World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
Republicans and Democrats unveil right-wing economic programs in California recallகலிஃபோர்னியா திருப்பியழைத்தல் தேர்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிJனர் வலதுசாரிப் பொருளாதாரத் திட்டங்களை வெளிப்படுத்துகின்றனர் By Anmdrea Cappannari and Joseph Kay கடந்த வாரம் முழுவதும், மாநிலத்தின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக கலிஃபோர்னியாவின் திருப்பியழைத்தல் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர்கள் தங்கள் திட்டங்களை எடுத்துக் கூறினர். இவையனைத்துமே, மாறுபட்ட அளவுகளில், உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரங்களின் மீதான தாக்குதல்கள் மூலம் கலிஃபோர்னியாவின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பதை முன் வைக்கின்றன. இந்த மாத முற்பகுதியில், கலிஃபோர்னிய சட்டமன்றம், மாநில வரவு செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் டாலர் பற்றாக்குறையை சமாளிக்க பின்னோக்கிய வரிவிதிப்புக்கள், சமுக நலத் திட்டங்களில் பெரும் வெட்டுக்கள், பரந்த அளவில் கடன் வாங்குதல் போன்றவற்றைக் கொண்டிருந்த முறையை ஏற்றது. அப்படியும் கூட வரவிருக்கும் நிதியாண்டில் 8 பில்லியன் டாலர்கள் குறைவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மாநிலக் கடனை சமாளிக்க கடன் பத்திரங்கள் விற்பனைக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டியதையொட்டி இத்தொகையும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு கட்சியில் முன்னணி வேட்பாளரான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெக்கர், தான் கவர்னராகத் தேர்ந்து எடுக்கப்பட்டால் வரிகளை உயர்த்தாமல் பட்ஜெட் பற்றாக்குறையைக் கடப்பேன் என்று ஆகஸ்ட் 20ல் அறிவித்தார். ``சாக்ரமென்டோவில் கூடுதலான செலவினங்கள் செய்யப்பட்டுள்ளன, கூடுதலான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன, நம் வணிகங்கள் கூடுதலான கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன`` என அவர் கூறினார். இயற்கை சீற்ற அழிவோ, பயங்கரவாதத்தினால் வரும் அழிவோ ஏற்பட்டால்தான் வரிகளை உயர்த்துதல் என்பது கருதத்தக்கது என்றும் அவர் கூறினார். ஷ்வார்ஸ்நெக்கருடைய பல பில்லியன் மதிப்புடைய பொருளாதார ஆலோசகர், வாரன் பபெட், மாநிலத்தின் சொத்து வரி அமைப்பில் இருந்த சில சமச்சீரற்ற நிலைபாடுகளை சுட்டிக்காட்டியதற்கு, குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவருமே அவரைத் தாக்கதலுக்குட்படுத்தியது போல முன்னர் ஷ்வார்ஸ்நெக்கர் தாக்குதலுக்கு ஆளானார். Wall Street Journalக்கு அளித்த பேட்டியில் பபெட், தன்னுடைய கலிஃபோர்னிய 4 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய இல்லத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 2,264 டாலர்கள் சொத்துவரி மட்டுமே செலுத்துவதாகவும், நெப்ரஸ்கா மாநிலத்திலுள்ள 500,000 டாலர்கள் மதிப்புடைய இல்லத்திற்கு 14,000 டாலர்கள் வரி செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வேறுபாட்டிற்குக் காரணம், கலிஃபோர்னியாவின் Proposition 13 என்ற, 1978ல் வாக்குப்பெட்டி முறை மூலம் இயற்றப்பட்ட சட்டம்தான் மூலமாகும். பல சிறிய இல்லங்களின் உரிமையாளர்களுக்கு வரிகள் இதனால் குறைவாக வைக்கப்பட்டபோதிலும், பெருநிறுவனங்களுக்கும் செல்வந்தர்களுக்கும் பெரும் வரிச்சலுகை இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பபெட்டினுடைய கருத்துக்களிலிருந்து, உடனடியாகத் தன்னை ஷ்வார்ஸ்நெக்கர் அக்கருத்துடன் தொடர்பறுத்துக் கொண்டு, Proposition 13 சட்டத்தை தான் முழுமையாக ஆதரிப்பதாக அறிக்கை விடுத்தார். ஷ்வார்ஸ்நெக்கர், சமீபத்திய பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட பின்னோக்கிய வாகன வரி உயர்வை ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளார். இந்நடவடிக்கையினால் அடுத்த ஆண்டு மட்டும் பற்றாக்குறை 12 பில்லியன் டாலர்கள் அளவு உயரும். கலிஃபோர்னிய அரசியலமைப்பில், அரசாங்கச் செலவு செய்ய ஒரு வரம்பு கொண்டுவரவும், மாநிலத்தின் நிதிநிலையை ஆராய வெளியிலிருந்து ஒரு தணிக்கை குழுவைக் கொண்டுவரவும் வர்த்தகத்திற்கான மின் வரியைக் குறைக்கவும் தான் முயலப்போவதாக ஷ்வார்ஸ்நெக்கர் உறுதியளித்துள்ளார். மாநிலத்தின் பெரிய வர்த்தக அமைப்புக்களுக்கு முக்கிய தலை வலியாக இருக்கும் தொழிலாளர் நஷ்ட ஈட்டிற்கான செலவினங்களில் அதிகரிப்பை நிறுத்துவது என்பது அவர் முன்னெடுத்துள்ள உறுதியான முன்மொழிவுகளுள் ஒன்றாகும். இவற்றால் ஏற்படும் பற்றாக்குறையைச் சமாளிக்க சமுக பணிச் செலவினங்களில் இன்னமும் குறைக்கப் போவதாக ஷ்வார்ஸ்நெக்கர் கூறியுள்ளார். ஆனால் கருவூலத்தின் பொதுநிதிச் செலவில் பாதிக்கும் மேல் உட்படும் பொதுக்கல்வி நிதிச்செலவைக் குறைக்கமாட்டேன் என்று அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். அவருடைய குறைப்புத் திட்டங்களை பற்றி விவரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபொழுது, ``மக்கள் புள்ளி விவரம் பற்றிக் கவலைப்படவில்லை`` என்ற இகழ்ச்சியான பதிலைக் கொடுத்தார். தன்னுடைய அப்பட்டமான, பிற்போக்குக் கொள்கையை திரையிட்டு மறைக்கும் வகையில், இந்தப் பழைய உடற் கட்டு பயிற்சியாளர் சினிமா முறையின் கடுமையான நபர் என்ற போர்வையில் நுழைந்தார்: ``மக்கள் கேட்க விரும்புவது இதுதான்: நீங்கள் மாற்றங்கள் செய்ய விருப்பமுடையவராக உள்ளீர்களா?`` என அவர் அண்மையில் கூறினார். "தலைமை வழங்குவதற்கும் அங்கு போவதற்கும் தேவையான அளவு கடுமையாக இருப்பீர்களா? இதுதான் முழுப்பிரச்சினையின் தன்மையாகும். நான் எந்த அளவு தேவையோ அந்த அளவு கடுமையாக இருப்பேன். தனித்தும் செயல்படுவேன். அங்கு மேலே சென்று அனைத்தையும் சுத்தப்படுத்துவேன்`` என்று ஷ்வார்ஸநெக்கர் கூறினார். தன் பொருளாதாரத் திட்டங்களுக்கு விளக்கமளிக்க விருப்பமில்லாததும், பின் வலுவான தலைமை தேவை என்ற வலதுசாரி அலங்காரச்சொல்லை வற்புறுத்தும் அளவும், அவருடைய திட்டங்களில் உழைக்கும் மக்களின் திரளுக்கு வேண்டுகோள் விடுக்கும் முன்மொழிவுகள் ஏதும் இல்லை என்ற அடையாளமே தெரிகிறது. பெரு நிதிய செல்வந்தத் தட்டின் நலன்களுக்கேற்ப உள்ள பொருளாதாரத் திட்டங்களைத்தான் அவர் மேற்கொள்வார் என்பதும், மில்லியன் கணக்கிலான சாதாரண கலிஃபோர்னியர்களுக்கு அவை விரும்பத்தக்கதாக இருக்காது என்பதும் ஆழ்ந்த அளவில் நிரூபணமாகும். தான் கவர்னரான பிறகு என்ன செய்வோம் என்பதைப் பற்றி எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ, அவ்வளவு தனக்கு நல்லதே என்பதை அவர் அறிந்திருக்கிறார். அதுவும் அப்படிப்பட்ட வரி இல்லை என்ற உறுதியைக் காக்க வேண்டுமென்றால், சில வெட்டுக்களைப் பற்றி குறிப்பாகக் கல்வித்துறை பற்றி அவர் முழுமையாக வெளியிட நிர்பந்திக்கப்பட்டால் அவருடைய மேம்போக்கான செல்வாக்கு விரைவாக பிசுபிசுத்துப்போகும். தன்னுடைய பொருளாதாரத் திட்டத்தை அறிவிக்கையில் ஷ்வார்ஸ்நெக்கர், 2002ல் கவர்னர் கிரே டேவிசுக்கு எதிராகப் போட்டியிட்ட பழமைவாத குடியரசுக் கட்சி வேட்பாளரான பில் சைமனுடைய வலதுசாரிப் பொருளாதாரத் திட்டத்தைத்தான் பெரும்பகுதி ஏற்றுக்கொண்டுள்ளார். சைமனுடைய கொள்கைகள், அடிப்படையில் புஷ் நிர்வாகத்தின் பொருளாதாரப் பார்வையைத்தான் கொண்டிருக்கின்றன. சனிக்கிழமை போட்டியிலிருந்து விலகிக்கொள்வதற்கு முன்பாக, சைமன் தான் குடியரசுக் கட்சியில் ஷ்வார்ஸ்நெக்கரின் பெரும் எதிர்ப்புப் போட்டியாளராக திருப்பியழைக்கும் தேர்தலில் விளங்கினார். சைமனுடைய பிரச்சார சரிவு, அவரும் ஷ்வார்ஸ்நெக்கரும் ஏற்றுள்ள பொருளாதாரத் திட்டங்களுக்கு அடிமட்ட மக்களின் ஆதரவு கிடையாது என்பதை வெளிக்காட்டியுள்ள மற்றொரு நிகழ்வாகும். நவம்பர் மாத கவர்னர் தேர்தலில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் பெற்றிருந்தபோதிலும், சைமனின் திருப்பியழைத்தல் தேர்தலில், கணிப்பின்படி அவருக்கு 5 சதவிகித வாக்குகள்தான் எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய அதிகபட்ச நிலையைத் தேர்வுக் கணிப்புக்களில் ஷ்வார்ஸநெக்கர் தக்கவைத்துக்கொண்டிருப்பது நிதானமான குடியரசுக் கட்சியினன் என்ற புகழ், வரிவிதிப்பு இல்லை என்ற அளவில் தொழிலாள வர்க்கம் வாழ்க்கைத்தரம் குறையும் என்ற உட்குறிப்பு வெளிப்படுத்தப்படும் என்பதால் பொருளாதாரக் கொள்கையைப் பற்றி அதிகம் பேசத் தயக்கம் காட்டுதல் ஆகிய இரண்டாலும்தான். சைமன் அரங்கிலிருந்து வெளியேறியவுடன், ஷ்வார்ஸ்நெக்கர் இரண்டு முக்கியக் குடியரசு வேட்பாளர்களான டொம் மக்கிளின்டக் (Tom McClintock) பீட்டர் உபிரோத் (Peter Ueberroth ஆகியோருடன்தான் மோதுகின்றார். ஒரு பழைய பேஸ் பந்து அமைப்பாளரும், லொஸ் ஏஞ்சல்ஸில் 1984ல் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தைய அமைப்பின் தலைவருமான பீட்டர் உபிரோத் அரசாங்கச் செலவு 5 சதவிகிதம் குறைக்கப்படவேண்டும் என்றும் மக்கட்தொகை, பணவீக்கம் இவற்றின் அடிப்படையில் உள்ள ஒரு கணக்கையொட்டிச் செலவுகளை வரையறை செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கிறார். அரசாங்க ஊழியர்களுடன் ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலனை செய்யவேண்டுமென்றும், பொதுத்துறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தடையும் வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உபிரோத் திட்டத்தின் அச்சாணி வரி மன்னிப்பாக உள்ளது. கலிஃபோர்னியாவில் அரசாங்கத்திற்குக் கொடுக்கவேண்டிய வரிகளில் மோசடி செய்பவருக்கு அரசாங்கம் பொதுமன்னிப்புக் கொடுக்கவேண்டும் என்று அவர் திட்டமிட்டுள்ளார். அவர்கள் தாமாகவே முன்வந்து இதைக் கொடுத்துவிட்டால் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என்று அவர் கூறியுள்ளார். குறைந்தது 6 பில்லியன் டாலர்கள் இந்த நடவடிக்கை மூலம் வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அனைத்துத் தரப்புமே நம்பிக்கையற்ற பார்வையில்தான் உப்பிரோத் திட்டத்தைக் காண்கின்றன. இது செயல்படுத்தவேண்டுமானால் கூட்டாட்சி அரசாங்கம் அதற்கு ஒப்புதல் கொடுக்கவேண்டும்; அவ்வாறு கிடைத்தாலும் அதிகபட்சம் 6 மில்லியன் டாலர்கள்தான், இதன் மூலம் அதாவது உபிரோத்தால் கணக்கிடப்பட்டுள்ள தொகையில் ஆயிரத்தில் ஒரு பகுதிதான் கிடைக்கும் என்று வல்லுனர்கள் நம்புகின்றனர். கலிஃபோர்னியச் செனட் மன்றத்தின் முக்கிய பழமைவாத உறுப்பினரான மக்கிளின்டோக்க் வரியில்லை என்ற உறுதியைத்தான் கொடுத்திருக்கிறார். ஷ்வார்ஸ்நெக்கரின் பொருளாதாரத் திட்டத்திலிருந்து இவருடைய திட்டம் அதிக மாறுதல்களைக் கொண்டிருக்கவில்லை. மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு ஜனநாயகக்கட்சியின் அதிக செலவழிப்பு முறையைக் குறை கூறுகிறார்; சமீபத்திய வாகன வரி உயர்வு ரத்து செய்யப்படவேண்டும், வணிகர்களுக்கு உள்ள தொழிலாளர் நஷ்ட ஈட்டுத்தொகைச் செலவினம் குறைக்கப்படவேண்டும் என்றும் இவர் கூறியுள்ளார். முக்கிய ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் சிக்கனத் திட்டம் ஜனநாயகக் கட்சி பகுதியில் துணை கவர்னரான க்ரஸ் பஸ்டமன்டே (Cruz Bustamante), ஆகஸ்ட் 18ம் தேதி ``கலிஃபோர்னியாவிற்கான கடினமான காதல்`` என்ற பெயரில் ஒரு பொருளாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். குறிப்பிடப்படாத வெட்டுக்கள் கூடுதலான 2 பில்லியன் டாலர்கள் அளவும், மது, புகையிலை மீதான பின்னோக்கிய விற்பனை வரிகளும், உயர் வருமானம் உடையோர் மீதான வரி உயர்வு 8 பில்லியன் டாலர்கள் அளவும், Proposition 13ஐ திருத்தும் அளவில் தற்பொழுதுள்ள வணிக சொத்துக்களின் தன்மையை தற்போதைய விலையில் மறுமதிப்பீடு செய்வதிலும், 20,000 டாலர்கள் குறைந்த விலையுடைய கார்களின் மீதான வரி விதிப்பை நிறுத்தும் வகையிலான மாற்றங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. சமுதாயப் பணிகளில், கல்வி, பொது சுகாதார நலன்களில், இப்பொழுதுள்ள நிர்வாகம் அரசு ஊழியர்களோடு கொண்டுள்ள ஒப்பந்தம் இவற்றில் குறைக்கப்பட்ட பில்லியன் டாலர் தொகைகளில் எதனையும் மீட்க பஸ்டமன்டே தயாராக இல்லை. ``இந்த ஆண்டு சட்டமன்றம் கொண்டு வந்த குறைப்புக்களை நான் வரவேற்கிறேன்`` என்றுதான் இவர் கூறியுள்ளார். மேலும் ``இன்னும் கூடுதலான குறைப்பிற்கு எனக்கு ஒத்துழைப்பு தருமாறு சட்ட மன்றத்திடம் கேட்பேன்`` என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய திட்டமிட்டுள்ள 2 பில்லியன் டாலர்கள் செலவினங்கள் குறைப்பு, K-12 பொதுக் கல்வியிலிருந்து ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்ட 2 பில்லியன் டாலர்களும், 500 மில்லியன் டாலர்கள் உயர் கல்வியிலிருந்து குறைப்பும், 350 மில்லியன் டாலர்கள் குழந்தை நலத்திட்டத்திலிருந்து குறைப்பையும், 1.1 பில்லியன் டாலர்கள் அரசு ஊழியர் சம்பள செலவினத்திலிருந்து குறைப்பையும், மற்ற பொதுப் பாதுகாப்பு, அடிப்படை உள்கட்டுமானம், வேலையின்மை, சுற்றுச்சூழல் திட்டங்கள் செலவுகள் ஆகியவற்றில் ஏற்கனவே இந்த ஆண்டு பட்ஜட்டில் குறைக்கப்பட்டதைவிட தனியாக மொத்தமாகக் குறைக்கப்படும். இவருடைய இத்திட்டங்கள் ஷ்வார்ஸ்நெக்கரின் திட்டங்களைவிடக் குறைந்த கடுமை உள்ளதாயினும், அவருடைய குடியரசுக் கட்சி வேட்பாளரான பஸ்டமன்டேயின் திட்டத்தைவிட, அடிப்படை மாறுதல் எதையும் கொண்டிருக்கவில்லை. 8 பில்லியன் டாலர்களாயினும் 2 பில்லியன் டாலர்கள் ஆயினும் சமுதாய நலச் செலவுகளில் இன்னும் கூடுதலான குறைப்பு ஆனது, எப்படியாயினும் தற்போதைய கலிஃபோர்னிய பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கம் ஏற்கச்செய்யும். ``தியாகத்தில் சமத்துவம்`` என்ற அடிப்படையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தனது சிக்கன நடவடிக்கையை உரக்கக் கூவினாலும் 8 பில்லியன் டாலர்கள் கூடுதலான வரிகள் செல்வந்தர் மீதும், பெருநிறுவனங்கள் மீதும் போடப்படுவது, ஏழை எளியவர் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதிக்கும் சமீபத்திய சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரம்மாண்டமான வெட்டுக்களுக்கு எவ்விதத்திலும் சமமாகாது. அதேபோல் 18 பில்லியன் டாலர்கள் கடன் வாங்கியதின் விளைவான மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பெரும் பற்றாக்குறை விளைவை இந்த ஆண்டு பட்ஜெட்டில் சரி செய்யப் பார்ப்பதும் ஏழை எளியவர்களுக்கு நன்மை தராது. பஸ்டமன்டே, தன்னுடைய வரி உயர்வுத் திட்டம் சட்டமன்ற எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியினால் உடனடியாக நிராகரிக்கப்படும் என்பதை நன்கு அறிவார். கலிஃபோர்னிய சட்டமன்றத்தில் சமீபத்திய பட்ஜெட் நெருக்கடி போல் ஜனநாயகக் கட்சியானது குடியரசுக் கட்சியோடு பொருளாதாரக் கொள்கைகளுக்காகச் சண்டையிடத் தயாராக இல்லை என்பதை விளக்கிக் காட்டுகிறது. சாக்ரமென்டோவில் சிறுபான்மை GOP தன்னுடைய தீவிர வலதுசாரிப் பொருளாதாரத் திட்டத்தால் இக்கோடை காலத்தில் இரண்டு மாதங்கள் அரசாங்கத்தையே செயலற்றுப்போகச் செய்தது; ஜனநாயகக் கட்சியின் பட்ஜெட் திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவிக்க மறுத்தது; அத்திட்டத்தில் பின்னோக்கிய விற்பனைவரி உயர்வுகளும், பில்லியன் கணக்கில் செலவுக் குறைப்புக்களும் இருந்தன. ஆகஸ்ட் முன் பகுதியில், பஸ்டமன்டே இரண்டாம் இடத்திலுள்ள, டேவிஸ் நிர்வாகம் குடியரசுக் கட்சியின் கருத்தை ஏற்றது. ஜனநாயகக் கட்சியின் அனைத்துத் தலைமையைப் போலவே, பஸ்டமன்டேயும் கலிஃபோர்னியாவில் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கையில் வலதுசாரி மாறுதலுக்கு கூடுதலான உட்குறிப்பைத் தெரிவித்துள்ளார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், இவருக்கு முன்பிருந்தவர் நிர்வாகத்திலிருந்து இவருடைய ஆட்சி எந்த அடிப்படை மாற்றத்தையும் கொண்டிருக்காது, சொல்லப்போனால் குடியரசுக் கட்சி சார்பில் சவால்விடுப்பவர்கள் நடைமுறைப்படுத்தவிருக்கின்ற ஆட்சியின் தன்மையிலிருந்தும் மாறுபட்டிருக்காது. |