World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Socialist candidate pledges to continue campaign

John Christopher Burton responds to court ruling delaying California recall vote

சோசலிச வேட்பாளர் பிரச்சாரத்தைத் தொடர உறுதிமொழி அளிக்கிறார்

கலிஃபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தல் வாக்கெடுப்பைத் தாமதப்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்பிற்கு, ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டன் கொள்ளும் கருத்து

16 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஒன்பதாவது வட்டார (Circuit) மேல் முறையீட்டு நீதிமன்றம், சிறப்புக் கலிஃபோர்னிய கவர்னர் திருப்பியழைத்தல் தேர்தல் தேதியை அக்டோபர் 7, 2003 லிருந்து மார்ச் 2, 2004க்கு ஒத்திவைத்து அளித்த தீர்ப்பிற்கு ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் செப்டம்பர் 15-ம் தேதி செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் பகுதியைக் கீழே வெளியிடுகிறோம். பசடேனாவில் குடியுரிமை வழக்குரைஞராக உள்ள பேர்ட்டன், இத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக உள்ளார். சோசலிச சமத்துவ கட்சியின் ஆதரவாளரான பேர்ட்டனின் வேட்புமனுவை சோ.ச.க இசைவுடன் ஏற்றுள்ளது. ஒன்பதாவது மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு பற்றிய ஆய்விற்கு "Federal appeals court postpones California recall election until March" [16 September 2003]. என்ற கட்டுரையை பார்க்கவும்.

ஒன்பதாம் வட்டார மேல் முறையீடுகள் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை, நான் வரவேற்கிறேன். காலத்தினால் பழுதடைந்து விட்ட அழுத்த அட்டை வாக்கெடுப்புக் கருவிகள் மாநிலத்தின் மிக அளவிலான தொழிலாள வர்க்க வாக்காளர்கள் குவிந்துள்ள மாநிலப் பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டு, திருப்பியழைத்தல் தேர்தலில் 40,000 வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படும் அச்சுறுத்தலைக் கொண்டிருந்தது. இந்தக் குறுகிய கால அளவு மார்ச் வரையிலான ஒத்திவைப்பு, அனைத்து வாக்காளர்களுடைய வாக்குகள் எண்ணப்படும் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கும்.

ஆனால் இத்தீர்ப்பு திருப்பியழைத்தலுக்கான உந்துதலின் தன்மையை மாற்றிவிடவில்லை. வலது சாரியினர், சாதாரண ஜனநாயக நடைமுறைகளைத் தள்ளிக் கடந்து, பழைய நவம்பர் மாத தேர்தல் முடிவுகளை மாற்றும் முயற்சியை நான் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனவே கலிஃபோர்னிய மக்களுக்கு, கவர்னர் டேவிசின் திருப்பியழைத்தலுக்கு "வேண்டாம்" எனக் கூறி வாக்களிக்க மீண்டும் வலியுறுத்துகிறேன்.

திருப்பியழைத்தலை நான் எதிர்த்த போதிலும், அரசியல் அளவில் டேவிஸிற்கு மற்றும் க்ரூஸ் பஸ்டமன்டே அல்லது இரு பெரு வர்த்தகக் கட்சியினரின் தொடர்புடைய எந்த வாக்காளருக்கும், மார்ச் வரை தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டாலும் படாவிட்டாலும், கலிஃபோர்னிய நெருக்கடியின் பின்னே இருக்கும் அடிப்படை அரசியல் பிரச்சனைகள் மாறாமல் அப்படியேதான் இருக்கும். ஈராக்கியப் புதை சேறு, காலனித்துவ ஆட்சிக்கு ஆதரவாக இங்கு வாரி இறைக்கப்படும் முக்கிய வளங்கள், ஆகியவை நிலைமையை மோசமடையவே செய்யும். போரின் தாக்கமும், ஜனநாயக கட்சியினரின் உதவியோடு, புஷ் நிர்வாகம் கடைபிடிக்கும் பிற்போக்குத்தனமான கொள்கைகளும், வேலைகள், வாழ்க்கைத் தரம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூகப் பணிகள் ஆகியவற்றின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கூடுதலான, அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட அதிகாரங்களைக் கேட்பது, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

நீதிமன்றத் தீர்ப்பு சட்ட அளவில் சரியேயெனினும், அது வெளிவந்த சூழ்நிலை அமெரிக்க ஜனநாயகத்தின் மிக நுட்பமான விரிந்து உடையும் தன்மையை கோடிட்டுக் காட்டுகிறது. சமூக துருவமுனைப்படல் ஜனநாயகம் நிலை நிறுத்தப்படவுள்ள தேர்தல் முறையையே முறிவுக்குக் கொண்டு வரும் அளவு முன்னேறிவிட்டது. கிளின்டன் பதவி நீக்க விசாரணையில் காட்டப்பட்டது போல், புஷ்ஷின் ஜனாதிபதித் தேர்தல் திருட்டும், திருப்பியழைத்தல் உந்துதலுமே கூட ஆளும் செல்வந்த தட்டின் கணிசமான பிரிவினர் தங்களுக்கு விருப்பமில்லாதவற்றைக் கொண்டுவரும் தேர்தல் முடிவுகளை ஏற்கமாட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அத்தகைய சூழ்நிலையில் தொழிலாள வர்க்கம் நீதிமன்றங்களை மட்டுமே தங்கள் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் என்று கூறி நம்பியிருக்க முடியாது.

எப்பொழுது தேர்தல் நடந்தாலும் சரி, நான் என்னுடைய பிரச்சாரத்தை சுயாதீனமான சோசலிச மாற்றீடு ஒற்றைக் கொடுப்பதை --பெருநிறுவன இலாபப்போக்குகள், தனிச் சொத்துக்குவிப்பு இவற்றை விட மனிதத் தேவைகளை உயர்ந்த இடத்தில் வைக்கும் முறையை முன்வைக்க எனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருப்பேன். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான், ஈராக், முழு மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்தும் நிபந்தனையற்று உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற அழைப்பைத் தொடர்வேன். தொழிலாளர்களை, மாணவர்களை மற்றும் சிறப்புத் துறைகளில் ஈடுபட்டோரை, என்னுடைய தேர்தல் வேலைத்திட்டத்தைப் (www.socialequality.com-TM) படித்து, எனக்கு வாக்கு அளித்து, சோசலிச சமத்துவக் கட்சியில் சேருவதைப் பற்றித் தீவிர சிந்தனை செய்ய அழைக்கிறேன்.

Top of page