World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

A letter from John Christopher Burton, socialist candidate in California, to "Tonight Show" host Jay Len

ஜே லென் இன் "இன்றிரவு காட்சி" நிகழ்ச்சி அழைப்பிற்கு கலிபோர்னியா சோசலிச வேட்பாளர் பேர்ட்டனிடமிருந்து ஒரு கடிதம்

23 August 2003

Back to screen version

ஜே லென் நடத்தும் இன்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்வையாளர் முன்தோன்றும் காட்சிக்கு அவரிடமிருந்து வந்த அழைப்புக்கு, சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவு பெற்ற, கலிபோர்னிய கவர்னர் மறு தேர்தலில் வேட்பாளரான ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் வழங்கிய பதிலை கீழே நாம் வெளியிடுகிறோம். ஆகஸ்டு 18-ந் தேதி பேர்ட்டனுக்கு அழைப்பு வந்தது. இந்த மறுதேர்தலில் கலந்து கொள்ளும் 135-வேட்பாளர்களுக்கும் அந்த அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. செப்டம்பர் 22 திங்களன்று அவர்களது வருகையை வேண்டிக் கேட்டுக்கொண்டதுடன், இந்த நிகழ்ச்சி "உரையாற்றும் அரங்கல்ல", நிகழ்ச்சி நடத்தும் "ஜே லென் உங்களை ஒரு குழுவாக அங்கீகரிப்பார்" என்று மட்டுமே அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்பிற்குரிய திரு லென்,

உங்களது தொலைக்காட்சி ''இன்றிரவு'' நிகழ்ச்சிக்கு ஒலிப்பதிவு செய்வதற்கு கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு வந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இதன் மூலம் நான் மறுக்கிறேன், ஏனென்றால் உங்களுடைய தனிப்பட்ட நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், நீங்கள் அந்த நிகழ்ச்சியை சித்தரித்துகாட்ட விரும்புகிற முறை என்னையும் மற்றும் கலிபோர்னியா மறுதேர்தலில் கலந்து கொள்ளவிரும்புகின்ற மற்றவர்களையும் சித்தரித்துக்காட்ட விரும்பும் விதம் தேர்தல்பால் கொண்டிருக்கும் அக்கறையற்ற நோக்கினையே தெளிவாகக் காட்டுகிறது. கலிபோர்னியாவில் தேர்தல் சட்டங்கள் மிகக் கடுமையானவை, எனவே டஜன் கணக்கில் சாதாரண வேட்பாளர்கள் போட்டியிட்டால் அந்த வேட்புமனுக்களை தள்ளுபடி செய்துவிடுவார்கள்.

உங்களது அழைப்பிதழ் இந்த திருப்பி அழைக்கும் தேர்தலில் போட்டியிடுகின்ற எல்லா வேட்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு பேசுகின்ற அரங்கை அல்லது மேடையை நீங்கள் உருவாக்கித்தரப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விட்டீர்கள். அதற்கு பதிலாக அவ்வளவு வேட்பாளர்களையும், நீங்கள் "ஒரு குழுவாக" த்தான் அங்கீகரிப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.

வேட்பாளர்கள் தங்களது கருத்துக்களை தெளிவாகவும், தீவிரமாகவும் எடுத்து வைக்கின்ற ஒரு அரங்கினை உருவாக்குகின்ற அழைப்பு அல்ல அது, அல்லது நியாயமான அரசியல் விவாதங்களை ஊக்குவிக்கின்ற நிகழ்ச்சியும் அல்ல. இந்த தேர்தலில் வழக்கத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இந்த தேர்தலை இன்னொரு "சர்க்கஸ் வித்தை" என்று ஊடகங்கள் சித்தரிப்பதற்கு மற்றொரு வாய்ப்பை நீங்கள் உருவாக்கித் தருகிறீர்கள். இதன் மூலம் பெரும்பாலான வேட்பாளர்களை ஒன்றில் விளம்பர நோக்கில் உள்ளவர்கள் அல்லது மனக்குழப்பத்தோடு உள்ளவர்கள் என்று கருத்துரைக்கும் நிலை உருவாகும்.

நாட்டின் அரசியல் வாழ்வில் பங்குபெற விரும்பும் சாதாரண மனிதர்களை ஏதோ வேடிக்கை விநோதமாக சித்தரிக்க விரும்பும் நீங்கள், அர்னால்ட் சுவார்ஸ்நீக்கரை வேறுபட்ட கண்ணோட்டத்தோடு அணுகியிருப்பது உங்களது அழைப்பிலிருந்து தெளிவாக தெரிகிறது. உயர்ந்த பொது பதவியை வகிப்பதற்கு எந்தவிதமான தகுதியும் இல்லாத அந்த மனிதனை, அழைத்து உங்களது மேடையில் அவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளீர்கள்.

அவர், ஒரு உடல்கட்டமைப்பாளராக (Body builder) இருந்து திரைப்பட நடிகராக ஆனவர் மற்றும் ரியல் எஸ்டேட் ஊகவணிகர், திரும்ப அழைப்பு தேர்தலில் அவரது முக்கிய பங்கு, நடப்பு கவர்னர் கிரே டேவிசை பதவியிலிருந்து இறக்க வலது சாரிகள் முயன்று வருவதற்கு சிறப்பு அந்தஸ்தையும், பிரகாசத்தையும், தருவதாக அமைந்திருக்கிறது. அவரது புகழ், திரைப்படங்கள் மூலம் கிடைத்தது. பொதுவாக அவர் வன்முறைகளையும் பிற்போக்குத்தனத்தையும் புகழ்கின்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவரிடம் பட்ஜெட் நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கான எந்த அரசியல் செயல்திட்டமும் இல்லை, அவர் லட்சக்கணக்கான சாதாரண கலிபோர்னிய மக்களது சமுதாய மற்றும் பொருளாதார கவலைகளைப் புரிந்து கொள்வதில் எந்த ஆர்வமும் செலுத்தவில்லை. மொத்தத்தில் அரசியல் நடைமுறைகளில் எந்தவிதமான அறிவும் இல்லாதவர்.

அவரோடு ஒப்பிடும்போது நான் வழக்கறிஞர் என்ற முறையிலான பின்புலம் குறிப்பிடத்தக்க தகுதி வாய்ந்த வேட்பாளராக என்னை ஆக்குகிறது. 25-ஆண்டுகளாக நான் சிவில் உரிமைகளை நிலைநாட்டும் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறேன். கலிபோர்னியா மக்களது பிரச்சனைகளையும், அவர்களது தேவைகளையும், நான் நன்றாக அறிவேன். எனக்கு அரசியல் மற்றும் சட்ட நடைமுறைகள் நன்றாகவே தெரியும். கலிபோர்னியாவில் பல்வேறு சிக்கலான வழக்குகளில் போலீஸ் கொடுங்கோன்மைக்குக்கும் இன பாரபட்சத்திற்கும் எதிராக நான் போராடி இருக்கின்றேன். என்னைப்போன்ற அனுபவம் உள்ள மற்ற வேட்பாளர்களும் இருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு சுவாட்ஸ்நீகருக்கு மேடை அமைத்து அவருக்கு பேசுவதற்கு வாய்ப்பளித்துவிட்டு மற்றவர்களை வெறும் பார்வையாளர்களாக தள்ளிவிடும் முடிவானது ஒப்பீட்டளவில் வேட்பாளர்களின் அரசியல் தகுதிகளை மதிப்பிடுவதற்கு ஒன்றும் செய்யாது. அது அரசியல் சம்பந்தமான விஷயங்கள் பற்றி அக்கறையான விவாதங்களை நடத்துவதற்கு தடைக்கற்களை உருவாக்கும் அனைத்தையும் கொண்டிருக்கிறது.

கலிபோர்னிய மக்களையும், மொத்தத்தில் நாட்டுமக்கள் அனைவரையும் எதிர்நோக்கியுள்ள அரசியல் பிரச்சனையின் கடுமையான தன்மையினை திசைதிருப்புகின்ற எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ளமாட்டேன்.

தங்கள் நன்றியுள்ள,

ஜோன் கிறிஸ்டோபர் பேர்டன்

ஆகஸ்ட்21, 2003.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved