WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
First debate in California
recall election: Snapshot of a political system in crisis
கலிஃபோர்னியா திரும்ப அழைத்தல் தேர்தலில் முதல் விவாதம்: அரசியல் நெருக்கடி பற்றிய
ஒரு புகைப்படம்
By Barry Grey
6 September 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கிய, கலிஃபோர்னிய கவர்னரைத் திருப்பி அழைத்தல்
தேர்தலில் தொடர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பிரதான வேட்பாளர்கள் என்று கூறப்படுபவர்கள் எவரிடமும்,
அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலத்தை கவ்வியுள்ள சமுக பொருளாதார நெருக்கடிக்கு அக்கறையான தீர்வு கூறும்
தன்மை இல்லை என்பதை அடிக்கோடிட்டுக்காட்டியது. வால்நட் கிரீக் என்ற நகரத்தின் ஈஸ்ட் பே பகுதியிலுள்ள நடந்த
இந்நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் தொலைக்காட்சியில் இடம் பெற்றது. ஆனால் மாலை 4--6 என ஒதுக்கப்பட்ட
நேரம் பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் வீடு திரும்பும் அவசரப் போக்குவரத்து நெரிசலில் இருந்ததால், இந்நிகழ்ச்சியை
காணும் வாய்ப்பு இல்லாமற்போனது உறுதி செய்யப்பட்டது.
அக்டோபர் 7ம் தேதி வரவுள்ள தேர்தல் இரண்டு கேள்விகளை முன் வைக்கிறது: முதலில்
இப்பொழுது கவர்னராக உள்ள கிரே டேவிஸ் பதவியிலிருந்து அகற்றப்படவேண்டுமா என்பது. இரண்டாவதாக
பெரும்பாலான வாக்காளர்கள் அவர் விலக்கப்படவேண்டும் என்று கருதினால் பட்டியலில் உள்ள 135 வேட்பாளர்களில்
யார் அவருக்குப் பதிலாகப் பதவியில் அமர்த்தப்பட வேண்டும்?
புதனன்று நடந்த அரங்கு FOX-
உடன் இணைந்த KTVU News- பே பகுதியிலுள்ள பொதுத்
தொலைக்காட்சி நிறுவனம் KQED, Contra Coasta Times
ஆகிய இணைந்து நடத்தின, அதில் இரண்டு பகுதிகள் இருந்தன. முதலில் டேவிசுடன் 30 நிமிடப்
பேட்டியும், அதைத் தொடர்ந்து திரும்ப அழைக்கும் தேர்தலில் வேட்பாளராகப் பதிவுபெற்ற ஐந்து பேர்களுடைய 90
நிமிட விவாதமும் நடைபெற்றது. இவ்விவாதத்தில் பங்கு பெற்றவர்கள் துணை ஆளுநர், க்ரூஸ் பஸ்டமன்டே, வாக்கெடுப்பில்
முக்கியமான ஜனாநாயகக் கட்சியாளர்; குடியரசுக் கட்சியின் டொம் மக்களின்டக்
ஒரு மாநிலச் செனட் உறுப்பினரும் குடியரசு வலதுசாரி செய்தித் தொடர்பாளருமாவார்; பீட்டர்
உபிரோத் என்னும் மில்லியன் கணக்கில் சொத்துடைய வணிகர், 1984 அமெரிக்க ஒலிம்பிக்ஸ் குழுவில் இருந்தார்,
பசுமை கட்சியின் வேட்பாளரான பீடர் காமிஜோ; அரியன்னா ஹபிங்டன் ஒரு தாராளக்கொள்கை கட்டுரையாளர்,
சுயேட்சை வேட்பாளராக உள்ளவர்.
உடல்கட்டமைப்பாளராக இருந்து சினிமா நடிகரான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நிக்கர் கலிஃபோர்னியாவிலும்,
தேசிய அளவிலும், குடியரசுக் கட்சியின் நிர்வாகத்தால் ஆதரிக்கப்படுபவர், விவாதத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.
இவருடைய பிரச்சாரப் பொறுப்பினர்கள் இவர் செப்டம்பர் 24ல் நடக்கவுள்ள விவாதம் ஒன்றில்தான் பங்கு
கொள்வார் என அறிவித்து விட்டனர். அந்த அரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ள தொலைக்காட்சி நிறுவனக்குழு விவாதத்தில்
பங்கு பெறுவோருக்கு கேள்விகளை முதலிலேயே அனுப்புவதாகக் கூறியிருக்கிறது.
பெரும்பாலான வேட்பாளர்கள் விவாதத்திலிருந்து ஒதுக்கப்பட்டதை நியாயப்படுத்தலோ,
அல்லது அவர்கள் விவாதத்தில் பங்குபெற ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றோ மற்றும் தங்கள் கருத்துக்களை
மாநிலம் முழுவதும் தொலைக்காட்சி காண்பவரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்ற கருத்துரைப்போ, புதனன்று விவாதம்
நடத்த ஏற்பாடு செய்தவர்களால் அக்கறை காட்டப்படவில்லை. பங்கு பெற்றவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்
என்பது பற்றியும் அவர்கள் விளக்க முற்படவில்லை.
அவர்கள் கொண்ட அளவுகோலின் கூறுபாடுகள் ஒருதலைப்பட்சமானவை.
Field Research என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில்
4 சதவிகிதம் பெற்றவர்களாவது அல்லது கடந்த நவம்பர் கவர்னர் தேர்தலில் 4 சதவிகிதம் பங்கு பெற்றவர்களாகவாவது
இருந்தவர்கள் அழைக்கப்பட்டனர். இத்தகைய கருத்துக்கணிப்புக்களின் பொது நம்பிக்கைத் தன்மை ஒரு புறமிருக்க கடந்த
மாதம் எடுக்கப்பட்ட கணிப்பு அப்பொழுதுதான் பல வேட்பாளர்கள் களத்தில் பிரச்சாரத்திற்கு இறங்கிய நேரம்
ஆகும். இரண்டாவது அளவுகோல் கூறுபாட்டின்படி நவம்பர் மாதம் நடைபெற்ற கவர்னர் தேர்தலில் 5சதவிகிதம்
பசுமை கட்சியின் சார்பில் நின்று பெற்றதால் காமிஜோவிற்கு இடமளிக்க உதவியது.
KTVU News ன் டெனிஸ் ரிச்மாண்டுடனான
பேட்டியில் டேவிஸ் தன்னுடைய முதல் குற்றச்சாட்டான திருப்பியழைத்தல் முயற்சி கடந்த நவம்பர் மாதம் தேர்தல்
முடிந்த சில வாரங்களுக்குள்ளேயே இரண்டாம் பதவிக் காலம் வரை தான் கவர்னராக இருக்கக்கூடாது
என்பதற்காக சில வலதுசாரி குடியரசுக் செல்வந்தர்களால் மேற்கொள்ளப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
முன்னர் போலவே, இந்த அரசியலமைப்பு ஆட்சிக் கவிழ்ப்பு சதியை, கிளின்டன் பதவி நீக்க விசாரணை, ப்ளோரிடா
தேர்தல் மோசடியின் உச்ச கட்டமாகப் புஷ் வெள்ளை மாளிகையில் வலதுசாரி அமெரிக்கத் தலைமை நீதிமன்றத்தால்
இருத்தப்பட்டது உள்பட இதேபோன்ற ஜனநாயக விரோத, குடியரசுக் கட்சியின் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தினார்.
அரசியல் தூண்டுதல்கள் சதிகள் ஆகியவற்றில் ஒரு பாங்கு இருப்பதைச் சுட்டி காட்டிய டேவிஸ் உடனடியாக அவற்றின் முக்கியத்துவத்தை
மதிப்புக் குறைக்கும் வகையில் ஒக்லந்து ரைடர்ஸ் கால்பந்து குழுவின் தோல்வியை வெற்றியாக்கிய முயற்சியோடு
ஒப்பிட்டுப் பேசினார்.
சுகாதார நலச்செலவுக் குறைப்பு, கல்விச்செலவுக்குறைப்பு, உயர்ந்து கொண்டு
செல்லும் மின் கட்டணங்கள் ஆகியவற்றாலும் பின்னோக்கான வரிவிதிப்பு அதிகமாதல் கட்டண முறையில் மட்டும் நன்மை
பெறுதல் ஆகியவற்றால் தோன்றியுள்ள மக்களுடைய கோபத்தையும், ஏக்க உணர்வையும் எப்படி சமாளிப்பார் என்று
கேட்கப்பட்டதற்கு டேவிஸ் ''செய்தியைத்தான் அறிந்துவிட்டதாகவும்'' வெற்றி பெற்றால் தான் ''மக்களோடு
இணைந்திருப்பேன்'' என்றும் உறுதியளித்தார். அதே சமயம் இன்னமும் கூடுதலான சிக்கன நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்
என்றும் ''கலிஃபோர்னியா செலவு செய்வதில் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்'' என்றும் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து திருப்பியழைத்தல் தேர்தலில் ஐந்து அழைக்கப்பட்ட வேட்பாளர்களின்
விவாதம் பெரும்பாலும் வெற்று கோஷங்கள், பயனற்ற சொற்களால் பரிமாறிக்கொள்ளப்பட்ட தன்மை
மேம்போக்கான கண்ணோட்டங்கள் வரலாற்று அரசியல் பகுப்பாய்வு இல்லாத கருத்துக்கள், பரந்த அமெரிக்க
சமுதாய நிலையோடு ஒப்பிடாமல் கலிஃபோர்னிய நெருக்கடியைத் தனித்துப்பார்க்கும் முறை, உலகப்பொருளாதாரம்,
புஷ் நிர்வாகத்தின் இராணுவ வெறிக்கொள்கைகளைப் பற்றிய குறிப்பு இல்லாத தன்மை, இவற்றையெல்லாம்
கொண்டிருந்தது. 90 நிமிட கருத்தரங்கில் ஹபிங்டன், காமேஜோ உட்பட ஒரு வேட்பாளர் கூட ஈராக்கியப் போரைப்
பற்றிய குறிப்பு எதையும் பேசவில்லை. நூற்றுக்கணக்கான அமெரிக்க உயிர்களின் இழப்பு, கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான
ஈராக்கிய உயிர்கள் பறிப்பு, பில்லியன்களின் பதின்மடங்கு டாலர்கள் போரில் விரயம் ஆகியவையும், மத்திய கிழக்குப்
புதைகுழியும் கலிஃபோர்னிய நிதி நெருக்கடியோடும் ஏன் 37 மற்ற மாநிலங்கள் திவாலாகியுள்ளதற்கும் தொடர்பில்லை
என்பதுபோல விவாதித்ததில் அவற்றைப் பற்றியே பேசாமல் விடப்பட்டது.
இந்த அரசியல் குறும்பார்வை விவாதங்களை அமைத்த செய்தி ஊடகங்கள், ஊக்குவித்து
வளர்த்ததின் நிலையாகும். விவாதம் அமைக்கப்பட்ட முறையில் கேள்விக்கான பதில் 1 நிமிடத்தில் அதை எதிர்த்துப்பேச
30 வினாடிகள் மற்ற வேட்பாளருக்கு என, நாட்டிலேயே பெரிய மாநிலத்தில் முதல் முறையாக நடக்கும் கவர்னரைத்
திருப்பியழைத்தல் தேர்தலில் முக்கியமான சமுதாய அரசியல் நெருக்கடியைப் பற்றிய தீவிர விவாதம் தவிர்க்கப்படும்
வகையில் இருந்தது. எதிர்பாராததெனக் கூற முடியாத இத்தன்மையின் இறுதி விளைவு விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக
குழப்பத்தை அதிகரித்ததுதான்.
ஆயினும் கூட, அமெரிக்க அரசியல் முறையின் நெருக்கடியின் விளைவாக வெடித்துள்ள திருப்பியழைத்தல்
முறை மூலம் சில அரிய பார்வைகளும் கிடைத்தன. ஜனநாயக கட்சியின் பஸ்டமன்டே சுயேச்சை வேட்பாளர் ஹபிங்டன்,
பசுமைக் கட்சி காமேஜோ ஆகியோர் தொழிலாளரிடையே வளர்ந்து வரும் எதிர்ப்பு உணர்வை தெளிவாக அறிந்தும்,
அவ்வுணர்வு பெருநிறுவன செல்வந்தத்தட்டிற்கும் பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கும் எதிராக குவிந்துள்ளது என்பதையிட்டும்
நனவாக உள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அமெரிக்க அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்திக்
கொண்டிருக்கும் வலதுசாரி பொதுக்கருத்து உணர்விற்கு எதிரான தன்மையில் நெருக்கடியால் தீவிர நிலைக்குத் தனிமைப்பட்டுள்ள
சமுதாய அடுக்குகள் மீது தங்கள் வேண்டுகோளைச் செலுத்தினர்.
மறுபுறத்தில் குடியரசுக் கட்சியினரான மக்கிளின்டக் மற்றும் உபிரோத் வெட்கங்கெட்ட
முறையில் சொத்துக்கள் சலுகைகள் ஆகியவற்றை பாதுகாப்போராக அம்பலப்படுத்தப்பட்டு, இன்னும் கூடுதலான சமுக
தாக்குதல்கள் நடத்தப்படவேண்டும் என்ற அவர்களுடைய கருத்துக்கள், குறுகிய மற்றும் தனிமைப்பட்ட அரசியல் முகாமில்
அவர்களைத் தள்ளி அடையாளம் காட்டியுள்ளது.
மக்கிளின்டக்கிற்கு
Contra Costa Timesன் அரசியல் பிரிவு ஆசிரியர் டான்
போரென்ஸ்ரைன் கேட்ட முதல் கேள்வி, குடியரசுக் கட்சியின் கொள்கைகளுக்கு மக்களிடையே ஆதரவு இல்லாததை
உயர்த்திக்காட்டியதோடு, திருப்பியழைத்தல் தேர்தலின் ஜனநாயக விரோதத்தன்மையையும் குறிப்பாகத் தெரிவித்தது.
தன்னுடைய சட்டமன்ற வாழ்வில் வரிகளை ஆதரித்ததற்காக மக்கிளின்டக் தன்னுடைய கட்சி வேட்பாளரையே (பழைய
கவர்னர் பீட்ட வில்சனை) தாக்கியிருந்திருக்கிறார் என்றும் தாக்குதல் ஆயுதங்களை தடைசெய்தல் சட்டத்திற்கு எதிராக
வாக்களித்துள்ளார் என்பதையும், கடற்பகுதி எண்ணெய் தோண்டுதல் தடைக்கெதிராக வாக்களித்திருத்தல் பற்றியும்,
வேலைவாய்ப்புக்களில் AIDS
பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பு கொடுப்பதை எதிர்த்திருப்பதாகவும், கருக்கலைப்பு உரிமைகளுக்கு எதிராக
இருப்பதாகவும், சுட்டிக்காட்டினார். திருப்பியழைத்தல் தேர்தலின் விதிகளின்படி "தீவிர குடியரசுக் கட்சியாளர்",
''பெரும்பாலான கலிஃபோர்னிய மக்களைவிட பழமைவாதி'' ஒருவர், சிறிய எதிர்ப்பளவின் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட
கவர்னருக்குப் பதிலாக ஆட்சிக்கு வரலாமா என்றும் கேட்கப்பட்டார்.
தன்னுடைய பதிலில் வர்த்தகத்தின் மீதான வரிக்குறைப்பு, கட்டுப்பாட்டு தளர்த்தல்,
ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன் மேடையில் உள்ள வேட்பாளர்களில் தான் ஒருவர் தான்
Proposition 187க்கு ஆதரவு கொடுத்தவர் என்பதை
(The 1994 ballot initiative.
இப்பிரிவு பின்னர் நீதிமன்றங்களில் சட்ட விரோதம் என தள்ளுபடி செய்யப்பட்டது. இது ''சட்டத்திற்குப் புறம்பான''
அயல் நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் சமுதாய நன்மைகளான உணவுக் கூப்பன்கள், சுகாதார வசதிகள், கல்வி
ஆகியவற்றைப் பெறத்தடை செய்திருந்தது.) பெருமையாகக் கூறிக்கொண்டதுடன் கலிஃபோர்னியக் கடற்கரைப்பகுதி
வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கடற்கரையோரக் குழு அகற்றப்படவேண்டும் என அழைப்பு விடுத்ததுடன் கலிஃபோர்னியத்
தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகை பற்றிய சட்டங்கள் மிகுந்த தாராளமாக இருக்கிறது
என்றதுடன், அரசாங்கப் பணிகளைத் தனியார்மயமாக்கி ஒப்பந்த முறையை ஏற்றவேண்டும் என்றும் அரசாங்க ஊழியர்கள்
வேலைகள் பறிக்கப்படவேண்டும் எனவும், அரசின் ஏழைகளுக்கான மருத்துவ திட்ட ''மோசடி'' முடிவுக்குக் கொண்டுவரப்பட
வேண்டும் என்றும் அதாவது, அவை பெறுவதற்குக் கடும் நிபந்தனைகள் வேண்டும் என்றும் அதன் நன்மைக்கான செலவினங்கள்
குறைக்கப்படவேண்டும் என்றும் மக்கிளின்டக் கூறினார்.
தன்னுடைய பங்கிற்கு உபெரோத் கருக்கலைப்பு, ஓரினச் சேர்க்கை பிரச்சனைகளில்
சற்று நடுநிலையோடும், நிதிச்செலவினச் சிக்கனங்கள் சமுதாயத் திட்டங்களில் பணக் குறைப்பு, பெருவர்த்தக
நிறுவனங்கள் செல்வந்தர்கள் மீதான வரி குறைப்பு ஆகிய விடயங்களில் விடாப்பிடியாகவும் நின்றார். அரசாங்கச் செலவுகளைத்
தாக்கி அவர் ''பணம் இல்லை'' என்று கூறியதுடன் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம், வர்த்தக விரோதப்
போக்குதான் என்றும், அதனால் பல நிறுவனங்கள் மாநிலத்தை விட்டு நீங்குவதால் வேலைகளிழப்பு ஏற்படுவதாகவும்
கூறினார். மாநில வரவு செலவுத் திட்டத்தைச் சமன்செய்வதற்காக வரி விதிப்பு வேண்டும் என்று கூறப்பட்டதற்கு அவர்
புன்னகையை அடக்கிக்கொண்டும் ஏழனம் செய்யும் வகையில் தோள்களை அசைத்துக்கொண்டும், ''பணக்காரர்களின் மீது
வரி போடுவது என்பது..... நான் நினைத்ததை விடக் கூடுதலான பணத்தைத்தான் கலிஃபோர்னியாவில் சம்பாதித்துள்ளேன்''
என்று கூறினார்.
இரண்டு குடியரசுக் கட்சியினருமே, வெவ்வேறு முறைகளில், ஆளும் செல்வத் தட்டின் கலப்படமற்ற
வெறித்தனமான முயற்சியை, சமுதாயத்திற்கு எவ்வளவு தீங்கு ஏற்பட்டாலும் கவலையில்லாமல், எவ்வாறு தன்னுடைய
சொத்துசேர்ப்புக்காக தொழிலாள வர்க்கத்தை சுரண்டுதல் என்பதை தீவிரப்படுத்துவுமான முயற்சியைத்தான் வெளிப்படுத்தினர்.
துணை ஆளுனர் பஸ்டமன்டே, தன்னுடைய குடியரசுப் போட்டியாளர்களின் நாணயமற்ற
பேராசை பிற்போக்கு இவற்றிற்கு எதிர்ப்புக்காட்டும் வகையில் தன்னை உழைக்கும் மக்களின் சார்பில் குரல்தர வல்லவர்
என்றும் அவர்களின் நண்பர் என்றும் கூறிக்கொண்டார். நீண்டகாலமாக ஜனநாயகக் கட்சியில் வேலை செய்பவரும், டேவிஸ்
நிர்வாகத்தின் உறுப்பினருமான இவர் அரசியல் மாற்றத்தில் சற்றே ஆர்வம் கொண்டிருந்தார். சக்தி தொழில்துறைக்
கட்டுப்பாடு அகற்றலுக்கு தனது கடந்த கால ஆதரவு "தவறு" என கூறியதுடன், என்ரோன் மற்றும் ஏனைய ராட்சத
மின் உற்பத்தி நிறுவனங்கள் ''பயங்கரவாதிகள் போல் நடந்துகொண்டதை'' தாக்கியதோடு ''34-மில்லியன்
மக்களை'' 2000-2001 கலி்ஃபோர்னிய மின்சக்தி நெருக்கடியின்போது தங்கள் பிடிக்குள் வைத்திருந்ததையும்
தாக்கிப் பேசினார். மிக குறைந்த கூலி கொடுப்பதற்காக வால்-மார்ட்டைத் தாக்கியதோடு, தன்னுடைய எளிய பிறப்பு
தோற்றப் பின்னணியைப் பறைசாற்றிப் பெருமைபடுத்திக் கொண்டதுடன், புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களிடம்
தன்னுடைய ஒற்றுமை உணர்வையும் பீற்றிக்கொண்டார்.
அதே சமயம் தான் எப்படி நிர்வாக ஆதரவாளர் என்பதையும், மரணதண்டனைக்கும் வரி
எதிர்பு Proposition 13
க்கு ஆதரவு கொடுப்பதையும் தன் பங்கு நலன்புரி சேவைகளுக்கு மாறாக ''சீர்திருத்தத்திற்கு'' என்றும் தெரிவித்தார்.
விவாதத்தில் டேவிசை திருப்பியழைத்தல் தேர்தலில் அதிகாரபூர்வமாக "கூடாது'' எனச்
சொல்லும் ஒரே வேட்பாளரான பஸ்டமன்டே புதன்கிழமை அரங்கில் அந்தப் பிரச்சனை பற்றி குறிப்பிடத்தக்க வகையில்
மெளனம் சாதித்தார். தன்னுடைய கட்சிக் கவர்னரையே வலதுசாரி அணி கீழிறக்கும் முயற்சியைப் பற்றி அவர் எதுவும்
தெரிவிக்கவில்லை.
தங்கங்களுடைய பங்கிற்கு ஹஃபிங்டனும், காமேஜோவும், திருப்பியழைத்தலுக்கு ஆதரவு
கொடுத்தனர். நடப்பில் குடியரசு வலதுசாரி அணியோடு சேர்ந்து அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை
அடிப்படை ஜனநாயக நடைமுறை எனப் பெயரிட்டு மறைக்கத் துணை நிற்கிறார்கள். பழைய வலதுசாரி அணியிலிருந்து
தாராண்மைக் கொள்கை பகுப்பாய்வாளராகவும், கட்டுரையாளராகவும் மாறியுள்ள ஹஃபிங்டன் பங்குபற்றிய அனைவரிலும்
பெருமளவு ஆழ்ந்த சமுதாய அதிருப்தியைத் தெளிவுடன் கொண்டிருந்தார். இந்த அம்மையார் புஷ் நிர்வாகத்தைப்
பற்றிக் குறிப்பிட்ட ஒன்றே ஒன்று, கலிஃபோர்னியாவில் பணத்தில் "பொறுப்பற்றத்தன்மை'' என்று கூறிய மக்கிளின்டக்,
புஷ் நிர்வாகத்தின் மிகப்பெரிய பற்றாக்குறைகளைப் பற்றிப் பேசாததற்காக அவரைச் சாடினார். நிகழ்ச்சியின்
முடிவில் கலிஃபோர்னிய மக்கள் ஒரு ''புரட்சி'' யை விரும்புகிறார்களே ஒழியத் திருப்பியழைத்தலை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
சிலகாலம் தேர்தலில் கூட்டாளியாக இருந்த காமேஜோவைப் போலவே இவருடைய
பங்கு சமுகப் போராட்டம் எதிர்ப்பு இவற்றை புட்டியில் அடைத்து முதலாளித்துவ முறையை சவால் செய்யவிடாத
அரசியல் முறைக்குள் அந்த இயக்கத்தை முடக்கிவிட வேண்டும் என்பதேயாகும். எனவே இருவருடைய முயற்சிகளும் கலிஃபோர்னிய
நெருக்கடியைத் தனியான மற்றும் வட்டாரப்பிரச்சினை எனவும் சித்தரிப்பதாக மட்டுமே இருந்தது. உலகப்
பொருளாதார நெருக்கடியுடனான மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய ஏகாதிபத்திய வெடிப்புடனான அதனுடைய தொடர்பை
இருட்டடிப்பு செய்யவதாக இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக அடிப்படைப் பிரச்சனையை மறைக்கவும் அவர்கள்
முயல்கிறார்கள், இலாப முறையின் தோல்வி மற்றும் ஒரு தடையற்ற தனியார் செல்வக்குவிப்பை அடிப்படையாகக்
கொண்ட பொருளாதார முறையோடு தொழிலாளரின் தேவைகள் இயைந்து இருக்க முடியாத தன்மை ஆகியவை பற்றி
அவர்கள் பேசவில்லை.
குறிப்பாக காமேஜோ சிறிதும் நாணமின்றி ஜனநாயகக் கட்சியாளர் பஸ்டமான்டேயின்
திசையில் அரசியல் தலையை ஆட்டியதுடன், வரிக் கொள்கையில் வாக்கெடுப்பு தேவை என்று "தைரியமாகக்"
கூறியதற்காக அவரைப் பாராட்டினார், ஆனால் குடியரசு வலது சாரியிடமும் சாய்ந்து நின்றார். முன்பொரு காலத்தில்
சோசலிச தொழிலாளர் கட்சியின் (Socialist
Workers Party) ஜனாதிபதி வேட்பாளராக இருந்திருந்த இவர்,
பில்லியனர் முதலீட்டாளரும், ஷ்வார்ஸ்நீக்கரின் ஆலோசருமான வாரன் பபெட்டை,
Proposition 13
விமர்சித்ததற்காகப் புகழ்ந்தார். சில சமயங்களில் சமச்சீருடைய வரவு செலவுத்திட்டத்திற்காக ''நிதியப் பொறுப்புத்தன்மை"
வேண்டும் என அழைப்பு விடுத்தார் மற்றும் ஷ்வார்ஸ்நிக்கரினுடைய கோரிக்கையான கடந்த ஐந்து ஆண்டுகளில், அதாவது
டேவிசின் கவர்னர் பதவி வரையிலான காலப் பகுதியில் கலி்ஃபோர்னியாவின் கணக்குப் புத்தகங்கள் தணிக்கைக்கு
உட்படுத்த வேண்டும் என்பதை வழிமொழிந்தார். ''சட்டத்தின் ஆட்சி உடைந்து வருவதாகவும்" அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய சத்தங்கள் குடியரசு ஜனநாயகக்கட்சி அரங்கங்களில் இணைந்து ஒலித்ததோடு
சில இடதுசாரி ஒலியுடைய கருத்துக்களான செல்வந்தர் மீதான வரி உயர்த்துதல் மற்றும் (ஓரளவு)
மின்துறைக்கட்டுப்பாட்டுத் தளர்த்தலை நிறுத்துதல் போன்றவற்றின் எதிரொலியும் பிரதிபலித்தது. ஆனால் இந்தப் பிரச்சனையில்,
காமேஜோ இப்பயன்பாடுகளின் மீது பொது சொத்துடைமை இருக்கவேண்டும் என்ற நிலையைத் தொடாத அளவில்,
தனியார் உடமை பெருநிறுவனங்களின் அராஜக மற்றும் சமூகரீதியான அழிவுகர நடைமுறைகளுக்கு விடையாக, புதுப்பிக்கப்படக்கூடிய
மின்சக்தி ஆதாரங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
சுருங்கச்சொன்னால், ஷ்வார்ஸ்நிக்கர் இகழ்வுடன் பங்குபெற மறுத்த நிலையிலிருந்து,
பங்கேற்க வந்திருந்த குடியரசுக் கட்சியினரின் வெட்கமற்ற அரசியல் பிற்போக்கு, பஸ்டமன்டேயின் ஜனரஞ்சக
பாசாங்குப் போக்கு, தாராளவாதக் கொள்கை எனத் தம்பட்டம் அடித்துக்கொண்ட ஹபிங்கடன் காமேஜோ ஆகியோரின்
நிலைகள்வரை-- அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களும் முதலாளித்துவ முறை அப்படியே நிலைநிறுத்தப்பட வேண்டும் என
வலியுறுத்திக் கூறியதோடு, இவற்றிக்கெதிராக உண்மையான சோசலிச மாற்றீடின் இன்றியமையாமையும் உணர்த்தப்பட்டது.
அந்த மாற்றீடுதான்
சோசலிச சமத்துவ கட்சியாலும் திருப்பியழைத்தல் தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
வேட்பாளர் ஜோன் கிரிஸ்டோர் பேர்ட்டனாலும் முன் வைக்கப்பட்டது.
See Also :
கலிஃபோர்னியாவின் திருப்பியழைத்தல் தேர்தலில் சோசலிச சமத்துவ கட்சியின் அறிக்கை
கலிஃபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தலில் ``வேண்டாம்`` என்று
வாக்களியுங்கள், நெருக்கடிக்குச் சோசலிசத் தீர்வுகாண ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனுக்கு கவர்னர்
பதவிக்கான வாக்கை அளியுங்கள்
Top of page
|