:
ஆசியா
:
மலேசியா
Government routs opposition parties in Malaysian elections
மலேசியத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளை தோல்வி அடையச்செய்த அரசாங்கம்
By John Roberts
29 March 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
மலேசியாவில் மார்ச் 21-ல் நடைபெற்ற தேசிய வாக்குப்பதிவில் பிரதமர் அப்துல்லாஹ்
அஹமது பதாவியின் தலைமையில் செயல்பட்டு வரும் ஆளும் பரிஸ்சன் தேசிய (BN)
கூட்டணி கட்சி இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரும் வெற்றியை நிலைநாட்டியுள்ளது. 219 நாடாளுமன்ற
இடங்களில் BN,
198 இடங்களில் வெற்றிபெற்றது, 1999 தேர்தலில் 50 இடங்களில் தான்
வெற்றி பெற்றிருந்தது. BN
கூட்டணியில் முக்கிய பங்குவகிக்கும், பதாவியின் சொந்த ஐக்கிய மலாய் தேசிய
அமைப்பு (UMNO-United Malays National
Organisation) 71-லிருந்து 109-க்கு தன் இடத்தை
அதிகரித்துள்ளது.
UMNO-வின் பிரதான எதிரியான மலாய் மக்கள்
வாக்கை நம்பியிருந்த இஸ்லாமிய அடிப்படைவாத பார்ட்டி இஸ்லாம்-சே-மலேசியா (Party Islam
se- Malaysia -PAS) 1999 தேர்தலில் குறிப்பிடத்தக்க பயனையடைந்த,
இது தற்போது படுதோல்வியடைந்தது. PAS உறுப்பினர்கள்
எண்ணிக்கை தேசிய அளவில் 27-லிருந்து ஏழாக குறைந்துவிட்டது. ஆனால் மேலும் அந்தக்கட்சி வடக்கத்திய மாநிலமான
டெரன்ங்கானுவில் அரசின் சட்டம் இயற்றும் சபையை இழந்துவிட்டது. அருகாமையிலுள்ள
கேலன்டானில் 24 இடத்தை பெற்று ஆட்சியை விளிம்பில் தக்கவைத்துக்கொண்டது, BN-க்கு
20 இடங்கள் கிடைத்தன. டெரன்ங்கானுவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் PAS
32-ல் இரண்டு இடங்களை மட்டுமே பெற்றது.
எதிர்கட்சியான தேசிய நீதிக்கட்சி அல்லது
கேட்டிலன் துணைப்பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்வார்
இப்ராஹீம் மனைவியான Wan Azizah Wan Ismail
1999-ல் அமைத்த கட்சியாகும். இந்தக்கட்சி கூட்டாட்சி நாடாளுமன்றத்தில்
பெற்றிருந்த ஐந்து இடங்களில் நான்கை இந்த தேர்தலில் இழந்துவிட்டது. அவரது கணவரின் பழைய தொகுதியான
Penang ல்
Wan-ismail
மிகக்குறைந்த 590 வாக்குகள் வித்தியாசத்தில் நான்கு முறை நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் வெற்றிபெற்றிருக்கிறார்.
இந்த இறக்கத்திலிருந்து 1999 தேர்தலில் இந்தத் தொகுதியில் 9,000 மேலான மேலதிக வாக்குகளை பெற்றிருந்தது.
கேட்டிலன்
மற்றும் PAS
ஆகிய இரண்டு கட்சிகளும் நெருக்கமில்லாத எதிர்கட்சிகளின் கூட்டணியான
Barisan Alternatif
(BA)
சார்ந்தவை.
தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொண்ட ஒரே எதிர்க்கட்சி ஜனநாயக நடவடிக்கை
கட்சியாகும் (Democratic Action
Party-DAP), இக்கட்சி
PAS இஸ்லாமிய
அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பான தகராறை தொடர்ந்து
BA கூட்டணியிலிருந்து
விலகியது. இக்கட்சி சீன மற்றும் இந்திய சிறுபான்மையினர் ஆதரவை அடிப்படையாகக் கொண்டது.
DAP கட்சியின் இரு
முக்கியமான முன்னணித் தலைவர்களான Lim Kit
Siang மற்றும்
Karpal Singh 1999-ல் இழந்த தொகுதிகளை
திரும்பப்பெற்றனர்.
BN வெற்றிபெறும் என்பதில் தீவிரமான
சந்தேகம் எதுவும் நிலவவில்லை. 1999-தேர்தலுக்கு பின்னரும்கூட ஆளும் கூட்டணி, 1957-ல் சம்பிரதாய சுதந்திர
அதிகாரத்தை பெற்று கொண்டதை தொடர்ந்து, நாட்டின் அரசியலமைப்பை திருத்தம் செய்ய இப்பொழுது
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இன்றியமையததாய் இருக்கிறது. UNMO
மலாய் தீபகற்பத்தில் கிராம மலாய் மற்றும் வட போர்னியோவின் சபா மற்றும் சாரவாக் தொகுதிகளை ஒரு
கட்சிக்கு சாதகமாய் பிரிப்பதன் அடிப்படையிலிருந்து தொடர்ந்து பயன் பெறுகிறது.
எதிர்கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் நடத்துவதற்கு குறுகிய காலமேயாகிய வெறும்
எட்டு நாட்கள் அளிக்கப்பட்டதால், மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிடாத பற்றாக்குறை ஆகியவற்றால்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. UNMO-
விற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஊடகங்களை அனுபவிக்க ஏகபோக முக்கியத்துவம் தரப்படுகிறது. சென்ற
தேர்தலுக்குப் பின்னர், PAS
செய்திப் பத்திரிகையான Harakah
தற்போது மாதத்திற்கு இரண்டுமுறைதான் வெளிவருமாறு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது மற்றும் அது கட்சி
உறுப்பினர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
தேர்தலைத் தொடர்ந்து, எதிர்கட்சித்தலைவர்கள் தேர்தல் முறைகேடுகள் பற்றி
புகார் கூறியுள்ளனர். உள்நாட்டு கண்காணிப்பு அமைப்பான, மலேசியர்களுக்கான சுதந்திர மற்றும் நேர்மையான
தேர்தல்கள், தலைமை தேர்தல் அதிகாரியும் அவரது குழுவினரும் ஒட்டுமொத்தமாக பதவி விலக வேண்டுமென்று
கோரிக்கை விடுத்தும், சுதந்திரம் பெற்றபின்னர் நடைபெற்ற தேர்தல்களில் இது மோசமான வாக்கெடுப்பு என்றும்
கூறியுள்ளனர்.
நிலைபெற்றுவிட்ட ஜனநாயக விரோத நடைமுறைகள் இந்த தேர்தல் முடிவுகளில்
பங்களிப்புச் செய்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. இறுதி ஆய்வில், எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல்
அடித்தளத்தை இழந்து விட்டது தெளிவாகிறது. UMNO-வுடன்
அடிப்படை வேறுபாடுகள் எதுவுமில்லாத ஆளும் செல்வந்த தட்டில் ஏற்றுக்கொள்ளாத பிரிவைத்தான்
(கன்னையைத்தான்) எதிர்க்கட்சிகள் பிரநிதித்துவப்படுத்துகின்றனர். சாதாரண உழைக்கும் மக்களுக்கு முற்போக்கான
மாற்று எதையும் தரவில்லை.
1997- 98-ல் ஆசிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் 1999 தேர்தல்கள்
நடைபெற்றபொழுது, மலேசியாவில் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் பெருகியது. அதன்விளைவாக
பொருளாதாரக் கொள்கை தொடர்பாக UMNO-ல்
கூர்மையான பிளவு ஏற்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த அன்வர் இப்ராஹிம்
IMF-ன் சுதந்திர
சந்தை சீர்திருத்தங்களை ஆதரித்து நின்றார். அப்போது
UMNO-வுடன் நெருக்கமான தொடர்புள்ள மலாய்
வர்த்தகர்களுக்கு அது அச்சுறுத்தலாக அமைந்துவிட்டது.
மஹாதீர் IMF-
நிகழ்ச்சிநிரலை எதிர்த்தார். நாணயம் மற்றும் மூலதனக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார். அன்வர் பதவி விலக
மறுத்ததைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டனர். அவர் ஊழலுக்கெதிராக அவர் மேற்கொண்ட கண்டன பிரச்சாரம் விறுவிறுப்படைந்ததும் அன்வர்
திடீரென்று கைது செய்யப்பட்டார். முதலில் கொடூரமான உள்நாட்டு பாதுகாப்பு சட்டப்படி (ISA)
கைது செய்யப்பட்டார். அதற்குபின்னர் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஒருபால் சேர்க்கை ஆகிய
குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 15-ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
PAS, கேட்டிலன் மற்றும் DAP
ஆகியன Barisan Alternatif
அமைப்பை தொடக்கி, ஊழல் மற்றும் ஜனநாயக சீர்திருத்தம் என்ற பிரச்சாரத்தை பயன்படுத்தி அன்வரை
கையாண்ட முறைக்கு எதிராக பரந்தளவில் ஏற்பட்டுள்ள ஆத்திரத்தை சுரண்டிக்கொள்ள பார்க்கின்றனர். ஆனால் அது
பொதுவான செயற்திட்டம் அல்லது அரங்கு இல்லாத, சூழ்நிலைக்கு உகந்த சந்தர்ப்பவாத அரசியல்
அடிப்படையிலான ஒற்றுமையாக இருந்தது. 1999-தேர்தலுக்குப் பின்னர் DAP
அந்தக் கூட்டணியிலிருந்து விலகியது. ஏனெனில் PAS-ன் இஸ்லாமிய
அரசுக்கான கோரிக்கை சீன மற்றும் இந்திய இன வாக்காளர்களை அந்நியப்படுத்தியது.
மஹாதீர் அமெரிக்கா மீது செப்டம்பர் 11-ல் நடத்தப்பட்ட தாக்குதலைத்
தொடர்ந்து PAS
இஸ்லாமிய தீவிரவாதத்தோடும், பயங்கரவாதத்தோடும் தொடர்புடையதென்று குற்றம் சாட்டியதன் மூலம்
அதனை மேலும் தனிமைப்படுத்தினார். அவரும் அப்போது உள்துறை
அமைச்சராக இருந்த பதாவியும் ISA-ஐ
பயன்படுத்தி மூத்த PAS
தலைவரான Nik Adli Nik Abdul Aziz,
Kelantan முதலமைச்சர்
Nik Aziz Nik Mat
புதல்வர் உட்பட 90-பேருக்கும் மேற்பட்டவர்களை சிறையில் அடைத்தனர். சென்ற செப்டம்பரில் பதாவி
விசாரணையில்லாமல் மேலும் 9, PAS-
உறுப்பினர்களுக்கு மேலும் இரண்டாண்டு சிறை தண்டனையை விதித்தார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்,
UMNO, PAS மீது
அதன் கட்டுப்பாட்டிலுள்ள டேரங்கானு மற்றும் கேலன்தான் மாநிலங்களின் நிர்வாகம் குறித்து தாக்குதல்களை செய்தது.
அந்த இரண்டு மாநிலங்களும் நாட்டிலேயே மிக மோசமான வறுமையில் உள்ளவை.
BN பொருளாதார
ஊக்குவிப்பு, புதிய வேலை வாய்ப்புக்கள், பல்கலைக்கழகத்தை உருவாக்குதல், உள்ளூர் விமான நிலைய விஸ்தரிப்பு,
மற்றும் இஸ்லாமிய கல்லூரி உருவாக்குவது ஆகிய திட்டங்களுக்கு உறுதிமொழி அளித்தது. இந்த பிரச்சாரம் தெளிவான
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட பத்திரிகையான
Straits Times
ஒரு Terengganu
வாக்காளரை பேட்டிகண்டது, அவர் PAS
சூதாட்டத்தை, விடுதிகளை மற்றும் பொது கலைநிகழ்ச்சிகளில் மகளிர் கலந்து கொள்வதை தடுத்திருப்பதற்கு வரவேற்பு
தெரிவித்தார். ''ஆனால் ஆக்கபூர்வமான சாதனை, அதிக வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி மாநிலத்தில்
நமக்குத் தேவை'' என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்ற அக்டோபரில் மஹாதீரிடமிருந்து பதாவி பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர்
ஊழலை ஒழித்துக்கட்ட உறுதியளித்து கேட்டிலனில் தமக்கு ஏற்படக்கூடிய எதிர்கால அச்சுறுத்தலை ஒழித்துக்கட்டினார்.
அவர் பதவியேற்றவுடன் மஹாதீர் ஒப்புதல் அளித்த 3.8-பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான ரயில்
திட்டத்தை தள்ளி வைத்தமை கருத்து வேறுபாடுகளுக்கு இடமளித்தது. அந்த ஒப்பந்தம் மலேசியா தொழிலதிபர் சையது
முக்தார் அல் புகாரிக்கு வழக்கப்பட்டது. முன்னாள் கேபினட் அமைச்சர், தேசிய எஃகு கம்பெனியின் முன்னாள் தலைவர்
உட்பட பலர் மீது ஊழல் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அடையாளபூர்வமாக பதாவி ஒப்புதல் அளித்தார்.
மலேசியாவில் பொருளாதார சீர்திருத்தம் தொடர்பான கவலைகளுக்கு பின்னணியாக
அமைந்திருப்பது முதலீடுகளை கவர்வதற்கான போட்டியாகும். 2001-முதல் முதலீடுகள் வீழ்ச்சியடைந்துவிட்டன.
சென்ற ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP)
விகிதம் நான்கு சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. இது அரசாங்கம் செலவிட்ட கணிசமான தொகையையும் உள்ளூர்
விற்பனையையும் பொறுத்தே அமைந்தது. 2004- பட்ஜெட் பற்றாக்குறை
GDP-யில் 3.3
சதவீதம் என முன் கூட்டியே மதிப்பிடப்பட்டிருக்கிறது. நடப்பு செலவுகளையும் முன்னர் சேர்ந்துவிட்ட கடனையும் சமாளிப்பதற்கு
பெரும் எடுப்பில் கடன்பத்திரங்களை விற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
கேட்டிலனின் மற்றைய தேர்தல் தளம், அன்வருக்கு சிறைத்தண்டனை விதித்ததை எதிர்த்தது.
இது பெரும்பாலும் பின்னணிக்கு தள்ளப்பட்டவிட்டது. இதற்கு பெருங்காரணம் புஷ் நிர்வாகத்தின் அணுகுமுறைதான். மஹாதீர்
ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும், வாஷிங்டன் படையெடுத்ததை கண்டித்தார். பின்னணியில் அமெரிக்காவின் ''பயங்கரவாதத்திற்கு
எதிரான பூகோள போரை" மறைமுகமாக ஆதரித்தார். இதற்கு, அன்வரை அவர் நடத்திய விதத்தையும்,
பொதுவாக மலேசியாவில் ஜனநாயக உரிமைகளை துஷ்பிரயோகமாக நடத்தி வந்ததையும் வெள்ளை மாளிகை கண்டு
கொள்ளாமல் அமைதியாக விட்டுவிட்டது.
தற்போது தேசிய நாடாளுமன்றத்தில் 90-சதவீத இடம் பதாவி கையில் உள்ளது.
12 தேசிய சட்டசபைகளில் 11- அவர் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அவரது வெற்றி நிச்சயமற்ற
பொருளாதார மீட்சியைப்பொறுத்தே அமைந்திருக்கிறது. மிகப்பரவலான பொதுமக்களது எதிர்ப்பார்ப்புக்களை
அரசாங்கம் நிறைவேற்றிவிட முடியாது. மேல் தோற்றத்திற்குக் கீழே அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான
தொடர்ச்சியான தாக்குதல்கள் புஷ் நிர்வாகத்தோடு அரசாங்கம் கொண்டுள்ள நெருக்கமான உறவுக்கு எழுந்துள்ள
குரோதம் ஆகியவற்றிற்கு பொதுமக்களிடையே தொடர்ந்து அதிருப்தி நிலவுகிறது.
Top of page |