World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

ஜிலீமீ றீமீssஷீஸீs ஷீயீ சிலீவீறீமீ30 ஹ்மீணீக்ஷீs ஷீஸீ

சிலி நாட்டின் 30 ஆண்டுகால படிப்பினைகள்

By Mauricio Saavedra and Margaret Rees
17 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

30 ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் 11 அன்று சிலி நாட்டு இராணுவம் வாஷிங்டன் மற்றும் பென்டகனின் முழு ஆதரவோடு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலி ஜனாதிபதி சால்வடோர் அலன்டேயின் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு ஜெனரல் அகஸ்டோ பினோசேயின் பாசிச இராணுவ சர்வாதிகாரத்தை உருவாக்கியது. அந்த சர்வாதிகாரம் சிலியில் 17-ஆண்டுகள் ஆட்சி புரிந்தது.

சர்வதேச அளவிலும் மற்றும் சிலியிலும் நடைபெற்ற அந்த நினைவுதினத்தில் அலென்டேயின் முடிவு குறித்து நினைவுபடுத்தி உரையாற்றினார்கள். அலென்டே அவரது சொந்த சோசலிஸ்ட் கட்சியும், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதிக்கம் செலுத்திய மக்கள் ஐக்கிய கூட்டணி ஆட்சிக்கு தலைமைவகித்தார். இராணுவம் சிலியின் தலைநகரான சான்டியாகோவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பீரங்கிகளால் சுட ஆரம்பித்தபோது அலென்டே தற்கொலை செய்துகொண்டார். அப்படியிருந்தும் அலென்டேயின் அரசாங்கம் சிலி தொழிலாள வர்க்கத்தை காட்டிக் கொடுத்துடன் அவர்களை இராணுவ ஆட்சியிடம் கையளித்தது.

சிலி தொழிலாளர்கள், அறிவுஜூவிகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் வெள்ளை மாளிகை ஆதரவளித்த ''ஆட்சி மாற்றத்தின்'' தாக்கத்தை நேரிடையாக அனுபவித்தனர். 11 மில்லியன் மக்கள் தொகையில் 4000 ற்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர் அல்லது ''காணாமல் போய்விட்டனதுடன்'', பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானார்கள். ஏறத்தாழ 10 இலட்சம் பேர் சிலியை விட்டே தப்பி ஓடிவிட்டனர்.

சிலியின் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு நடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னரும் அன்றைய இராணுவப் புரட்சி எழுப்பிய பிரச்சனைகள் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இன்றைய அரசாங்கத்திற்கு அலென்டேயின் அரசியல் வாரிசுகளில் ஒருவரான சோசலிஸ்ட் கட்சி தலைவர் ரிக்கார்டோ லாகோஸ் தலைமை வகித்து நடத்துவதில் இதை காணக்கூடியதாக உள்ளது. அவர் 1973ம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களை திரித்து தனது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்.

அரசாங்கத்தின் சார்பில் 30-வது ஆண்டு நினைவு தினத்திற்கு செயல்பட்ட ஏற்பாடுகளின்படி சிலி அரசாங்க ஊடகங்கள் இரவு நேரத்தில், மக்கள் முன்னணி அரசாங்கம் உருவாக்கப்பட்டது தொடர்பாகவும் CIA ஊக்குவித்து நடைபெற்ற அரசியல் குழப்பம் குறித்தும் ஆட்சி கவிழ்ப்பின்போது நடத்தப்பட்ட கொடுமைகள் தொடர்பாகவும் அதன் பின்விளைவுகளும் விளக்கப்பட்டன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள், உரைக்கோவைகள், கொண்டாட்டங்கள் மற்றும் கலைக்கண்காட்சிகள் நடைபெற்றன. அத்துடன் பழைய புத்தகங்களில் புதிய பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. கவியரங்குகள் நடத்தப்பட்டன. 1970-களில் சிலி முன்னணி இசைப்பாடல்கள் மீண்டும் ஒலிபரப்பப்பட்டன. இன்றைய குடியரசுத் தலைவர் லாகோஸ் ஜனாதிபதி மாளிகையில் ஒரு அறைக்கு அலென்டேயின் நினைவாக பெயர் சூட்டினார். அவரை தியாகியாகவும், தேசிய வீரராகவும் அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தினார்கள்.

அலென்டேயின் கீர்த்தி குறித்து கற்பனையாக சித்திரம் தீட்டி அவரை அமெரிக்காவின் எதிரி என்று படம்பிடித்து காட்டினார்கள். தற்போது பெருமளவு மக்களிடையே செல்வாக்கு இழந்து வருகின்ற லாகோஸ் அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்ற கற்பனையான ஒரு உருவத்தை அமைத்திருக்கிறார்கள். அவரது அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் புதிய காலனி ஆதிக்க கொள்கைகளை அப்பட்டமாக ஆதரித்து வருகின்றது. குறிப்பாக சிலி தற்போது ஐ.நா பாதுகாப்பு சபையில் சுழற்சி முறையில் உறுப்பினராக பணியாற்றி வருகிறது. அதற்கு பின்னர் ஈராக்கில் அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகத்திற்கு சிலியின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் வாக்களித்திருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் தனது கட்சியிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு தனது செல்வாக்கை நிலை நாட்டுவதற்கு முயன்று வருகிறார்.

இரண்டாவதாக லாகோசின் கட்சி ஸ்பெயின் மற்றும் பிரிட்டனின் கட்சிகளோடு இணைந்து பினோசே 1988ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிற்கு நாடுகடத்தப்படுவதை தடுத்துடன், 2000ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததும் இக்கட்சி பினோசேயை பாதுகாப்பாக சிலிக்கு கொண்டு வந்தது. அப்போது லாகோஸ் இராணுவத் தலைவர்களுடன் ரகசிய கூட்டங்கள் பலவற்றை நடத்தினார். இத்தகைய டசின் கணக்கான இரகசியக் கூட்டங்களில் சிலியிலிருந்து பினோசே தப்பி ஓடுவதற்கு உத்திரவாதம் செய்துதருவதற்கான வழிவகைகள் உருவாக்கப்பட்டன. அதன் மூலம் இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இது வாஷிங்டனுக்கு மிகப்பெரும் அளவில் நிம்மதி தருகின்ற செயலாகும். ஏனென்றால் 1970 களிலும் குறிப்பாக 1973 ஆட்சிக்கவிழ்ப்பிலும் வாஷிங்டனின் பங்கு அம்பலத்திற்கு வருவதை புஷ் நிர்வாகம் விரும்பவில்லை.

மூன்றாவதாக, முன்னர் இருந்த அலன்டேயைப்போல் லாகோசும் மிகப்பெரும் அளவில் இராணுவத்தையே நம்பியிருக்கிறார். இராணுவ அதிகாரிகளை பயிற்சிக்காக அமெரிக்காவிற்கு அனுப்புவதுடன், நவீன ஆயுதங்களோடு இராணுவத்தை வலுப்படுத்துகிறார். சர்வதேச அளவில் சிலி இராணுவத்தை பல்வேறு பணிகளுக்கு அனுப்பி உள்நாட்டு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அவர்களை பயன்படுத்துவதற்கு தயாரித்துகொண்டிருக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் லாகோஸ் புவனர்ஸ் அயர்ஸ் தினசரியான El Clarin என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அலென்டேயின் நினைவு மீண்டும் மக்களிடையே தோன்றி வருவதன் சிறப்பை அவர் எடுத்துரைத்தார். ''அப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தாக்கங்கள் இன்றைக்கும் ஆக்கபூர்வமான போக்கை மக்களிடையே உருவாக்கி வருகின்றது. 20அல்லது 25ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களை எவரும் மறந்து விடவில்லை. தொலைக்காட்சிகள் இதுவரை எவரும் பார்த்திராத பெருமளவில் அதிர்ச்சியூட்டும் செய்திப்படங்களை காட்டுகின்றன. அந்த நேரத்தில் இன்றைய சிலி நாட்டு மக்களில் 50 சதவீதம் பேர் பிறந்திருக்கமாட்டார்கள். அல்லது விபரம் தெரியாத சிறு குழந்தைகளாக இருந்திருப்பார்கள். அவர்களது உள்ளத்தில் இத்தகைய காட்சிகள் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும்?'' என்று லாகோஸ் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது அரசியல் நண்பர்களுக்கு எதிராக எண்ணிறைந்த குற்றங்களை புரிந்திருந்தாலும், இராணுவத்தில் அத்தகைய கொடுமைகளை செய்தவர்களுடன் இன்றைய லாகோஸ் அரசாங்கம் சமரசம் காண முயன்று வருகின்றது. இது ஒரு ''சாதகமான'' தாக்கத்தை கொண்டுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

அலென்டேயின் அரசியல் வாரிசுகள் இராணுவத்தினர் புரிந்த குற்றங்களை மூடி மறைத்தது மட்டுமல்லாமல், இராணுவ சர்வாதிகார ஆட்சி காலத்தில் கடைபிடிக்கப்பட்ட ''சுதந்திர சந்தை'' பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனது மூன்றாண்டு பதவியில் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் அமெரிக்காவுடனும் சிலி சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொண்டிருப்பதாக அவர் பெருமையடித்துக்கொண்டிருக்கிறார். குறிப்பாக அவரது ''வளைந்து கொடுக்கும்'' தொழிலாளர் சட்டங்களால், வரிவருமானத்தை அதிகரிக்கவும் மற்றும் பொருளாதார ''தாராளமயமாக்கலையும்'' செய்யக்கூடியதாக இருப்பதாக லாகோஸ் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

இராணுவம் ஆட்சிப்பொறுப்பை சாதாரண அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் சிலி நாட்டு மக்களில் கால்வாசிப்பேர் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அதிகாரபூர்வமான வேலையில்லா திண்டாட்ட அளவு 10 சதவீதமாக உள்ளது. சிலி தொழிலாள வர்க்கம்தான் உலகிலேயே மிகப்பெரும் அளவில் சுரண்டப்படுகின்றனர்.

தொழிலாள வர்க்கத்துடனான புதிய மோதல்போக்குகள் இப்போது உருவாகி வருகின்றது. ஒரு மாதத்திற்கு முன்னர், ஆகஸ்ட் 16ம் திகதி சிவில் நிர்வாகத்திற்கு எதிராக சிலியில் முதலாவது பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் தொழிற்துறை தொழிலாளர்கள், பொதுத்துறை ஊழியர்களும், வாகன சாரதிகளும், மாணவர்களும் கலந்து கொண்டனர். கட்டுப்பாடற்ற சுதந்திர சந்தை கொள்கைகளுக்கு உறுதியளித்திருப்பதை லாகோஸ் கைவிட வேண்டும் என்பது தான் அவர்களது பிரதான கோரிக்கையாகும்.

செப்டம்பர் 11 அன்று சாந்தியாகோ புறநகரில் ஏழைமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கண்டன பேரணி நடத்தியவர்கள் சாலைத் தடைகளை உருவாக்கியபோது உள்துறை அமைச்சர் ஜோஸ் மிக்கல் இன்சுல்சா, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்டத்தின் முழு வலிமையும் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். இதன் விளைவாக 300 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

1973ம் ஆண்டு மூலோபாய படிப்பினைகள்

புதிய தலைமுறையைச்சார்ந்த தொழிலாளர்களையும், இளைஞர்களையும் லாகோஸ் நிர்வாகம் தன்னால் முடிந்த அளவிற்கு குழப்பிக்கொண்டிருந்தாலும் 1973ம் ஆண்டு நடைபெற்ற இராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை சிலியின் தொழிலாள வர்க்கத்திற்கு மட்டுமல்லாமல் இலத்தீன் அமெரிக்கா மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீர்க்கரமான மூலோபாய அனுபவத்தை தருகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தின் ஜனநாயக அரசாங்கம் என்று அழைக்கப்படுவதற்கு தொழிலாள வர்க்கம் அடிபணிய செய்தவர்களுக்கு அதனால் எத்தகைய இரத்தக்களரி ஏற்படும் என்பதை அன்றைய நிகழ்ச்சிகள் தெளிவாக காட்டியிருக்கின்றன.

சிலியின் ஆளும் குழுவிற்கு வாஷிங்டன் பல ஆண்டுகளாக பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை வழங்கி வந்தமை இவ் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி சாத்தியமானதற்கு காரணமானது என்பதற்கு எவ்வித சந்தேகமும் இல்லை. 1960களில் கென்னடி மற்றும் ஜோன்சன் நிர்வாகங்கள் Eduardo Frei இன் வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயக அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான டாலர்களை வழங்கியுள்ளன.

இவ்வளவு பணத்தை கொட்டியும் 1970ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அலென்டேயின் மக்கள் ஐக்கிய கூட்டணி ஆட்சிக்கு வந்ததை தடுக்க முடியவில்லை. எனவேதான் நிக்சன் நிர்வாகம் குழப்பத்தை உருவாக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. அன்றைய தினம் நிக்சனின் வெளியுறவுக் கொள்கை தலைமை ஆலோசகராக பணியாற்றி வந்த ஹென்றி கிசிங்கர் மிக மோசமான ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். ''ஒரு நாடு அந்த நாட்டு மக்களது பொறுப்பற்ற செயல் காரணமாக கம்யூனிச நாடாக மாறுவதை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்துகொண்டிருப்பது சரியல்ல'' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்ததற்கான முழு அரசியல் பொறுப்பும் மக்கள் ஐக்கிய அரசாங்கத்தின் தோள்களிலையே விழுகின்றது. சிலி தொழிலாள வர்க்கம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என பயந்து கொண்டு நிக்சனும், கிசிங்கரும் 1970ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை கைவிட்டனர். ஏறத்தாழ 3ஆண்டுகள் அலன்டே அரசாங்கம் சிலி நாட்டு பொதுமக்களை ஆட்சிக்கவிழ்ப்புக்கு தயார் செய்தது என்றே கூறவேண்டும். அரசியல் அடிப்படையில் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசியல் கிளர்ச்சி நடைபெறாது தடுத்தார்கள்.

1960 களின் கடைசியிலும் 1970 களின் ஆரம்பத்திலும் உலகம் முழுவதும் போர் குணம் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சியினால் அலன்டே அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்டார். 1970 செப்டம்பர் மாதம் தேர்தல்கள் நடப்பதற்கு முன்னரே சிலிநாட்டு தொழிலாளர்கள் தொழிலாளர் குழுக்களை அமைத்து தொழிற்சாலைகளை கைப்பற்றிக்கொண்டனர். விவசாயிகள் மிகப்பெரும் விவசாய நிலங்களை கைப்பற்றிக்கொண்டனர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் மகத்தான அரசியல் மற்றும் சமூக பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றிக்காட்டி விடலாம் என மக்கள் ஐக்கிய கட்சி ஆதரவாளர்கள் ஒரு மாயையில் இருந்தார்கள்.

இத்தகைய மாய்மாலங்களை உருவாக்கி பரப்புவதில் அரசாங்கத்தின் பிரதான கொள்கை விளக்க கருவிகளாக பயன்பட்டவர்கள் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ''சமாதான நாடாளுமன்ற நடைமுறை வழியில் சோசலிசத்தை'' அடைந்துவிட முடியும் என்ற தத்துவத்தை பிரச்சாரம் செய்தார்கள். நாடாளுமன்றம், நீதி நிர்வாகத்துறை அரசு நிர்வாகத்தோடு ஆயுதப்படைகள் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களது நலன்களுக்காக பணியாற்றுவதற்காக அவர்களை திருப்பிவிட முடியும் என்று ஸ்ராலினிஸ்டுகள் பிரச்சாரம் செய்துவந்தார்கள்.

இந்த தத்துவப்படி அரசாங்க நிர்வாகத்தை சிலியின் பணக்காரக் குடும்பங்களும் நிலப்பிரபுத்துவ முதலாளிகளும், ஆதிக்கம் செலுத்தி வருவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கம்யூனிச எதிர்ப்பு கோட்டையான அமெரிக்க இராணுவம் சிலியின் இராணுவத் தளபதிகளுக்கு பயிற்சி அளித்ததுடன், அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களும் ஐரோப்பாவின் நிதி நிறுவனங்களும் சிலியின் பொருளாதாரத்தின் உயிர் நாடியையே தங்கள் கையில் வைத்துக்கொண்டிருந்தன.

மேலும் அப்போது சிலியில் நிலவிய அரசியல் நெருக்கடி ஏதோ ஒரு தனிப்பட்ட நாட்டில் நடந்துவிட்ட சம்பவம் அல்ல. அதே காலகட்டத்தில் 1968 மே, ஜூன் மாதங்களில் பிரான்சு நாட்டில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. 1969ம் ஆண்டு இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அலை, அலையாக வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. அமெரிக்காவின் போருக்கு எதிராக கண்டனப் பேரணிகளும், நகரப்பகுதிகளில் கலவரங்களும் தீவிரபோர் குணம் கொண்ட தொழிற்துறை போராட்டமும் 1974ம் ஆண்டு நிக்சன் ஆட்சி கவிழ காரணமானது. அதே ஆண்டில் போர்த்துக்கல் மற்றும் கிரேக்க நாட்டு பாசிச இராணுவ ஆட்சிகள் கவிழ்ந்தன. அதே நேரத்தில் பிரிட்டனில் நடைபெற்ற சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் காரணமாக ஹீத் அரசாங்கம் கவிழ்ந்தது.

ஆனால் ஆளும் வர்க்கங்கள் இரத்தம் சிந்துகின்ற எதிர்புரட்சியை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றன என்பது ஏற்கனவே 1965 -1966ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இந்தோனேசியாவின் ஜெனரல் சுகார்ட்டோவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு தந்தது. அப்போது நடைபெற்ற போரில் இந்தோனேஷியாவின் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும் பலியானார்கள். அந்த நாட்டிலும் கூட இந்தோனேசிய ஸ்ரானிச கம்யூனிஸ்ட் கட்சிதான் ''சமாதான வழியில் சோசலிசத்தை அடையப்போகிறோம்'' என்ற கொள்கையை கடைபிடித்து இந்தோனேசிய மக்களை ஒடுக்குவதற்கு உதவியது.

அலென்டே அரசாங்கம் பதவியேற்ற நேரத்தில் உலகில் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி நிலவியது. பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. மத்திய வங்கி கையிருப்புக்கள் அடிமட்டத்திற்கு சென்றதுடன், வெளிநாட்டுக் கடன்கள் உச்சாணிக்கொம்பிற்கு ஏறிக்கொண்டிருந்தன. வெளிநாட்டுக்கடன் எதையும் சிலி பெறமுடியவில்லை.

ஏற்கனவே வறுமையின் பிடியிலிருந்த மத்தியதர வர்க்கமும் தொழிலாள வர்க்கமும் தான் இந்த கொள்கையின் முழுத்தாக்கத்தை தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தெரிந்திருந்தும், இப்படிப்பட்ட பெரும் சுமையான கடன்களை இரத்து செய்வதற்கு பதிலாக அலென்டே சர்வதேச நிதிசந்தையின் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற முடியாத உறுதிமொழியை சமாளிப்பதாக உறுதியளித்தார். ஓராண்டில் வெளிநாட்டுக்கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி மட்டுமே 300 மில்லியன் டொலர்களாக இருந்தது.

இப்படி திட்டமிட்டு பெரு வர்த்தக நிறுவனங்களும் சர்வதேச நிதி அமைப்புகளும் சிலியிற்கு பொருளாதார சீர்குலைவை எற்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் அலென்டே தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பலாத்கார நடவடிக்கைகளில் இறங்க இராணுவத்தின் ஆதரவை நாடினார். பொருளாதாரத்தை முடக்குவதற்காக 1972ம் ஆண்டு முதலாளிகள் செய்த வேலை நிறுத்தத்தை தோற்கடிக்க தொழிலாளர்கள் தொழிற்துறை குழுக்களை உருவாக்கினர். உற்பத்திப் பொருட்களை பதுக்கி வைப்பதை தடுப்பதற்காகவும், பொருட்களை வழங்குவதற்கும் விலை நிர்ணயிப்பதற்குமான தொழிலாளர்கள் குழுக்களை அமைத்தார்கள். 1973ம் ஆண்டு ஜூன் மாதம் வலதுசாரி அணியினர் மேற்கொண்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முக்கிய தற்காப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டன.

மக்கள் ஐக்கிய அரசாங்கம் இத்தகைய தொழிலாளர் முயற்சி ஒவ்வொன்றையும் சீர்குலைத்தது. 1973ம் ஆண்டு ஆரம்பத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மிகுந்த போர்குணம் மிக்க தொழிலாளர்கள் உள்ள பிராந்தியங்களில் இராணுவச்சட்டம் செயல்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகள், பணியாற்றும் இடங்கள் ஆகியவற்றில் இராணுவத்தினர் திடீர் சோதனைகளை நடத்துவதற்கு அலென்டே சட்டபூர்வமான அனுமதியை வழங்கினார். தொழிலாளர்களின் தற்காப்பு போராளி குழுக்களை கலைத்தார்கள். மூன்று தலைமை இராணுவ ஜெனரல்களை தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். அவர்கள் பதவிவிலகியதும் அவர்கள் மீண்டும் அமைச்சரவையில் இணைந்து கொள்வதற்கு முன்மொழிந்தார்.

அந்த நேரத்தில் அலன்டே பகிரங்கமாக இராணுவ ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த வலதுசாரி குழுக்களை சமாதானப்படுத்த முயன்றுவந்தார். இந்த நடவடிக்கைகளில் அலென்டேயிற்கு ஸ்ராலினிஸ்டுகள் முழுமையான ஆதரவு காட்டினர். நாட்டின் பாதுகாப்பில் ஸ்ராலினிஸ்டுகள் ஆழ்ந்த உறுதிப்பாட்டுடன் செயல்பட்டுவந்தன. 1973ம் ஆண்டு ஜூன் மாதம் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததும் ஸ்ராலினிசத் தலைவர் Luis Corvalan பாசிஸ்ட்டுகளிடமும் தீவிர தேசிய கட்சிகளிடமும் கெஞ்சிக்கூத்தாடினர். ''கிளர்ச்சி மிக விரைவாக கட்டுப்படுத்தப்பட்டது. இராணுவ தலைமை அதிகாரி உடனடியாக உறுதிமிக்க நடவடிக்கை எடுத்ததால் இது சாத்தியமாயிற்று. அவருக்கு விசுவாசமாக ஆயுதப்படைகளும் போலீசாரும் செயல்பட்டனர். ஆயுதப்படைகளின் தொழில் முறையிலான இயல்புகளை முற்றிலுமாக நாங்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். அவர்களது எதிரிகள் மக்களிடம் இல்லை. பிற்போக்கு முகாமில்தான் உள்ளனர்'' என்று ஸ்ராலினிச தலைவர் அறிக்கைவிட்டார்.

அப்படியிருந்தும் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதற்கும் இரத்தக்களரி ஒடுக்கு முறைக்கும் தன்னை தயார் படுத்திக்கொண்டு வந்தது. ஸ்ராலினிஸ்டுகளும் சோசலிஸ்டு கட்சிக்காரர்களும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் அடிப்படையில் செயல் இழக்கச் செய்துவிட்டார்கள். தொழிலாள வர்க்கத்தை மட்டுப்படுத்தியதன் மூலமும் இராணுவத்தின் கரத்தை வலுப்படுத்தியதன் மூலமும் ஐந்து மாதங்ளுக்கு பின்னர் ஆட்சி கவிழ்ப்பு நடைபெறுவதற்கான புறநிலமையை அமைத்துத்தந்தனர்.

சந்தர்ப்பவாதத்திற்கு தந்த விலை

மக்கள் முன்னணி அரசாங்கம் காட்டிக்கொடுப்பு எவ்வாறு சாத்தியமாயிற்று என்றால் அலென்டேயாலும் ஸ்ராலினிஸ்டுகளாலும் உருவாக்கிய மாயைகளிலிருந்து தொழிலாளர்களை உடைப்பதற்கும், மாற்று புரட்சிகர தலைமையை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல ட்ரொட்ஸ்கிச கட்சி அப்போது இருக்கவில்லை.

அத்தகைய மாற்று புரட்சிகரத் தலைமையை உருவாக்காததற்கு காரணம் நான்காம் அகிலத்தின் மைக்கல் பப்லோவாலும் எர்னஸ்ட் மண்டேலாலும் தலைமை வகித்து நடத்திச்சென்ற கலைப்புவாத போக்கு காரணமாக மார்க்சிச வேலைத்திட்டமான பாட்டாளி வர்க்க புரட்சியை தூக்கி எறிந்துவிட்டு பிடல் காஸ்ட்ரோவும், சேகுவாராவும் எடுத்து வைத்த கெரில்லா தத்துவங்களை ஆதரிக்க தொடங்கினார்கள். சர்வதேச அளவில் பப்லோவை பின்பற்றியவர்கள் ஒவ்வொரு சர்வதேச அரங்களிலும் அந்தந்த நாட்டுக்கு ஏற்ற அரசியல் சந்தர்ப்பவாதத்தை ஏற்றுக்கொண்டனர். மேலும் நான்காம் அகிலத்தில் இடம்பெற்றுள்ள கட்சியின் சீர்திருத்த அல்லது மத்தியவாத போக்குகளுடன் சேரவேண்டும் என்று கூறினர். இந்த அடிப்படையில் நான்காம் அகிலத்தின் சிலி பகுதி தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டது.

அத்தகைய அரசியல் நோக்குநிலை கொண்ட நான்காம் அகிலத்தின் சிலி பகுதி கலைக்கப்பட்டு, 1964ம் ஆண்டு முன்னாள் கம்யூனிஸ்ட்டுகளாலும் சோசலிஸ்ட்டுகளாலும் காஸ்ட்ரோ ஆதரவு குழுவாக உருவாக்கப்பட்ட MIR என்ற இடதுசாரி புரட்சி இயக்கத்தில் (Movement of the Revolutionary Left) சேர்ந்து கொண்டனர். இந்தக் குழுவின் நோக்கம் சிலி நாட்டில் கெரில்லா இயக்கத்தை உருவாக்குவதாகும். மக்கள் ஐக்கிய கூட்டணி பதவியேற்றதும் புரட்சி சோசலிச முன்நோக்கு கைவிடப்பட்டதன் உண்மை வடிவம் தெளிவாக அம்பலத்திற்கு வந்தது.

அலென்டேயை MIR மிக குறைந்த அளவிற்கே கண்டனம் செய்ததுடன், மக்கள் முன்னணி என்பது சோசலிசத்தை நோக்கி இட்டுச்செல்லும் ஒரு படி என MIR வர்ணித்தது. அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தொழிலாளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டது. சிலியின் தெற்கு பகுதிகளில் நிலமற்ற விவசாயிகளில் கணிசமான பகுதியினர் MIR க்கு ஆதரவளித்தனர். ஆனால், ஸ்பெயின் உள்நாட்டு போரில் மத்தியவாத POUM கட்சியைப்போல் MIR மக்கள் முன்னணி அரசாங்கத்திற்கு அடிபணிந்தது. 1973 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் அலென்டேக்கு எதிராக களத்தில் இறங்கிய வேட்பாளர்களை MIR வாபஸ் பெற்றுக்கொண்டது. தொழிலாளர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் மாற்று அரசாங்கத்தை முன்னிலைப்படுத்தவதற்கு அலென்டேயை எதிர்த்து துணிந்து சவாலாக நிற்க வேண்டிய MIR தனது கொள்கைகளை விட்டுக்கொடுத்தது.

இதுதான் பப்லோவின் ஐக்கிய செயலகம் அப்போது வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலைப்பாடாகும். இது அலென்டேக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்வதற்கான மேடையை அமைத்து கொடுத்தது. அப்போது பப்லோ அணியினர் வெளியிட்ட அறிக்கைகளில் ''அலென்டே ஆட்சி எடுக்கின்ற முற்போக்கு நடவடிக்கைகளுக்கு ஆதரவுதந்து பிற்போக்குவாதிகளின் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் முன்னணியை நிலைநாட்ட வேண்டியது மார்க்சிஸ்டுகளின் கடமை'' என்று அறிக்கை வெளியிட்டனர்.

தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்த்துவைக்க கூடிய ஒரே சக்தியான சிலியின் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் MIR இனுள் கலைக்கப்பட்டதால் 1973ம் ஆண்டு நடைபெற்ற மிகக் கொடூரமான பயங்கர துரோகத்திற்கு பப்லோயிசம் ஊக்கியாக செயல்பட்டது. அதனுடைய பாரிய தாக்கங்கள் தென்அமெரிக்கா நாடுகள் முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் எதிரொலித்தன.

பினோசே ஆட்சியின்போது வலதுசாரி குழுக்களின் கொள்கைகளுக்கு சமூக சோதனை கூடமாக சிலி மாற்றப்பட்டது. பணநடமாட்டம் மற்றும் சுதந்திர சந்தை தொடர்பான வலதுசாரி கொள்கைகள் 1970களின் இறுதியில் சர்வதேச அளவில் வெடித்துச்சிதற ஆரம்பித்தன. றீகன் மற்றும் தாட்சர் அரசாங்கங்கள் பதவியேற்றதும் இத்தகைய வலதுசாரி கொள்கைகள் உலகை ஆக்கிரமித்துக் கொண்டன

பினோசே மேற்கொண்ட பாரிய படுகொலைகள், ஜனநாயக உரிமைகள் பறிப்பு, தொழிலாள வர்க்கத்தை நசுக்கிய போக்கு ஆகிய நடவடிக்கைகள் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் சிலி முதலாளி வர்க்கத்திற்கும் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு வரலாறு காணாத வாய்ப்புக்களை வழங்கியது. பினோசே ஆட்சியில் இராணுவ ஆட்சியாளராக பணியாற்றிய சேர்ஜியோ டு காஸ்ட்ரோ (Sergio de Castro) என்ற அதிகாரி மிகப்பெருமையாக ஒரு கருத்தை தெரிவித்தார். ''ஒரு ஜனநாயக ஆட்சியில் காணமுடியாத, நிலைநாட்ட இயலாத நிர்வாகத்திறமை பினோசேயின் அடக்குமுறை நிர்வாக கட்டுக்கோப்புகளால் உருவானதாக அவர் பெருமையடித்துக் கொண்டார். நிபுணர்கள் உருவாக்கி முன் மாதிரிகளை செயல்படுத்த தங்களால் இயன்றதாகவும், அவற்றை செயல்படுத்துவதற்கும் சமுதாயத்தின் கருத்துகளுக்காக ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை'' என்றும் அந்த இராணுவ அதிகாரி பெருமைபட கூறினார்.

இத்தகைய ''அதிர்ச்சியூட்டும் பொருளாதார வைத்தியத்தை'' வாஷிங்டன் ஆதரித்தது. மில்டொன் பிரீட்மேன் (Milton Friedman) தலைமையிலான ''சிக்காகோ சிறுவர்கள்'' என்னும் பொருளியலாளர்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத வேகத்தோடு தீவீரமான தனியார் மயமாக்கலையும் மறுசீரமைக்கும் நடவடிக்கைகளும் சிலியில் நடைபெற்றது. இப்படிப்பட்ட பொருளாதார சோதனைக்களமாக சிலி மாற்றப்பட்டுவிட்டதால் அந்த நாட்டு மக்களில் பாதிப்பேர் வறுமையில் வீழ்ந்தார்கள். திட்டமிட்டு வேலையில்லா திண்டாட்டம் இரட்டை இலக்கத்தை தொடுவதற்கு இடமளிக்கப்பட்டது.

ஆட்சிக்கவிழ்ப்பை தொடர்ந்து இறுதிவரை அலென்டே ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலி மற்றும் ஐரோப்பிய ஸ்ராலினிஸ்ட்டுகள் வரலாற்றையே திரும்ப எழுத ஆரம்பித்தார்கள். ஆட்சிக்கவிழ்ப்பு துயர சம்பவம் என்றும் வரலாற்றில் தவிர்க்க முடியாதது என்றும் வர்ணித்தார்கள். இவர்களின் விமர்சனத்தில் உண்மை எதுவும் இல்லை. சிலியின் போர்க்குணம் கொண்ட தொழிலாள வர்க்கம் புரட்சிகர போராட்டத்தை நடத்தியிருப்பார்களானால் வர்க்கப் போராட்டத்தில் ஓர் தாக்கத்தை சர்வதேசரீதியாக ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

அந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் முதலாளித்துவம் உயிர் தப்பியதற்கான காரணம் சர்வதேச ரீதியாகவும் மற்றும் சிலியிலும் ஸ்ராலினிஸ்டுகளினதும், சமூக ஜனநாயகவாதிகளினதும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களினதும் காட்டிக்கொடுப்பாகும். இவை தொழிலாள வர்க்கத்தை சோசலிச புரட்சிப்பாதையில் இருந்து திசைதிருப்பின. எனவே இன்றைய தினம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களும், இளைஞர்களும், சிலியின் படிப்பினைகளை சரியாக புரிந்து கொண்டு ஒரு புதிய பொருளாதார சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்பு கொண்ட யுகத்திற்கு தங்களை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும்.

Top of page