World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Chancellor Schröder moves toward a German military mission in Iraq

ஈராக்கிற்கு ஜேர்மன் இராணுவப் பிரிவை அனுப்பும் முயற்சியில் அதிபர் ஷ்ரோடர் ஈடுபாடு

By Ulrich Rippert
22 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கியப் போர் முடிந்து நான்கு மாதம் கடந்த பின், இந்த நாட்டிற்கு ஜேர்மன் படைகளை அனுப்பக் கூடாது என்பதற்கு கொள்கையளவில் எதுவும் இல்லையென்று ஷ்ரோடரின் அரசாங்கம் கருதுகிறது.

ஆகஸ்ட் 11 ம் தேதி, ஆப்கானிஸ்தான் புறப்படும் முன்பு, பாதுகாப்பு மந்திரி பீட்டர் ஸ்டரக் Frankfurter Rundscham என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், ஆப்கானிஸ்தானில் NATO விற்கு வலுவான பங்கு தேவை என்பதோடு மட்டுமல்லாமல், ஈராக்கிலுள்ள கூட்டணிப் படைகளோடும் தங்கள் படைகள் சேருவதை ஆதரித்துப் பேசினார். ஆனால் இதற்குத் தேவையான நிபந்தனையாக ஐ.நா. தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதில் ஜேர்மனியும் பங்குபெறும் என்றும் தெரிவித்தார்.

பசுமைக் கட்சித் தலைவரான ஆங்கலிக்கா பீர் (Angelika Beer) இதே கருத்தை வலியுறுத்தி Deutschlandfunk வானொலிக்கு கொடுத்த பேட்டியில், ''அமெரிக்கர்கள் இது தேவை என்று நினைத்து ஐ.நா.விற்கு அதிகாரம் கொடுத்தால் ஆட்சித் துறையினரோ, போலீசாரோ, இராணுவத்தினரோ எப்படித் தேவையோ அவ்விதத்தில் ஜேர்மனி பங்குபெறப் பாராளுமன்றம் முடிவு எடுக்கும்'' என்றார்.

ஆகஸ்ட் 13 ம் தேதி அதிபர் ஷ்ரோடர் ''முடிவெடுக்கக் கனியாத பொருள்களைப் பற்றிய வீண் ஊகங்களில் தான் ஈடுபட விரும்பவில்லை'' என்று செய்தியாளரிடம் கூறினார். ''அதே சமயம் ஈராக்கியப் புனரமைப்பில் ஜேர்மன் அரசாங்கத்திற்கு அக்கறை அடிப்படையிலேயே உள்ளது'' என்றும் கூறினார்.

அதையடுத்து ஷ்ரோடர் தெரிவித்த கருத்துக்கள் ஜேர்மனியின் பங்கு கொள்கையளவில் இல்லை என்றும் அமெரிக்கா அதற்கு ஒரு விலை கொடுக்கவேண்டும் என்பதுபோல இருந்தது. ''ஐ.நா.விற்கு ஈராக்கில் சற்றுக் கூடுதலான பொறுப்புக்களைக் கொடுப்பது, NATO பங்குபெறுவதையும் அதன் உறுப்பு நாடுகள் பங்குபெற அனுமதி கொடுப்பதற்கும் தொடர்புடையதன்று'' என அவர் கூறியதாகச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புக் குழுவின் ஈராக் பற்றிய தீர்மான எண் 1500 ன்படி ஈராக்கில் ஐ.நா.விற்கு ''முக்கிய பங்கு'' கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மனிதாபிமானச் செயல்கள், அமைப்பு முறைகள், தொழில்நுட்பப் பணிகளை மட்டுமே கொடுத்துள்ளது. வாஷிங்டன் ஐ.நா.விற்கு அரசியல் அதிகாரங்களைக் கொடுக்கவில்லை. ஏனெனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ஏகபோக அரசியல் அதிகாரம் இருந்தால்தான், அதிகார விசைகள் அதன் கைகளில் இருந்தால்தான் ஒரு தலைப்பட்சமாக ஈராக்கிய எண்ணெய்த் தொழில் தனியார் மயமாக்கப்படுதலை மேற்பார்வையிட்டு தன் விருப்பப்படி பெருஞ் செல்வமளிக்கும் ''சீரமைப்பு'' ஒப்பந்தங்களை அதன் விருப்பப்படி கொடுக்கமுடியும்.

இப்படிப்பட்ட நிலையில் பேர்லின், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா இவைனைத்துமே தங்கள் படைகளை ஆக்கிரமிப்புப் பகுதிக்கு அனுப்பத் தயாராக இல்லை. ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவற்றின் அழுத்தத்தினால், பாதுகாப்புக்குழு வாஷிங்டனுடைய விட்டுக்கொடுக்காத தன்மையினால் ஈராக்கில் அமெரிக்காவால் நிறுவப்பட்டுள்ள ஆட்சிக்குழுவை அந்நாட்டின் இடைக்கால அரசாங்கமாக ஏற்க மறுத்துவிட்டது.

ஆனால் பாதுகாப்புக்குழுவில் இன்னமும் குதிரை பேரம் தொடர்கிறது. கூடுதலான இராணுவ சிக்கல்களின் அழுத்தம் காரணமாக, வாஷிங்டன் கூடுதலான சலுகைகள் கொடுக்கலாம் என்றே பாரிஸ், மாஸ்கோ, பேர்லின் ஆகியவை கருதுகின்றன. ஐ.நா.விற்குத் தன்னுடைய அதிகாரத்தில் கொஞ்சம் வாஷிங்டன் கொடுத்தால் படைகளை அனுப்புவது பற்றிய கேள்வி புதிதாகக் கவனிக்கப்படும். ஸ்ட்ரக், ஷ்ரோடர் ஆகியோருடைய மாறுபட்ட அறிக்கைகள் இவ்வாறு ஜேர்மன் அரசியல் வேறுபாடுகளின் வெளிப்பாடு என்பதைவிட ஜேர்மன் பங்கிற்கு என்ன கிடைக்கும் என்ற பேரத்தின் தன்மையைத்தான் கூடுதலாகக் கொண்டிருக்கிறது.

ஜேர்மனியக் கூட்டமைப்பு எல்லைப் போலீசின் சிறப்புப்படையான பாராமிலிட்டரி GSG 9 பிரிவுகள் ஈராக்கில் சில காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் அதிகாரபூர்வமான பணி ஜேர்மனிய வணிகர்கள், செய்தியாளர்கள், கட்டுமானங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது ஆகும். ஆப்கானிஸ்தானுக்கு 15 மாதம் முன்பு அனுப்பப்பட்ட GSG 9 பிரிவுகளின் பணியும், ஜேர்மன் இராணுவப் பிரிவு காபூல் செல்லத் தயாராகும் போதும் அத்தன்மையில்தான் விவரிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான செஞ்சூரியன் (Centurion), ஜோர்டானிலிருந்து பாக்தாதிற்கு ஜேர்மன் தூதர்கள் கவச வண்டிகள் அணியில் வரிசையாக ''உயர்ந்த அந்தஸ்து உடைய GSG 9 ன் ஆயுதமேந்திய அதிகாரிகள் புடைசூழ'' சென்றனர் எனக் கூறியுள்ளது. அடையாளம் தெரியாதவர்கள் இவ் அணிவரிசை மீது தாக்கியபோது, இந்த அணி அதிகளவு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டிருந்தது.

பெரு வர்த்தகத்தினரிடமிருந்து அழுத்தம்

ஜேர்மனியின் பெரும் தொழிலதிபர்களும், வணிகர்களும் அரசாங்கத்திடம் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் காணும் கஷ்டங்களைப் பயன்படுத்தித் தங்களுடைய நலன்களைப் பெருக்க வற்புறுத்தி வருகின்றனர். ''ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகள் ஆற்றிய பெரும்பணி'' என்று பேர்லினில் மாதத் துவக்கத்தில் புஷ் பேசியது, நிறுவன நிர்வாகக் குழுவினரால் ஜேர்மன் இராணுவப் பங்கு, பொருளாதார நலன்களைப் பெருக்குவதில் வசதியாக இருக்கும் என்பதற்கு அடையாளமாக இருக்கும் என்று கருதப்பட்டது.

இப்பொழுது உயர்ந்த அளவு வர்த்தகக் குழுக்கள் பாக்தாத்தைச் சுற்றிய வண்ணம் இருக்கின்றன. இடைக்கால அமைப்பினால், ஜேர்மனியின் பெருவர்த்தகர்கள் எந்தச் சூழ்நிலையிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகளினால் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது என்று (ஒப்பந்தங்கள் வழங்கப்படும்போது) கருதப்படுகின்றது.

சமீபத்தில் Der Spiegel என்ற வார இதழில் அமெரிக்க நிர்வாகம் 3 சர்வதேச ஒப்பந்தப் புள்ளி முறையை ஜேர்மனியின் பங்கு இல்லாமலேயே முடித்துவிட்டதாகக் குறை கூறியுள்ளது. மாறாக மே மாதம் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பெக்டெல் (Bechtel) நிறுவனம் ஈராக்கிய அடிப்படை உள்கட்டுமானத்தைச் சீரமைக்கப் $680 பில்லியன் பெறுமான பெரும் ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டது. அத்துடன் துணை ஒப்பந்தக்காரர்களுக்காக நடத்தப்பட்ட மாநாட்டில் ஏறத்தாழ 90 சதவிகிதம் அமெரிக்க நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டது.

ஜேர்மனியின் பெரு நிறுவனங்களின் செல்வந்த தட்டைப் பொறுத்தவரையில் இனியாவது இந்தப் போக்கு மாற்றப்படவேண்டும் என்பதாகும். Federal Association of German Industry (BDI) என்ற அமைப்பு, இதையொட்டி ஈராக் விவாத மேடை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தவிர German Business Forum என்னும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், விற்பனை, ஆராய்ச்சிப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் இவற்றின் பிரதிநிதிகள் கொண்ட அமைப்பின் செயல்பிரிவு ஒன்றை ஈராக்கியச் சீரமைப்பில் சிறிய, நடுத்தர ஜேர்மன் வணிகர்களின் நலன்களுக்காக ஏற்படுத்தியுள்ளது.

பாக்தாத்தில் நடந்த வருடாந்த வர்த்தக விழாவில் ஜேர்மன் நிறுவனங்கள் மிகக் கூடுதலான பட்சம் பங்குபெற BDI கோரியுள்ளது. இதற்காக ஈராக்கில் ''உண்மை கண்டறிதல் குழுவிற்கு'' ஆதரவளிக்கக் கோரி german-foreign-policy.com என்ற ஆன் லைன் பத்திரிகையில் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளது.

அமெரிக்க நிர்வாகம் ஈராக்கின் மீதான தாக்குதலைப் பயன்படுத்தி 40 மிகப்பெரிய ஈராக்கிய தேசியமயமான நிறுவனங்கள் அகற்றப்படுவதையொட்டி, அவற்றின் கட்டுப்பாட்டை அதிக அளவு கொள்ள ஜேர்மனியின் வர்த்தகம் விரும்புகிறது.

அரசியல்வாதிகளும், வர்த்தகப் பிரதிநிதிகளும் பல மின் நிலையங்கள், சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், மற்ற அடிப்படை உள்கட்டுமானங்கள் ஜேர்மன் நிறுவனங்களால் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 1990 ல் முழு வர்த்தகத்தடை சுமத்தப்படுவதற்கு முன் ஜேர்மனி ஈராக்கின் முக்கிய வியாபாரப் பங்காளி என்ற நிலைக்கு உயர்ந்திருந்தது. 1982 ல் அந்நாட்டிற்கு ஜேர்மனியின் ஏற்றுமதி மிக உயர்ந்த அளவு இருந்தது. இந்தத் தடை வந்தபின் எல்லாமே சரிந்துபோயின.

கடந்த ஆண்டு ஜேர்மன் வர்த்தகம் மீண்டும் அதன் வர்த்தகத்தை ஈராக்கில் பெருக்க முயற்சியடைந்து வெற்றிபெற்றது. அனால் சமீபகாலத்தில் ஈராக்குடனான வர்த்தகத்தில் பிரான்ஸ், ஜேர்மனியைவிட சற்றுக் கூடுதலான நிலையிலேயே இருந்தது. கடந்த செப்டம்பர் பாக்தாத் வர்த்தகச் சந்தையில் இரு நாடுகளுமே கொழுத்த அளவு வணிகத்தைப் பெற்றன. ஆனால் வசந்த காலத்தில் போர் ஏற்பட்ட பின்னர் இவையனைத்துமே இழக்கப்பட்டுவிட்டன.

இந்தப் பொருளாதார நலன்களின் நேரடிப் பாதிப்பினால்தான் துவக்கத்தில் ஜேர்மன் அரசாங்கம் போருக்கு ஒத்துழைப்புத் தர மறுத்திருந்தது. ஷ்ரோடருடன் போன இலையுதிர், குளிர்காலங்களில் ஜேர்மன் வர்த்தகச் சங்கங்கள் எழுத்து மூலமும் விவாதங்கள் மூலமும் அமெரிக்க நிர்வாகத்தை எப்படியும் போரைத் தவிர்க்க அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டன. இன்று இதே வர்த்தகக் குழுக்கள்தாம் ஈராக்கில் அமெரிக்க ஏகபோக உரிமையை முடிக்க அல்லது குறைந்த அளவு குறைக்கவாவது இராணுவத் தலையீட்டை வற்புறுத்துகின்றன.

புஷ்ஷிற்கு உள்நாட்டு ஆதரவு

சில பிற்போக்கு அரசியல்வாதிகளும், இராணுவத்தினரும் ஈராக்கில் இராணுவத் தலையீடு வரையறைக்குள் இருக்கவேண்டும் என்று கூறுவதால், ஜேர்மன் அரசாங்கம் தன்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ளத் துவங்கியிருக்கிறது. சமூக வரிவிதிப்புக் கொள்கைகளில் இருப்பதைப் போன்றே பெரிய நிறுவனங்களின் அக்கறையும் வர்த்தகப் பாதுகாப்பும் தான் அரசாங்க அயலுறவுக் கொள்கையை உந்துகின்றன. மறுப்புக்கள் அனைத்தும் இருந்தாலும்கூட, ஜேர்மனியின் இராணுவக்குழு, பார்வையாளர் எதிர்பார்ப்பதைவிடச் சீக்கிரமாகவே வந்துசேரும். ஷ்ரோடரின் அரசாங்கம் துவக்கத்தில் அமெரிக்கா, படைபலத்தில் இறங்குவதற்கு தடைசெய்ய முயற்சி செய்ததற்கான காரணம், அது ஜேர்மனியின் வர்த்தக நிறுவன நலன்களைப் பாதிக்கும் என்பதால்தான் ஆகும். தற்போது போரின் சூறையாடல்கள் பகிர்ந்துகொள்ளப்படும் போது, தாம் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அதற்கு உள்ளது.

ஆகவே ''தடுப்புப் போர்களை'' மறுப்பதற்கான அடிப்படை நிராகரிப்பானது, சர்வதேசச் சட்டம் பாதுகாக்கப்படவோ, ஜனநாயக அமைப்புக்களைத் தோற்றுவிக்கவோ, ஜேர்மன் சமூக ஜனநாயகக்கட்சி (SPD) அல்லது பசுமை கட்சி அல்லது மற்றவர்கள் தேர்தல் நேரத்தில் கூறிய கொள்கைகளின் அடிப்படையிலோ கொள்ளப்படவில்லை. மாறாக ஜேர்மன், ஐரோப்பிய வல்லரசுகளைப் பலப்படுத்தவும், அவற்றின் நலன்களை வளர்க்கவும்தான் ஈராக்கில் ஜேர்மன், தனது இராணுவத்தை அனுப்ப தயாராகி வருகிறது.

ஜூன் மாதம் தெசலோனிகியில் (Thessaloniki) நடந்த உச்சி மாநாட்டில் ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய பாதுகாப்பு தந்திரோபாய வரைபடத்தைத் தயாரிக்க உடன்பாடு கண்டனர். அதில் அவர்கள் அமெரிக்கக் கோட்பாட்டின் பெரும் கூறுபாடுகளை ஏற்றுக்கொண்டனர். இந்த அறிக்கை வெளிப்படையாகவே தடுப்புப்போர்களை நடத்தத் தயாராகவேண்டும் என்று ஏற்றது. "ஒரு நெருக்கடி தோன்றுவதற்கு முன்பே செயல்படவேண்டும்... நாம் தந்திரோபாய பண்பாடு ஒன்றைக் காணவேண்டும். அது குறுகிய, விரைவான கால அளவில் நீண்டகாலத் தலையீடுகளுக்கும் தயாரான முறையில் இருக்கவேண்டும்'' என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) அறிவிக்கப்பட்டது.

இந்தக் கோட்பாடு ஐரோப்பிய இராணுவ சக்தி அமெரிக்க சக்திக்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் ஐரோப்பியப் பொருளாதார நலன்களை வலியுறுத்தவேண்டும் என்று கூறப்பட்டது. உச்சி மாநாட்டின் தீர்மானம் கூறியதாவது: ''25 நாடுகளின் ஐக்கியம், 450 மில்லியன் மக்களுக்கும் மேலாக இணைந்து நிற்கும் அமைப்பு, உலக உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகிதத்தைக் கொண்ட அமைப்பு (EU) முக்கியமான அங்கத்தை உலக அரங்கில் கொள்ளவேண்டும்.''

ஜேர்மன் அரசாங்கம் காட்டும் ஈராக்கிய ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையில் பங்குபெறத் தயாராக வளர்ந்துவரும் விருப்பம், வேறு ஒரு பிற்போக்கான கூறுபாட்டையும் ாெகண்டுள்ளது. இது புஷ் நிர்வாகத்திற்கு ஆதரவு கொடுப்பதாகவும் உள்ளது. புஷ் நிர்வாகமோ பெரும் உள்நாட்டு அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது.

புஷ் நிர்வாகத்திற்கு அமெரிக்காவிற்குள்ளேயே எதிர்ப்பு வளரும் வகையில், ரம்ஸ்பெல்ட், செனி, மற்றும் புஷ் ஆகியோர்கள் செல்லும் பாதையும் எதிர்ப்பிற்கு உட்பட்டுள்ளது. இந்த நிர்வாகம் கூறிய போர்த் தொடுப்பிற்கான காரணங்கள் பொய் என அம்பலமாகிவிட்டது. ஆதலால், சீருடையில் இருக்கும் அமெரிக்க இளம் சிப்பாய்களின் இறப்புக்கள் உயர்ந்து வருவதானது, அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் புஷ் மீது சீற்றமுடைய வைத்திருப்பதால், ஜேர்மன் அரசாங்கம் வாஷிங்டன் ஆட்சிக்கு உதவ ஓடி வருகிறது.

இந்த முறையில் சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி கூட்டணியின் பேர்லின் அரசாங்கம், அமெரிக்காவின் தீவிர வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவு அளிக்கிறது. அவையோ அமெரிக்க மக்களுக்கு எதிராக ஈவிரக்கமின்றியும், மிருகத்தனமாகவும் நடந்துகொள்வதோடு, சர்வதேசச் சட்டங்களைக் காலின் கீழ் போட்டு மிதித்தும் அரசியல் எதிரிகளை மிரட்டியும் வருகின்றன. புஷ்ஷும் பல தடவை ஜேர்மன் அரசியலில் தலையிட்டுப் பிற்போக்கான எதிர்ப்பை வலுப்படுத்தினார். அவர் ஐரோப்பாவில் பிரான்சையும், ஜேர்மனியையும் தனிமைப்படுத்தும் முயற்சிகளையும் கொண்டார். ஆயினும்கூட, புஷ் நெருக்கடியில் இருப்பதால், அவருடன் ஒரு தனிச் சந்திப்பும் கைகுலுக்கலும் இருந்தால் ''சிதைந்த உறவுகள் மீண்டும் இயல்பாகிவிடும்'' என்று ஷ்ரோடர் கருதுகிறார்.

இந்தப் போக்கு ஐயத்திற்கிடமின்றி நிராகரிக்கப்படவேண்டும். எவ்வாறு சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி கூட்டணியின் சமூகநல வெட்டுத் திட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டுமோ அதே போலத்தான் இவையும் ஆகும். ஒரே ஒரு கொள்கைதான் இராணுவத் தலையீட்டிற்கு எதிராக உள்ளது. அது, ஈராக் மீதான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஒரு மனிதன் கூட, ஒரு சென்ட் கூட கொடுக்கப்படக்கூடாது என்பதாகும்.

ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் ஈராக்கிலிருந்து ஆக்கிரமிப்பு படைகள் உடனே வெளியேறவேண்டும் என்பதற்காகப் போராடி, அமெரிக்க மக்களுடன் இணைந்து புஷ் நிர்வாகத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.

Top of page