WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
Baltic states vote reluctantly to join European Union
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு தயக்கத்துடன் வாக்களித்த பால்டிக் அரசுகள்
By Steve James and Niall Green
3 October 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்று லாத்வியா செப்டம்பர்-21 அன்று நடந்த
பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் ஒப்புதலோடு முடிவு செய்திருக்கின்றது. ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்தின்
ஒரு பகுதியாக இணைந்திருந்த சிறிய பால்டிக் நாடு லாட்வியா. ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவாக்கப்படுவதில்
கடைசியாக இணைந்து கொள்ளும் நாடு இது. இதை அந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்திருக்கிறார்கள்..
பால்டிக் பக்கத்து நாடுகளான எஸ்டோனியா, லிதுவேனியா, மால்டா, ஸ்லோவேனியா, ஸ்லோவாகியா, செக் குடியரசு
குரோஷியா, சைப்ரஸ், ஆகிய நாடுகள் ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கு வாக்களித்துவிட்டன.
2004-ஆம் ஆண்டில் இந்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளும்.
பாலிடிக் நாடுகளைச்சேர்ந்த மக்கள் கணிசமான அளவு பெரும்பான்மையுடன் ஐரோப்பிய
யூனியனில் சேர வாக்களித்திருக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைவதன் மூலம் பயன் பெறுகின்ற
சமுதாயத்தின் மிகச் செல்வந்த தட்டு மக்களைத் தவிர வாக்காளர்களில் மிகப்பெரும்பாலோர் சந்தேகத்துடனும்; வெறுப்புடனும்
இருக்கின்றனர் என்ற நிலையை உணர்ந்து பால்டிக் நாடுகளைச்சேர்ந்த அரசாங்கங்கள், ஊடகங்கள் மற்றும் வர்த்தக
அமைப்புக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட பெரிதும் ஆற்றலை செலவு செய்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு
ஆதரவு திரட்டினர்.
ஐரோப்பிய ஒன்றியம் உட்பிரிவுகளில் ஏற்கெனவே ரிகா, வில்னஸ் மற்றும் டாலிமின் அரசாங்கங்கள்
பங்கெடுத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக்கெடுப்பிற்கு முன்னர் அந்த மூன்று அரசாங்கங்களும் டொனால்ட்
ரம்ஸ்பீல்டின் ''புதிய ஐரோப்பா''வை ஆதரித்து நிற்கின்றன. இந்த மூன்று அரசாங்கங்களும் அரசியல்,
செல்வாக்குடன் நிதி உதவி பெறுவதிலும், பேர்லின் அல்லது பாரீசிற்கு கடமைப்பட்டிருப்பதைப்போல் வாஷிங்டனுக்கும்
கடமைப்பட்டிருக்கின்றது. இந்த மூன்று அரசாங்கங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருகின்ற நேரத்திலேயே
நேட்டோவுடன் இணைவதற்கு முயன்று வருகின்றன.
லித்துவேனியா
முதலில் லித்வேனியா நாட்டில் 2003-மே-11-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முன்னாள் ஸ்ராலினிச பிரதமர் Algirdas Brazauskas'ன்
அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு "ஆம்" என வாக்களித்து எல்லா பிரதான கட்சிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய
ஆதரவு தெரிவித்தனர். அப்படியிருந்தும் வாக்குப்பதிவான தினம் வரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு பதிவாகும்
வாக்கில் 50 சதவீதம் ஆதரவாக திரள வேண்டும் என்பது கேள்விக்குறியாகவேயிருந்தது
நாட்டின் அரசியல் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அந்த அளவிற்கு இடைவெளி
நிலவுகின்றது. இது போன்ற உயிர் நாடியான மூலோபாய முடிவுகளை எடுப்பதில் கூட அரசாங்கமும் அதன் நண்பர்களும்
வாக்களிப்பில் மக்களை திரட்டுவதற்கு வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவந்தது. இரண்டு
நாட்கள் வரை வாக்குச்சாவடிகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. இரவு-11 மணிக்கு பின்னர் கூட வாக்களிக்க
அனுமதி தரப்பட்டது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி வேலை செய்துகொண்டிருக்கின்ற 200,000 லித்வேனியா
மக்கள் அந்த நாட்டு தூதரகங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கால்பந்து விளையாட்டு வீரர்கள்,
செல்வாக்கு மிக்க கத்தோலிக்க தேவாலய அமைப்பினர் ஆகியோர் வாக்குச் சாவடிகளுக்கு மக்களை திரட்டுவதில் ஈடுபட
பல்பொருள் அங்காடித் தொடர் ஒன்று (supermarket chain)
வாக்களித்து விட்டோர் என்று நிரூபிக்கும் வாக்காளர்களுக்கு மலிவு விலை மதுபானங்கள் மற்றும் சோப்பு, பவுடர்கள்
மற்றும் சாக்லேட்டுக்கள் போன்ற மலிவு விலை பொருட்களையும் வழங்கியது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணி பிளவுபட்டு இருப்பதால்
அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் அரசாங்கத்திற்கு ஆதரவாக 91 சதவீதம் ஆதரவு திரண்டது. 9
சதவீதம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். 63 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது, அந்நாட்டில் வாக்களிக்கும்
தகுதியுள்ள வாக்காளர்கள் 2.6 மில்லியன் ஆவர். ஐரோப்பிய ஒன்றிய கமிஷ்னர் ரேமனோ பிராடி தற்போது ஊழல்
விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறார். அவர் வாக்குப்பதிவில் வெற்றி கிடைப்பதற்காக தனது நல்லெண்ணத்தையும்
பாராட்டும் தெரிவித்துக்கொண்டிருக்கிறார். வாக்குப்பதிவு முடிவு அறிவிக்கப்பட்டதும் தலைநகரில் பட்டாசுகள்
வெடித்துக்கொண்டாடினர்.
முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னர் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம்மும்,
ரஷ்ய அரசாங்கத்திடமும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டிருப்பதாக அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றிய நுழைவு விசா
இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலமான ரஷ்ய எல்லையோர காலினின்கிரேட் பகுதி வரை ரஷ்ய குடிமக்கள்
சென்று வருவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கின்றது. 1986ம் ஆண்டு உக்ரைன் பகுதியில் உள்ள செர்னோபில்
அணுமின்சார நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. அதைப்போலவே வயதாகிவிட்ட, ''இக்னாலினா'' அணுமின்சார
நிலையத்தை மூடுவதற்கும் ஒப்பந்தத்தில் வகைசெய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த அணுமின்சார நிலையம் லித்துவேனியாவிற்கு
80 சதவீதம் மின்சாரத்தை வழங்கி வருகின்றது. லித்துவேனிய அரசாங்கம் 2005-ம் ஆண்டில் இக்னாலினா அணு உலைகளில்
ஒன்றை மூடிவிட தற்போது சம்மதம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் இரண்டாவது அணு உலையையும் மூடுவதற்கு நஷ்ட ஈடு
மற்றும் ஆதரவு தரவேண்டும் என்று கோரிவருகின்றது.
எஸ்தோனியா
எஸ்தோனியாவில் செப்டம்பர்-14 அன்று வாக்குப்பதிவு நடந்தது. குடியரசுக் கட்சிப்
பிரதமர் ஜுகன் பார்ட்ஸ், ஜனாதிபதி Arnold Ruutel
மற்றும் எல்லா அரசாங்க அமைச்சர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
எஸ்தோனியா ஐரோப்பிய ஒன்றியத்தால் விலைவாசிகள் உயரும் என்ற கவலைகள் மிதமிஞ்சிய
கற்பனைகள் என்றும் எஸ்தோனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரக்கூடாது என்று முடிவு செய்தால் நாடு
பொருளாதார வளர்ச்சியில் ''முட்டுச்சந்தில் தட்டிக்கொண்டு நின்று விடும்'' என்று எச்சரிக்கை செய்தனர். பாராளுமன்ற
பேச்சாளர் எனி எர்க்மா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு "இல்லை" என்ற முடிவு நாட்டின் பொருளாதாரத்திற்கு
பெரிய சேதமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கை செய்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போது எஸ்தோனியாவிற்கு
60 சதவீதம் வர்த்தக உறவுகள் நிலவுவதாகவும் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தவுடன் 80 சதவீதமாக உயரும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று பால்டிக் நாடுகளும் 50 ஆண்டுகளாக சோவியத் ஒன்றிய ஆதிக்கத்தில் இருந்துவந்ததால்
தற்போது ரஷ்யாவின் மேலாதிக்கம் தொடர்பாக நிலவுவருகின்ற ஆழமான அச்சத்தை பெரிதுபடுத்துகின்ற வகையில் எஸ்தோனியாவின்
பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது நாடு சேருவது நேட்டோ உடன் இணைவதற்கு சமமானது என்று குறிப்பிட்டார்,
இதில் எஸ்தோனியா இணைவதற்கு கணிசமான ஆதரவு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே நிலவுகின்ற கருத்துவேறுபாடுகளை
பிரதமர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. "ஐரோப்பாவா அல்லது அமெரிக்காவா" என்ற பிரச்சனை இன்றைய
தினம் வெளியுறவுக்கொள்கை சம்மந்தப்பட்டது. அதை எஸ்தோனியாவின் இருதலைக்கொள்ளி நிலை என்று எடுத்துக்கொள்ளக்
கூடாது. அமெரிக்கா உடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் பங்குதாரர் முறையில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதையே
நாம் விரும்புகிறோம். அப்படியிருந்தும் சில நேரங்களில் அவை வேறுபடுட்ட நலன்களை கொண்டிருக்கின்றன, என்றாலும்
அவை ஒரே மதிப்பைதான் கொண்டிருக்கின்றன என்று பிரதமர் பார்ட்ஸ் குறிப்பிட்டார்.
பல்வேறு சர்வதேச தலைவர்கள் எஸ்தோனியாவிற்கு விஜயம் செய்திருக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் ஜனாதிபதி பேட் காக்ஸ் பின்லாந்து பாராளுமன்றத்தின் ஜனாதிபதி டார்ஜா
ஹலோனன் Tarja Halonen ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பால்டிக்நாடுகளில் எஸ்தோனியாவின் வர்த்தகம் பெருமளவிற்கு நடந்துவருகின்றது. பக்கத்து நாடான பின்லாந்து எஸ்தோனியாவின்
பிரதான வர்த்தக பங்குதாரர், ஐரோப்பிய ஒன்றியத்தில் எஸ்தோனியா சேர்ந்து விடுமானால் இந்த மண்டலத்தில்
பின்லாந்து முதலீடு மேலும் பெருகுவதற்கு அது உயிர் நாடியாக அமையும். பால்டிக் குடியரசுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில்
ஸ்கான்டிநேவிய நாடுகளின் நலன்களுக்கு ஏற்ப நிலைப்பாடு எடுக்கும் என்று பில்லாந்து நம்புகின்றது.
எதிர்கட்சிகள் மிக நெருக்கடியான பிரச்சனைகளை வெளிப்படுத்தின; ஐரோப்பிய ஒன்றிய
விவசாயிகளுக்கு கிடைக்கும் மானியத்தில் 25 சதவீதம் மட்டுமே ஆரம்பத்தில் எஸ்தோனியா விவசாயிகளுக்கு கிடைக்கும்
என்றும் ஆனால் ஐரோப்பிய ஒன்றிய வேளாண்மை கட்டுக் கோப்புக்கள் நெறிமுறைகள் அனைத்தும் உடனடியாக செயல்படும்
எனவும் விவசாயிகளுக்கிடையே பீதி உணர்வு நிலவுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேளாண்மை மிக திறமையாக
உற்பத்தித்திறன் பெருகுகின்ற நிலையில் நடைபெற்று வருகின்றது. ஐரோப்பிய நாடுகளில் 60 பசு மாடுகளுக்கு ஒரு
தொழிலாளி வீதம் பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில் பத்து பசு மாடுகளுக்கு ஒரு தொழிலாளி எஸ்தோனியாவில்
பணியாற்றி வருகிறார்.
எஸ்தோனிய நாட்டில் ரஷ்ய மொழி பேசுகின்ற மக்களில் பெரும்பாலோர் ஐரோப்பிய
ஒன்றியத்தில் எஸ்தோனியா இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பால்டிக் நாடுகளில் உழைக்கும் மக்கள்
எல்லா பிரிவினர் இடையிலும் வறுமை அதிக அளவிற்கு உள்ளது. மிகக்குறுகலான நகர்புற சமுதாயத்தினர்தான் பலன்
அடைந்துவருகின்றனர்.. சமூக சேவைகள் மற்றும் சர்வதேச முதலீடுகள் குறிப்பாக ஸ்கேன்டிநேவிய நாடுகளில் முதிலீடுகள்
பாதிக்கப்பட்டிருப்பதால் எஸ்தோனியாவில் உள்ள ரஷ்ய மக்கள்தான் மிகப்பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் எஸ்தோனியா சுதந்திரம் பெற்ற பின்னர் உருவான அரசாங்கங்களால் பல ரஷ்ய மக்கள் மொழி மற்றும் சிவில்
உரிமைகளை இழந்திருக்கின்றனர். எஸ்தோனிய குடிமக்களில் 25 சதவீதம் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் இவர்களில்
பலருக்கு எஸ்தோனிய குடியுரிமை கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் அரசாங்க சேவைகளிலோ, தொழில்களிலோ
பணியாற்ற முடியாது.
எனவே பொதுமக்கள் வாக்கெடுப்பின் போது "ஆம்" "இல்லை" என்னும் இரண்டு
தரப்பினருமே இங்குள்ள ரஷ்ய குடிமக்கள் மாஸ்கோ இங்கு செல்வாக்கு செலுத்துவதற்கு கால்வாயாக அமையலாம்
என்ற அச்சத்தினை பிரச்சார உத்தியாக பயன்படுத்திக் கொண்டனர். ஐரோப்பிய ஒன்றிய "ஆம்" தரப்பினர்
"இல்லை" தரப்பினரை மாஸ்கோவுடன் தொடர்பு உள்ளவர்கள் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல்சாசனப்படி
ரஷ்யர்களுக்கு மொழி உரிமை வழங்க தயாராக இருப்பதாகவும் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினர். எஸ்தோனியா
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததும் எஸ்தோனிய மொழி ஐரோப்பய ஒன்றியத்தில் ஒரு ஆட்சிமொழியாகும்.
எஸ்தோனிய நாட்டின் பிரதான கட்சிகளிலேயே மத்திய கட்சியில்
மட்டுமே பொதுவாக்கெடுப்பு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவியது இறுதியில் அக்கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தில்
இணைவதற்கு "இல்லை" என வாக்களிக்கப்போவதாக அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதன் மூலம் எஸ்தோனிய
நாட்டின் "சுதந்திரம்" பறிபோய்விடும் என்று மத்திய கட்சி கூறியிருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில்
சேர விருப்பம் தெரிவித்துக்கொண்டிருப்பவர்கள் "எஸ்தோனிய நாட்டின் தொலைக்காட்சி கோபுரத்தை நோக்கி ரஷ்ய
பீரங்கிகள் அணிவைத்து வந்ததை சந்தித்ததில்லை" என்று மத்திய கட்சியின் பத்திரிகை ஆசிரியர் எல்மார் லெங் கருத்து
தெரிவித்துள்ளார். எஸ்தோனியா தனிநாடாக பிரகடனப்படுத்திய நேரத்தில் மாஸ்கோ ஸ்டாலினிச பிரிவுகள் அந்தநாடு
பிரிந்து செல்வதை தடுப்பதற்காக கடைசி நாட்களில் மேற்கொண்ட தாக்குதல்களை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மற்ற "இல்லை" என்பதன் ஆதரவாளர்கள் பிரிட்டனில் உள்ள ஈரோ-அவநம்பிக்கை வாதிகளுடன் இணைந்து ஐரோப்பிய
ஒன்றியத்தில் எஸ்தோனியா இணைவதனால் சிங்கப்பூர் பாணியில் எஸ்தோனியாவை "சுதந்திர சந்தை"யாக உருவாக்குவதற்கு
உருவான வாய்ப்பை இழந்துவிட்டதாக கருத்துத் தெரிவித்தனர்.
வாக்குகள் எண்ணப்பட்டபோது 66.9 சதவீதங்கள் பொது ஆதரவாகவும் 33.1
சதவீதம் பேர் எதிராகவும் வாக்களித்தனர். மொத்த வாக்குப்பதிவு 63.4 சதவீதமாகும். இங்கு 25 சதவீதம்
ரஷ்ய குடிமக்கள் வாக்களிக்கவில்லை.
வாக்குப்பதிவு முடிவு வெளிவந்தவுடன் அரசாங்கம் எரிபொருள் புகையிலை மற்றும் மதுபானங்கள்
மீது வரி விதிப்புக்களை கணிசமான அளவிற்கு உயர்த்தி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் உடன் இணைந்து செயல்படும் வகையில்
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. எடுத்துக்காட்டாக டீசல் விலை ஒரு லிட்டருக்கு 2.55 இலிருந்து
3.84 குரூன்கள் (எஸ்தோனியா நாணயம்) வரை உயர்த்தப்பட்டிருக்கின்றது.
லாத்வியா
எஸ்தோனியாலில் வாக்குப்பதிவு நடைபெற்ற ஒருவாரத்தின் பின்னர்,
செப்டம்பர்-21-அன்று லாத்வியாவில் வாக்குப்பதிவு நடந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு ஆதரவாக
67.30 சதவீதம் பேர் வாக்களித்தனர். 32.3 சதவீதம் பேர் எதிராக வாக்களித்தனர். அந்நாட்டு ஜனாதிபதி வைரா-விக்கி
பிரிபெர்கா உடைய கருத்தின்படி, லாத்விய மக்கள் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பாக பெருமளவு சந்தேகம்
கொண்டிருக்கின்றனர் என்ற எச்சரிக்கை இருந்தபோதும் மொத்த வாக்குப்பதிவு 72.5 சதவீதமாக இருந்தது. பக்கத்து
நாடுகளைப்போன்று உள்ளூர் பிரமுகர்களும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதில்லை
என்று முடிவு செய்தால் நாடே பொருளாதார அடிப்படையில் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகும் என்று
என பயமுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்திதில் இணைவதற்கு "ஆம்" என்பதற்கா பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்
எஸ்தோனியாவைப் போனறு லாத்வியாவிலும், "ஆம்" "இல்லை" இருதரப்பினராலும்
ரஷ்யாவிற்கு எதிரான உணர்வுகள் கிளப்பி விடப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் சார்பான தரப்பு ஐரோப்பிய அங்கத்துவம்
ரஷ்யாவை ஒரு கைபார்ப்பதற்கு வழிவகை செய்யும் எனக் கருத்துவெளியிட, "இல்லை" தரப்பு நாடு சுதந்திரத்தை
இழந்துவிடும் என்றும் தேசிய தனித்தன்மை மறைந்துவிடும் என்றும் பிரச்சாரம்செய்தயது.
லாத்வியா மக்கள் தொகையில்30 சதவீதமான 700,000 மக்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்,
இந்த பால்டிக் நாட்டில் ஸ்ராலினிச அதிகாரத்துவ பிடியை இறுக்குவதற்காக ரஷ்ய மக்கள் லாத்வியாவில் குடியேற்றப்பட்டனர்.
ரஷ்யர்கள் நிறைந்த பகுதிகளில் பொதுவாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவே வாக்குகள் கிடைத்தன. லாத்வியாவின்
Daugavpils பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக
67.3 சதவீதம் வாக்குகள் பதிவாயின. லாத்வியாவில் தென்கிழக்கு மூலையில் உள்ள லாத்காலியா பகுதியிலும் ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு எதிராகவே வாக்குகள் பதிவாயின.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு ஆதரவான சமுதாயத்தின் தட்டுகளின் பண்பினைப்
பார்ப்பின், அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது, பொதுவாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற இந்நேரத்தில் ஊழல்
மற்றும் சர்வாதிகாரம் உருவாகி வருவகின்றது போன்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன. லாத்வியாவில்
நான்கு கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. அதில் இடம்பெற்றுள்ள முதலாவது கட்சி
யின் பாராளுமன்றக் குழு தலைவர் ஓஸ்கார்ட் காஸ்டன்ஸ் புதிய காலம் என்னும் கட்சியைச் சேர்ந்த
பிரதம மந்திரி எய்னார் ரெப்சே பதவிவிலக வேண்டும் என்று கோரினார். இதற்கு ரெப்சே கூட்டணியில் இனி
முதலாவது கட்சி இடம் பெறாது என்று எச்சரிக்கை விடுத்தார் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய
"ஆம்" என்பதற்கு சார்பாக வாக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் ஆளும் கூட்டணிக்குள் உருவான கொந்தளிப்பு அமுங்கிவிட்டது,
என்றாலும் கூட்டணி அரசாங்கம் கவிழக்கூடும் என்று விமர்சகர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராணுவவாதத்திற்கு ஆதரவு
சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று நாட்டம் செலுத்தி பிரிந்து
சென்று மூன்று நாடுகளிலும் நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருக்கின்ற முன்னாள் ஸ்ராலினிஸ்ட்டுகள் மற்றும் அப்பட்டமான
வலதுசாரி சக்திகள் தங்களது மக்களது நலன்களை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளின்
நலன்களுக்கு கீழ்ப்படுத்தி, மலிவான ஊதியத்தில் ஊழியர்கள், புதிய சந்தைகள்கிடைப்பதற்கும் மற்றும் ரஷ்யாவில் எரிபொருள்
விற்பனை செய்கின்ற இராட்சத நிறுவனங்களோடு வர்த்தகத்தொடர்பு கொள்வதற்கு நம்பகமான வழி கிடைக்கவும்
வழிவகை செய்துள்ளன. தற்போது மூன்று நாடுகளிலும் 7 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி வீங்கிப்
பெருகிக்கொண்டிருக்கின்றது.
இதில் இன்னொரு சிலேடையான வேடிக்கை என்னவென்றால் மூன்று பால்டிக் நாடுகளுமே
அமெரிக்க இராணுவாதத்தை ஆதரிக்கின்றன. அமெரிக்க இராணுவாதத்தின் பிரதான குணம் என்னவென்றால் தனது நலன்களுக்கு
உடன்படாத நாடுகளின் தேசிய இறையாண்மையை வன்முறை மூலம் ஒடுக்குவதுதான். எஸ்தோனியா நேட்டோவில் முதலாவதாக
இணைந்துவிட்ட சமாதானத்திட்டப் பங்காளி நாடுகளில் ஒன்று, இந்த மூன்று நாடுகளுமே பொஸ்னியாவில் இடம்பெற்றுள்ள
நேட்டோ படைககளில் பங்களிப்பு செய்திருக்கின்றன. இந்த நாடுகள் அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான
போரி"ற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன, இவற்றின் சிறிய அளவிலான படைபிரிவுகள் தற்போது ஆப்கனிஸ்தானிலும், ஈராக்கிலும்
பணியாற்றிக்கொண்டுள்ளன.
நேட்டோவில் இணைவதற்கு பால்டிக் குடியரசுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அமெரிக்க முலோபாயிகள் (strategists)
ஆதரவு தெரிவிப்பததுடன், அதனால் ரஷ்யாவின் தலைவாசலிலேயே நேட்டோ படைகளின் மூலோபாய முக்கியத்துவம்வாய்ந்த
நுழைவிற்கு வழிவகை கிடைப்பது தெரிகின்றது, இதனால் அமெரிக்க-ரஷ்ய உறவுகளில் உராய்வுகள், மோதல்கள் ஏற்படுவதற்கு
வாய்ப்பு உண்டு. இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில்
பால்டிக் குடியரசுகள் இணைவதனை உக்குவிப்பதாக அமெரிக்காவின் கொள்கை அமைந்துள்ளது, இதன் மூலம் தமது
பாதுகாப்பை ஜரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு கட்டமைப்புக்களுள் அமெரிக்கா கண்காணித்துக்கொள்ள முடியும்.
ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் பகுதியின் சில மைல்களுக்கு உள்ளேயே நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில்
பூகோள மூலோபாய நலன்களை நெருக்கிக்கொண்டு வந்துவிட முடியும் என்று அமெரிக்கா நம்புகின்றது. மேலும், அமெரிக்க
கொள்கைகளுக்கு கீழ்படிந்து நடக்கின்ற பால்டிக் குடியசுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின்
கட்டமைப்புகளுக்கு உள்ளேயே தனது அதிகாரப்பிரதிநிதிகளாக (proxies)
தொடர்ந்து செயல்பட முடியும் என்றும் அமெரிக்கா நம்புகின்றது.
Top of page
|