:
ஐரோப்பா
:
பிரித்தானியா
Blair government sends more troops to Iraq
பிளேயர் அரசாங்கம் ஈராக்கிற்கு மேலும் துருப்புக்களை அனுப்புகின்றது.
By Julie Hyland
10 September 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
ஈராக்கிற்கு மேலும் 1200 பிரிட்டிஷ் துருப்புக்களை அனுப்பப்போவதாக பிளேயர் அரசாங்கம்
அறிவித்திருக்கிறது. இரண்டாவது பட்டாலியன், லைட் இன்பன்ட்ரி மற்றும் முதலாவது பட்டாலியன்
ரோயல் கிரீன் ஜாக்கெட்ஸ் பிரிவுகளைச் சேர்ந்த இந்த 1200 பேரும் தெற்கு ஈராக்கில் பணியாற்றுவர்.
ஈராக்கில் ஏற்கெனவே 10,000க்கு மேற்பட்ட பிரிட்டிஷ் துருப்புக்கள் உள்ளன. அவற்றுடன் இவர்களும் இணைந்து கொள்வார்.
பிரிட்டனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜியோஃப் ஹூன் அடுத்த சில வாரங்களில் கூடுதலாக
1000 முதல் 2000 துருப்புக்கள் அனுப்பப்படவிருப்பதாக தெரிவித்தார். "ஈராக்கிற்கு எவ்வளவு துருப்புக்கள்
தேவை? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஈராக்கில் இருப்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறதோ,
அவ்வளவு காலத்திற்கு கூடுதல் துருப்புக்கள் அங்கு அனுப்பப்படும்" என்றும் அவர் விளக்கினார்.
இத்தகைய முடிவை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பளிக்கவில்லை.
எனவேதான் பிரிட்டனின் வரலாறு காணாத அளவிற்கு பிப்ரவரி-15ந்தேதி மிகப்பெரும் அளவிற்கு ஈராக்போர் எதிர்ப்பு
கண்டனப் பேரணி நடைபெற்றது. அதற்குப் பின்னர் எதிர்ப்பு விரிவடைந்துள்ளது மற்றும் ஆழமாகிக்கொண்டும் வருகிறது.
ஈராக் மீது திடீர்தாக்குதல் நடத்துவதற்காக அந்த படையெடுப்பை நியாயப்படுத்துவதற்கு
பொது மக்களைக்கொன்று குவிக்கும் ஆயுதங்கள் ஈராக் வசம் இருப்பதாக அரசாங்கம் ''பொய்'' கூறியது. அந்
நாட்டினை பல மாதங்களாக ஆக்கிரமித்துள்ள நிலையில், உலகிற்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று பிரதம மந்திரி
டோனி பிளேயர் கூறிய இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் எந்தவொரு தடயம் தடையம் கூட கண்டுபிடிக்க
இயலவில்லை.
அரசாங்கத்தின் போர் தந்திரங்களை அம்பலப்படுத்திய டாக்டர் டேவிட் கெல்லியின்
மரணம் தொடர்பாக நடைபெற்று வருகின்ற ஹட்டன் விசாரணையின் முதல் கட்டங்களில் வெளியான தகவல்கள் ஈராக்
அத்தகைய அச்சுறுத்தலாக இல்லை என்பதை அரசாங்கம் தெளிவாக அறிந்திருந்தும் தனது போர் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்காக புலனாய்வு தகவல்களைதிரித்து வெளியிட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. பிரதமர் டோனி
பிளேயர் தலைமையில் செயல்பட்ட அவரால் சதிக்கும்பல்களுள் ஒன்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசகர்களும்
முகம்தெரியாத அதிகார வர்க்கத்தினரும், எல்லா ஜனநாயக நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு ஈராக்கிற்கு
எதிரான கற்பனையான ஒரு குற்றச்சாட்டை அமெரிக்காவுடன் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள், என்பது அந்த விசாரணையின்
மூலம் தெளிவாக தெரிய வந்திருக்கின்றது; சட்ட விரோதமான இரத்தகளரித் தாக்குதலை நடத்தி பாரசீக
வளைகுடாப் பகுதியில் எண்ணெய் வளத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதே இதன் மூலோபாயமாகும்.
பாதுகாப்பு அமைச்சர் ஹூன், பிளேயரது அமைச்சரவையில் ஒரு பூஜ்ஜியத்தினை விட
சற்று உயர்வானவர்ரே அவருக்கு அவரது சொந்த துறையிலேயே செல்வாக்கோ அல்லது கட்டுப்படுத்தும் அதிகாரமோ
இல்லை. நிச்சயமாக அந்த மனிதர் வாழ்வா சாவா என்கிற கேள்விகளுக்கு முடிவு செய்கின்ற அதிகாரத்தை பெறுவதற்கு
சற்றும் தகுதியில்லாதவர்.
போதாக் குறைக்கு ஈராக் மீதும் தங்களது சொந்த நாடுகளின் மக்களுக்கு எதிராகவும்,
பிரிட்டனின் மற்றும் அமெரிக்க நிர்வாகங்கள் குற்றவியல் சதித்திட்டங்களை செய்தன, என்பதற்கும் சான்றுகள் வெளியாகிக்
கொண்டுடிருக்கின்றன.
தொழிற்கட்சி முன்னணி M.P
யான ''மைக்கேல் மீச்சர்'' செப்டம்பர் -6 சனிக்கிழமையன்று புஷ் நிர்வாகத்தின் மீது ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டிருக்கிறார்.
ஈராக் மீது படையெடுத்துச் சென்று அந்த நாட்டை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று நீண்ட காலமாக தீட்டப்பட்டு
வந்த திட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்காக புஷ் நிர்வாகம் 2001 செப்டம்பர்-11 தாக்குதல் தொடர்பாக
முன்கூட்டியே தகவல் அறிந்திருந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக மீச்சர் கார்டியன்
பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அவர் சென்ற ஜூன் வரை பிளேயர் மந்திரி சபையில் சுற்றுப்புறச் சூழல்
பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றி வந்தார். அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். செப்டம்பர்-11
தாக்குதல்களைச் சுற்றி உள்ள பல்வேறு பிரச்சனைகளை அவர் கட்டுரையில் ஆராய முனைந்துள்ளார்.
குறிப்பாக 2000ம் ஆண்டில் வாஷிங்டனின் வலதுசாரி சிந்தனையாளர் குழு உருவாக்கிய
ஒரு ஆவணத்தை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்காவின் பாதுகாப்புக்களை மீழ் நிர்மானம் செய்தல்
என்ற தலைப்பில் புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டம் (Project
for a New American Century -PNAC) என்பதனை அந்த வாஷிங்டன் சிந்தனையாளர்
குழு (Thinktank) உருவாக்கியது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை
விரிவுபடுத்தவதற்கு ''புதிய பெர்ல் ஹார்பர் (New Pearl
Harbor) போன்ற பேரழிவு மற்றும் கிரியா ஊக்கி நிகழ்ச்சி'' தேவைப்படும் என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
செப்டம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து புஷ் நிர்வாகம் "ஏற்கெனவே தான்
உருவாக்கி இருந்த அமெரிக்க மேலாதிக்கத் திட்டப்படி" தனது சர்வதேச அளவிலான செல்வாக்கை நிலை நாட்டுவதற்காக
முதலில் ஆப்கானிஸ்தான் மீதும், அதற்கு பின்னர் ஈராக் மீதும் போர் தொடுத்தது, என்பதை மீச்சர் தனது கட்டுரையில்
குறிப்பிட்டிருக்கிறார்.
மீச்சரின் கருத்துக்களை டொனி பிளேயர் பொருட்படுத்தவில்லை. ஊடகங்களுக்குள் எடுத்துக்காட்டிய
பிரச்சனைகளை முன் நிறுத்தி விளக்கம் தருகின்ற போக்கை கைவிட்டு மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்
பட்டிருக்கின்றன. இந்த வகையில் அரசாங்கம் தொடர்ந்து நடைபோடுவது இனி இயலாத காரியம் ஆகும். மீச்சர்
எழுப்பியுள்ள விவாதங்கள் புதியவை அல்ல. மீச்சரைப் போன்ற ஒரு முன்னணி அரசியல்வாதி போரை ஆதரித்து நின்றவர்
தற்போது அந்த போரின் அடிப்படைகள் தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருப்பது பிரிட்டனின் ஆளும் குழுவிற்குள்
உருவாகியுள்ள கவலைகளை கோடிட்டு காட்டுவதாக அமைந்திருக்கின்றது. பிரிட்டிஷ் துருப்புக்கள் ஈராக்கில் பலியாகின்ற
எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. போர் துவங்குவதற்கு அரசாங்கம் கூறிய சாக்கு போக்கு சீர்குலைந்து
கொண்டு வருகின்றது.
கூடுதல் துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவது தொடர்பான தனது அறிவிப்பை ஹூன்
நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறார். வாய்மொழியாக அமைச்சர்
இந்த அறிவிப்பை வெளியிடுவாரானால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு துணை கேள்விகளை எழுப்ப முடியும். அதை
மட்டுபடுத்துவதற்காகவே இவ்வாறு அறிக்கை மூலம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஈராக்கிற்குள் பணியாற்றிக்
கொண்டிருக்கின்ற பிரிட்டனின் இராணுவ தளபதிபகள் விடுத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில் புதிய துருப்புக்கள் அனுப்பட்டிருப்பதாகவும்
ஈராக்கில் அடிப்படை வசதிகளை மீட்டுத் தருவதில் உதவுவதும் ஏற்கெனவே அங்கு நிலை பெற்றுள்ள துருப்புக்களை
பாதுகாப்பதும் தான் புதிய துருப்புக்களின் பங்களிபாக இருக்கும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரிட்டனின் இராணுவத்தினருக்கு பாதுகாப்பு தேவை என்பதை அமைச்சரது அறிக்கை குறிப்பிட்டிருப்பது
ஈராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள் பணிபுரியும் தன்மையை வலியுறுத்தி கூறுவதாக அமைந்திருக்கின்றது. பிரிட்டிஷ் இராணுவம்
ஈராக்கை விடுவிப்பதற்காக வந்த இராணுவம் அல்ல, நாட்டின் மீது காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக வந்த
இராணுவம் என்று பொதுமக்களது எதிர்ப்பு நாடு முழுவதிலும் துருப்புக்களுக்கு எதிராக குவிந்து கொண்டு வருகின்றது.
ஈராக் சமுதாய கட்டுக் கோப்பு படைகளால் சிதைந்து கொண்டு வருகின்றது. வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு
எதிர்ப்பு வளர்ந்து வருகின்றது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சென்ற மாதத்தில் மட்டும் மிகப்பெரும் சேதங்களை
விளைவித்த நான்கு கார் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன அத்துடன் பிரிட்டன் மற்றும் அமெரிக்க இராணுவ
வீரர்கள் பலியாவது பெருகிக் கொண்டுவருகின்றது.
அமெரிக்க பிரிட்டனின் ஆக்கிரமிப்பு துருப்புக்கள் ஆழமான நெருக்கடியில் சிக்கியுள்ளன
என்பதற்கு அடையாளமாக ஜனாதிபதி ஜார்ஜ் டபூள்யூ புஷ் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளுக்காக
அமெரிக்கக நாடாளுமன்றத்தில் மேலும் 87 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு கோரியுள்ளார்.
இந்த நிதி ஒதுக்கீட்டில் 21 பில்லியன் டாலர்கள் மட்டுமே படையெடுக்கப்பட்டுள்ள நாடுகளின்
சீரமைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதம் இருக்கும் பெருந்தொகை இராணுவ மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக
ஒதுக்கப்பட்டுள்ளது. இது நெருக்கடியை எப்படி புஷ் நிர்வாகம் சமாளிக்க கருதியுள்ளது என்பதை கோடிட்டு காட்டுவதாக
அமைந்திருக்கின்றது. ஈராக் மக்களுக்கு எதிராக மேலும் கொடூரமான தீவிரமான ஒடுக்கு முறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக
கூடுதலாக பிரிட்டிஷ் துருப்புக்கள் (போரில் சிதைவுற்றுக் கிடக்கும் சிர்ரா லியோன் நாட்டில் இதற்கு முன்னர்
பணியாற்றி வந்தவற்றுள் சில துருப்புகள் உட்பட) ஈராக்கில் பங்கெடுத்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
ஜனநாயக நெறிமுறைப்படி எந்த விதமான விவாதங்களுக்கும் இடமளிக்காமல் பிரிட்டிஷ்
மக்களின் திட்டவட்டமான விருப்பங்களுக்கு விரோதமாக பொய்களையும், உண்மைகளை தவிர்க்கின்ற போக்குகளையும்,
மேற்கொண்டு அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கி வருகின்றது. வாஷிங்டனும், லண்டனும், கூடுதல் துருப்புக்கள் தேவை
என்கிற கோரிக்கையை தாக்கல் செய்திருக்கும் முறையிலேயே முரண்பாடுகள் காணப்படுகின்றன. அமெரிக்காவின்
எதிரிகள் "சுதந்திர உலகத்தின்" எதிராளிகள் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற கேந்திரமயமாக
ஈராக் மாறிவிட்டதால் அதை கட்டுப்படுத்த கூடுதல் துருப்புக்களும், கூடுதல் நிதி ஒதுக்கீடும் தேவை என்று புஷ் கூறியிருக்கிறார்.
சதாம் ஹூசேனுக்கும் அல்கெய்டா அமைப்பிற்கும் தொடர்பு உண்டு மற்றும் செப்டம்பர்-11 தாக்குதல்களிலும் சதாம்
ஹூசேனுக்கு பங்கு உண்டு என்று கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்கள் பொய் என்று பல விமர்சகர்கள் குறிப்பாக
சுட்டிக்காட்டியுள்ளனர், ஆனால் அமெரிக்க துருப்புக்கள் கொல்லப்பட்டது யுத்தத்திற்கு பின்னரே அல்லலாது முன்னர்
அல்ல.
போர் துவங்கிய பின்னர்தான் அமெரிக்கத் துருப்புக்கள் கொல்லப்பட்டு வருகின்றன. இதில்
கூடுதல் துருப்புக்களை அனுப்புவதற்கு பிரிட்டிஷ் அமைச்சர் ஹூன் தெரிவித்திருக்கின்ற காரணங்கள் மிகவும் பரிதாபத்திற்கு
உரியவை. ஈராக் மீது போர் தொடுப்பதை நியாயப்படுத்துவதற்காக அந்நாட்டிடம்
WMD இருப்பதாக கூறப்பட்டு வந்ததே, இப்போது அது ஏன்
பயங்கரவாதமாக மாறிவிட்டது என்று BBC ஐ சார்ந்த ஜெர்மி
பாக்ஸ்மன் கேட்டதற்கு WMD "திட்டங்கள்" தொடர்பாக
சான்றுகளை கண்டுபிடித்திவிட முடியும் என்று இன்னமும் நம்புவதாக ஹூன் பதிலளித்தார். பயங்கரவாதம் தொடர்பாக
ஒரு பிரச்சனை இருப்பதாகவும், அது பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள தென்பகுதியில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
"குவைத்தில் விற்பதற்காக செப்புக் கம்பிகள் திருடப்படுவது" போன்ற சூறையாடல்களை தடுப்பதற்காக கூடுதல்
துருப்புக்கள் தேவைப்படுவதாக அமைச்சர் கூறியிருக்கிறார்.
இத்தகைய போலியான சாக்கு போக்கு காரணமாக பிரிட்டனின் துருப்புக்கள் மேலும்
ஈராக்கில் ஈடுபடுத்தப்படுகின்றன. இப்போது ஈராக் நிலவரம் பயங்கரமான புதை சேறாக மாறிவிட்டது என முதலாளித்துவ
வர்க்கத்தின் முன்னணி தலைவர்களே கூட எச்சரித்துக்கொண்டு வருகின்றனர். ஹூன் அறிவிப்பு வெளிவந்த மறுநாள்
செப்டம்பர்-9 அன்று பைனான்சியல் டைம்ஸ் நாளேடு "ஈராக் கொள்கை மாற்றப்பட வேண்டும்" என்று
எழுதியிருக்கின்றது.
ஜனாதிபதி புஷ் தனது நாட்டிற்கு ஆற்றிய உரையில் ஈராக்கில் ஐக்கிய அமெரிக்காவிற்கும்
அதன் நட்பு நாடுகளுக்கும் உதவுவது மற்றய நாடுகளது "கடமை" என்று கோரியுள்ளார், இது நிராகரிக்கப்படும் என
அந்த பத்திரிகை கூறியிருக்கிறது.
''அமெரிக்கா தலைமையில் ஈராக்கை பிடித்துக் கொண்ட அதிகாரிகள் தினசரி எதிர்
தாக்குதலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மிக பயங்கரமாகவும், அதி நுட்பமான முறையிலும்
தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஈராக்கை பிடித்துக்கொண்டுள்ள துருப்புக்கள் ஈராக்கின் சாலைகளையோ,
அல்லது எல்லைகளையோ, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கவில்லை. மக்களது அடிப்படை தேவைகளான
சீரான மின்சாரம், குடிதண்ணீர், ஆகியவற்றை தருவதற்கு தவறிவிட்டன
நாட்டின் பாதுகாப்பது எங்கே! ''
சென்ற மாதம் ஈராக்கில் கடுமையான சேதம் விளைவித்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள்
நடைபெற்றன. ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கே முழுநேரம் பணியாற்றிக்
கொண்டிருக்கின்றன. தங்களது நட்பு நாட்டுப் படைகளையும், அந்த நாடுகளின் அமைப்புக்களையும் உருவாக்குவதில் ஈராக்கை
மறு நிர்மானம் செய்வதில் பாதுகாப்பு தர முடியாத நிலையில் அமெரிக்கத் துருப்புக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன.
இன்னும் அதிகம் தெளிவில்லாம்ல் இருப்பது என்னவெனில், ஆக்கிரமிப்பு படைகளின் தலைமையகம் (occupation
authorities) யாரை எதிர்த்துப்போரிடுகிறோம் என்று தெளிவு இல்லாமல் தத்தளித்துக்
கொண்டிருக்கின்றன என்று அந்த பத்திரிக்கை குறிப்பிட்டது.
"குளப்பமான நிலை என இதனை அழைப்பது விடையத்தினை குறைத்து மதிப்பிடவே செய்யும்"
என அப் பத்திரிகை மேலும் தொடர்ந்தது.
ஈராக்கில் அரசாங்க கொள்கையைக் கண்டிக்கின்ற ஆளும் வட்டாரங்களுக்குள் உள்ள
பிளேரின் எதிரிகளிடம் மாற்றுத்திட்டம் எதுவுமே இல்லை.போருக்கு ஆதரவு காட்டியவர்கள் கூடுதல் துருப்புக்களை அனுப்புவதற்கும்
சம்மதித்து இருக்கிறார்கள். பைனான்சியல் டைம்ஸ் நாளேடு எடுத்துக்காட்டாக ஒன்றை கூறியிருக்கிறது.
போரை எதிர்த்தவர்கள் கூட தற்போது உதவுவதற்கு கடமைப்பட்டவர்கள் என்று வலியுறுத்தி இருக்கிறது. ஈராக் மீது
அரசியல் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஐ.நா-விற்கு அமெரிக்கா அனுமதி தரவேண்டும், அப்போதுதான் பிற நாடுகள்
துருப்புக்களை அனுப்புவதற்கு அது ஒரு அரசியல் கவசமாகும் மற்றும் ஈராக்கிற்கு புதிய அரசியல் நிர்ணய சட்டத்தை
உருவாக்குவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையை உருவாக்குவதற்கு ஐ.நா-தான் ஏற்பாடு
செய்ய முடியும். அப்போதுதான் "சாதாரண ஈராக் குடிமக்கள் நாட்டு அரசியல் மாற்றத்தில் முக்கிய பங்கெடுத்துக்கொள்ள
முடியும்" என்றும் பைனான்சியல் டைம்ஸ் எழுதியிருக்கிறது.
பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்து உள்ள ஆலோசனையை வாஷிங்டன் ஏற்றுக்கொள்ளுமா
என்பது வேறு விவகாரம். வேறு வழிகளில் ஈராக்கை தொடர்ந்து தன் பிடியில் வைத்துக்கொண்டு இருக்கவேண்டும்
என்பதில் உறுதியாக இருக்கின்ற வாஷிங்டன் ஈராக் மக்களை நிச்சயம் திருப்திப்படுத்தாது.
பொய் சொல்லத் தயாராகிவிட்ட ஒரு அரசாங்கம் தனது ஏகாதிபத்திய மற்றும் கூலிப்பட்டாள
நோக்கங்களுக்கு ஏற்ப மக்களை ஏமாற்றுவதற்கு தயாராகிவிட்ட ஒரு அரசாங்கம் தனது கொள்கைகளால் உருவாக்கப்பட்டுள்ள
பேரழிவை சீர் செய்வதற்கு முற்போக்கான ஒரு தீர்வை எடுக்கும் என்று நம்பிவிட முடியாது. கூடுதல் படைகளை அனுப்ப
வேண்டும் என்பதற்கு பதிலாக ஈராக்கில் உள்ள அனைத்துப் படைகளுமே உடனடியாக விலக்கிகொள்ளப்பட வேண்டும்
என்று கோரிக்கை எழுப்பப்படவேண்டும். அப்போதுதான் ஈராக் மக்கள் தங்களது தலைவிதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ள
முடியும். மேலும் உயிர் சேதங்களை தடுக்க முடியும். இந்த கோரிக்கையுடன் ஈராக்கிற்கு எதிராக நடத்தப்பட்டு
வரும் போர் தொடர்பாக முழுமையான சுதந்திரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்ப
வேண்டும். அப்போதுதான் பிரிட்டனில் உள்ள உழைக்கும் மக்கள், மத்திய கிழக்கு முழுவதையும் இராணுவ வலிமையால்
பிடித்துக்கொள்ள வாஷிங்டனும் லண்டனும் மேற்கொண்டிருக்கும் குற்றவியல் முயற்சியை அரசியல் ரீதியில் சவால்செய்ய
முடியும்.
Top of page
|