WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Hands off Iraq! Withdraw all US forces from the Middle East now! Build an
antiwar movement based on the international working class!
ஈராக்கின் மீது கைவைக்காதே! இப்பொழுதே அனைத்து அமெரிக்க படைகளையும் மத்திய
கிழக்கிலிருந்து திரும்பப்பெறு! சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு, போர் எதிர்ப்பு இயக்கத்தைக்
கட்டி எழுப்பு!
Statement of the Socialist Equlity Party
24
October 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
அக்டோபர் 25ம் தேதி, ஈராக்கின் மீதான அமெரிக்கப்போர், ஆக்கிரமிப்பு ஆகியவற்றை
எதிர்த்து, வாஷிங்டன் டிசி, சான் பிரான்சிஸ்கோ மற்றும் பல நகரங்களில் ஒழுங்கு செய்யப்படும் எதிர்ப்பு கூட்டங்களில்,
கீழ்கண்ட அறிக்கை வினியோகிக்கப்படுகிறது. இது
PDF
format லும் போடப்பட்டுள்ளது. எமது வாசகர்களையும், ஆதரவாளர்களையும் இதை இறக்கம் செய்து
தங்கள் பகுதிகளில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அக்டோபர் 25ம் தேதி, வாஷிங்டனிலும், மற்ற நகரங்களிலும், புஷ் நிர்வாகத்தின்,
ஈராக்கியப்போர், ஆக்கிரமிப்பு கொள்கைகளுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த, மக்கள் பல்லாயிரக்கணக்கில்
தயாராகிக் கொண்டிருக்கும்போது, சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு,
சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கம் ஒன்றை கட்டி அமைக்க அழைப்பு விடுகின்றது.
பெரிய அளவுப் போர் முடிந்துவிட்டது என புஷ் கூறி, ஆறு மாதங்கள் முடிந்த பிறகு,
போர் எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பல்வேறு மூலோபாயங்கள் பற்றி இருப்புநிலைக் குறிப்பு (ஐந்தொகை)
ஒன்றைத் தயாரிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. போருக்கு முன்னால், மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை
தாங்கி நடத்தியவர்கள், நிறுவனங்கள், அரசாங்கங்கள், ஆளும் வர்க்கத்தின் அரசியல் கட்சிகள் ஆகியவற்றின்மீது எதிர்ப்புக்களும்
அழுத்தங்களும் கொண்ட மூலோபாயத்தை ஆதரித்தார்கள். அவற்றினால் என்ன விளைவுகள் கிடைத்து விட்டன?
வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்வதேச எதிர்ப்புப் போராட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு
போர் தொடக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்கள், உலக மக்களின் பெரும்பாலாருடைய கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தியவை
ஆகும். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ, இரண்டு அரசியல் கட்சிகளிலும், செய்தி ஊடகத்திலும் மேலாதிக்கம் செய்யும்
பெருநிறுவன அமெரிக்கா தீவிரமாக விரும்பியதற்கு பதில் கொடுக்கும் வகையில், இராணுவ நடவடிக்கையைத்தான் மேற்கொண்டது.
இந்த அனுபவம், பொய்த்தோற்றத்தை அடிப்படையாக கொண்டுள்ள உத்திகளைவைத்து
போரெதிர்ப்பு முயற்சிகள், ஆட்சியாளர்கள் தங்கள் இராணுவ வெறி, போர் கொள்கைகளை துறக்க வலியுறுத்த
முடியாது என்பதும், ஆக்கிரமிப்பிற்கு பொறுப்பான அரசாங்கங்கள்மீது அரசியல் போராட்டங்கள்தான் மேற்கொள்ளப்படவேண்டும்
என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் பங்கு
இதன் அர்த்தம், புஷ், செனி, ரம்ஸ்பெல்ட் கூட்டாளிகளை எதிர்ப்பது மட்டும் அல்ல,
போர் தொடங்க, அரசியல் ரீதியான பொறுப்பை பகிர்ந்து கொண்ட ஜனநாயகக் கட்சியும் எதிர்க்கப்பட வேண்டும்
என்பதுதான். ஒரு வருஷம் முன்பு, காங்கிரசில், புஷ்ஷிற்கு போர் நடத்துவதற்கு அதிகாரம் வழங்கப்பட்ட தீர்மானத்திற்கு,
ஜனநாயக கட்சியின் தலைமை ஆதரவு அளித்திருந்தது. ஆறு மாதங்கள் முன்பு, ஈராக்கிய வெற்றியை நிலைநிறுத்த, 79
பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்ய, மிகப்பெரிய ஆதரவையும் இக்கட்சி வழங்கியது.
அக்டோபர் 25ம் தேதி அணியை ஏற்பாடு செய்துள்ளவர்கள், ஈராக்கில் தொடர்ச்சியான
ஆக்கிரமிப்புக்கு தேவைப்படும், புஷ் நிர்வாகம் கோரியுள்ள 87 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீட்டை நிராகரிக்குமாறு,
காங்கிரசிற்கு ஒரு முறையீட்டை விடுத்தனர். இவ்வேண்டுகோளை விடுத்த சில நாட்களுக்குள்ளேயே, காங்கிரசின் இருபிரிவுகளும்
நிர்வாகத்தின் கோரிக்கைக்கு, மிகப்பெரிய இருகட்சி ஆதரவுப் பெரும்பான்மையில் ஒப்புதல் கொடுத்தன; செனட்டில்
87-12 என்ற முறையிலும், கீழ்மன்றத்தில் 303-125 என்ற கணக்கிலும். பெரும்பாலான செனட் ஜனநாயக கட்சி
உறுப்பினர்களும், அரைவாசி கீழ்மன்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் சட்டவரைவை ஆதரித்து வாக்கு அளித்தனர்.
ஈராக்கிய எண்ணெய் வள இருப்புக்களை வெற்றி கொள்ளவும், மத்திய கிழக்கில் முக்கிய
இராணுவ
மூலோபாய நிலைகளை பிடிக்கவும்தான் போர், என்ற உண்மையான காரணங்களை கூறினால்,
அமெரிக்க மக்கள் இந்தக் குறிக்கோள்களுக்காக போரை ஆதரிக்க மாட்டார்கள் என்பதால், அவற்றை மறைத்து,
புஷ் பொய் கூறினார். ஜனநாயகக் கட்சி அரசியல் வாதிகளும், இந்த இரகசியக் காரணங்களுக்கு உடன்பட்டவர்கள்
ஆவர். குடியரசுக் கட்சியை விட சற்றும் குறைவல்லாத வகையில்தான் ஜனநாயகக் கட்சியானது, பெறுநிறுவனங்கள்
மற்றும் வங்கிகளின் "தேசிய நலன்களை" பாதுகாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்சி ஆகும்.
இப்பொழுது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பு மனுவில், முன்னணியில் உள்ள ஹோவர்ட்
டீன், போரை எதிர்க்கும் தீவிர ஆர்வமுடையவராக தன்னைக் காட்டிக் கொண்டாலும்கூட, அமெரிக்காவின் ஈராக்கிய
ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறார்; NATO படைகளுக்கு தலைமைதாங்கி,
யூகோஸ்லேவியாவில், 1999ம் ஆண்டு, மின்னல்முறைத் தாக்குதல் நடத்திய, ஜெனரல் வெஸ்லி கிளார்க்கும் இப்படித்தான்.
இவ்விரு வேட்பாளர்களும், போர் தேவையற்றது, சட்டவிரோதமானது, எனக்கூறிக்கொண்டே, ஈராக்கின் எண்ணெய்
வளம், நாடு இரண்டையும் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கு ஒப்புதலும் கொடுத்துக்கொண்டே, இரண்டும்
வேண்டும் என நினைக்கிறார்கள்.
ஜனநாயகக் கட்சியின் டெனிஸ் குசிநிக், மேம்போக்காக தீவிர போரெதிர்ப்பு நிலைப்பாட்டோடு,
ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறார். ஆனால், அமெரிக்கப்படைகளுக்கு
பதிலாக, ஐ.நா. அமைதிப்படை அனுப்ப படவேண்டும் எனக்கூறும்போது, ஒரு காலனித்துவ பாணியிலான
ஆட்சிமுறைக்குப் பதிலாக, மற்றொரு காலனித்துவ ஆட்சி வேண்டும் என்றுதான் கருத்துக் கொண்டுள்ளார். அமெரிக்கப்
படைவீரர்களாலோ, பிரிட்டிஷ் படைவீரர்களாலோ கொல்லப்படுவதைவிட, துருக்கிய அல்லது பாகிஸ்தானிய படைவீரரால்
கொல்லப்படுவது, ஈராக்கியர்களுக்கு "மனிதாபிமானமாக" தோன்றப்போவதில்லை.
ஐக்கிய நாடுகள் சபை, அமைதி காக்கும் அமைப்பு அல்ல. ஏகாதிபத்திய நாடுகளின்
கருவியாகத்தான் அது செயல்பட்டு வருகிறது. போர் தொடக்க சூழ்நிலையில், அமெரிக்கா
ஈராக்கை தாக்க உடன்படும் தீர்மானத்தை தடுக்க, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா
ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. பாரசீக வளைகுடா மற்றும் எண்ணெய் வளத்தை அமெரிக்க மேலாதிக்கம்
கட்டுப்படுத்த மேற்கொண்ட அச்சுறுத்தலினால், தங்களுடைய ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கத்தான் அவை அவ்வாறு
நடந்து கொண்டன. அதற்குப் பின்னர், அமெரிக்காவின் புதிய பங்கிற்கு ஏற்ப, அவை தங்களை மாற்றிக் கொண்டுள்ளன.
ஐ.நா.பாதுகாப்பு சபை ஈராக்கை அமெரிக்கா வெற்றிகொண்டதை உறுதிப்படுத்தி,
மிகச் சமீபத்தில், ஈராக்கில் நீண்டகாலம் அமெரிக்கா தொடர்ந்து ஆக்கிரமிப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் ஒரு
தீர்மானத்தையும் போட்டுள்ளது. ஈராக் கிட்டத்தட்ட அமெரிக்க காலனிபோல் மாறுவதற்கு தன்னுடைய இசைவை ஐ.நா.
இவ்வாறாக கொடுத்துள்ளது.
அமெரிக்க மக்களின் நலன்களுக்கு, ஈராக்கின் மீதான தொடர்ந்த கட்டுப்பாடு உகந்தது
என்ற கூற்றை, சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. மாறாக, இந்தக் காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கான
அதிகமான தியாகங்களுக்கு, இரத்தம், பணம் ஆகியவற்றை கூடுலதாகக் கொடுக்கவேண்டிய செலவினங்கள், அமெரிக்க
தொழிலாள வர்க்கத்திலிருந்து கறந்தெடுப்பதன் மூலம்தான் பெறப்படும். மேலும் மேலும் அமெரிக்க இளைஞர்களின்
உயிர்கள் கவரப்படும் அல்லது அவர்கள் முடமாக்கப்படுவார்கள், அதேவேளை தொழிலாளர்களுடைய சமூக நிலைகள்,
வேலைகள், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின்மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. புஷ்ஷின் 87 பில்லியன் டாலர்கள்
பணம், முதல் தவணைதான்.
ஈராக்கின்மீது அமெரிக்கா கூடுதலாகத் தன் பிடியைக் கொள்ளும் வரை, புஷ் நிர்வாகம்
புதிய இராணுவ தீரச்செயல்களில் ஈடுபட தைரியத்தைப்பெறும். ஏற்கனவே, சிரியா, ஈரான், வடகொரியா ஆகிய
நாடுகளுக்கு எதிரான பொய்களும், பிரச்சாரங்களும் தொடங்கி, அமெரிக்க வலியத்தாக்கும் நடவடிக்கைகளுக்கு அடுத்த
இலக்குகள் யாவை என்பதை வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவிற்குள்ளேயே, இராணுவவாதத்தின் வளர்ச்சியானது, அமெரிக்க
மக்களுடைய ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்துகின்றது; "பயங்கரவாத்தின் மீதான போர்" என்று ஏற்கனவே கடுமையான
அடக்குமுறைகளால், அவை புரையோடிவிட்டன.
இராணுவவாதம் மற்றும் போரை எதிர்த்துப் போராட ஒர் மூலோபாயம்
முதலாளித்துவ ஆளும் செல்வந்தத் தட்டின் அடிப்படை நலன்களுக்கு எதிராக ஒருபொழுதும்
ஒத்துப்போகமுடியாத தன்மையை மோதலில் கொண்டுள்ளதும், தன்னுடைய ஆற்றலைத்திரட்டி, ஏகாதிபத்திய போருக்கு
முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய திறனை பெற்றுள்ள, பரந்த சமூக சக்தி அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும், ஒன்றுதான்
உள்ளது. அந்த சக்திதான் தொழிலாள வர்க்கம் ஆகும்.
போருக்கெதிரான போராட்டம், புஷ் நிர்வாகத்திற்கும், இருகட்சி முறைக்கும் எதிராக
இயக்கப்படும் ஒரு அரசியல் இயக்கத்தில் உழைக்கும் மக்களை அணி திரட்டுவதை அடிப்படையையாகக் கட்டாயம்
கொள்ள வேண்டும். போரை எதிர்க்கும் போராட்டம், வேலைகள், சமுக நலன்கள், வாழ்க்கைத்தரம், ஜனநாயக
உரிமைகள் இவற்றை அழிப்பதற்கு எதிரான போராட்டத்தோடு கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கும், மத்தியகிழக்கு, மத்திய ஆசியா
இவற்றிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளையும் உடனடியாக நிபந்தனையின்றி திரும்பப் பெறக்கோரவும் தொழிலாளர்களையும்,
இளைஞர்களையும் சோசலிச சமத்துவக் கட்சி அழைக்கிறது.
நேரடி அமெரிக்க ஆட்சிக்குப் பதிலாக, ஐ.நாவின் மூலம் மறைமுகமான காலனித்துவ
ஆட்சியை நிறுவும் முயற்சியை நாம் கண்டிக்கின்றோம். ஈராக்கிலிருந்து அனைத்து வெளிநாட்டுப் படைகளும் கட்டாயமாக
திரும்பப்பெறப்பட்டு, ஈராக்கிய மக்கள் தங்கள் விதியை தாங்களே நிர்ணயம் செய்துகொள்வதற்கு சுதந்திரமாக விடப்பட
வேண்டும்.
ஈராக்கிலான ஒரே சர்வதேசத் தலையீடு, மகத்தான அளவில் பொருளாதார மற்றும்
தொழில்நுட்பத் துறையில் உதவி அளிப்பதாகவே இருக்க வேண்டும்; இது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இருநாடுகளும்
கொடுக்கும் இழப்புத் தொகையிலிருந்தும், கடந்த 12 ஆண்டு காலமாக ஈராக்கின் பொருளாதாரத்தை நாசப்படுத்தியுள்ள
பொருளாதாரத் தடைகளை ஆதரித்த பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தும் வசூலிக்கப்பட
வேண்டும்.
போருக்குச் செல்லவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதன் பின்னணி பற்றி விசாரணை நடாத்த
சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது; ஈராக்கிய மக்களுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போர் நடாத்த சதி செய்த
அமெரிக்க, பிரிட்டிஷ் அதிகாரிகள்மீது, குற்றவிசாரணை தாக்கலும், வழக்குகளும் தொடரப்பட வேண்டும். அத்தகைய
விசாரணையின் அடிப்படையில் ஈராக்கிற்கு கொடுக்கப்படவேண்டிய போரிழப்புத் தொகையுடன், அமெரிக்க வீரர்கள்,
அவர்கள் குடும்பங்களுக்கு, புஷ் நிர்வாக முடிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், உடல் உறுப்புச்சேதங்கள் இவற்றிற்கான
இழப்புத்தொகையும் இணைக்கப்பட வேண்டும்.
அத்தகைய விசாரணையில், செப்டம்பர் 11ம் நாள் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய
முழு விசாரணையும், மத்திய கிழக்கில் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் பங்கு பற்றியும், அல்கொய்தா அமைப்பின்
தோற்றம், பயிற்சி, இப்பொழுதுள்ள நடவடிக்கைகள், நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான தாக்குதல்கள்
ஆகியவற்றில் அமெரிக்க உளவுத்துறை முகவாண்மையின் பங்கு பற்றியும் அடங்கியிருக்க வேண்டும்.
அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்குப் பின்னால் ஜனநாயகக் கட்சி அணிவகுத்து
நிற்பதைக் காணும்போது, புஷ் நிர்வாகத்திற்கு இது மாற்றாக அமையாது என்பதை விளக்கி காட்டுகிறது. அமெரிக்க
உழைக்கும் மக்கள் அரசியல் ரீதியாக வாக்குரிமையிழந்து இருக்கின்றனர்; பெருநிறுவன செல்வந்தத் தட்டால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள
இரு கட்சி முறையையும் அவர்கள் சுமந்து நிற்கின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எப்பொழுதும் உறுதியுடன் எதிர்க்கும்
சோசலிச வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தனது சொந்த புதிய அரசியல் கட்சியை தொழிலாள வர்க்கம்
கட்டாயம் ஸ்தாபிக்க வேண்டும்.
வரலாற்றின் படிப்பினைகளை அமெரிக்க உழைக்கும் மக்கள் கட்டாயம் நன்கு கற்றுக்
கொள்ள வேண்டும். எமது எதிரி ஈராக்கிய மக்களோ, முஸ்லிம் உலகோ அல்லது பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனா
போன்ற வலிமைபடைத்த போட்டி நாடுகளோ அல்ல. எமது எதிரி, அமெரிக்க பெருநிறுவனங்களின் செல்வந்த தட்டினர்தான்;
அவர்கள்தாம் அரசியலில் தங்கள் பணியாளர்களான, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினர் மூலம் அரசாங்கத்தைக்
கட்டுப்படுத்துகின்றனர். சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கருவியாகக் கட்டுவதுதான்
மாபெரும் மூலோபாயப் பணியாகும்.
Top of page
|