World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Schröder's "Agenda 2010" and his offensive against the German population

ஷ்ரோடருடைய "2010 செயற்பட்டியலும்" ஜேர்மன் மக்களுக்கு எதிரான அவருடைய தாக்குதலும்

By Ulrich Rippert
11 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஏறக்குறைய ஓராண்டிற்கு முன்பு குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேர்மனியின் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர், (ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி - SPD) குறைந்தது ஐந்து தடவைகளாவது தனித்தனி நேரங்களில் இராஜிநாமா செய்வதாகப் பயமுறுத்தியுள்ளார். ஒவ்வொரு முறையும், ஜேர்மன் சமூக அமைப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதல்கள் நடத்தும் இவருடைய "2010 செயற்பட்டியல்" (Agenda 2010) பற்றி குறை கூறுபவருக்கு எதிராக இந்த இராஜிநாமா பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. அதிபர் தன்னுடைய கட்சிக்குள்ளேயே இதைப்பற்றி எதிர்ப்புக் கூறுவோரை, தொடர்ந்து கடுமையாகத் தாக்காமல் ஒரு நாள்கூடச் செல்வதில்லை.

SPD யில் ஒரு பிரிவினருக்குச் செப்டம்பர் கடைசியில் நடந்த கூட்டம் ஒன்றில், தன்னுடைய "செயற்பட்டியல் 2010" க்கு எதிராக வாக்களிப்பவர்கள், அவரோ அல்லது அவளோ, அரசாங்கம் கவிழக்கூடியநிலை வரைதான் அவ்வாறு செய்வதாக தெளிவுடன் தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் எச்சரித்தார். SPD-பசுமைக் கட்சி அரசாங்கத்தில் இவருடைய "சீர்திருத்த"ப் பட்டியலுக்கு அரசாங்க முகாமில் பெரும்பான்மை கிடைக்கும் நிலை இல்லையென்றால் அது முடிந்துவிடும் எனவும் வலியுறுத்தினார்.

இப்படிப் பயமுறுத்தியும்கூட, ஜேர்மன் சுகாதாரமுறை பற்றிய அரசாங்கத்தின் சீர்திருத்தத்தின்பால் நிகழ்ந்த பாராளுமன்ற விவாதத்தின் மீதான வாக்கெடுப்பில் 6 SPD உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர். SPD உடைய பாராளுமன்ற பிரிவின் வாக்குகள் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் போடப்பட்டால்தான், அது எதிர்க்கட்சிகளின் வாக்குகளை நம்பியிருக்கத் தேவையில்லையென ஷ்ரோடர் வலியுறுத்தியிருந்தார். இருந்தும்கூட, பல பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க வராமற்போனதால் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.

ஷ்ரோடரும், SPD யின் தலைவர் பிரான்ஸ் முன்ரெபெரிங்கும் (Franz Müntefering) இந்த "இல்லை" என்று போடப்பட்ட வாக்குகளுக்கு கோபத்துடன் எதிர்விளைவுகளை கட்சிக்குள் காட்டினர். "கோழைகள்", "குறுகிய புத்தி படைத்தவர்கள்" என்று எதிர்ப்பாளர்களை சாடிய முன்ரெபெரிங், அவர்கள் பாராளுமன்ற உறுப்பனர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார். "ஸீகைம் வட்டங்கள்" (Seeheim Circles) எனப்படும் கட்சிக்குள் இருக்கும் வலதுசாரி அமைப்புக் கூட்டங்களில் இக்கோரிக்கை பல முறைகள் எழுப்பப்பட்டுள்ளன.

அக்டோபர் 17 ம் தேதியன்று முக்கியமான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் வரவுள்ளது. வேலையின்மை, சமூக நலத்திட்ட உதவிகள் இரண்டையும் ஒருங்கிணைக்கும் நோக்கம் கொண்ட, ஏற்கனவே அமைச்சர் குழுவினால் முடிவு காணப்பட்டுவிட்ட, நடவடிக்கைத் தொகுப்புக்கள் மீதான வாக்கு அன்று எடுக்கப்பட இருக்கிறது. இந்நடவடிக்கைகள், சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றுள்ள பிரிவினரின் வாழ்க்கைத்தரத்தில் இன்னும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சீர்திருத்தத்தின் நோக்கமானது, நீண்டகாலம் வேலையற்று இருப்பவரை எவ்விதமான குறைந்த ஊதியத்திற்கும் கட்டாயமாக ஏற்கவைப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. அரசாங்க உதவிகள் குறைந்த ஊதியத்தோடு இணைக்கப்படுதல் மற்றும் கட்டாய உழைப்பு புகுத்தப்படுதல் என்பன முன்பு ஜேர்மனியில் வைமர் குடியரசுக் காலத்தில்தான் (Weimar Republic) இருந்தது.

அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் "முன்னேற்றங்களைப்'' பொறுத்து நடைமுறைத் தொகுப்பிற்கு ஆதரவு தரப்படும் என்ற கோரிக்கையை வைத்தபோது, ஹனோவரில் ஒரு தொழிற்சங்க கூட்டத்தில் பேசிய ஷ்ரோடர், அவருடைய தலைமையில் சீர்திருத்தத்தின் தன்மை பற்றி எந்தவிதமான மாறுதல்களும் கொண்டுவரப்படமாட்டா என்று அறிவித்தார். கட்சி வேறு எந்தக் கொள்கையைக் கொண்டு வந்தாலும் அதன்படி தான் நடக்க இயலாது என்று ஷ்ரோடர் அறிவித்ததோடு, இராஜிநாமா செய்வேன் என்று பழைய படியும் பயமுறுத்தினார்.

''ஜனநாயக இடது 21'' (Democratic Left 21) என்ற அமைப்பின் பேச்சாளரான Detlev von Larcher, அதிபர் ஷ்ரோடர் "பொறுத்துக் கொள்ளமுடியாத அளவிற்கு மிரட்டுபவர்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார். "தனிப்பட்ட உறுப்பினர்கள்" அரசியலமைப்பு விதிகளின்படி, அதற்குத்தான் பதில்கூற வேண்டியவர்களே ஒழிய, அதிலும் சில தெளிவான கொள்கைகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மிகப்பெரிய அழுத்தத்திற்கு நிரந்தரமாக உட்படுத்தப்படும் நிலை ஏற்கத்தக்கது அல்ல என்றும் வலியுறுத்தினார்.

எந்த எதிர்வாதங்களையும் ஆக்கிரோஷத்துடன் தகர்த்தும் மற்றும் பேசவிடாமல் செய்துவிடும் ஷ்ரோடருடைய போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பாராளுமன்றப்பிரிவின் தலைவரான Muntefering ம் அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்ப்பாளர்களை அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் அச்சுறுத்தி வருகிறார். அவருடைய முக்கிய வாதமே "வாயை மூடிக்கொண்டிருங்கள்" என்பதுதான். பேர்லினிலுள்ள அரசாங்கம் நாளுக்கு நாள், முற்றுகைக்குட்பட்ட ஆட்சிபோல், கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. செய்தி ஊடக விமர்சகர்கள் ஏற்கனவே அதிபரின் அந்திப்பொழுது (Kanzlerdammerung) என்றும், ஊழிக்காலமுடிவு (Endzeit) என்றும் பேசத்தலைப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

ஏதும் செய்யமுடியாத இழிநிலையும் கோபமும் கலந்த சூழல், அதிபரின் அலுவலகத்தில் இருப்பதற்குக் காரணம், சில உறுப்பினர்களின் பொறுப்பற்ற தன்மை அல்ல. ஒவ்வொரு வாய்ப்பின் பொழுதும் அவர்களே, தாங்கள் குறைகள் கூறினாலும் கூட அரசாங்கத்தின் பெரும்பன்மையை ஆபத்திற்கு உட்படுத்தமாட்டோம் என்றே கூறி வந்துள்ளனர். அரசாங்கத்தின் பிரச்சனை, அதன் கொள்கைகள் மிகப்பெரிய முறையில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதுதான்.

பல கருத்துக்கணிப்புக்களும், நிறுவனங்களும் ஜேர்மன் "பொது மக்கள்" கூடுதலான சீர்திருத்தங்களை கேட்கிறார்கள் என்றும், அதற்காக புது புள்ளி விவரங்களைச் சேர்த்து, அரசாங்கம் தன்னுடைய கெள்கைகளை இன்னும் ஊக்கமாகச் செயல்படுத்திக் காட்டவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. இத்தகைய "பொதுமக்கள் கருத்து" மிகச்செயற்கையான முறையில் செய்தி ஊடகங்களாலும் கருத்தை உருவாக்குபவர்களாலும் தோற்றுவிக்கப்படுகின்றனவே ஒழிய, அவை பெரும்பாலான மக்களின் உண்மை உணர்வுகளுக்கு எதிரானதாகும்.

தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்துவதோடு, "செயற் பட்டியல் 2010" ற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் கூட, பெருகி வரும் மக்களின் எதிர்ப்பு நன்கு புலனாகும் முறையில் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே ஹெஸ் மாநிலத்தில் வசந்தகாலத்தில் நடந்த தேர்தல்களில், SPD மிகக்குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் ஆதரவை இழந்துள்ளது. சிலவாரங்கள் முன்பு, இதையும் விட மோசமான முறையில் பவேரியாவில் நடைபெற்ற தேர்தல்களில் SPD 700,000 வாக்குகளை இழந்துள்ளது. மொத்த வாக்கு எண்ணிக்கையில் அது 10 சதவீதம் குறைவிற்குட்பட்டுவிட்டது. போருக்குப்பிந்தைய ஜேர்மனியின் வரலாற்றில், முதல்முறையாக மொத்தத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் SPD பெற்றுள்ளது.

அரசியலில் தாழ்ந்த பங்கைபெற்றுள்ள SPD க்கு பவேரியாவில் மட்டும் இந்த நிலை காணப்படவில்லை. பொதுவாக SPD க்கு அதிக ஆதரவு கிடைக்கும் பெரிய நகரங்களின் தொழிலாளர் தொகுதிகளிலும், இதற்கான தற்போதைய ஆதரவு பெருமளவில் குறைந்து வருகின்றது.

ஜேர்மனி முழுவதும் வளர்ந்துள்ள மற்றொரு நிகழ்ச்சியும் இதைத் தெளிவாகக் காட்டியுள்ளது. இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 30,000 உறுப்பினர்களை அது இழந்துள்ளது. சாதாரண எதிர்ப்பைக்காட்டிலும் தொலைவிளைவுகளை ஏற்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த வகையில், பெரிய அளவில் உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை சரியான முறையில் புலப்படுத்தி வருகின்றனர். முன்பு எதிர்ப்பு அணிகளும் ஆர்ப்பாட்டங்களும், கட்சித் தலைமையின் போக்கை மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையில் நடத்தப்பட்டன. இப்பொழுதோ, பல விடயங்களிலும் அரசியல் நியாயம் உள்ள வகையில் கட்சி விலகல்கள் அறிவிப்புக்கள் வந்துள்ளன. இந்த போக்கை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை முழுமையாக இழக்கப்பட்ட நிலையில்தான் இத்தகைய விலகல்கள் நடைபெறுகின்றன.

Der Spiegel என்னும் செய்தி ஏடு SPD க்கு அனுப்பப்படும் விலகல் கடிதங்கள், மரபுவழியிலான சமூக ஜனநாயக மதிப்புக்களுக்கான தங்களுடைய பற்றைத்தெரிவித்து, பின்னர் ஷ்ரோடர், முன்ரெபெரிங் தலைமையை கொண்டுள்ள கட்சியின்பால் தாங்கள் இயல்பு நிலையைக்காண இயலாது என்று தெரிவிக்கின்றன. 1990 ல் ஜேர்மனி ஒன்றாகியபோது, இக்கட்சி 950,000 பதிவான உறுப்பினர்களை கொண்டிருந்தது. ஆகஸ்ட் 1, 2003ல் இவ்வெண்ணிக்கை 664,000 ஆகக்குறைந்தது; சமீபத்திய மாதங்களின் போக்கு விரைவில் வெளியேற்றம் என உள்ளது. இந்த ஆண்டு முற்பகுதியில் மட்டும் கொடுக்கப்பட்ட விலகல் கடிதங்கள் 2002 ம் ஆண்டு முழுவதும் கொடுக்கப்பட்ட விலகல் கடிதங்களுக்குச் சமமான அளவாகும்.

பல கீழ்மட்ட கட்சிப் பொறுப்பாளர்கள் திகைத்து செயலற்றுள்ளனர். நிறைய பகுதிகளிலும் கட்சி அலுவலகங்கள், இடங்கள் ஆகியவற்றை மூடுதல் அல்லது மற்ற பகுதியோடு இணைத்தல் என்று நடக்கிறது. Der Spiegel தெரிவித்துள்ளபடி, SPD உள்ளூர் தலைவர் ஒருவர் மேற்கு மாநிலமான சார் பகுதியில் ராஜிநாமா செய்துள்ள உறுப்பினர்களோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். இதற்குக் கிடைத்த பதில் ஏமாற்றத்தையே தந்தது. கட்சி பழைய உறுப்பினர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறது என்பது தெரியவந்தவுடனேயே, பல இராஜிநாமா கடிதங்கள், "தொலைபேசியில் தொடர்பு கொள்ளாதீர்கள்" என்ற தகவலையும் ஆணித்தரமாக சேர்த்து எழுதப்பட்டன.

கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள், பெரும்பாலான மக்கள் ஆகியோரிடம் பெருகியுள்ள எதிர்ப்பிற்கு ஷ்ரோடருடைய எதிர்விளைவு, அடிப்படை ஜனநாயக மரபுகளைத் துடைத்துக் கட்டுவதாக இருக்கிறது. பவேரியாவில் கட்சி தகர்ந்துவிடக்கூடிய முறையில் தோல்வியை அடைந்ததற்கு அவருடைய உடனடி விளைவு, தன்னுடைய அரசியல் போக்கில் மாற்றம் ஏதும் இருக்காது என வலியுறுத்தலுடன் உறுதியாக நின்றதுதான். "என்னுடைய தலைமையில் வேறு எந்தக் கொள்கையும் இருக்காது" என்று அவர் அறிவித்தார். அதாவது, நீங்கள் எப்படி வாக்களித்தாலும், நாங்கள் எங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுவதாக இல்லை. நாங்கள் இவற்றைச் செய்யாவிடில், மற்றவர்களும் இதைத்தான் செய்வார்கள் என்பதாகும்.

அரசியல் நடைமுறையில் தனிச்சிறப்புடன் செயல்படுவதற்காக SPD யின் பாராளுமன்றப் பிரிவு இவ்வாறு சர்வாதிகாரத் தோரணையுடன் இயங்கவில்லை. ஓர் அரசாட்சி, எவ்விதத்தில் கீழ்மட்ட எதிர்ப்பு வெளிப்பட்டாலும் அதை ஈவிரக்கமின்றி நசுக்கிவிடவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் செயற்படுகின்றது. கட்சியின் ஒவ்வொரு செயலாளரும், பொதுமக்கள் விருப்பத்திற்கும் வாக்காளர் விருப்பங்களுக்கும் எதிராகச்செயல்படும் உறுதியைக் காட்டவேண்டும் என்ற வலியுறுத்ததலின் வெளிப்பாடாக இருக்கின்றது.

ஒத்துழைக்காத சட்டமன்ற உறுப்பினர்களின் போக்கு "கோழைத்தனமானது" என முன்ரெபெரிங் கூறியிருப்பது மிக முக்கிய சிந்தனையைப் புலப்படுத்துகிறது. "அழுக்கடைந்த 12 பேர்கள்" எனப்படும் சந்தர்ப்பவாத உறுப்பினர்கள் உண்மையிலேயே, குறிப்பிட்ட கொள்கைகளுக்காக வீரத்துடன் நிற்காதவர்கள்தாம். ஆனால், ஒரு பாராளுமன்ற பிரிவின் தலைவரிடமிருந்து இத்தகைய சொற்கள் வரும்பொழுது அவை விந்தையான கருத்தாக உள்ளது. வேலைகொடுக்கும் எசமானர்களின் ஒவ்வொரு கடைசி அசைவிற்கும் எதிர்ப்பின்றி நடனமாடும் அரசாங்கம், ஒரு பிற்போக்கு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஜேர்மனிய மஞ்சள் பத்திரிகை கூறுவதற்கெல்லாம் அவசரமாக சட்டங்களியற்றுகிறது. இந்த அரசாங்கம், ஆழ்ந்த அளவில் மக்கள் விருப்பத்திற்கு உட்படாத நடவடிக்கைகளைக் கடுமையான முறையில் உறுதியுடன் சுமத்துவதைப்பற்றி, மன உறுத்தல் கொண்டவர்களின் ஆர்ப்பாட்டத்தை கோழைத்தனம் வாய்ந்தது எனக் கூறுகிறது.

ஷ்ரோடர், முன்ரெபெரிங், கட்சிப் பொதுச்செயலாளர் ஓலப் ஷ்லோஸ், பாதுகாப்பு மந்திரி பீட்டர் ஸ்ட்ரக் இன்னும் பல கட்சித் தலைமையில் உள்ளவர்கள், "ஜனநாயகத்தை காத்திடல்" என்பதை ஜேர்மனியின் ஆட்சி உயர் சிறுகுழுவின் நலன்கள் எதிர்ப்பை ஈவிரக்கம் காட்டாமல் நசுக்கி, பாதுகாத்தல் என விளக்கம் கொடுக்கின்றனர். 1920 களிலும் 1930 களிலும் இருந்ததைப் போலவே, இத்தகைய போக்கு மிகுந்த வலதுசாரி சக்திகளுக்கு வழி அமைத்துக் கொடுத்துவிடும். பொதுவாக பிரான்சிலும், மற்ற நாடுகளிலும் உள்ள சமூக ஜனநாயக சக்திகள் போலவே, ஜேர்மனியின் SPD யும் வலதுசாரி அணியின் நலன்களைத்தான் முன்னேற்றுவிக்கிறது.

CDU வலதுபுறம் திரும்புதல்

SPD உடைய பூசல்களினால், பழமைவாத CDU (Christian Democratic Union) தலைமையிடத்தின் விளைவு, மேலும் வலதுபுறம் பாய்ந்து செல்லும் போக்காக இருக்கின்றது. தேர்தல் பின்னடைவு எனும் ஆபத்திலிருந்து விடுதலை என்பதால், அதிதீவிர-பிற்போக்கான சமுக நல வெட்டுக்களுக்காக வெளிப்படையாகவே ஆர்ப்பரித்து இக்கட்சி இப்பொழுது கவலையின்றி ஈடுபடலாமெனக் கருதுகிறது.

CDU உடைய தலைவியான Angela Merkel, அவருடைய ஆதரவை ஒற்றுமைக்குட்பட்டுள்ள ஜேர்மன் சுகாதார பாதுகாப்புத் திட்டத்திலிருந்து முழுமையாக முறித்துக்கொள்ளலாம் என்றும், Herzog குழுவென அழைக்கப்படுவதின் திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதாகவும் சமீபத்தில் அறிவித்துள்ளார். ஹெர்சாக் பரிந்துரையானது, வருமானத்தை கணக்கிடாமல் ஒவ்வொரு காப்பீடு செய்துகொள்ளும் நபரும் ஒரே அளவு தொகையைக்கட்ட வேண்டுமென்றும், குடும்பம் முழுவதும் காப்புக்கட்டணங்களால் பயன்பெறுவது நிறுத்தப்படும் என்றும் கூறுகிறது. அதன் விளைவு, ஏழைக் குடும்பங்கள் மீதும், நிறைய குழந்தைகள் உள்ள குடும்பங்களிலும் அழிவை ஏற்படுத்தும். வசதி உடையவர்கள் பைகளில் கூடுதலான பணத்தை இத்திட்டங்கள் சேர்க்கும். இக்கட்சியின் துணைத் தலைவர் பிரெடெரிக் மெர்ஜ், புதுத்திட்டங்களை கட்சியின் சார்பில் "CDU விற்குள் சமூக ஜனநாயக கட்சியின் செல்வாக்கு இத்துடன் முடிவடைந்து விட்டது" எனக்கூறி வரவேற்றார்.

ஹெஸ் மாநிலத்தின் பிரதம மந்திரியான ரோலண்ட் கொச், மெர்ஜைப் போன்றே CDU வின் தீவிர வலதுபக்கம் சார்ந்தவர். "போருக்குப் பிந்தைய சேமிப்பு வரலாற்றிலேயே மிகப்பெரிய திட்டம்" என்று ஒரு திட்டத்தை அளித்தார். கொச், தேசிய அரசாங்கத்தின் வலதுசாரிப் போக்கினால் ஊக்கம் பெற்றதோடுமட்டுமின்றி, ஒரு நேரடியான ஆதரவை SPD உறுப்பினரான வட ரைன் மேற்கு பாலியா மாநிலப் பிரதம மந்திரி பீர் ஸ்டீன்பேர்க்கிடம் இருந்து பெற்றதில் நன்மையும் அடைந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து, ஜேர்மன் நலன்புரி அரசை குறைக்கும் தன்மை கொண்ட திட்டங்களுக்கு பரந்த பட்டியல் போட்டுள்ளனர்.

Schleswig-Holstein ன் பகுதியைச் சேர்ந்த, நிதி ஆலோசகரும், தொழில்நுட்ப வல்லுனருமான ஸ்டீன்பேர்க்கை, அரசாங்கத்தில் பழைய பிரதம மந்திரியான Wolfgang Clement (SPD) சேர்த்துக் கொண்டார். பின்பு அவர் மாநில தலைமைப் பொறுப்பிற்கு பதவி உயர்வு பெற்றார். அவர் ஒருபொழுதும் உயர் பதவிக்கு வருமுன் தேர்தலில் நின்றதில்லை. இந்த முழுமையான மழுங்கிப்போன அதிகாரத்துவத்தின் பிரதிநிதி, ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்பகுதியில் சமூக, அரசியல் விளைவுகளைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல், சமூக நலத்திட்டங்களில் கடுமையான வெட்டுக்களை கொண்டு வந்துள்ளார். கட்சியிலிருந்து விலகல்கள் இப்பகுதியில், குறிப்பாக ஒரு காலத்தில் "சமூக ஜனநாயகத்தின் இதயம்'' எனக் கருதப்பட்ட இடத்தில் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன.

கூர்மையற்ற எதிர்ப்பு

SPD உள்ளேயான எதிர்ப்பு உறுப்பினர்கள், கட்சியின் வலதுசாரிப் போக்குத் தலைமைக்கு மாற்றுத்திட்டம் எதையும் கொடுக்கும் நிலையில் இல்லை. Frankfurter Rundschau என்ற பத்திரிகையானது இவர்களுடைய பங்கைப்பற்றி விளக்குகிறது. "கடந்த காலம் போலவே, இப்பொழுதும் எதிர்ப்பு நிலையிலிருந்து சமூக ஜனநாயக கட்சியின் புதிய விலகல்களை தடை செய்யவேண்டும். இதுதான் இடதுகளுடைய நோக்கமாகும்."

இந்த இடதுகள் என்று அழைக்கப்படுபவர்களின் நிலைப்பாட்டின் தன்மை மனவேதனையாகும். கட்சி சிதைகிறது பற்றிய மனக்குமுறல், தங்களுடைய பாராளுமன்ற சலுகைகள் நிறைந்த இடங்கள் போய்விடுகின்றனவே என்ற குமுறல், சமூக ஸ்திரப்பாடு முடிவடைகிறதே என்ற வேதனை, எல்லாவற்றிற்கும் மேலாக கட்சித்தலைமை வலதுபுறம் பாய்ந்து செல்வதால் பெரும்பாலன மக்கள் தீவிர மாற்றத்திற்குட்படுவதைத் தாங்கள் கட்டுப்படுத்தமுடியால் இருக்கிறோமே என்ற மனக்குமுறல் அனைத்தும் இவர்களிடம் உள்ளது.

1930 களில் சமூக ஜனநாயகத்தைப் பற்றி லியோன் ட்ரொட்ஸ்கி இரண்டு மைல்கற்களுக்கு இடையில் ஊன்றிக் கொள்ள தத்தளித்துக்கொண்டு இருக்கின்றது என்று கூறியது இப்பொழுதுதான் துல்லியமாக நடக்கிறது. கட்சி உறுப்பினர்கள் கொடுக்கும் அழுத்தம் கீழுக்கு, கட்சித்தலைமை அதிபர் அலுவலகம் கொடுக்கும் அழுத்தம் மேலுக்கு என தங்கள் நிலையை பொறுத்துக்கொள்ள முடியாமல் போகிறதைப் பற்றி இடதுகள் புகார் கூறுகின்றனர். கட்சியின் பலபிரிவுகளையும், ஒன்றாக சிதறாமல் காக்க அவர்கள் முயல்வதுடன் உறுப்பினர் எண்ணிக்கை சரியாமலும் பார்க்கின்றனர். உண்மையில் இது ஒரு வீணான காரியம்தான்.

1970 களின் சீரிய சமூக சீர்திருத்தக் காலம் பழையபடி வருவதற்கு இனி வழியில்லை. SPD உடைய சிதைவானது ஆழமான புறநிலை வேர்களைக் கொண்டுள்ளது. SPD யின் கொள்கைகள், அதன் அனைத்து அதிகாரங்களையும் எதிர்த்து ஜனநாயகம், சமூக சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்தும் வேலைத்திட்டத்தை கொண்டுள்ள ஒரு கட்சியை கட்டியெழுப்புதல் என்பது தவிர்க்கமுடியாத தேவையாக உள்ளது.

Top of page