WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரித்தானியா
Britain: Blair was responsible for naming whistleblower Kelly
பிரிட்டன் : கெல்லியின் பெயரை வெளியிட்டதற்கு பிளேயர்தான் பொறுப்பு
By Jule Hyland
16 October 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
ஜூலை 18ம் தேதி, அரசாங்க விஞ்ஞானி, டாக்டர் டேவிட் கெல்லியின் பெயரை செய்தி
ஊடகத்திற்கு வெளியிட வழிவகுத்த செயல் முறைகளில் உடன்பாடு கண்ட கூட்டத்திற்கு பிரதம மந்திரி பிளேயர்தான்
தலைமை தாங்கினார் என்ற, மீளாப் பழிக்கு ஆட்படுத்தும் ஒப்புதலை, பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தரச்செயலாளரான
சேர் கெவின் டெபிட் கொடுத்துள்ளார்.
BBC நிருபர் ஆண்ட்ரூ ஜில்லிகன் தன்னுடைய
Today
நிகழ்ச்சியில், ஈராக்கிற்கு எதிராகப் போர் தொடுப்பதை நியாயப்படுத்தும் வகையில், உளவுத்துறைத்தகவலை "பாலியல்
ரீதியாய் குழப்பி" இருந்தது என்று கூறியதற்கு ஆதாரம் தான்தான் என்பதை "வெளிப்படுத்திய" சில தினங்களுக்குள்ளேயே,
கெல்லி ஒருவேளை தற்கொலையாக இருக்கக்கூடிய மரணத்தை அடைந்தார்.
கெல்லி மரணம் பற்றி, ஹட்டன் பிரபு நடத்தும் விசாரணையில், டெபிட் ஏற்கனவே ஆகஸ்ட்
20ம் தேதி சாட்சியம் கொடுத்திருந்தாலும், கண் அறுவை சிகிச்சையினால், அவரைக் குறுக்கு விசாரணை செய்தல் காலதாமதம்
ஆயிற்று. அரசாங்க, கெல்லியின் குடும்ப மற்றும் பிபிசி வழக்குரைஞர்கள் தங்களின் இறுதி வாதங்களை ஏற்கனவே
முடித்து பலநாட்களுக்கு பின்னர், விசாரணை, அக்டோபர் 13ம் தேதி, டெபிட்டை குறுக்குவிசாரணை செய்வதற்காக
குறுகிய காலத்திற்கு நடந்தது.
நிருபர்கள் நேரடியாக விஞ்ஞானியின் பெயரைக் கேட்டால், செய்தியாளருக்கு கேள்வி-பதில்
முறைமூலம், உறுதி செய்யலாம் என்ற முடிவை எடுத்தது யார், என்ற கெல்லியின் குடும்பத்திற்காக திரு
Gompertz கேள்விக்கு,
விடையாக டெபிட்டின் ஒப்புதல் வந்தது.
முக்கியமான தகவலை அளிக்காவிடில், பொதுமக்களிடையே தவறான கருத்து ஏற்பட்டுவிடும்
என்பதற்காகத்தான் இந்த உத்தி ஏற்கப்பட்டது என அரசாங்கம் கூறியுள்ளது. ஈராக்கோடு போருக்குப்போவதற்காக
உண்மையான காரணங்கள் பற்றி மக்களை பலமுறை திசைதிருப்பியதால், ஹட்டன் விசாரணை அமைக்கவேண்டியிருந்த நிலையில்
-- சதாம் ஹுசைனுடைய பேரழிவு ஆயுதங்கள் பற்றிய உளவுத்துறை கருத்துக்கள் அனைத்தும் பொய் என நாம் இப்போது
அறிவோம்,-- கெல்லியின் பெயர் வெளியிடுதல் சம்பந்தமாக உண்மைக்கு பாடுபடுதல் எனும் உறுதிப்படுத்தப்பட்ட கூற்றுக்கள்
தெளிவான அபத்தமாகும்.
உண்மையில், விதிமுறைக்கு புறம்பானது எனக்கருதப்படுமாதலால் வேண்டுமென விஞ்ஞானியின்
பெயரை வெளியிடாதது போல் காட்டிக்கொள்ள நினைக்கும் அரசாங்கம், ஜில்லிகன் மற்றும் பிபிசியை இழிவுபடுத்துவதற்காக
மேற்கொண்ட முயற்சிகளின் பகுதியாகத்தான், எப்படியும் கெல்லியின் பெயரை மக்களிடையே தெரிவிப்பதில் ஆர்வம்
காட்டியது. ஈராக் மீதான முன்னோடியற்ற, சட்டவிரோதமான அதன் தாக்குதலில் அமெரிக்காவுடன் சேர்ந்த சில
வாரங்களுக்களுக்குள்ளேயே, உலகை அழிக்கக்கூடிய பேரழிவு ஆயுதங்களின் அச்சுறுத்தல், அதுவும் பிளேயர் அரசாங்கத்தின்
செப்டம்பர் 2002 உளவுத்துறைக்கோப்பு கூறியதுபோல், 45 நிமிஷங்களுள் ஏவும் திறனில், ஈராக்கிடம் கிடையாது
என்பது தெளிவாயிற்று.
இதிலிருந்தும் மற்ற திரித்துக்கூறல்களிலிருந்தும் திசைதிருப்பும் முகமாக, கோப்பை தயாரிப்பதில்
தொடர்பிருந்த ஒரு முக்கியமான அரசாங்க அதிகாரி (பின்னர் கெல்லியென வெளியிடப்பட்டது), போருக்குச்செல்வது
என்று முன்னரே எடுக்கப்பட்ட அதன் முடிவிற்கேற்ப உளவுத்துறைக் கோப்பை திருத்தியதாக அரசாங்கத்தின்மீது
குற்றஞ்சாட்டி இருந்திருந்தார், மற்றும் இந்த கோப்பில் 45 நிமிஷக்கூற்றை நுழைத்ததற்கு, அப்பொழுது பிளேயரின் செய்தித்தொடர்புகள்
இயக்குனராக இருந்த, அலஸ்டெய்ர் காம்ப்பெல்தான் சொந்தப்பொறுப்பு என ஜில்லிகன் கூறியதற்கு எதிராக அரசாங்கம்
தனது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தது.
பிளேயர், ஜூலை 8ம் தேதிக்கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு முன்பே, தான்
ஜில்லிகனிடம் பேசியதாகவும், "Today"
அறிவிப்பிற்கு தான் ஓரளவு காரணமாக இருந்திருக்கலாம் என்றும், கெல்லி, பாதுகாப்பு அமைச்சகத்தில் தன்னுடைய
உயரதிகாரியிடம் ஒப்புக்கொள்ள முன்வந்திருந்தார்; ஆனால் காம்ப்பெல் பற்றி தான் குற்றச்சாட்டுக்கள் கூறவில்லை
எனத் தெரிவித்துவிட்டார். கெல்லியின் பெயர், பொதுக்கவனத்திற்கு வருமாறு செய்வதன் மூலம், அதை ஜில்லிகனின் கூற்றை
செல்வாக்கிழக்க பயன்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பியது.
விஞ்ஞானியின் பெயரை "வெளியிட" வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையாது
என டெபிட் கூறினாலும், குறுக்கு விசாரணை மாற்று உண்மையைத்தான் புலப்படுத்தியது.
பாதுகாப்புத்துறை அதிகாரி, அப்பொழுதிருந்த சூழ்நிலையின் தன்மையையும் உறுதிப்படுத்தினார்.
"ஜில்லிகனுடைய குற்றச்சாட்டு, அரசாங்கம், மற்றும் அதன் உளவுத்துறை அமைப்புக்கள் மீதான நம்பிக்கைத்தன்மையை
தாக்கும் பெரிய பிரச்சினை" என்று விசாரணைக் குழுவிடம் அவர் கூறினார்.
"அரசாங்கத்தின் மீது கூறப்பட்ட அவதூறு மிகக்கடுமையானது. அன்றைய நாளில் மிகப்பெரிய
பொதுப்பிரச்சினையாக அது மாறிவிட்டது. (அரசாங்கம் உளவுத்துறை தகவலைத் திரித்து விட்டது என்ற
குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இரு பாராளுமன்றக்குழுக்களில் ஒன்று) வெளிநாட்டு விவகாரக்குழுவின் நடைமுறைகளின்
பொழுது அது குவிமையப்படுத்தப்பட்டிருந்தது. உண்மையில், முதலில் இது பற்றி விசாரிக்க அவர் முடிவெடுக்க அல்லது
உடன்பட இருந்த காரணங்களில் அதுவும் ஒன்றாகும். எனவே இது ஒரு அடிப்படை பிரச்சினையாகவும் வினாவாகவும்
இருந்தது."
ஜில்லிகனிடம் நடத்திய பேச்சுக்களின் முழு உண்மையையும், பாதுகாப்புத்துறையிடம்,
கெல்லி கூறவில்லை என்பது இப்போது நன்கு அறியப்பட்டுள்ளது. விசாரணையின்போது, பிபிசி
News night
நிருபர் சூசன் வாட்ஸ், அவ் அம்மையாருக்குக் கொடுத்த தனிப்பேட்டியில், காம்ப்பெல்தான் கோப்புத்தொகுப்பை
"பாலியல் ரீதியாய் குழப்பியது" க்குப் பொறுப்பு என விஞ்ஞானி பெயர் குறிப்பிட்டதாக உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால்
அரசாங்கம் கெல்லியின் மறுப்புக்களை, ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, பிபிசி க்கு எதிரான வழக்கை முடுக்கிவிட்டது.
வெளியுறவுக்குழு காம்ப்பெல் மீது குற்றமில்லை என்ற முடிவுகளை வெளியிடப்போகும் நேரத்தில், தன்னுடைய
போருக்கச்செல்லும் முடிவுபற்றி மேலும் கேள்விகள் எழாமல் தடுக்கும் நோக்கத்துடன், பிளேயர் வரிந்துகட்டிக்
கொண்டு செயல்பட்டார்.
விசாரணையின்போது, பிரதம மந்திரி தலைமை வகித்த ஜூலை 8ம் தேதிக் கூட்டம்,
அரசாங்கம், ஜில்லிகன் அறிவிப்பின்மீது தன்னுடைய "நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள" உடன்பட்டது, அதாவது விஞ்ஞானியின்
பெயரை வெளிப்படுத்த நிர்பந்திப்பது என முடிவு செய்தது என்று டெபிட் உறுதிப்படுத்தினார். ஓர் அநாமதேய தகவல்
மூலம் முன்வந்து, ஜில்லிகனிடம் பேசியது பற்றி ஒப்புக்கொண்டது என்பதை மேற்கோள் காட்டும் செய்தி அறிக்கையை வெளியிட
இசைந்த கெல்லியினிடத்தில், செய்தியாளர்கள் வற்புறுத்தினால், செய்தித்துறை அதிகாரிகளால் அவருடைய பெயர் உறுதி
செய்யப்பட்டுவிடும் என்ற முடிவு தெரிவிக்கப்படவில்லை.
அந்தக் கூட்டம் நடந்த 24 மணிநேரத்திற்குள் செய்தி ஊடகம் கெல்லியின் பெயரை வெளியிட்டு,
ஜூலை 15, 16 நாட்களில் நடக்கவுள்ள, அயலுறவுக்குழு, உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக்குழு ஆகிய இரண்டின் விசாரணைகளிலும்
அரசாங்கம் விஞ்ஞானியை சாட்சியமளிக்க வற்புறுத்த வழிசெய்தது. இவ்விரண்டின், முதல் கூட்டத்தில், இது
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது, தான் ஜில்லிகனை சந்தித்திருந்தாலும்கூட காம்ப்பெல் பற்றி குற்றச்சாட்டு
ஏதும் வைக்கவில்லை என்றே கெல்லி தொடர்ந்து பேசினார்.
வெளியுறவுக்குழு, விஞ்ஞானியின் செய்தி ஊடகத்தொடர்புகள் பற்றி கூடுதலான விசாரணைகள்
நடத்த முடிவு செய்திருந்தபோது, ஜூலை 17ம் தேதி, கெல்லி தன் வீட்டிலிருந்து காணாமற் போனார். ஜூலை
18ம் தேதி, அவருடைய வீட்டிற்கருகில், ஊரகப்பகுதியில் மணிக்கட்டில் குருதிக்காயத்துடன் அவருடைய சடலம் கண்டு எடுக்கப்பட்டது.
டெபிட்டின் ஒப்புதல்கள் இரண்டு வகைகளில் அதிர்ச்சியூட்டுபவை.
ஈராக்கின் மீதான பிளேயரின் கொள்கை பற்றி, பிரிட்டனின் அமைப்பிற்குள்ளே கொழுந்து
விட்டு எரிந்து கொண்டிருந்த கன்னைவாத (பிரிவுவாத) பூசல்களை கட்டுப்படுத்துவதற்காகத்தான் ஹட்டன் விசாரணை
அமைக்கப்பட்டதே ஒழிய, அக்கொள்கையின் உண்மையை வெளிப்படுத்த அல்ல.
இதையொட்டி, கெல்லியின் தற்கொலைபோல் தோன்றும் மரணத்திற்கு, எவரேனும் பொறுப்பாயிருக்க
வேண்டுமெனில், அது யார் என கண்டறியும் குறுகிய பிரச்சினையை விசாரிக்கும் எல்லைப்படுத்தலை செய்ய ஹட்டன் விசாரணை
விழைந்து இருந்தது.
பிளேயரின் கழுத்தை காப்பாற்ற, பாதுகாப்பு செயலாளர் ஜெப் ஹூனை
(Geoff Hoon),
பலிகடாவாக வெளியே உலர்த்தி விடும் உத்திதான் அரசாங்கத்திடம் இருந்தது. ஆனால், டெபிட்டின் சாட்சியம்,
ஹூனல்ல, பிளேயர்தான் விஞ்ஞானியின் விதிபற்றி முடிவெடுக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார் எனத்தெளிவாக்கியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து, பிளேயர் தலைமை வகித்து, விஞ்ஞானியின் பெயரை வெளியிட முடிவெடுத்த கூட்டத்திற்கு,
ஒருவரும் வரவில்லை என்று டெபிட் புலப்படுத்தியுள்ளார். ஹூன் வந்தபொழுது, பிளேயர் அவரிடம் கூட்டம் முடிந்து
விட்டது என்றும், டெளனிங் தெருவின் தலைமை அதிகாரி ஜொனதன் பவல் அவருக்குப் பின்னர் விவரங்களை தெரிவிப்பார்
என்றும் கூறிவிட்டார்.
"பாதுகாப்பு அமைச்சகத்தைவிட அரசாங்கமே (அறிக்கையை வெளியிடுவதற்கு)
தேவையை உணர்ந்தது" என்றார் டெபிட்.
டெபிட்டின் சாட்சியம், இன்னொருவிதத்திலும், பிரதம மந்திரியின் பொய்யை வெளிப்படுத்துகிறது.
ஆகஸ்ட் மாத விசாரணையில் அவர் சாட்சி அளித்தபோது, ஜூலை 8ம் தேதி கூட்டத்தில் இருந்ததாகவும் பாதுகாப்பு
அமைச்சகத்தின்கீழ் எடுக்கப்படும் எந்த மூலோபாய முடிவிற்கும் பொறுப்பேற்கத்தயார் எனவும் கூறியிருந்தார். தன்னிடத்திலிருந்து
வெளிவரும் பரந்தமனப்பான்மையின் அடையாளம் இது என்ற நினைப்பை இது ஏற்படுத்தியதே ஒழிய, இவர்தான் கெல்லி
பற்றிய முடிவிற்கு உந்துதல் என்ற ஒப்புதலைக் கொடுக்கவில்லை. தூரகிழக்கில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, கெல்லியின்
மரணம் நடந்து சில மணி நேரத்தில், கெல்லியின் பெயரை வெளியிட தான் அங்கீகரித்திருந்தார் என்பதை பிளேயர் வலிமையாக
மறுத்திருந்தார்.
ஈராக்கைப்பற்றி மற்றும், போருக்குச் செல்வதற்குத் தேவையான காரணங்கள் பற்றிய
பொய்களை ஒட்டியே, பிளேயரின் கெல்லி பற்றிய பொய் விளைந்தது. பிரிட்டிஷ் மக்களை வேண்டுமென்றே ஈராக்கிய
அச்சம் பற்றி திசை திருப்பியது, ஒரு முடிவு செய்யப்பட்டுவிட்ட போரைத் தொடங்குதலுக்காக, பிரிட்டிஷ் மற்றும் ஈராக்கிய
மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மிதித்தது, ஆகியவற்றை மறைப்பதற்கான முயற்சியில், விஞ்ஞானிக்கெதிராக அது முயற்சிகளை
மேற்கொண்டது.
கடந்த வாரம், பழைய காபினெட் மந்திரி, ரொபின் குக், அமெரிக்க தலைமையிலான
போரை ஆதரிக்கமுடிவு செய்யும் முன்பே, சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் கிடையாது என்பது, பிளேயருக்கு
தெரியும் என பொதுவில் உறுதிபடுத்தியுள்ளார்.
எந்தக்கணக்கில் பார்த்தாலும், பிரிட்டிஷ் பிரதம மந்திரி போர்க்குற்றங்களை செய்தவராவார்.
காப்பியடிக்கப்பட்ட அழுக்கடைந்த "உளவுத்துறை" கோப்புக்களிலிருந்து, கெல்லியின் பெயரை வெளியிட எடுக்கப்பட்ட
முடிவு வரை, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் இந்த உண்மையை மறைக்கும் நோக்கத்தைத்தான்
கொண்டுள்ளது. ஒருபொய்க்கு மேல் மற்றொன்று என அடுக்கிவைத்துக்கொண்டே போனால், முதல்பொய் மறைந்துவிடும்
என பிளேயர் நம்பினார்.
ஹட்டனுடைய அனைத்து முயற்சிகளும், நீதிபதி தன்னால் முடிந்த அளவு முயன்றார் என்பதில்
ஐயமில்லை என்றாலும் கூட, இந்த உண்மையை மறைக்க இயலாது. தன்னுடைய இறுதி அறிக்கை வெளிவர ஒருவேளை
சிலமாதங்கள் தாமதமாக ஆகலாம் என ஹட்டன் அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் நவம்பர் மாதம் வருவதாக இருந்தது
எனினும், வெற்றிகரமாக வெள்ளைப் பூச்சு நடத்தநேரம் கொள்ளும் வரை, அதாவது அடுத்த ஆண்டு வரை தயாராகாது
என அவர் கூறியுள்ளார்.
Top of page
|