:
ஐரோப்பா
:
பிரித்தானியா
Hutton Inquiry: How Dr Kelly and the Foreign Affairs Committee were used
by the government
ஹட்டன் விசாரணை: டாக்டர் கெல்லியும் வெளிவிவகாரகுழுவும் எவ்வாறு அரசாங்கத்தால்
பயன்படுத்தப்பட்டனர்
By Christ Marsden and Julie Hyland
27 August 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
BBC நிருபர் ஆன்ட்ரு ஜில்லிகனை இழிவுபடுத்துவதற்காக,
வெளிவிவகார குழுவிடம் (FAC)
மீண்டும் மீண்டும் பொய் சொல்லுமாறு எப்படி டாக்டர் கெல்லி வற்புறுத்தப்பட்டார் என்பதை ஹட்டன் விசாரணையில்
கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள், சாட்சியங்கள் ஆகியவை தெரிவிக்கின்றன. வெளிவிவகார குழு,
(FAC) சொல்லப்போனால்
அதன் பெரும்பான்மையான ஏழு உறுப்பினர்கள், கெல்லியின் பொய்கள், அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டான ஈராக்கியப்
பேரழிவு ஆயுதங்களின் அச்சுறுத்தல் உள்ளது என்ற செப்டம்பர் 2002 உளவுத்துறை ஆவணத்தை "பாலியல் வகையில் குழப்புதற்கு"
பிரதம மந்திரி டோனி பிளேயரின் செய்தித்துறை இயக்குநர் அலாஸ்டர் காம்பெல் தலைமை தாங்கினார் என்பதிலிருந்து
கெளரவமாக விடுவிக்க உதவினர்.
ஈராக்கின் அச்சுறுத்தல் பற்றிய உளவுத்துறைச் செய்தியை, அரசாங்கம் தவறாக மிகைப்படுத்தியது
பற்றி செப்டம்பர் கோப்புத் தயாரிப்பில் தொடர்புடையவர் விமர்சனம் கொண்டிருந்தார் என்ற ஜில்லிகனின் மே 29
அறிவிப்புக்கு ஆதாரமே டாக்டர் கெல்லி தான். இந்தக் குற்றச்சாட்டுத்தான் இரண்டு பாராளுமன்ற விசாரணைகளுக்கு
காரணமாயிற்று, ஒன்று வெளிவிவகார குழுவினாலும், மற்றது உளவு மற்றும் பாதுகாப்புத்துறையினாலும் நடத்தப்பட்டது
-இரண்டுமே அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என கூறிவிட்டன.
அதற்குப் பல வாரங்கள் முன்பு, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படாதது
பற்றி வளர்ந்து வந்த விமர்சனங்களை அரசாங்கம்
எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஜில்லிகனுடைய அறிக்கை அரசாங்கத்திற்குப்
பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது; ஏனென்றால் பாதுகாப்புப் பணியினரிடையே பெரும் அமைதியின்மை இருந்ததாகவும்
அதற்கு ஆதாரமாக கோப்பைத் தயாரித்தவர்களிடையே உயரதிகாரி ஒருவரே இதைக் கூறினார் என்றும் அறிக்கையில்
கூறப்பட்டது. இக்காரணத்திற்காகவும், BBC
வலதுசாரி அரசியலின் விரும்பத்தக்க இலக்கான வகையினாலும் டோனி
பிளேயரின் ஊடக நலன்களை ஆதரிக்கும் ரூபேர்ட் முர்டோக்கும் குறுகிட்டதால், ஜில்லிகனின் கட்டுரையை எந்த அளவு
இழிவுபடுத்த முடியுமோ, அந்த அளவு அதில் ஈடுபட அரசாங்கம் முயற்சி செய்தது.
இந்தப் பின்னணியில்தான், ஜூன் 30ம் தேதி பாதுகாப்பு அமைச்சகத்தில்
(MoD) தன்னுடைய மேலதிகாரியான
Bryan Wells க்கு
கெல்லி, ஜில்லிகன் அறிவிப்பிற்கு தான் காரணமாக இருந்திருக்கக்கூடுமோ என்ற நிலையைத் தெரிவித்தார்.
அதையொட்டி 15 நாட்கள் ஆழ்ந்த விவாதங்களும், கெல்லியை கேள்விகளுக்குட்படுத்துதலும்,
FAC க்கு முன் ஜில்லிகனை
இழிவுபடுத்த விஞ்ஞானியை அச்சுறுத்தியதும், அவ்வாறு செய்வதற்கு உறுதிமொழிகள் கொடுக்க தயார் செய்ததும் தொடர்ந்தன.
இந்தப் பின்னணியில், பாதுகாப்பு அமைச்சரகத்தில் தன் மேலதிகாரியிடம் கெல்லி தன்னைப்
பற்றிக்கூற முன்வந்தது ஒரு கெளரவமான செயலாக விவரிக்கப்பட்டது. ஆனால் வேறு வழியின்றி அவர் அவ்வாறு செய்திருக்கக்கூடும்
என்பதற்கான தகவல்கள் இப்பொழுது வெளிவந்துள்ளன.
அவர் கடிதம் எழுதிய நேரத்தையொட்டி, பெரு நகரப் போலீஸார், பெப்ரவரியில்
ஜில்லிகனின் முந்தைய Radio
4ன்
Today
நிகழ்ச்சிக்கு ஆதாரமாக இருந்திருக்கக் கூடுமோ என்பதற்கு கைது செய்யலாமா என யோசித்திருந்தனர். அவ்வாறு செய்யவேண்டாம்
என பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டிருந்தது; பாதுகாப்பு அமைச்சரகத்தின் உளவுத்துறைப் பிரிவின் அதிகாரி
ஜோன் காஹ்ரேன், ``கெல்லியையோ அல்லது இது தொடர்பாக அவரைப் பேட்டி கண்டவர்களையோ போலீஸ் கைது
செய்யும் முயற்சியைத் தடுக்கவேண்டும்`` என எழுதியிருந்தார்.
அவர் கடிதத்தை எழுதுவதற்கு முன்பே கெல்லியை ஆபத்து நெருங்கிவிட்டது என்பது தெரிகிறது;
ஆனால் ஒருவேளை அவர் நிரபராதியாக இருக்கக்கூடுமோ என்ற காரணத்தால் போலிசாரைத் தடுத்து நிறுத்த
MoD கருதியதா
என்பதோ அல்லது தனக்கும் மேலதிகாரிகளுடன் உடன்பாடு கொண்டே இந்த செய்திக் கசிவைச் செய்தாரா என்ற
சந்தேகத்தினாலோ அல்லது அனைத்துமே நம் கட்டுப்பாட்டைவிட்டு மீற வேண்டாம் என்ற நினைப்பினாலோ இருந்திருக்கலாம்.
எவ்வாறாயினும், MoDயும்
அரசாங்கமும் ஜூன் 30ம் தேதி எதிர்கொண்ட நிலை இதுதான்:
கெல்லி, ஜில்லிகனுடன் பேசியுள்ளார்; நிருபர் என்ன கூறப்பட்டது என்கிறாரோ அது கூறப்பட்டது.
கெல்லி BBC
யின் சூசான் வாட்ஸ் உட்பட இன்னும் பல நிருபர்களிடம் இதுபோன்ற
கருத்துக்களைக் கூறியுள்ளார்.
பொதுமக்களிடைய ஆர்வம் இந்த விஷயத்தில் உயர்ந்துவிட்டது; பாராளுமன்றத்திலேயே
கணிசமான அளவு அமைதியற்ற நிலை ஏற்பட்டுவிட்டது; எனவே கெல்லியின் பங்கை மறைக்கவோ,
FAC முன் அவர்
தோன்றுவதையோ நிறுத்த முடியாது.
ஆனால் தொடக்கத்தில் அரசாங்கம் அனைத்துக் கண்ணோட்டத்திலும் இந்நிலையில்தான் தள்ளப்பட்டிருந்தது.
அரசாங்கம் உளவுத்துறைச் செய்தியைத் தவறாகப் பயன்படுத்தியதா என்ற
FAC விசாரணை
நடைபெற்றுக்கொண்டு இருந்தது, அலாஸ்டர் காம்பெல்லின் சாட்சியமும் எடுக்கப்பட்டுவிட்டது; அவரோ ஜில்லிகன் ஒரு
பொய்யர் என கண்டனம் செய்திருந்ததோடு, அரசாங்கத்திற்கெதிராக வேட்டையாடும் முயற்சியில்
BBC இறங்கியுள்ளது
என கூறியிருந்தார். இருந்தபோதிலும்கூட கெல்லியின் பெயர் வெளிவராமல் பல நாட்கள் வைக்கப்பட்டு
FAC குழு ஜூலை 7ம்
தேதி அரசாங்கத்தை கெளரவமாக விடுவித்து அறிக்கை கொடுத்தது; இவை அரசாங்கத்தால் வெளியிட சில நாட்கள்
ஆயின.
தாங்கள் விரும்புவதை அவர் கூறுவார் என்று நம்பியிராவிட்டால் அரசாங்கம் கெல்லியின்
பெயரை வெளியிட்டிருக்காது. பெயரிட விரும்பாத அதிகாரிதான் ஜில்லிகனுடைய கதைக்கு ஆதாரமோ என்று கருதுவதாக
மட்டுமே தொடக்கத்தில் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அரசாங்க விதிமுறைகளை ஒட்டி ஊழியர்களின் பாதுாகப்பைக்
கருதி கெல்லியின் பெயர் கொடுக்கப்படவேண்டியது சாத்தியமில்லாததாக இருந்திருக்கும்.
பல நாட்கள் கடுமையான விசாரணைக்கு கெல்லி உட்பட்டிருந்தார். என்ன தண்டனைகள்
தனக்குக் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரிவிக்கப்பட்டது; இப்பொழுது நாம் தெரிந்துள்ளபடி பாதுகாப்பு மந்திரி
ஜியோப் ஹூன் அவருடைய ஒத்துழைப்புக்காக எளிதில் அவரை விட்டு விடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இது நடந்துகொண்டிருக்கும்போதே பல முக்கிய அரசு அதிகாரிகள்
FAC முன் கெல்லியை
அடையாளம் காட்டப்படுவது தடுக்கப்பட வேண்டியதின் அவசியத்தைப் பற்றியும், அல்லது எந்த அளவு அவர் கேள்விகளுக்கு
உட்படுத்தப்படவேண்டும் என்பது பற்றியும் விவாதித்தபடி இருந்தனர்; இது பற்றி பிரதம மந்திரி டோனி பிளேருக்கும்
நன்கு தெரியும்.
காபினெட் அலவலகத்தில் இருந்த சேர் டேவிட் ஒமண்ட், பாதுகாப்பு அமைச்சக அதிகாரியான
சேர் கெவின் டெபிட்டுக்கு ஜூலை 5ம் தேதி, FAC
அறிக்கை முடிக்கப்படுவதற்கு முன்னர் எழுதிய கடிதத்தில்: ``தக்க
சமயத்தில் நாம் FACக்கும்
(ISC)
க்கும் கூறினால்தான் அவர்களைத் தவறான நிலையில் நாம் வைக்காமல் இருக்க முடியும். ஆனால் சில முரண்பாடுகள்
இருப்பதால் சில நிகழ்ச்சிகளைப் பற்றி நிச்சயமாகத் தெரிந்துகொள்வது, உறுதியான முடிவு எடுப்பதற்குமுன் அவசியமாகிறது.
பிரதம மந்திரி உங்கள் கடிதத்தைப் பார்த்துவிட்டு, ஜோனதன் பவலிடம்,
FAC யுடனோ
BBC
யுடனோ, நாம் நம்முடைய நிலையைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளுமுன், நீங்கள் பரிந்துரைத்தபடி உடனடி நடடிவக்கை
தேவையில்லை என்றே, நாங்கள் உங்களுக்கு தெரிவித்தபடி கூறிவிட்டார்`` எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், முடிவெடுக்கும் வரை
FACக்கு விவரங்கள் தெரிவிக்கப்படமாட்டாது. பிளேயருக்கு வெளியுறவுச்
செயலரின் கருத்தான ``அறிக்கை அளிக்கு முன் FACயுடன்
எந்த உடனடி நடவடிக்கையும் தேவையில்லை`` என்பதும் தெரிவிக்கப்பட்டது.
பிளேயரும் இதற்கு இணங்கினார்
FAC அறிக்கை வெளியிடப்பட்டு விட்டதைத்
தொடர்ந்து, அரசாங்கம் அதை மீண்டும் கூட்டி கெல்லியை விசாரணை செய்ய சொல்லலாம் என்று முடிவு செய்தது,
இதற்கு கெல்லிக்கு தக்க முறையில் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். ஹுனுடைய தனிச் செயலாளரான டாமினிக்
வில்சன், மேற்கொண்டு அவருக்கும் கெல்லிக்குமிடையே என்ன பேச்சுக்கள் நடந்தன என்பது கண்டுபிடிக்கப்படுவதற்கு
கெல்லியோடு ``ஆழ்ந்த பேட்டி`` மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பொதுப்பார்வையின் அழுத்தத்திற்கு அவர் ஈடுகொடுப்பாரா
என உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஜூலை 8ம் தேதி எழுதியிருந்தார்.
இதைவிட்டால் ISCக்கு
முன்பு கெல்லியைப் பேசச் சொல்லலாம், அது தனியாகக் கூடி பிளேயருக்கு மட்டுமே பொறுப்புக் கூறுவதால்; அதுவும்
FAC
ஏற்கனவே தன்னுடைய விவாதங்களை முடித்துவிட்டால் இது எளிதாகும்.
இந்தச் சான்றுகள் இப்பொழுது வெளிவந்துவிட்டதால், சில முக்கிய அதிகாரிகள் இதன்
உட்குறிப்பைக் கண்டு அஞ்சினர். ஹட்டன் விசாரணையில் டெபிட், இதில் தொடர்புடையவர்கள் மூடிமறைக்கிறார்கள் என்ற
குற்றச்சாட்டிற்கு ஆளாகுவரோ என்ற தனது கவலையைத் தெரிவித்தார். ``நாம் இங்குள்ளோம்,
FACக்கு முக்கியமான
தொடர்புடைய தகவலைக் கொண்டுள்ளோம்; சொல்லப்போனால் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் குழுவிற்கும் அது
தேவை; ஜூன் 30-ன் போதே இது தெரியும்; நாமோ ஜூலை 7ம் தேதியில் உள்ளோம், இதைப் பற்றி ஏதும் தெரியாமல்
FAC தன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
``இது ஆண்ட்ரூ ஜில்லிகனின் சாட்சியத்திற்கு முக்கியமான பின்னுரை;
FAC விசாரணைக்கே
முக்கிய காரணம் இதுதான். இதைப் பற்றி நாம் பேசவே இல்லை. ஒரு வாரம் கழித்து நாம் இங்கே இருக்கிறோம்.
நாம் முக்கிய பொது நல அக்கறையுடைய விடயத்தைப் பற்றிய தகவலை மூடி வெளியிடாமல் இருந்ததாகத்தான் தோன்றகிறது.``
இறுதியில் அரசாங்கம், கெல்லி தேவையான அளவு பயமுறுத்தப்பட்டும், தட்டிக் கொடுக்கப்பட்டும்
இருப்பதால் தான் விரும்புவதை அவர் கூறுவார் என்ற முடிவிற்கு வந்தது. எந்த அளவிற்கு கெல்லியின் சாட்சியம் தயார்
செய்யப்பட்டது என்பது அவர் FACயின்
தோன்றிய முதல் நாள் ஜூலை 14 அன்று எழுதப்பட்ட 2 கடிதங்களிலிருந்து தெரியவருகிறது.
வெளியுறவு அலுவலகத்தின் கொலின் ஸ்மித்துடைய குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது: ``(Deputy
Chief of Defense Intelligence Martin Howard)
DCDI, டேவிட்டிற்கு இன்று பிற்பகல் அவர் நாளை
FAC,
ISC முன்பு தோன்றுவதற்கு
முன்பாகவே அதனிடம் கெல்லியுடைய சொந்த மதிப்பீடு பற்றி கேட்கவேண்டாமென்றும் (ஜில்லிகனிடம் அவர் என்ன கூறினார்
என்பது பற்றி மட்டும் கேட்டால்போதும்)`` என்று பரிந்துரைக்குமாறு அது கூறியள்ளது.
கெல்லிக்கும், மற்றைய பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகளுக்குமிடையே நடந்த
பேச்சுக்களை பற்றிய குறிப்புக்கள் அவர் எப்படி பல கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும் என்று விவரிக்கின்றன.
இவற்றில், ``ஈராக்கின் அரசாங்க கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டால், இது அமைச்சர்கள் முடிவெடுக்கவேண்டிய
விஷயம் என்றும், ஜில்லிகனின் ஆதாரம் நீங்கள்தான் என்று கேட்டால், கெல்லி ``நான் இல்லை என்று நம்புகிறேன்``
என கெல்லி கூறலாமா என்பதற்கு, ``இது அவர் தன் மனச்சாட்சிப்படி விடையளிக்கப்படும்`` என்ற ஹோவார்டு
பதில் அளித்ததும்`` உள்ளடங்கியுள்ளன. மேலும் ``ஹோவார்டின் உதவிக்கு (இத்தனை நேரம் ஒதுக்கியது) விசாரணையில்
தான் எப்படி நடந்துகொள்வது என்பதற்குக் கெல்லி நன்றி தெரிவித்ததும்`` குறிப்புக்களில் காணப்படுகிறது.
மேலும் ஒரு பாதுகாப்பு கூடுதலாகக் கொள்ளப்பட்டது. கெல்லியை அடக்கிய பிறகு,
அடுத்த பணி FAC-ä
அது கூறியபடி செயல்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதாகும்.
பாராளுமன்றம் நிர்வாகச் செயல்களைப் பரிசீலனை செய்வதற்கு உதவுவதற்காக
1980ல் FAC
ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவர் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
டோனால்ட் ஆண்டர்சன்,
ஹட்டன் விசாரணைக் குழுவினால் ஆகஸ்ட் 21ம் தேதி விசாரிக்கப்பட்டபோது, எப்படி பொதுநலத்தின் பிரதிநிதியாக
அக்குழு அரும்பாடுபட்டுச் செயலாற்றியது என மலைப்பான கூற்றுக்களை தெரிவித்தார். உண்மையிலிருந்து பிறழ்ந்த அறிக்கை
இதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
இக்குழுவில் 11 உறுப்பினர்கள் உள்ளனர்; ஏழு தொழிற்கட்சி எம்.பிக்கள் ஆகையால்,
அரசாங்கத்திற்கு இயல்பான பெரும்பான்மை உண்டு. மேலும்
FACக்கு சாட்சியங்களை வற்புறுத்தி சான்றுகள் கொடுக்க வைக்கும்
அதிகாரம் கிடையாது, ஆவணங்களைப் பார்க்கும் உரிமையும் கிடையாது. அரசாங்கம் எதை அனுமதிக்கிறதோ அதை
மட்டும்தான் அது (தவிர்க்க முடியும்) ஆராயவேண்டும்.
FAC விசாரணையான அரசாங்கம்
உளவுத்துறை ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தியதா என்ற குற்றச்சாட்டிற்கு, இக்குழு ஆய்வு செய்யப்பட்டதாகக்
கூறப்படும் முந்தைய ஆவணங்களின் வரைவுகளைக் கூட பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஹட்டன் விசாரணையில் ஆண்டர்சன்,
வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ தனிக் கூட்டத்தில் மூன்று மணி நேரம் தோன்றி, ஆவணங்களின் சில பகுதிகளைப்
படித்துக் காட்டியதாகக் கூறினார்.
FAC ஐ அசட்டையுடன் நடத்தலாம்
என்று அரசாங்கம் கருதியது மட்டுமல்லாமல், FAC
உம், குறிப்பாக அதன் தொழிற்கட்சி உறுப்பினர்களும் அரசாங்கத்தை கெளரவமாக விடுவிப்பதில் விரும்பிய உடந்தையாளர்களாக
இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
FAC எவ்வாறு கெல்லி அதன் முன்
தோன்றும்போது நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றிய பல அரசாங்க அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு, அவர்
வரக்கூடத் தேவையில்லை என்பதையும் ஒத்துக்கொண்டது இதிலிருந்து அதன் தன்மை புலனாகும்.
இம்முயற்சிதான் ஹூனைத் தனிமைப்படுத்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்று;
இதையொட்டி பிளேயர், காம்ப்பெல் மற்றவர்கள் காப்பாற்றப்படுவார்கள். உண்மையில் கெல்லியை பற்றிய அனைத்து
விடயங்களும், பிளேயராலும் அவருடைய உடனடிக் குழுவினராலும் முடிவு செய்யப்பட்டு
MoD
யின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பீட்டர் வாட்கின்ஸ், பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தரச்
செயலாளர் ஜெப்ரி ஆடம்சுக்கு ஜூலை 10ம் தேதி எழுதினார்: ``ஆண்ட்ரூ ஜில்லிகன் சாட்சியம் பற்றிய நேரடிப்
பொருத்தம் உடைய கேள்விகளை மட்டும் குழு கேட்டால் போதும் என்று டோனால்ட் ஆண்டர்சன் ஏற்குமாறு நாம் செய்யவேண்டும்.
No.10
இந்த அணுகுமுறையை ஏற்பார் என்றே நான் கருதுகிறேன்.``
ஹட்டன் விசாரணையில், ஆண்டர்சன் கெல்லியை விசாரிக்கும்போது 45 நிமிடக்கூற்று
பற்றியும், ஜில்லிகனுடனான பேச்சுக்கள் பற்றி மட்டுமே கேட்டதாகவும் தெரிவித்தார்.
FACயின் தொழிற்கட்சி
அல்லாத உறுப்பினர்களின் எதிர்ப்புக்களையும் எதிர்த்தே அவர் அவ்வாறு செய்திருந்தார்.
ஹூனுக்கு ஆண்டர்சன் பதில் கூறியிருந்தார்: ``டாக்டர் கெல்லி கேள்விகளுக்குட்படும்
போது, எந்த அளவு நேரம், பரப்பு, தன்மை இவற்றிற்கு உட்படுத்தப்படவேண்டும் என்பது பற்றிய உங்கள் தெளிவான
புரிந்து கொள்ளுதலில் நானும் பங்குகொள்கிறேன்; என்னுடைய குழு உறுப்பினர்களது கவனத்திற்கும் அதை சேர்ப்பேன்.``
கெல்லி FACக்கே
வரவேண்டாம் என்று தான் விரும்பியதாகவும் 4-3 என்ற வாக்கெடுப்பில் அவர் நினைப்பு தோற்றுப்போயிற்று
என்பதையும் ஆண்டர்சன் ஒப்புக்கொண்டார்.
இவற்றின் பின்னணியில், FAC
விசாரணையில் ஜில்லிகன் தலையிட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் நம்ப முடியாத அளவிற்கு எழுப்பப்பட்டுள்ளன; இரண்டு
தொழிற்கட்சி அல்லாத உறுப்பினர்களுக்கு கெல்லியிடம் என்ன கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்று அவர் மின்னஞ்சல்
அனுப்பிய செய்தி வெளிவந்தபின் மேற்கூறிய குற்றச்சாட்டு தோன்றியுள்ளது. அரசாங்கத்துடன் கெல்லியிடம் என்ன கேட்கப்படவேண்டும்
என்ற உடன்பாட்டில் நிர்ணயித்திருந்த ஆண்டர்சன் பெருங்கோபமடைந்து ஜில்லிகனின் மின்னஞ்சல் முன்னோடியே இல்லாத
தன்மை கொண்டது என்றும் குறைப்பட்டுக் கொண்டார்.
ஜூலை 15ல் FAC
முன்தோன்றிய கெல்லி, ஏற்கனவே அரசாங்கத்துடனும் பாதுகாப்பு அமைச்சகத்திடமும் கொண்டிருந்த வரைமுறைகளில்
இருந்து மீறவில்லை. ஜில்லிகனை இழிவுபடுத்த எவ்வளவு செய்ய முடியுமோ அத்தனையையும் அவர் செய்தார்; மேலும்
முன்பு அவர் குறை கூறியிருந்த கோப்புத் தொகுப்பு பற்றிய கருத்துக்களிலிருந்து மாறுபட்டு, அதை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும்
தெரிவித்தார்; உளவுத்துறைப் பணியில் பரந்த அளவு அமைதியின்மை உள்ளது என்பதையும் அவர் மறுத்தார்.
FAC யினால் "கேள்விக்கணைகளுக்கு"
உட்படுத்தப்படுவதற்குப் பதிலாக இலகுவான முறையில் அவர் கையாளப்பட்டார்.
தாராண்மை ஜனநாயக, பழமைவாத குழு உறுப்பினரால் கேள்விக்குட்பட்ட அபூர்வ
சமயங்களில் கெல்லியிடமிருந்து நிலையற்ற விடைகள் வந்தன; அப்பொழுது ஆண்டர்சன் தலையிட்டுச் சமாளித்தார். ஒரு
முறை ``நாம் ஜில்லிகன் மீதுதான் கவனக்குவிப்பு கொள்ளவேண்டும்`` என்றும் அறிவித்தார்; வேறு ஒரு தடவை ``நமக்கு
அளிக்கப்பட்டுள்ள அதிகாரவரம்பிற்கு வெளியே செல்லத் தேவையில்லை`` என்றும் கூறினார்.
கெல்லியினுடைய சாட்சியம், பொய்களும் தவிர்த்தல்களும் நிறைந்த அசாதாரண கலவை
ஆகும். ஜில்லிகன் அறிக்கையில் கூறப்பட்ட எந்தக் குறிப்புக்கள் பற்றியும் தன்னுடையதா என்றுதான் புரிந்துகொள்ள முடியவில்லை
என்றும், தான்தான் நிருபர்களுடைய ஒரே ஆதாரமா என்பது பற்றியும் கூறுவதற்கில்லை என்றும் சொல்லிவிட்டார்.
சூசான் வாட்சிற்கு ஜில்லிகனுக்குக் கொடுத்த அறிக்கைபோன்ற அதே ஆதாரத்தை தான்
அளித்ததையும் கெல்லி மறுத்தார். ``இந்த வர்ணனைகளை நான் அடையாளம் கொள்ளமுடியவில்லை`` என்று அவர்
கூறினார்.
எவ்வளவு நிருபர்களைச் சந்தித்துள்ளீர்கள் என்ற கேள்விக்குத் ``தனக்கு ஞாபகம் இல்லை
என்றும் MoDயிடம்
இப்பட்டியல் பற்றி முறைப்படி கேட்கவேண்டும்`` என்றும் தெரிவித்தார்.
காம்ப்பெல்தான் செப்டம்பர் கோப்புத் தொகுப்பைப் "பாலியல் முறையில் இழிவுபடுத்தல்
தன்மைக்கு உட்படுத்தியதாகத் தான் கூறவில்லை என்றும் மறுத்தார்; இக்கூற்று அரசாங்கத்திற்கு
BBC எதிர்ப்பு முயற்சிக்கும் பெரிதும் உதவுவதுடன் தன்னுடைய பொய்கள்
எல்லாவற்றையும் மறைக்கவும் பயன்படுத்த முடியும்.
கோப்புத் தொகுப்பை காம்ப்பெல் மாற்றியிருக்கக்கூடுமா என்ற கேள்விக்கு ``அவ்வாறு
செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை`` என்று தெரிவித்தார்; மேலும் கோப்புத் தொகுப்பின் உண்மை முழுமையானது
எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
கெல்லியின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜில்லிகன் மீண்டும் ஜூலை 17
அன்று FAC
விசாரணைக்கு அழைக்கப்பட்டார். பின்னால் இந்த நடவடிக்கைகளைப் பற்றி நிருபர் ``கங்காரு நீதிமன்றம்`` என
விவரித்தது ஒரு மிகையான கூற்று அல்ல.
FAC யின் தொழிற்கட்சி உறுப்பினர்கள்
அவர் மீது ஓநாய் கூட்டம்போல் விழுந்தனர்; அவருக்கெதிராகக் கெல்லி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினர். ஜில்லிகன்
தவறாக அவரைத் தன்னுடைய அரசாங்க எதிர்ப்பிற்குப் பயன்படுத்தினார் என்ற கருத்தை வெளிப்படுத்த ஊதிக்கெடுத்த
கெல்லியை அரசாங்கம் வெறுத்தாலும், அவர் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டார்.
கேள்விகளைத் தொடங்கும் முன்னரே ஆண்டர்சன், ஜில்லிகனை தவறுகளுக்கு வருந்த
நேரிடும் என்று எச்சரித்தார்: ``தேவையென்றால் பொது மக்கள் சபைக்கு, கேள்விக்குப் பதில் கொடுக்காத
சூழ்நிலை பற்றி பயன்படுத்தக்கூடிய அதிகாரம் குழுவிற்கு உண்டு, மக்கள் சபையில் அத்தகைய விடயத்தில் கணிசமான
அதிகாரங்கள் உண்டு`` என்று அவர் கூறினார்.
இவருடைய மே 29 அறிவிப்பையும் மற்றைய கதைகளையும் இகழ்ச்சி செய்ய பல
உறுப்பினர்கள் முயன்றனர்; கெல்லி உட்பட அவருக்கு ஆதரவிற்கில்லை என்பதால் அம்முயற்சியில் ஈடுபட்டனர். ``நிருபர்
குழுவிற்கே தவறான தகவல்கள் கொடுத்துள்ளார், பொதுமக்களுக்கும் தவறான தகவல்களைக் கொடுத்துள்ளார்,
தோட்டப் பாதை முழுவதிலும் நிலைகுலைந்து நடக்க வைத்துவிட்டார்`` என்று சேர் ஜோன் ஸ்டான்லி மற்ற
நிருபர்களிடம்; தொழிற்கட்சி எம்.பி.யான எரிக் இல்ஸ்லே ஆழ்ந்த இகழ்ச்சியுடன் அறிவித்ததாவது: ``நீங்கள் உலகம்
முழுவதையும் தவறான திசையில் திருப்பிவிட்டீர்கள்`` எனக் கூறினார்.
உலகம் முழுவதிற்கும் ஈராக்கியப் போரை நியாயப்படுத்துவது பற்றி பொய்யுரைத்தது
மட்டுமல்லாமல், அனைத்து ஜனநாயக மரபுகளையும் திரித்து, மாற்றி, சதி செய்து மறைத்த ஓர் அரசாங்கத்தின்
பிரதிநிதியால் வெளியிடப்பட்ட கூற்றுக்குப் பொருத்தமான பைத்தியக்காரத்தனமான எடுத்துக்காட்டுகள் ஒரு சிலதான்
இருக்க முடியும்.
See Also:
பிரிட்டன்:
அரசாங்கத்திற்கு எதிராக கண்டனத்திற்கு ஆளாக்கும் சாட்சியங்களை ஹட்டன் விசாரணை கேட்கின்றது
பிரிட்டன்:
ஹட்டன் விசாரணையின் அடிப்படையிலமைந்த அரசியல் பிரச்சனைகள்
Top of page
|