World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Federal appeals court postpones California recall election until March

கூட்டமைப்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் கலிஃபோர்னியத்
திருப்பியழைத்தல் தேர்தலை மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கிறது

By Don Knowland
16 September 2003

Back to screen version

மூன்று நீதிபதிகள் அடங்கிய 9வது மேல் முறையீட்டுச் சுற்று நீதிமன்றக் குழு, திங்களன்று, அக்டோபர் 7ம் தேதி நடக்கவிருந்த கவர்னர் திருப்பியழைத்தல் தேர்தலை மார்ச் 2, 2004க்கு ஒத்திவைத்து ஆணையிட்டது. கூட்டமைப்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்படி கலிஃபோர்னியாவில் 6 மாவட்டங்களிலுள்ள, இயல்பாகவே நம்பிக்கையற்ற அழுத்த அட்டை வாக்குப்பதிவு எந்திரங்கள் (Punch-Card Voting Machines) குறைந்தது 40,000 வாக்காளர்களுக்கு வாக்குரிமை இல்லாமல் செய்துவிடக்கூடும் என்றும், அந்நிலைமை அரசியலமைப்பின்படி வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ள குடிமக்களின் பாதுகாப்பை மீறும் வகையில் மற்றவர் போட்ட வாக்குகளுடன் எண்ண வேண்டிய தன்மையை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு மேல் முறையீடு இருக்கலாம் என்றும், இது அமெரிக்க உச்ச நீதி மன்றம் வரை செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2000 ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பொழுது அழுத்த-அட்டை வாக்குப் பதிவு எந்திங்கள் பயன்படுத்தலையொட்டி எழுந்த பூசல்கள், தலைமை நீதிமன்றம் ப்ளோரிடாவில் மறு வாக்கெண்ணுதலை நிறுத்தி, ஜோர்ஜ்.டபிள்யூ புஷ்ஷிற்கு ஜனாதிபதி பதவியளித்ததில் இறுதியாக முடிந்தன. 2001ம் ஆண்டு, பொது நலன் நாடும் குழு மற்றும் பல குழுக்கள் கலிஃபோர்னியாவில் உள்ள அழுத்த- அட்டை வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என்று வழக்குத் தொடுத்தன; மற்ற வாக்களிக்கும் தொழில்நுட்பங்களான கண்ணால் சரி பார்த்தல், தொடுதிரை போன்றவற்றிலுள்ளதைவிட இம்முறையில் இரண்டு முதல் நான்கு மடங்கு வரை கூடுதலான பிழைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு என்பது குழுக்களின் வாதமாகும்.

இந்த வழக்கு பதிவான உடன், வாக்குக் கருவிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தைக் கலிஃபோர்னியச் சட்டங்கள் மூலம் பெற்ற, கலிஃபோர்னிய அரசு செயலர், காலம் கடந்துவிட்ட அழுத்த- அட்டை வாக்குப் பதிவு எந்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பயன்படுத்தும் உரிமைகளை ரத்து செய்து, அவை தொழில்நுட்ப அளவில் ``குறையுடையவை,`` ``ஏற்கத்தக்கவை அல்ல`` என்று பிரகடனப்படுத்தினார். பொதுக்காரண முறையீட்டாளர்களும் அரசாங்கமும், வழக்கை, இக்கருவிகள் 2004, மார்ச் 2-ல் நடைபெறவுள்ள கலிஃபோர்னியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்கெடுப்பு வருவதற்குள் மாற்றப்படும் என்ற அடிப்படையில் முடித்துக்கொண்டன.

நவம்பர் 2002ல் கிரே டேவிஸ் கலிஃபோர்னியாவின் கவர்னராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுக் கட்சியின் வலதுசாரியினர் இந்த முடிவை ஏற்க மறுத்தனர். ஒரு கோரிக்கை மனுப் பிரச்சாரத்திற்காக மில்லியன் அதிபதி, காங்கிரஸ் உறுப்பினர் Darrel Issa தலைமையில் செலவு செய்யப்பட்ட மில்லியன் கணக்கு டாலர்கள் செலவினால் டேவிசைத் திருப்பியழைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கலிஃபோர்னியாவின் அரசுத்துறை செயலர் கெவின் ஷெல்லி, மறு தேர்தலை நடத்தப் போதுமான கையெழுத்துக்கள் வந்துவிட்டன எனச் சான்றிதழ் கொடுத்தார். கலிஃபோர்னிய அரசியலமைப்பின் திருப்பி அழைத்தல் விதிகளின்படி துணை கவர்னர் க்ருஸ் பஸ்டமொன்டே, திருப்பியழைத்தல் மனுக்கள் சான்றளிக்கப்பட்ட பின் 80 நாட்களுக்குள்ளாக தேர்தலை அக்டோபர் 7-ல் நடத்த உத்தரவு இட்டார்.

அதன்பின் அரசுத்துறை செயலர் ஷெல்லி மார்ச் 2004 தேர்தலுக்காக முன்னரே திட்டமிடப்பட்ட இரண்டு வாக்கெடுப்பு முயற்சிகள் அக்டோபர் 7-க்கு கொண்டு வந்தார்: Proposition 53 (ஒரு குறிப்பிட்ட சதவிகித அரசுத் தொகையை அடிப்படைக் கட்டமைப்புக்குச் செலவிடத் தேவைப்படும்) மற்றும் Proposition 54 (இனம், குறிப்பிட்ட இனவழி பற்றிய புள்ளி விவரங்களை அரசாங்கம் எடுக்கத் தடை செய்தல்) இரண்டும் தான் அவை.

மொத்த வாக்காளரில் 44 சதவிகிதம் கொண்ட, பெரிய மாவட்டங்களான லொஸ் ஏஞ்சல்ஸ், சான்டா க்ளாரா, சான் டியேகோ, சாக்ரமென்டோ உட்பட, ஆறு கலிஃபோர்னிய மாவட்டப் பிரிவுகள், அக்டோபர் 7-க்குள் தங்களால் அழுத்த-அட்டை வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முடியாது எனத் தெரிவித்தன. வேறுநிறத்தோர் முன்னேற்ற தேசிய கூட்டமைப்பு போன்ற, பொதுக்காரணக் குழுவிற்கும் மற்ற குழுக்களுக்காகவும், அமெரிக்க மக்கள் உரிமைகள் சங்கம், மற்றொரு வழக்கைத் தொடுத்து, கூட்டமைப்பு நீதிமன்றத்தை, அனைத்து மாவட்டப்பிரிவுகளும் அழுத்த அட்டை வாக்குப் பதிவு எந்திரத்தை மாற்றும் வரை, திருப்பியழைத்தல் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிக் கேட்டுக் கொண்டது.

கீழ்மன்ற கூட்டமைப்பு நீதிபதி, வாதிகளின் கோரிக்கையான அக்டோபர் 7-ம் தேதி தேர்தலை ஒத்தி வைக்க, இடைக்காலத் தடை வழங்க வேண்டும் என்பதை ஏற்க மறுத்துவிட்டார். அதன் அரசியற்சட்டத்தால் வழங்கப்பட்ட காலத்திற்குள் திருப்பி அழைத்தல் தேர்தல் நடத்தப்படுவதில் உள்ள கலிஃபோர்னிய நலன்கள், வாக்காளர்கள் அழுத்த - அட்டை வாக்குப் பதிவு எந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், மற்ற வாக்காளர்களை விட தங்களது வாக்குகள் குறைந்த வீதத்தில் எண்ணப்படும் கணிசமான ஆபத்தைக் குறைக்கும் நலனை மேம்படச்செய்யும் என்று நீதிபதி ஸ்டீவன் வில்சன் தீர்ப்பு வழங்கினார்.

திங்களன்று, மேல் முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் இதை நிராகரித்து, கீழ்மன்றத் தீர்ப்பை மாற்றியது. இதன் எழுத்து மூலமான கருத்தில், 1915லிருந்து நீண்டகால உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களை மேற்கோளிட்டு, வாக்களிக்கும் உரிமை அடிப்படையானது என்றும், மற்ற வாக்குகளோடு அது சமமாக எண்ணப்படுதல், அரசாங்கத்தின் ஜனநாயக முறையின் மிக அடிப்படையான உரிமைகள் என்று கூறப்பட்டதுதான் ஏற்கப்பட வேண்டும் எனக் கூறியது. பழைய வழக்குகள் இத்தகைய வாக்களிக்கும் உரிமை, மிகக் கட்டாய நிலையிலின்றி, மீறப்பட்டால், அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தம் உறுதியளித்துள்ள சட்டத்தின் சமபாதுகாப்பு மீறப்படுவது போலாகும் என்று நிறுவியுள்ளன.

ஒன்பதாவது வட்ட தீர்ப்பு மிக அதிக அளவில் வல்லுனர் சாட்சியத்தை ஆதாரமாகக் கொண்டு, அழுத்த அட்டை வாக்குப் பதிவு எந்திரங்கள் கூடுதலான பிழைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், மற்றைய கலிஃபோர்னிய முறைகளைவிட குறைந்தது இரு மடங்கு வாக்குகளாவது எண்ணாமல் விடுபட்டுப் போகலாம் என்பதை நிர்ணயித்துள்ளது. ஒருவேளை 40,000 வாக்குகள் எண்ணப்படாமல் போனால், நெருக்கமான திருப்பியழைத்தல் தேர்தலில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தலாம், அல்லது அடுத்து வரவுள்ள கவர்னர் தேர்தலில், டேவிஸ் திருப்பியழைக்கப்பட்டுவிட்டால், பாதிப்பைக் கொடுக்கும் என்றும் நிர்ணயித்தது. வாக்குக் கருவிகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ள கலிஃபோர்னிய அதிகாரி செயலகத்துறை அமைச்சகம் இக்கருவிகள் ஏற்கத்தக்கவையல்ல, இயல்பாகவே நம்பிக்கைத்தன்மை அற்றவை என்ற காரணத்தால் உரிமை ரத்து செய்யப்பட்டதைச் சான்றாகப் பெரும் அளவில் மதித்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பில், ஆறு அழுத்த- அட்டை மாவட்டப் பிரிவுகளும் சதவிகிதத்தில் சிறுபான்மையினரைக் (46 சதவீதம்) கொண்டிருக்கும் தன்மை, எவ்வாறு அழுத்த அட்டை இல்லாத மாவட்டப் பிரிவுகளில் காணப்படும் சிறுபான்மைச் சதவிகிதத்தைவிட (32 சதவீதம்) கூடுதலாகப் பெற்றுள்ளன என்ற உண்மையை உயர்த்திக் காட்டியது. அதாவது தொழிலாள வர்க்கம், ஏழை, புலம்பெயர்ந்தோர் வாக்குகள் கூடுதலான அளவு தகுதியிழக்கும் தன்மையை, எங்கு வாழ்கிறார்களோ அங்கு அழுத்த அட்டை இருக்கும் காரணத்திற்காக, சமனில்லாத சுமையைக் கொள்ள நேரிடுகிறது என்பது பொருளாகிறது. இதைத்தவிர, திருப்பியழைத்தல் தேர்தல் நாளான அக்டோபர் 7-ம் தேதிக்குள் சாதாரணமான வாக்குச் சாவடிகளுக்குள்கூட 25 சதவிகிதம் தயார் நிலையில் இருக்காது என்பதையும் குறித்துக் காட்டியது; இந்த அம்சமும் அழுத்த அட்டை மாவட்டப் பிரிவுகளில் மக்கள் வாக்கு அதிக அளவு குறைத்தன்மை பெற்றிடும் நிலை புலனாகிறது.

திருப்பியழைத்தல் தேர்தல் ஒத்தி வைத்தால், அதிகாரம் செலுத்தும் அலுவல்கள் காலியாகாமல்தான் இருக்கும் என்பதையும், ஏற்கனவே மார்ச் 2004ல் தேர்தல் நடக்க இருப்பதால், பண அளவில், தேவையற்றுக் கூடுதல் சுமை ஏற்படாது என்பதையும் தீர்ப்பு கவனத்தில் கொண்டுள்ளது.

53, 54 Propositions-ஐப் பொறுத்தவரை இவை மார்ச் 2004 தேர்தலுக்காக இயற்றப்பட்டவை என்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இம்முயற்சிகள் அக்டோபர் 7-க்கு உட்படுத்தப்படுமேயானால், கலிஃபோர்னிய அரசியலமைப்பு நெறியில் மேற்கொள்ளப்படும் தேர்தல் கால அட்டவணைத் தேவைகள் மீறப்படும் என்றும் நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

சுருங்கக்கூறின், ஒன்பதாவது வட்ட நீதிமன்றம், திருப்பியழைத்தல் தேர்தல் ஒத்தி வைப்பின் மூலம், ``குழப்பமற்ற முறையில்`` நடைமுறை உறுதிப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு குடிமகனுடைய வாக்கும் சமமான முறையில் எண்ணப்படும் என்றும், ஜனநாயக நலன்களைப் பெருக்கும் என்றும், அரசியலமைப்பின்படி முந்தைய தேதியில் தேர்தல் நடத்துவதைவிடக் கூடுதலான நலன்கள் பெறுமெனவும் முடிவிற்கு வந்துள்ளது. நீதிமன்றம் கூறியதாவது: ``அவசரப்பட்டு, அரசியலமைப்பு குறையோடு நடத்தப்படும் தேர்தலைத் தவிர, சுற்றுபின்னர், வாக்காளருக்கு அடிப்படைத் தேவையான சமமான முறையில் நடத்தப்படுதல், அடிப்படை நியாய உணர்வு இரண்டும் கிடைக்கும் வகையில் சிறிதே தாமதமாக நடத்தப்படும் தேர்தல் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடு நன்கு தெளிவாகிறது.``

தீர்ப்பை அழுத்தமாக வெளிப்படுத்தும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் மொழியாட்சி, புஷ் (எதிர்) கோர் வழக்கில் அமைந்துள்ளதை இரு முறை இந்நீதிமன்றம் சுட்டிக்காட்டி, வலதுசாரிப் பெரும்பான்மை எவ்வாறு புளோரிடா வாக்கெடுப்பு மறு எண்ணிக்கையை நிறுத்தி ஜனாதிபதி பதவியை ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷிற்கு அளித்தது என்பதைக் கூறுகிறது. ஒன்பதாவது சர்க்யூட் நீதிபதிகள், 2000ல், வாக்குப் போடும் உரிமையையும், ஒருவரின் வாக்கு எண்ணப்படுவதற்கான உரிமையையும் தாக்குவதற்கான சட்டரீதியான மூடுதிரையை உச்சநீதிமன்ற நீதிபதிகளால், நேர்மையற்ற மற்றும் எரிச்சுலுற்ற தன்மைகளில் பயன்படுத்தப்பட்ட அரசியலமைப்பு மொழியை மேற்கோள் காட்டினர். இதில் பின்வரும் வலியுறுத்தல் உள்ளடங்கும்: ``கால அவகாசம் குறுகியதென்பதால் அரசியலமைப்பு அக்கறை குறைக்கப்படக்கூடாது. விரைவில் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதற்காக சமப்பாதுகாப்பு உறுதிகள் புறக்கணிக்கப்பட பொது காரணமாகிவிடக் கூடாது.``

ஒன்பதாவது வட்ட நீதிபதிகள், புஷ் (எதிர்) கோர் வழக்கில் தலைமை நீதிமன்றம் சட்டத்தின் சமபாதுகாப்பு என்ற காரணம் காட்டி ஆயிரக்கணக்கான, செல்லும் வாக்குகளை ஜனாதிபதித் தேர்தலில் தூர எறிந்தது என்பதை நன்கு அறிவர். நல்ல நிதானத்துடன் உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மை முடிவின் அதே சொற்களை, அம்முடிவினை வழங்கியவர்களுக்கு எதிராக நனவுபூர்வமாகப் பயன்படுத்தி, கோர் (எதிர்) புஷ்-க்கு எதிரான திசையில் தீர்ப்பு செல்வதை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தி உள்ளனர்.

திருப்பியழைத்தல் தேர்தலை தாமதப்படுத்துவதன் மூலம், இம்முறையீட்டு நீதிபதிகள் வலதுசாரிப் பெரும்பான்மை புஷ் (எதிர்) கோர் வழக்கில் கொடுத்த அறிக்கையைப் பொருட்படுத்தாமல், அதன் அம்சம் புளோரிடாத் தீர்ப்பிற்கு மட்டுமே அந்நிலைமையில் பொருந்தும் என்றும் அனைத்து வாக்கெடுப்புப் பூசல்களுக்கும் அந்த அளவுகோலைப் பயன்படுத்தக்கூடாது எனவும் தெளிவாக்கியுள்ளனர்.

ஒன்பவதாவது வட்ட நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பைச் செயல்படுத்த ஒருவார தடை கொடுத்து இடைக்காலத்தில் செப்டம்பர் 22 வரை கலிஃபோர்னிய மாநிலம் தலைமை நீதிமன்றத்திற்கு முறையீடு செய்ய அவகாசம் கொடுத்துள்ளது. தலைமை நீதிமன்றம் அதன்பின் வழக்கை விசாரிக்கவோ, விசாரிக்க மறுக்கவோ செய்யலாம்; அந்நிலையில் காலதாமதம் நிரந்தரமாகிவிடும்.

ஒன்பதாவது வட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதையொட்டிய கலிஃபோர்னிய திருப்பியழைத்தல் தேர்தல் தேதி பற்றிய உறுதி இன்மையும் குறிப்பிடத்தக்க அரசியல் யதார்த்தத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்காவில் இன்று தேர்தல் நடத்துவதே சிக்கல் நிறைந்ததாகியுள்ளது. தேர்தல் நடத்த சாதாரணமாகக் கடைபிடிக்கப்படும் விதிகளே உடைந்து வருகின்றன; எனவே தேர்தல் நடத்தும் நேரங்களும் உறுதியற்றுப்போகின்றன; முடிவுகளும், இப்பொழுது முடிவான முடிவுகளாக முடிவதில்லை.

இந்த அபிவிருத்தியின் பின்னணியில் புஷ் நிர்வாகத்தாலும் குடியரசுக் கட்சி வலதுசாரி அணிப் பிரிவாலும் பிரிதிநிதித்துவம் செய்யப்படும் அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டின் முக்கியத்துவம் கொண்ட பகுதி, தங்கள் அரசியல் செயல்பட்டியலுக்கு மாறான தேர்தல் முடிவுகளின் இறுதித்தன்மையை ஏற்க மறுக்கும் மனப்பாங்கு வெளிப்படுகிறது. கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கவிழ்க்க பதவி நீக்க விசாரணை பயன்படுத்தப்பட்டது. 2000 தேர்தலில் ஜனாதிபதித் தேர்தல் திருடப்பட்டது. இப்பொழுது நாட்டிலேயே பெரிய மாநிலமான கலிஃபோர்னியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களிலேயே கவர்னரைத் திருப்பியழைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் கார்ப்பொரட் நிர்வாகத்திற்குள்ளே உள்ள சக்திவாய்ந்தவர்களிடையே ஜனநாயக முறைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று உணரும் போக்கு காணப்படவில்லை. தங்கள் இலக்குகளை அடைய சட்ட விரோத, சதி முறையிலான, குற்றஞ்சார்ந்த செயற்பாடுகளைக் கொள்ளவும் அவர்கள் குற்ற உணர்வு கொள்வதில்லை.

அதே நேரம், பெருநிறுவன மற்றும் அரசியல் நிறுவனங்களுக்குள்ளே வேறு எந்தப் பிரிவும், குடியரசுக் கட்சி வலதுசாரியை தீவிரமாக எதிர்க்கவும் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கவும் தயாராக இல்லை. அசட்டைத் தன்மையும் அடிபணிந்து விழுதலும் ஜனநாயகக் கட்சியால் நன்கு வெளிப்படுத்தப்படுகின்றன.

தன்னுடைய அரசியல் சமுக நலன்களைப் பின்தொடர்வதில், சுயாதினமான முறையில் செல்படும் தொழிலாள வர்க்கம் மட்டுமே, அடிப்படை ஜனநாயக அரசியல் முறைகளைக் காக்க முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved