World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

The Hutton Inquiry: British spy chief's testimony exposes lies on Iraq war

ஹட்டன் விசாரணை : பிரிட்டிஷ் உளவுத்துறை தலைவரின் சாட்சியம் ஈராக்கியப் போரைப்பற்றிய பொய்களை அம்பலப்படுத்துகிறது

By Julie Hyland
28 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

பிரதம மந்திரி டோனி பிளேயர் ஈராக்கிற்கெதிரான போரில் பிரிட்டனை இட்டுச் சென்றதற்கான சதித் திட்டத்திற்கு மேலும் சான்று வெளிவந்துள்ளது.

ஆகஸ்ட் 26-ம் தேதி செவ்வாயன்று, முன்னணி விஞ்ஞானி டாக்டர். கெல்லியின் இறப்பு பற்றி, ஹட்டன் பிரபு தலைமையிலான நீதி விசாரணையில் ஜோன் ஸ்கார்லெட் சாட்சியம் அளித்தார். ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றி விவரிப்பதாகக் கூறப்பட்ட செப்டம்பர் 2002 பாதுகாப்பு அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்த கூட்டு உளவுத்துறைக்குழு (JIC) வின் தலைவர்தான் ஜோன் ஸ்கார்லெட் .

ஜோன் ஸ்கார்லெட்தான் MI6-ன் அடுத்த தலைவராக வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈராக்கின் மீது முன்கூட்டிய தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சியில், டோனி பிளேயரின் செய்தித்துறை இயக்குனர் அலாஸ்டர் காம்ப்பெல், செப்டம்பர் கோப்புத் தொகுப்பை ""பாலியல் வகையில் குழப்பி " இருந்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து அரசாங்கத்தைக் காப்பதில் ஸ்கார்லட்டின் சாட்சியம் மிகமுக்கியமாகக் கருதப்பட்டது.

உளவுத்துறைக்குள்ளே அத்தகைய கூற்றின் உண்மை பற்றி அவ நம்பிக்கை இருந்த போதிலும், ஈராக் பேரழிவு ஆயுதங்களை 45 நிமிடத்திற்குள் தயாரித்து விட முடியும் என்று ஆவணத்தில் புகுத்தியது காம்பெல்தான் என்று BBC நிருபர் ஆண்ரூ ஜில்லிகனிடம் டாக்டர் கெல்லி சொல்லியிருந்தார்.

ஒற்றை ஆதாரத்தை கொண்டிருந்த, 45 நிமிடக் கூற்று பற்றிய வலியுறுத்தல் உளவுத்துறைப் பணியினரிடையே பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியது என்று முந்திய சாட்சியம் நிரூபித்திருந்தது. ஆயினும் கூட, கோப்புத் தொகுப்புத் தயாரிப்பில் தான் ஒட்டுமொத்தப் பொறுப்பைக் கொண்டிருந்ததாக வலியுறுத்திப் பேசிய ஸ்கார்லட், 45 நிமிடக் கூற்று பற்றி அதிகாரிகளிடையே அவநம்பிக்கை இருந்ததாகத் தான் உணரவில்லை என்றும், காம்பெல் எந்த மாறுதல்களையும் செய்ததற்குப் பொறுப்பு இல்லை என்ற வழிமுறையில்தான் முனைப்புடன் நின்றார்.

ஆயினும், அவரது சாட்சியத்தின் பிற்பகுதியில், செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற, கோப்புத் தொகுப்பின் இறுதி வரைவு பற்றிய கூட்டம் ஒன்றில், உளவுத்துறை அதிகாரிகள் 6 பக்கங்கள் கொண்ட குறிப்பு ஒன்றில் தங்கள் கவலையைத் தெரிவித்துக் கொடுத்திருந்தனர் என்பதை ஸ்கார்லட் ஒப்புக்கொண்டார். இவை விளக்கம் கேட்ட வினாக்கள்தாம் என்று ஸ்கார்லட் கருத்துத் தெரிவித்தார். "அதை (45 நிமிடக் கூற்றை) ஒரு இறுதித்தீர்ப்பாக சேர்ப்பது சரியாகுமா என்பது பற்றிய வினாக்கள்தாம் அவை. நிர்வாகச் சுருக்க அறிக்கையில், ஒரு இறுதித் தீர்ப்பாக கூறப்படுவதற்குப் பதிலாக 'உளவுத்துறை கருத்தினைத் தெரிவித்துள்ளது' என அது கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் கருத்துரைத்தனர்" என அவர் கூறினார்.

ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றிய வலியுறுத்தல்கள் கடுமையாக இருக்கும் வகையில் கோப்புத் தொகுப்புக்களில் மாற்றங்கள் தேவை என்று கூறி அதிக மின்னஞ்சல்கள், காம்பெல், பிளேயருடைய மற்ற ஆலோசகர்கள் ஸ்கார்லெட்டிற்கு அனுப்பியது, விசாரணைக் குழுவிற்குக் காட்டப்பட்டது. இந்த மின் அஞ்சல்கள் கோப்பின் இறுதி வரைவை அளிப்பது பற்றி தமக்குக் கொடுக்கப்பட்ட உதவிதான் என்று ஸ்கார்லட் கூறினார். அவை "ஆலோசனைகள்" என்பதை விடக் "கருத்துக்கள்" என்ற வகையில் அமைந்திருந்தன என்று கூறிய ஸ்கார்லெட், பின்னர் அவற்றை "வேண்டுகோள்கள்" என எடுத்துக் கொள்ள முடியும் என்று ஒப்புக் கொண்டார்.

செப்டம்பர் 5, 9 தேதிகளில் கூட்டங்களுக்கு, முன்னோடியே இல்லாத வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட MP யாகக் கூட இல்லாத காம்பெல் தலைமை வகித்தார் என்று ஏற்கனவே விசாரணைத் தலைமை கேட்டிருந்தது. ஜூலையில் நடந்த அயலுறவுத் துறைக் குழு விசாரணை, போர் நோக்கத்திற்காக, உளவுத்துறைக் குறிப்புக்கள் திரித்துக் கூறப்பட்டன, என்ற பொது குற்றச்சாட்டுக்களிலிருந்து அரசாங்கத்தை விடுவித்திருந்தபோதிலும், இந்தப் பழக்கத்தை குறை கூறியிருந்தது. காம்பெல்லினால், "உற்ற நண்பர்" என்று விவரிக்கப்பட்ட ஸ்கார்லெட், காம்பெல் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கியது பற்றித் தமக்கு மகிழ்ச்சியே என்றார்; ஏனெனில் கூட்டம் எவ்வாறு அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என்பது பற்றி அக்கறை கொண்டிருந்ததேயொழிய உளவுத்துறைச் செய்திகள் பற்றி அல்ல என்றார்.

அரசாங்கம் "கிடைத்துள்ள தகவல்களின் வரையறைக்குள் எவ்வளவு கடினமான அளவில் அமைக்கப்பட முடியுமோ, அப்படிச் செய்தால் நலம் என்றும்", "சேர்க்கலாம், கூடாது என்பது பற்றி இறுதி முடிவெடுப்பதற்கு இதுதான் கடைசிச் செய்தி (!) உளவுத்துறை கொண்டுள்ள தகவல்கள் " என்றும் "நாளை 12.00 மணிக்குள் இதற்குப் பதில் எதிர்பார்க்கப்படுகிறது" எனவும் வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி 10 டெளனிங் தெரு, அனுப்பியிருந்த மின்னஞ்சல் ஸ்கார்லாட்டிற்குக் காட்டப்பட்டது.

"இந்த மின்னஞ்சல், கோப்புத் தொகுப்பிற்கு ஏதேனும் சாதகமாகத் தகவல்களை உளவுத்துறை தோண்டிக் கொண்டு வரலாம் என்ற அழுத்தத்தைப் புலப்படுத்தும் வகையில் ஒரு போக்கிற்கு சான்றாய் அமைகிறது அல்லவா?" என்ற ஜேம்ஸ் டிங்கிமேன்சின் கேள்விக்கு பதில் கூறிய, ஸ்கார்லட், அது கூடுதலான விவரத்திற்கு ஒரு வேண்டுகோளே அன்றி "முழுச் செயல்பாடு பற்றியும் பொறுப்புக் கொண்டிருந்தவர் காட்டும் அக்கறையின் தன்மையோடு முற்றிலும் இயைந்ததாகத்தான் இது உள்ளது" என்றார்.

காம்பெல்லிடமிருந்து வந்திருந்த மற்றொரு மின்னஞ்சல் பிரதம மந்திரி ஆய்வு நகலில் ஒரு அத்தியாயம் "அசலில் உள்ளதைவிடக் குறைவான தாக்கம்" கொண்டுள்ளதாகக் காண்கிறார் என்று தெரிவித்தது.

"சில சமீபத்திய பிரிவுகளை நான் திருத்தியுள்ளேன். ....தற்போதைய முடிவுகளைத் தெளிவாக அவை வெளிக்கொண்டு வந்துள்ளன" என்று மின்னஞ்சல் தெரிவிப்பதுடன், "நிர்வாக சுருக்க அறிக்கை உட்பட, தற்பொழுதைய அக்கறைகள், திட்டங்கள் பற்றிய மொழிச் சொல்லாட்சியை நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம்" என்றும் தொடர்ந்தது.

காம்பெல், பிளேயர் இருவருக்கும் அழுத்தத்தை குறைத்துவிட்டதாக தன் சாட்சியம் நல்ல முறையில் இருந்தது என்று ஸ்கார்லெட் கருதினால், அது மிகத் தவறான கருத்து ஆகும். 45 நிமிடக் கூற்று உண்மையிலேயே அரசாங்கத்தின் முன்பே முடிவு செய்யப்பட்ட போர்த் திட்டங்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது என்று நிரூபிக்கும், துணிச்சலான ஒப்புக்கொள்ளலை இவருடைய சாட்சியம் உத்திரவாதம் செய்தது.

உளவுத்துறையில் எதிர்கருத்துடையவர்கள் 45 நிமிடக் கூற்று ஒற்றை ஆதாரத்தை மட்டுமே கொண்டிருந்தது -அது ஓர் ஈராக்கியத் தளபதியாக இருக்கக் கூடும்- என்பது பற்றிக் கவலைப்பட்டிருந்தனர். ஆனால் ஸ்கார்லெட்டின் சாட்சியம், அதைவிட மட்டமான முறையில், அந்த ஆதாரம் ஒரு செவிவழிச் செய்திதான் என்பதை தெளிவாக்கியுள்ளது. அந்த உளவுச் செய்தி முதல் ஆதாரத்திலிருந்து பெறப்படவில்லை; இத் தகவலைப் பற்றி நன்கு தெரிந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்த ஒரு மூத்த ஈராக்கிய இராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி.....தெரிவிக்கப்படும் ஏற்கனவே பயனளித்திருந்த நம்பத்தகுந்த ஆதாரத்திலிருந்து பெறப்பட்டிருந்தது " என்று அவர் கூறினார்.

இந்த அரட்டைப் பேச்சு வெளிவந்த சில தினங்களிலேயே, ஆகஸ்டு 30ம் தேதி, ஈராக்கைப் பற்றிய உளவுத்துறைச் செய்தி என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கூறப்படும் வரைவில் இடம்பெற்றிருந்தது. செப்டம்பர் 19, இறுதி வரைவை அது பெறும் அளவில், 45 நிமிடக் கூற்று கோப்புத் தொகுப்பில் நான்கு முறை இடம் பெற்றது. நிர்வாகச் சுருக்க அறிக்கை "உளவுத் துறை ஆதாரத்தையொட்டி ஈராக்... இராணுவ அளவில் இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் திட்டத்தைக் கொண்டுள்ளது என்றும், அதை எதிர்க்கும் ஷியா மக்களிடம் கூட அது பயன்படுத்தப்படும் என்றும் மதிப்பீடு செய்கிறோம். இத்தகைய ஆயுதங்களில் சில அவற்றைப் பயன்படுத்துதற்கு ஆணை கிடைத்த 45 நிமிடங்களுக்குள் அணியப்படுத்தக் கூடியது" என்று தெரிவித்தது.

கோப்புத் தொகுப்பிற்குப் பிளேயரின் முன்னுரை இன்னும் கடுமையாக இருந்தது. இந்த ஆவணம் "(சதாம் ஹூசேனுடைய) இராணுவத் திட்டங்கள் சில பேரழிவு ஆயுதங்கள் 45 நிமிடத்திற்குள் தயார் படுத்தப்பட்டுவிடக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது" என்று பிரதம மந்திரி கூறினார்.

ஈராக்கிடம் அல்ஹூசைட் ஏவுகணைகள் இருப்பதாக ஆவணம் கூறுவதையடுத்து, அவை சைப்ரஸில் இருக்கும் பிரிட்டிஷ் தளங்களைத் தாக்கக்கூடும் என்ற உறுதிப்படுத்தல்கள் செய்யப்பட்டன.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், மக்களுடைய பொதுக்கருத்துக்களை மீறி, அமெரிக்கத் தலைமையிலான ஈராக்கின் மீதான போர் நடவடிக்கைகளில் அரசாங்கம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முக்கிய காரணமே, பிரிட்டிஷ் நலன்களை அழிக்க இப்பேரழிவு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்ற சாத்தியம் இருப்பதாகக் கருதப்பட்டதால்தான்.

செய்தித்தாள்களின் தலையங்கங்கள் 45 நிமிடத்திற்குள் ஈராக் தாக்கிவிடலாம் என்று அலறியபோது, அந்நாட்டின்மீது முன்கூட்டித் தாக்கும் போரைத் தொடக்கினால்தான் ஹூசேனின் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அபாயத்தைக் கடக்க முடியும் என பிளேயர் வற்புறுத்தினார். ஈராக் இரசாயன, உயிரியல் ஆயுதங்களைத் தாக்குதலுக்குப் பயன்படுத்த பிரிட்டன் வாய்ப்புக் கொடுக்கக் கூடாது என்றும் பிளேயர் வலியுறுத்தினார்.

ஆனால், விசாரணையில் 45 நிமிடக் கூற்று உயிரியல், இரசாயன ஆயுதங்களைப் பற்றியது அல்ல என்றும் சாதாரணப் போர்த் தளவாடங்களைப் பற்றித்தான் என்றும் ஸ்கார்லெட் கூறினார். உளவுக் குறிப்பு சிறிய தூரத் தாக்குதல் சக்தியுடைய "போர்க்கள மோட்டார் ஷெல்கள் அல்லது சிறு ஆயுதத் தேவைகளுக்கான கருவிகள்" போன்றவற்றைக் குறிக்கின்றனவேயொழிய பலர் அனுமானிக்கின்றவாறு நீண்டதூர ஏவுகணைகள் பற்றி அல்ல என்று அவர் கூறினார்.

ஸ்கார்லெட் ஏற்றதின் உட்குறிப்புக்கள் கூடுதலான விளைவுகளைக் கொண்டவை. இத்தகைய பேரழிவு ஆயுதங்கள் பற்றிய இலக்கணத்தில் பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டின் படைக்கலமும் அடங்கும் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை.

உலகம், எப்படி ஈராக்கின் 45 நிமிட சிறு ஆயுதத் தாக்குதலால் அழிவுறும் அச்சுறுத்தலுக்கு உட்படும், என்பதற்கு ஸ்கார்லெட்டால் விடை கொடுக்க இயலவில்லை; கொடுக்கவும் முடியாது.

பிரிட்டிஷ் மற்றும் ஈராக்கிய மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி, ஆளும் செல்வத்தட்டினர் கொண்டிருக்கும் படுமோசமான அவமதிப்பிற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. பொய்யுரைகளை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்க அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்படாத ஆலோசகர்கள், அடங்கிய குழு ஒன்று, மக்களுக்குப்பின் சதி செய்து நாட்டைப் போருக்குள் இழுத்து - ஒரு நாடு முழுவதும் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களுடைய நாடு அயலாரால் ஆக்கிரமிக்கப்பட்டது, இவை அனைத்தும் நியாயப்படுத்தப்பட்டது.

See Also:

ஹட்டன் விசாரணை: டாக்டர் கெல்லியும் வெளிவிவகாரகுழுவும் எவ்வாறு அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டனர்

பிரிட்டன்: அரசாங்கத்திற்கு எதிராக கண்டனத்திற்கு ஆளாக்கும் சாட்சியங்களை ஹட்டன் விசாரணை கேட்கின்றது

பிரிட்டன்: ஹட்டன் விசாரணையின் அடிப்படையிலமைந்த அரசியல் பிரச்சனைகள்

Top of page