WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
WTO meeting collapses as trading system begins to crack
சர்வதேச வர்த்தக கட்டுக்கோப்பில் விரிசல் தொடங்கியதால் உலக வர்த்தக அமைப்பின்
மாநாடு தோல்வி
By Joe Lopez
17 September 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
மெக்சிகோவில் உள்ள கான்கன் பகுதியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் (WTO)
அமைச்சர்கள் மாநாடு பொறிந்து போனதானது, தோஹா சுற்று வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் என்று அழைக்கப்படுபவை
முற்றிலும் தோல்வி கண்டு WTO அமைப்பே சிதையும் நிலையைத்
தொடக்கி வைக்கும் நிலைக்கு வந்துவிட்டது.
2005 தொடங்கும் நேரத்தில் உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான
விரிவான கட்டுக் கோப்பை உருவாக்கிவிட வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள், வெளிநாட்டு
முதலீடு, தொழிற் போட்டிக் கொள்கை, அரசாங்க கொள்முதல்கள், வர்த்தக வசதியளிப்பு ஆகியவை பற்றிய விதிகள்
சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய உறுப்பினர்கள்
விடுத்த கோரிக்கையை வளர்ந்து வரும் ஏழை நாடுகளைச் சேர்ந்த ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த குழுவினர்
ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டபொழுது பொறிந்து போயின.
இந்தக் குழுவில் ஏழை நாடுகள் அடங்கி இருந்தன. பணக்கார நாடுகள் சந்தைகளையே
சீர்குலைக்கும் வகையில் ஆண்டிற்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என வழங்கிக் கொண்டிருக்கும் மானியங்கள் ரத்து
செய்யப்பட வேண்டும் என்பது உட்பட, வேளாண்மைப் பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வு கண்டாக வேண்டும் என்று ஏழை
நாடுகளின் குழு வலியுறுத்தியது. முதலில் 1996-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் முன்மொழியப்பட்ட உத்தேச
முதலீட்டு விதிகள் பிரதான நாடுகடந்த நிறுவனங்களின் நலனுக்காகவே பயனுடையதாய் இருப்பதால், அது சம்பந்தமாக,
வேளாண்மை தொடர்பான கொள்கையில் WTO உறுதியளிப்பதைத்
தவிர்ப்பதற்கான தந்திர முயற்சியாக ஐரோப்பிய ஒன்றியமும், ஜப்பானும் இந்தக் கோரிக்கையை விடுத்திருப்பதாக
ஏழை நாடுகளின் பிரதிநிதிகள் பலர் பார்க்கின்றனர்.
கான்கன் மாநாட்டுத் தோல்விக்குப் பின்னர் மாநாட்டுப் பிரதிநிதிகளும், ஆய்வாளர்களும்,
தெரிவித்துள்ள விமர்சனங்கள் ஏழை மற்றும் பணக்கார நாடுகளுக்கிடையில் நிலவும் கசப்பான பகை உணர்வுகளை அம்பலப்படுத்துகின்றன
மற்றும் பன்முகத்தன்மைக்குப் பதிலாக இரு தரப்பு உடன்படிக்கைகளையும் வர்த்தக கூட்டுக்களையும் உருவாக்கும் மனப்பான்மைகள்
வளர்ந்து வருவதைக் காட்டுகின்றன.
பேச்சுவார்த்தைகள் ஏன் தோல்வியடைந்தன என்பது குறித்து கென்யா நாட்டுப் பிரதிநிதி
ஜோர்ஜ் ஒடூவர் நிருபர்களிடம் கூறியதாவது: ''யார் பொறுப்பு என்று நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். நடைமுறைகளைத்
தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முயன்றவர்கள்தான் தோல்விக்கு காரணம் என்று நான் கூறுவேன். பொதுக்
கருத்தை செயற்கையாகத் தயாரிக்க முயல்பவர்கள்தான் பொறுப்பு. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் தான்
இந்த தோல்விக்கு பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முட்டுக் கட்டை நிலைக்கு சிங்கப்பூர் மாநாட்டில்
எழுப்பப்பட்ட பிரச்சனைகள் தான் முற்றிலும் காரணமாகும். அதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று வளர்ந்து வருகிற
நாடுகள் கூறுகின்றன."
மலேசியாவின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் ரஃபிதா அஜீஸ்,
கருத்து தெரிவிக்கும்போது, ''ஏழை நாடுகள் எடுத்து வைக்கும் கோரிக்கைகளை அவர்கள் (பணக்கார நாடுகள்) செவி
கொடுத்து கேட்கத் தவறினால் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதால் எங்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை
அறிந்து கொள்ளத் தவறினால் இப்படித்தான் நடக்கும். வளர்ந்து வரும் நாடுகள் தங்களது காலிலேயே ஊன்றி நிற்க
ஆரம்பித்து விட்டன. வளர்ந்து வரும் நாடுகள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று எவரும் கட்டளையிட
முடியாதென்பதை இந்த மாநாட்டுத் தோல்வி தெளிவாக்கிவிட்டது" என்று குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் பஸ்கால் லாமி ''யார் மீது பழிபோடுவது
என்ற விளையாட்டில் ஈடுபட'' தான் விரும்பவில்லை என்று கூறினார். ஆனால் அவரே பழிபோடும் அந்த
விளையாட்டில்தான் ஈடுபட்டார். ஏழை நாடுகளைக் கண்டித்து ஆஸ்திரேலியன் பைனாசியல் ரிவியூ'' பத்திரிகைக்கு
பேட்டியளித்துள்ள அவர், ''மாநாட்டைத் தோல்வியடைய செய்வதன் மூலம் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள
முடியும் என்ற தவறான முடிவிற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். மாநாட்டு முடிவில் அவர்களுக்கு ஒரு பேரம் கிடைத்திருக்கிறது.
குறிப்பாக அது வேளாண்மை வர்த்தகம் பற்றிய பேரமாகும். அது இனி விவாதிக்கப்படும் பட்டியலில் இடம் பெறாது.
இதுதான் அரசியல், சில நேரங்களில் அரசியலில் ஒட்டு மொத்தமாக சேருகின்ற மக்கள் பகுத்தறிவோடு நடந்து கொள்வதில்லை''
என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
WTO அமைப்பின் மீது லாமி அவரது
அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்த கருத்து ஒற்றுமை அடிப்படையில் உடன்படிக்கைகள் உருவாக வேண்டும்
என்று வலியுறுத்தும் WTO
வரலாற்றின் "மத்திய கால அமைப்பு'' என வர்ணித்தார். "இந்த அமைப்பிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பணிகளின் பாரத்தை
தாங்கி நிற்கின்ற அளவிற்கு நடைமுறைகள், விதிமுறைகள் கொண்டதாக இந்த அமைப்பு இல்லை" என்று அவர் கருத்து தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்ற அளவிற்கு நடைபெற்ற மோதலில் அமெரிக்காவிற்கு
நேரடியாக சம்மந்தம் இல்லை என்றாலும், அமெரிக்காவின் இரண்டு பிரதிநிதிகள் வளர்ந்த நாடுகளின் நிலைப்பாட்டிற்கு
கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன் இடையிடையே ஏழை நாடுகளுக்கு பொருளாதார அச்சுறுத்தலையும் விடுத்திருக்கின்றனர்.
அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியான
Robert Zoellick,
கருத்து தெரிவிக்கும்போது ''பல நாடுகள் ஏதோ இது இலவசமா வருவது என்று நினைக்கிறார்கள். எதை
வேண்டுமென்றாலும் பேசுவது; ஆலோசனை கூறுவது, விவாதம் நடத்துவது என்று போய்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்
எதையும் தருவதற்கு தயாராக இல்லை. அந்த மூலோபாயத்தின் கடும் உண்மையை தற்போது அவர்கள் சந்தித்தாக
வேண்டும். அவர்கள் நாடுகளுக்கு வெறும் கையோடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்காவை எதிர்த்தவர்கள் அமெரிக்க சந்தைகள் மற்றும் வர்த்தக பேரங்களில்
இருந்து நீக்கப்பட்டுவிடுவார்கள் என்று Zoellick
கோடிட்டுக்காட்டினார். அமெரிக்க அதிகாரிகள் பல்வேறு இருதரப்பு மற்றும் பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகளில்
ஊன்றி கவனம் செலுத்துவார்கள் என்றும் அவர் அச்சுறுத்தினார்.
அமெரிக்க செனட் சபை உறுப்பினரான சார்லஸ் கிராஸ்லீ மேலும் அப்பட்டமாக சில
கருத்துக்களைத் தெரிவித்தார். ''நான் தெளிவாகவே கூறிவிடுகிறேன். செனட் சபையின் நிதிக்குழு தலைவராக நான்
பணியாற்றி வருகிறேன். அமெரிக்க செனட் சபையில் சர்வதேச வர்த்தகம் தொடர்பாக முடிவு செய்யும் அதிகாரம்
இந்தக் குழுவிற்கு உள்ளது. நான் அந்தக் குழுவின் தலைவர் என்கின்ற முறையில்
WTO உறுப்பினர்கள்
இந்த அமைச்சர்கள் மாநாட்டில் எடுத்துள்ள நிலைப்பாடுகள் கவனமாக ஆய்விற்கு எடுத்துக் கொள்வேன். அமெரிக்காவானது
நடப்பிலிருக்கும் அடிப்படையில் வர்த்தகம் தொடர்ந்து சுதந்திரமாக நடத்தப்படுகின்ற அளவிற்கு ஒப்பந்தங்களை செய்து
கொள்கின்ற தகுதியுள்ள பங்காளர்களை மதிப்பீடு செய்யும்.
கான்கனில் ஆக்கபூர்வமாக பங்களிப்பு செய்த நாடுகளையும், அப்படிச் செய்யாத
நாடுகளையும் நான் கவனத்தில் எடுத்துக்கொள்வேன்'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டு முடிவில் உருவான மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று என்னவென்றால்
WTOவில்
பிரதான அரசுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் புதிய
கூட்டாகும். இந்த குழு G23
என்று அழைக்கப்படுகின்றது. இந்த குழுவிற்கு பிரேசில், சீனா மற்றும் இந்தியா தலைமை தாங்கி நடத்திச் செல்கின்றன.
இந்த குழு இடம்பெற்றுள்ள நாடுகளில் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் இடம்பெறுகின்றனர். உலக
அளவிலான விவசாயிகளில் 63 சதவீதம் பேர் இதில் அடங்குகின்றனர்.
இதர நாடுகளும் இந்த குழுவில் சேருவதற்கு முன் வந்திருக்கின்றன. சாம்பிய நாட்டு
வர்த்தக அமைச்சர் தீபக் பட்டேல், "G23
நாடுகளுடன் ஒன்றி செயல்படுவதற்கு நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அந்த அமைப்பை
G80 ஆக மாற்றுவதற்கு
முயன்று வருகிறோம்'' என்று குறிப்பிட்டார்.
தேவைக்கான போர் குழு என்ற அமைப்பினால் நடத்திய ஒரு ஆய்வில், 112-வளர்ந்த
நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டதில் 82 சதவீதம் பேர்
WTOவில் பணக்கார
நாடுகள் ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், 83 சதவீதம் பேர்
WTO ஜனாநாயகத்திற்கு புறம்பாக இயங்கி வருவதாகவும், கருத்து
தெரிவித்திருப்பதாக கார்டியன் நாளேடு பிரசுரித்திருக்கிறது.
மாநாடு முடிந்த பின்னர் G23
பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், பிரதான அரசுகளை எதிர்த்து நிற்கக்கூடிய வலிமையை தாங்கள்
பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சிப் பெருக்கோடு கொண்டாட்டங்களை நடத்தினர். ஆனால் இந்த புதிய நம்பிக்கை மிக
விரைவில் நசிந்து விடும். அளவிற்கு இருதரப்பு மற்றும் பிராந்திய ஏற்பாடுகள் பெருகிக்கொண்டே போகும்.
இது சம்மந்தமாக கார்டியன் பத்திரிகை எழுதியிருப்பதாவது: "உலகின் பரம
ஏழைகளாக இருக்கின்ற நாடுகள் தனிப்பட்ட முறையில் உலகின் பிரதான வர்த்தக நாடுகளுக்கு தருவதற்கு எதுவும்
இல்லை. எனவே இரு தரப்பு வர்த்தக பேரங்கள் அத்தகைய பரம ஏழை நாடுகளுக்கு நல்லதல்ல. அமெரிக்கா,
ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளோடு இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளை கையெழுத்திடுவதில் பரபரப்போடு
இறங்கியிருக்கின்றது. சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பு (Association
of South East Asian Nations
-Asean ஆசியன்)
இடையிலும், இந்தியா மற்றும் ஆசியன், ஜப்பான் மற்றும் ஆசியன் நாடுகளுக்கிடையிலும் வர்த்தக கூட்டுக்கள் உருவாவதற்கு
சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்."
அத்தகைய வர்த்தக கூட்டுக்கள் உருவாகுமானால், "அவை என்னதான் கவர்ச்சிகரமாக
இல்லாதிருப்பினும், ஆபிரிக்க நாடுகளுக்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லாமல் தங்கள் நாடுகளுக்கு இருதரப்பு வர்த்தக
பேரங்களில் கையெழுத்திடுவதைத் தவிர வேறுவழியில்லாத நிலைக்கு அவை தள்ளப்படும்.''
சிங்கப்பூர் வர்த்தக அமைச்சரான ஜோர்ஜ் யோ,
WTO விற்குள் பணக்கார நாடுகளுக்கு எதிராக வளர்ந்து
கொண்டிருக்கும் வெறுப்பு உணர்வை அவர்கள் புறக்கணித்து விடுவது அவர்களுக்கே இன்னலை உருவாக்கிவிடும் என்று குறிப்பிட்டு,
பணக்கார நாடுகள் மத்தியில் "நான் செய்வது எல்லாம் சரி என்று சொல்லுகின்ற" மனப்பான்மைக்கு எதிராக ஒரு
எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தற்போது வசதியான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாடுகள் ஏழை நாடுகளை
தொடர்ந்து ஏழ்மையிலேயே இருக்கின்ற நிலைக்கு தள்ளிவிடுமானால் அந்த ஏழை நாடுகளின் பிரச்சனைகள்- பயங்கரவாதம்
மூலமோ அல்லது நோய்நொடிகள் மூலமோ அல்லது புலம்பெயர்தல் மூலமோ-- இறுதியாக நமது பிரச்சனைகளாக
மாறிவிடும்'' என்று அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அடுத்த இரண்டாண்டுகளில் ஹாங்காங்கில் மற்றொரு அமைச்சர்கள் மாநாட்டை நடத்துவதற்கு
WTO திட்டமிட்டிருக்கின்றது.
ஆனால் தோஹா, சுற்று பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் எதிர்பார்க்கப்படாத நிலைதான் உருவாகும்.
உண்மையிலேயே அடுத்த காலகட்டத்தில் புதிய சர்வதேச உடன்படிக்கைகள் உருவாவதற்கு பதிலாக இரண்டாவது உலகப்போருக்குப்
பிந்தைய வர்த்தக முறைக்கு அடிப்படையாக இருந்த பன்முகத்தன்மையை விரைந்து சீரழிவதைப் பார்க்க முடியும்.
இது சம்மந்தமாக பைனான்சியல் டைம்ஸ்' எழுதியுள்ள குறிப்பு வருமாறு: ''தற்போது
பிராந்திய மற்றும் உள்நாட்டு வர்த்தக பேரங்களை உருவாக்கிக் கொள்வதில் மிகப்பெரும் ஆர்வத்துடிப்பு உலகம் முழுவதிலும்
வலுவாக வளர்ந்து வருகின்றது, நாடுகள் இதன்பால் அதிக ஊக்கத்துடன் திரும்பும் என்று இதனால் ஏற்படுகின்ற
விளைவுகளை பல வர்த்தக நிபுணர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். இதன் விளைவாக
WTO பேச்சுவார்த்தைகளிலிருந்து
அரசியல் கவனம் திசை திரும்புக்கூடும் என்பதுடன் மட்டுமல்லாமல், சரியான நேரத்தில், பன்முகத்தன்மை வர்த்தக அமைப்பில்
அடிப்படையாக உள்ள விதிமுறைகளுக்கு இருக்கின்ற மரியாதையைக் கீழறுத்துவிம்."
1930-களைப் பண்பிட்டுக்காட்டிய மோதல்களைத் தடுப்பதற்காகத்தான் இரண்டாவது
உலகப் போரை ஒட்டி இரண்டு சர்வதேச அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன, அந்த அமைப்புக்கள் தற்போது சிதையும்
நிலைக்கு முன்னேறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் ஈராக் மீது நடாத்தப்பட்ட
ஆக்கிரமிப்பு போரை தடுப்பதற்கு ஐ.நா தவறிவிட்டது மற்றும் அதற்குப் பின்னர் ஐ.நா இராணுவ வலிமையைப்
பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. வர்த்தக போர்களையும் வர்த்தக கூட்டுக்களையும் தடுப்பதற்காக வர்த்தகம்
மற்றும் வரிகள் பற்றிய பொது உடன்படிக்கை (General
Agreement on Tariffs and Trade) அமைப்பு உருவாக்கப்பட்டது.
இது இன்றைய WTO
வின் முன்னோடி ஆகும், இன்றைய தினம் பெருகி வருகின்ற பொருளாதார மோதல்களால் உருவாகும் நெருக்கடிகளால்
இந்த அமைப்பே சிதைந்து கொண்டு வருகின்றது.
Top of page
|