WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
California recall election
John Christopher Burton, socialist gubernatorial
candidate, discusses California crisis
கலிபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தல்
கலிபோர்னியா நெருக்கடியை, சோசலிச கவனர் வேட்பாளர், ஜோன் கிரிஸ்டோபர்
பேர்ட்டன் விவாதிக்கிறார்
By Andrea Cappannari
2 September 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
கலிபோர்னிய திருப்பியழைத்தல் தேர்தலில், தன்னுடைய பிரச்சாரத்தின் முதல் கட்டமாக,
சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) ஆதரவு பெற்ற
கவர்னர் பதவி வேட்பாளரான ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டன், வரும் வாரங்களில் மாநிலம் முழுவதும் கேபிள்
தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பவுள்ள தொடர்ச்சியாய் வர இருக்கும் நேர்காணல் நிகழ்ச்சியில் தன்னுடைய
கொள்கைகளை விவாதித்துள்ளார்.
ABC, FOX ஆகியவற்றின் லொஸ்
ஏஞ்சல்ஸ் இணை தொடர்பு செய்தி ஒளிபரப்புக்களில் குறுகிய நேரம் தோன்றிய அளவிலேயே, பல கேபிள்
தொலைக்காட்சி அமைப்புக்களால் தன்னுடைய பிரச்சாரத்தை விளக்குவதற்கு பேர்ட்டன் அழைக்கப்பட்டார். கலிபோர்னியா
வாக்காளர்களிடையே, ஜனநாயக, குடியரசுக் கட்சிகளுக்கு சோசலிச மாற்றாக பேர்ட்டனின் வேட்பாளர் நிலையைப்
பற்றி ஏற்பட்டுள்ள வளர்ந்து வரும் ஆர்வத்தை இந்தத் தொலைக் காட்சி தோன்றுதல்கள் பிரதிபலிக்கின்றன.
கடந்த நவம்பர் மாதம் மீண்டும் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக்
கட்சியின் க்ரே டேவிஸ்-ஐ திருப்பியழைத்தலுக்கு ``கூடாது`` என்று பேர்ட்டனும் சோசலிச சமத்துவக் கட்சியும் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கையின்படி (See:
"Vote
'No' on the California Recall, Vote John Christopher for Governor, for a
Socialist Solution to the Crisis"), ஜனநாயக
நடைமுறையை பெருநிறுவனங்களின் நலன்களின் பேரில் செயல்படும், குடியரசுக் கட்சியின் சமீபத்திய நடவடிக்கையே
திருப்பியழைத்தல் முயற்சியாகும். அதே நேரம் பேர்ட்டனும், சோசலிச சமத்துவக் கட்சியும் அரசியல் ஆதரவை டேவிசுக்கோ,
துணை கவர்னர் பஸ்டமன்டேவிற்கோ, ஜனநாயகக் கட்சியின் மற்ற பிரதிநிதிகளுக்கோ கொடுத்துவிடவில்லை.
ஆகஸ்ட் 22ம் தேதி, மற்ற இலாப நோக்கு இல்லாத அமைப்புக்களுக்கு
தொலைக்காட்சி நேரத்தைப் பெற்றுத்தரும் அமைப்பு ஸ்னாப்டூர்ஸ் நிறுவனம் என்னும் இலாப நோக்கு இல்லாத அமைப்பு
ஒன்றின், ஜிம் கோய்ஜர் பேர்ட்டனை பேட்டி கண்டார்.
http://www.snaptours.com/candidatesforgovernor.htm,
என்பதில் தொடர்பு கொள்ளக்கூடிய இவ்வலைதளத்தில், ஒரு 12 நிமிஷத் தோற்றத்தில்,
பேர்ட்டன் திருப்பியழைத்தலின் அரசியல் தன்மை பற்றியும், கலிபோர்னிய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க அவர்
கொண்டுள்ள சோசலிசத் திட்டம் பற்றியும் உரையாற்றினார்.
தன்னுடைய உரையைத் திருப்பியழைத்தலுக்கான எதிர்ப்பை தெரிவித்தும், அதன் அரசியல்
ஊற்றுமூலத்தையும் பற்றிக் கூறி பேர்ட்டன் அவரது குறிப்பைத் தொடக்கினார்.
``நாட்டின் நிர்வாகம் டேவிசால் தவறாக நடத்தப்படுதலைப் பற்றியதை சவால் செய்யும்
உந்துதல், இத் திருப்பியழைத்தல் முயற்சியில் இல்லை`` எனக் கூறிய பேர்ட்டன், ``கடந்த தேர்தலின் முடிவை
மாற்றவேண்டும் என்றும் தனியார் செல்வக்குவிப்புக்குத் தடைகள் அனைத்தையும் இன்னமும் விரைவாக அகற்றும் ஒரு புதிய
நிர்வாகத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்கு கையெழுத்து சேகரிக்க பணம் செலவழிக்கும் வலதுசாரிக் குடியரசுக்
கட்சியினரால் எடுக்கப்படும் ஒரு முயற்சியே (இது)`` எனத் தெரிவித்தார்.
கலிபோர்னியாவில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகள் ஒரு பரந்த இயல்நிகழ்ச்சியின்
அடையாளங்களாக இருந்தன என்றார் பேர்ட்டன். ``இது உண்மையில் சந்தைப் பொருளாதாரத்தின் நிலைமுறிவால் ஏற்பட்டுள்ள
தேசிய நெருக்கடியும் சர்வதேச சூழலும் ஆகும். 1930களில் முதலாளித்துவத்தின் பிரதான அங்கங்கள் மனித தேவைகளை
நிறைவு செய்ய முடியாத அளவில் உலகம் கண்ட அந்தக் காலகட்டத்தை ஒத்த காலகட்டத்தில்தான் நாடும் உலகமும் இப்பொழுது
உள்ளன என்று நான் கருதுகிறேன்`` என்றார்.
நமக்கு இப்பொழுது தேவையானது "தீவிரமான சமுக மறுசீரமைப்பு ஆகும்`` என்று அழுத்தமாக
பேர்ட்டன் தெரிவித்தார். தான் கவர்னரானால், ``கலிபோர்னிய மாநிலத்தின் வரிவிதிப்பு முறையை முற்றிலும் சீரமைப்பேன்"
என்றார். "பெருவர்த்தக நிறுவனங்கள், செல்வந்தர்கள் மீது கூடுதலான வரிவிதிப்புக்கள், மற்றும் பெரும்பாலான
உழைக்கும் மக்கள் மீதான வரிச்சுமை குறைப்பு, இரண்டையும் மேற்கொள்ளுவேன்" என்று அவர் தொடர்ந்தார்.
தன்னுடைய சோசலிச வேலைத் திட்டத்தை கோய்ஜரிடம் விரிவுபடுத்திக்கூறிய பேர்ட்டன்,
"என்னுடைய திட்டத்தின்படி பெரு நிறுவனங்களும், வங்கிகளும் பொதுப் பயன்பாடுகளாக மாற்றப்படும்; இதனால்
கல்விக்கும் சுகாதாரத்திற்கும் தேவையான ஆதாரங்கள் கிடைக்கும் என்பதோடு, பெருகிவரும் வேலையின்மைக்கு உண்மையான
திட்டங்கள், வறுமையை அகற்றுதல், வீடற்ற நிலையைப் போக்குதல், இளைஞருக்கும் குடும்பங்களுக்கும் ஒரு முழுமையான,
திருப்திகரமான வாழ்க்கைக்கு இன்றியமையாதவையான சிறந்த பொழுதுபோக்கு வாய்ப்புக்கள் மற்றும் பண்பாடு, கலை
ஆகியவற்றை வளர்த்தல் முதலியவையும் இவற்றின் மூலம் செயல்படுத்தப்பட முடியும்" என்றார்.
கலிபோர்னியாவை பல பத்துஆண்டுகளாக வாட்டிவரும் சமுதாயச் சரிவை விவாதிக்கையில்,
லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு குடியுரிமை வழக்குரைஞராக உள்ள பேர்ட்டன், இப்பொழுதுள்ள கல்விமுறையையும்
1970களில் இருந்த நிலையையும் ஒப்பிட்டுக்காட்டினார். ``நான் ஹேஸ்டிங்ஸ் சட்டப் பள்ளிக்கு (பாடசாலைக்கு) 25
ஆண்டுகள் முன் சென்றபொழுது, அநேகமாக என் படிப்புச்செலவு முழுவதும் அரசாங்கத்தால் ஏற்கப்பட்டிருந்தது. இப்பொழுது
மாணவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 14,000 - 15,000 டாலர்களுக்கும் கூடுதலாகச் செலவழிக்க வேண்டியுள்ளது;
இந்நிலை பலரை வழக்குரைஞராக வரவேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற முடியாமல் செய்துள்ளது`` என்றார்.
``முழுக்கல்விமுறையும் சீரமைக்கப்படவேண்டும், மழலையர் வகுப்புக்களில் தொடங்கி;
ஏராளமான பணம் கல்விமுறைக்கு கொடுக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் எந்தப் பின்னணியைச் சேர்ந்திருந்தாலும்,
எங்கு வளர்ந்து வந்தாலும், எங்கு பிறந்திருந்தாலும், புலம்பெயர்ந்தோராயினும், ...ஒற்றைத் தாய்மாரின் குழந்தைகள்
ஆயினும் அல்லது புலம்பெயர்ந்த பெற்றோரின் குழந்தைகள் ஆயினும், அல்லது ஏழ்மையில் வளர்ந்திருந்தாலும் எப்படியிருந்தபோதிலும்
தேர்ச்சிபெற்ற பள்ளியின் மூலம் சிறந்த கல்வி வாய்ப்புக்களைபெறும் உரிமை பெறவேண்டும்`` என தெரிவித்தார்.
திருப்பியழைத்தல் தேர்தல் அவிழ்த்துவிட்டுள்ள அரசியல் நடைமுறை பற்றிப் பேசுகையில்,
பேர்ட்டன், ``இந்த திருப்பியழைத்தல் முறையை நான் எதிர்த்தபோதிலும், தொடக்கத்தில் இதைக் கொண்டுவர ஆதரவு
கொடுத்தவர்களுக்கு கடும் ஏமாற்றமாக களம் திறந்து விடப்பட்டது, களத்தில் என்னைப் போன்றோரும் மற்றும் 134
வேட்பாளர்களும் வாக்குச்சீட்டு அந்தஸ்து பெற்றுவிட்டதாலும், வாக்காளர்களுக்கு இதுவரை கண்டிராத அளவு மாற்று
விருப்பங்கள் கொடுக்கப்பட்டதற்காகவும் அவர்களுக்கு எரிச்சல் தோன்றியிருக்கக்கூடும்.
``(செய்தி ஊடகம்) மக்களிடையே ஒரு குறுகிய விவாதத்தைத்தான் முன்வைக்கிறது;
என்னுடைய சோசலிசக் கருத்துக்களைவிடக் குறைந்த, ஆனால் வேறுவகையில் முன்னேற்றம் காண விழையும் கருத்துக்கள்,
எல்லாமே தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தத் தேர்தல் பலதரபட்ட கருத்துக்களும் வெளியேவர ஒரு வாய்ப்பினைக்
கொடுத்துள்ளது.``
ஸ்நாப்டூர்ஸ் (Snaptours)
பேர்ட்டனுடன் நடத்திய பேட்டி திருப்பியழைத்தல் தேர்தலில் குறைவாக அறியப்பட்டுள்ள வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்
30 நிமிஷ நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 20 வரை லொஸ் ஏஞ்சல்ஸ் வாழ் பார்வையாளர்
Tim Warner Communications Channel
34ல் ஒவ்வொரு சனியன்றும் காலை 10.30 க்கு இதைக் காணலாம். இதைத்தவிர அடெல்பியா தொலைக்காட்சி அலைவரிசை
25ல் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒவ்வொரு சனியன்றும், காலை 10.30 மணிக்கு செப்டம்பர் 13லிருந்து அக்டோபர்
4 வரை இதை ஒளிபரப்பும்.
மாநிலம் முழுவதுமுள்ள கேபிள் தொலைக்காட்சி அமைப்பான கலிபோர்னியா சானல்,
பேட்டிகளையும் மாறுதல்கள் செய்யப்படாத அரசியல் நிகழ்வுகளையும் ஒளிபரப்புகிறது; இது பேர்ட்டனுடன் ஆகஸ்ட் 25
அன்று ஒரு 30 நிமிட நேர்காணல் நிகழ்ச்சியைப் பதிவு செய்தது. இந்த நிறுவனத்தின் தலைவரான ஜோன் ஹான்காக்,
பேர்ட்டனுடன் நடத்திய உரையாடல் செப்டம்பர் 22, தொடங்கும் வாரத்தில் ஒளிபரப்பும்; சரியான தேதியும் நேரமும்
பின்னர் அறிவிக்கப்படும்.
கலிபோர்னியா சானலை உங்கள் பகுதியில் எந்த நிலையம் ஒளிபரப்புகிறது என்பதை
அறிய
http://www.calchannel.com/carriage.htm
ல் உள்ள பட்டியலைக் காணவும். மேலும் இந்த நேர்காணலை செப்டம்பர் 22ல் கலிபோர்னிய அரச செயலரின் வலைத்
தளமான
http://www.ss.ca.gov/ என்பதிலும் காணப்பெறலாம்.
பேர்ட்டனுடைய 60 வினாடி வானொலி அறிக்கை கலிபோர்னியா முழுவதும் 36
Infinity Broadcasting
நிலையங்களால் ஒளி/ஒலிபரப்பாகும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திலும் காணக் கிடைக்கும். ``கலிபோர்னிய
மாநிலம் முன்னேற்றமடைய கவர்னர் என்னும் முறையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?`` என்ற கேள்விக்குப் பேர்ட்டன்
தனது குறிப்புக்களில் விடையிறுத்தார்.
பேர்ட்டன் பிரச்சாரத்தின் முழு விவரமும், வரவுள்ள மற்றைய நிகழ்வுகளையும் அவருடைய
வலைதளமான
http://www.socialequality.com/
என்பதில் தொடர்பு கொண்டு அறியலாம்.
See Also :
கலிஃபோர்னியா
திருப்பியழைத்தல் தேர்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியனர் வலதுசாரிப் பொருளாதாரத் திட்டங்களை வெளிப்படுத்துகின்றனர்
கலிஃபோர்னியாவின் கவர்னர் டேவிஸ் "வலதுசாரி அதிகார பறிப்பை" கண்டிக்கிறார்
குடிமையுரிமை வழக்கறிஞரும் சோசலிஸ்டுமான ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன், கலிபோர்னியாவின் திருப்பி அழைத்தல்
தேர்தலில் வேட்பாளராகிறார்
சோசலிச சமத்துவக் கட்சி கலிஃபோர்னியாவில் ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனின் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்கிறது
Top of page
|