World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: Brandenburg intelligence service slanders the World Socialist Web Site ஜேர்மனி : பிராண்டன்பர்க் உளவுப்பணித்துறை உலக சோசலிச வலைதளத்தை அவதூறுக்கு உட்படுத்துகிறது Statement by the WSWS Editorial Board கிழக்கு ஜேர்மன் மாநிலமான பிரண்டன்பேர்க் (Verfassungsschutz) ன் உளவுப்பணித்துறை, தன்னுடைய வலைத் தளத்தில், உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) வன்முறையை வளர்க்கிறது என்ற அவதூறுக்கு உட்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. WSWS வன்முறைப்போக்கு உடைய "இடது தீவிரவாதத்தின்" ஒரு பகுதி என்ற கூற்றை இக்கட்டுரை முன்வைக்கிறது. WSWS ஆசிரியர்குழு இந்த அவதூறான குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிப்பதுடன், உளவுப்பணித்துறை தன்னுடைய அறிக்கையை திரும்ப பெற்றுக்கொள்ளவும், WSWS உடைய பதிலை வெளியிடவும் அதனை கட்டாயப்படுத்த சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் உரிமையையும் கொண்டுள்ளது. உளவுப்பணித்துறையின் கட்டுரை, சோசலிச, ஜனநாயக நோக்கங்களை தொடரும், ஒரு online வெளியீட்டின் மீது தீய எண்ணத்தோடு அவதூறு வெளிப்படுத்தும் ஒரு கட்டுரையாகும். இது ஜேர்மனிய அரசியல் அமைப்பை காக்கும் கடமை படைத்தது எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் ஒரு துறையால் பேச்சுரிமை மீது நடத்தப்பட்டுள்ள ஒரு தாக்குதலாகும். பிராங்போர்ட் (ஓடெர்) நகரத்தில் குடிவரவு-அகல்வு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடந்த இடத்தில், கண்டு எடுக்கப்பட்ட, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் WSWS ல் வெளிவந்த கட்டுரை ஒன்றை ஆதாரமாகக் கொண்டு, உளவுத்துறை இந்த குற்றச்சாட்டை நியாயப்படுத்தி இருக்கிறது. செப்டம்பர் 16ம் தேதி விடியற்காலையில், யாரோ இவ்வலுவலக ஜன்னல்களை உடைத்து, துர்நாற்றம் வீசும் திரவத்தை உள்ளே எறிந்திருக்கிறார்கள். இதைத்தவிர, வெளிப்புறக்கதவுகளில் பசைகளும் பூசப்பட்டு, கோஷங்கள் வெளிச்சுவர்களில் ஸ்பிரே பூச்சில் பூசப்பட்டிருந்தன. WSWS கட்டுரை, ஜேர்மனிய அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோர் பற்றிய அரசியல் திறனாய்வு கருத்தாகும். அதனை "சட்டப்படி குறைகூறலுக்கு உட்படுத்தமுடியாதது" என உளவுத்துறையே ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆயினும்கூட, இக்கட்டுரை இந்த "தீவிரமான இடதுசாரி பின்னணி கொண்ட செயலுக்கு" WSWS கட்டுரை சாட்சியம் என உளவுத்துறை மேற்கோளிட்டு கூறுகிறது. இக்கட்டுரை, இதேபோன்ற வெளியீடுகளோடு ஒன்று சேர்ந்து வன்முறையைத்தூண்ட அல்லது செய்ய மனப்பாங்கை ஏற்படுத்தும் தன்மையுடையது" என்று ஆணித்தரமாகப் பேசுகிறது. "அத்தகைய உரைகள் குற்றச்செயல்களுக்கு வழியமைக்கின்றன" என்ற வார்த்தைகளுடன் அவை முடிகின்றன.இந்த குற்றச்சாட்டுக்களைப் பற்றி கீழ்க்காணும் கருத்துக்கள் கூறப்பட்டே ஆகவேண்டும் : 1. உலக சோசலிச வலைதளம், ஒரு சோசலிச வெளியீடே ஒழிய, "தீவிர இடதுசாரி" வெளியீடு அல்ல. இது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வெளியிடப்படுகிறது; இதன் ஜேர்மானிய பகுதி (Socialist Equality Party -PSG) சோசலிச சமத்துவக் கட்சி ஆகும். சோசலிச நோக்கிற்காகவும், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை காப்பதற்கும் இது உறுதி பூண்டுள்ளது. PSG, ஜேர்மன் தேர்தல்களில், பலமுறை பங்கு பெற்றுள்ளதோடு, ஜேர்மன் தேர்தல் ஆணையத்தால், அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும். தனிநபர் வன்முறை வழிகளை கொள்கை அடிப்படையில் இது நிராகரிக்கிறது. 2. தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் கண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கட்டுரை, WSWS ல் பெப்ரவரி 24, 2001 (ஆங்கிலத்தில் மார்ச் 8, 2001) தேதியன்று, The deadly consequences of Germany's refugee policy என்ற தலைப்பில், வெளியிடப்பட்டு, ஜேர்மன் அரசாங்கத்தின் வெளிநாட்டவரை பற்றிய கொள்கையை திறனாய்வு செய்தது. கட்டுரை உண்மைகளை அளித்ததிலும், அரசியல் மதிப்பீடு செய்ததிலும், சரியானமுறையில் இருந்தது. புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சீற்றமடைய வைக்கும் நிலைமைகள் பற்றி கடுமையாக குறைகூறியதோடு, ஜேர்மானிய, ஐரோப்பிய எல்லைகளில் போலீசாரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இறந்த அல்லது காயமுற்றோரின் எண்ணிக்கையையும் சரியாகக் கொடுத்தது. ARD தொலைக்காட்சி நிகழ்ச்சியான Monitor, ARI Antiracist Initiative Berlin, மற்றும், tageszeitung செய்தித்தாள் ஆகியவை உட்பட, பொதுவாக எல்லோராலும் எளிதில் சரிபார்க்கக்கூடிய அறியப்படக்கூடிய தகவல்களை, ஆதாரம் கொண்டுள்ளது; ஜேர்மனிய கூட்டாட்சி அரசாங்கத்தின் இரட்டைப்பேச்சை, இக்கட்டுரை கடுமையாக சாடுகிறது; அது "வெளியாருக்கெதிரான வன்முறை, புதிய நாஜிகளாலும், தெருக்களில் உள்ள இனவெறியாளர்களாலும் இழைக்கப்படும்பொழுது" வாடிக்கையாக கண்டித்தாலும், "அகதிகளுக்கு எதிரான செயல்களைப்பற்றி அரசாங்கம் தெரிவிக்கும் செய்திகள், புதிய நாஜிகள் கூறும் அவதூறான 'தேவையற்ற வெளியாரின் உயிர்கள் மதிப்பற்றவை' என்பதை உறுதிபடுத்துவது போல்தான் அமைந்துள்ளன." 3.பிரண்டன்பேர்க் உளவுப்பணித்துறையின் கூற்றான, இத்தகைய கட்டுரையின் வெளியீடு வன்முறையை வளர்க்கிறது அல்லது உற்பத்தி செய்கிறது என்பது, பரந்த உட்குறிப்புக்களை கொண்டுள்ளது. இது அரசாங்க கொள்கைகள் பற்றிய எந்த திறனாய்வையும், சட்டவிரோத நடவடிக்கை என்ற சுற்றுவட்டத்தில் இருத்திவிடுகிறது. இது ஏற்கப்பட்டால், ஒரு குழம்பியுள்ள மனிதனோ, தூண்டப்பட்டவனோ, சில ஜன்னல்களை உடைத்தாலே, அரசாங்கத்தின் அரசியல் விரோதிகளை பேச்சற்ற நிலைக்கு தள்ள போதுமான காரணமாகி விடும். இதே வாதத்தின் அடிப்படையில், ஜேர்மனிய அரசாங்கத்தின் "செயற்பட்டியல் 2010" பற்றி குறை கூறுவோர் எவரும், வேலையில்லா இளைஞன் ஒருவன் எதுவும் செய்யமுடியாத நிலையில், பைத்தியம் பிடித்து அலைந்தால், அதற்கும் காரணம் எனப்பட்டுவிடுவர். அல்லது யூரோ முறையை ஸ்வீடனில் அறிமுகப்படுத்துவதை எதிர்ப்பவர், அதைப் பற்றிய வாக்கெடுப்பின் உச்சகட்டத்தில், யூரோ தேவை என வாதாடிய ஸ்வீடனின் அயலுறவு மந்திரி அந்நா லிண்ட் (Anna Lindt) குத்திக் கொலை செய்யப்பட்டதற்கு வழியமைத்து கொடுத்தவர் என எவரும் குற்றஞ்சாட்ட முடியும். 4. இத்தகைய வாதங்கள், ஜேர்மன் வரலாற்றின் மிக இருண்ட நாட்களைத்தான் நினைவு கூருகின்றன. இங்கு, பாசிச, ஸ்ராலினிச போலீஸ் அரசுகளின் பலபத்தாண்டுகளின் அனுபவம் நிறைந்துள்ளது. அத்தகைய போலீஸ் ஆட்சிகள் எப்பொழுதும் அரசாங்கம் பற்றிய அரசியல் குறைகூறுதலை, வன்முறையை ஆதரித்தலுக்கு சமம் என்றே கருதிவந்துள்ளன-- அதன் மூலம் தங்கள் அரசியல் விரோதிகளை கடுமையாக அடக்கு முறைக்கு உட்படுத்துவதை நியாயப்படுத்தியுள்ளன. ஜேர்மன் அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள, பேச்சுரிமை, மிகத்தெளிவாக, குற்றச்சாட்டு வழக்கிற்கு ஒருவர் தன்னை ஆக்கிக் கொள்ளாமல், அரசாங்கத்தை குறைகூறவியலும் என்றே கூறியுள்ளது. 5. WSWS சம்பந்தமான, தன்னுடைய கூற்றான தீவிர இடதுசாரி என்பதை, உளவுத்துறை ஓர் அரை-உண்மைகள் மற்றும் பொய்க்கூற்றுக்களின் கலவையின் மூலம் நியாயப்படுத்தியுள்ளது. WSWSல் வெளிவந்துள்ள கட்டுரை "இச்செயலுக்கான தீவிர இடதுசாரிப் பின்னணியை" நிரூபிக்கிறது என ஒருபுறத்தில் கூறுகிறது. மற்றொருபுறம், தாக்குல் சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுத்ததாகக் கூறப்படுவது, கட்டுரையின் தீவிர இடதுசாரி தன்மைக்கு ஆதாரம் காட்டுகிறது எனக் கூறுகிறது. இது உண்மையிலேயே ஒரு வட்டச்சுற்று வாதமாகும். வன்முறையை தூண்டிவிடும் தன்மை, எனக் கட்டுரையில் ஒரு பகுதியையும் காணமுடியாத நிலையில், உளவுத்துறை தன்னுடைய கருத்துக்களை அதன்மீது சுமத்தியுள்ளது. அவர்கள் எழுதுவதாவது; "பல தீவிர இடதுசாரி வெளியீடுகளில், அரசாங்கம் தன்னுடைய நடவடிக்கைகளாலேயே, நேரடியாக தீவிர வலதுசாரிகளை, வெளிநாட்டாரையும், அகதிகளையும் வன்முறையை கையாண்டு அணுகுவதற்கு ஊக்குவிக்கிறது என வாதிக்கப்படுகிறது. அதன்மூலம், அரசாங்கம் தன்னுடைய உண்மையான பாசிச முகத்தை காட்டுகிறது. எனவேதான், பாசிச எதிர்ப்பாளர்கள் அரசாங்கத்தை தங்கள் விரோதியாக கருதவேண்டும்." மீண்டும் உளவுப்பணித்துறை ஒரு சுற்றுவட்ட வாதத்தைத்தான் முன்வைக்கிறது.WSWSன் கட்டுரை "தீவிர இடதுசாரி" என உறுதியளித்தபின், இதை நிரூபிக்க கற்பனையான "இடதுசாரி வெளியீடுகளிலிருந்து சொற்றொடர்களை அறிமுகப்படுத்துவதின் மூலம் முயலுகிறது. இத்தகைய சொற்றொடர்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள WSWS கட்டுரையில் எந்த இடத்திலும் காண்பதற்கில்லை. அறிவிப்பில் அரசாங்கம் "அதன் உண்மையான பாசிச முகத்தைக் காட்டுகிறது" என்பது Red Army Faction (RAF) உடைய வீண்சொல்லை எதிரொலிக்கிறது; இது WSWS மீது ஏற்றப்பட்டுள்ளது, உளவுப்பணித்துறையின் கண்டுபிடிப்பே ஒழிய வேறு ஒன்றுமில்லை. 6. ஜேர்மன் உளவுத்துறை, ஊடுருவல்கள் மற்றும் தூண்டிவிடுதல்கள் மூலம், தன் வேலையைச் செய்கிறது என்பது பொதுவாகவே அறியப்பட்ட விஷயமாகும். மிகப்பரந்த அளவில், அவர்கள் சில வலதுசாரி அணியில் ஊடுருவி, அவர்களுடைய இரகசிய பணியாளர்கள் அக்குழுக்களின் வன்முறைச் செயல்களிலும் பங்கு கொண்டுள்ளனர். 1970 களின் முற்பகுதிகளிலேயே இரகசிய உளவுப்பணி முகவர்கள் Celle நகரச் சிறைச் சுவரில் கன்னமிட்டு, செம்படைப் பிரிவின் உறுப்பினர் ஒருவரை வன்முறையில் விடுவிக்கும் போலி முயற்சி ஒன்றில் ஈடுபட்டனர். இவ்வாண்டு வசந்த காலத்தில், சட்டப்படி புது-நாஜிச தேசிய ஜனநாயகக் கட்சி (National Democratic Party), NPD அதன் முன்னணி உறுப்பினர்களில் 7ல் 1பங்கினர் ஜேர்மன் உளவுத்துறையின் சம்பளத்தைப் பெறுகிறார்கள் எனத் தெரிந்தபோது, கட்சியே சரிந்தது. NPD ஊடுருவுதலின் பரந்த தன்மை, ஒரு நீதிபதியை, கட்சியின் பல செயல்களும் அரசாங்கத்தின் ஏற்பாட்டினால் நடைபெறுகின்றன எனக் கூறவியலும் என்று சொல்லவைத்தது. வன்முறையில் ஈடுபட்ட வலதுசாரி தீவிரவாதிகளை பிரண்டன்பேர்க் உளவுத்துறை வேலைக்கு அமர்த்திய தொடர் சம்பவங்கள் பல தெரியவந்துள்ளன. இடதுசாரி பிரிவும் இத்தகைய ஊடுருவல்களுக்கு உட்பட்டுள்ளன; இந்த அரசாங்கத்தின் உள்துறை மந்திரி, பரந்த வலதுசாரி வன்முறை சம்பவங்களுக்கு இடையே, "இடது தீவிரவாதத்தை குறைத்து மதிப்பிடல்" பற்றிய ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கையை வாடிக்கையாக விடுக்கிறார். இச்சூழ்நிலையில், இக்கேள்வியை எழுப்பத்தேவை ஏற்பட்டுள்ளது; செப்டம்பர் 16ம் தேதி, பிராங்க்போர்ட் குடிவரவு-அகல்வு அலுவலகத்தில் நடந்த தாக்குதலில், உளவுத்துறை ஒற்றர்கள் தொடர்பு கொண்டிருந்தனரா? என்ன அறிவித்திருக்கிறதோ, அதைவிட உளவுத்துறைக்கு அதிக அளவு விஷயங்கள் தெரியுமா? WSWS கட்டுரையை, அவ்விடத்தில் சேர்ப்பித்த திட்டத்தில் அது நேரடித்தொடர்பு கொண்டிருந்ததா? WSWS பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கும், பிராங்போர்ட் குடி வரவு-அகல்வு அலுவலகத் தாக்குதல் பற்றிய அதிகாரபூர்வமான விசாரணையிலும், வினோதமான வேறுபாடு உள்ளது. இவ் வழக்கின் அதிகாரபூர்வ அரசாங்க வக்கீல், தாக்குதல் பற்றிய இரண்டு வார தீவிர விசாரணை எந்த பலனையும் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இவ்விசாரணை பற்றி அதிக முயற்சிகள் கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை. தன்னுடைய பங்கிற்கு பிரண்டன்பேர்க் உளவுத்துறை, தாக்குதல் நடந்த பின்னர், ஒரு கட்டுரையை வெளியிட்டு, உண்மைத் தாக்குதல் பற்றி சில வரிகளும், அதன் உள்ளடக்கத்தில் ஐந்தில் நான்கு பங்கு WSWS பற்றியும் எழுதியுள்ளது. |