WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: José Bové' s perspective is a blind alley
பிரான்ஸ்:
ஜோசே போவே
இன் முன்னோக்கு ஒரு முட்டுச் சந்து
By Marianne Arens and Francoise Thull
2 September 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
பிரான்சின் தெற்குப் பகுதியில் ஆகஸ்ட் 8 தொடக்கம் 10 வரை
"Altermondialists" என்று அழைக்கப்படும் பூகோளமயமாக்கத்தின்
எதிர்ப்பாளர்கள் நடத்திய ஆர்பாட்ட அணிவகுப்பில் 250,000க்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றினர். ``உலகம் ஒரு
விற்பனைப் பண்டம் அல்ல`` என்ற அணியின் கோஷம், செப்டம்பர் 10-14 தேதிகளில் மெக்சிகோ நாட்டின்
கான்குனில் நடக்கவுள்ள உலக வர்த்தக மையத்தின் (WTO)
உச்சி மாநாட்டை எதிர்க்கும் வகையிலிருந்தது.
Massif Central க்கு தெற்கே
சுண்ணாம்புத் தரை பீடபூமிப் பகுதியான Le Larzacல்
நடந்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பு, சமீப ஆண்டுகளிலேயே பெரிய அணிவகுப்புகளில் ஒன்றாகும். பங்குபெற்றோரின்
எண்ணிக்கை, அமைப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இரண்டாம் நாள் பிற்பகல், வெப்ப அலை, கோடை விடுமுறை
இருந்தபோதிலும், அணிக்குத் திரண்ட மக்கள் வெள்ளம் முடிவின்றி வளர்ந்ததால், அமைப்பாளர்கள் தண்ணீர்த் தட்டுப்பாடு
ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆர்ப்பாட்ட அணிவகுப்பு நடக்கும் பகுதிக்கு வரும் சாலைகளை
மூடிவிடத் தீர்மானித்தனர்.
இந்த நிகழ்ச்சி, பூகோளமயமாக்கலுக்கு எதிர்ப்பு இயக்கமான
Attac,
G10
Solidaires (10 தொழிற்சங்க அமைப்புகளின் தீவிரமான ஒரு
கூட்டமைப்பான SUD),
விவசாயிகள் கூட்டமைப்பு -இது துவக்கத்தில் Le
Larzac
ல் நிறுப்பட்டிருந்தது- ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF),
பசுமைக் கட்சி கூட்டமைப்புக்கள், புரட்சிக் கம்யூனிச கழகம் (LCR),
மனித உரிமை அணி, Greenpeace,
சர்வதேச மன்னிப்புசபை, அராஐகவாதிகள் கூட்டமைபப்பு (Anarchist
Federation) ஆசிரியர், கேளிக்கைக் குழுக்களில் செயல்
பிரிவினர், சில ஐரோப்பிய உழவர் கூட்டமைப்புக்கள், "Via
Compesina" என்ற சர்வதேச சிறு விவசாயிகள் இயக்கம் ஆகியவையும்
பங்குபெற்றிருந்தன. எல்லாமாக 150 கூட்டமைப்புகள் மற்றும் அமைப்புகள் இங்கு பங்குபற்றியிருந்தன.
பல மாதங்கள் தொடர்ந்திருந்த வேலை நிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் இவ்வணிக்கு
முன்பாக, பிரான்ஸ் நாட்டில் ஓய்வூதியத்தைக் காப்பாற்ற முயலும் வேலை நிறுத்தங்கள், கல்வி முறையைப் பற்றியவை,
கேளிக்கைத்துறையில் குறுகிய காலப் பணியினருக்குச் சிறப்பு வேலையின்மை பாதுகாப்பு திட்டத்திற்கான காலவரையறையற்ற
போராட்டம் எனப் பலவிதத்திலும் இருந்தன. கேளிக்கைத்துறை பணியாளர்கள் பார்வையாளர்களைத் தங்கள் செயல்கள்
மூலம் பரவசமடைய வைத்தனர். பலரும் சமீபகால வேலை நிறுத்தங்களில் பங்குபெற்றிருந்தவர்கள் ஆவர்.
வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புக் கூட்டங்கள் முடிந்தபின்னர், அவை தோல்வியடைந்தும்கூட,
இவ்வளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியமை, அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான
அரசியல் உறுதிப்பாடு சிதறாமல் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
அணிவகுப்புக்கு வந்துசேருவதற்காக, பல இளம் பங்காளர்கள் நூற்றுக்கணக்கான
கிலோமீட்டர்கள் தூரம் சைக்கிள்களிலும் கார்களிலும், பெரும்பாலும் இருக்கைகளை பங்கு போட்டுக்கொண்டு வந்திருந்தனர்.
கொளுத்தும் வெயிலில் பத்தாயிரக்கணக்கின் பத்து மடங்கினர், உரைகளைக் கேட்கப் பொறுமையாக இருந்தனர். ஈராக்கியப்
போர், ஓய்வூதியத்தின் மீது அரசாங்கத்தின் தாக்குதல், ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல், தேசியக்
கல்விமுறைப் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தோர் ஆகிய தலைப்புக்களில் ஆர்வம் நிறைந்த விவாதங்கள் அரங்குகளில்
நடைபெற்றன. பொதுமக்களின் பெரும்விழாவாகத் திகழ்ந்தது இவ் அணிவகுப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் மரபுவழியிலான
இடதுசாரிக் கட்சிகள் என்பவற்றின்மீது அவநம்பிக்கை வளர்துவரும் இன்றைய வேளையில் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்களின்
ஆழ்ந்த சிந்தனை, அக்கறை ஆகியவை
ஒரு புதிய அரசியல் முன்னோக்கின் தேவையினைக் குறித்துநிற்கின்ன.
DAL, வீடு கட்டும் உரிமை
கோருவோர் அமைப்பு, மற்ற அமைப்பக்களின் போர்க்குணம் கொண்ட உறுப்பினர்கள்,
PS சோசலிச
கட்சியின் போக்கைத் தகர்த்தனர். DAL
கூட்டமைப்பின் செயலாளரான
Jean-Claude Meunier,
இந்தச் செயலை நியாயப்படுத்திப் பேசும்பொழுது, "PSக்கு
இங்கு இடமில்லை, அது வலதுசாரிக் கொள்கைகளை நிறைவேற்றுகிறது. இன்றைய அரசாங்கம் செய்வதெல்லாம்,
Jospin
அரசாங்கச் செயல்களின் தொடர்ச்சியாகும்." என்று குறிப்பிட்டார்.
சமீபத்திய G8
உச்சிமாநாடு Evian
இல் நடைபெற்றபொழுது,
PS காரரை
Attac
உறுப்பினர்கள் ஆர்பாட்டத்திலிருந்து வெளியேற்றி விட்டிருந்தனர்.
PS தன்னுடைய நிலைப்பாட்டைச் சீரமைத்துக்கொள்வதற்கு,
விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உதவிக்கு வந்தனர்;
PSன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பிரான்சின்
Midi-Pyrénées
பிராந்திய நிர்வாகக் குழுவின் அதிபர் ஆர்பாட்டதில் பிரதிநிதியாக
இடம்பெற்றிருந்தார், இவர்கள் அணிக்குவகுப்புக்கு 500,000 யூரோக்கள் நன்கொடையளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், PS
உடைய நிலைப்பாடு, அதேபோன்று PCF,
கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைகள், CGT
தொழிற்சங்கங்கள் அனைத்தின் நிலைப்பாடுகளுமே PCFக்கு
நெருங்கியுள்ள நிலையில், அவை அதிகம் கவனத்திற்குட்படாமல், விவாதங்கள் நடத்தப் பொறுப்பேற்றவர்கள் இவ்வமைப்புக்களைச்
சற்று தூரத்திலேயே வைத்திருந்தனர்.
ஜோசே போவே-யின் அரசியல் முன்னோக்கு
ATTAC பிரதிநிதிகள்,
SUD தொழிற்சங்கங்கள்,
விவசாயிகள் அமைப்புப் பிரதிநிதிகள் என்று எல்லா பேச்சாளர்களுமே உண்மையான விவாதம் எழாமலும், கடந்த அண்மைய
மாதங்களின் அரசியல் கணிப்பீடுகள் பற்றி பேசாமல் தடை செய்யவும் முன்று கொண்டிருந்தனர். அவர்கள் ''போராட்டத்திற்கான
தேர்ந்த உத்திகள்'' என்ற பெயரில் நாசப்படுத்தப்படாத செயல்முறையை வற்புறுத்தியதோடு, அது அரசாங்கத்தின்
மீது அழுத்தம் கொடுக்கும் என்றும் அதையொட்டி உலகளாவிய முதலாளித்துவ முறையைக் கூடுதலான மனிதாபிமானதாக்கும்
என்றும் கருத்துத் தெரிவித்தனர். அனைத்து அரசியல் வேறுபாடுகளும் மறக்கப்பட்ட வேண்டும் என கோரியதுடன்,
''சுற்றுச்சூழல் நல, சமுதாய நலத்திட்டங்கள்,'' விவசாயிகள் கூட்டமைப்பு செல்லும் வழிவகையில் தேவையென்றும்
அவை அரசியல் கட்சிகளுக்கு மாற்றாகவும், சீரிய உதாரணமாகவும் அமையும் என்றும் ஆதரவு தேடினர்.
விவசாயிகள் கூட்டமைப்பின் (இது
FNSEA என்னும்
பெரும்பான்மையான விவசாயிகள் சங்கத்திலிருந்து பிரிந்தது) பேச்சாளரான ஜோசே போவே, முக்கியப்
பேச்சாளராகவும், அணியின் நட்சத்திரமாகவும் விளங்கியதில் அவருடைய உரை எல்லா இதழ்களிலும் பின்னர் வெளிவந்தது.
Liberation
என்னும் நாளிதழ் ``போவே, 'நம்பர்-1' எதிர்புவாதி`` எனத் தலையங்கம் தீட்டியது.
இவரது வெற்றி இவருடைய சக்தி வாய்ந்த கருத்துக்களினால் வந்தது என்பதைவிட, பழைய
கட்சிகளின் மீதது பெருகிவரும் அதிருப்தியினால் வந்தது என்றுதான் கூறலாம். சர்வதேச நிறுவனங்களை எதிர்த்து
நிற்கவேண்டும் என்று மக்களுக்கு அழைப்புவிடுத்த போவே செப்டம்பர் மாதத்தில் வெறும் "வெப்பத்திற்காக
மட்டுமல்லாமல், எரிக்கின்ற வெப்பத்திற்குத் தயார் செய்ய வேண்டும்" என்று கூறினார்.
``நாடு முழுவதும் சர்வதேச நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் முன் ஆர்பாட்டங்கள்
வேண்டும் என்றும்`` அவர் வற்புறுத்தினார். ``கான்குன் உச்சிமாநாட்டில் ஒரு விவாதத்தை அமைக்க தயாரா``
என்ற அறைகூவலையும் பிரதம மந்திரி ஜோன் பியர் ரஃபரனுக்கு,
(UMP)
அவர் விடுத்தார்.
முதலாளித்துவ முறையை ஒன்றும் போவே நிராகரித்துவிடவில்லை -Attac
அமைப்பின் நிலைப்பாடும் அதுவே- ஆனால் உலக வணிகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவது, சிறு விவசாயிகளின்
வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரினங்களுக்கு ஆதரவு தரும் சர்வதேச நிறுவனங்களைத்தான்
எதிர்க்கிறார்.
கருத்துக்கோட்பாட்டின் கண்ணோட்டத்தில், அவருடைய குப்பையுணவிற்கு எதிரான
(மாக்டொனால்டில் கிடைக்கும் "la malbuffe"
- தரமற்ற உணவு), பிரெஞ்சு உணவு வகைகளுக்கான பாதுகாப்பின் முயற்சியும் பிரச்சாரமும் பிரெஞ்சு மொழியின் தூய்மையைக்
காக்க அந்த அரசாங்கம் மேற்கொள்ளும் தேசியப் பிரச்சாரத்தோடு ஒப்பிடப்படலாம். அரசியல் அளவில்,
WTO விற்கான
அவருடைய எதிர்ப்பும் அமெரிக்க நிறுவனங்கள் மீதான மேலாதிக்கமும், உலகளாவிய வணிகப்போரில் அவற்றின் மீது
போட்டியுடன் செயல்பட்டு விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பிரெஞ்சு பெருநிறுவனங்களுக்கு ஆதரவளிக்கின்றன.
அடிப்படையில் இவர் ஒரு பிற்போக்குவாத, தேசியவாத முன்னோக்கையே கொண்டுள்ளார்.
போவேயும் லு லார்ஜாக்கும்
போவேயின் வாழ்வு Le Larzac
குடன் நெருங்கிய தொடர்பையுடையதாகும். இளஞராக போர்டேயில் தத்துவம் படிக்க இப்பகுதியைவிட்டு நீங்கியவர்,
பின்னர் சிறு விவசாயிகள் தங்கள் உடைமகள் பறிப்பிற்கெதிராகப் போராடும்பொழுது இராணுவப் பயிற்சி முகாம்கள்
விரிவை எதிர்க்கும்பொழுது அவர்களுக்கு உதவுவதற்குத் திரும்பி வந்தார். பறிக்கப்பட்ட பண்ணைகளை ஒன்றாக இணைந்து
மீட்டதுடன், மாவோயிஸ்ட்டுகள், கிறிஸ்துவக் குழுக்கள் செல்வாக்கின்படி, விவசாயிகள் செயலாற்றும் குழு ஒன்றையும்
தோற்றுவிப்பதில் விவசாயிகளோடு இணைந்து செயற்பட்டார். இந்தப் போராட்டம் 1973லிருந்து 1981 வரை நீடித்தது.
சோஷலிஸ்டுக் கட்சியின் பிரான்சுவா மித்திரோன் அதிகாரத்திற்கு வந்த அளவில் அவரின் இராணுவத் திட்டத்தைக் கைவிட்டு
பண்ணைகள் விவசாயிக்கு வழங்கப்படவேண்டும் என்னும் கோரிக்கைகளுக்கும் உடன்பட்டார். அப்பொழுதிலிருந்து போவே
தன்னுடைய பண்ணையை கவனித்துக் கொண்டும் செம்மறியாட்டு வளர்ப்பில் ஈடுபட்டும், அப்பகுதியின்
Roquefort பால்க்கட்டியை ஏற்றுமதி செய்வதிலும்
பங்குபற்றிவருகின்றார்.
ஜோசே போவேயும் விவசாயிகள் கூட்டமைப்பும் மூலையில் ஒதுங்கியிருந்த நிலை,
1990களில் பிரான்சுக்கும் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் இடையே எழுந்த வகைப்பூசலில் திடீரென்று முடிந்தது.
அந்த நேரம் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க இறக்குமதிப் பொருளை ஹார்மோன் செலுத்தப்பட்ட மாட்டிறைச்சியைப்
(Beef) புறக்கணித்திருந்தது. அமெரிக்க அரசாங்கம் இதற்குப்
பதிலடியாக பிரெஞ்சு ஆடைக்கட்டி, மது வகைகள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. 1999 நவம்பர் மாதம்
சியாட்டிலில் உலகளாவிய வணிகத்திற்கு எதிரான ஆர்பாட்டங்களில் போவே
Roquefort பால்க்கட்டியின் உயர்விற்குப் பாதுகாவலனாக
நின்று அதன் பிரெஞ்சு "மேன்மையை" அமெரிக்க "குப்பை உணவிற்கு" எதிராக பாதுகாத்தார்.
அதே ஆண்டு, Le Larzac
கீழே பீடபூமியில் உள்ள Millau என்னும்சிறு
நகரத்தில் கட்டப்பட்டிருந்தருந்த மக்டோனால்ட் (McDonald's)
உணவு விடுதி ஒன்றைத் தகர்க்கும் வேலையில் ஈடுபட்டார். இதற்காக ஜூன் 2002ல் நீதிமன்றம் அவருக்குத்
தண்டனை விதித்தது அதில் Le Larzac
கின் பெருநாட்களுக்கு திரும்புவதும் அமைந்திருந்தது; 60,000க்கும் மேற்பட்ட பிரச்சாரகர்கள்
போவேயுடன் ஐக்கியப்பாட்டை நிலைநாட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மரபணு மாற்ப்பட்ட பயிரினங்கள் தொடர்பாகக் குற்றஞ்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட
விவசாயத் தலைவருக்குப் பின்னர் 10 மாத சிறைத்தண்டனை கிடைத்தது. ஜூன் 2003ல் அவருடைய பண்ணையிலேயே
பெரும் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டு Montpellierக்கு
அருகிலுள்ள ஒரு சிறையில் தள்ளப்பட்டார். ஜூலை 14ம் தேதி ஜாக் சிராக் ஜனாதிபதி கருணை அடிப்படையில்
தண்டனையை இரண்டு மாதங்கள் குறைந்த அளவில், ஆகஸ்ட் 2ம் தேதியன்று சிறையில் இருந்து சில நிபந்தனைகள்ளின்
அடிப்படையில் திடீரென விடுவிக்கப்பட்டாலும் Le Larzac
நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள சரியான நேரமாக இருந்தது.
அரசியல் விளைவுகள்
தன்னுடைய பேச்சுக்களில் போவே, நேரடியாக ரஃபரனிடம் பேசுவதுபோல் கொள்ளும்
முறை, தற்செயலானதல்ல: Le Larzac விவசாயிகளின்
பொது நலன்களையிட்டு பலமுறை செல்வாக்குடைய அரசியல்வாதிகளுடன் விவாதங்களைக் செய்துள்ளார். 1981ல்
Pierre Mauroy (PS அமைச்சர், பிரான்சுவா மித்திரோரண்
அரசில்), பின்னர் லியோனல் ஜோஸ்பன் (PS
பிரதம மந்திரி), 1999ல் கோலிச கட்சியின் ஜாக் சிராக் ஆகியோருடன்.
அமெரிக்கப் பெருநிறுவனங்களுடைய ஆதிக்கத்திற்கு எதிராக போவே கொள்ளும் பிரச்சாரமும்
மற்றும் அவர் பிரான்சின் தேசிய அரசைப் பாதுகாப்பதும், வலதுசாரி அரசியல்வாதிகள் அவரை தமக்கு ஆதரவாக
பார்க்கும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது. 2000ல் RDF (Reassemblement
Pourla France) என்னும் வலதுசாரிக்கட்சித்
தலைவரும், பழைய உள்நாட்டு மந்திரியுமான சார்ல்ஸ் பஸ்க்குவாவுடன், பூகோளமயமாக்கம் மற்றும் தேசிய நாட்டின்
இறைமை பற்றி ஒரு பொது விவாதம் நடத்தினார். இறுதியில் போவேயுடைய போராட்டம் நெறியுடையது என்பதை
பாஸ்க்குவா ஒப்புக்கொண்டார்.
"Le Larzac 2003"ன்
திருவிழாவிற்குப்பின் பல அரசியல்வாதிகள் அதைச் செய்தி ஊடகங்களில் தாக்கினர். ரஃபரன் அரசாங்கச் செய்தித்
தொடர்பாளரான ஜீன் பிரான்சுவா ``முறையான இடதுசாரி மீண்டும் வந்துள்ளது`` என்று நிகழ்ச்சியைப் பற்றிப் பேசினார்;
இதனுடைய நோக்கம், ``எந்தச் சீர்திருத்தத்திற்கும் தடையாயிருந்தது, பிரெஞ்சுச் சமுதாயத்தை முடங்கவைக்கும்
விளைவுக்குட்படுத்துவதேயாகும்`` என்று அவர் கூறினார். PSன்
பழைய சுகாதார மந்திரி பெர்னார்ட் குஷ்நர் "ஆபத்தான பொஜடிய
(Poujadist lurches) பாணியில் மக்கள் இயக்கம்கட்டுவதற்கு" போவே தன்னைனையே தந்துள்ளார்
என்று குற்றஞ்சாட்டினார்.
ஆனால் பல அரசியல்வாதிகள், வலதுசாரிப் பகுதியிலிருந்தும்கூட, போவேயை ஆதரித்துள்ளனர்.
Francois Bayrou என்னும் வலதுசாரி
லிபரல் UDFன் வலதுசாரி தலைவர், ``ஒரு முக்கியமான
இயக்கம் தோன்றியுள்ளது`` எனத் தெரிவித்தார்.
பழைய கோலிச அமைச்சரும் (Gaullist
minister) மற்றும் RPRயின் (இன்று வலதுசாரி
அரசாங்கக்கட்சி) முன்னாள் தலைவருமான Philippe Séguin,
தன்னால் Bovéக்கு ஈடுகொடுக்க முடியும் என முன்வந்தார்.
``ஜோசே போவேயும் அவருடைய நண்பர்களும் பூகோளமயமாக்கல் முறையைப் பற்றிய சிந்தனைகளிலும் நடவடிக்கைகளிலும்
ஏகபோக உரிமை பெற்றுள்ளதுபோல் நடப்பது வருந்தத்தக்கதும், ஆபத்தானதும் ஆகும்`` என்றார் அவர். ``மக்கள்
அவருக்கு அந்த உரிமையை விட்டுத்தரத் தயாராகிவிட்டனர்`` என்றும் அவர் கூறினார். விவாதத்தில் பயன்படக்கூடியவர்
எல்லோரும் வராமல் போய்விட்டனர். ``பூகோளமயமாக்கல் என்பது ஒரு மத்தியப் பிரச்சினை; நம்முடன் நீண்ட காலமாக
இருந்துவருகிறது`` என்று Philippe Séguin,
உறதிப்படுத்தினார்.
பல செய்தித்தாள்களும் போவே வர இருக்கும் ஐரோப்பியத் தேர்தல்களில் நிற்கமாட்டார்
என்றே தெரிவித்துள்ளன; அதே நேரம் ஏப்ரல் 2004ல் விவசாயிகள் கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கமாட்டார்
எனவும் கூறுகின்றன. அப்படியானால், அவரை ஏதேனும் ஒரு இடதுசாரிக் கூட்டணிக்கு மக்கள் முன்னணித் தன்மையில்
பொது வேட்பாளராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
பல பகுதிகளிலும் PSலிருந்து
அரசியல்வாதிகள் ராஜிநாமா செய்துள்ளனர். Politics
வலைத் தளத்தில், இது Attacக்கு நெருக்கமான இணையதளமாகும்,
விவாதப் பகுதியில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு, மரபுவழியில் உள்ள கட்சிகளுக்கு மாற்றாக புதிய பொது ``அரசியல்
சக்தியை`` உருவாக்க முயற்சி வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
LCR (Lique
Communiste Revolutionnaire) என்னும் குட்டி முதலாளித்துவ
முறைத் தீவிரக்கட்சி, Le Larzac
விவசாயிகள் தலைவருக்கு பல ஆண்டுகள் இவரை ஆதரிக்கும் அமைப்பு இடதுசாரிச் சான்றுகளை வழங்கியுள்ளது. ஆகஸ்டு
5ம் தேதி வந்த செய்திக் குறிப்பின்படி, ``1973லிருந்து
Larzac போராட்டம் எவ்வாறு ஒரு சிறிய விவசாயக்குழு இராணுவத்தையும்,
ஆட்சியையும் திகைக்கவைக்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கி உள்ளது`` எனக் குறிப்பிடுகிறது.
LCR உடைய செய்தித் தொடர்பாளர்
Alain Krivine,
தன்னுடைய ஆகஸ்ட் 12ம் தேதி Le Larzac
போராட்டத்தைப் பற்றிய சொந்தப் பகுப்பாய்வில் போவேயின்
அரசியல் பார்வை பற்றிச் சிறிதும் குறைகூறவில்லை.
போவேயின் வருங்காலப்போக்கு எப்படிச் செல்லும் என்று உறுதியாகக் கூறமுடியாது.
ஏதேனும் நடு இடது அணியில் சேரலாம் அல்லது தன்னுடைய பெயரைப் பயன்படுத்திக்கொள்ள வலதுசாரியினருக்கு தனித்
தன்மையுடைய மக்கள் ஆதரவாளர் எனக் கூறிட அனுமதிக்கலாம்.
Le Larzac அணிவகுப்பில் பங்குபற்றிய
பலர் தீவிரமாக ஒரு புதிய அரசியல் நோக்குநிலை தேவை என்று விரும்பினாலும், அமைப்பாளர்களால் வெளியிடப்பட்ட
முன்னோக்கு மேல் செல்லாப் பாதையில்தான் நிறுத்துகின்றன. போவேயுடைய, ``பூகோளரீதியான முறையில் சிந்தியுங்கள்,
உள்ளூர் முறையில் நடந்துகொள்ளுங்கள்`` என்ற கருத்து ஓர் உண்மையான சர்வதேச அளவில் தொழிலாளர் வர்க்கத்தை
தேசிய எல்லைகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுத்து வேலைத்திட்டத்திற்கும் அதை ஒரு தனித்துவமான சக்தியாக உருவாக்குவதற்கும்
எதிரிடையானது ஆகும். தொழிலாளர்கள் அல்ல சிறு விவசாயிகளே
அவருடைய இயக்கத்திற்கு அடிப்படையாக உள்ளனர்.
"நாம் தடுப்போம்! வேறு உலகங்களும் சாத்தியமே`` என்பது 2003
Le Larzac இன்
கோஷமாக இருந்தது. இது ஒட்டைகள் நிறைந்த முறையில் சாதாரணமாக கூட்டி ஒன்றுபடுத்திக் கட்டிய தெளிவற்ற வகையில்
அமைக்கப்பட்ட முரண்பாடான அரசியல் முன்னோக்கு, இது சோசலிசத்துடன் எந்தவகையிலும் தொடர்பற்றதாகும். தடுப்பதற்கான
இந்த அழைப்பு எவருக்கும் அவரவர் விருபம் போல் எதையும் குறித்துநிற்கும், ஜான் எமிலி சாங்கேஸ், போவேயின் தேசிய
உழவர் அமைப்பின் காரியதரிசி, அணிவகுப்பில் விளக்கியதுபோல்:
"Roquefort
குழுக்களை அமைப்பது, நேரடி விற்பனைக் குழுக்களை அமைப்பது எல்லாம் தடுப்பதன் நேரடிச் செயல்கள். என்னுடைய
ஆடுக்குட்டிகளின் மதிப்பை நான் உயர்த்தியிராவிட்டால், பொருளாதார அளவில் நான் மடிந்திருப்பேன்."
Top of page
|