WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரித்தானியா
Britain: Campbell's resignation throws spotlight on Labour's loss of
credibility
பிரிட்டன்: காம்ப்பெல்லின் ராஜிநாமா தொழிற்கட்சியின் மீதான நம்பிக்கைத்தன்மை இழப்பை
குவித்துக்காட்டுகிறது
By Chris Marsden
4 September 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
டாக்டர் டேவிட் கெல்லியின் மரணம் பற்றி ஹட்டன் பிரபு விசாரணை உச்சகட்டத்தில்
இருக்கும்போது, ஆகஸ்ட் 29 அன்று, பிரதம மந்திரி டோனி பிளேயரின் செய்தித்தொடர்பு இயக்குநர் அலஸ்டேர்
காம்ப்பெல்லின் ராஜிநாமா, ஈராக்கியப் போரையொட்டி தொழிற்கட்சி அரசாங்கத்தின் நெருக்கடியை இன்னும் கூடுதலாக்கிய
தன்மையைக் கொடுத்துள்ளது.
கெல்லி, ஈராக் பற்றிய செப்டம்பர் 2002 உளவுத்துறைக் கோப்பை பாலியல் ரீதியாய்
குழப்பியது காம்ப்பெல்லுடைய இழிவுறும் முக்கியப் பொறுப்பினால்தான் என்று அடையாளம் காட்டியதை, காம்ப்பெல்,
இரு நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பில்லை என்று தனது ராஜிநாமாக் கடிதத்தில் அறிவித்துள்ளார். ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள்
கண்டுபிடிப்பதில் தோல்வியுற்ற அரசாங்கத்தின் முயற்சியை மக்களிடமிருந்து திசை திருப்புவதற்காக, காம்ப்பெல்தான்,
கெல்லியின் கருத்துக்களை பிபிசி வெளியிட்டதை மதிப்புக்குறைக்கும் வகையில் அரசாங்க முயற்சிகளுக்கு உந்துதல் கொடுத்ததும்
ஆகும்.
அரசாங்கம் எதிர்கொள்ளும் மோசமான நிலையைத்தான், ராஜிநாமாக் கடிதம்
கொடுக்கப்பட்ட நேரம் நிர்ணயித்துள்ளது. ஆகஸ்ட் 28 அன்று பிரதம மந்திரி பிளேயரின் விசாரணையின்போது அவர்
பல பொய்களைக் கூறக் கட்டாயப்படுத்தப்பட்டதுடன், செப்டம்பர் 2002 கோப்பு பற்றியும், கெல்லியின் பெயர் வெளியே
கொண்டுவரப்பட்டதில் தன்னுடைய பங்கைப் பற்றியும் முனைந்த தவிர்ப்புக்களைக் கையாண்டு கேள்விகளைத் திசைதிருப்பவும்
நேரிட்டது. பொதுமக்கள், செய்தி ஊடகம், பிளேயரின் சாட்சியத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைக்
கொண்ட அளவில், காம்ப்பெல் தான் பதவி விலகவேண்டிய நேரம் வந்துவிட்டது என முடிவு செய்திருக்கக்கூடும். ஓரளவு
தன்னை அரசாங்கத்திடமிருந்து ஒதுக்கிக்கொள்ளவும், ஓரளவு கவனத்தை பிளேயரிடமிருந்து திருப்புவதற்காகவும் அது
இருந்திருக்கலாம்.
ஆனால், காம்ப்பெல்லுடைய ராஜிநாமா அரசாங்கத்தின் கஷ்டங்களிலிருந்து கவனத்தைத்
திருப்புதல் என்னும் முயற்சியில் வெற்றியடையப்போவது இல்லை. ஹட்டன் விசாரணையில் இரண்டாம் முறை கேள்விகளுக்காக
விடையிறுக்க, செப்டம்பர் கோப்புத்தொகுப்பில் உளவுத்துறை தலைமை அதிகாரிகள் செய்யவேண்டிய மாறுதல்களை 15
என்று கேட்டிருந்தபொழுது, 11 மாறுதல்கள் என ஏன் குறைத்துக் கூறினார் என்பதை விளக்க, அவர் வரவேண்டியுள்ளது.
ஈராக்கைப் பற்றி பிளேயர் அரசாங்கம் கூறியுள்ள பொய்கள் பற்றிய பிரச்சினைகளைத்
தவிர, காம்ப்பெல்லின் ராஜிநாமா தொழிற் கட்சியின் அரசியல் உடலமைப்புத் தன்மை பற்றிய சில முக்கிய கூறுபாடுகளையும்
அம்பலப்படுத்தியுள்ளது; அது "திரிப்பதில்" அல்லது "கற்பனைக் கதைகளைப் புனைவதில்" ஈடுபட்டது, குறிப்பாக இதில்
தலைசிறந்த நிபுணராகக் காம்ப்பெல் செயலாற்றியது பற்றி ஆகும்.
பிளேயருடைய தொழிற் கட்சி உணர்வின் புற உருவாக காம்ப்பெல் திகழுகிறார் என்பது,
கார்டியன் இதழை,செப்டம்பர் 1ம் தேதி, தலையங்கத்தில் கீழ்க்கண்டவாறு குறை கூற வைத்தது: ``
வெள்ளியன்று அவர் ராஜிநாமா செய்த பின்னர் வந்த ...மலைபோன்ற செய்திக் குவிப்புக்களையும்,
காற்றலைகளையும் செய்தித்தாள்களையும் நிரப்பிய கடல்போன்ற ஊகக் குறிப்புக்களையும் கடந்து பாருங்கள். பல மணிக்கானவை;
பற்பல பக்கங்கள் கொண்டவை. அனைத்துமே வழிவகைகளைப் பற்றியோ, தனிநபர்களைப் பற்றியோதாம். உண்மையான
அரசியல் விவாதமோ, கொள்கையோ மிகச்சிறிய அளவுகூடக் கிடையாது. பெரும்பாலானவை நன்கு கேட்டுணரப்படவில்லை
. ஓர் அரசாங்கத்தின் செயல்கள் முழுவதும் அதன் செய்தித் தொடர்பு இயக்குனரின் முப்பட்டைக் கண்ணாடி மூலம் வெளிப்படையாகக்
காணப்படலாம்.``
அரசாங்கத்தின் விசுவாசமுள்ள நளிதழ்தான் கார்டியன். காம்ப்பெல்லின் முக்கியத்துவம்
மிகைப்படுத்தப்படுவதற்காக மட்டும் அதன் எரிச்சல் வெளிப்படவில்லை, அது எல்லார் மீதம் மட்டமான கருத்துக்களைக்
கொள்ள வைத்துவிட்டதே என்பதுதான் அதன் எரிச்சலுக்குக் காரணம். எனவேதான் ``ஓர் இருண்ட மேதை,`` மற்றும்
``தலைசிறந்த தந்திரசாலி`` என்றெல்லாம் கூறப்பட்ட ஒரு நபரின் வெளியேற்றம், ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது,
அதில் இனிப் புனைவுரைகளுக்கு இடமில்லை என்றும் "உண்மைதான்" உரைகல்லாக இருக்கும் என்றும் அரசாங்கத்தைப்
பிரகடனம் செய்ய வைக்கும் வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டது.
காம்ப்பெல் தொழிற் கட்சிக்குப் புது மெருகிட்டு அதனுடைய தோற்றத்தை, கவனமான
செய்தி ஊடக நிர்வாகத்தின் மூலம் சிறந்த முறையில் வெளிப்படச் செய்ததைத்தான், வனப்பு (நகாசு) முயற்சி என
வர்ணனையாளர்கள் கூறுகின்றனர்.
காம்ப்பெல்லின் உத்தியோக வாழ்வைப் பற்றிய ஆய்வுகள், பிளேயருடன் இணைந்து அவர்தான்
"புதிய தொழிற்கட்சி" என்ற சொற்றொடரைக் கொண்டு வந்ததாகவும், அதையொட்டிய அரசியல் கருத்துக்கள்
காலம் கடந்துவிட்ட ``வரிவிதித்துச் செலவு செய்`` என்ற செயல்பட்டியலை அடிப்படையாகக் கொண்ட பழைய பாணி
சீர்திருத்தக்கொள்கைகளிலிருந்து முறித்துக்கொண்டு, கட்சி புதிய பளபளப்பைப் பெற்றதற்கு அவர் துணை நின்றார் எனவும்
கூறுகின்றன. இவர்தான் ``மக்களின் இளவரசி`` என்ற அடைமொழியை டயனா ஸ்பென்சருக்கு அளித்தது என்றும் புதிதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிளேயரை டயனா இறப்போடு அரசாங்கம் பிணைத்துக்கொண்டு, மக்களிடையே புகழ்தோற்றத்தை
வளர்த்துக்கொள்ள உதவினார் என்றும் அவருடைய கட்சி மக்கள் கட்சியெனவும், அவர் மக்களுடைய பிரதம மந்திரி
என்றும் பிரகடனப்படுத்தும் முறையில் பிளேயரை ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது.
செய்தி ஊடகத்தோடு சாதகமான உறவுகளை வைத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம்
கொடுத்தால், தொழிற் கட்சியின் பழைய தலைவர் நீல் கின்னக் அதன் விரோதத்திற்கு 1980களில் உட்பட்டது
போன்ற நிலை, வராமலிருக்க முடியும் என்று காம்ப்பெல் உறுதி கொண்டிருந்தார். நம்பர் 10லிருந்தே, செய்திகளுக்கான
குறிப்பு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து, எதிர் கருத்துக்கள் ஓரங்கட்டப்படுமாறும் செய்தார். கொள்கைகளுக்கும்
மேலாக, அவர் முக்கிய சொற்றொடர்களை உருவாக்கினார். பிளேயருடைய உரைகள் இவரால் தயாரிக்கப்பட்டன.
அந்த நேரத்தில் வெளிப்படும் குறிப்புக்கள் கூட இவருடைய மேற்பார்வையில் முதலிலேயே தீர்மானிக்கப்பட்டவை.
லேபர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேஜர்கள் கொடுக்கப்பட்டது; அவர்களும் அவ்வெப்பொழுது உத்தியோகரீதியான
கருத்துக்களை எளிதில் கூறக்கூடிய வழிவகை செய்யப்பட்டது. கட்சியில் பிரச்சினைகள் எழுந்தபொழுது, காம்ப்பெல் அவற்றைத்
தீர்க்கவும், ஆயுதமேந்தவுமான பாத்திரத்தை நன்கு ஆற்றினார்.
ஆனால் புது தொழிற் கட்சியின் இந்த அரசியல் இயல்நிகழ்ச்சியை, செய்தி ஊடக நிர்வாகத்தால்
பண்பிடப்படும் ``புனைந்துரைப் பண்பாட்டிற்கு`` குறைத்துவிடல் மற்றும் இதனை ஒரே நபரின் விரும்பத்தகாத
செல்வாக்கினால் விளைந்தவை என ஏற்றுக்கொள்வதும் அபத்தமானதாக இருக்கும்.
முதலில், காம்ப்பெல்லை பிற்காலத்தில் ராஸ்புடின் என்றோ, கூடுதலான அரை மெய்யுணர்வு
சக்திகளைக் கொண்டிருந்தார் என்று சித்தரித்துக் காட்டும் முயற்சி, ஒரு முக்கியமான உண்மையை மறைத்துவிடுகிறது.
அவர் இந்த அளவு புத்திசாலியாகவோ, குணங்கள் ததும்பியவராகவோ இருந்தது இல்லை. சொல்லப்போனால், சரியான
நேரத்தில் சரியான இடத்தில் இருந்த பல சிக்கல்களுக்குட்பட்டிருந்த நபரான அவர், தேவையான அளவு முரட்டுத்தனத்தைக்
கையாளவும், கட்டாயமாகக் கறைபடிந்த செயலைச் செய்வதற்கான கொள்கையற்ற நிலைப்பாட்டையும் பெற்றிருந்தவர்
ஆவார்.
இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தற்கால மொழிகளைப் படிக்கச் சேர்ந்திருந்தவர்;
பின்னர் Forum இதழிற்கு ``ஆற்றங்கரை மைனர்``
(Riviera Gigolo) என்ற பெயரில் சற்றே காமச்சுவை மிகுந்த படைப்புக்களை எழுதியவர்.
1980களில் இப்பொழுது அவலத்திற்குட்பட்டுவிட்ட முதலாளியான ராபர்ட் மாக்ஸ்வெல்லின் கீழ்
Daily Mirrorல் பணியாற்றியவர்; அதில் இவர் அரசியல்
பிரிவுக்கு ஆசிரியராக இருந்து, பின்னர் எட்டி ஷாவுடைய, முடங்கிவிட்ட
Today செய்தித்தாளின் செய்தி ஆசிரியரானார்.
இவர் குடிகாரராகவும் இருந்தார்; தொழிற்கட்சி கட்சி மாநாட்டில் போதையினால்
புகழ்பெற்ற இவருக்கு இவர் சீர்திருந்தினால் கின்னக் தன்னுடைய எண்.10 அலவலகத்தில் செய்திப்பிரிவில் வேலை தருவதாக
வாக்களித்தார்.
1986ல் இவருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டது, அதன் பின்னர்தான் சீர்திருத்திக்கொள்ளத்
தலைப்பட்டார். கின்னக் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை; ஆனால் 1994ல் பிளேயரிடம் கொண்ட தொடர்பையொட்டி
காம்ப்பெல்லினால் அது முடிந்தது; 1997ல் ப்ளேர் தேர்ந்தெடுக்கப்பட இவர் பெரிதும் துணை நின்றார்.
பிளேயரின் அரசாங்கத்திலேயே வாத்த்திற்குரிய மிக முக்கியமான அரசியல் பிரபலமாக
விளங்கிய இவர், தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், பதிவுவாதியான ரோரி ப்ரெம்னரால் பிளேயரின் அரியணைக்குப்
பின்னேயுள்ள உண்மையான அதிகார பலம் இவர்தான் எனக் குறிப்பிடப்பட்டார்.
காம்ப்பெல்லிற்கு அத்தகைய அரசியல் முக்கியத்துவமும் அதிகாரமும் ஏன் கிடைத்தது? செய்தி
ஊடகத்தைத் திறமையுடன் கையாள ஒரு நபரைப் பிளேயர் தேர்ந்து எடுத்திருந்தால் மட்டும் போதும் எனக் கருதியிருந்தால்
இது நடந்திருக்காது. சமீப காலத்தில் செய்தி ஊடகத்தோடு மிகத் திறமையான பொதுத்தொடர்பு வேண்டும் என்று
கருதாத அரசாங்கம் இருந்ததாக வரலாறு இல்லை. ஆயினும்கூட காம்ப்பெல்லின் புகழுக்கோ, இன்னும் சரியாகச்
சொல்லவேண்டுமானால், இகழ்ச்சிக்கோ இணையானதைக் காண்பதற்கில்லை.
காம்ப்பெல்லைப் புரிந்துகொள்வதற்கு, செய்தி ஊடகத்தை அவர் எவ்வாறு கவர்ந்தார்
என்பதும் வாக்காளருக்கு என்ன உறுதிமொழி கூறினார் என்பதோடு வேறுபடுத்திப் பார்க்கவேண்டியதும், எண்ணிப்பார்க்கப்பட
வேண்டும்.
எத்தகைய "புனைவுரை"யும், தொழிற்கட்சி மீதும் பரிவுணர்வு காட்டுவதற்கும், கட்சி
வலதுசாரியாகத் திருத்தியமைக்கப்பட்டு, தடையற்ற சந்தையை ஆதரிக்கிறது, பெரிய வணிகக் கொள்கைகளை ஆதரிக்கிறது
என்று New International உடைய ரூபர்ட்
மாட்டோக் போன்றவர்களை நம்ப வைப்பதற்கும் போதாது.
ஆளும் வர்க்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவு, பிளேயருக்கு ஆதரவு கொடுக்க வலியுறுத்தப்பட்டதின்
காரணம், அவர் கட்சியின் சீர்திருத்தகொள்கையின் எந்தவித தயக்கமான தொடர்பையும் துண்டித்துக் கொண்டிருந்தார்
மற்றும் தொழிலாளர் வர்க்கத்தில் பழைய சமூக அடித்தளத்தில் அதற்கு அடிப்படையே கிடையாது என்பதும் ஆகும்.
இந்த முறிவு எவ்வளவு உறுதியானது என்பதை Fleet Street
பிரபுக்களுக்கு நம்ப வைப்பதில் காம்ப்பெல் கொள்ளும் முயற்சி சரியாக இருப்பதைப் பொறுத்துத்தான் அது
அமையும், ஆனால் காம்ப்பெல்லும் கூட மெல்லிய காற்றிலிருந்து புனைவுரையை படைத்துவிட முடியாது.
இங்கு செய்தி ஊடகத்தை ஏமாற்றுவது என்ற கேள்வி இல்லை; தொழிற் கட்சியிலேயே
அடிக்கடி எழும் எதிர்ப்புக்குரலை, ஓரங்கட்டவேண்டும் அல்லது அமைதிப்படுத்தவேண்டும் என்பதுதான் முக்கியம். இச்சூழலில்,
புனைவுரை, பெருஞ்செல்வந்தர்களுக்குச் சாதகமாக வரிவெட்டுக்கள், பொதுநலச் செலவினங்கள் மீது தாக்குதல்,
தொழில்துறையில் கெடுபிடிப்போக்கு, பழைய வர்க்கப் போராட்டம் காலம் கடந்துவிட்டது என அரசியல் முன்முயற்சியின்
பகிரங்க அறிவிப்புக்களாக ஆனது.
இதன் நோக்கம், அதிகாரத்தினர் எப்படி தொழிற் கட்சி அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப
நடந்துகொள்ளும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதாகும். செய்தி ஊடகம் என்ன செயற்பட்டியலைக்
கொள்ளவேண்டும் என்று கூறியதைவிட, தொழிற்கட்சிக்கு செய்தி ஊடகம் எதை விரும்புகிறது என்று கூறுவதே
காம்ப்பெல்லின் பணியாகப் போய்விட்டது.
அதேபோல், தொழிற்கட்சி தன்னுடைய கொள்கைகளை வாக்குப்போடும் மக்களுக்கு அளிப்பதிலும்
முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிப்பதே புனைவுரையின் செயல் ஆகும். முந்தைய தாட்சரிய மரபுவழிக்கு
மாற்றாகத்தான் புதிய நடைமுறைக்கொப்ப பரிவுணர்வுடன் கூடிய தன்மையை, பெரும்பான்மையோரின் நலன்களுக்கு
எதிரான வலதுசாரிக் ாெகள்கைகளையே ஏற்கக்கூடிய கற்பனையாக புனைவுரை செய்து அளித்தல் காம்ப்பெல்லும்
மற்றவர்களும் செய்யவேண்டிய பணி ஆயிற்று.
இவ்விடத்தில் ஆர்வெலிய இரட்டை மொழிதல் கருத்தைப்போல், புனைவுரை ஆயிற்று. புதிய
தொழிற் கட்சியின் அரசியல் அகராதியில் சமுதாய நலப்பணிகள் மீதான தாக்குதல் என்பது ``உரிமைகளும், பொறுப்புக்களும்``
காப்பாற்றப்பட மேற்கொள்ளப்பட்ட முயற்சியெனப் பொருளாயிற்று. இதை எதிர்த்தால், இத்தகைய டோரி முறையிலான
முயற்சிகளை எதிர்த்தால், உங்களுக்கு ``பழமைவாத சக்திகள்`` என்று பெயரிடப்பட்டுவிடும். காலனிய போர் வெற்றி,
``அறவழியிலான அயல்நாட்டுக் கொள்கை,`` ``உலக அமைதிக்காக`` என முத்திரையிடப்பட்டு அதற்கான இறுதி முயற்சிகளின்
வடிவம் என்றும் வழங்கப்பெறலாயிற்று.
எனவேதான் காம்ப்பெல்லின் புறப்பாடு புனைவுரை முடிவு என்பதற்கான அடையாளமாக
அதிகம் பேசப்பட்டுள்ளது. தொழிற் கட்சியால் பொதுமக்களுக்குத் தங்கள் கொள்கையை நேர்மையுடன் கொடுக்க
முடியாமல் போய்விட்டது, ஏனென்றால் அது மீண்டும் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படமாட்டாது.
காம்ப்பெல்லிற்குப் பதிலாக, நீண்ட நாள் தொழிற் கட்சியின் செய்தி அதிகாரியாகவும்,
பழைய கட்சித் துணைத்தலைவர் ராய் ஹாட்டர்ஸ்லீயுடன் வேலை செய்தவருமான டேவிட் ஹில், நியமிக்கப்பட்டுள்ளர்;
இவருடைய அதிகாரங்கள் காம்ப்பெல்லை விடக் குறைக்கப்பட்டு, இவர் ஆட்சிப்பணித்துறைக்குப் பதில் கூறவேண்டுமேயொழிய,
ஆட்சிப் பணித்துறை இவருக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லை என்றாகி உள்ளது.
கார்டியன் செய்தி ஊடகக் குழுவின் தலைமை நிர்வாகி பாப்பில்லிஸ் அரசாங்கத்தின்
செய்தித் தொடர்பு உத்தி பற்றிய அறிக்கையைப் பிளேயர் வரவேற்றுள்ளதாகவும், முழுச் செய்தித்தளத்தையும் மேற்பார்வையிட
ஒரு நிரந்தரச் செயலரின் கீழ் ``உண்மைத்துறை`` அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாயுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் ``புது விளக்குமாறு`` சொல்லாட்சி உடனடியாகவே உண்மையை வெளிப்படுத்திவிட்டது.
தன்னுடைய தொடர்பிற்காக ஹில்லிற்கு GM-ன்
ராட்சத உணவு நிறுவனமான மோன்சன்மோ போன்றவற்றின் வணிகத்திற்காக செய்தியைக் கவனிக்கும்
Chime Communications நிறுவனத்தில் 95,000
பங்குகள் வெகுமதியாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அத்தகைய நெருக்கமான பெருவணிக உறவுகள்,
நலன்களில் மோதல் நிலையைத் தோற்றுவிக்கக்கூடும்.
பழைய வடஅயர்லாந்துத்துறை அமைச்சரும், ஒருமுறை தொழிற்கட்சியின் செய்தித்தொடர்பு
இயக்குநராகவும், காம்ப்பெல்லிற்கு அடுத்தபடியாக விவாதத்திற்குரிய வகையில் பொதுமக்களை புனைவுரை மூலம்
கவர்வதில் வல்லவருமான, பீடர் மன்டேல்சன் தலைமையில்தான் காம்ப்பெல்லின் வெளியேற்றம் நடத்தப்பட்டது என்பது
வெளியாயிற்று.
இறுதியாக, காம்ப்பெல்லுக்கு, பிளேயருக்கு தேர்தல் உத்தி ஆலோசனையளிக்க அவருடைய
``சமையலறைக் காபினெட்டில்`` பெருமைக்குரிய இடம் வழங்கப்பட்டது என்பது தெளிவாகியது.
இறுக்கம் நிலைமையைக் காணும்போது, நிகழ்ச்சிகள் மாறினாலும்கூட, நிகழ்ச்சிகளின்
தன்மை அவ்வாறே இருப்பதைத்தான் உணருகிறோம். காம்ப்பெல், மண்டேல்சன், அதேபோன்ற மற்றவர்களின் முயற்சிகள்
செய்தி ஊடகம் கொள்கையை மக்களுக்கு நன்முறையில் கூறுதல் ஆகியவை, ஒரு புறம் இருந்தபோதிலும் கூட, புனைவுரை
இனிச் செல்லாது என்பது தெரிகிறது. அரசாங்கத்தின் பொய்கள் எத்தன்மை படைத்தவை என்பது காணக்கூடியதேயாம்;
பிளேயர் மற்றும் அவருடைய குழுவினர் அவர்கள் பதவி மாற்றிய டோரி அரசாங்கங்களைப் போலத்தான் ஊழல் மிகுந்தவர்கள்
என அறியப்படுகிறது. பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இத்தனை முழுமையாக இழக்கப்பட்ட பின்னர், செய்தி
ஊடக நிர்வகித்தலைத்தவிர பெரிய அளவில் ஏதாவது செய்தால்தான் அரசாங்கம் காப்பாற்றப்படமுடியும்.
Top of page
|