World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Hutton Inquiry: Blair government's lies on Iraqi WMD unravel

ஹட்டன் விசாரணை: ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பிளேயர் அரசாங்கத்தின் பொய்கள் வெளிப்படுகின்றன

By Chris Marsden
6 September 2003

Back to screen version

பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறையோடு இணைந்த பாதுகாப்பு உளவுத்துறை அலுவலகத்தின் இரு ஆயுத வல்லுநர்கள் அளித்த சாட்சியம் பிரதம மந்திரி டோனி பிளேயரின் அரசாங்கத்திற்கு கடும் தாக்குதலை கொடுத்தது.

செப்டம்பர் 3ம் தேதி, டாக்டர் கெல்லியின் மரணம் பற்றி விசாரணை செய்யும் ஹட்டன் பிரபு முன்தோன்றி இருவரும், ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்களின் அச்சுறுத்தல் பற்றி ``அரசாங்கத்தின் கிலியுற்ற வர்த்தகர்கள்`` மிகைப்படுத்திவிட்டனர் என்றும் செப்டம்பர் 2002 ஈராக்கிய உளவுத்துறை கோப்பு பற்றியும் மோசமான குறைகளைக் கூறினர். பிபிசி நிருபர், ஆண்ட்ரூ ஜில்லிகன் தன்னிடம், கோப்புக்களைப் பற்றி டாக்டர் கெல்லி குறைகூறிய கருத்துக்கள் பற்றி அழுத்தமாகத் தெரிவித்ததின் தன்மையை உளவுத்துறையின் மற்ற அதிகாரிகளுக்குள்ளும் பரந்த அளவில் கவலைகளைப் பிரதிபலித்தது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.

இரண்டு சாட்சிகளின் உயர் அந்தஸ்தும், செய்தி ஊடகத்தோடு தொடர்புகொள்ள அதிகாரம் கொண்டிருந்த டாக்டர் கெல்லி, கெட்ட எண்ணத்துடன் நடந்து கொள்ளவில்லை என்றும், இந்தக் கவலைகளை வெளியிடலாம் என்ற உட்குறிப்பை அறிந்த பின்னரே, அவர் அதைத் தெரிவித்தார் என்றும் தோன்றுகிறது. அவரை மட்டும் ஜில்லிகனின் ஆதாரம் என்று அரசாங்கம் வெளியிட்டதில், அவர், தான் நம்பிக்கைத் துரோகத்திற்கு உட்படுத்தப்பட்டுவிட்டதாக கருதியதை இது நன்கு விளக்குகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு (MoD), பிரிட்டனின் உளவுத்துறை நிறுவனமான MI6 அளிக்கும் உளவுக்குறிப்புக்களை பகுப்பாயும் பொறுப்பை DIS பெற்றுள்ளது.

DIS ல் பணியாற்றும் விஞ்ஞானிகள், இப்போது ஓய்வு பெற்றுள்ள டாக்டர் பிரைன் ஜோன்சின் பொறுப்பின் கீழ், ஆவணம் தயாரிக்கப்படும்போது இருந்தனர். ஈராக்கிய அச்சுறுத்தல் பற்றிய மதிப்பீடுகள் கோப்பில் "மிகைப்படுத்தப்பட்டு" விட்டனவோ என்ற கவலை தனக்கு இருந்ததாகவும், அத்தகைய கவலைகள் தன் ஊழியர்கள் அனைவருக்குமே இருந்ததாகவும் அவர் கூறினார். நடைமுறையில் DIS உறுப்பினர் போலவே நடத்தப்பட்ட டாக்டர் கெல்லி பாதுகாப்புப் பகுதிக்கு வழக்கமாகச் செல்வதுண்டு என்றும், அதன் கூட்டங்களில் கலந்து கொள்வார் என்றும் ஜோன்ஸ் கூறினார். தாங்கள் அனைவரும் கொண்டிருந்த கவலை பற்றி கெல்லியிடம் ஜோன்ஸ் பேசியிருந்தார்.

செப்டம்பர் 19 வரை தயாரிக்கப்பட்டிருந்த ஆவணத்தின் வரைவுகளைப் பற்றி, ஜோன்ஸ் கூறினார்: ``ஈராக்கிய இரசாயன, உயிரியல் ஆயுத திறன்கள் அனைத்து வகையிலும் இருக்கும் சான்றுகளோடு சரியான முறையில் மதிப்பீடு செய்யப்படவில்லை என்ற கவலையை நான் கொண்டிருந்தேன்.``

``குறிப்பாக, இரசாயனப் போர் முகவர்களைப் பற்றியோ, இரசாயன ஆயுதங்கள் பற்றியோ, கணிசமான அளவில் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று என்னிடம் கூறப்பட்டது.``

WMD என்பது ``அனைத்தையும் உள்ளடக்கியது`` என்று கூறிய அவர் கோப்புக்களில் ஆயுதங்கள் என குறிப்பிடப்பட்டவை சிறுவகை வெடிமருந்துகளைப் பற்றித்தான் என நினைக்கப்பட்டதாக கூறினார்.

செப்டம்பர் 18, 2002க்குப் பின் விடுமுறையிலிருந்து வந்தபின்னர், தன்னுடைய பணியாளர்கள், தங்கள் கவலையைத் தெரிவித்ததாக ஜோன்ஸ் கூறினார். ``பொதுவாக இத்தகைய வேலையில் இருக்கும் அழுத்தத்தைவிட கூடுதலான உயர்மட்ட அழுத்தம் காணப்பட்டது அசாதாரணமானது, அந்த விதத்தில் வித்தியாசமானது.``

கோப்பில் சில மாறுதல்கள் தேவையென, தம் பணியாளர்கள் குழு ஆலோசனை கூறியதாகவும் அவை ஏற்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்த ஈராக்கிய இரசாயன ஆயுதங்கள் பற்றிய கூற்று "மிகைப்படுத்தலுக்குச்" சான்று எனவும், அரசாங்கத்தின் ``தொடர்புத்துறையினரின்`` ஈடுபாடு இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார். கோப்பை ''பாலியல் வகையில் குழப்பியது'' இதன் தலைவரான அலாஸ்டர் காம்பெல்தான் என, ஜில்லிகனிடம், கெல்லி கூறியிருந்தார்.

(டெளனிங் தெரு பத்திரிக்கை அலவலகத்தினர்) ``இத்தோடு ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்தனர் என்ற உணர்வு இருந்தது" என ஜோன்ஸ் தெரிவித்தார்.

ஈராக் 45 நிமிடத்திற்குள் பேரழிவு ஆயுதங்களை அனுப்ப முடியும் என்ற பிரச்சினையின் முக்கிய கூற்று பற்றிய தன்னுடைய சொந்தக் குறைகளைப் பற்றி ஜோன்ஸ் கூறினார்: ``என்னுடைய கவலையெல்லாம், இருக்கும் சான்றுகளை வைத்து ஆராயும்போது, ஈராக்கிய இரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள் பற்றிச் சரியான முறையில், தெளிவான திறன்கள் தெரிவிக்கப்படவில்லை என்பதே.`` இப்பொழுது பயனற்றது என ஒதுக்கப்பட்டுவிட்ட (ஈராக்கிய தளபதி ஒருவரின்) தகவல்தான், அதுவும் நேரடியற்ற இரண்டாம் தரத் தகவல்தான் ஒற்றை ஆதாரமென்றும், இதுகூடத் தகவலுக்காகக் கொடுக்கப்படாமல் செல்வாக்குப் பெறக் கொடுத்திருக்கக்கூடும்.``

கோப்பு வெளியிடுவதற்கு 5 நாட்கள் முன்பு, செப்டம்பர் 19, 2002 அன்று DISன் கூட்டம் ஒன்றைக் கூட்டியதில், கருத்து வேறபாடுகள் தொடர்ந்திருந்தது தெளிவாயிற்று. JICயின் வரைவு ஆவணத்திருத்த நடைமுறையில் பிரச்சினைகள் உள்ளன என்பதை இயக்குநருக்கு தான் தெளிவுபடுத்தி குறிப்பு எழுதியதாகவும் ஜோன்ஸ் தெரிவித்தார். பாதுகாப்பு உளவுத்துறையின் துணைத்தலைவரான டோனி கிராக் JIC கூட்டத்தில் இது பற்றிய பிரச்சனை எழுப்பவில்லை என்றும், ஜோன்ஸின் உடனடி மேலதிகாரியின் ஒரே பதில் ``நன்றி`` என்ற ஒற்றைச் சொல்தான் என்றார்.

``உளவுத்துறைக்கு வெளியிலிருந்து ஏதோ செல்வாக்கு வந்திருக்கவேண்டும் என நான் நினைத்தேன்`` என்றார் ஜோன்ஸ்.

DIS கோப்புத் தொகுப்போடு கடைசியாகத் தொடர்பு கொண்டிருந்தது செப்டம்பர் 19ம் தேதிதான்.

James Dingemans QC, கோப்புத்தொகுப்பின் இறுதி வடிவம் பற்றி JIC யுடைய முழுக்கூட்டம் ஏதேனும் இருந்ததா என்று ஜோன்ஸைக் கேட்டார். அதற்கு இறுதி வடிவம் பற்றி முழுக்கூட்டம் முடிவு செய்யவில்லை, ஒரு துணைக்குழுவால் முடிவு செய்யப்பட்டது என்றும், பொதுவாக அப்படி நடப்பதில்லை என்றும் ஜோன்ஸ் தெரிவித்தார்.

அனைத்து உளவுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளையும், MI6 (இதில்தான் JICயின் தலைவர் ஜோன் ஸ்கார்லட்டும் இணைந்திருந்தார்) DIS உட்பட, JIC தான் கொண்டிருந்தது. அது இறுதிப் படிவத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்பது அதிர்ச்சியான தகவலாகும். JIC முற்றிலுமாக, அதுவும் குறிப்பாக ஸ்கார்லட்டினால் ``தயாரிக்கப்பட்டது`` என்ற அரசாங்க வாதம் இதைத்தான் ஆதாரமாகக் கொண்டிருந்தது.

ஆவணத்தின் உண்மையான தயாரிப்பாளர்கள் அரசாங்கமும் அதன் கைக்கூலியாகச் செயல்பட்ட MI6ல் இருந்தவர்கள்தாம் என்பதை மறைக்க தன்னுடைய சாட்சியத்தில் பிரதம மந்திரி பிளேயர் பலமுறை ``உரிமையானது`` என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார்.

செப்டம்பர் 24ல் ஆவணம் வெளியிடப்படுவதற்குச் சில நாட்கள் முன்பு ஸ்கார்லட்டின் அலுவலகக் கூட்டமொன்றின் குறிப்பின் வெளியிடும் அரசாங்கத்திற்கு மேலும் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. ``தொகுப்பின் பொறுப்பு`` என்ற தலைப்பில் ஓர் அம்புக் குறியிட்ட அடையாளம் ``ஆவணத்தின் உரிமை எண்.10 உடன் உள்ளது (பிளேயருடைய டெளனிங் தெரு இல்லம்)`` எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

DIS உடன் மரபை மீறி உளவைப் பகிர்ந்து கொள்ளாத தன்மையை MI6 காட்டியதுதான் ஜோன்ஸிற்கும் மற்றவர்களுக்கும் பல காரணங்களுள் ஒன்றாயிற்று. நட்புரிமையில் குறைகளையும் ஆலோசனைகளையும் ஏற்ற அரசாங்கம், நடைமுறை வழக்கத்தை ஒதுக்கி, போரின் உந்துதலைக் குறை கூறுபவர்களை மெளனப்படுத்தவும், பயமுறுத்தவும், பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்பே, கோப்புத் தொகுப்பை வெளியிடக் கருதியது.

JICயின் கடைசிக் கூட்டம் செப்டம்பர் 18ல் நடந்திருந்தாலும் கூட, 19, 20, 24 தேதிகளில் வரைவுகள் தயாரிக்கப்பட்டன. இதற்கிடையில், காம்பல் கோப்பின் முன்னுரையில் 15 ஆலோசனைக் கருத்துக்களை முழுமையாகத் தெரிவித்தார்.

"Mr.A" என்பவர் பெயரிட விரும்பாமல் தன்னுடைய சாட்சியத்தை அளித்தார். இவர் பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆயுதப் பெருக்கம், கட்டுப்பாட்டுப் பிரிவில் கெல்லியுடன் சக ஊழியராக இருந்ததுடன் ஈராக்கில் ஆயுத ஆய்வாளராகவும் இருந்து உள்ளார்.

DIS அளிக்கவிருந்த கோப்பில் 12 முதல் 14 திருத்தங்களுக்குக் கெல்லி தான் வடிவமைத்தவர் என அவர் விளக்கம் கொடுத்தார். ஈராக்கிலிருக்கும் அல்-க்வா'கா திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் phosgene உயிரியல் ஆயுதங்களின் தயாரிப்பிற்காக என்று கோப்பில் குவித்துக் காட்டப்படுவது பற்றி கவலை தெரிவித்ததையும், தொழிற்சாலையின் வர்த்தக உரிமையின்படி அது சரியான நிலைதான் என்றும், ஈராக்கில் ஆயுதங்களில் phosgene எப்போதுமே பயன்படுத்தப்பட்டதில்லை என்றும் கூறியிருந்தார்.

Mr.A செப்டம்பர் 25ம் தேதி அனுப்பியிருந்த மின்னஞ்சலில் தொழிற்சாலை மிகச் சிறியதாயுள்ளதாயும் கவர்ச்சியற்றதாக உள்ளது எனவும் எழுதியிருந்தார். மேலும் ``உங்களுக்கு நினைவிருக்கலாம் (பெயர் நீக்கப்பட்டது), அவர்கள் துரும்பைப் பற்றிக் கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர்`` எனவும் எழுதியிருந்தார்.

``இதில்தான் நாமிருவரும் கூடுதலாக, நிர்வாகத்தின் புனைவுரையாளர்களைவிட, ஏற்பதற்கு இதுவே உதாரணம். ...நாளைய Chip-wrappers க்காக இது என்று நம்புவோமாக`` என்று கடிதத்தை முடித்திருந்தார்.

``45 நிமிடத்திற்குள் ஈராக்கிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுவிடலாம் என்ற வாசகம் ஆவணத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டாம்`` என்று அவர் மேலும் கூறினார்.

``சில அரசியல் நோக்கங்களை வலுப்படுத்த, கோப்புத்தொகுப்பைச் சுற்றிச்சுற்றி சில சொற்றொடர்கள் சேர்க்கப்பட்டு வருகிறதோ என்ற உணர்வும் தோன்றியது`` என விசாரணைக் குழுவிடம் அவர் தெரிவித்தார்.

``செப்டம்பர் 19 அன்று இந்த ஆவணம் முடிவிற்கு வந்துவிட்டது, நாம் கொண்ட கவலைகள் இறுதிப்படிவமாக கோப்பில் பிரதிபலிக்கப்போவதில்லை என்ற உணர்வும் ஏற்பட்டது`` என்றார்.

இந்தக் கடைசி வெளியீடுகளைப் பற்றி, பிளேயர் செய்தி ஊடகத்தைத் தடுக்கும் வகையில் நடந்துகொண்டார். வழக்கமான மாதாந்திர செய்தியாளர் கூட்டத்தில் அதன் விசாரணை முடியும்வரை குழு தொடர்புடைய எந்தக் கேள்விக்கும் தான் பதில் கூறப்போவதில்லை என்றும் கூறிவிட்டார். ``நீதிபதி நியாயம் கூறட்டும்`` என்று அவர் சொல்லி விட்டார்.

நீதி விசாரணைக்குட்படுத்துவதற்குப் பதிலாக, ஈராக்கியப் போருக்கு தன்னுடைய தவறான காரணங்களை நியாயப்படுத்த, ஹட்டன் விசாரணைக்கு தொழிற்கட்சி அரசாங்கம் ஏற்பாடு செய்தது. பிபிசி உடன் குறுகிய பூசலிட காம்பெலால் எடுக்கப்பட்ட முயற்சி மீதும், கெல்லியின் சோக மரணம் பற்றியும் மட்டுமே ஹட்டன் விசாரணை நடத்துவார் என்றுதான் அது நம்பியது.

ஆனால் அன்றாட சாட்சியங்களும், நூற்றுக்கணக்கான உள் ஆவணங்களும் (எந்த ஒழுங்கிலும் அளிக்கப்படவில்லை), அவற்றைப் பற்றிய தெளிவற்ற குறியீடுகளும், அவ்விடத்தில் கூடும் மக்களுக்கு தூக்கம் கொடுக்கின்றனவேயொழிய, என்ன நடந்தது என்பதைத் தெளிவு செய்யவில்லை. இந்நடைமுறை செய்தி ஊடகத்தால் மேலும் குழப்பப்பட்டது; ஏனெனில் அவை அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆனால் அனைவருடைய முகத்திலும் அரசாங்கம் மண் தூவும் முயற்சி பெரும் அவதிக்குள்ளாயிற்று. இரண்டு முக்கிய எதிர்கட்சிகளும், பிளேயர் மிகுந்த தாக்குதலுக்கு தப்ப முடியாத நிலையிலுள்ளார், என்பதை உணர்ந்து போரைப் பற்றிய நீதி விசாரணை வேண்டும் என்ற தங்கள் முந்தைய கோரிக்கையை மீண்டும் வற்புறுத்தியுள்ளன. DIS ஆயுத வல்லுனர்களின் சாட்சியம் இந்தக் கோரிக்கைக்குக் கூடுதலான புதிய உந்துதலைக் கொடுத்தது.

இது பிரிட்டனிலும், சர்வதேச அளவிலும் ஈராக்கியப் போரை எதிர்த்து, தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதைத்தவிர வேறு எந்த அரசியல் முறையிலும் அரசாங்கத்தை எதிர்க்க முடியாத மில்லியன் கணக்கிலான தொழிலாள வர்க்கத்தினருக்கு வாய்ப்புக்களை கொடுத்துள்ளது.

அப்பொழுது ஆளும் செல்வந்த தட்டுக்களின் பல்வேறு பிரிவுகளும் (கன்னைகளும்) மற்றைய கட்சிகளும் மக்கள் எதிர்ப்புக்களுக்கு எதிராக அரசாங்கத்திற்கு ஆதரவாக, ஒரு பொது அணியை ஏற்படுத்திக்கொண்டன, அத்துடன் குறைகூறியோர் பலரும் சதாம் ஹுசேனின் ஆட்சி உலக அமைதியை அச்சுறுத்தும் என உளவுத்துறை கோப்புக்கள் கூறியதை நம்பி செயல்பட்டனர்.

இப்பொழுதோ ஈராக்கில் நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதையடுத்தும், பிரிட்டன், புஷ் நிர்வாகத்திற்கு கூடுதலான நெருக்கடி கொடுத்திருப்பதையடுத்தும் ஆளும் வட்டத்திற்குள்ளேயே பூசல்கள் மீண்டும் பெருகிவிட்டன.

பொதுவாக பிளேயரின் முயற்சிகளான வாஷிங்டனுடன் எப்படியும் இணங்கிச் செயல்படவேண்டும் என்பதை ஆதரித்தவர்கள்கூட, இதற்காக கூடுதல் விலை கொடுக்கப்பட்டுவிட்டதா என்ற வினாவை எழுப்பியுள்ள நிலை வந்திருக்கிறது. BBCயின் சிறப்பு "Newsright" ன் நிருபர் (ஹட்டன் விசாரணைக்காக), MoDல் உள்ள அவருடைய ஆதாரங்கள், ஜோன்சுடைய மற்றும் Mr.A யுடைய சாட்சியத்தைத் தவறாமல் கேட்குமாறு முதலிலேயே அவரிடம் கூறியிருந்தனர் என்றார். ஏனெனில் அவை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

(ஜோன்ஸ், Mr.A, கெல்லி ஆகிய மூவருமே போருக்குச் செல்லவேண்டும் என்ற முடிவை ஆதரித்திருந்தனர்; இது கெல்லி தன்னுடைய போர் கூடாது, அமைதி தான் வேண்டும் என்ற பஹாய் நம்பிக்கையின் அடிப்படையை கொண்டவர் என ஒழுக்க அடிப்படையின் உந்துதல் பெற்ற மனிதர் என போரில் ஈடுபட்டார் என்று சித்தரித்து காட்டப்பட்ட முறசிகளையும் மீறுகிறது. உண்மையில் அவர்கள் அரசாங்கம் மிக நம்பத்தக்கதற்ற ஆதாரத்தைக் கொண்டு போரில் ஈடுபட்டால் அது எதிர்பாராமல் திரும்பித் தாக்கும் என்பதாலும், போரின் உண்மையான எதிர்ப்பாளர்களுக்குத் தேவையான வெடிமருந்து கொடுக்கும் என்பதாலும், அரசாங்கத்தின் ஒரு பகுதியான உளவுத்துறையிலிருக்கும் தங்களுடைய பெருமைக்கும் இழுக்கு நேர்ந்துவிடும் என்ற கருத்தில் அவர்களுடைய அக்கறை இருந்தது.)

தொழிலாள வர்க்கத்தை நோக்கியுள்ள மையப் பிரச்சினை தன்னுடைய முறையில் இந்த நெருக்கடியில் தலையிட்டு, அதை இரு வலதுசாரி ஆளும் செல்வந்த தட்டினிரிடையே பூசலாகக் குறைத்து மதிப்பீடு செய்யாமல் இருப்பது ஆகும்.

அரசாங்கம் எவ்வாறு பிரிட்டனை ஒரு சட்டவிரோதப் போரில் இழுத்துத் தள்ளியது என்பது பற்றிய தனி விசாரணை இன்றியமையாதது ஆகும். நீதித்துறையின் எந்தப் பகுதியும் அரசாங்கத்தின் நலன்களைக் காப்பதுதான், மக்கள் நலத்தைக் காப்பதைவிட என்ற முறையில் செயல்படும்போது அத்தகைய பணி அதனிடம் ஒப்படைக்கப்படக்கூடாது.

பிரிட்டிஷ், அமெரிக்கப் படைகள், உடனடியாக ஈராக்கிலிருந்து திரும்பப்பெறவும், காலனிய முறையிலான ஆக்கிரமிப்புக்கு ஈராக்கில் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதற்கும் ஒரு பிரச்சார முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கிடையில் பெரிய கட்சிகள் இன்னமும் எத்தனை வீரர்கள் அனுப்பப்படவேண்டும் என விவாதித்துவருகின்றன.

இதை எதிர்க்க, தொழிலாளர்கள் தாங்களே தமது சொந்தக் கட்சியை அமைத்து தொழிற்கட்சிக்கு சவால் விடவேண்டும். ஒரு நேரம் தொழிலாளர்கள் அதற்கு கட்டுப்பட்டிருந்தது உண்மைதான். ஆனால் இப்பொழுதோ அக்கட்சி பெருவர்த்தகதிற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கலப்பற்ற பாதுகாவலனாக இயங்கிவருகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved