WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Political victimisation of SEP member in Sri Lanka
இலங்கை சோசலிச சமத்துவ கட்சி உறுப்பினர் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
By M. Aravindan and Sarath Kumara
16 October 2003
Back to screen version
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (SEP)
உறுப்பினர் T. சுப்ரமணியம் அடிப்படை உரிமைகள் செயல்பாடு
தொடர்பான (FRA) வழக்கை தொடர்வதற்கு இலங்கை உச்சநீதி
மன்றம் செப்டம்பர் 26-அன்று அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர்
Cey-nor என்று அழைக்கப்பட்ட, North Sea Ltd
நிர்வாகம் நியாயத்திற்கு புறம்பாக அவரை ஆகஸ்ட் 18-அன்று பதவியிலிருந்து நீக்கியது தொடர்பானது இந்த வழக்கு
ஆகும். நவம்பர் 21-ந்தேதி நடைபெறவிருக்கின்ற அடுத்த விசாரணை வரைக்கும் சுப்ரமணியத்தை கம்பெனியில் பணியாற்றவும்
சம்பளம் வாங்கவும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டது.
அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஒரு அரசியல் பழிவாங்கலாகும். சுப்ரமணியம் நீண்டகால
SEP உறுப்பினரும் யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதியில்
தொழிலாள வர்க்கத்தின் நலனை கொள்கை அடிப்படையில் பேணிக்காப்பவர் என்பதில் நன்கு அறியப்பட்டவருமாவார். இலங்கை
இராணுவப் படையினர் நாட்டின் தமிழ் சிறுபான்மையினரது உரிமைகளை ஒடுக்குவதற்கு போர் புரிந்து வருவதை அவர்
எதிர்த்தார், அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)
தொழிலாளர்கள் முன்னேறுவதற்கு எந்தவிதமான வழியையும் காட்டவில்லை என்பதையும் வலியுறுத்தி வந்தார்.
சுப்ரமணியம் அரசிற்கு சொந்தமான நிறுவனமான
North Sea factory ல் பண்டகசாலை பணியாளராக
1977-முதல் பணியாற்றி வருபவர், மற்றும் அவர் செயலுக்கமான வேலை நிலைமைகளையும் வேலைகளையும் தற்காத்து
நிற்கும் தொழிற்சங்கவாதியும் ஆவார். அவர் தனது 55-வது வயதில், சென்ற நவம்பர் மாதம், அதிகாரபூர்வமாக ஓய்வு
பெற்றார். சிறீலங்காவின் சட்டப்படி சேவை நீடிப்பு அனுமதி பெறுவதன் மூலம் ஓய்வுபெற்ற பின்னரும் ஒரு ஊழியர் அதே
பணியில் நீடிக்க முடியும்.
சுப்பிரமணியம் சில நாட்கள் உத்தியோக ரீதியாக எடுத்திருந்த விடுப்பிற்கு பின்னர், ஆகஸ்ட்15-ந்
தேதி மீண்டும் பணிக்கு வந்தபோது, ஜூலை-31ந் தேதியன்று அவருக்கு பதவி நீக்க நோட்டீஸ் தரப்பட்டது.
2003-மே-25-ந் தேதிக்கு பின்னர் அவருக்கு "எந்தவிதமான பதவி நீடிப்பும் தரப்படவில்லை அல்லது பதவி நீடிப்பை
பெறுவதற்கு அவர் முயற்சிக்கவும் இல்லை" என்பதாக அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது மற்றும் கம்பெனிகளுக்கு சொந்தமான
சொத்துக்களை ஒப்படைத்து விடுமாறும் அறிவுறுத்தி இருந்தது. ஆகஸ்ட்-18ந் தேதியன்று அவர் அதிகாரபூர்வமாக பதவி
நீக்கம் செய்யப்பட்டார்.
பதவி நீக்கத்திற்கு கம்பெனி நிர்வாகம் கூறியிருக்கின்ற காரணம் வெறும் கட்டுக்கதை.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது 60-வது வயதில் சுப்ரமணியம் பதவி நீடிப்பு கோரி மனுச்செய்திருந்தார்.
சென்ற நவம்பரில் அவருக்கு மூன்று மாதங்கள் பதவி நீடிப்பு தரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி மாதம் மீண்டும்
ஓராண்டு பதவி நீடிப்பு கோரி மனுச்செய்தார். மேலும் 3-மாதங்கள் அவருக்கு பதவி நீடிப்பு தரப்பட்டது. அதே நேரத்தில்
அவருக்கு எழுத்து மூலம் தந்தார்கள். அதில் நிர்வாக இயக்குனர்கள் குழு அவரது பதவி நீடிப்பு தொடர்பான மனுக்களை
பரிசீலனை செய்யும் என்று ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. கம்பெனி தலைவரான கே.சுந்தரலிங்கம் பின்னர்
தொலைபேசியில் சுப்ரமணியத்திற்கு ஒரு தகவல் தந்தார். புதிய சுற்றறிக்கையில் கண்டுள்ள அரசாங்க கொள்கைப்படி
சுப்ரமணியம் அவரது 57வது வயதில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
கம்பெனி நிர்வாகம் சுப்ரமணியம் அந்த கம்பெனி தொழிற்கூடத்தில் பணியாற்றவில்லை என்று
கருதுவதாக எந்த சமிக்கையும் காட்டவில்லை. ஜூலை மாதம் வரை அவருக்கு வழக்கமான மாதாந்திர ஊதியமும் இதர
சலுகைகளை வழங்கினர். அவர் விடுப்பிற்கு மனுச்செய்தபோது அதிகாரபூர்வமாக அவரது விடுப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மே-25-அன்று அவர் ஓய்வு பெற்ற ஊழியராக கருதப்பட்டிருப்பாரானால் இது எதுவும் நடந்திருக்காது.
அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தேசிய ஐக்கிய முன்னணி (UNF)
இந்து மத விவகாரங்கள் அமைச்சராக பணியாற்றி வருபவரும் அந்நிறுவனத்தை நேரடியாக மேற்பார்வை செய்து
வருபவருமான டி.மகேஷ்வரனுக்கும் அவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. உள்நாட்டு போரினால் சிதைந்துகிடக்கும்
யாழ்ப்பாணம் வடக்கு மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஒரு சில தொழிற்கூடங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஜூலை-25-அன்று சுப்ரமணியம் கம்பெனி பொது மேலாளர் குகராஜனை அணுகி தொழிலாளர்களுக்கு
உரிய மாதாந்திர ஊதியம் ஏன் வழங்கப்படவில்லை என்று கேட்டார். கேட்ட தினத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழக்கப்பட்டிருக்க
வேண்டும். சுப்ரமணியம் இலங்கையின் மெர்க்கன்டைல் மற்றும் தொழிற்சாலை மற்றும் பொது தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின்
(CMU) உள்ளூர் கிளையின் தொழிற்சங்கத் தலைவர் ஆவார்.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5-ந்தேதி அமைச்சர் மகேஷ்வரன்
North Sea கம்பெனிக்கு விஜயம் செய்தபோது சுப்ரமணியத்திற்கு
எதிராக வெடித்துச் சிதறினார். ஊதியத்தைப் பற்றி கேட்பதற்கு நீங்கள் யார்? என்று சும்ரமணியத்தை பார்த்து மந்திரி
மகேஷ்வரன் சவால் விட்டார் மற்றும் "உங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளை தொழிற்சாலைக்கு வெளியில் வைத்துக்கொள்ளுங்கள்"
என்று கூச்சலிட்டார். முந்தைய மக்கள் கூட்டணி அரசாங்க அமைச்சரும் ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP)
தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு 600,000 ரூபாய் மதிப்புள்ள
($US6,349) மீன்பிடிப்பு வலைகளை சுப்ரமணியம் கொடுத்ததாக அமைச்சர் மகேஷ்வரன் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டு கொச்சையான அரசியல் அவதூறாகும்.
EPDP- அமைப்பைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குண்டர்கள்
யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதி முழுவதிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் அவர்கள் உள்நாட்டுப்
போரின்போது இலங்கை இராணுவத்தோடு நெருக்கமாக ஒத்துழைத்தவர்கள்.
EPDP- க்கும்
SEP- க்கும் அடிப்படையிலேயே அரசியல் வேறுபாடுகள் உண்டு.
SEP- தொடர்ந்து அவர்களது கொள்கைகளையும் வழிமுறைகளையும் எதிர்த்து வருகின்றது. 2000-ம் ஆண்டு
தொடக்கத்தில் EPDP- குண்டர்கள், ஊர்காவற்துறை தீவில்
உள்ளூர் மீனவர்களது உரிமையை காக்கப் போராடிக்கொண்டிருந்த SEP-
உறுப்பினர்களை கொலை செய்ய முயன்றார்கள்.
சுப்ரமணியம் உச்சநீதி மன்றத்தில் அடிப்படை உரிமைகள் தொடர்பாக தாக்கல் செய்த
மனுவில் தனது பணி நீக்க உத்தரவு குறிப்பு முன்தேதியிட்டு வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் அமைச்சர் மகேஷ்வரனுடன்
கொண்ட தகராறு என்ற உண்மையான காரணத்தினால் தான் தனக்கு பணிநீக்க உத்தரவு இடப்பட்டிருக்கின்றது.
ஜூலை31-என தேதியை திட்டமிட்டு மாற்றியிருப்பதற்கு காரணம் அமைச்சருடன் மோதல் ஏற்பட்டதன் விளைவாக பணி
நீக்கம் நடைபெறவில்லை. என்ற தோற்றத்தை உருவாக்கத்தான். அரசியல் ரீதியில் இழிவுபடுத்தும் முயற்சி துல்லியமாக
அவரது நீண்ட மற்றும் கொள்கை அடிப்படையிலான பதிவுச்சான்றின் காரணமாக ஆகும்.
தொழிலாளர்களின் பாதுகாப்பு
1970-களின் தொடக்கத்தில் மீன்பிடி வலைகளையும் படகுகளையும் கட்டுவதற்காக
Cey-nor நிறுவனம் உருவாக்கப்பட்டது. இரண்டு தொழிற்சாலைகள்
அந்த நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்தன. சுமார் 1500-ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். 1970-களின் மத்தியில் இருந்து
தொடர்ந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் அந்த தொழிற்சாலையில் சுமார்-30 தொழிலாளர்கள்தான்
பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4-பேர் நிரந்தர ஊழியர்கள் 2001-ஜூலை மாதம்
North Sea நிறுவனத்திற்கு
Cey-nor கம்பெனி மாற்றப்பட்ட போது இந்த ஊழியர்கள் அப்படியே
பணியில் அமர்த்திக்கொள்ளப்பட்டனர், மற்றவர்கள் தற்காலிக ஊழியர்கள் ஆவர்.
இத்தகைய ஆட்குறைப்புகளையும் தொழிற்சங்க தலைமையின் துரோகத்தையும் கடந்த இருபது
ஆண்டுகளுக்கும் மேலாக சுப்ரமணியம் எதிர்த்து வருகிறார். தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக நிற்பவர்
சுப்ரமணியம் என்பது யாழ்ப்பாணம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
1976-ம் ஆண்டு இலங்கையில் இலங்கையின் சுதந்திரக் கட்சி
(SLFP) தலைமையில் கூட்டணி அரசாங்கம் நடைபெற்றது. இலங்கை சமசமாஜக்கட்சியும் (LSSP)
கம்யூனிஸ்ட் கட்சியும் அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. அப்போது தீவின் தென்பகுதியில் துல்கிரியா தொழிற்சாலையில்
6,000-ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தலைமை தாங்கியதற்காக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
SEP- யின் முன்னோடியான புரட்சி
கம்யூனிஸ்ட் கழகம் (RCL)
வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை காப்பதற்காக யாழ்ப்பாணம் உட்பட இயக்கங்களை, பொதுக்கூட்டங்களை
நடாத்தியது. சுப்ரமணியத்தின் முயற்சியின் காரணமாக துல்கிரியா வேலை நிறுத்த நிதிக்கு
Cey-nor நிறுவன
ஊழியர்கள் ஒரு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கினர். இப்படி நன்கொடை வழங்கியது பாதிக்கப்பட்ட
தொழிலாளர்களுக்கு நிதி உதவியது மட்டுமல்லாமல், அரசாங்கம் கிளப்பிவிட்டுக்கொண்டிருந்த இனவாத நச்சு வித்திற்கு
மரண அடி கொடுத்தது. Cey-nor
ஊழியர்களில் மிகப்பெரும்பாலோர் தமிழர்கள்; துல்கிரியா தொழிற்சாலையில் பணியாற்றியோர்
பிரதானமாக சிங்களவர்கள்.
1991-ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம்
Cey-nor தொழிற்சாலையை
மூடிவிட்டு 100 வேலைகளை குறைக்க திட்டமிட்டதை எதிர்த்ததில்
RCL- ம் சுப்ரமணியமும்
பிரதான பங்காற்றினர். CMU
தொழிற்சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்துள்ள இலங்கை பொறியியல் தொழிலாளர் சங்கமும் வேலைகளை
பாதுகாக்க போராட மறுத்துவிட்டன மற்றும் அதற்குப் பதிலாக மிக சொற்ப தொகையான 20,000-இழப்பீட்டில்
விருப்ப ஓய்வு பெறும் திட்டம் என்று அழைக்கப்படும் திட்டத்தை செயல்படுத்துவதில் நிர்வாகத்தோடு ஒத்துழைத்தன.
Cey-nor ஊழியர் தூதுக்குழு ஒன்று
கொழும்பிற்கு பயணம் செய்தது. அங்கு CMU-
தலைமையுடன் பேச்சு நடத்த கோரியது. தங்களது வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருப்பதற்கும் இலங்கையின் உள்நாட்டுப்
போர் தொடர்பான பரந்த பிரச்சினைக்கும் மற்றும் பொருளாதார சீரமைப்பிற்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் விடுத்திருக்கும்
கோரிக்கைகளுக்கும் சம்மந்தம் இருப்பதாக அந்த தூதுக்குழுவினர் விளக்கினர். இப்படி உறுதியான நிலைப்பாட்டை
ஊழியர்கள் மேற்கொண்டதால் தான் நிர்வாகம் தனது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கி தொழிலாளர்களில் சிலரை பணியில்
அமர்த்திக்கொள்ள முன்வந்தது.
சுப்ரமணியம் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு உடனடியான சாக்குபோக்கு எதுவாக
இருந்தாலும், அது தொழிலாளர்கள் மீதான புதிய தாக்குதலுக்கு நிர்வாகம் தயாரிப்பு செய்து வருகின்றது என்பதன் ஓர்
கூர்மையான எச்சரிக்கையாகும். பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கோரி வருகின்ற மிகத் தொலைநோக்கிலான
பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில்
UNF- அரசாங்கம் பரந்த அளவில் சம்மந்தப்பட்டிருக்கின்றது. அதில்
பொதுத்துறை முழுவதும் கடுமையாய் ஆட்குறைப்பு செய்வது மற்றும் அவற்றை தனியார்மயமாக்குவது உள்ளடங்கும்.
North Sea
கம்பெனி நிர்வாகம் சுப்ரமணியம் கம்பெனியில் சீர்திருத்தம் செய்வதற்கு தடைக்கல்லாக இருப்பதாக வெளிப்படையாகக்
கருதுகிறது மற்றும் எந்த மாற்றமும் செய்வதற்கும் முன்னர் அவரை பணியிலிருந்து நீக்குவதற்கு முயன்று வருகின்றது. |