட்டது என்பது, உண்மையில் விவசாயத்துறையின் CCC திட்டத்திற்கு கடன் உறுதிக்காகக் கொடுக்கப்பட்டது ஆகும். அதிலும் வெடிப்பு மிகுந்த தன்மை, 2 பில்லியன் டொலர் மொத்த BNL தொகையில், ஈராக்கியத் தொழில் துறை அமைச்சகம், இராணுவத் தொழில்துறைக்கு (MIMI) கொடுக்கப்பட்டது ஆகும்; இத்துறையின் தலைவர் ஹுசைனின் மருமகனான ஹுசைன் காமெல் ஆவார். அரசாங்கம் மற்றும் இராணுவத்தினுடைய பல திட்டங்களையும் மற்றும் ஈராக்கின் அணுவாயுத, இரசாயன ஆயுதங்கள் திட்டங்களையும் MIMI மேற்பார்வையிட்டது.

BNL, Matrix Churchill Limited (MCL) என்ற பிரிட்டிஷ் இராணுவக் கருவிகள் தயாரிக்கும் அமைப்பை பெறுவதற்கும் மற்றும் வளர்ச்சிக்கும் ஈராக்கிற்கு உதவி செய்தது. Matrix Churchill Corp.(MCC) அதன் அமெரிக்கக் கிளையாகும். அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி, ஈராக்கிய அரசாங்கம் இந்த MCL/MCC வாங்கியதை, அணுவாயுத ஏவுகளை வடிவமைப்பதற்கான கண்ணாடி இழைகள், கார்பன் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை பற்றி அறிவதற்காக வாங்கியது.

BNL ஈராக்கிய ஆயுதங்கள் திட்டத்திற்கு நிதியளித்தமை இத்தாலியக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அட்லான்டா கிளையின் ஒழுங்கற்ற நிதிநிலைமை பற்றி விசாரணை நடத்தியதும், பொது ஊழலாக 1989இல் செப்டம்பர் மாதம் அம்பலப்படுத்தப்பட்டது. அமெரிக்க அரசாங்கம் இதற்கு விடை அளிக்கும் வகையில் அதன் தூதரகங்களை, செய்தி ஊடகங்களின் கேள்விகளுக்கு "எந்தக் கருத்தும் இல்லை" ("no comment'') எனப் பதில்கூறுமாறு உத்தரவிட்டது. CCC திட்டம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப் பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு FBI மேற்கொண்டிருந்த 1989 ஆகஸ்ட் சோதனைக்குப் பின்பும், மற்றும் ஒரு 1 பில்லியன் டொலர் அமெரிக்க அரசாங்கக் கடன் உத்தரவாதங்கள் ஈராக்கிற்காக ஒப்புதல் கொடுக்கப்பட்டன.

BNL உடைய செயல்கள் அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்துதான் நடைபெற்றது என்பதற்கு மிகப்பெரிய அளவில் சான்றுகள் நிரூபிப்பதற்கு இருக்கின்றன; ஊழல் அம்பலமான பின்னர் அதனை மூடிமறைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1990களின் ஆரம்பத்தில் தகவல் வெளியான உடன், 1992 வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜிம் ஹோக்லாந்து எழுதியுள்ளபடி, அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ், "தனக்காக மற்றவர்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார்....புஷ் தனக்கு ஈராக்கிற்கு அனுப்பப்பட்ட அமெரிக்க போர்க் கலங்களைப்பற்றித் தெரியவந்துள்ளதில் பொய்யுரைகளையே கூறியுள்ளார் என்பது மறுக்கப்பட முடியாது."

1989இல் 1 பில்லியன் டொலருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது, ஈராக்குடன் நெருங்கிய உறவுகளை புஷ் துண்டித்தபின், தேசியப் பாதுகாப்பு முடிவு நெறியின்படி இரகசியக் காப்பு நீக்கப்படலாம் என்று உத்திரவிட்ட பின் தெரியவந்தது. அதே ஆண்டு அக்டோபர் மாதம், வெளிவிவகாரத்துறை செயலர் ஜேம்ஸ் பேக்கர், தானே தலையிட்டு CCC கடன் உத்தரவாதங்களைத் தொடருமாறு ஏற்பாடு செய்தார். BNL வங்கி நிர்வாகத்தின்படி, ஈராக்கிடம் வணிகம் செய்ய விரும்புவோர் அப்பொழுது துணைத் தலைவராக இருந்த டான் க்வேலினால் BNL க்கு அனுப்பப்பட்டதாகவும், இவர் 1990களின் ஆரம்பத்தில் வந்த தகவல்களின்படி, ஊழலில் தொடர்புடைய ஒரு நிறுவனத்துடன் நெருங்கிய உறவுகள் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், BNL அதன் செயல்பாடுகளில், KIssenger Associates ஆல், நிக்சன் கால வெளிவிவகாரத்துறை செயலராக இருந்த ஹென்றி கிசிங்கர் தலைமையில் இருந்த நிறுவனத்தால், ஆலோசனைகளைப் பெற்றது. இந்த ஆலோசனை நிறுவனம் முன்பு, ஈராக் கடன் திட்டம் வழங்கப்பட்டபோது, அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் இருந்த பலரை வேலைக்கு அமர்த்தியிருந்தது; அவர்களில் அரசுத் துறை செயலர் லோரென்ஸ் ஈகிள்பர்க்கரும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரென்ட் ஸ்கெளகிராப்டும் அடங்குவர்.

இப்படி மிக உயர்ந்த தொடர்புகள் இருந்தபோதிலும்கூட டிரெளகலும், வேறு சில அதிகாரிகளும் மட்டுமே குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டு ஊழலில் அவர்கள் தொடர்பிற்காகத் தண்டனையும் பெற்றனர். இந்த வழக்கை நடத்திய மார்வின் ஷூப் "நான் எல்லா இரகசிய ஆவணங்களையும் படித்தேன்; இவல் (டிரெளகல்) மட்டும்தான் முக்கிய பங்கை இந்தச் செயலில் கொண்டார் என்பதை நம்ப முடியாது." என கூறினார். டிரெளகலுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்ட தண்டனை, பின்னர், "அமெரிக்க--இத்தாலியக் கொள்கை" என்ற அடிப்படையில் ஈரான்-ஈராக் போரின்போது குறைக்கப்பட்டன; நீதிபதி அவர்களது பொறுப்பு குறைத்துவிட்டதாக உணர்ந்தார்.

அமெரிக்காவிடமிருந்து, ஆயுதத் தொடர்புடைய பொருட்களை ஈராக் வாங்கியது, அமெரிக்க அரசாங்கத்தின் பொதுவான சதாம் ஹுசைனுக்கான ஆதரவின் ஊக்கத்தால் நடந்தது. இதைத்தவிர, பெருநிறுவன நலன்களும் பங்கு கொண்டிருந்தன. 1992, அக்டோபர் 12ஆம் தேதி, ஒரு Wall Street Journal இன்படி, "அமெரிக்கா எவ்வாறு ஈராக்கில் சதாம் ஹுசைனுக்கு நிதியளித்து, உதவியது என்ற நாடகம் கண்முன் விரியும்போது, அமெரிக்க பெருநிறுவனங்களின் பங்கு கூடுதலாகவே இருந்தது". பல நிறுவனங்கள் "ஈராக்கை ஒரு வணிக வெள்ளம் கொண்டு வரும் என்று கருதினர், அதாவது USDA, எக்சிம் வங்கி போன்ற அரசாங்க நிறுவனங்களிடம் இருந்து கடன் வசதிகள் பிழிந்து எடுக்கப்படும் வரை." என்று அப்பத்திரிகை கூறியுள்ளது.

பெரிய நிறுவனங்களோ, அரசாங்க அதிகாரிகளில் உயர்மட்டத்தினரோ இவ்வழக்கில் குற்றச் சாட்டிற்கு உட்படவில்லை; அது முதலில் தோன்றியதிலிருந்து அமெரிக்க செய்தி ஊடகத்திலிருந்து முற்றிலும் மறைந்தே போயிற்று. இந்த ஊழல் தோன்றியபோது அதைப்பற்றி எழுதிய பலரும், ஹோக்லாந்து இனதும் நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் வில்லியம் சபயர் போன்றவர்கள் அதனிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருந்தது என்பதைக்கூறி கடந்த ஆண்டு ஹுசைன் ஆட்சி மாற்றத்தையும், ஈராக்கிய ஆக்கிரமிப்பையும் பெரும் ஆர்வத்துடன் வரவேற்றவர்கள் ஆவர். ஆனால் 1980 களில் ஹுசைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து ஆட்சியை அமைக்கச் செய்ததில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை தாங்கள் அறிந்தவற்றை அமெரிக்க மக்களிடம் கூறாதவர்கள் ஆவர்.

தொடரும்.....

Top of page