:
ஐக்கிய அமெரிக்கா
California recall results
Socialist Equality candidate John Burton
wins 5,915 votes
கலிஃபோர்னியா திருப்பி அழைத்தல் தேர்தலின் முடிவுகள்
சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் ஜோன் பேர்ட்டன் 5,915 வாக்குகளை
வென்றார்
By Andrea Peters
10 October 2003
Back to screen version
அரசுத்துறை செயலாளர் அலுவலகத்தின்படி, அக்டோபர் 7 அன்று நடந்த கலிஃபோர்னியா
திருப்பி அழைக்கும் தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் 5,915
வாக்குகளைப் பெற்றார். பேர்ட்டன் போட்டியிட்ட 135 வேட்பாளர்களில் 13வது இடத்தைப் பெற்றார்.
தேர்தலில் பதிவு செய்தவாக்காளர்களில் 60 சதவீத அளவினர் தேர்தலில் வாக்களிக்கவருவர்
எனமதிப்பிடப்பட்டது. இது கடந்த முறை கவர்னர் தேர்தலில் பங்கேற்ற மிகக் குறைந்த பதிவுச் சான்றான 51
சதவீதத்தினைவிட அதிகமாகும். ஆயினும், வாக்காளர் வரவு, கலிஃபோர்னியாவில் ஜனாதிபதிக்கான போட்டியில் காணப்பட்ட
70 சதவீதத்தை விட குறைவுதான்.
சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் திருப்பி அழைக்கும் தேர்தலுக்கு ஒரு கொள்கை
அடிப்படையிலான எதிர்ப்பின் அடிப்படையில் பிராச்சாரம் செய்தார், அதேவேளை ஜனநாயகக் கட்சிக்கு எந்தவித அரசியல்
ஆதரவையும் நிராகரித்தார். பிரச்சாரமானது ஈராக்கில் போருக்கும் புஷ் நிர்வாகத்தின் பிற்போக்கு கொள்கைகளுக்கு
எதிர்ப்பையும் அதேவேளை உண்மையான சோசலிச வேலைத் திட்டத்தை விரிவாக்கவும் செய்தார். இந்த அடிப்படையில்,
சோசலிச சமத்துவக் கட்சியானது, பெருமுதலாளிகளின் இரு கட்சிகளுக்கு மாறாக ஒரு மாற்றை நாடும் மக்கள் தொகையின்
குறிப்பிடத்தக்க ஆனால் சிறிய தட்டின் ஆதரவைப் பெறக்கூடியதாக இருந்தது.
தங்களின் நாடறிந்த தன்மையின் அடிப்படையில் பெருமளவில் வாக்குகளை திரட்டிய "இளையர்"
(Minor) என்று அழைக்கப்படும் வேட்பாளர்களை
-முன்னாளைய தொலைக்காட்சி குழந்தை நட்சத்திரம் கேரி கோல்மேன், வயது வந்தோருக்கான திரைப்பட நடிகை மேரி
குக் மற்றும் பரத்தையரை வருணிக்கும் இதழின் வெளியீட்டாளர் லாரி பிளைண்ட்- ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால்,
இப்போட்டியில் "பிரதானம் அல்லாத" போட்டியாளர் முதல் மூவருள் ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் மேலிடத்தில்
இருந்தார்.
இந்த நபர்களுடன் சேர்த்து மற்றும் இப்போட்டியில் உள்ள "பிரதான" வேட்பாளர்கள்
என்று அழைக்கப்படுவோர் ஐவரையும் சேர்த்து, பேர்ட்டனுக்கு முன்னுள்ளவர்களுள் குடியரசுக்கட்சி அரசியல் ஸ்தாபனத்திலிருந்து
இரு முன்னணிப் பிரமுகர்கள் -பீட்டர் உபிரோத் மற்றும் பில் சைமன்- போட்டியிலிருந்து விலகிக் கொண்டவர்கள் ஆனால்
வாக்குச் சீட்டிலிருந்து தங்களின் பெயர்களை அகற்ற முடியாதவர்கள், மரிஜூனா போதைப்பொருளை சட்டரீதியாக்குவதற்கு
பிரச்சாரம் செய்த பிரபல வழக்குரைஞர் மற்றும் இன்னொரு குறைவாக அறிமுகமாகி இருந்த, அவரது கடைசிப்பெயர்
மட்டும் ஆர்னால்ட் ஸ்வார்ட்ஸநீகருடன் ஒத்துப்போகுமாறு அமைந்திருந்தவர் ஆகியோர் ஆவர்.
பேர்ட்டனுக்கு ஆதரவு மாநிலம் முழுவதும் இருந்து வந்தது, சோசலிச சமத்துவக் கட்சி
வேட்பாளர் கலிஃபோர்னியாவின் 58 மாவட்டங்களில் 55லிருந்து வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மிகச்செறிவான வாக்குகள்
மாநிலத்தின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள பெருநகர்ப் பகுதிகளில் இருந்து வந்தன.
போலீஸ் கொடூர வழக்குகளில் சிறப்பாக ஈடுபட்ட குடியுரிமை வழக்கறிஞர் என நன்கு அறிமுகமாகி
இருந்த, லொஸ்ஏஞ்சலஸ் மாவட்டத்திலிருந்து அவரது மொத்த வாக்கு எண்ணிக்கையில் 37 சதவீத கணக்கில் வந்தது. சோசலிச
சமத்துவக் கட்சி பல்கலைக் கழகங்களிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் அதேபோல அப்பகுதியில் உள்ள உழைக்கும், நடுத்தர
வர்க்க புலம்பெயர்ந்தோர் வசிப்பிடங்களிலும் கடுமையாக பிரச்சாரம் செய்தது.
பேர்ட்டன் இந்தப் பகுதியில் ஆறு வானொலி, ஐந்து தொலைக்காட்சி மற்றும் நான்கு
பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் தோன்றினார், அதேவேளை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும்
சராசரியாக 14,000 தேர்தல் அறிக்கைகளை பெருநகர் முழுவதும் உள்ள பொதுவிடங்களில் விநியோகித்தனர். லொஸ்ஏஞ்சலஸ்
மாவட்டத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 2,193 வாக்குகளுடன் 11வது இடத்திற்கு வந்தார்.
சுற்றியுள்ள மாவட்டங்களில் -ஆற்றோரம், ஆரஞ்சு, சான்பெர்னார்டினோ மற்றும்
சான்டீகோ- பேர்ட்டன் 244, 178, 190 மற்றும் 389 வாக்குகள் முறையே பெற்று இருந்தார். பேர்ட்டனைப்
பேச அழைத்த பள்ளிக்கூடங்கள் மூன்று -சாப்மேன் பல்கலைக் கழகம், கிளார்மெண்ட் மேக்கென்னா கல்லூரி, மற்றும்
இர்வின் பள்ளத்தாக்கு கல்லூரி- இந்தப் பகுதியில்தான் அமைந்திருக்கின்றன.
சான்பிரான்சிஸ்கோ குடாப் பகுதியின் மாவட்டங்கள் மற்றும் சாக்ரமெண்ட்டோ பேர்ட்டனுக்கு
கூட்டாக இன்னொரு 1,333 வாக்குகளை அளித்தன. இந்தப் பகுதியில் சராசரியாக 4000 தேர்தல் அறிக்கைகள்
விநியோகிக்கப்பட்டன. அங்கு பேர்ட்டனும் சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்த பிரதிநிதிகளும் உள்ளூர் கல்லூரிகள், உயர்நிலைப்
பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் அப்பகுதி வாசிகளுடனும் மாணவர்களுடனும் பேசினர். குறிப்பாக, சிலிக்கன் பள்ளத்தாக்கின்
இதயப் பகுதியாகிய சான்ட்டா கிளாரா மாவட்டத்தில் பேர்ட்டன் 493 வாக்குளைப் பெற்றார், அனைத்து வேட்பாளர்களின்
மத்தியிலும் பத்தாவதாக வந்தார்.
பேர்ட்டன் அமைதி மற்றும் சுதந்திரக் கட்சி
(PFP) வேட்பாளர் சி.டி.வெபர் போல் நான்கு மடங்கு அதிக வாக்குகளையும் சோசலிச தொழிலாளர்
கட்சி (SWP) வேட்பாளர் ஜோயல் பிரிட்டன் போல் ஒன்பது
மடங்கு அதிக வாக்குகளையும் பெற்றார். வெபர் மற்றும் பிரிட்டன் முறையே 1,440 மற்றும் 653 வாக்குகளைப்
பெற்றிருந்தனர்.
இந்த முடிவுகள் இந்த அமைப்புக்களின் அரசியல் பொறிவை சுட்டிக்காட்டுகின்றன. பிரிட்டனும்
சோசலிச தொழிலாளர் கட்சியும் திருப்பி அழைத்தலை ஆதரித்தன மற்றும் அதிவலதுசாரி சக்திகளுடன் அணிசேர்ந்து
கொண்டு அண்மைய கவர்னர் தேர்தலைக் கவிழ்ப்பதற்கு முயற்சித்தன. சோசலிச தொழிலாளர் கட்சியானது ஒருங்கிணைந்த
வேலைத்திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை மற்றும் கலிஃ்போர்னியர்கள் எதிர்கொள்ளும் அழுத்துகின்ற அரசியல் மற்றும்
பொருளாதாரப் பிரச்சினைகளை விளக்குவதற்கு முயற்சிக்கவில்லை.
வெபரின் குறைந்த மொத்த வாக்கு அதேபோல அமைதி மற்றும் சுதந்திர கட்சியின்
(PFP) தோல்வியுற்ற கொள்கையையும் முன்னோக்கையும்
கோடிட்டுக்காட்டுகின்றன. அமைதி மற்றும் சுதந்திரக் கட்சி பல்வேறு நடுத்தர வர்க்க இடதுகளின் கலவை ஆகும், அரசியல்
கோட்பாடுகளில் எந்த உடன்பாடுமில்லாத ஒரு அரசியல் கூட்டை அமைத்தன.
கடந்த சில ஆண்டுகளாக, அமைதி மற்றும் சுதந்திரக் கட்சி கலிஃபோர்னியாவில்
வாக்குச்சீட்டு அந்தஸ்தை அடைவதை நோக்கி அதன் அனைத்து முயற்சிகளிலும் தன்னை அர்ப்பணித்திருந்தது. இந்த மாநிலத்தில்
ஒரு அரசியல் கட்சியாக சம்பிரதாய ரீதியில் அங்கீகரிப்பதற்காக பிரச்சாரம் செய்தது, இறுதியில் அதனை அடைந்தது,
ஒரு அரசியல் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தலுக்கு பதிலீடாக சேவை செய்தது. அமைதி மற்றும் சுதந்திரக் கட்சி
மக்களிடம் இந்த குட்டி முதலாளித்துவ அமைப்புக்களின் கலவை உத்தியோக ரீதியில் வாக்குச்சீட்டில் இருக்கும்பொழுது சோசலிச
எதிர்ப்பு நிலவும் என்று பொதுமக்களிடம் கூறியது.
சோசலிச சமத்துக் கட்சிக்கான ஆதரவு கலிஃபோர்னியாவில் பிரதான செய்தி ஊடகங்களால்
முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டதை எதிர்கொண்டு வந்தது. பேர்ட்டனின் வேட்புமனுத்தாக்கல் பற்றி அறிந்திருந்து
மற்றும் அவருக்கு வாக்களிக்க சென்றவர்கள், கட்சி அதன் வேலைத்திட்டத்தை கலிஃபோர்னியர்களுக்கு அறியவைப்பதற்கான
சுயாதீனமான போராட்டத்தின் அடிப்படையில் அவ்வாறு செய்தனர்.
கலிஃபோர்னிய திருப்பி அழைக்கும் தேர்தலின் இயல்பை பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப்
பற்றியும் ஆய்வு செய்யும் மற்றும் ஒரு சோசலிச மாற்றீட்டினை விரிவாக்கும், சோசலிச சமத்துவக் கட்சியால் வெளியிடப்பட்ட
61அம்ச தேர்தல் அறிக்கையுடன் சேர்த்து, எட்டுவாரத்திற்கும் மேலான பிரச்சாரத்தின்பொழுது சோசலிச சமத்துவக்
கட்சியும் பேர்ட்டனும் நடந்து கொண்டிருக்கும் அரசியல் அபிவிருத்திகள் பற்றியும் கலிஃபோர்னிய வாக்காளர்கள் எதிர்கொள்ளும்
அழுத்தும் பிரச்சினைகளைப் பற்றியும் எட்டு அறிக்கைகளை வெளியிட்டன.
இவற்றுள் உள்ளடங்குவன: கிழக்குக் கடற்கரை மின் இருட்டடிப்பு பற்றிய முழு விசாரணைக்கு
ஒரு அழைப்பு, கலிஃபோர்னியாவில் அரசியல் நெருக்கடியை ஒரு சர்க்கஸாக உருப்படுத்திக்காட்டும் ஜே லினோவின் முயற்சியை
கண்டிக்கும் அறிக்கை, போர் மற்றும் புஷ் நிர்வாகத்தின் பிற்போக்கு கொள்கைகளை எதிர்க்கும் ஒரு அறிக்கை, அண்மையில்
கையெழுத்திடப்பட்ட தொழிலாளர் இழப்பீட்டு சட்டத்தில் அடங்கிய தொழிலாளர்களது உரிமைகள் மீதான இரு கட்சித்
தாக்குதல்களை அம்பலப்படுத்தல், கலிஃபோர்னியா திருப்பி அழைக்கும் தேர்தலில் தள்ளிவைப்புக்கு முன்மொழிந்தது மீதான
நீதிமன்ற முடிவுகளின் விளைபயன்கள் பற்றிய ஒரு ஆய்வு, ஐந்து "பிரதான வேட்பாளர்களுக்கு" இடையில் ஒழுங்கு செய்யப்பட்ட
விவாதங்களின் ஏளனப் போலியை அம்பலப்படுத்தும் ஒரு அறிக்கை மற்றும் முன்மொழிவு 54 தொழிலாள வர்க்கத்தின் சமூக
வெற்றிகள் மீதான ஒரு தாக்குதல் என்ற வகையில் அதன் மீது "வேண்டாம்" என வாக்களிக்க அழைப்பு ஆகியனவாகும்.
தேர்தல் அறிக்கை, இந்த அறிக்கைகளில் முன்னெடுக்கப்பட்ட முன்னோக்கு மற்றும்
கோட்பாடுகள் மற்றும் பொதுப்பிரச்சாரத்தின் அடிப்படையில் சோசலிச சமத்துவக் கட்சியானது இப்போட்டியில் இருந்த,
தங்களை தாங்களே சோசலிஸ்டுகள் அல்லது இடதுகள் என அடையாளப்படுத்திக் கொண்ட இருவர் உள்பட, அனைத்து பிரதான
மற்றும் இளைய வேட்பாளர்களிடமிருந்து தன்னை எல்லைப்படுத்திக் கொண்டது. ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனின் பிரச்சாரத்தின்
முடிவுகள், திருப்பி அழைக்கும் தேர்தலில் மேலாதிக்கம் செய்யும் அரசியல் பிற்போக்கு மற்றும் பின்தங்கிய நிலைமை
இவற்றால் கிளர்ச்சியூட்டப்பட்ட மற்றும் ஒரு உண்மையான மாற்றை தேடிக் கொண்டிருக்கும், கலிஃபோர்னியாவில் உள்ள
மிகவும் அரசியல் ரீதியாக நனவாயுள்ள தட்டுக்களின் மத்தியில் புலன்களால் எளிதில் அறியக்கூடிய ஒரு விலகல் இருப்பதை
சுட்டிக்காட்டுகிறது. |